Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

IMG-4190.jpg

ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இடம்தான் ரோமில் உள்ள கொலோசியம். கடந்த வெள்ளிக்கிழமை (30.06.2023) அங்கு வந்த ஒரு இளைஞன் ஒருவனுக்கு அந்தப் பழைய காலத்து பிரபலமான கட்டிடத்தைப் பார்த்ததும் ஒரு விசித்திரமான ஆசை வந்தது.  பழமை வாய்ந்த அந்தக் கட்டிடத்தின் கல்லில் தனது பெயரையும் தனது காதலியின் பெயரையும்  எழுத வேண்டும் என்பதே அவனது ஆசையாக இருந்தது. தன்னிடம் இருந்த திறப்பினால்  பழமையான அந்தக் கட்டிடத்தின் ஒரு கல்லில் கிறுக்க ஆரம்பித்தான்.

இளைஞன் கல்லில் ஏதோ கிறுக்குவதை இன்னும் ஒரு சுற்றுலாப் பயணி கண்டு, அதை வீடியோவில் பதிவு செய்ய ஆரம்பித்தார். பதிவு செய்தவருக்கும் அவசரம் போல், அந்த வீடியோவை அவர் சில நிமிடங்களுக்குள் சமூகவலைத் தளங்களில் பரவ விட அது இத்தாலி கலாச்சார மந்திரி கெனாரோ சங்கியுலியானோ பார்வைக்கும் வந்து சேர்ந்தது. உலகப் புகழ் பெற்ற  பெருமை வாய்ந்த பாதுக்காக்கப்பட வேண்டிய ஒரு புராதன கட்டிடத்தில் கிறுக்குவது அநாகரிகமும் அவமதிப்பானதுமாகும் என அவர் tweeter இல் பதிய, பிரச்சினை கிளம்ப ஆரம்பித்து விட்டது.

பழமை வாய்ந்த கொலோசியமில் கிறுக்கியதற்காக  அந்த இளைஞனிடம் இருந்து பல ஆயிரம் யூரோக்கள் வரை தண்டனையாக அறவிடப்படலாம்   அல்லது குறைந்தது ஐந்து வருடங்களாவது சிறைத்தண்டனை கிடைக்கலாம் என கருத்துகள் வர ஆரம்பித்திருக்கின்றன.

எது எப்படியோ அந்த இளைஞன் எழுதிய “Ivan+Hayley” பெயர்கள் அங்கே கல்லில் இருக்கத்தான் போகின்றன. ஆனால் இந்த அமளியில் அவனின் காதலி Hayley அவனுடன் இருப்பாளா?

 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சில வருடங்களுக்குமுன் சிகிரியா   குன்றுகளில் பெயரெழுதிய ஒரு மாணவியை கைது செய்ததாக   நினைவிருக்கிறது.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.