Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

IMG-4206.jpg

சனிக்கிழமை ஆடு அடிக்கிறம் பங்கு வேணுமோ?’ என்ற கேள்விகள் அப்போது இருக்கும்.

இப்படித்தான் சிறு வயதில் எனக்கு ஆட்டிறைச்சி அறிமுகமானது.

சந்தைக்குப் போய் பொருட்கள் வாங்கும் வயதுப் பக்குவம் எனக்கு வந்த போது, பருத்தித்துறை மீன் சந்தையில் உள்ள இடது புறமுள்ள கடையில் ஆட்டிறைச்சி கிலோ மூன்று ரூபாவும் சந்தை வாசலுக்கு நேர் எதிரே இருந்த கடையில் மாட்டிறைச்சி ஒரு ரூபாவும் என்று விற்றுக் கொண்டிருந்தன . பருத்தித்துறைக்   கடையில் இறைச்சி வாங்குவதாக இருந்தால் ஆட்களைப் பார்த்துத்தான் இறைச்சி தருவார்கள். ஒவ்வொரு தடவையும் இறைச்சி வாங்கிக் கொண்டு போய் வீட்டில் கொடுத்தால், “உன்னை ஏமாத்தி சவ்வுகளையும் எலும்புகளையும் போட்டுத் தந்திருக்கிறான்என்ற விமர்சனம்தான் மிஞ்சும்

ஊரில் யாராவது ஆடு அடிக்கிறார்கள் என்றால் அது அபூர்வமாகத்தான் இருக்கும். அல்லது தீபாவளியாக இருக்கும்இந்த  நிலையில்தான் குசவெட்டி என்ற இடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆடு அடிக்கிறார்கள் என்ற அரிய தகவல் எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு பருத்தித்துறையை விட்டு மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த குசவெட்டி எனக்கு ஆட்டிறைச்சி வாங்கும் தளமாக மாறிப்போனது.

குசவெட்டியில் சனிக்கிழமை வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆடுகள் சாகும். கடையின் பின்புறம் வைத்து ஆடுகளை மூச்சடைக்க வைத்து கொன்று உரித்து அந்த இடத்திலேய பங்கு போட்டு விற்பார்கள். ஒரு பங்கு 10 ரூபா. பங்கு இறைச்சிக்குள் சின்னச் சின்ன துண்டுகளாக  ஈரலும் கிட்னியும் மின்னிக் கொண்டிருக்கும். சமைத்த பின்னர் அவை சாப்பிடக் கிடைத்தால் அன்று அது ஒரு பெரிய அதிர்ஸ்டம்.

புலம் பெயர்ந்து வந்த பின்னர் இன்னும் எங்களவர்கள் மத்தியில்பங்கு இறைச்சிகலாச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அங்கே வெள்ளாடு இங்கே செம்மறி ஆடுஊரில் அப்பொழுதெல்லாம் ஒருவரை வையும் போதுசெம்மறிஎன்ற வார்த்தை பயன் படுத்தப்பட்டது. புலம் பெயர்ந்த பின்னர் அந்த வார்த்தை கெட்ட வார்த்தைகள் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது போல் தெரிகிறது.

யேர்மனியில் சனிக்கிழமை என்றில்லாமல் ஞாயிறு தவிர்ந்து மற்றைய எல்லா நாட்களிலும் சுப்பர் மார்க்கெற், அல்லது மசூதிகளில் இருக்கும் கடைகளுக்குப் போனால் ஆட்டிறைச்சி வாங்க முடியும். அதுவும் இறைச்சியில் எந்தப் பகுதி வேண்டுமோ அதைத் தனியாக வாங்க முடியும். சமீப காலமாக யேர்மனியில் ரஸ்ஸியக் கடைகளிலும் ஆட்டிறைச்சியை நான் காண்கிறேன்

சமீபத்தில் நண்பர் ஒருவர் தனது குடும்பத்துடன் வீட்டுக்கு வந்திருந்தார். வருவதற்கு முன்னரே, “ கவி, இடியப்பமும் ஆட்டிறைச்சிக் கறியும் எண்டால் என்ரை மனுசிக்கு நல்ல விருப்பம்என்று என்ன சமைக்க வேண்டும் என்பதை பூடகமாக எனக்குத் தெரிவித்திருந்தார்

சாப்பிடும் போதே கேட்டார், ” நல்ல இறைச்சி. பெரிசா சவ்வுகள் இல்லை. வெள்ளாடோ?”

