Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, nedukkalapoovan said:

மொஸ்கோ எரியும் என்று காத்திருந்த.. மேற்குலக ஜாம்பவான்களுக்கு.. இது சகிக்கக் கூடிய ஒன்றாக இருக்காது.

பிரான்ஸ் பொலிஸ் மீது இனத்துவேசக் குற்றச்சாட்டை ஐ நா சுமத்தியுள்ளது. உடனடியாக.. அதை பிரான்ஸ் நடப்பு அரசு மறுதலிச்சிருக்குது.

இந்தக் கலவரம் தொடங்கி 3 நாளாகுது. யாழில் முடிந்த அளவு பலரும் அடக்கி வாசிச்சினம்.

தனக்கு தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கென்றுமாம்... பழமொழி தான் நினைவுக்கு வருகுது. 

spacer.png

இது அனேகமாக  சட்டத்தை  மதிக்காத மக்களின் செயல்  ..இவர்கள் ஆசியா ஆபிரிக்கா  கண்டங்களச் சேந்தவர்கள் தான் ..இவர்களுக்கு சட்டத்தை மதிக்க கற்று. கொடுப்பது ரொம்பவே கடினம்    நாங்கள் எல்லோரும் பொலிஸ் மறித்தால். நின்று பதிலளித்து தான்  போகிறோம்   பொலிஸார் நாட்டில் அமைதியை போன வேண்டுமாயின் ஒவ்வொரு குடிமகனும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்     இங்கே குறிப்பிட்ட 17 வயது இளைஞன்   இந்த நிகழ்வுகளுக்கு காரணம்   அவன் ஏன் பொலிஸார் எச்சரிக்கையை மீறினான்.??  அவனை சுட்டது சரியாகும்   அந்த பொலிஸார் மன்னிக்கப்படவேண்டியவர்.   

  • Thanks 1
  • Replies 184
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

இந்தக் கொலை போராட்டம் ஆகியவற்றில் பல விடயங்கள் அடங்கியுள்ளன. - பொலிஸ் மறித்த போது நிற்க மறுத்தபோது துப்பாக்கியை நீட்டியிருக்கக் கூடாது. தனக்கு அல்லது வேறொருவருக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என்றால் ம

வாலி

யாழ் இணையத்தினை நிரந்தரமாக மூடவைப்பதற்கு ஒரு நாட்டின் புலநாய்வு அமைப்பு படாதபாடுபட்டு வருகின்றது. இன்றுவரை யாழ் இணையம் தமிழர் தேசியம் விடுதலை போராளிகள் என அதன் கொள்கைகளில் சோரம்போகமல் இருப்பது அந்நாட்

விசுகு

ஒரு பிள்ளையின் இழப்பு என்பதன் தார்ப்பரியம் அறிவேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை எல்லாமே வீட்டில் தான் கற்பிக்க படுகிறது தொடங்கப்படுகிறது.  17 வயதில் சாரதி அனுமதிப்பத்திரம் கூட இல்லாமல் மிகவும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

புட்டின் ஜனாதிபதியாக இருந்தால் இதெல்லாம் நடக்குமா????? சொல்லுங்கள் மக்களே? :cool:

Bild

தயவு செய்து  இப்படியான வன்முறைகளை ஜனநாயகம்,தனிமனித உரிமை என பினாத்த வேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன்.    :rolling_on_the_floor_laughing:

சட்டத்தை மதிக்கத்தெரியாத மக்களின் செயலை   வைத்து   ஒரு நாட்டை மதிப்பிடக்கூடாது    உங்கள் விருப்பம் போல் எல்லாம் நாடுகளிலும் புட்டின். ஐனதிபதியாக இருப்பராயின்.  நீங்கள் இங்கே  வாழ முடியாது     ஆனால் இப்படியான  செயல்கள  இங்கேயும் புட்டினை உருவாக்கலாம்.    

