Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/8/2023 at 12:20, suvy said:

நிறையபேர் இந்தப் பதிவை பார்க்கிறார்கள் தனி, ஓரிருவர் கருத்து எழுதினாலும் கூட.........ஒரு பயத்தைத் தந்து கொண்டு கதை நகருகின்றது.......தொடர்ந்து எழுதுங்கள்.......!  👍

நன்றி சுவி அண்ணா உங்க ஆதரவுக்கும்

17 hours ago, Justin said:

மீண்டும் அப்பாவான தனிக்கு வாழ்த்துக்கள். நானும் வாசிக்கிறேன், தொடருங்கள்!

நன்றி அண்ண உங்கள் ஆதரவுக்கும் 

16 hours ago, நிலாமதி said:

இரண்டாம் முறை அப்பாவான தனிக்கு வாழ்த்துக்கள். கதை அடுத்து என்ன என்ற உணர்வில் விறு விறுப்பாக  போகிறது. ஒருவருடைய பட்ட்றிவு போல இருக்கிறது . தொடருங்கள் வேகமாக .... . 

நன்றி சிறிய மகள் நலம் என்ன சிவராத்திரியாக இரவு கழிகிறது 

நடந்த சம்பவம் கதையாக வருகிறது நன்றி அக்கா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மழை மெதுவாக கடலில் குறையவே வெளிச்சம் தெரிந்த பகுதியை உற்றுப்பார்க்கிறேன் அங்கே மணல் திடலும் காடும் போல் காட்சி அழித்தாலும் முற்றாக கண்ணுக்கு தெரியவில்லை மழை ஓய்ந்ததும் படகில் இருந்தவர்கள் அனைவரும் கண்டு கொள்கிறார்கள் அது ஒரு தீவு போலவே காணப்பட்டது. அந்த இடத்துக்கு செல்லுங்கள் அங்கே இறங்கிவிடலாம். படகை ஓட்டியவர்களோ நாம் செல்ல வேண்டிய இடம் அது இல்லை அமைதியாக இருங்கள் என சொல்ல.

படகில் இருந்தவர்கள் உடன்படவில்லை சோறும் இல்லை தண்ணியும் இல்லை இனியும் பயணம் செய்ய முடியாது படகை அந்த இடத்துக்கு செலுத்துங்கள் என சொல்லி சண்டை இட்டார்கள் கடைசியில் அந்த இடத்தை நோக்கி படகை செலுத்த படகு கரையை சென்றடையடைமுடியாதவாறு பாறைகள் தண்ணீருக்கு மேலே தெரிந்தது படகில் முன்னே பாறைகள் மோதாதவாறு ஒருவர்  நின்ற பார்த்த வண்ணம்  படகை மெதுவாக செலுத்தி கொஞ்ச தூரம் செல்லவே.

அந்த தீவில் இருந்து ஆயுதங்களுடன் ஒரு படை கரையை வந்தடைகிறது எங்களது படகு சத்தத்திற்கும் கரையை கண்டு குக்கிரலிட்ட சத்தத்திற்கும் . படகை கொண்டு வரவேண்டாம் சென்று விடுங்கள் சென்று விடுங்கள் சைகைகளை காண்பிக்கிறார்கள். ..............படகில் இருந்தவர்கள் அனைவரும் பயந்து நடுங்கினார்கள் கடல் கொள்ளையர்களாக இருக்குமோ!  என ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே சீருடை அணிந்துள்ளதால்  நான் உணர்ந்துகொண்டேன் அது ஏதோ நாட்டுக்குரிய தீவு எனவும் அங்கே முகாம் அமைத்திருக்கிறார்கள் எனவும் தெரிந்தது. அவர்களோ சைகை மூலம் மீண்டும் மீண்டும் இங்கே வரவேண்டாம் என  சைகை காட்டிக்கொண்டார்கள்.

நாங்களும் விடுவதாக இல்லை கைகளை கூப்பிய வண்ணம் பல மணி நேரம் இருந்தோம். அவர்கள் எந்த சமிக்கையும் காட்டவில்லை வேற வழி என்ன செய்வது என யோசித்து படகில் இருந்த டீசல் கான்களை எடுத்து ஊற்றி நெருப்பு வைத்துக்கொள்ளப்போகிறோம் என நாங்கள் சைகை காட்ட அதன் பின்னரே அவர்கள் சிறிய படகை ஒன்றை அனுப்பினார்கள் மூவருடன். வந்தவர்கள் ஆங்கிலத்தில் பேச இங்கே ஆங்கிலத்தில்  அவர்களுடன் சரளமாக உரையாட யாரும்  இல்லை ஒரு வார்த்தை மட்டும் சொல்லிக்கொண்டு இருந்தோம் பிளீஸ் கெல் மீ ,பிளீஸ் கெல் மீ .

ஆனால் உள்ளே இருந்த பெண்ணுக்கு ஓரளவு ஆங்கிலம் புரியும் என்ற படியால் அவருடன் மெதுவாகவே உரையாடினாள் அவரோ நீங்கள் இங்கே வரவேண்டாம் போதிய உணவும் தண்ணீர் டீசல் எல்லாம் தருகிறோம் ஒரு வரைபடமும் தருகிறோம் வேற நாட்டுக்கு சென்று விடுங்கள் என்றார்.
அவர் சொன்னதும் அவள் அதை மொழி மாற்றம் செய்து சொல்ல ஆளாளுக்கு மறுப்புத்தான் தெரிவித்தார்கள் படகில் இருந்தவர்கள். அவருக்கு நாங்கள் சொன்னது புரிந்தது. அதாவது வேற நாட்டுக்கு செல்ல மாட்டோம் என்பது.

 கொஞ்ச நேரத்தின் பின் தொடர்புகளை எடுத்துக்கேட்கிறார் அந்த இராணுவ வீரர் அவர் கேட்டு பல மணி நேரம் சுமார் 5 மணித்தியாலங்கள் கழித்தே பதில் வருகிறது அதுவரைக்கும் படகில் எல்லோரையும் அமர்ந்து விடுமாறும் அறிவுறுத்தல் கொடுத்து ஆட்களை எண்ணி கணக்கெடுக்க சென்னார்கள். அவருக்கு பதில் வருகிறது தொலைத்தொடர்பில்

கரையில் இருந்து படகுகள் வருகிறது அந்த படகில் ஆட்களை மாற்றி மாற்றி  ஏற்றுகிறார்கள் நாங்கள் கொண்டு சென்ற படகு பழுதடைந்த படகாக மாற்றப்படுகிறது. 
கரையை எங்கள் கால்கள் தொடும் போதே ஊசலாடிய உயிர்கள் எல்லாம் எல்லோர்  உடல்கள் மீது  மீள்  சேர்கிறது அதுவரைக்கும் அது எந்த நாடு எந்த தீவு என ஒருவருக்கும் தெரியவில்லை.

அதற்கிடையில் ஊரில் படகில் சென்றவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக செய்தி பரவி இருக்கிறது.

தொடரும்...... @suvy

  ஒரு பகுதி மீதமுள்ளது 🚢🚢🚢 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவர்கள் எங்களை படகில் இருந்து இறக்கி நிலப்பகுதிக்கு அழைத்துச் செல்லும் போது சந்தோசமாக இருந்தது ஆளாளுக்கு நாம் வந்து சேர்ந்துவிட்டோம். என பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க ஒருவன் வந்து கேட்டான் எந்த இடம் எந்த நாடு (அவுஸ்ரேலியாவா) என கேளுங்கள்? என ஆனால் எந்த பதில் இல்லாமல் உள்ளே செல்ல செல்ல அங்கேயும் சிறிய சிறிய கொட்டில்கள் அமைந்திருந்தன எங்களை கண்டதும் அங்கிருந்து பலர் வெளியே வந்தார்கள். அவர்களின் உடை நடை பாவனை அனைத்தையும் பார்க்க அவர்களும் இலங்கைத்தமிழர்கள் போலவே தோன்றியது பெயர்களை பதிந்த பின்னர் எங்களைப்பற்றி விசாரித்தார்கள் அவர்கள் .