“செம்மறி

“நாங்கள் வாங்கக்க கனக்க சவ்வுகளும் எலும்புகளும் வருது. இனி குமாரிட்டை இறைச்சி வாங்கக் கூடாது

அவர் இருக்கும் நகரத்தில் கடை வைத்திருக்கும் குமார், சனிக்கிழமைகளில் பங்கு இறைச்சி போடுகிறார். சுகாதாரச் சீர்கேடாக இறைச்சி விற்றார் என சுகாதாரப் பரிசோதகரிடம் இரண்டு மூன்று தடவைகள் குமார் பிடிபட்டும் இருக்கிறார். ஆனால் என்னவோ எங்களால் பங்கு இறைச்சியை மட்டும் கைவிட முடியவில்லை.

கவி அருணாசலம்

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணத்தில் கிடாய்விழுந்தானில் (பெரியாஸ்பத்திரியின் பின் பக்கம்) ஒரு அண்ணர் வாரந்தோறும் ஆடு அடித்து பங்கிறைச்சி போடுகிறவர்......அப்பப்ப வாங்கிக் கொண்டு போகிறது வழக்கம்......அதேபோல் மாவிட்டபுரத்திலும் பங்கிறைச்சி போடும்போது முதலே சில வீடுகளுக்கு சொல்லி வைப்பார்கள்.....பின் அங்கு போனால்  பனை ஓலைக் குடலையில் கட்டித் தருவார்கள்.......!  😇

நல்ல நினைவுகள்......நன்றி அருணாசலம்.....!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகத்தில் தொடங்கிய பங்கு இறைச்சி  புலத்திலும் தொடருது. அதிகமான ஊர்களில் இப்படித்தான் ஆட்டிறைச்சி பிரபலமானது பின்பு  விலை அதிகரிக்க மாட்டிறைச்சியும்போட தொடங்கினார்கள். இதை வாங்கினால் ஆண்கள் இன்னொன்றும் வாங்குவார்களே நினைவிருக்கா? கொண்டாடுவதற்கு ... 😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kavi arunasalam said:

சனிக்கிழமை ஆடு அடிக்கிறம் பங்கு வேணுமோ?’ என்ற கேள்விகள் அப்போது இருக்கும்.

ஊரில் உறவினர்கள் பங்கு கொண்டுவருவார்கள்.

புலத்தில் எமது இருப்பிடத்துக்கு கிட்ட ஆடு கோழி முயல் வாத்து கடைகள் 3-4 உள்ளது.97 வரை நான்கு நண்பர்கள் மாதம் ஒருதனமேனும் ஆடடிப்போம்.

நான்காக பிரிக்க சொன்னால் அவர்களாகவே சரியாக பங்கு பிரித்து தருவார்கள்.

தேவையான அளவு போக மிகுதியை சேமித்து பின்னர் பாவிப்போம்.

97 இல் எனக்கு நெஞ்சடைப்பு வந்ததோடு ஆடடிப்பும் நிறுத்தியாச்சு.

இப்போது எப்போதாவது கோழியைக் காட்டினால் அடித்து எப்படி வேண்டுமோ எப்படி துப்பரவாக்கி தருவார்கள்.

கூடுதலானவர்கள் யெமன்காரர் தான் இப்படியான கடைகள் வைத்துள்ளார்கள்.

பதிவுக்கு நன்றி கவி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, Kavi arunasalam said:

ஊரில் அப்பொழுதெல்லாம் ஒருவரை வையும் போதுசெம்மறிஎன்ற வார்த்தை பயன் படுத்தப்பட்டது. புலம் பெயர்ந்த பின்னர் அந்த வார்த்தை கெட்ட வார்த்தைகள் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது போல் தெரிகிறது.

செம்மறி என்று திட்டுவதும் ஒரு காரணத்துடன் தான்.

செம்மறி ஆடு இலை கடிப்பது போல என்பார்கள். முழுமையாக தின்னாது, அங்கே ஒரு கடி, இங்கே ஒரு கடி, ஒரு இலையையும் முழுசாக தின்று முடிக்காது.

ஆக செம்மறி என்று திட்டுவது, ஒரு வேலையும் ஒழுங்காக முடிக்காமல், தொடங்கிய வேலைகள் அனைத்தையும், கால், அரை, முக்கால் என்று விட்டு விட்டு அடுத்த வேலைக்கு தாவும் நபர்களை திட்டவே...

