Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: VISHNU

29 JUN, 2023 | 08:21 PM
image
 
யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

0__3_.jpg

யாழ்ப்பாணம் - அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. 

0__4_.jpg

குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த , யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( வயது 37) மற்றும் அவருடன் பயணித்த வாகனங்கள் பழுது பார்க்கும் (மெக்கானிக்) அராலி மத்தியை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

0__2_.jpg

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/158868

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம் - அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. 

எப்படி ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்படி ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கும்?

அந்தப் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாய் இருக்கும்.......இவர்களும் வேகமாய் போய் சமநிலையில் தடுமாறி மோதியிருப்பார்கள்போல்தான் தோன்றுகிறது.......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படி ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கும்?

வேக காட்டுபாடுயற்ற முறையில்  ஒருவர் பகுதியில் மற்றவர்  போயக்கொண்டிருப்பார்கள். வேகத்தை குறைக்கமால். வழி  விட்டு கொடுக்கும் போது  மோதியிருக்கலாம்.  ..றோட்டு  இடையிடையே.  பள்ளங்ள். .[..குண்டு]காணப்படும்  ..இளைஞர்கள் நல்ல இலகுவாக வெட்டி வெட்டி ஒடுவார்கள்.  எதிரில் வரும் வாகனங்கள் பற்றி கவலைபடுவதில்லை    அடித்து விட்டு போய் விடுவார்கள்   ஆனால் இந்த றோட்டு  நல்லது  ஏன்  அடிபட்டது  என்று சரியாக விளங்கவில்லை. 2003  கண்டி றோட்டில். எனக்கு  ஒரு அனுபவம் ஒன்று ஏற்பட்டது   ஒரு மோட்டார் சைக்கிள் பின்னுக்கு. 10 போத்தல்களுடன். போய் கொண்டிருந்தேன்…  பள்ளங்களை. தவிர்த்து   நன்றாக வெட்டி வெட்டி  ஒடினார். ஒரு லொறி  மெல்ல அடித்து விட்டு போகிறது   ஒரு போத்தல். மென்டிஸ்.   உடைத்து விட்டது   🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, Kandiah57 said:

2003  கண்டி றோட்டில். எனக்கு  ஒரு அனுபவம் ஒன்று ஏற்பட்டது   ஒரு மோட்டார் சைக்கிள் பின்னுக்கு. 10 போத்தல்களுடன். போய் கொண்டிருந்தேன்…  பள்ளங்களை. தவிர்த்து   நன்றாக வெட்டி வெட்டி  ஒடினார். ஒரு லொறி  மெல்ல அடித்து விட்டு போகிறது   ஒரு போத்தல். மென்டிஸ்.   உடைத்து விட்டது   🤣

என்னப்பா….. பத்துப் போத்திலும்,🍾 மெண்டிசா? 🍾
நீங்கள், பேய்க் காயப்பா…🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படி ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கும்?

3 hours ago, suvy said:

அந்தப் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாய் இருக்கும்.......இவர்களும் வேகமாய் போய் சமநிலையில் தடுமாறி மோதியிருப்பார்கள்போல்தான் தோன்றுகிறது.......!  

40 minutes ago, Kandiah57 said:

வேக காட்டுபாடுயற்ற முறையில்  ஒருவர் பகுதியில் மற்றவர்  போயக்கொண்டிருப்பார்கள். வேகத்தை குறைக்கமால். வழி  விட்டு கொடுக்கும் போது  மோதியிருக்கலாம்.  ..றோட்டு  இடையிடையே.  பள்ளங்ள். .[..குண்டு]காணப்படும்  ..இளைஞர்கள் நல்ல இலகுவாக வெட்டி வெட்டி ஒடுவார்கள்.  எதிரில் வரும் வாகனங்கள் பற்றி கவலைபடுவதில்லை    அடித்து விட்டு போய் விடுவார்கள்   ஆனால் இந்த றோட்டு  நல்லது  ஏன்  அடிபட்டது  என்று சரியாக விளங்கவில்லை. 2003  கண்டி றோட்டில். எனக்கு  ஒரு அனுபவம் ஒன்று ஏற்பட்டது   ஒரு மோட்டார் சைக்கிள் பின்னுக்கு. 10 போத்தல்களுடன். போய் கொண்டிருந்தேன்…  பள்ளங்களை. தவிர்த்து   நன்றாக வெட்டி வெட்டி  ஒடினார். ஒரு லொறி  மெல்ல அடித்து விட்டு போகிறது   ஒரு போத்தல். மென்டிஸ்.   உடைத்து விட்டது   🤣