நாங்களும் அவர்களை பற்றி விசாரிக்க அடுக்கடுக்காக குண்டுகளை போட்டார்கள் அந்த தீவைப்பற்றி.
அதுவரைக்கும் எங்களுக்கு எந்த மருத்துவ வசதிகளும் அவர்கள் செய்யவில்லை பெயர்களையும் நாடையும் பதிந்து விட்டு மூன்று பேருக்கு ஒரு கொட்டகை வீதம் தந்தார்கள் உணவு மட்டும் மூன்று வேளையும் கிடைக்கும் அதுவும் அரை அவியலாக இருக்கும் . இப்படி நாட்கள் செல்ல செல்ல எங்களுக்கு முன்னர் வந்தவர்களுக்கும் எங்களுக்கும் பழக்கமாக அவர்களுடன் உரையாட அவர்கள் வந்து 3,4 வருடங்கள் ஆவதாகவும் அது ஒரு அமெரிக்க , பிரித்தானியா நாட்டுக்கு செந்தமான தீவு எனவும் அங்கே இராணுவத்தினர் பயிற்ச்சி பெறும் தீவு எனவும் சொன்னார்கள் .

அப்போதுதான் மொத்தமாக நாங்களும் ஏமாந்தது தெரியவந்தது அவர்கள் பெரிய மனவிரக்தியில் இருந்தார்கள் நாட்டுக்கு பணம் அனுப்பவும் முடியல்ல அங்கு என்ன நிலையில் இருக்குதோ தெரியல , குழ்ந்தைகள் நிலை என்னவாக இருக்குமோ என்ற நினைப்பில் மன விரக்தியில் இருந்தார்கள் . சில நாட்களில் ஒரு பெண் மொழிபெயர்ப்பாளர் வருவார் லண்டனில் இருந்து அவ மொழிபெயர்ப்புச்செய்து யார் யார் நாட்டுக்குக்கு போக போறிங்கள் என கேட்பா எனவும் சொன்னார்கள் மீண்டும் நாடா? என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் யாரும் நாட்டுக்கு செல்ல யாருக்கும் மனதில்லை நானோ குமார் அண்ணனின் கொட்டிலுக்கு போய் என்ன அண்ண இப்படி செய்திட்டியள் என கேட்க ராஜா அவுஸ்ரேலியா போனா உடனே நாட்டுக்கு அனுப்புறான். அதான் இஞ்சால பக்கம் போகலாம் என முடிவெடுத்தம் என சொன்னார்.

எனக்கும் பிள்ளை குட்டிகள் இருக்கு என்று சொன்னார் நல்லபடியாக இங்கவாவது வந்து சேர்ந்தோமே கவலையை விடு என சொன்னார் வந்தவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என சொல்ல என்ன செய்ய இப்ப ஊருக்கு போவமா என கேட்கிரார் அவர். இப்படி மூன்று மாதங்கள் சென்றன சாப்பாடு படுக்கை வேற ஒன்றுமே இல்லை அடுத்தநாள் அந்த மொழி பெயர்ப்பாளர் பெண்மணி வரவோ (அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்) நானும் குமார் அண்ணனும் இன்னும் 8 பேரும் ஊருக்குச் செல்ல போகிறோம் சொன்னவுடன் எங்களுக்கான பயணம் தயாராக்கப்பட்டது . இலங்கை அரசாங்கத்திற்கும் அறிவித்தல் கொடுக்கப்பட்டது . ஒரு தொகைப்பணமும் கொடுப்பதாக சொன்னார்கள். எங்களை ஏற்றி ஒரு நிலப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பு படையினருடன் விமானநிலையம் கொண்டு சென்று சில பாதுகாப்பு பத்திரங்களை தந்து விமானத்தில் ஏற்றி இலங்கைக்கான பயணத்தை தொடர அனுமதியளிக்க இலங்கைகான எங்களது விமான பயணம் தொடர்ந்தது.

பல மணிநேரப்பறப்பின் பின் இலங்கையை வந்து இறங்க  நாங்கள் அனைவரும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் (10பேரும்) கைது செய்யப்பட்டு நீதிமன்றம்  கூட்டிச்செல்லப்பட்டு விசாரணைக்காக சிறையில் அடைக்கப்படுகிறோம். அந்த செய்தி நாட்டும் நாட்டு மக்களுக்கும் தெரியவரவே எங்கள் எல்லோர் வீட்டுக்கும் தெரிய வந்திருக்கிறது. நாங்கள் படகேறிய செய்தி விசாரணைகள் ஆரம்பமாகிறது எங்கிருந்து யார்? எவ்வளவு பணம்? எங்கிருந்து சென்றீர்கள் மொத்தம் எத்தனை பேர்? என விசாரணை தொடர்கிறது புலனாய்வு பிரிவினரால் நாட்டில் ஏற்பட்ட பொருளாத பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வெளியேறினோம் என எல்லோரும் ஒருமித்த பதிலை சொல்ல வீட்டில் எங்கள் உறவினர்கள் வழக்கறிஞர்களுடன் வழக்காடி சரீர பிணையிலும் மீண்டும் நாட்டை விட்டு செல்லமுடியாது விசாரணை முடியும் வரையும் என எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறோம். 

வீட்டை அடைந்ததும் அந்த கிராம சேவகர், பொலிஸ்நிலையத்திற்கும் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது கண்காணிப்புக்குள் நாங்கள்.

நான் வீட்டை அடைந்ததும் குடும்பத்தினருக்கும் எனக்குமான மனக்கசப்புக்கள் வருகிறது சொல்லாமல் போனதற்கும் ஏதாவது நடுக்கடலில் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற அக்கறையில் அன்றிலிருந்து நான் வெளியில் பெரிதாக நடமாடுவதில்லை ஆனால் நீதிமன்றம் விசாரணை என அடிக்கடி நீர்கொழும்பு போவதும் வருவதுமாக இருக்கும் இப்படி 2 வருடங்கள் கடந்து விட்டது இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ என மனது நினைத்தாலும் என்னுடன் வந்த குமார் அண்ண மீன்பிடிக்கு சென்றவர் கடலில் மீண்டும் காணாமல் போகிறார் மீண்டும் நான் விசாரணைக்காக அழைக்கப்படுகிறேன் பொலிசாரால் இரண்டு நாட்களின் பின்னரே  குமார் செல்லும் படகு முதலாளி படகு கடல் கொந்தளிப்பால் தொடர்பில்லாமல் போனது அவர்கள் தற்போது திருகோணமலை துறைமுகத்திற்கு வருகிறார்கள் என சொன்வுடனே என்னை விடுவிக்கிறார்கள்.
வீடு வந்ததும் அம்மாவோ தலையை தடவி நீ வராமலே இருந்திருக்கலாம் எனசொல்லி விட்டு வழக்கு முடிய பாஸ்போட்டை எடு என சொல்லி விட்டு உள்ளே செல்கிறார்.  

நன்றி......

வாசித்து படகில் பயணித்தவர்களுக்கும் நன்றி  

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுடன் நாங்களும் படகில் பயணித்தோம் ...........நல்லதொரு அனுபவப் பகிர்வு.......!  👍

நன்றி தனி.......!  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் எழுத்து நன்றாக இருந்தது. உயிராபத்தான படகுப் பயணங்களில் ஈடுபடுவோரது நிலையை உணரவைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். நீண்ட நாட்களின் பின் தனியின் சுய ஆக்கம் அதிலும் அனுபவப் பதிவு படகுப்பயணம் அருமையாக தந்துள்ளீர்கள். முடிவு தெரியும் வரை இப்படியான எத்தனைபேர் தம் உயிரையே இழந்திருப்பார்கள் என நினைத்துப் பார்க்க வேதனையாக உள்ளது. கடவுள் துணையால் தப்பி விட்டீர்கள். எழுத்தோட்டமும் மிக நன்றாக உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கும் எம் வாழ்த்துக்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலியா என்று சொல்லி விட்டு, தென் மேற்கு நோக்கிப் போய் டீகோ கார்சியா தீவில் இறக்கி விட்டிருக்கின்றனர்  குமார் அண்ணையும் ஓட்டிகளும். நல்ல வேளையாக பாதுகாப்பாகத் திரும்பி வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து அதே திசையில் போயிருந்தால் மொறீசியஸ் தீவில் தான் மாட்டுப் பட்டிருக்க வேண்டியிருந்திருக்கும்.

map-2004-military-airbase-island-location-2004.jpg?s=1500x700&q=85

பகிர்வுக்கு நன்றி!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்பாவாகியமைக்கு வாழ்த்துக்கள்.