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போர்க்களமான பிரான்ஸ்: சிறுவனை போலீஸ் சுட்டுக் கொன்றதால் கொதித்தெழுந்த மக்கள் - முழு விவரம்

பிரான்ஸ வன்முறை

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

சிறுவன் நஹெல் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சில் வெடித்துள்ள போராட்டம்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

நஹெல் எனும் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பிரான்ஸ் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து தொடங்கிய போராட்டங்கள் அங்கு இன்னும் தொடர்ந்து வருகின்றன.

நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைநகரில் இரவு நேரங்களில் டிராம் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாரிஸ் நகர வீதிகள் போர்க்களத்தைப் போன்று காட்சியளிப்பதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் சோபியா பெட்ஸ் தெரிவித்துள்ளார்.

 
பிரான்ஸ வன்முறை

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

பிரான்ஸ் போலீஸ் துப்பாக்கி முனையில் சிறுவனை மிரட்டும் சம்பவம் தொடர்பான வீடியோவில் உள்ள ஒரு காட்சி

சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி?

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 17 வயது மதிக்கத்தக்க நஹெல் எம் என்ற சிறுவன், பிரான்சின் ஒரு முக்கியப் பகுதியில் கார் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர், ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காக காரை நிறுத்தச் சொல்லியதாகத் தெரிகிறது.

ஆனால், சிறுவன் காரை நிறுத்தாமல் சென்றதுடன், தன்னிடம் ஆவணங்களைக் கேட்ட போலீஸ் மீது மோதும் நோக்கில் காரை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சிறுவனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தற்காப்புக்காக அவரை நோக்கிச் சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரி, சிறுவனின் கார் கண்ணாடி அருகே சென்று துப்பாக்கி முனையில் அவரை மிரட்டுவதும், அதன் பின்னர் அதே தொலைவில் இருந்து சிறுவனைச் சுடும் காட்சிகளும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மையை ஏ.எஃப்.பி. செய்தி முகமை உறுதி செய்துள்ளது.

 

அதிபர் சொல்வது என்ன?

“சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு மன்னிக்க முடியாதது என்று கூறியுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், துப்பாக்கி சூட்டை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது,” என்றும் கூறியுள்ளார். அதிபர் இவ்வாறு கூறியுள்ளதற்கு போலீஸ் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இதனிடையே, “இந்தச் சம்பவத்தை வைத்து, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களைக் குறிவைத்து போராட்டக்காரர்கள் ஒரே இரவில் தாக்குதல் நடத்தியுள்ளனர்,” என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த இரண்டு நாட்களில், இரவு நேரங்களில் தீவைப்பு, வெடி வைத்தல் போன்ற செயல்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், இதன் விளைவாக அரசு கட்டடங்கள், கார்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

பிரான்ஸ வன்முறை

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

பிரான்சின் நான்டெர்ரே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள்

ஆறாயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி

இந்த நிலையில், நஹெலின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராட்டம் நடத்த உள்ளதாகவும், அதில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் இறந்த சிறுவனின் தாயார் அழைப்பு விடுத்திருந்தார்.

அவரது அழைப்பை ஏற்று, நான்டெர்ரே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 6000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக நாடு முழுவதும் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பரவிய போராட்டம்

பிரான்ஸ்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

நான்காவது நாள் இரவு வன்முறையின்போது கார்களுக்கு தீ வைக்கப்பட்டது

சிறுவனின் மரணத்தைக் கண்டித்து பிரான்சின் பல்வேறு நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துலூஸ் நகரில் போராட்டக்காரர்கள் பொது சொத்துகளைத் தீயிட்டு எரிக்க முயன்றதாகவும், தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்களை கல்வீசித் தாக்கியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேபோன்று, பிரான்சின் வட பகுதியில் அமைந்துள்ள லில்லி நகரில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கொல்லப்பட்ட சிறுவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரான்சின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரென்சில் நகரில் சுமார் 300 பேர் கூடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பலர் ஆத்திரத்தில் அங்கு தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட முயன்றதாகவும், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் நிலைமையைத் தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக பாரிஸ் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ வன்முறை

