Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இப்படி ஒரு காவடி தேவையா? இவர்களுக்கு இது தேவையா? மனதில் நல்லது நினைக்கவேண்டும் மற்றும் நல்லவற்றையே செய்ய வேண்டும். ஆண்டவன் உங்களுடன் இருப்பார். இந்த முள்குத்தி ஆடும் காவடியென்பது எல்லாராலும் முடியாது அதனால் அந்த இளைஞன் தாங்கமுடியாமல் கத்தும்போது வலியால் துடிக்கும்போது பாடடைபோடு  என்று கத்துவது கேட்க்கிறது.அதைச் செய்யத் தூண்டுவது ஞாயமில்லைதான் சிலர் எல்லோரும் செய்கிறார் நானும் செய்துபார்த்தாலென்ன என்றிட்டு முயன்று பார்க்கிறது. (பதிந்தவர்கள் கருத்திலிருந்து)

 

பக்தி என்பது உடலாலும் உள்ளத்தாலும் இறைவனை வேண்டுவது .மற்றவர்களுக்கு நல்லதையே செய்வது. நேர்த்தி வைப்பது கடவுளுக்கு செய்வது, கொடுக்கல், வாங்கல்பிசினஸா?ஆண்டவன் ஆ டம்பரங்களைக் கேட்கவில்லை. மனிதனை மனித தன்மையோடு வாழு என்றுதான் கேட்க்கிறான் .ஊரிலொருகாலத்தில் நடந்தது நேர்த்தி வைத்தவர்களுக்கு மன வலைமை இருந்தது.  காலம் மாறுகிறது .இது ஒருவகை மனித வதையாக   தான் பார்க்கிறேன்(.எனதுகண்ணோட்ட்ம் மட்டுமே). 

 

 

 

  • Like 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த காணொளி இரண்டு கிழமைக்கு முன் வந்தது  தமிழ் கூறும் உலகத்தில் 9௦ வீதமனவர்களிடம் இந்த காணொளி பரவி விட்டது .

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் உங்கள் கருத்துகளை எற்றுக்கொள்கிறேன்.   நிலையானது என ஒன்றுமில்லை   மாற்றம் தான்  நிலையானது.......எல்லாத்தையும் மாற்றும். எங்கள் மக்கள்   இதில் மாறுவதில்லை.  😁.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தக் காணொளியில் உள்ளவருக்கு…. 
உடலின் பின்புறம் ஒரு இடத்தில் மட்டுமே முள்ளு குத்தியவர்கள்,
எந்த விதமான முன் அனுபவமும் இல்லாதவர்கள் போலுள்ளது.

வடிவாக அவரின் பின்புறத்தை உற்றுப் பார்த்தால்….
தனியே தோள்மூட்டுப் பகுதியில்  மட்டுமே முட்கள்
குத்தப் பட்டுள்ளது.  ஒருவரின் 70 கிலோ எடையை தூக்க….
அந்த இரு பகுதி மட்டுமே போதுமானதல்ல என்பது எனது ஊகம்.
(சதை பிய்ந்து… கீழே விழாமல் தப்பியது, அவரின் அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும்.)

நான் அவதானித்த மற்றைய தூக்குக் காவடிகளில்….
பின் பக்கம்….  தோள் மூட்டு, முதுகு,  துடை, முழங்காலுக்கு கீழே என்று.. 
இரு பக்கமும் எட்டு இடத்தில் குத்துவதால்…
உடலின் எடை…. பல இடங்களிலும் சமமாக பகிரப் படுவதால்
வலி  ஓரளவு குறையும் சந்தர்ப்பங்கள் அதிகம்.

அனுபவம் குறைந்தவர்களால், எடுக்கப் பட்ட தூக்குக் காவடி… இப்படி அவலத்தில் முடிந்துள்ளது. அத்துடன் இப்படியான சந்தர்ப்பங்களில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்களில் ஒரு சிலரையாவது அருகில் வைத்திருப்பது நல்லது.

அவர்… வலியில் கதறும் போது, அங்கிருந்த ஒருவர்….
உடனே அவரை இறக்கி விடாமல்…. “பாட்டைப் போடு, பாட்டைப் போடு…” என்று,  முட்டாள் தனமான யோசனையை சொல்லி, அவரை மேலும் துன்புறுத்துகிறார்கள். அந்த இடத்தில்  நெருங்கிய உறவினர் நின்றிருந்தால்… அவரை உடனே காவடியில் இருந்து இறக்கி, அவரின் வேதனையில் இருந்து காப்பாற்றி இருப்பார்கள்.

மற்றும் படி…. காவடி எடுப்பது, நேர்த்தி வைப்பது எல்லாம்…. சம்பந்தப் பட்ட நபரின் சொந்த விருப்பம். 

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.