நடந்ததை அப்படியே எழுதியுள்ளீர்கள். உங்கள் பாணியிலும், கதையின் போக்க்கிலும் அப்படியே ஒரே மூச்சில் வாசித்தேன்.

இதற்கு பதில் சொல்ல விரும்பாவிட்டால் பரவாயில்லை.

இந்த காலத்தில் யாழுக்கு வந்து இந்த தீவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டு நான் விளக்கமாக எழுதினேன்? அது தீவில் இருக்கும் போதா?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, Justin said:

அவுஸ்திரேலியா என்று சொல்லி விட்டு, தென் மேற்கு நோக்கிப் போய் டீகோ கார்சியா தீவில் இறக்கி விட்டிருக்கின்றனர்  குமார் அண்ணையும் ஓட்டிகளும். நல்ல வேளையாக பாதுகாப்பாகத் திரும்பி வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து அதே திசையில் போயிருந்தால் மொறீசியஸ் தீவில் தான் மாட்டுப் பட்டிருக்க வேண்டியிருந்திருக்கும்.

map-2004-military-airbase-island-location-2004.jpg?s=1500x700&q=85

பகிர்வுக்கு நன்றி!

இதை துரதிஸ்டத்தில் அதிஸ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்து சமுத்திரத்த்தில்  உள்ள இந்த தீவு கூட்டம், மொரீசுயஸ் இவற்றில் தரை தட்டுவது மிக அரிதாக நடக்க கூடிய செயல்.

இவற்றை விலத்தி எந்த நிலமும் கப்பல் போக்குவரத்தும் அற்ற southern ocean உள் போயிருந்தால் கதை எழுத ஆள் வந்திராது.

அந்த மட்டில் தனியை மீள கண்டது சந்தோசம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

. பெரும்  கண்டத்தில் ( தத்து )  இருந்து மீண்டது போல  ஒரு உணர்வு ...தத்தளித்தவனுக்கு படகு கிடைத்துபோல ....ஒரே மூச்சில் வாசித்தேன்.இந்தமட்டிலாவது மீண்டது நீங்கள்செய்த புண்ணியம். 

அது சரி  நீங்கள் இருப்பது ஆசியாக் கண்டம்  ..அவுஸ்திரேலியாவுக்கு  கண்டம்  விட்டுக் கண்டம் போகிறோமே  அதுவும் படகில் என்ற  பொது அறிவு கூட ..இல்லையா ?  முகவர் என்ன கடவுளா ? நாளும் பத்திரிகையில் படிக்கிறோம்
இதுபற்றி ....  பகிர்வுக்கு நன்றி நல்லதோர் அனுபவ பாடம். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, suvy said:

உங்களுடன் நாங்களும் படகில் பயணித்தோம் ...........நல்லதொரு அனுபவப் பகிர்வு.......!  👍

நன்றி தனி.......!  

நன்றி அண்ணை உங்கள் ஊக்கத்திற்கும் கருத்துக்களுக்கும் 

18 hours ago, ஏராளன் said:

உங்கள் எழுத்து நன்றாக இருந்தது. உயிராபத்தான படகுப் பயணங்களில் ஈடுபடுவோரது நிலையை உணரவைத்தது.

நன்றி ஏராளன் உங்கள் கருத்துக்கும்  வாசித்தமைக்கும் 

14 hours ago, Kavallur Kanmani said:

உண்மையில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். நீண்ட நாட்களின் பின் தனியின் சுய ஆக்கம் அதிலும் அனுபவப் பதிவு படகுப்பயணம் அருமையாக தந்துள்ளீர்கள். முடிவு தெரியும் வரை இப்படியான எத்தனைபேர் தம் உயிரையே இழந்திருப்பார்கள் என நினைத்துப் பார்க்க வேதனையாக உள்ளது. கடவுள் துணையால் தப்பி விட்டீர்கள். எழுத்தோட்டமும் மிக நன்றாக உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கும் எம் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி அக்கா யாழ் களம் இயங்காமல் போக கூடாது என்பதற்க்காக நடந்த சம்பவம் ஒன்றை கதையாக எழுதினேன்  நான் வேலை செய்யும் பாடசாலையில் இருந்தே எழுதுகிறேன்  மீண்டும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Justin said:

அவுஸ்திரேலியா என்று சொல்லி விட்டு, தென் மேற்கு நோக்கிப் போய் டீகோ கார்சியா தீவில் இறக்கி விட்டிருக்கின்றனர்  குமார் அண்ணையும் ஓட்டிகளும். நல்ல வேளையாக பாதுகாப்பாகத் திரும்பி வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து அதே திசையில் போயிருந்தால் மொறீசியஸ் தீவில் தான் மாட்டுப் பட்டிருக்க வேண்டியிருந்திருக்கும்.

பகிர்வுக்கு நன்றி!

இந்த தீவு பற்றியும் அங்கே நடந்த சம்பவங்கள் அது பற்றி  செய்தி அண்மையில்  BBCவெளியிட்டது நீங்கள் அறிந்திருப்பீர்கள் யாழிலும் இணைக்கப்பட்டது என நினைக்கிறன் ஆனால் போனவர்களுக்கு அது என்ன தீவு என தெரியவில்லை 

நன்றி அண்ணை  உங்கள் கருத்துக்கும் நேரத்திற்கும் 

13 hours ago, goshan_che said:

அப்பாவாகியமைக்கு வாழ்த்துக்கள்.

நடந்ததை அப்படியே எழுதியுள்ளீர்கள். உங்கள் பாணியிலும், கதையின் போக்க்கிலும் அப்படியே ஒரே மூச்சில் வாசித்தேன்.

இதற்கு பதில் சொல்ல விரும்பாவிட்டால் பரவாயில்லை.

இந்த காலத்தில் யாழுக்கு வந்து இந்த தீவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டு நான் விளக்கமாக எழுதினேன்? அது தீவில் இருக்கும் போதா?

இல்லை அண்ண நான் போகல ஊரில ஒரு குறூப் போய் திரும்பி வந்தது அவர்களை வைத்து எழுதியது தான் அந்த கதை  ஆனால் அவர்களுக்கு முன்னர் சென்றவர்களில் சிலர் படகில் இறக்க தூக்கி எறிந்துவிட்டு சென்ற சம்பவங்களும் நடந்து இருக்கிறதாம் அதை நான் எழுதவில்லை .

ம் அந்த தீவு பற்றி அவர்கள் ஊருக்கு வந்த போதே நான் கேட்டு இருந்தன் அட்கன் பிறகு தீவில் பிரச்சினை எழுதுள்ளது BBC செய்தி க்காரர்கள் சென்று இருக்கிறார்கள் அது தெரிந்து இருக்கும்  என நினைக்கிறன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, goshan_che said:

இதை துரதிஸ்டத்தில் அதிஸ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்து சமுத்திரத்த்தில்  உள்ள இந்த தீவு கூட்டம், மொரீசுயஸ் இவற்றில் தரை தட்டுவது மிக அரிதாக நடக்க கூடிய செயல்.

இவற்றை விலத்தி எந்த நிலமும் கப்பல் போக்குவரத்தும் அற்ற southern ocean உள் போயிருந்தால் கதை எழுத ஆள் வந்திராது.

அந்த மட்டில் தனியை மீள கண்டது சந்தோசம்.

நான் போகவில்லை அண்ண 

மீண்டும் மத்திய கிழக்கு செல்லவே நினைத்து இருக்கிறன். மீண்டும் விலைவாசி கூடிய நிலையில் நாடு என்னுடன் இருந்தவர்கள் மீண்டும் சென்று விட்டார்கள் வயலில் நட்டம் நீர் இல்லை பசளை இல்லை கூலிகள் அதிகள் ( குத்தகை, வெட்டும் மெசின்,உழவு ) 

உங்களுக்கு தெரிந்த ஏதாவது நிறுவனங்கள் கம்பனிகள் இருந்தால் சொல்லுங்கள் 

12 hours ago, நிலாமதி said:

. பெரும்  கண்டத்தில் ( தத்து )  இருந்து மீண்டது போல  ஒரு உணர்வு ...தத்தளித்தவனுக்கு படகு கிடைத்துபோல ....ஒரே மூச்சில் வாசித்தேன்.இந்தமட்டிலாவது மீண்டது நீங்கள்செய்த புண்ணியம். 

