Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/6/2023 at 10:35, விசுகு said:

எல்லோரும் சேர்ந்து கொள்வார்கள்

கொழும்பில் 83இல் எம்மை யார் அதிகம் தாக்கினார்கள்.

சந்தர்ப்பம் தேடி காத்திருந்து பகை முடிப்பர்

ஆனால் இதில் வளர்ந்து வரும் எம்மவர் மீதான எரிச்சலும் தீர்க்கப்பட போகிறது 😭

 

ஒரிரண்டு தமிழ்க் கடைகளும் தாக்கப் பட்டதாக கேள்விப்பட்டேன் 

  • Replies 184
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

இந்தக் கொலை போராட்டம் ஆகியவற்றில் பல விடயங்கள் அடங்கியுள்ளன. - பொலிஸ் மறித்த போது நிற்க மறுத்தபோது துப்பாக்கியை நீட்டியிருக்கக் கூடாது. தனக்கு அல்லது வேறொருவருக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என்றால் ம

வாலி

யாழ் இணையத்தினை நிரந்தரமாக மூடவைப்பதற்கு ஒரு நாட்டின் புலநாய்வு அமைப்பு படாதபாடுபட்டு வருகின்றது. இன்றுவரை யாழ் இணையம் தமிழர் தேசியம் விடுதலை போராளிகள் என அதன் கொள்கைகளில் சோரம்போகமல் இருப்பது அந்நாட்

விசுகு

ஒரு பிள்ளையின் இழப்பு என்பதன் தார்ப்பரியம் அறிவேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை எல்லாமே வீட்டில் தான் கற்பிக்க படுகிறது தொடங்கப்படுகிறது.  17 வயதில் சாரதி அனுமதிப்பத்திரம் கூட இல்லாமல் மிகவும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் இணையத்தினை நிரந்தரமாக மூடவைப்பதற்கு ஒரு நாட்டின் புலநாய்வு அமைப்பு படாதபாடுபட்டு வருகின்றது. இன்றுவரை யாழ் இணையம் தமிழர் தேசியம் விடுதலை போராளிகள் என அதன் கொள்கைகளில் சோரம்போகமல் இருப்பது அந்நாட்டின் கொள்கைவகுப்பாளர்களுக்கு உவப்பானதாக இருக்கப் போவதில்லை.  தயவுசெய்து இந்தச் செயற்பாட்டுக்கு துணைபோகவேண்டாம் என அனைவரையும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கின்றேன். ஏற்கனவே திண்ணை மூடப்பட்டு ஆயிற்று.

  • Like 2
  • Thanks 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Kandiah57 said:

இது அனேகமாக  சட்டத்தை  மதிக்காத மக்களின் செயல்  ..இவர்கள் ஆசியா ஆபிரிக்கா  கண்டங்களச் சேந்தவர்கள் தான் ..இவர்களுக்கு சட்டத்தை மதிக்க கற்று. கொடுப்பது ரொம்பவே கடினம்    நாங்கள் எல்லோரும் பொலிஸ் மறித்தால். நின்று பதிலளித்து தான்  போகிறோம்   பொலிஸார் நாட்டில் அமைதியை போன வேண்டுமாயின் ஒவ்வொரு குடிமகனும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்     இங்கே குறிப்பிட்ட 17 வயது இளைஞன்   இந்த நிகழ்வுகளுக்கு காரணம்   அவன் ஏன் பொலிஸார் எச்சரிக்கையை மீறினான்.??  அவனை சுட்டது சரியாகும்   அந்த பொலிஸார் மன்னிக்கப்படவேண்டியவர்.   

உண்மை

எங்களையும் வெள்ளைக்காரர் ஆண்டனர் ஆண்டனர் தான் ஆயினும் எம்மை அடிமைகளாக நடத்தவில்லை. சமூக ஒழுக்கம் எங்கள் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உண்டு. ஆனால் பிரான்சில் இந்த கழுசறை வேலை செய்யும் இனத்தாருக்கு சமூக ஒழுக்கம் என்னும் பண்பே இல்லை.

இனிமேல் மேற்குலகில் நல்ல மனிதர்கள் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ இந்த லீபரல் ( தாராளவாதிகள் ) கடுமையாக தோற்கடிக்கப்பட்டு  வலதுசாரிகள் அல்லது பழமைவாதிகள் கோலோச்ச வேண்டும்.