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

ஃபிரான்ஸ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சமத்துவமின்மை உணர்வு போராட்டத்தைத் தூண்டியுள்ளது என்று கூறுகிறார் பாரிஸ் நகரிலுள்ள பிபிசி செய்தியாளர் லக்கி வில்லியம்சன்

அதிபரின் கருத்தும், போலீஸ் சங்கங்களின் எதிர்ப்பும்

“சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது மன்னிக்க முடியாதது என்றும், இதை எந்தக் காரணம் கொண்டும் நியாயப்படுத்த இயலாது” என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கருத்து தெரிவித்திருந்தார். அதிபரின் இந்தக் கருத்துக்கு ஃபிரான்சில் உள்ள பல்வேறு போலீஸ் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

“ஒரு வழக்கில் தீர்ப்பு வரும் வரை, அதில் குற்றம் சாட்டப்பட்ட நபரை குற்றவாளியாகக் கருத முடியாது. ஆனால், சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிராக அதிபர் அவசரப்பட்டு கருத்து தெரிவித்துள்ளார்,” என்று அலையன்ஸ் போலீஸ் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரியை ‘துணிவு மிக்கவர்’ என்று குறிப்பிட்டு, மற்றொரு போலீஸ் சங்கம் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டாலும், ‘அந்தச் சிறுவனை அவரது குடும்பம் நல்ல விதத்தில் வளர்க்கவில்லை’ என்று அந்தச் சங்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால், “அதிபரை விமர்சிப்பது போன்ற அரசியல் தலையீடு, காவல்துறையின் மீதான வெறுப்பை அதிகரிக்கும்” என்று ‘யுனைட் எஸ்ஜிபி போலீஸ்’ எனும் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

“சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்த முயன்றால், காவல் துறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்” என்று ஃபிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் எச்சரித்துள்ளார்.

பிரான்ஸ வன்முறை
 
படக்குறிப்பு,

போர்க்களமாக காட்சி அளிக்கும் பாரிஸ் நகர வீதிகள்

நஹெலின் தாய் சொன்னது என்ன?

நஹெல் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த தகவலைக் கேட்டதும் அவரது தாய் மோனியா அதிர்ந்து போனார். மகனை இழந்து தவிக்கும் நிலையில், சமூக ஊடகத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார்.

அதில், “நஹெல் ஒரு குழந்தையைப் போன்றவன். அவனுக்கு என்னுடைய அரவணைப்பு தேவைப்பட்டது. சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு கிளம்பியபோதும், ‘ஐ லவ்யூ அம்மா’ என்று அன்பான வார்த்தைகளைக் கூறி, என்னை முத்தமிட்டுவிட்டு தான் சென்றான்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் அவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக எனக்குத் தகவல் வந்தது. எனது வாழ்க்கையில் எல்லாமுமாக என் மகன் இருந்தான். இப்போது அவனை இழந்துவிட்டு நான் என்ன செய்வேன்?” என்று மோனியா அந்த வீடியோவில் கண்ணீர் மல்கப் பேசியிருந்தார்.

அத்துடன், தனது மகனின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

ஃபிரான்ஸ் போலீசுக்கு துப்பாக்கியால் சுடும் அதிகாரத்தில் இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வகை செய்யும் சட்டம் 2017இல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஓடும் கார்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன என்று ‘Le Monde’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரத்தால், கறுப்பின மக்கள் அவர்களின் துப்பாக்கிகளுக்கு இலக்காகும் அபாயம் அதிகரித்துள்ளது என்று மனித உரிமை ஆர்வலரான ரோகயா டயல்லோ அச்சம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ வன்முறை

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

நஹெல் கொலை நினைவூட்டும் 2005 சம்பவம்

தற்போது சிறுவன் கொல்லப்பட்டது போன்றதொரு சம்பவம், 2005இல் ஃபிரான்சில் நிகழ்ந்துள்ளது. அப்போது போலீசார் துரத்திப் பிடிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள், ஒரு துணை மின் நிலையத்திற்குள் சென்று ஒளிந்தனர்.