ஒரு மசிருமில்ல  , தலைக்கணம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, நந்தன் said:

ஒரு மசிருமில்ல  , தலைக்கணம்

அதெப்படி அச்சொட்டாக சொல்கின்றீர்கள்? 😎
ஆதாரம் இருக்கா சார்? :cool:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, தமிழ் சிறி said:

என்னப்பா….. பத்துப் போத்திலும்,🍾 மெண்டிசா? 🍾
நீங்கள், பேய்க் காயப்பா…🤣

ஆமாம்...ஆனால் எனக்கில்லை  கீர்த்தி சிறி அண்ணை    🤣. நானும் மனைவி இரண்டு பிள்ளைகள் உடன். 5 கிழமைகள் லீவ்ல். ஏப்ரல் மாதம் 2003 இலங்கை போனேன்   .காரணம்  எனது தகப்பனார்.  சுகர் வருத்தம்  மிகவும் கடுமை.  குதிகால் வெட்டி விட்டார்கள்  படுக்கையில் வைத்து எனது அம்மா பார்த்தார்   நாங்கள்  பிள்ளைகள் 5 பேரும் இலங்கையில் இல்லை     அப்பா  குடிப்பார். எனவேதான் அவருக்கு வேண்டினேன்.  மிகவும் சந்தோசமடைநதார்   சொந்தங்கள் பேசினார்கள்  ஊரில் இருக்கும் போது தகப்பன்  குடி என்று அடிபட்டான்கள்.   இப்ப வெளிநாடு போனாதும்.  வேண்டி கொடுக்கிறாங்கள்.  என்று ..நான்  திரும்ப வந்து 6நாளில். 10.5.2003   அப்பா  இவ்வுலகை விட்டு போய்விட்டார்   

57 minutes ago, நந்தன் said:

ஒரு மசிருமில்ல  , தலைக்கணம்

நீங்கள் சொல்வதும். சரி தான்   ஊரில் சொல்வார்கள்  ..கைப்பாட்டு     என்று    அதாவது   நான் என்ற  திமிர்.  ...இருப்பினும் அவர்களின் ஆத்மா   சாந்தியடைய  வேண்டுகிறேன்    ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் ஓம்  சாந்தி   

  • Like 1
  • Haha 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kandiah57 said:

ஆமாம்...ஆனால் எனக்கில்லை  கீர்த்தி சிறி அண்ணை    🤣. நானும் மனைவி இரண்டு பிள்ளைகள் உடன். 5 கிழமைகள் லீவ்ல். ஏப்ரல் மாதம் 2003 இலங்கை போனேன்   .காரணம்  எனது தகப்பனார்.  சுகர் வருத்தம்  மிகவும் கடுமை.  குதிகால் வெட்டி விட்டார்கள்  படுக்கையில் வைத்து எனது அம்மா பார்த்தார்   நாங்கள்  பிள்ளைகள் 5 பேரும் இலங்கையில் இல்லை     அப்பா  குடிப்பார். எனவேதான் அவருக்கு வேண்டினேன்.  மிகவும் சந்தோசமடைநதார்   சொந்தங்கள் பேசினார்கள்  ஊரில் இருக்கும் போது தகப்பன்  குடி என்று அடிபட்டான்கள்.   இப்ப வெளிநாடு போனாதும்.  வேண்டி கொடுக்கிறாங்கள்.  என்று ..நான்  திரும்ப வந்து 6நாளில். 10.5.2003   அப்பா  இவ்வுலகை விட்டு போய்விட்டார்   

கீர்த்தி சிறி அண்ணை. 😂
எங்கை… மாலதி அக்கா. 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, குமாரசாமி said:

அதெப்படி அச்சொட்டாக சொல்கின்றீர்கள்? 😎
ஆதாரம் இருக்கா சார்? :cool:

ஆதாரம்   படமும் செய்தியும் தான்    .. மேலும் நத்தனுக்கு   இது சம்பந்தமான. ஞானம் உண்டு” 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Kandiah57 said:

ஆதாரம்   படமும் செய்தியும் தான்    .. மேலும் நத்தனுக்கு   இது சம்பந்தமான. ஞானம் உண்டு” 🤣

உங்கள் நந்தன் ஞானம் மிக்கவராக இருக்கலாம். ஆனால் தலைக்கனம் என்றதிற்கு ஆதாரம் தேவை எல்லோ? படங்கள் தலைக்கனத்தை உறுதிப்படுத்துமா சார்? 
தேவையில்லாமல் ஆணிகளை அடிக்காதீர்கள். :cool:

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

உங்கள் நந்தன் ஞானம் மிக்கவராக இருக்கலாம். ஆனால் தலைக்கனம் என்றதிற்கு ஆதாரம் தேவை எல்லோ? படங்கள் தலைக்கனத்தை உறுதிப்படுத்துமா சார்? 
தேவையில்லாமல் ஆணிகளை அடிக்காதீர்கள். :cool:

சரி  தலைக்கனமில்லை    போதுமா??. இல்லை   இதற்க்கும். ஆதாரம் வேணுமா?.  அப்ப  இந்த விபத்து நடத்ததிற்க்கு காரணம் என்ன  ?  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kandiah57 said:

ஆமாம்...ஆனால் எனக்கில்லை  கீர்த்தி சிறி அண்ணை    🤣. நானும் மனைவி இரண்டு பிள்ளைகள் உடன். 5 கிழமைகள் லீவ்ல். ஏப்ரல் மாதம் 2003 இலங்கை போனேன்   .காரணம்  எனது தகப்பனார்.  சுகர் வருத்தம்  மிகவும் கடுமை.  குதிகால் வெட்டி விட்டார்கள்  படுக்கையில் வைத்து எனது அம்மா பார்த்தார்   நாங்கள்  பிள்ளைகள் 5 பேரும் இலங்கையில் இல்லை     அப்பா  குடிப்பார். எனவேதான் அவருக்கு வேண்டினேன்.  மிகவும் சந்தோசமடைநதார்   சொந்தங்கள் பேசினார்கள்  ஊரில் இருக்கும் போது தகப்பன்  குடி என்று அடிபட்டான்கள்.   இப்ப வெளிநாடு போனாதும்.  வேண்டி கொடுக்கிறாங்கள்.  என்று ..நான்  திரும்ப வந்து 6நாளில். 10.5.2003   அப்பா  இவ்வுலகை விட்டு போய்விட்டார்   

சில விடயங்கள் வெளிப்பார்வைக்கு தப்பாகத் தோன்றினாலும் குடும்பத்துக்குள் மன உணர்வுசார்ந்த பல விடயங்கள் இருக்கு .......நீங்கள் செய்தது சரியே......!  👍

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, Kandiah57 said:

நான்  திரும்ப வந்து 6நாளில். 10.5.2003   அப்பா  இவ்வுலகை விட்டு போய்விட்டார்   

கவலையானது  அண்ணா

10 hours ago, Kandiah57 said:

றோட்டு  இடையிடையே.  பள்ளங்ள். .[..குண்டு]காணப்படும்  ..இளைஞர்கள் நல்ல இலகுவாக வெட்டி வெட்டி ஒடுவார்கள்.  எதிரில் வரும் வாகனங்கள் பற்றி கவலைபடுவதில்லை    அடித்து விட்டு போய் விடுவார்கள்  

 நீங்கள் சென்று ஒரு 13 வருடங்கள் பின்பு தான்  இலங்கை பார்த்தனான். றோட்டு  ஒகேயாகவே இருந்தது. வீதி சட்டதிட்டங்களை ஒழுங்குகளை அவர்கள் அங்கே மதிப்பதில்லை.
[ வரும் வாகனங்கள் பற்றி கவலைபடுவதில்லை ]

