Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

என் நண்பனின் கல்யாண ரிசப்ஷன்.
தாமதமாக சென்றேன்.மண்டபம் கிட்டத்தட்ட காலியாக இருந்தது.
மணமக்களின் குடும்பத்தினர் இருந்தார்கள்."இப்போ தான் சாப்பிட்டோம்.
நீங்க சாப்பிட்டு வாங்க"மாடியை காட்டினார்கள்.
மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோக்கு நின்றுவிட்டு படி ஏறிச்சென்றேன்.
வரிசைகள் காலியாக இருந்தது.
 
கேட்டரிங் பணியாளர் ஒருவர் இலை போட்டார்.போட்டோ , வீடியோக்காரர்கள் 4 பேர் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள்."சும்மா வெக்கப்படாம வாடா "ஒரு சிறுவனை அழைத்தார்கள்.
அவன் தயங்கி தயங்கி உட்கார்ந்தான்.அவன் வயது 8 அல்லது 9 இருக்கக்கூடும்.
அவனுக்கும் இலைப் போட்டு பரிமாறத் தொடங்கினார்கள்.
சாப்பிடத் தொடங்கினான். .எங்கள் இலைகளில் மைசூர்பாக்கு வைத்தார்கள்.
"வீடியோ எடுக்க கத்துக்கொடுங்க அண்ணானு கேட்டுட்டே இருந்தான்.
சரிடா தம்பி எங்க கூட வந்து வேடிக்கை பாத்து கத்துக்கோடானு கூட்டிட்டு வந்துட்டோம்.
எங்க ஸ்டூடியோ பக்கத்துல தான் பையன் வீடு "
சிறுவன் ஆமோதிப்பது போல் தலை ஆட்டினான்."நல்லா கத்துக்கிட்டியா " என்றேன்.
மீண்டும் தலை ஆட்டினான்."உன் பேர் என்ன ?""சதீஷ் ""எந்த க்ளாஸ் படிக்கிற ""4 "
சாப்பிட்டு முடித்து இருந்தான்."சாப்பாடு வைக்கவா """போதும் அண்ணா "
அவன் இலையில் மைசூர்பாக்கு மட்டும் சாப்பிடாமல் வைத்து இருந்தான்.
தன் சட்டைப்பையில் ஒரு செய்தித்தாள் பகுதி எடுத்து கிழித்து வைத்திருந்தான்.அதில் மைசூர்பாக்கை மடித்தான்."இங்க சாப்பிட மாட்டியா ""தம்பிக்குணா . நான் தான் இங்கே நிறைய சாப்ட்டுட்டேனே "
கேட்டரிங் நபர் இன்னொரு மைசூர்பாக்கை அவன் இலையில் வைத்தார்."அதை தம்பிக்கு கொடு . இதை நீ சாப்பிடு " என்றார்.அவன் அதையும் பேப்பரில் மடித்தான் ,"தம்பிக்கு ஒன்னு கொடுத்துடுவேன் , இதை புட்டு நானும் அம்மாவும் சாப்பிடுவோம் "அவன் அப்பாவை பற்றி கேட்க நினைத்தேன்.
அநாகரீகம் என்று எண்ணியதால் கேட்கவில்லை.விருப்பம் இருந்தால் அவன் சொல்லட்டும்.
கேட்டரிங் நபர் இன்னும் ஒரு மைசூர் பாக்கு வைத்தார் ."அம்மாக்கு ஒன்னு ,தம்பிக்கு ஒன்னு கொடு . இதை நீ இங்க சாப்பிடு ""வீட்டுக்கு போயி மூணு பேரும் சேர்ந்து சாப்பிடறோம் அண்ணா.
 
நான் ரெண்டு எடுத்துட்டு போனா அம்மா வேண்டாம்னு சொல்லிடுவாங்க.நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்கனு எங்க கிட்டயே கொடுத்துடுவாங்க. கல்யாண மண்டபத்துல கொடுத்தாங்க னு சொன்னா அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க "அவன் மூன்றையும் பேப்பரில் மடித்தான்.கேட்டரிங் நபர் மேலும் ஒன்றை வைத்தார்.
"நான் எப்படி 2 சாப்பிடுவேன் . இதை நாளைக்கு காத்தால ஸ்கூல் போறதுக்கு முன்னாடி நானும் தம்பியும் பாதி பாதி சாப்பிடுகிறோம் அண்ணா "நான்கையும் பேப்பரில் மடித்தான்.
கேட்டரிங் நபர் ஒரு மைசூர்பாக்கை எடுத்தார். இரண்டாக உடைத்தார்.
 
"இது என்னோடதுடா, இது தான் லாஸ்ட் . பாதி நான் சாப்பிடறேன் .நீ பாதி மைசூர்பாக்கை இங்கேயே என்னோட கண்ணு முன்னாடி சாப்பிடுடா "சதீஷ் பாதி மைசூர்பாக்கை சாப்பிட்டான் .
"ரொம்ப டேஸ்ட்டா ,சூப்பரா இருக்குணா "இன்னொரு பாதி எடுத்து அவனிடம் கொடுத்தார்.
"இந்த பீஸ் கூட நீயே சாப்பிடுடா . ம்ம்ம் சும்மா சாப்பிடுடா "சாப்பிட்டான்.
 
முகத்தை மூடி வேறு பக்கம் திருப்பி கண்களை துடைத்தான்.
"அழுவறியா சதீஸு ""இல்லேண்ணா ,கண்ல ஏதோ தூசி விழுந்துடுச்சுணா " என்றான்.
May be an image of biryani
 
முக புத்தகத்தில் இருந்து ...மனசை தொட்டவை 
 
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, நிலாமதி said:

உண்மையில் மனதை தொட்ட கதை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Dog Phone GIFs | Tenor Dog-phone GIFs - Get the best GIF on GIPHY

*ஒருவருக்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது.
ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த 
ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தார்.*

*ஆச்சர்யம்..! அவருக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!
கடுப்பானவர், அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த 
ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினார்
மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்..!!

மூன்றாம் நாள்…
காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவர், காரை எங்கெங்கோ செலுத்தினார்.
வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தார்.ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினார்.
இடப் பக்கம் திரும்பினார். வலப் பக்கம் வளைந்தார்.
இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு,
வேகமாக காரைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டார்.

வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, 
உன் நாய் வீட்டில் இருக்கிறதா..? என்று கேட்டார்.
இருக்கிறதே..! ஏன் கேட்கிறீர்கள்..? என்றார் மனைவி

*அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!*

*வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு..!* 😂

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.