இனம் மொழி பாகுப்பாட்டை ஓரளவுக்கு சகித்து வாழ முடியும். அதற்க்கு கடின உழைப்பும் நேர்மையும் தன் நம்பிக்கையும் போதும். ஆனால் கழுசறைகளோடு வாழ முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, வாலி said:

யாழ் இணையத்தினை நிரந்தரமாக மூடவைப்பதற்கு ஒரு நாட்டின் புலநாய்வு அமைப்பு படாதபாடுபட்டு வருகின்றது. இன்றுவரை யாழ் இணையம் தமிழர் தேசியம் விடுதலை போராளிகள் என அதன் கொள்கைகளில் சோரம்போகமல் இருப்பது அந்நாட்டின் கொள்கைவகுப்பாளர்களுக்கு உவப்பானதாக இருக்கப் போவதில்லை.  தயவுசெய்து இந்தச் செயற்பாட்டுக்கு துணைபோகவேண்டாம் என அனைவரையும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கின்றேன். ஏற்கனவே திண்ணை மூடப்பட்டு ஆயிற்று.

👆🏼👌

ஆதாரத்தோடு நிறுவியபின்னும், நிறுவியவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு - வாலை ஓட்ட நறுக்காமல் விட்டதன் பலன் இது.

காலில் முள்ளு தைத்தால் - அதை பிடுங்கி எறிய வேண்டும். இல்லாவிடில் உள்ளே இருந்து ஆசனிக் வேலை பார்த்து அது காலப்போக்கில் காலையே அழுகவைத்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலவரம் பிரான்சில் இருந்து…பெல்ஜியம்…இப்போ சுவிஸ்லாந்துக்கும் பரவி உள்ளது….

பிரான்சில் கலவரம் எழும்ப சொல்லப்படும் காரணங்கள், ஆபிரிக்க குடியேறிகளின் எண்ணிக்கை ஆகியன நிச்சயமாக சுவிஸ்சுக்கு பொருந்தாது.

#இண்டெரெஸ்டிங்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

ஈழத்தில்  பெற்றோர் சொல்லி வளர்த்தா பிள்ளைகள் எல்லோரும் இயக்கங்களில் இணைந்தார்கள்?

ஆமாம் கண்டிப்பாக   ...இல்லையென்றால் நாங்கள் அடக்கபட்ட. ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியது...கல்வி வேலைவாய்ப்பு....போன்ற விடயங்களில். பகுபாடு.    பிள்ளைகளுக்கு தெரியும் வாய்ப்புகள் தெரியாது இருக்கும் அல்லது குறைத்து இருக்கும்....பெற்றோர் அகிம்சைப்போரும்.  ..பிள்ளைகள் ஆயுதப்போரும்.  நடத்தியிருக்கிறார்கள் இரண்டுமே இலக்கு ஒன்றை  நோக்கி தான் நடைபெற்றது   இந்த எங்கள். போராட்டத்தையும்.  பிரான்ஸ் நடத்து கொண்டிருக்கும் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளையும் எப்படி ஒப்பிட முடியும்??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, இணையவன் said:

குமாரசாமி, இந்தத் திரியில் சீண்டல் எங்கே ஆரம்பிகிறது ? நன்றாகப் போய்க்கொண்டிருந்த திரியில் அநாவசியமாகப் புலிகளை இழுத்து விட்டு சுயதணிக்கை என்று ஆரம்பித்ததே நீங்கள்தான். எழுதிய கருத்துகள் எதுவும் இதுவரை தணிக்கை செய்யப்படவில்லை. அடிக்கடி வீணான குற்றச்சாட்டுகளை நிறுத்துங்கள்.

இந்த திரிக்கு சம்மந்தமில்லா கருத்தை கொண்டு வந்ததே முதலில் நீங்கள்தான் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

 

போக்குவரத்து விதிகளை மீறினால் சுட்டுக்கொல்லப்படும் என்றால் பிரான்ஸ்ல் வாழும் பெற்றோரின் நிலை எப்படி போகப்போகின்றது???

நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை ஆதரிக்கிறீர்களா. ?? உதாரணமாக சிவப்பு எரியும் போது  நின்று போக வேண்டும்  ..ஒரு சிலர்  சிவப்பு எரியும் போதும் கார் அல்லது வாகனங்கள் ஓடினால்.  .நாங்கள் போக்குவரத்து செய்ய முடியுமா?.  கார்.  ஓட முடியுமா?.    இந்த 17 வயது  இளைஞனில்  100 %. பிழை உண்டு”   அவன் அல்லது அவன் பெற்றோர்  தண்டிக்கப் படவேண்டியவர்கள்     நாங்கள் எல்லோரும் போக்குவரத்து விதிமுறைகளை மீற முடியும் இல்லையா?  அப்படி செய்வோமாயின். ...பொலிஸார்  எப்படி நாட்டில் சட்டத்தையும். ஒழுங்கையும். நிலை நட்ட முடியும்?? பொலிஸார்  இனம்தெரியதா குற்றவாளிகளை   இனம் காண்பதற்கு  நாடு முழுவதும் அடிக்கடி  சோதனைகளை மேற்கொள்ளும் போது  குடிமக்கள் ஒத்துழைப்பு வழக்குவது  இயல்பானது   ..பல கோடி மக்களில்  இப்படி ஒருவன்  நடப்பதும். கைது செய்ய முயலும் போது   காவல்துறையினர்  அந்த நேரம் உள்ள மனநிலையில் சில அசாம்பவிதங்கள். நடைபெறுகிறது  அவை   மன்னிக்கப்படவேண்டியவை.   முழு நாட்டின் நன்மைகள் கருதி.......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறுவன் என்கவுண்டரால் பற்றி எரியும் பிரான்ஸ்: பெல்ஜியத்திற்கும் பரவிய வன்முறை - ஐரோப்பாவில் என்ன நடக்கிறது?

பிரான்சில் வன்முறை - பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாரிஸ் நகரின் மாலை நேரக் காட்சி - கலவரக்காரர்கள் கட்டடங்களுக்கு தீ வைத்தததால் வானுயர எழுந்த புகை.

1 ஜூலை 2023

பிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதால் அந்நாடே கடந்த 4 நாட்களாக வன்முறைக் காடாக மாறியுள்ளது. அங்கு வன்முறை மெல்லமெல்ல குறைந்துவரும் சூழலில் சிறுவனின் இறுதிச்சடங்குகள் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளன. ஆனால், மற்ற இடங்களில் நீடிக்கும் வன்முறையில் கடைக்குள் புகுந்து வன்முறையாளர்கள் துப்பாக்கிகளை திருடிச் சென்றது அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்காவது நாளாக நீடிக்கும் வன்முறை தொடர்பாக இதுவரை 2,300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைநகரில் இரவு நேரங்களில் டிராம் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாரிஸ் நகர வீதிகள் போர்க்களத்தைப் போன்று காட்சியளிப்பதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் சோபியா பெட்ஸ் தெரிவித்துள்ளார்.

போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நஹெல் என்ற சிறுவன் அல்ஜீரியாவை பூர்வீகமாகக் கொண்டவர். பிரான்சில் வெடித்த வன்முறை அண்டை நாடான பெல்ஜியத்திற்கும் பரவியுள்ளது. அங்கும் வன்முறையை தூண்டுவதாக கொத்துக்கொத்தாக பலரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். தலைநகர் பிரஸ்ஸல்சில் மட்டும் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பிரான்சுக்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என்று பிரிட்டன் தனது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நான்காவது நாளில் வன்முறை சற்று குறைந்திருப்பதாகவும், 471 பேரை கைது செய்திருப்பதாகவும் பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மானின் கூறியுள்ளார். முதல் 3 நாள் வன்முறையில் 917 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் வெடித்த வன்முறை அண்டை நாடான பெல்ஜியத்திற்கும் பரவியுள்ளது.

துப்பாக்கிகளை திருடிய கலவரக்காரர்கள்

மெர்செய்ல் நகரில் நேற்றிரவு துப்பாக்கி விற்பனையகத்திற்குள் புகுந்த கலவரக்காரர்கள் துப்பாக்கிகளை திருடிச் சென்றுவிட்டதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

30 இளைஞர்கள் துப்பாக்கி விற்பனையகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து 5 முதல் 8 வரையிலான துப்பாக்கிகளை திருடிச் சென்றுவிட்டதாக லி பாரிசியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், வெடிமருந்துகள் ஏதும் திருடு போகவில்லை என்று பிரான்ஸ் 3 ஊடகம் கூறியுள்ளது.

ரோன் பிராந்தியத்தில் 3 காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாக பிரெஞ்சு ஊடகங்கள் கூறியுள்ளன.

சுவருக்கு பின்னால் பதுங்கியிருந்த நபரை நெருங்கிய போது அவர்கள் மூவரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக பிரெஞ்சு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
பிரான்சில் வன்முறை - பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாரிசில் வன்முறையாளர்களால் உடைக்கப்பட்ட கடைகள்

பாரிஸ் புறநகரில் சிறுவனுக்கு இறுதிச்சடங்கு

போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சிறுவன் நஹெலுக்கு பாரிசின் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரேவில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. சிறுவனின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திரளானோர் அந்த நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதாக லீ மான்டே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுவனின் இறுதிச்சடங்கு முடிந்த பின்னரும் அங்குள்ள மசூதிக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், 'நஹெல் மறைவுக்கு நீதி வேண்டும்' என்று முழக்கங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

பிரான்ஸ் முழுவதும் நிகழ்ச்சிகள் ரத்து

பிரான்சில் 4 நாட்களாக நீடிக்கும் வன்முறை எதிரொலியாக, அந்நாடெங்கும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்கிள் யாவும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் மிகப்பெரிய நிகழ்வு, பாரியில் புகழ் பெற்ற பிரெஞ்சு பாடகர் மிலென் ஃபார்மரின் இசைக் கச்சேரியாகும்.