அப்போது ஃபிரான்சின் அதிபராக இருந்த நிக்கோலஸ் சார்க்கோசி, அவ்விரு இளைஞர்களையும் குற்றவாளிகள் என்று அறிவித்ததோடு, அவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருந்தார். அத்துடன் அவர்களைக் கெட்டவர்கள் என்றும் அதிபர் குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறியபடியே, போலீசார் அவர்களைச் சுட்டுக் கொன்றனர். இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஃபிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் பங்கேற்றவர்கள் அரசு கட்டடங்கள் உள்ளிட்ட பொது சொத்துகளைத் தீயிட்டு எரித்தனர். சில வாரங்கள் தொடர்ந்த அந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள், தங்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அந்த நிகழ்வு தற்போதைய அரசாங்கத்திற்கு நிச்சயம் நினைவில் இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, 2005இல் நிகழ்ந்ததைப் போன்று மீண்டுமொரு முறை விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்வதைத் தற்போதைய அரசு நிச்சயம் விரும்பாது.

தான் கூறும் வார்த்தைகள் அமைதிக்கும் வழி வகுக்கும்; அதேநேரம் வன்முறையையும் தூண்டும் என்பதை அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நன்கு உணர்ந்திருக்கிறார் என்று பாரீசில் உள்ள பிபிசி செய்தியாளர் ஹக் ஸ்கோஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்துக்கு ஃபிரான்ஸ் அதிபர் ஆறுதல் செய்தி அனுப்பி உள்ளார்.

பிரான்ஸ வன்முறை

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

ஃபிரான்சின் பல்வேறு நகரங்களில் வியாழக்கிழமை நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் தீயிட்டு கொளுத்தப்பட்ட கார்கள்

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 13 பேரை சுட்டுக்கொன்ற ஃபிரான்ஸ் போலீஸ்

ஓய்வூதியம் தொடர்பான சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்வதைக் கண்டித்து, ஃபிரான்ஸ் மக்கள் ஏற்கெனவே வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

இந்த விஷயத்தில் பொதுமக்களின் கோபத்தைச் சம்பாதித்துள்ள அதிபர் இம்மானுவேல் மக்ரோன், தற்போது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து, பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் மீண்டும் 2005இல் நிகழ்ந்ததைப் போன்று நீடிக்க அனுமதிக்க கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார்.

இதைக் கருத்தில் கொண்டே அதிபர் மக்ரோனும், அவரது அமைச்சரவை சகாக்களும், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கையாண்டு வருகின்றனர்.

கடந்த 2017இல் இருந்து, ஃபிரான்ஸ் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானவர்களில் பெரும்பாலோர் கறுப்பினத்தவர்கள் அல்லது அரேபியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாலை போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி, கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 13 பேர் பிரான்ஸ் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தற்போது கொல்லப்பட்டுள்ள சிறுவன் நஹெலும், பிரெஞ்சு -அல்ஜீரியன் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று சிறுவனின் அண்டை வீட்டுக்காரர்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cpdke7e5p58o

Posted

இந்தக் கொலை போராட்டம் ஆகியவற்றில் பல விடயங்கள் அடங்கியுள்ளன.

- பொலிஸ் மறித்த போது நிற்க மறுத்தபோது துப்பாக்கியை நீட்டியிருக்கக் கூடாது. தனக்கு அல்லது வேறொருவருக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என்றால் மட்டுமே துப்பாக்கி பாவிக்கலாம். சுட்டது சட்டப்படி தவறு. மேலும் இது போன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க இப் போலீசாருக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படும். 