அது சரி  நீங்கள் இருப்பது ஆசியாக் கண்டம்  ..அவுஸ்திரேலியாவுக்கு  கண்டம்  விட்டுக் கண்டம் போகிறோமே  அதுவும் படகில் என்ற  பொது அறிவு கூட ..இல்லையா ?  முகவர் என்ன கடவுளா ? நாளும் பத்திரிகையில் படிக்கிறோம்
இதுபற்றி ....  பகிர்வுக்கு நன்றி நல்லதோர் அனுபவ பாடம். 

ம் நீங்கள் சொல்வது உன்மைதான் சில ஆண்டுகளுக்கு முன்னர் 2009 பிறகு படகில் சென்று பப்புவா நியு கினியா தீவில் இருப்பவர்கள் இன்னுமிருக்கிறார்கள் , அவுஸ்ரேலியா சென்று உள்வாங்கப்பட்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் முட்டாள்த்தனமான முடிவுகளை துணிந்து எடுக்கிறார்கள் . சிலர் உயிர் பயத்தால் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் 
நன்றி அக்கா கருத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லை அண்ண நான் போகல ஊரில ஒரு குறூப் போய் திரும்பி வந்தது அவர்களை வைத்து எழுதியது தான் அந்த கதை  ஆனால் அவர்களுக்கு முன்னர் சென்றவர்களில் சிலர் படகில் இறக்க தூக்கி எறிந்துவிட்டு சென்ற சம்பவங்களும் நடந்து இருக்கிறதாம் அதை நான் எழுதவில்லை .

ம் அந்த தீவு பற்றி அவர்கள் ஊருக்கு வந்த போதே நான் கேட்டு இருந்தன் அட்கன் பிறகு தீவில் பிரச்சினை எழுதுள்ளது BBC செய்தி க்காரர்கள் சென்று இருக்கிறார்கள் அது தெரிந்து இருக்கும்  என நினைக்கிறன் 

ஓ…நான்தான் குழம்பி விட்டேன்.  விளக்கத்துக்கு நன்றி.

இதை போல ஒரு பழைய வழக்கு இங்கிலாந்தில் நடந்துள்ளதது. கடலில் ஒரு சிறு படகில் தத்தளித்த மூவரில், இருவர் மூன்றாமவரை கொன்று சாப்பிட்டு, உயிர்தப்பினார்கள். ஆனால் கரைதிரும்பியதும் அவர்களுக்கு மரண தண்டனை கிடைத்தது.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் போகவில்லை அண்ண 

மீண்டும் மத்திய கிழக்கு செல்லவே நினைத்து இருக்கிறன். மீண்டும் விலைவாசி கூடிய நிலையில் நாடு என்னுடன் இருந்தவர்கள் மீண்டும் சென்று விட்டார்கள் வயலில் நட்டம் நீர் இல்லை பசளை இல்லை கூலிகள் அதிகள் ( குத்தகை, வெட்டும் மெசின்,உழவு ) 

உங்களுக்கு தெரிந்த ஏதாவது நிறுவனங்கள் கம்பனிகள் இருந்தால் சொல்லுங்கள் 

கட்டாயம் சொல்கிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதையை வாசிக்கும்போது  மிகவும் வேதனையாக இருந்தது. இப்படியும் ரிஸ்க் எடுப்பார்களா? 
இவர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கியல்ல பயணித்துள்ளார்கள் ரியூனியன் தீவுகளை நோக்கி 
சென்றுள்ளார்கள். இதுவே மொறிசியஸுக்கு அருகில் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனிக் காட்டு ராஜா ...இந்தக் கதை உங்கள் அனுபவமென   தவறாக   கணித்து விடடோம் மன்னிக்கவும். இது ஏனையோருக்கு பயன்படும்   என்ற நல் நோக்கத்து டன் பகிர்ந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ராஜா

எப்படி இப்படி ஒரு தலைப்பை தேர்வு செய்தீர்கள்.

இந்த தலைப்பை தெரிவு செய்ததற்கே முதலில் மிகுந்த பாராட்டுக்கள்.

வலி மிகுந்த பயங்கரமான பயணம்.

கப்பல்கள் தாழுது பயணிகள் இறக்கிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் கப்பல் பயணங்களை துணிந்து செல்கிறார்கள்.

வீட்டாரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் பெரும்தொகை பணத்தை செலவு செய்கிறார்கள்.

இது ஏதோ வந்தா மலை போனா மயிர்
என்ற மாதிரி இல்லையே.

இது போனா உயிர் அல்லவா?

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, colomban said:

கதையை வாசிக்கும்போது  மிகவும் வேதனையாக இருந்தது. இப்படியும் ரிஸ்க் எடுப்பார்களா? 
இவர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கியல்ல பயணித்துள்ளார்கள் ரியூனியன் தீவுகளை நோக்கி 
சென்றுள்ளார்கள். இதுவே மொறிசியஸுக்கு அருகில் உள்ளது. 

ம் சில நேரம் உயிர் பயத்தில் எடுக்கும் முடிவுகள் தானே இப்ப சில குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு மீண்டும் செல்கிறது கடலால் 

நன்றி கொழும்பான் கருத்து பகிர்வுக்கு 

12 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் ராஜா

எப்படி இப்படி ஒரு தலைப்பை தேர்வு செய்தீர்கள்.

இந்த தலைப்பை தெரிவு செய்ததற்கே முதலில் மிகுந்த பாராட்டுக்கள்.

வலி மிகுந்த பயங்கரமான பயணம்.

கப்பல்கள் தாழுது பயணிகள் இறக்கிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் கப்பல் பயணங்களை துணிந்து செல்கிறார்கள்.

வீட்டாரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் பெரும்தொகை பணத்தை செலவு செய்கிறார்கள்.

இது ஏதோ வந்தா மலை போனா மயிர்
என்ற மாதிரி இல்லையே.

இது போனா உயிர் அல்லவா?

நன்றி.

நன்றி அண்ணா கருத்துக்கு சிலர் காணமல் போனவர்களும் உண்டு இதுவரைக்கும் தொடர்பு இல்லை அநேகமாக இறந்து போயிருப்பார்கள் பல வருடங்கள் ஆகிவிட்டது இந்த தீவுக்கு போனவர்கள் கூட இறந்ததாகவே செய்தி பரவியது 1 மாதங்கள் கழிந்த பின்பே தெரியும் அவர்கள் உயிருடன் இருப்பது 
 