வெர்செய்ல்ஸ், பாரிஸ், கிரெடெய்ல் ஆகிய கல்வி மாவட்டங்களில் ஆண்டிறுதி கொண்டாட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிலவற்றில் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

பிரான்சில் வன்முறை - பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நடைபெற்ற இறுதிச்சடங்கில் திரண்டிருந்த மக்களில் ஒரு பகுதி

23 ஆண்டுகளில் முதன் முறையாக அதிபரின் பயணம் ரத்து

பிரான்சில் கடந்த 23 ஆண்டுகளில் முதன் முறையாக அதிபர் ஒருவர் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆம்.

சிறுவன் என்கவுண்டரால் நாடெங்கும் பரவியுள்ள வன்முறை எதிரொலியாக ஜெர்மனிக்கு பிரெஞ்சு அதிபர் மக்ரோன் மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. "ஜெர்மனி அதிபர் ஃப்ராங்க் - வால்டர் ஸ்டெய்ன்மியரிடம் பிரெஞ்சு அதிபர் மக்ரோன் தொலைபேசி வாயிலாக பேசினார். பிரான்ஸ் நிலவரம் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். அத்துடன், ஜெர்மனியில் திட்டமிடப்பட்டிருந்த தனது அரசுமுறைப் பயணத்தை தள்ளிவைக்கவும் அவர் கேட்டுக் கொண்டார். பிரெஞ்சு அதிபரின் ஜெர்மனி பயணம் ரத்தாவது வருத்தம் அளிக்கிறது. ஆனால், அண்டை நாட்டின் நிலவரத்தை முழுவதுமாக புரிந்து கொண்டுள்ளோம்" என்று ஜெர்மனி அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி?

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 17 வயது மதிக்கத்தக்க நஹெல் எம் என்ற சிறுவன், பிரான்சின் ஒரு முக்கியப் பகுதியில் கார் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர், ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காக காரை நிறுத்தச் சொல்லியதாகத் தெரிகிறது.

ஆனால், சிறுவன் காரை நிறுத்தாமல் சென்றதுடன், தன்னிடம் ஆவணங்களைக் கேட்ட போலீஸ் மீது மோதும் நோக்கில் காரை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சிறுவனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தற்காப்புக்காக அவரை நோக்கிச் சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரி, சிறுவனின் கார் கண்ணாடி அருகே சென்று துப்பாக்கி முனையில் அவரை மிரட்டுவதும், அதன் பின்னர் அதே தொலைவில் இருந்து சிறுவனைச் சுடும் காட்சிகளும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மையை ஏ.எஃப்.பி. செய்தி முகமை உறுதி செய்துள்ளது.

 
பிரான்ஸ வன்முறை

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

பிரான்ஸ் போலீஸ் துப்பாக்கி முனையில் சிறுவனை மிரட்டும் சம்பவம் தொடர்பான வீடியோவில் உள்ள ஒரு காட்சி

நஹெலின் தாய் சொன்னது என்ன?

நஹெல் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த தகவலைக் கேட்டதும் அவரது தாய் மோனியா அதிர்ந்து போனார். மகனை இழந்து தவிக்கும் நிலையில், சமூக ஊடகத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார்.

அதில், “நஹெல் ஒரு குழந்தையைப் போன்றவன். அவனுக்கு என்னுடைய அரவணைப்பு தேவைப்பட்டது. சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு கிளம்பியபோதும், ‘ஐ லவ்யூ அம்மா’ என்று அன்பான வார்த்தைகளைக் கூறி, என்னை முத்தமிட்டுவிட்டு தான் சென்றான்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் அவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக எனக்குத் தகவல் வந்தது. எனது வாழ்க்கையில் எல்லாமுமாக என் மகன் இருந்தான். இப்போது அவனை இழந்துவிட்டு நான் என்ன செய்வேன்?” என்று மோனியா அந்த வீடியோவில் கண்ணீர் மல்கப் பேசியிருந்தார்.

அத்துடன், தனது மகனின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

அதிபர் சொல்வது என்ன?

“சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு மன்னிக்க முடியாதது என்று கூறியுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், துப்பாக்கி சூட்டை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது,” என்றும் கூறியுள்ளார். அதிபர் இவ்வாறு கூறியுள்ளதற்கு போலீஸ் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இதனிடையே, “இந்தச் சம்பவத்தை வைத்து, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களைக் குறிவைத்து போராட்டக்காரர்கள் ஒரே இரவில் தாக்குதல் நடத்தியுள்ளனர்,” என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த இரண்டு நாட்களில், இரவு நேரங்களில் தீவைப்பு, வெடி வைத்தல் போன்ற செயல்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், இதன் விளைவாக அரசு கட்டடங்கள், கார்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

பிரான்ஸ வன்முறை

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

பிரான்சின் நான்டெர்ரே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள்

ஆறாயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி

இந்த நிலையில், நஹெலின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராட்டம் நடத்த உள்ளதாகவும், அதில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் இறந்த சிறுவனின் தாயார் அழைப்பு விடுத்திருந்தார்.

அவரது அழைப்பை ஏற்று, நான்டெர்ரே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 6000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக நாடு முழுவதும் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 
பிரான்ஸ வன்முறை

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

சிறுவன் நஹெல் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சில் வெடித்துள்ள போராட்டம்

நாடு முழுவதும் பரவிய போராட்டம்

சிறுவனின் மரணத்தைக் கண்டித்து பிரான்சின் பல்வேறு நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துலூஸ் நகரில் போராட்டக்காரர்கள் பொது சொத்துகளைத் தீயிட்டு எரிக்க முயன்றதாகவும், தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்களை கல்வீசித் தாக்கியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேபோன்று, பிரான்சின் வட பகுதியில் அமைந்துள்ள லில்லி நகரில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கொல்லப்பட்ட சிறுவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரான்சின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரென்சில் நகரில் சுமார் 300 பேர் கூடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பலர் ஆத்திரத்தில் அங்கு தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட முயன்றதாகவும், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் நிலைமையைத் தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக பாரிஸ் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ வன்முறை

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

ஃபிரான்ஸ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சமத்துவமின்மை உணர்வு போராட்டத்தைத் தூண்டியுள்ளது என்று கூறுகிறார் பாரிஸ் நகரிலுள்ள பிபிசி செய்தியாளர் லக்கி வில்லியம்சன்

அதிபரின் கருத்தும், போலீஸ் சங்கங்களின் எதிர்ப்பும்

“சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது மன்னிக்க முடியாதது என்றும், இதை எந்தக் காரணம் கொண்டும் நியாயப்படுத்த இயலாது” என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கருத்து தெரிவித்திருந்தார். அதிபரின் இந்தக் கருத்துக்கு ஃபிரான்சில் உள்ள பல்வேறு போலீஸ் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

“ஒரு வழக்கில் தீர்ப்பு வரும் வரை, அதில் குற்றம் சாட்டப்பட்ட நபரை குற்றவாளியாகக் கருத முடியாது. ஆனால், சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிராக அதிபர் அவசரப்பட்டு கருத்து தெரிவித்துள்ளார்,” என்று அலையன்ஸ் போலீஸ் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரியை ‘துணிவு மிக்கவர்’ என்று குறிப்பிட்டு, மற்றொரு போலீஸ் சங்கம் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டாலும், ‘அந்தச் சிறுவனை அவரது குடும்பம் நல்ல விதத்தில் வளர்க்கவில்லை’ என்று அந்தச் சங்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால், “அதிபரை விமர்சிப்பது போன்ற அரசியல் தலையீடு, காவல்துறையின் மீதான வெறுப்பை அதிகரிக்கும்” என்று ‘யுனைட் எஸ்ஜிபி போலீஸ்’ எனும் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

“சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்த முயன்றால், காவல் துறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்” என்று ஃபிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் எச்சரித்துள்ளார்.

பிரான்ஸ வன்முறை
 
படக்குறிப்பு,

போர்க்களமாக காட்சி அளிக்கும் பாரிஸ் நகர வீதிகள்

 

ஃபிரான்ஸ் போலீசுக்கு துப்பாக்கியால் சுடும் அதிகாரத்தில் இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வகை செய்யும் சட்டம் 2017இல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஓடும் கார்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன என்று ‘Le Monde’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரத்தால், கறுப்பின மக்கள் அவர்களின் துப்பாக்கிகளுக்கு இலக்காகும் அபாயம் அதிகரித்துள்ளது என்று மனித உரிமை ஆர்வலரான ரோகயா டயல்லோ அச்சம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ வன்முறை

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

நஹெல் கொலை நினைவூட்டும் 2005 சம்பவம்

தற்போது சிறுவன் கொல்லப்பட்டது போன்றதொரு சம்பவம், 2005இல் ஃபிரான்சில் நிகழ்ந்துள்ளது. அப்போது போலீசார் துரத்திப் பிடிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள், ஒரு துணை மின் நிலையத்திற்குள் சென்று ஒளிந்தனர்.