- கொல்லப்பட்டவர் ஏற்கனவே இது போன்ற குற்றம் செய்து நீதிமன்றத்துக்கு வரும் செப்ரெம்பரில் அழைக்கப்பட்டிருந்தவர். இருந்தாலும் நிற்க மறுத்ததற்காகச் துப்பாக்கிச் சூடு தண்டனை இல்லை.

- ஆர்ப்பாட்டக் காரர்கள் பெரும்பாலும் 18 வதருக்குக் குறைந்தவர்கள். இரனால் இவர்களைத் தண்டிப்பது கடினம். சமயம் பார்த்து கடைகளை உடைத்துக் கொள்ளை அடிப்பதே இவர்களின் நோக்கம். 

- தீவைக்கப்பட்ட பஸ், பள்ளிகள் மற்றும் பொது உடமைகளால் பாதிக்கப்படுபவர்கள் இதே இளைஞர்கள் வாழும் பகுதியில் வாழும் பொதுமக்களே. 

- ஐநா தெரிவித்த போலிஸ் கட்டமைப்புக்குள் இருக்கும் இனத்துவேசம் பற்றிய கருத்து கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

- கடந்த 2 நாட்கள் நடந்த 'போராட்டங்கள்' வெளிநாட்டவர் மீதான பிரெஞ்சு மக்களின் வெறுப்பை அதிகரித்திருக்கும்.  

- பிரான்சில் போலீசுக்கு போதிய அதிகாரம் இல்லை. உதாரணமாக போலிசைச் சிறுவர்கள் கேலி செய்து சிரிப்பதையும் தூசணத்தால் பேசுவதையும் நேரடியாகப் பார்த்துள்ளேன். அவர்களுக்குத் தெரியும் தம்மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பது. ஜேர்மனி போன்ற ஏனையை ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

- விசுகு அண்ணா சொன்னதுபோல் சிறுவர்களின் அடாவடித் தனத்துக்குப் பெற்றோரே காரணம். தற்போது கடை உடைப்புகளில் கைது செய்யப்பட்ட சுமார் 1000 பேரில் 18 வயதுக்குக் குறைவானவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்.

  • Like 5
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

  பிரான்சில் போலீசுக்கு போதிய அதிகாரம் இல்லை. உதாரணமாக போலிசைச் சிறுவர்கள் கேலி செய்து சிரிப்பதையும் தூசணத்தால் பேசுவதையும் நேரடியாகப் பார்த்துள்ளேன். அவர்களுக்குத் தெரியும் தம்மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பது. ஜேர்மனி போன்ற ஏனையை ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

- விசுகு அண்ணா சொன்னதுபோல் சிறுவர்களின் அடாவடித் தனத்துக்குப் பெற்றோரே காரணம். தற்போது கடை உடைப்புகளில் கைது செய்யப்பட்ட சுமார் 1000 பேரில் 18 வயதுக்குக் குறைவானவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்.

இந்த ஆயிரம் இளைஞர்களின் வாழ்வு இனி கடினமானது. எங்கே சென்றாலும் (படிப்பு, வேலை, பிரயாணம்)

இவர்களது பெயர் சிவப்பு பட்டியலில் காட்டும். 

இதைததான் இவர்களது பெற்றோர் அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு கொடுத்து செல்கின்றனர்???

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராதிகா மீம் டைம்

தவறாக ஒத்த உசிர் போனதுக்கு…நாட்டையே உலுக்கும் பிரான்ஸ் எங்க…..

ஒரு கிழவனின் வீம்புக்காக….கொத்து கொத்தாய் சொந்த நாட்டு இளைஞர்களை, பிறிதொரு நாட்டில் சாக கொடுக்கும் ரஸ்யா எங்க….