Edited by Nathamuni
  • Like 2
  • Haha 1
Posted
3 hours ago, நிலாமதி said:

தாயகத்தில் தொடங்கிய பங்கு இறைச்சி  புலத்திலும் தொடருது. அதிகமான ஊர்களில் இப்படித்தான் ஆட்டிறைச்சி பிரபலமானது பின்பு  விலை அதிகரிக்க மாட்டிறைச்சியும்போட தொடங்கினார்கள். இதை வாங்கினால் ஆண்கள் இன்னொன்றும் வாங்குவார்களே நினைவிருக்கா? கொண்டாடுவதற்கு ... 😃

செவ்விழனி.😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, nunavilan said:

செவ்விழனி.😁

எழுத்துப் பிழை இளநீர் /செவ்விளநீர்😃

Edited by நிலாமதி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்ரேலியா நியுசீலரண்ட்டும் ஆட்டு இறைச்சிய குளிரூட்டி உறையவைத்து அங்கே அனுப்புகிறவர்கள் தமிழர்கள் வாங்குகிறவர்கள் என்று கேள்விபட்டுள்ளேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

உண்மையிலே அது ஆட்டு இறைச்சி தானா அது ? எனக்கு என்னமோ கங்காரு  இறைச்சி போல் உள்ளது சாதாரண ஆட்டு இறைச்சி 14 பவுனுக்கு மேல் போகையில் அந்த கங்காரு மட்டும் கிலோ ஆறு பவுன் என்று விக்கிறார் களாம் .லண்டனில் அநேக தமிழ்  ரெஸ்டோரன்ட் அந்த குளிரூட்டி உறையவைத்த இறைச்சி தானாம்  அதனால் வரும் தீமைகள் என்ன நன்மை என்ன என்று தெரியவில்லை ?

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Kavi arunasalam said:

IMG-4206.jpg

சனிக்கிழமை ஆடு அடிக்கிறம் பங்கு வேணுமோ?’ என்ற கேள்விகள் அப்போது இருக்கும்.

இப்படித்தான் சிறு வயதில் எனக்கு ஆட்டிறைச்சி அறிமுகமானது.

சந்தைக்குப் போய் பொருட்கள் வாங்கும் வயதுப் பக்குவம் எனக்கு வந்த போது, பருத்தித்துறை மீன் சந்தையில் உள்ள இடது புறமுள்ள கடையில் ஆட்டிறைச்சி கிலோ மூன்று ரூபாவும் சந்தை வாசலுக்கு நேர் எதிரே இருந்த கடையில் மாட்டிறைச்சி ஒரு ரூபாவும் என்று விற்றுக் கொண்டிருந்தன . பருத்தித்துறைக்   கடையில் இறைச்சி வாங்குவதாக இருந்தால் ஆட்களைப் பார்த்துத்தான் இறைச்சி தருவார்கள். ஒவ்வொரு தடவையும் இறைச்சி வாங்கிக் கொண்டு போய் வீட்டில் கொடுத்தால், “உன்னை ஏமாத்தி சவ்வுகளையும் எலும்புகளையும் போட்டுத் தந்திருக்கிறான்என்ற விமர்சனம்தான் மிஞ்சும்

ஊரில் யாராவது ஆடு அடிக்கிறார்கள் என்றால் அது அபூர்வமாகத்தான் இருக்கும். அல்லது தீபாவளியாக இருக்கும்இந்த  நிலையில்தான் குசவெட்டி என்ற இடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆடு அடிக்கிறார்கள் என்ற அரிய தகவல் எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு பருத்தித்துறையை விட்டு மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த குசவெட்டி எனக்கு ஆட்டிறைச்சி வாங்கும் தளமாக மாறிப்போனது.

குசவெட்டியில் சனிக்கிழமை வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆடுகள் சாகும். கடையின் பின்புறம் வைத்து ஆடுகளை மூச்சடைக்க வைத்து கொன்று உரித்து அந்த இடத்திலேய பங்கு போட்டு விற்பார்கள். ஒரு பங்கு 10 ரூபா. பங்கு இறைச்சிக்குள் சின்னச் சின்ன துண்டுகளாக  ஈரலும் கிட்னியும் மின்னிக் கொண்டிருக்கும். சமைத்த பின்னர் அவை சாப்பிடக் கிடைத்தால் அன்று அது ஒரு பெரிய அதிர்ஸ்டம்.