அப்போது ஃபிரான்சின் அதிபராக இருந்த நிக்கோலஸ் சார்க்கோசி, அவ்விரு இளைஞர்களையும் குற்றவாளிகள் என்று அறிவித்ததோடு, அவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருந்தார். அத்துடன் அவர்களைக் கெட்டவர்கள் என்றும் அதிபர் குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறியபடியே, போலீசார் அவர்களைச் சுட்டுக் கொன்றனர். இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஃபிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் பங்கேற்றவர்கள் அரசு கட்டடங்கள் உள்ளிட்ட பொது சொத்துகளைத் தீயிட்டு எரித்தனர். சில வாரங்கள் தொடர்ந்த அந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள், தங்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அந்த நிகழ்வு தற்போதைய அரசாங்கத்திற்கு நிச்சயம் நினைவில் இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, 2005இல் நிகழ்ந்ததைப் போன்று மீண்டுமொரு முறை விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்வதைத் தற்போதைய அரசு நிச்சயம் விரும்பாது.

தான் கூறும் வார்த்தைகள் அமைதிக்கும் வழி வகுக்கும்; அதேநேரம் வன்முறையையும் தூண்டும் என்பதை அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நன்கு உணர்ந்திருக்கிறார் என்று பாரீசில் உள்ள பிபிசி செய்தியாளர் ஹக் ஸ்கோஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்துக்கு ஃபிரான்ஸ் அதிபர் ஆறுதல் செய்தி அனுப்பி உள்ளார்.

 
பிரான்ஸ வன்முறை

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

ஃபிரான்சின் பல்வேறு நகரங்களில் வியாழக்கிழமை நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் தீயிட்டு கொளுத்தப்பட்ட கார்கள்

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 13 பேரை சுட்டுக்கொன்ற ஃபிரான்ஸ் போலீஸ்

ஓய்வூதியம் தொடர்பான சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்வதைக் கண்டித்து, ஃபிரான்ஸ் மக்கள் ஏற்கெனவே வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

இந்த விஷயத்தில் பொதுமக்களின் கோபத்தைச் சம்பாதித்துள்ள அதிபர் இம்மானுவேல் மக்ரோன், தற்போது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து, பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் மீண்டும் 2005இல் நிகழ்ந்ததைப் போன்று நீடிக்க அனுமதிக்க கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார்.

இதைக் கருத்தில் கொண்டே அதிபர் மக்ரோனும், அவரது அமைச்சரவை சகாக்களும், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கையாண்டு வருகின்றனர்.

கடந்த 2017இல் இருந்து, ஃபிரான்ஸ் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானவர்களில் பெரும்பாலோர் கறுப்பினத்தவர்கள் அல்லது அரேபியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாலை போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி, கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 13 பேர் பிரான்ஸ் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தற்போது கொல்லப்பட்டுள்ள சிறுவன் நஹெலும், பிரெஞ்சு -அல்ஜீரியன் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று சிறுவனின் அண்டை வீட்டுக்காரர்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cpdke7e5p58o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலவரம் காரணமாக ஜேர்மனிக்கான பயணத்தை இரத்து செய்தார் மக்ரோன்

கலவரம் காரணமாக ஜேர்மனிக்கான பயணத்தை இரத்து செய்தார் மக்ரோன்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்றைய தினம் ஜேர்மனிக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நான்காவது இரவாக தொடர்ந்தும் கலவரம் இடம்பெற்று வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரியால் சுடப்பட்ட அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த 17 வயதான சிறுவனின் இறுதி சடங்கு நேற்று இடம்பெற்றது.