  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 13 DEC, 2024 | 01:36 PM Leadership in Energy and Environmental Design (LEED®) எனும் அமைப்பிடமிருந்து Gold சான்றிதழைப் பெற்றுக்கொண்ட சாதனையை அறிவிப்பதில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையடைகிறது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், நிலைபேறான தன்மை எனும் சாதனைக்கான உலகளவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இந்த அடையாளத்தைப் பெறும் இலங்கையின் 50ஆவது கட்டிடமாகும். அமெரிக்க பசுமைக் கட்டிட சபையின் LEED பசுமைக் கட்டிடம் எனும் நிகழ்ச்சித் திட்டமானது, ஆற்றல் வினைத்திறன், நீர் முகாமைத்துவம், வெளியேற்றப்படும் கழிவுகளைக் குறைத்தல் மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழலில் உட்புற சுற்றுச்சூழல் தரத்தை பேணுதல் போன்ற விடயங்களை அங்கீகரிக்கிறது. நடைமுறையில் நிலைபேறானதன்மை மற்றும் காலநிலை மாற்றங்களின் போதான மீண்டெழும் தன்மை ஆகியவற்றிற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு, சுற்றுச்சூழல் தொடர்பாக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதற்கான தூதரகத்தின் அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் சூழலியல், வரலாறு மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மதித்தல் ஆகியவற்றிற்கான ஒரு எடுத்துக்காட்டாக இந்த அடைவு விளங்குகிறது. இச்சாதனையினை நினைவுகூரும் வகையிலும், டிசம்பர் 14ஆம் தேதி வரவிருக்கும் உலக எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும், தூதரகத்தின் அதிநவீன வசதிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி ஆகியோரை அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அண்மையில் சந்தித்தார். கட்டிடத்தின் ஆற்றல் திறன் கொண்ட புத்தாக்க வடிவமைப்பு, உள்ளூர் கூறுகளை உள்ளடக்குதல் மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் நிலைபேறான செயற்பாடுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை இதன்போது தூதுவர் வலியுறுத்தினார். “LEED Gold சான்றிதழைப் பெறுவதானது, நிலைபேறான தன்மையினை அடைவதற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்” என அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். “இக்கட்டிடம் ஒரு தூதரகம் என்பதையும் தாண்டி, இலங்கையின் கலாச்சார மற்றும் இயற்கை மரபுரிமைகளை கௌரவிக்கும் அதே வேளை, சிந்தனைமிக்க வடிவமைப்பு மற்றும் பசுமையான நடைமுறைகள் எவ்வாறு எமது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் என்பதற்கான ஒரு அடையாளமாக விளங்குகிறது. இலங்கையின் பசுமையான எதிர்காலத்திற்குப் பங்களிப்புச் செய்யும் வகையில், நாட்டில் 50ஆவது LEED Gold சான்றிதழ் பெற்ற கட்டிடமாக நிமிர்ந்து நிற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார். “அமெரிக்கத் தூதரகம் LEED Gold சான்றிதழைப் பெற்றமையானது, நிலைபேறான உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். புத்தாக்க வடிவமைப்பு, எரிசக்தி வினைத்திறன் மற்றும் உள்ளூர் தாவரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உள்ளூர் கலைத்திறனை உள்ளடக்குதல் ஆகியவற்றினூடாக எமது உள்ளூர் சூழலை மதித்தல் உலக எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு LEED Gold சான்றிதழைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் 50ஆவது கட்டிடமாக மாறிய கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் Leadership in Energy and Environmental Design (LEED®) எனும் அமைப்பிடமிருந்து Gold சான்றிதழைப் பெற்றுக்கொண்ட சாதனையை அறிவிப்பதில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையடைகிறது. புத்தாக்க வடிவமைப்பு, எரிசக்தி வினைத்திறன் மற்றும் உள்ளூர் தாவரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உள்ளூர் கலைத்திறனை உள்ளடக்குதல் ஆகியவற்றினூடாக எமது உள்ளூர் சூழலை மதித்தல் போன்றவற்றிற்கான ஒரு எடுத்துக்காட்டாக இக்கட்டிடம் விளங்குகிறது. இது எதிர்கால செயற் திட்டங்களுக்கான ஒரு அளவுகோலை நிறுவுவதுடன் இலங்கையில் நிலைபேறான இலக்குகளை முன்னேற்றுவதில் சர்வதேச ஒத்துழைப்பு ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கத்தையும் அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான வலுவான பங்காண்மையினை இது பிரதிபலிப்பதுடன் சிந்தனைமிக்க வடிவமைப்பானது சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் எவ்வாறு பயனளிக்கும் என்பதையும் நிரூபிக்கிறது.” என அமைச்சர் பட்டபெந்தி கூறினார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வெளிநாட்டு கட்டிட நடவடிக்கைகள் பணியகத்தினால் (OBO) முகாமை செய்யப்படும், அமெரிக்க அரசாங்கத்திற்குச் சொந்தமான வெளிநாட்டு இராஜதந்திர மற்றும் தூதரக சொத்துக்கள் தொடர்பான துறையானது, புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் LEED Silver சான்றிதழைப் பெறுவதைக் கட்டாயமாக்குகிறது. LEED சான்றிதழைப் பெற்றுள்ள உலகெங்கிலுமுள்ள 63 அமெரிக்க தூதரகங்களுடன் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் இணைகிறது. அவற்றுள் 23 Gold சான்றிதழ்களைப் பெற்றவை. Gold சான்றிதழ்களைப் பெற்றவற்றுள் 17 கட்டிடங்கள் அந்தந்த நாடுகளில் முதன் முதலாக LEED சான்றிதழ் பெற்றவையாகும்.  கட்டிட செயற்திறன் தொடர்பான சிறப்பம்சங்கள்: கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது, இலங்கையின் வளமான கலாச்சாரம் மற்றும் உயிரினப் பல்வகைமையினை வெளிப்படுத்தும் அதே வேளை, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பினை மிகவும் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது: எரிசக்தித் திறன்: காலநிலைக்கு ஏற்ற மேலோடு, ஆழமான கூரை மேலடுக்குகள், சன்ஸ்கிரீன்கள் மற்றும் பசுமைக் கூரை என்பன சூரிய வெப்பத்தை குறைப்பதன் காரணமாக கட்டிடத்தை குளிர்விப்பதற்கான எரிசக்திப் பயன்பாட்டைக் குறைக்கின்றன. வருடாந்த எரிசக்தி நுகர்வினை 40% குறைப்பதற்கு சோலார் பெனல்கள் பங்களிப்புச் செய்கின்றன. அமெரிக்கத் தூதரக பண்டகசாலை மற்றும் வாகனத் தரிப்பிடத்தின் கூரையில் உள்ள சோலார் பெனல்களின் மொத்த மின் உற்பத்தித்திறன் 194.58 kWp ஆகும். இந்த அமைப்பு கட்டிடத்தின் விநியோக வலையமைப்பிற்கு மின்சாரத்தினை வினைத்திறனுடன் வழங்குகிறது. தூதரகத்தின் நுகர்வுத் தேவைகளுக்கு அதிகமாக மின்னுற்பத்தி நடைபெறும் போது, அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரமானது சுற்றியுள்ள நகர மின்சார கட்டமைப்பிற்கு வழங்கப்படுகிறது.   