Edited by விளங்க நினைப்பவன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kandiah57 said:

ஆமாம்...ஆனால் எனக்கில்லை  கீர்த்தி சிறி அண்ணை    🤣. நானும் மனைவி இரண்டு பிள்ளைகள் உடன். 5 கிழமைகள் லீவ்ல். ஏப்ரல் மாதம் 2003 இலங்கை போனேன்   .காரணம்  எனது தகப்பனார்.  சுகர் வருத்தம்  மிகவும் கடுமை.  குதிகால் வெட்டி விட்டார்கள்  படுக்கையில் வைத்து எனது அம்மா பார்த்தார்   நாங்கள்  பிள்ளைகள் 5 பேரும் இலங்கையில் இல்லை     அப்பா  குடிப்பார். எனவேதான் அவருக்கு வேண்டினேன்.  மிகவும் சந்தோசமடைநதார்   சொந்தங்கள் பேசினார்கள்  ஊரில் இருக்கும் போது தகப்பன்  குடி என்று அடிபட்டான்கள்.   இப்ப வெளிநாடு போனாதும்.  வேண்டி கொடுக்கிறாங்கள்.  என்று ..நான்  திரும்ப வந்து 6நாளில். 10.5.2003   அப்பா  இவ்வுலகை விட்டு போய்விட்டார்   

8 minutes ago, suvy said:

சில விடயங்கள் வெளிப்பார்வைக்கு தப்பாகத் தோன்றினாலும் குடும்பத்துக்குள் மன உணர்வுசார்ந்த பல விடயங்கள் இருக்கு .......நீங்கள் செய்தது சரியே......!  👍

ஆம்  கந்தையா அண்ணையின் தந்தை... இறப்பதற்கு சில நாட்கள் முன்னராவது 
மகிழ்ச்சியாக இருந்தமைக்கு அந்தப் போத்தல்தான் காரணம் என்றால்,
அதில் குறை சொல்ல எதுவும் இல்லை.
ஒரு மனிதனின் இறுதிக் காலத்தில... 
அவர் ஆசைப் பட்டதை கொடுப்பது உறவினரின் கடமை.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியான சம்பவங்கள் நடப்பது சாதாரணமே காரணம் இங்கு கருத்து எழுதும் அனைத்து உறவுகளிடமும் ஊரில நிக்கும்போது ஒரு மோட்டார் சைக்கிளைக் கொடுத்தால் கண்டமேனிக்குத்தான் ஓடுவினம் நான் உட்பட. காரணம் எந்தவாகனம் ஓட்டும்போது இல்லாத ஒரு பரவசம் மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது வரும் அனேகமானவர்களுக்கு அதிலிருந்து விலகி இருக்க முடியாது.

ஏணோ தெரியாது மனிசி பிள்ளைகள் எங்களுடைய சொல்லைக் மதிப்பதில்லை இதாவது எடுத்த எடுப்புக்கும் வளைத்த வளைப்புக்கும் ஒத்துவருதே என்பதால் இருக்கலாம்

போனமுறை நான் யாழ்ப்பாணத்தில நிக்கும்போது ஒரு இரவல் சைக்கிள் பயணம் முழுவதும் பாவிக்கிறமாதிரி மாட்டிற்ருது. என்னுடைய சுதியைப் பார்த்தால் தெரியும் அதுவும் யாராவது எங்களை முந்தப்பாக்கிறார் என்றாலே ஈகோ விடாது இந்தச் சைக்கிள் அதுக்கு ஒத்துவராது எனத் தெரிந்தும் வீம்புக்கு வச்சு முறுக்குவது பேரின்பம்.

குமாரசாமி அண்ணர் வாங்கோ போகலாம் கடைசி காலத்தில என்னத்தக் கண்டம் ஒரு இழிச்சவாயனாவது இரவலா ஒரு மோட்டார் சைக்கிள் தரமாட்டானா எங்கட வித்தைகள் எல்லாத்தையும் இறக்கி பாதாள கிணத்தில் பயங்கர மோட்டார் சைக்கிள் ஓட்டம் என்பதுபோல் சறுக்கிஸ் எல்லம் காட்டி கடைசியில நடுத்தெருவில வெள்ளை பிரட்டிக்கிடப்பம் பொண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் வந்து கூட்டி அள்ளிக்கொண்டுபோகட்டும் இவளவ எங்களுக்குச் செய்கிற வேலைக்கு இவையளுக்கு நாங்கள் வைச்சுச் செய்யவேணும்.