இந்நிலையில் சுமார் 45,000 அதிகாரிகள் இலகுரக கவச வாகனங்களின் ஆதரவுடன் நிலை நிறுத்தப்பட்ட போதிலும், நேற்று இரவும் வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

வன்முறை சம்பவங்களை அடுத்து 1,311 பேர் ஒரே இரவில் கைது செய்யப்பட்டதாகவும் இதற்கு முதல்நாள் இரவில் 875 பேர் கைது செய்யப் பட்டனர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேநேரம் 700க்கும் மேற்பட்ட கடைகள் பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் வங்கிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சூறையாடப்பட்டதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1337183

Posted
18 minutes ago, ஏராளன் said:

நஹெல் கொலை நினைவூட்டும் 2005 சம்பவம்

தற்போது சிறுவன் கொல்லப்பட்டது போன்றதொரு சம்பவம், 2005இல் ஃபிரான்சில் நிகழ்ந்துள்ளது. அப்போது போலீசார் துரத்திப் பிடிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள், ஒரு துணை மின் நிலையத்திற்குள் சென்று ஒளிந்தனர்.

அப்போது ஃபிரான்சின் அதிபராக இருந்த நிக்கோலஸ் சார்க்கோசி, அவ்விரு இளைஞர்களையும் குற்றவாளிகள் என்று அறிவித்ததோடு, அவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருந்தார். அத்துடன் அவர்களைக் கெட்டவர்கள் என்றும் அதிபர் குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறியபடியே, போலீசார் அவர்களைச் சுட்டுக் கொன்றனர். இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஃபிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் பங்கேற்றவர்கள் அரசு கட்டடங்கள் உள்ளிட்ட பொது சொத்துகளைத் தீயிட்டு எரித்தனர். சில வாரங்கள் தொடர்ந்த அந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள், தங்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.

 

இந்தச் செய்தி தவறானது. சிறுவர்கள் மின் நிலையத்துக்குள் ஒழிய நுளைந்து மின்சாரம் தாக்கி இருவரும் இறந்தார்கள்.

1 hour ago, பெருமாள் said:

இந்த திரிக்கு சம்மந்தமில்லா கருத்தை கொண்டு வந்ததே முதலில் நீங்கள்தான் .

எது ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

இப்படியான தலைக்கனங்களால் தான் தமிழினம் நடுத்தெருவில் நிற்கின்றது.

எனது பார்வைக்கும் உங்கள் பார்வைக்குமான வேறுபாடு இது.

எல்லா விடயங்களிலும் விளையாட்டு கிடையாது. சில விடயங்களில் மிகக் கண்டிப்பான மனிதன், அப்பா நான்.  இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இது எனக்கானது அல்ல அவர்களது எதிர் காலத்திற்கானது, இந்த பூமிக்கானது

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

விற்பனைக்கு வைத்திருந்த புதிய வாகனங்களும் திருடப் படுகின்றது.

 

நான்டெர்ரேயில் முன்பு அடித்துக்கொலை செய்யப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் மரணம் குறித்து செய்திகள் உள்ளன. நேற்றிரவு பிரான்சில் சிவில் உடையில் இருந்ததாகக் கூறப்படும் போலீஸ்காரர் ஒருவர் இஸ்லாமியர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இதோ.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பெருமாள் said:

நீங்கள் சொல்வது 1௦௦ வீதம் சரி அதுக்காக கலப்பு இனம் எனும் ரீதியில் நச்சு பாம்புகள் மட்டும் அதிகரித்ததின் பலன் பிரான்சு அனுபவிக்குது இங்கிலாந்தும் அனுபவிக்கும் காலம் மிக விரைவில் உள்ளது .

இதைத்தான் நானும் இணையவனும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். வீட்டில் இருந்து தான் இவற்றிற்கான நற்பாதை தொடங்கப்படணும்.

மாறாக மதம் சார்ந்து வீட்டில் ஊட்டப்படும் விசமே பிரான்சில் தற்போது நடக்கும் கலவரங்களுக்கு மூலகாரணம். கத்தோலிக்க இசுலாமிய மதங்களின் பலநூற்றாண்டு கால இந்த கலவரங்களில் இருந்தான விடுதலை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை?????

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தியர்கள் (சங்கிகள்) இந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி, 
முஸ்லீம்கள் மீதான வெறுப்பை அதிகரிக்க தவறான செய்திகளையும் பரப்புகின்றார்கள் போலுள்ளது. 👇 

பிரான்ஸ்  இஸ்லாமியர்களின் தாக்குதலுக்கு உள்ளானது

500க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன
100க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்
தெருக்களில் 2500+ தீ
1500க்கும் மேற்பட்ட கார்கள் எரிக்கப்பட்டன
234 கட்டிடங்கள் எரிந்தன

மோடி - யோகி போன்ற தீவிர வலதுசாரி தலைவரால் மட்டுமே இத்தகைய தீவிரவாதிகளுக்கு கடிவாளம் போட முடியும். 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊர்ப்புதினம் பகுதி அமைதியாக உள்ளது.இந்த திரி பற்றி எரியுது.ஆக எதுவும் நிரந்தரம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, விசுகு said:

மதம் சார்ந்து வீட்டில் ஊட்டப்படும் விசமே பிரான்சில் தற்போது நடக்கும் கலவரங்களுக்கு மூலகாரணம்.