நீர் சேமிப்பு: உயர்தர மழைநீர் முகாமைத்துவ அமைப்பு மற்றும் தூதரகத்திற்குள்ளேயுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு என்பன ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட நீரை பாசனத் தேவைகளுக்காக மறுசுழற்சி செய்வதன் மூலம் மனித பயன்பாட்டிற்கு உகந்த நீரை சேமிக்கின்றன.   பசுமையான இடங்கள்: உள்ளூர் சூழலுடன் ஒரு இணக்கமான தொடர்பை உருவாக்குதல் மற்றும் மேலதிக நீர்ப்பாசனத்திற்கான தேவையைக் குறைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையில் தூதரக நிலங்கள் இலங்கையின் பூர்வீக மரங்கள் மற்றும் தாவரங்களை உள்ளடக்கியுள்ளன.  போக்குவரத்து: பணிக்குழுவினர்களுக்கிடையில் துவிச்சக்கர வண்டிகளை பகிர்ந்து பயன்படுத்தும் ஒரு பிரபலமான நிகழ்ச்சித் திட்டமானது, குறுகிய பயணங்களுக்கு மோட்டார் வாகனங்களை நம்பியிருப்பதை குறைக்கிறது. மேம்படுத்தப்பட்ட பரிசீலனை மற்றும் அத்தாட்சிப்படுத்தல்: செயற்திறனை மேம்படுத்துவதற்காகவும் எரிசக்தி நுகர்வினைக் குறைப்பதற்காகவும், மேம்படுத்தப்பட்ட பரிசீலனை மற்றும் அத்தாட்சிப்படுத்தல் செயன்முறையானது, கட்டிடத்தின் அனைத்து கட்டமைப்புகளும் வினைத்திறனுடனும் எதிர்பார்க்கப்பட்டவாறும் தொழிற்படுவதை உறுதிப்படுத்துகிறது.  மீள்சுழற்சி செய்யப்பட்ட உள்ளடக்கங்களைப் பயன்படுத்துதல்: பொருட்களுடன் மீள்சுழற்சி செய்யப்பட்ட உள்ளடக்கங்களை இணைப்பதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைக்கப்படுகிறது.   குறைவாக உமிழும் பொருட்கள்: குறைவாக உமிழும் வண்ணப்பூச்சுகள், பூச்சுகள் மற்றும் தரை அமைப்புகளைப் பயன்படுத்துவது உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. உலக எரிசக்தி பாதுகாப்பு தினம், ஆண்டுதோறும் டிசம்பர் 14ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது எரிசக்தி நுகர்வினைக் குறைத்து நிலைபேறான ஆற்றல் நடைமுறைகளுக்கு மாற வேண்டியதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தூதரகத்தின் LEED Gold அத்தாட்சிப்படுத்தலானது ஆற்றல் சேமிப்பு மற்றும் செயற்திறன் வினைத்திறன்களுக்கான புத்தாக்க அணுகுமுறைகளுக்கான ஒரு தெளிவான உதாரணமாக விளங்குவதுடன் பசுமையான, மிகவும் நிலைபேறான ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் பொதுவான விழுமியங்களையும் மீளவலியுறுத்துகிறது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம்: Gold LEED சான்றிதழ் வழங்கப்பட்ட இலங்கையின் 50ஆவது கட்டிடம்.  இலங்கையின் இயற்கை சூழலுடன் ஒரு தொடர்பை பேணி, தூதரகத்தின் பசுமையான இடங்கள் உள்ளூர் விலங்கினங்கள் மற்றும் பறவையினங்களை ஈர்த்து அவற்றிற்கு ஒரு அனுகூலமான சூழலை எவ்வாறு வழங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையில் தூதரக மைதானத்தில் உலாவும் ஒரு சுறுசுறுப்பான மயில். ஆற்றல் வினைத்திறன், இயற்கையான வெளிச்சம் மற்றும் நிலைபேறான தன்மைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டும், LEED அத்தாட்சிப்படுத்தலின் தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட அமெரிக்கத் தூதரகத்தினுள் உள்ள ஒரு பணியிடப் பரப்பு. இலங்கையின் இயற்கை அழகைத் தழுவிய, LEED Gold சான்றிதழைப் பெறுவதற்கு உதவிய நிலைபேறான வடிவமைப்புக் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் தூதரகத்திலிருந்து பார்க்கும்போது தெரியும் கடலின் அற்புதமான காட்சி. PV தொகுதி : அமெரிக்கத் தூதரக பண்டகசாலை மற்றும் வாகனத் தரிப்பிடத்தின் கூரையில் உள்ள சோலார் பெனல்களின் மொத்த மின் உற்பத்தித்திறன் 194.58 kWp ஆகும். இந்த அமைப்பு கட்டிடத்தின் விநியோக வலையமைப்பிற்கு மின்சாரத்தினை வினைத்திறனுடன் வழங்குகிறது. தூதரகத்தின் நுகர்வுத் தேவைகளுக்கு அதிகமாக மின்னுற்பத்தி நடைபெறும் போது, அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரமானது சுற்றியுள்ள நகர மின்சார கட்டமைப்பிற்கு வழங்கப்படுகிறது.  புத்தாக்க கழிவுநீர் சுத்திகரிப்பு, நீர்-வினைத்திறனுள்ள தரைத்தோற்றவமைப்பு மற்றும் நீரின் பயன்பாட்டைக் குறைத்தல் என்பன LEED அத்தாட்சிப்படுத்தல் மற்றும் நிலைபேறான தன்மை தொடர்பாக கவனம் செலுத்துதல் ஆகியவற்றிற்கு பங்களிப்புச் செய்யும் முக்கிய அம்சங்களை எடுத்துக் காட்டும் அமெரிக்கத் தூதரகத்திலுள்ள நீர் வடிகட்டும் தொட்டிகள். https://www.virakesari.lk/article/201158
    • காமம் ,  கோபம் ,  குரோதம் தடுப்பது எப்படி ,தவிர்ப்பது எப்படி ........ அழகு தமிழில் அரிய விளக்கம் . .....!  🙏
    • பட மூலாதாரம்,RILEY FORTIER படக்குறிப்பு, 'ஷனாய்-டிம்பிஷ்கா' அல்லது 'லா பாம்பா' என்றும் அழைக்கப்படும் கொதிக்கும் ஆறு கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் பரானியுக் பதவி, பிபிசி ஃபியூச்சர் கொதிக்கும் நதி வழக்கமாகவே 86 டிகிரி செல்சியஸை அடைகிறது. இது சுற்றியுள்ள மழைக்காடுகளுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெருவின் கொதிக்கும் ஆற்றை நோக்கி, சமதளம் நிறைந்த, நான்கு மணி நேரம் பயணம் செய்து, மழைக்காடு வழியாகச் சென்று, நிலப்பரப்பில் உள்ள முகடுகளைத் தாண்டிய பிறகுதான், அதை உங்களால் பார்க்க முடியும் என்று, சுவிஸ் ஃபெடரல் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் லொசேனில் (EPFL) தாவர சூழலியல் முதுகலை ஆராய்ச்சியாளராக இருக்கும் அலிசா குல்பெர்க் கூறுகிறார். கீழே உள்ள நிலப்பரப்பில், பரந்த, கிண்ண வடிவத்தில் அமைந்துள்ள தாழ்வாரத்தில் உள்ள மரங்களின் சிறு பகுதியிலிருந்து அடர்த்தியான நீராவி மேகங்கள் வெளிப்படுகின்றன. காலநிலை மாற்றம் அமேசானை எவ்வாறு மாற்றும்? "அது ஏதோ மாயாஜாலமாக இருந்தது," என கொதிக்கும் நதியை முதன்முதலாக பார்த்தது குறித்து குல்பெர்க் நினைவு கூர்ந்தார். 'ஷனாய்-டிம்பிஷ்கா' அல்லது 'லா பாம்பா' என்றும் அழைக்கப்படும் கொதிக்கும் ஆறு, கிழக்கு-மத்திய பெருவில் உள்ள ஒரு துணை நதியின் ஒரு பகுதியாக இருந்து, அமேசான் நதியுடன் இணைகிறது. இந்த பகுதியில் உள்ள மலைகளில், 1930-களில் புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் எண்ணெய் வளங்களைத் தேடின. ஆனால் இந்த பழம்பெரும் கொதிக்கும் நதியின் ரகசியங்கள் குறித்து தற்போது மேற்கத்திய விஞ்ஞானிகளால் ஆழமாக பேசப்படுகின்றன. உதாரணமாக, கீழே நிலத்தில் ஆழமான புவிவெப்ப ஆற்றல் மூலங்களால் நதி வெப்பமடைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர். குல்பெர்க் முதன்முதலில் இந்த மர்மமான இடத்தை 2022 இல், அமெரிக்கா மற்றும் பெருவைச் சேர்ந்த ஒரு குழுவுடன் பார்வையிட்டார். அதில், தற்போது மியாமி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ள ரிலே ஃபோர்டியரும் ஒருவர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆராய்ச்சியாளர்கள் காடு வழியாக மலையேறும்போது, அவர்களைச் சுற்றியிருந்த தாவர வாழ்வியலில் அசாதாரணமான ஒன்றை கவனித்தனர். "நதியில் தெளிவான மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்று