Jump to content

பெரியார்


Recommended Posts

periyar.jpg

கிழட்டு

இளைஞன்

பகுத்தறிவுக்

காதலில்

தாடி

வளர்த்தவன்

* இன்று "பெரியார்" பிறந்த நாள். பெரியார் 1879 ம் ஆண்டு செப்ரெம்பர் 17ம் நாள் அன்று பிறந்தார். "உராய்வு" கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற எனது கவிதையை, பொருத்தமாக இருக்கும் என்பதால் இன்று இங்கு இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

கிழட்டு இளைஞனுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள்......அந்த கிழட்டு இளைஞன் பகுதறிவு காதலில் தாடி வளர்த்தான் இன்றைய இளைஞன் காதலிற்காக தாடி வளர்த்தான்.......... B)

இந்த கவி வரிகளை இணைத்த இளைஞனுக்கும் நன்றி....... :P

Link to comment
Share on other sites

பெரியார் குறித்த கவிஞர் காசி ஆனந்தன் கவிதை

பெரியார் ஒருவர்தான் பெரியார்

அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்

பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி

தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார்

மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்

மனிதனைத் தீண்ட மறுத்தானே!

நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்

நரிகளின் வாலை அறுத்தானே!

கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்

கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!

காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை

கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை

மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை

யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார்

Link to comment
Share on other sites

சபேசன் நீங்கள் இணைத்த பாடல் வரிகளை தமிழிசைப் பாடல்கள் இறுவட்டுக்காக புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் பாடலாகப் படித்துள்ளார். அவரின் கம்பீரமான குரலில், காசி ஆனந்தனின் புரட்சி வரிகளில் கேட்க அருமையாக இருக்கும் அந்தப் பாடல்.

Link to comment
Share on other sites

கிழட்டு

இளைஞன்

பகுத்தறிவுக்

காதலில்

தாடி

வளர்த்தவன்

ஓ இது எங்கட இளைஞன் எழுதியதோ? இளைஞன், இங்கு உங்களைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை தானே? :P பெரியாருக்கு தாடி இருக்கிதா? அப்ப அவர் ஒரு சோம்பேறியாகவும் இருக்கக்கூடும். ;)

Link to comment
Share on other sites

தாடி வைத்தவன் எல்லாம் பெரியாரோ,கால்மாக்ஸோ,பிடல் காஸ்ரோவாக இருந்தால் உலகம் எங்கோ போயிருக்கும்.ஆகவே தாடிக்கு அர்த்தம் கற்பிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்ல கவிதை இளைஞன்.

தாடியை அவர் வழிக்காததற்குக் காரணம் அந்த நேரத்தைக் கூட அவர் வீணாக்க விரும்பவில்லை.

பெரியாரைப் பற்றி பலர் கவிதை எழுதியுள்ளனர். உணர்ச்சிப் பாவலர் காசியானந்தன் அவர்களின் குரு பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அருமையான கவிதை இதோ.

" தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக் குகையில் சிறுத்தை எழும்

இவர்தாம் பெரியார் "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் கருணாநிதி அவர்களின் வரிகள்

பம்பரமும் சுற்றியபின் ஓய்வு பெறும்

பெரியாரோ படு கிழமாய் ஆன பின்னும்

பம்பரமாய்ச் சுற்றி வந்தார் நமக்காக.

Link to comment
Share on other sites

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. மேலும் சில கவிதை வரிகளை இணைத்த இளங்கோவுக்கும் நன்றி.

கார்ல் மார்க்ஸ், பிடல் காஸ்ரோ, சே குவேரா, (சோகிரடீஸ்?) --> இவர்கள் எல்லோரும் மக்கள் மீது கொண்ட காதலால் தாடி வளர்த்தவர்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழட்டு

இளைஞன்

பகுத்தறிவுக்

காதலை நாடி

தாடி வளர்த்தவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

*** தணிக்கை கொள்கை நினைந்து.. நிந்தித்தல்ல..

பிராமணன் வைச்சா

குடுமி..

அதையே

ஈ வெ

நான் வைச்சா

தாடி...

பகுத்தறிவுவாதம்.