புலம் பெயர்ந்து வந்த பின்னர் இன்னும் எங்களவர்கள் மத்தியில்பங்கு இறைச்சிகலாச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அங்கே வெள்ளாடு இங்கே செம்மறி ஆடுஊரில் அப்பொழுதெல்லாம் ஒருவரை வையும் போதுசெம்மறிஎன்ற வார்த்தை பயன் படுத்தப்பட்டது. புலம் பெயர்ந்த பின்னர் அந்த வார்த்தை கெட்ட வார்த்தைகள் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது போல் தெரிகிறது.

யேர்மனியில் சனிக்கிழமை என்றில்லாமல் ஞாயிறு தவிர்ந்து மற்றைய எல்லா நாட்களிலும் சுப்பர் மார்க்கெற், அல்லது மசூதிகளில் இருக்கும் கடைகளுக்குப் போனால் ஆட்டிறைச்சி வாங்க முடியும். அதுவும் இறைச்சியில் எந்தப் பகுதி வேண்டுமோ அதைத் தனியாக வாங்க முடியும். சமீப காலமாக யேர்மனியில் ரஸ்ஸியக் கடைகளிலும் ஆட்டிறைச்சியை நான் காண்கிறேன்

சமீபத்தில் நண்பர் ஒருவர் தனது குடும்பத்துடன் வீட்டுக்கு வந்திருந்தார். வருவதற்கு முன்னரே, “ கவி, இடியப்பமும் ஆட்டிறைச்சிக் கறியும் எண்டால் என்ரை மனுசிக்கு நல்ல விருப்பம்என்று என்ன சமைக்க வேண்டும் என்பதை பூடகமாக எனக்குத் தெரிவித்திருந்தார்

சாப்பிடும் போதே கேட்டார், ” நல்ல இறைச்சி. பெரிசா சவ்வுகள் இல்லை. வெள்ளாடோ?”

“செம்மறி

“நாங்கள் வாங்கக்க கனக்க சவ்வுகளும் எலும்புகளும் வருது. இனி குமாரிட்டை இறைச்சி வாங்கக் கூடாது

அவர் இருக்கும் நகரத்தில் கடை வைத்திருக்கும் குமார், சனிக்கிழமைகளில் பங்கு இறைச்சி போடுகிறார். சுகாதாரச் சீர்கேடாக இறைச்சி விற்றார் என சுகாதாரப் பரிசோதகரிடம் இரண்டு மூன்று தடவைகள் குமார் பிடிபட்டும் இருக்கிறார். ஆனால் என்னவோ எங்களால் பங்கு இறைச்சியை மட்டும் கைவிட முடியவில்லை.

கவி அருணாசலம்

நன்றி  அண்ணா ஆக்கத்துக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊரில் ஆட்டுக்கறி என்பதே ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்காத்தானே… 3 நாள் சைவம். மிகுதி நாட்கள் மீன், முட்டை, மாதமிருமுறை போல் கோழி.

அப்போதெல்லாம் ஆட்டிறைச்சி என்பதே ஒரு விசேடம் போலத்தான். எங்கள் ஊர் சந்தையில் ஞாயிறு மட்டும்தான் இறைச்சி கடை திறக்கும். இல்லாவிட்டால் கொட்டடி அல்லது கேகேஎஸ் வீதியில் - தாவடி-கொக்குவில் இடையில், இந்த இரு கடைகளும்தான் கதி.

பங்கு அடிப்பதாகின் ஊரில் சொல்லுவார்கள்…எமக்கும் ஒரு பங்கு என சொல்லிவிட்டால் பனை ஓலையில் கூம்பு வடிவில் கட்டித்தருவார்கள்.

கறி ஆக்கி முடிந்ததும், சட்டிக்குள் சோற்றை போட்டு பிரட்டி சாப்பிடுவது…எந்த பிரியாணியும் கிட்டவும் வராது.

லண்டனில் ஒரு காலத்தில் கொலிண்டேல் ஆச்சி கடை பின் எல்லா கடைகளிலும் பங்கு இறைச்சி என சொல்லி வித்தார்கள். ஆனால் ஊரை போல் ஒரு ஆட்டை அறுத்து, உரித்து, பிரிக்கும் இறைச்சி என நான் நினைக்கவிலை. சும்மா கலந்து கட்டி வைப்பதாயே பட்டது.

நினைவை மீட்டிய கவி அவர்களுக்கு நன்றி.

முன்னர் இங்கே farm போய் வளர்க்க என சொல்லி வாங்கி வந்து, ஊர் கோழி அடித்து சமைத்ததுண்டு. 

அந்த கொலை வெறி எல்லாம் இப்ப அடங்கிவிட்டது🤣.