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

புட்டின் ஜனாதிபதியாக இருந்தால் இதெல்லாம் நடக்குமா????? சொல்லுங்கள் மக்களே? :cool:

Bild

தயவு செய்து  இப்படியான வன்முறைகளை ஜனநாயகம்,தனிமனித உரிமை என பினாத்த வேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன்.    :rolling_on_the_floor_laughing:

 

இந்த படம் ஒரு 30 வருடங்களுக்கு முன் வந்திருந்தால், இப்போ மொஸ்கோ வெளிநாட்டவர்களால் நிறைந்து  வழிந்திருக்கும் :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 minutes ago, vaasi said:

 

இந்த படம் ஒரு 30 வருடங்களுக்கு முன் வந்திருந்தால், இப்போ மொஸ்கோ வெளிநாட்டவர்களால் நிறைந்து  வழிந்திருக்கும் :rolling_on_the_floor_laughing:

எப்படி???

சில நாட்கள் தங்கியதற்கே

பட்டினியால் செத்தார்கள் என்ற செய்தியை தான் எம்மவர்கள் ரசியாவிலிருந்து கொண்டு வந்தார்கள். 

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

பிரான்சில் கொள்ளையடித்து ஓடிய முஸ்லிம் பெண்.

 

காரில் தப்பிச் செல்ல முயன்ற 17 வயது நஹேலை பிரெஞ்சு போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொன்றதை அடுத்து பிரான்சில் கலவரம் தொடங்கியது.
நஹெல் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் இருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

17 வயது அல்ஜீரியாவைச் சேர்ந்த ஒரு பிரஞ்சு காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டவரின் தாய் நிலைமையை அமைதிப்படுத்த அதிகம் செய்யவில்லை.
இங்கே அவர் தனது மகன் இறந்த 72 மணி நேரத்திற்குப் பிறகு கலவரக்காரர்கள்   குழுவுடன் மோட்டார் சைக்கிளுடன் உள்ளார்.

நமக்கு... சோறு முக்கியம் என்று... 
இரு பக்கமும் நடக்கும் கலவரத்தை பொருட் படுத்தாமல், 
சாப்பாட்டில் கவனமாக இருக்கும் சாப்பாட்டு ராமன்.

கலவரக்காரர்களிடம் பயங்கர ஆயுதங்கள் உள்ளன.
இது காசா, சிரியா மற்றும் லிபியா அல்ல, இது பிரான்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரான்சில் கலவரக்காரர்கள் தீயணைப்பு வாகனத்தை சூறையாடினர். இராணுவம் எங்கே? என்ன நடக்கிறது?

பிரான்ஸ் காவல்நிலையத்தில் கலவரக்காரர்கள் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகளை வீசினர். இது உள்நாட்டுப் போர் இல்லையென்றால், என்னவென்று எங்களுக்குத் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரான்ஸில் கலவரக்காரர்களால் விடுவிக்கப்பட்ட உயிரியல் பூங்காக்களில் இருந்து விலங்குகள். வரிக்குதிரைகள், யானைகள் மற்றும் சிங்கங்கள் தெருக்களில் காணப்பட்டன.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாடசாலையை கொழுத்தும் கலவரக்காரர்கள். 😡

கலவரங்கள் இப்போது பெல்ஜியத்தில் பரவியுள்ளன, டஜன் கணக்கான கைதுகள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் 100 பேர் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் 30 பேர் லீஜில் கைது செய்யப்பட்டதாகவும் பிரான்சின் Le Monde செய்தித்தாள் தெரிவிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, தமிழ் சிறி said:

 

பிரான்சில் கொள்ளையடித்து ஓடிய முஸ்லிம் பெண்.

 

காரில் தப்பிச் செல்ல முயன்ற 17 வயது நஹேலை பிரெஞ்சு போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொன்றதை அடுத்து பிரான்சில் கலவரம் தொடங்கியது.
நஹெல் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் இருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த போல் கோல்டிங் பற்றி ஒரு சிறு குறிப்பு.

இவர் ஒரு மோசமான இனவாதி. வெள்ளையினத்தோர் அல்லாதவர் வெறுப்பாளர்.