Link to comment
Share on other sites

யாருங்கண்ண ஈ.வெ? :D

உங்களுக்கு விருப்பம் என்றால் நீங்களும் குடும்பி வையுங்கோ, நான் உங்களை பிராமணன் அல்லது ஐயர் எண்டு கூப்பிடுறன். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருங்கண்ண ஈ.வெ? :D

உங்களுக்கு விருப்பம் என்றால் நீங்களும் குடும்பி வையுங்கோ, நான் உங்களை பிராமணன் அல்லது ஐயர் எண்டு கூப்பிடுறன். :P

ஈ வெ ராமசாமி என்று ஈரோட்டில் முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு சாதாரண ஒரு இந்தியக் குடிமகன்..மனிதன். :(

நான் குடும்பி வைச்சா.. பிராமணன் ஆகிடுவன்.. அவங்க சரியான டம்... தாடி வைத்தாத்தான்... பகுத்தறிவுள்ளவனாவன்..! நீங்க என்னடான்னா...???! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு. வலைஞன் அவர்கள் இத்தலைப்பில் எழுதிய கருத்தை வெட்டியமைக்கான காரணத்தைச் சொல்ல முடியுமா? அல்லது உங்களிட்டத்திற்கு ராமசாமி புகழ்பாடுகின்ற வசனங்களைத் தான் அனுமதிப்பீர்களா?நான் எழுதிய வசனத்தில் எவ்வித தப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவரது தாடிக்குள் முகத்தை மட்டுமல்ல தமிழனைத் திராவிடம் என்ற பெயரில் ஏமாற்றி ஒழித்தார் என்பதும், சிதைத்தார் என்பதும் உண்மையான ஒன்று.

பெரியார் குறித்த கவிஞர் காசி ஆனந்தன் கவிதைபெரியார் ஒருவர்தான் பெரியார்அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார்பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டிதமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார்மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்மனிதனைத் தீண்ட மறுத்தானே!நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்நரிகளின் வாலை அறுத்தானே!கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரைகிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரைமண்ணோடு பெயர்த்த கடப்பாரை!வானம் உள்ள வரை வையம் உள்ள வரையார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார்
காசி அண்ணனும் பாவம். தமிழ்நாட்டில் இருந்து இவர்களின் வலைக்குள் மாட்டுப்பட்டுவிட்டார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. மேலும் சில கவிதை வரிகளை இணைத்த இளங்கோவுக்கும் நன்றி.

கார்ல் மார்க்ஸ், பிடல் காஸ்ரோ, சே குவேரா, (சோகிரடீஸ்?) --> இவர்கள் எல்லோரும் மக்கள் மீது கொண்ட காதலால் தாடி வளர்த்தவர்கள். :D

பிடல் கஸ்ரோவின் 50 வருட ஆட்சி என்பது மக்கள் மீது கொண்ட காதலா? அல்லது பதவி மீது கொண்ட காதலா என்று தான் என்னும் புரியவில்லை.

Link to comment
Share on other sites

இளைஞன், நீங்கள் கவிஞராக இருக்கலாம். எனது கருத்தை மறுதலிக்க முனைந்தால்....

சிறிய உதாரணங்களுடன்...சாவகச்சேரி எம்.பி சுமார் 30 வருடங்களாக அல்லது உலக பரதேசி டக்லஸ் தேவானந்தா இப்படி பலர் என் மனதில்.அதற்காக சொல்கிறேன் தாடி வைத்தவர்கள் எல்லாம் தாகூர் ஆக முடியாது என்று. மக்கள் மீது காதல் கொண்டவர்கள் மக்கள் மீது அன்பு கொண்டவர்கள் மாண்பு மிகு அண்ணா பிரபாகரன், பிடேல் காஸ்ரோ.

ஓமுங்கோ மக்களால் தெரியப்பட்ட நானுங்கோ

எனக்குங்கோ கிடைத்ததோ கள்ள வோட்டுங்கோ

நானோ யாழ்ப்பாட்ணதானுங்கோ

நானு லெபனிசு ரெயினிங்கோ

ஆனா எனக்கு சின்ன தாடிங்கோ

எனக்கு மம்மி தாடி கால் மாக்ஸ்சுங்கோ

எனக்கு டாடி தாடி லெலினுங்கோ

ஆனா நான் சுத்த கேடியிங்கோ

எனக்கு பிடித்தது சாப்பாட்டு பாசலுங்கோ

நான் நான் லெனினா இல்லை கால் மாக்(கக்குஸ்சா)

இப்படி இளைஞன் எழுதவா அல்லது இன்னும் வேண்டுமா................

இப்படி பலர் மக்கள் மீது காதல் கொண்டவர்களா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.