இது தான் உண்மை.

44 minutes ago, விசுகு said:

இதைத்தான் நானும் இணையவனும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். வீட்டில் இருந்து தான் இவற்றிற்கான நற்பாதை தொடங்கப்படணும்.

👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல கலாச்சார இனம் சேர்ந்து... கூட்டு கொள்ளை. 😡

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாரிஸில் உள்ள,  உள்ளூர் கடைகளைத் திருடி நாசப்படுத்திய கொள்ளையர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

France Protest: இளைஞரை சுட்டுக் கொன்ற Police... கொந்தளித்த மக்கள்... பற்றி எரியும் Paris…

France-ல் 17 வயது இளைஞர் ஒருவர் போலீஸாரல் சுட்டுகொல்லப்பட்டதை அடுத்து, பாரிஸ் உட்பட அந்நாட்டின் முக்கிய நகரங்கள் வன்முறைக்காடாக மாறியுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலவரக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து  வருகிறது.

 

Image

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

பல கலாச்சார இனம் சேர்ந்து... கூட்டு கொள்ளை. 😡

எங்கடையள் சிலதும் இவற்றில் ஈடுபடுவதாக தகவல். பெற்றோரை கட்டி வைத்து சவுக்கால் அடிக்கணும். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன்   எனக்கேட்ட தாய்.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, விசுகு said:

எங்கடையள் சிலதும் இவற்றில் ஈடுபடுவதாக தகவல். பெற்றோரை கட்டி வைத்து சவுக்கால் அடிக்கணும். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன்   எனக்கேட்ட தாய்.

அகதிகள் விடயத்தில், தாராளமாக நடந்து கொண்டதற்கு….
ஓரு தேசம் இவ்வளவு விலை கொடுத்துள்ளது. 😢

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, விசுகு said:

எங்கடையள் சிலதும் இவற்றில் ஈடுபடுவதாக தகவல். பெற்றோரை கட்டி வைத்து சவுக்கால் அடிக்கணும். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன்   எனக்கேட்ட தாய்.

நீங்க எல்லாரும் பாதுகாப்பாக இருங்க @suvy

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

அகதிகள் விடயத்தில், தாராளமாக நடந்து கொண்டதற்கு….
ஓரு தேசம் இவ்வளவு விலை கொடுத்துள்ளது. 😢

சிறித்தம்பி!
எல்லா நாட்டு அகதிகளையும் ஒரே தராசில் வைக்க முடியாது.

தற்போது இஸ்லாமிய நாடுகளிலிருந்தே அதிகமாக அகதிகளாக வருகின்றார்கள். அந்த அகதிகள் வரும் நாடுகளை கவனித்து பார்த்தால் .......அந்த நாடுகள் அனைத்தும் இனி இல்லையென்ற மத/சட்டம் ஒழுங்கு நடவடிக்கை கட்டுப்பாடு உள்ள நாடுகளாக இருக்கும். ஏனென்றால் அந்த இன மக்களின் இயல்பான குணாதிசயங்களே விகாரமானதாக இருக்கும். அதனால் தான் அந்த நாடுகளில் கடுமையான சட்டங்களை வைத்துள்ளார்கள். உதாரணத்திற்கு கசையடி,விரல் எடுத்தல்,மரண தண்டனை உட்பட.....
அப்படிப்பட்ட நாடுகளில் இருந்து மேற்குலகிற்கு அகதிகளாக வருபவர்கள்  திறந்த வெளி கலாச்சார/மனித உரிமை நாடுகளுக்கு வந்ததும் தலைகால் தெரியாமல் செய்யும் அநியாங்களே இவைகள்.

ஐரோப்பிய சட்டங்கள் ஐரோப்பிய மண் மக்களுக்குரியது.அவர்கள் சட்டங்களை மதிப்பவர்கள். ஆசிய,அரேபிய ஆபிரிக்க  மண்ணின் சட்டங்களை பார்த்தால் புரியும் அந்தந்த நாட்டு  மக்கள் என்னென்ன குணாதிசயங்கள் உடையவர்கள் என......?

சருகு ஆமையை மெத்தையில் வைத்தாலும் அது சருகை தேடித்தான் போகுமாம். அதே போல் தான் அந்தந்த நாட்டு மக்களின் குணாதிசயங்களும்.

  • Like 1
  • Thanks 3



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.