பிரிட்டன் பர்ஸ்ட் எனும் இனவாத, நவ நாஜிய அமைப்பின் தலைவர். முன்னர் இதையொத்த, பி என் பி, நேசனல் புரொண்ட் உறுப்பினர்.

நீதிமன்ற உத்தரவை மீறி ஒரு மசூதிக்குள் புகுந்து, நீதிமன்ற அவமதிப்புக்கு குற்றத்துக்கு சிறை சென்ற கிரிமினல்.

பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.

சமூக வலை உலகில், இனவாதத்தை தூண்டும் வகையில் பொய் செய்திகள், பாதி-உண்மைகள், சதி கோட்பாடுகளை பரப்புவதில் வல்லவர்.

 

https://en.m.wikipedia.org/wiki/Paul_Golding

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

லண்டனில் பாசுமதி அரிசி பாக்கை தூக்கியவர் பற்றி நேற்று சொன்னேன்.

இன்று பிரான்ஸ் தாங்களும் சளைத்தோர் அல்ல என நிறுவிய போது 👇🤣

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, goshan_che said:

லண்டனில் பாசுமதி அரிசி பாக்கை தூக்கியவர் பற்றி நேற்று சொன்னேன்.

இன்று பிரான்ஸ் தாங்களும் சளைத்தோர் அல்ல என நிறுவிய போது 👇🤣

 

 

ரொய்லற்  பேப்பரையும்... விட்டு வைக்கவில்லை. 😂
அந்த மின்சார பாரம் தூக்கியை  வீட்டில் இருந்து கொண்டுவந்தது பெரிய விடயம். 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

ரொய்லற்  பேப்பரையும்... விட்டு வைக்கவில்லை. 😂
அந்த மின்சார பாரம் தூக்கியை  வீட்டில் இருந்து கொண்டுவந்தது பெரிய விடயம். 😜

🤪அவரவருக்கு அவரவர் அவசரம்😝

பாரம்தூக்கியையும் பக்கத்தில் இருக்கும் டிஸ்ரிபியூசன் செண்டரில் லவட்டி இருப்பார் என நினைக்கிறேன்😀.

ஆனால் எப்படி அதை லாவகமா ஓட்டுகிறார் பாருங்களேன். இந்த திறமையை காட்டி லைசென்ஸ் எடுத்து - உழைத்தால் - களவெடுத்து வாழ வேண்டியதில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்திலும் நிலைமை விரிவடையத் தொடங்குகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, தமிழ் சிறி said:

இங்கிலாந்திலும் நிலைமை விரிவடையத் தொடங்குகிறதா?

இந்த வீடியோவை நான் 3 மாதம் முன்னர் பார்த்திருக்கிறேன்.

பழைய வீடியோ.

லண்டனில் நடந்த ஈரானிய எதிர்ப்பு ஆர்பாட்டத்தில், முல்லாக்களின் ஆதரவாளர், எதிர்பாளர் மோதி கொண்டது.

எப்படியாவது இதை ஐரோப்பா எங்கும் பரவ வைக்க புட்டினின் troll factory முயல்கிறதோ?

Edited by goshan_che
வருசம் - மாதம்
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, goshan_che said:

இந்த வீடியோவை நான் 3 வருடம் முன்னர் பார்த்திருக்கிறேன்.

பழைய வீடியோ.

இந்த அமளிக்குள்ளை... சந்திலை, சிந்து பாடுகிற கோஷ்டியும் உசாராய் இருக்குது.
ஒரு பக்கம்... இந்தியாவில், முஸ்லீம்களை அடக்கி வைக்க வேண்டும் என்று ஒரு கோஷ்டி
பிரான்சை உதாரணம் காட்டி, கம்பு சுத்திக் கொண்டு இருக்கிறது. 😂

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

இந்த அமளிக்குள்ளை... சந்திலை, சிந்து பாடுகிற கோஷ்டியும் உசாராய் இருக்குது.
ஒரு பக்கம்... இந்தியாவில், முஸ்லீம்களை அடக்கி வைக்க வேண்டும் என்று ஒரு கோஷ்டி
பிரான்சை உதாரணம் காட்டி, கம்பு சுத்திக் கொண்டு இருக்கிறது. 