என்ன கொஞ்சம் பாத்து ஓடியிருந்தால் கவலைப்படத்தேவையில்லை. சரி விடுங்கோ போய்ச்சேர்ந்திட்டுதுக 

கொசுறாக ஒரு செய்து 
இப்படி வித்தை காட்டினால் அங்கத்த பெண்டுகளுக்கு கொஞ்சம் பிடிக்கும் எனக்கேள்விப்பட்டன் என்னதம்பி சொல்லுறியள் எனக்கேட்டன் அவன் சொல்லுறான் ஐயா உங்கட ரேஞ்சுக்கும் இங்க சாய்ஸ் இருக்குதய்யா உங்களுக்கும் அனாமத்தா அமையுமையா ஏனய்யா ட்றை பண்ணிப்பாக்கேல்லையோ பாக்க வெள்ளையும் சுள்ளையுமாக இருக்கிறியள் நீங்கள் பேய்க்காய் ஐயா பொய் சொல்லுறியள் எனச்சொல்லுகிறான்.

கழுத்தில இருக்கிற ஆறுபவுண் சங்கிலி கவனம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மெக்கனிக் ஒருவருடன் மோட்டார்  சைக்கிளில் சேர்ந்து பயணம் செய்வதாயின் பழைய நினைவுகள் திரும்புகின்றன. ஓடும்போது மட்டும் தெரியும் பிழை ஒன்றை மெக்கனிக்கிக்கு காட்டுவதற்கு அல்லது அவர் சைக்கிளில் பெரிய பிழை ஒன்றை பழுது பார்த்து திருத்தி முடிந்ததும் அவர் எங்களை சைக்கிளில் வைத்து  ஒரு ஓட்டம் அழைத்து செல்வார். அந்தகாலத்தில் நாங்கள் ஒழுங்கைகள், சன நடமாட்டமில்லாத வீதிகளை பார்த்து ஓட்டுவோம். இப்போது ஹைவேயிலை ஒட்டுறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, தமிழ் சிறி said:

கீர்த்தி சிறி அண்ணை. 😂
எங்கை… மாலதி அக்கா. 🤣

உள்ளேன் ஐயா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Elugnajiru said:

ஏணோ தெரியாது மனிசி பிள்ளைகள் எங்களுடைய சொல்லைக் மதிப்பதில்லை இதாவது எடுத்த எடுப்புக்கும் வளைத்த வளைப்புக்கும் ஒத்துவருதே என்பதால் இருக்கலாம்

14 hours ago, Elugnajiru said:

குமாரசாமி அண்ணர் வாங்கோ போகலாம் கடைசி காலத்தில என்னத்தக் கண்டம் ஒரு இழிச்சவாயனாவது இரவலா ஒரு மோட்டார் சைக்கிள் தரமாட்டானா எங்கட வித்தைகள் எல்லாத்தையும் இறக்கி பாதாள கிணத்தில் பயங்கர மோட்டார் சைக்கிள் ஓட்டம் என்பதுபோல் சறுக்கிஸ் எல்லம் காட்டி கடைசியில நடுத்தெருவில வெள்ளை பிரட்டிக்கிடப்பம் பொண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் வந்து கூட்டி அள்ளிக்கொண்டுபோகட்டும் இவளவ எங்களுக்குச் செய்கிற வேலைக்கு இவையளுக்கு நாங்கள் வைச்சுச் செய்யவேணும்.

அட...... இவ்வளவு இரகசியம் இருக்கா இந்த மோட்டார் சைக்கிள் ஓட்டத்துக்கு பின்னால்? இது இவ்வளவு நாளா எனக்குத்தெரியாமல் போச்சே. பாப்போம் சாமியார் என்ன பதில் சொல்லப்போறாரென்று?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.