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அவுஸ்ரேலியா நியுசீலரண்ட்டும் ஆட்டு இறைச்சிய குளிரூட்டி உறையவைத்து அங்கே அனுப்புகிறவர்கள் தமிழர்கள் வாங்குகிறவர்கள் என்று கேள்விபட்டுள்ளேன்.

கொழும்பு வந்த புதிதில் -cargills food city, அப்போ கொழும்பில் இரெண்டு கடை மட்டுமே இருந்த நியாபகம் இதை விற்பார்கள்.

அங்கும் கூட உள்ளூர் இறைச்சியை விட மலிவுதான். சதுரக கட்டிகளாக இருக்கும். அதிக கொழுப்பு, நொச்சியும் கூடவாய் இருக்கும்.

சுவை பரவாயில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, nunavilan said:

செவ்விழனி.😁

இதன் தார்பரியம் என்ன? சொல்ல முடியாத மேட்டர் எனில் - சொல்லமுடியாத மேட்டர் என சொல்லி விடுங்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, goshan_che said:

லண்டனில் ஒரு காலத்தில் கொலிண்டேல் ஆச்சி கடை பின் எல்லா கடைகளிலும் பங்கு இறைச்சி என சொல்லி வித்தார்கள். ஆனால் ஊரை போல் ஒரு ஆட்டை அறுத்து, உரித்து, பிரிக்கும் இறைச்சி என நான் நினைக்கவிலை. சும்மா கலந்து கட்டி வைப்பதாயே பட்டது.

நான் நினைக்கிறேன் நோர்பெரி கணேசா அல்லது பேஸ்ட் food கடைகளில் எனது நண்பர்கள் உடன் இறைச்சி  என்று சேவல் பண்ணி   ஆடு என்று வாங்கி வருவார்கள் நல்லா இருக்கு என்று சொல்வார்கள் முயற்சி பண்ணி பார்க்கவும் நமக்கு uric acid பிரச்சனை இருப்பதால் சிவப்பு இறைசிகளுக்கு தடா 3௦ வயதில் இருந்து நீங்க அனுபவியுங்க பாஸ் .

Posted
19 minutes ago, goshan_che said:

இதன் தார்பரியம் என்ன? சொல்ல முடியாத மேட்டர் எனில் - சொல்லமுடியாத மேட்டர் என சொல்லி விடுங்கள்🤣

ஒரு உள்குத்துமில்லை. அக்கா சாராயம், கள்ளு என எதிர்பார்த்து எழுதி இருந்தார். இளநீர் என பகிடியாக எழுதி இருந்தேன்.🙂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, பெருமாள் said:

நான் நினைக்கிறேன் நோர்பெரி கணேசா அல்லது பேஸ்ட் food கடைகளில் எனது நண்பர்கள் உடன் இறைச்சி  என்று சேவல் பண்ணி   ஆடு என்று வாங்கி வருவார்கள் நல்லா இருக்கு என்று சொல்வார்கள் முயற்சி பண்ணி பார்க்கவும் நமக்கு uric acid பிரச்சனை இருப்பதால் சிவப்பு இறைசிகளுக்கு தடா 3௦ வயதில் இருந்து நீங்க அனுபவியுங்க பாஸ் .

நன்றி பாஸ். அங்கால பக்கம் போகேக்கை முயற்சிக்கிறேன்.

உங்களுக்கு சிவப்பு இறைச்சி, எனக்கு மாப்பண்டம் -🤣.

முந்தி மாரி இல்லை, இப்ப இரவு 10 மணிக்கு மேல் இறைச்சி சாப்பிட்டா கட்டாயம் ஒரு கிரீன் டீ தேவை - இல்லாட்டி சமிக்க கஸ்டப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, nunavilan said:

ஒரு உள்குத்துமில்லை. அக்கா சாராயம், கள்ளு என எதிர்பார்த்து எழுதி இருந்தார். இளநீர் என பகிடியாக எழுதி இருந்தேன்.🙂

எங்கள் வீட்டில் லாகிரி வஸ்தாதுவுக்கு தடா, ஆகவே இது இல்லை - ஆனால் தீபாவளிக்கு தவறணையில் இருந்து தவழ்ந்து, விழுந்து, உடைந்து வீட்டை போகும் ஆட்களை வீதியில் நிண்டு பார்ப்போம்.