ஓம்.

மக்ரோன் சும்மா ஆச்சியோட மினகெடாமல், ஆமியை இறக்கி இதை அடக்கோணும்.

ஐரோப்பாவில் அடிப்பதற்கு பெயர் போன பொலிஸ் பிரென்ஞ். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, goshan_che said:

ஓம்.

மக்ரோன் சும்மா ஆச்சியோட மினகெடாமல், ஆமியை இறக்கி இதை அடக்கோணும்.

ஐரோப்பாவில் அடிப்பதற்கு பெயர் போன பொலிஸ் பிரென்ஞ். 

இப்ப... பிரான்சுக்கு ஆள், ஆயுத பற்றாக் குறை போல் தெரிகிறது. 😎
பிரான்ஸ்... உக்ரைனுக்கு கொடுத்த ஆமியையும், ஆயுதத்தையும் திரும்ப எடுத்தால்.... 😂
ஒருநாளில்... சண்டையை அடக்கி விடலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, தமிழ் சிறி said:

இப்ப... பிரான்சுக்கு ஆள், ஆயுத பற்றாக் குறை போல் தெரிகிறது. 😎
பிரான்ஸ்... உக்ரைனுக்கு கொடுத்த ஆமியையும், ஆயுதத்தையும் திரும்ப எடுத்தால்.... 😂
ஒருநாளில்... சண்டையை அடக்கி விடலாம். 🤣

பிரான்ஸ் உக்ரேனுக்கு ஆள் கொடுக்கவில்லை.

உக்ரேனுக்கு கொடுத்த கனரக ஆயுதத்தை வைத்து உள்ளூர் கலகத்தை அடக்க முடியாது.

1. நாடளாவிய ஊரடங்கு.

2. கண்டவுடன் சுட உத்தரவு

கலவரம் ஒரு நாளில் காணாமல் போகும்

2 minutes ago, goshan_che said:

பிரான்ஸ் உக்ரேனுக்கு ஆள் கொடுக்கவில்லை.

உக்ரேனுக்கு கொடுத்த கனரக ஆயுதத்தை வைத்து உள்ளூர் கலகத்தை அடக்க முடியாது.

1. நாடளாவிய ஊரடங்கு.

2. கண்டவுடன் சுட உத்தரவு

கலவரம் ஒரு நாளில் காணாமல் போகும்

தயவு செய்து இதைத்தானே புட்டின் ரஸ்யாவுக்குள் செய்கிறார் என யாரும் தூக்கி கொண்டு வரவேண்டாம்🤣.

இரெண்டுக்கும் வித்தியாசம் விளங்கவில்லை என்பதுதான் இங்கே பலரின் அடிப்படை பிர்ச்சனையே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, goshan_che said:

மக்ரோன் சும்மா ஆச்சியோட மினகெடாமல், ஆமியை இறக்கி இதை அடக்கோணும்.

ஐரோப்பாவில் அடிப்பதற்கு பெயர் போன பொலிஸ் பிரென்ஞ். 

 

நாடே... பற்றி எரியும் போது, மக்ரோன்  இசைக் கச்சேரியில் உள்ளாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 minutes ago, தமிழ் சிறி said:

 

நாடே... பற்றி எரியும் போது, மக்ரோன்  இசைக் கச்சேரியில் உள்ளாராம்.

அவரவர் தத்தமது வேலைகளை செய்து முடிப்பர். இது பிரான்ஸ் ❤️

எனது தம்பியின் கடையும் முழுவதுமாக சூறையாடப்பட்டு அடித்து நொருக்கப்பட்டுள்ளது☹️

Edited by விசுகு
பிழை திருத்தம்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.