இருந்தது என்பது எங்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது" என்கிறார் ஃபோர்டியர். "காடு சிறிய பகுதிகளாகத் தோன்றியது. பெரிய மரங்கள் அதிகம் இல்லை. அது ஓரளவு காய்ந்திருந்ததாகவும் உணர்ந்தோம். தரையில் விழுந்த இலைகள் சலசலப்பான தன்மையுடன் இருந்தன" என்கிறார். பொதுவாக வெதுவெதுப்பான அமேசானுடன் ஒப்பிடும் போது, இந்த வனப் பகுதியின் கடுமையான வெப்பத்தால் ஃபோர்டியர் வியப்படைந்தார். புவி வெப்பமடைதல், சராசரி வெப்பநிலையை அதிகரிப்பதால், காலநிலை மாற்றம் அமேசானை எவ்வாறு மாற்றும் என்பதை இந்த இடம் விளக்கக்கூடும் என்பதை அவரும் அவரது குழுவினரும் உணர்ந்தனர். அந்த அடிப்படையில் கொதிக்கும் நதியை ஓர் இயற்கை பரிசோதனையாகக் கருதலாம். இது எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. இருப்பினும், அதைக் குறித்து ஆய்வு செய்தது சவாலாக இருந்தது. "இது நீராவிக் குளியல் தொட்டி உள்ள அறையில் களப்பணி செய்வது போன்றது" என்று ஃபோர்டியர் குறிப்பிட்டார். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 டங்ஸ்டன் சுரங்கம்: சட்டமன்ற தீர்மானத்தால் என்ன நடக்கும்? மத்திய அரசின் சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,RILEY FORTIER படக்குறிப்பு, கொதிக்கும் நதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது கடினம் என்கிறார், ஃபோர்டியர் பல்லுயிர் பெருக்கத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், ஃபோர்டியர், குல்பெர்குடன் அமெரிக்கா மற்றும் பெருவைச் சேர்ந்த அவர்களது குழுவினர், 13 வெப்பநிலை பதிவு சாதனங்களைப் பயன்படுத்தி கொதிக்கும் ஆற்றின் அருகே ஒரு வருடத்திற்கு காற்றின் வெப்பநிலையைக் கண்காணித்ததை விவரித்தனர். ஆராய்ச்சியாளர்கள் ஆற்றின் ஒரு பகுதியில் வெப்பநிலை பதிவு சாதனங்களை வைத்தனர், அதில் குளிரான மண்டலங்களும் அடங்கும். குளிர்ந்த இடங்களில் சராசரி ஆண்டு வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் (75-77F) முதல் வெப்பமான பகுதிகளில் 28-29 டிகிரி செல்சியஸ் (82-84F) வரை இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை, கொதிக்கும் ஆற்றின் ஒரு சில வெப்பமான இடங்களில், 45 டிகிரி செல்சியஸை (113F) நெருங்கியது. புவி வெப்பம் குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானி ஆன்ட்ரூஸ் ரூஸோ கடந்த காலத்தில் மேற்கொண்ட பகுப்பாய்வில் அந்த ஆற்று நீரின் சராசரி வெப்பநிலை 86 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதாக கண்டறிந்தார். இந்த பகுப்பாய்வு, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழில் வெளியிடப்படவில்லை. எந்த தாவர இனங்கள் உள்ளன என்பதைப் பற்றிய விரிவான பகுப்பாய்வைச் செய்ய, கடினமான சூழல்களை எதிர்த்து, குழு போராடியது. ஆராய்ச்சியாளர்கள் ஆற்றங்கரையின் பல அடுக்குகளில் உள்ள தாவரங்களை உன்னிப்பாக ஆராய்ந்தனர். அதில் , ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பைக் கண்டறிந்தனர். ஆற்றின் வெப்பமான பகுதிகளில் தாவரங்கள் குறைவாக இருந்தன. சில தாவர இனங்கள் முற்றிலுமாக இல்லை. "அடித்தளத்தில் தாவரங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. நீராவி இருந்தாலும், தாவரங்கள் மிகவும் உலர்ந்ததாகத் தோன்றின." என குல்பெர்க் குறிப்பிட்டார். மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்12 டிசம்பர் 2024 ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்ய செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவது ஏன்?5 டிசம்பர் 2024 எடுத்துக்காட்டாக, 50 மீ (164 அடி) உயரம் வரை வளரக்கூடிய பசுமையான குவாரியா கிராண்டிஃபோலியா போன்ற சில பெரிய மரங்கள், ஆற்றின் வெப்பமான பகுதிகளுக்கு அருகில் வளர்வதற்கு போராடுவதாக தோன்றியது. ஒட்டுமொத்தமாக, வெப்பம், பல்லுயிர் பெருக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றியது. காற்றில் உள்ள நீராவியின் அளவு, அப்பகுதியில் பறக்கும் பூச்சிகள் அல்லது பிற விலங்குகளை பாதிக்கக்கூடும் என்று ஃபோர்டியர் தெரிவிக்கிறார். ஆனால், குறிப்பிட்டு இதனை அவர்கள் ஆராயவில்லை. அதிக வெப்பநிலையை பொறுத்துக்கொள்ளும் தாவர இனங்கள் வெப்பமான பகுதிகளில் மிகவும் பொதுவானவை. இது எதிர்பாராதது அல்ல. ஆனால், மிகச்சிறிய இடைவெளியில் கூட இந்த விளைவைக் கண்டு குழு ஆச்சரியமடைந்தது. அவர்களின் ஆய்வுப் பகுதியின் முழு நீளமும் சுமார் 2 கிமீக்கு (1.24 மைல்கள்) அதிகமாக இல்லை. கூடுதலாக, கொதிக்கும் ஆற்றின் வெப்பமான பகுதிகள் ஆங்காங்கே உள்ளன. இதில் சில நீராவி பகுதிகள் ஆற்றின் குறுக்கே அங்கும் இங்கும் சிதறி உள்ளன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டியவுடன், தாவரங்கள், கிட்டத்தட்ட உடனடியாக வினைபுரியும் என்று ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்12 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!12 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலநிலை மாற்றம் அமேசான் படுகையை வெப்பமாக்குவதால், கொதிக்கும் நதியின் எல்லைப் பகுதிகளைப் போல மழைக்காடுகள் வறண்டு போகக்கூடும் எதிர்காலத்தில் அமேசான் எவ்வாறு மாறக்கூடும்? ஆய்வில் ஈடுபடாத எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் கிறிஸ் போல்டன் கூறுகையில், கொதிக்கும் நதியை 'இயற்கைப் பரிசோதனையாக' குழு விளக்கியது பற்றி பேசுகிறார். "இது மிகவும் நன்றாக இருந்தது என்று நான் நினைத்தேன். இது ஒரு புத்திசாலித்தனமான விஷயம்" என்கிறார் அவர். அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில், அமேசானுக்கான அறிவியல் குழுவின் தொழில்நுட்ப-அறிவியல் செயலகத்தின் உறுப்பினரான டியாகோ ஒலிவேரா பிராண்டோ, எதிர்காலத்தில் அமேசான் எவ்வாறு மாறக்கூடும் என்பதற்கு கொதிக்கும் நதி ஒரு உதாரணம் என்கிறார். காலநிலை மாற்றத்தின் இத்தகைய விளைவுகள் பழங்குடியின மக்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து தாம் கவலைப்படுவதாக அவர் கூறுகிறார். "இந்த மக்கள் உயிரியல் வளங்களை சார்ந்துள்ளனர்," என்றும் அவர் கூறுகிறார். அமேசானில் உள்ள பழங்குடி குழுக்கள் ஏற்கனவே வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர். சில சமயங்களில் இது காலநிலை மாற்றத்தால் மோசமடைகிறது, எனவும் போல்டன் தெரிவித்தார். அமேசானின் அதிக வெப்பநிலை அங்குள்ள பல தாவரங்களின் செயல்பாட்டை அச்சுறுத்தும் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோடோல்போ நோப்ரேகா கூறுகிறார் . கொதிக்கும் நதி இதை மிகச்சரியாக விளக்குகிறது. "நீங்கள் பிராந்தியத்தின் வெப்பநிலையை அதிகரிக்கும்போது, அருகில் நீர் கிடைத்தாலும் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை திறனை நீங்கள் குறைக்கலாம்," என்று