”தீவாளி ஒண்டு வருதுகுது” எண்ட குரல் கேட்டதும் எல்லாரும் கேட்டுக்கு ஓடுவோம், பின்னர் அந்த நபர்தான் அடுத்த 30 நிமிடத்துக்கு எமக்கு எண்டர்டெயிமெண்ட்🤣 

விளக்கையமைக்கு நன்றி. நான் இளனியில் ஏதோ மான் கொம்பு மேட்டர் இருக்குமோ என நினைத்துவிட்டேன்🤣

Posted
4 hours ago, goshan_che said:

தீபாவளி என்ரரையின்மென்ட் எழுதலாம்.  களவிதிகளை மீறிவிடும். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, பெருமாள் said:

உண்மையிலே அது ஆட்டு இறைச்சி தானா அது ? எனக்கு என்னமோ கங்காரு  இறைச்சி போல் உள்ளது 

நீங்கள் ஆட்டு இறைச்சி பிரியர்களை பயமுறுத்துகிறீர்கள் 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, goshan_che said:

சுவை பரவாயில்லை. 

ரின்னில் பீவ்(corned beef) மாதிரி அவுஸ், என்சற்எல் நாடுகளில் ஆட்டு இறைச்சியிலும் செய்கிறார்கள் அது எமது ஆட்களுக்கு நல்ல விருப்பம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ரின்னில் பீவ்(corned beef) மாதிரி அவுஸ், என்சற்எல் நாடுகளில் ஆட்டு இறைச்சியிலும் செய்கிறார்கள் அது எமது ஆட்களுக்கு நல்ல விருப்பம் 😂

அப்படியா? இதன் brand name என்ன?

Spam என இதை போல் பன்றி இறைச்சி விற்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் ஆட்டு இறைச்சி பிரியர்களை பயமுறுத்துகிறீர்கள் 😀

பயபிடுத்துறது  நானா ? ஒரு முறை ஒரே ஒரு முறை இறைச்சி கடைகளுக்கு மட்டின் எப்படி சப்பிளை செய்கிறார்கள்  என்று பாருங்கள் புரியும் சப்பாத்து  மிதித்த இடங்களில்  வெட்டிய ஆட்டை கொண்டுவந்து போடுவார்கள் அதை பெருமையாக ஏற்கனவே அணிந்த ஊத்தை  யூனிபோர்ம் மாதிரியான (அநேகமா தோய்ந்து ஆறுமாதம் ஆகியிருக்கும் ) தோள் மீது பெருமையாக சிவாஜி கணேசன் கட்டபொம்மனில் நடப்பது போல் நடப்பார்கள் பாருங்கள் காண கண் கோடி வேண்டும் .

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

ரின்னில் பீவ்(corned beef) மாதிரி அவுஸ், என்சற்எல் நாடுகளில் ஆட்டு இறைச்சியிலும் செய்கிறார்கள் அது எமது ஆட்களுக்கு நல்ல விருப்பம் 😂

அது சொறிலன்காவில் உள்ளது இங்கு ஐரோப்பாவில்  இல்லை என்றால் காரணம் விளங்கனும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2௦௦6 ல் சென்றபோது பார்த்தேன் கொழும்பில் .

May be an image of text

சொறிலங்கா உலக நாடுகளின் குப்பை கிடங்காக  அப்பவே மாற தொடங்கி விட்டது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

ரின்னில் பீவ்(corned beef) மாதிரி அவுஸ், என்சற்எல் நாடுகளில் ஆட்டு இறைச்சியிலும் செய்கிறார்கள் அது எமது ஆட்களுக்கு நல்ல விருப்பம் 😂

உண்மையாகவா? நான் beef மட்டுமே tinல் பார்த்திருக்கிறேன். தகவலுக்கு நன்றி. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, goshan_che said:

இதன் brand name என்ன?

பெயர் தெரியவில்லை ரின்னில் இருப்பதை புதிய தகவலாக அறிந்து கொண்டது தான். பெருமாள் சொன்னதாகவும் இருக்கலாம்.எனக்கு யாழ்பாண சம்பலும் சிங்கலவரின் சீனிசம்பலுமே பிடிக்கும். யாழ்களத்தில் சமயல் குறிப்பு தருகின்ற அக்கா சொன்னவர் கடைகளில் அங்கே விற்கபடும் கட்லெட் ரின் மீனில் தான் செய்யபடுபவை என்று. அது சுவையாக இருந்தது.

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் beef மட்டுமே tinல் பார்த்திருக்கிறேன்.

ஆட்டு இறைச்சியை ரின்னில் பார்பதற்கு அதிஷ்டம் வேண்டும் 😂

  • Sad 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.