Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஆலன் என்ற சிரியா அகதிக் குழந்தை ஒன்றை ஒரு நாள் அலை கடல் தின்றது தெரியுமோ. ஏன் அவன் இங்கு வந்தான் என்றும் எதற்காக அவன் பிறந்த நாட்டில் வாழ முடியவில்லை என்றும் எவன் தான் கதைத்தான். எவன் தான் இவர்களை கடலினில் தேடினான். ஆனால் பணம் படைத்தவர்களுக்கோ அமெரிக்கர்களுக்கோ ஐரோப்பியர்களுக்கோ ஏதும் துன்பம் நடந்தால் உடனே முழு ஊடகங்களும் அதனோடு முழு உலகமும் பேசும். எத்தனை பாகுபாடுகளைக் கொண்ட சமத்துவமும் நீதியும் இல்லாத உலகம் இது.

நாங்க மனுசங்க தான்ரா-பா.உதயன் 

எங்கள் தலையிலும்
குண்டுகள் விழுந்தன 
எத்தனை மனிதர்கள் 
இறந்தனர் தெரியுமோ 

உங்கள் கடலிலும் 
அகதிகள் இறந்தனர் 
எத்தனை அகதிகள் 
இறந்தனர் தெரியுமோ 

ஏழைகள் இறந்தனர் 
எவருக்கும் தெரியுமோ 
எத்தனை குழந்தைகள் 
கடலிலே இறந்தனர் 
எந்த ஊடகம் எத்தனை நாடுகள் 
இவருக்காய் கதைத்தனர் 
இவர்களை தேட 
எவர் தான் வந்தனர் 

உங்களில் ஒருவன்
இறந்து விட்டாலே 
ஊடகம் முழுவதும் 
உமக்காய் கதைத்தனர் 
உலகம் முழுவதும் 
உங்கள் பின்னால் வந்தனர் 

உங்களின் ஆயுதம் 
எங்களை கொன்றது 
எத்தனை பேருக்கு 
இந்த ஜனநாயகம் தெரிந்தது 

எத்தனை மனிதர்
எங்கு தான் இறப்பினும் 
மானிடம் கொண்ட 
மனிதர் நாங்கள் பேசுவோம் 
மானிடம் கொண்ட 
மனிதர் நாங்கள் பேசுவோம் 

நாங்கள் மூக்கும் முழியுமாய் 
காலும் கையுமாய் 
பிறக்கும் போதே 
உரிமையுடன் வாழ 
உங்களைப் போலவே 
நாங்களும் மனுசங்க தான்ரா 
நாங்க மனுசங்க தான்ரா.

“All human beings are born free and equal in dignity and rights.”

பா.உதயன் ✍️

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, uthayakumar said:

அருமையான கவிதைக்கு நன்றி, உதயன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிதைக்கு நன்றி, உதயன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"நாங்க மனுசங்க தான்ரா"  இது எவருக்காகவாது புரிந்திருந்தால் ஒன்றுகூடி இனவழிப்பு செய்திருக்க மாட்டார்கள்......!   😴

நல்ல கவிதை.........!

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.