அவர் கூறுகிறார். "நான் நம்புவது என்னவென்றால், சுற்றி நீர் இருந்தாலும், தாவரங்களுக்கு வெப்பநிலையால் அழுத்தம் ஏற்படுகின்றது." நிலத்தடி நீரின் வெப்பநிலை அல்லது அளவை ஆராய்ச்சியாளர்கள் அளவிடவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். அதிகரிக்கும் வெப்பநிலை பல்லுயிர் மற்றும் தாவர வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கும் என்பதை கொதிக்கும் நதி சுட்டிக்காட்டினாலும், இந்த பகுதி, அமேசானின் மழைக்காடுகளின் எதிர்காலத்தை பெரிய அளவில் பிரதிபலிக்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்று குல்பெர்க் கூறுகிறார். உதாரணமாக, வேறு எங்கும் இவ்வளவு நீராவியை எதிர்பார்க்க முடியாது. புயல் அல்லது மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பெரிய வானிலை விளைவுகள், வரும் ஆண்டுகளில் ஒட்டுமொத்த காடு எவ்வாறு உருவாகிறது என்பதையும் பாதிக்கும். செட்னயா சிறை: சிரியாவின் ரகசிய 'மனிதப் படுகொலை கூடம்'11 டிசம்பர் 2024 சிரியாவில் அசத்தின் வீழ்ச்சி மற்றும் இஸ்ரேலிய தாக்குதல் பற்றி அரபு நாடுகள் என்ன சொல்கின்றன?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,RILEY FORTIER படக்குறிப்பு, கொதிக்கும் ஆறு பூமிக்கு அடியில் உள்ள ஆழமான புவிவெப்ப மூலங்களால் வெப்பமடைவதாக கருதப்படுகிறது காற்றில் ஓடும் வளிமண்டல ஆறுகள் மீதான பாதிப்பு மேலும் காலநிலை மாற்றத்தினுடைய தாக்கத்தின் கீழ் பரந்த அமேசான் படுகையின் நிலைமைகளை, 'கொதிக்கும் நதி' முழுமையாக பிரதிபலிக்காததற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அமேசான் ஒரு பெரிய பரப்பு என்று நோப்ரேகா சுட்டிக்காட்டுகிறார். இது பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா மற்றும் பிரெஞ்சு கயானா, கடல்கடந்த பிரெஞ்சு பிரதேசம் உட்பட ஒன்பது வெவ்வேறு நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கியது. மொத்தத்தில், 6.7 மில்லியன் சதுர கிமீ (2.6 மில்லியன் சதுர மைல்) பரப்பளவை அமேசான் கொண்டுள்ளது . "ஒரு பகுதியில் நீங்கள் கண்டறிவது, வேறொரு மழைப்பொழிவு முறை அல்லது தாவர விநியோகம் கொண்ட மற்றொரு பகுதிக்கு அறிவியல் ரீதியாக பொருந்தாது" என்றும் அவர் கூறுகிறார். முன்னதாக, போல்டன் மற்றும் அவரது நண்பர்கள் அமேசான் 'பேரழிவு கட்டத்தை' நெருங்கி இருக்கலாம் என்ற கருத்தை ஆராய்ந்தனர். அங்கு காலநிலை மாற்றம் மற்றும் காடழிப்புச் செயல்கள், அந்த காடுகளை விரைவாக மோசமடையச் செய்யலாம். "கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மரங்களின் திடீர் அழிவை நீங்கள் காணலாம்," என்கிறார் போல்டன். மேலும், காலநிலை மாற்றத்தால் மட்டுமே அமேசான் வெப்பமாகவும் வறண்டதாகவும் மாறுவது இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். காடழிப்பு பெரும் பிரச்னையாகும். இது காடுகளுக்கு மேலே காற்றில் ஓடும் வளிமண்டல ஆறுகளை துண்டித்துவிடும். இல்லையெனில், இவை மழை வடிவில் காடுகளுக்கு ஈரப்பதத்தைக் கொண்டு வரும். "நீங்கள் மரங்களை வெட்டினால், அந்த இணைப்பை அழித்துவிடுவீர்கள், அடிப்படையில், நீங்கள் வறட்சியை ஏற்படுத்துகிறீர்கள்," என்றும் அவர் விளக்குகிறார். அமெரிக்காவில் ரூ.237 கோடிக்கு ஏலம் போன ஒரு ஜோடி காலணி - அதில் என்ன சிறப்பு?9 டிசம்பர் 2024 தியாகராய நகர்: நூற்றாண்டை கொண்டாடும் சென்னை அங்காடித் தெருவின் கதை9 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செய்பா மரம் போல, குறிப்பிட்ட தாவரங்களால் கொதிக்கும் ஆற்றின் தீவிர சூழலை சமாளிக்க முடியும் அமேசான் மழைக்காடுகள் வறண்ட இடமாக மாறும் அபாயம் போல்டன் உட்பட 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களால் 2023 இல் வெளியிடப்பட்ட 'குளோபல் டிப்பிங் பாயிண்ட்ஸ்' பற்றிய ஒரு அறிக்கை, அமேசான் மழைக்காடுகள் விரைவில் மிகவும் வறண்ட இடமாக மாறும் அபாயத்தை ஆராய்ந்தது. இது காட்டை விட பரந்த சமதள வெளியிடத்தைப் போன்று உள்ளது. கொதிக்கும் நதியை மேலும் ஆராய்வதன் மூலம், கடுமையான புதிய நிலைகளில் எந்த இனங்கள் உயிர்வாழ அதிக வாய்ப்பு உள்ளது என்பதைப் பற்றிய ஒரு தகவலைப் பெறலாம் என ஃபோர்டியர் பரிந்துரைக்கிறார். 50 மீ (164 அடி) உயரம் வரை வளரக்கூடிய மாபெரும் செய்பா மரத்தின் (செய்பா லுபுனா) உதாரணத்தை அவர் குறிப்பிடுகிறார். குல்பெர்க்கின் கூற்றுப்படி, இந்த மரம் கொதிக்கும் ஆற்றின் அருகே அதிக வெப்பநிலையைத் தாங்கும் தன்மையைக் கொண்டதாகத் தோன்றியது. மேலும், இது முந்தைய ஆராய்ச்சியின் மூலம் ஆதரிக்கப்பட்டது. செய்பா மரம், அதன் தண்டுகளில் தண்ணீரை சேமிக்க முடியும் என்று குல்பெர்க் குறிப்பிடுகிறார். இது வறண்ட நிலைமைகளிலும் உயிர் வாழ உதவுகிறது. இது தொடர்பாக மேற்கொண்டு பேசும் ஃபோர்டியர், கொதிக்கும் ஆற்றின் அருகே வளரும் குறிப்பிட்ட தாவர வகைகள், இந்த கடுமையான சூழலை சமாளிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவது இயற்கை வளங்களை பாதுகாக்கும் ஆர்வலர்களுக்கு நன்மை அளிக்கிறது என்று கூறுகிறார். இதன் மூலம் பரந்த மழைக்காடுகளில், எந்த பகுதிகளில் இருக்கும் இயற்கை சூழலுக்கு அதிக பாதுகாப்பு தேவை என்பதை தீர்மானிக்க முடியும் என்பதை அவர் நம்புகிறார். இந்த மரக்கவிகைகளுக்கு கீழே நிலவும் மைக்ரோ கிளைமேட்டிக் சூழலில் கடுமையான சூழலிலும் உயிர்வாழ தேவையான தகவமைப்புகளைக் கொண்ட உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்கு இது உதவும். அமேசானைப் பாதுகாப்பதை காடுகளுக்கு அப்பால் மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக போல்டன் கருதுகிறார். ஆபத்து என்னவென்றால், மழைக்காடுகள் ஒரு பேரழிவு கட்டத்தை அடைந்தால், அது விரைவாக அழியத் தொடங்கினால், முழு உலகமும் பாதிக்கப்படும். "காடு அழிந்தால், அதிகளவு கார்பன் வளி மண்டலத்திற்குச் செல்லப் போகிறது, அது காலநிலையை பாதிக்கும். இது உள்ளூர் பிரச்னை மட்டுமல்ல, உலகளாவிய ஒன்று" என்றும் அவர் கூறுகிறார். அப்படியானால், கொதிக்கும் நதி எதிர்காலத்தின் ஒரு முன்னோட்டம் மட்டுமல்ல. இது ஒரு எச்சரிக்கையும் கூட. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c9vke70nn1ro
    • இந்த புதிதா சட்டை போட்ட சபாநாயகர் ..முதல்நாளே  வெட்கப்பட்டுத்தான் நின்றவர்..அந்த வெள்ளைத் தொப்பியையும் கண்டபடி போடுவதில்லை...மனச்சாட்சி உறுத்தியிருக்கும் உபசபாநாயகரும்..தானு பாகிஸ்ஹான் பட்டதரி என்றூ  கை உயர்த்திவிட்டார்...நீதி அமைச்சரும் தன்னுடைய பட்டம் அச்சுபிழை என்று மன்னிபுக் கேட்டுவிட்டார்...இன்னும் எத்தினை பூதம் வரப்போகுதோ...என்.பி.பி மாயை 2 மாதத்தில் வெளிக்குது..நம்ம யாழ்ப்பண   என்.பி.பி எம்பியும் இப்படியொரு சிக்கலில் மாட்டுப் பட்டிருப்பதாக கேள்வி....பார்ப்பம்  யாழ் களம் களைகட்டும் 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.