05.06.2000 அன்று ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கி அவ்விநியோகப் படகுகள் தளம் திரும்பிய பின்னர் சண்டைப்படகுகள் தத்தம் தளம் திரும்பிக் கொண்டிருந்தன.
இந்த வேளையில் லெப். கேணல் ஆண்டான் தலைமையிலான சண்டைப்படகுத் தொகுதி மீது சிறிலங்காக் கடற்படையினரின் டோறாக் கலங்கள் வழிமறித்துத் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை அம்மறிப்புத் தாக்குதலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர் அக்கடற்புலிகள். சிறப்புத் தளபதி சூசை அவர்களின் ஆலோசனையுடன் லெப். கேணல் ஆண்டான் மறிப்புச் சமரை நடாத்த