Jump to content

Question

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கைக்கான சுற்றுலா விசா எத்தனை நாள்?

முன்னர் இலங்கைக்கு 30 நாட்கள் சுற்றுலா மட்டுமே கொடுத்தார்கள்.

ஆனாலும் இந்தவருட தொடக்கத்தில் கூடிய நாட்கள் நின்றால் இன்னும் இன்னும் பணம் செலவு செய்வார்கள் என்று 180 நாட்களுக்கு விசா கொடுத்தார்கள்.

30 நாட்களுக்கும் 180 நாட்களுக்கும் விரும்பிய மாதிரி எடுக்கக் கூடிய மாதிரி இருந்தது.

பத்திரிகைகள் இணையங்களிலும் இதுபற்றி பலரும் அலசி ஆராந்தனர்.

இப்போது இலங்கையில் 30 நாட்களுக்கு மேல் தங்க விரும்பும் பார்வையாளர்இ நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம். குறுகிய கால விசிட் விசாஇ வருகையின் தேதியில் இருந்து அதிகபட்சமாக 270 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம்இ மூன்று தொடர்ச்சியான நிகழ்வுகளில் 30 நாட்கள்இ முதல் நீட்டிப்பில் 60 நாட்கள் மற்றும் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிகழ்வுகளுக்கு 90 நாட்கள்.

இப்படி மாற்றியுள்ளார்கள்.

நண்பர் ஒருவர் இலங்கை போவதற்கு 40 நாட்கள் ரிக்கட்டும் எடுத்து போவதற்கு விசாவுக்கு விண்ணப்பித்தால் 30 நாட்களுக்கு மட்டுமே கொடுத்தார்கள்

சரி இனி ரிக்கற்ரை மாற்றி நட்டப்படுவதை விட இலங்கை போய் விசாவை 100 கட்டி மாற்றலாம் என்று சொல்லி கவலைப்பட்டார்.

இது இலங்கை போகிறவர்களுக்கு உதவலாம் என்பதற்காக பதிகிறேன்.

16 answers to this question

Recommended Posts

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை அரசினது போலவே அச்சு அசலாக தளங்கள் உலாவுகின்றன. சகல விபரங்களையும் வாங்கி, $50 க்கு பதிலாக $70 கேட்பார்கள். அட தீடீரெண்டு கூட்டிப் போட்டார்கள் போல என்று அதை கட்ட, அவர்கள் கொடுத்த விபரத்தை அப்படியே அரச தளத்தில் போட விசாவும் வந்து விடும்.

ஏமாந்தவர், பார்டிகளில், $50 இல்லை, $70. அட நேற்றுத் தான் எடுத்தேன், விசர் கதை கதையாத என்று அடம் பிடிப்பார்.

அதே கதை தான் 30 | 180 ம். 

  • Like 1
  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, Nathamuni said:

நாதம்.  ஜேர்மனியில்  முன்பு இரண்டு இடங்களில் இருந்த இலங்கை தூதரகம்  இப்போது சின்னன்   சின்னாக. 47    இடங்களில் இருப்பதாக  இணையதளம் காட்டுகிறது   முன்பு 350 கிலோமீட்டர்  போக வேண்டும் இப்போது 15 கிலோமீட்டர் இருக்கிறது   ஏன் இப்படி அதிகம்  வைத்திருக்கிறார்கள்   என்று புரியவில்லை   ? 

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, Nathamuni said:

அதே கதை தான் 30 | 180 ம். 

நாதம் இப்போ 30 ஆ 180 ஆ சரி?

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

அவர்கள் கொடுத்த விபரத்தை அப்படியே அரச தளத்தில் போட விசாவும் வந்து விடும்.

ஏமாந்தவர், பார்டிகளில், $50 இல்லை, $70. அட நேற்றுத் தான் எடுத்தேன், விசர் கதை கதையாத என்று அடம் பிடிப்பார்.

இவர்களை என்னவென்று சொல்வது

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இவர்களை என்னவென்று சொல்வது

அவர்கள் பணத்தை வங்கிக் கொண்டு ஓடாத வரை..... வியாபாரிகள் எண்டு. 😁

கனடா விசா யூகே விசா போம் நிரப்பித் தர எவ்ளொ தெரியுமா?

Edited by Nathamuni
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன @Nathamuni அப்படியே அச்சொட்டாக இலங்கை தூதுவராலய அதிகாரி மாதிரி டப் டப் என பதில் கொடுக்கிறீர்கள். 🤣🤣🤣.

பிகு

ச்…சும்மா…பகிடி🙏

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, Kandiah57 said:

நாதம்.  ஜேர்மனியில்  முன்பு இரண்டு இடங்களில் இருந்த இலங்கை தூதரகம்  இப்போது சின்னன்   சின்னாக. 47    இடங்களில் இருப்பதாக  இணையதளம் காட்டுகிறது   முன்பு 350 கிலோமீட்டர்  போக வேண்டும் இப்போது 15 கிலோமீட்டர் இருக்கிறது   ஏன் இப்படி அதிகம்  வைத்திருக்கிறார்கள்   என்று புரியவில்லை   ? 

கந்தையா இது பிழையான தகவலாக இருக்கலாம்.

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, Nathamuni said:

180 இல்லை என்று நிணைக்கிறேன்.

30 | 90 நாட்கள் தான். 

https://www.eta.gov.lk/slvisa/visainfo/fees.jsp?locale=en_US

நாதம் இந்த வருட தொடக்கத்தில் 180 நாளாக மாற்றினார்கள்.இந்த செய்தி பல பத்திரிகைகளிலும் வந்தது.யாழிலும் இது பற்றி விவாதித்தோம்.

நானும் சித்திரையில் போனபோது 37 நாட்களுக்கு ரிக்கட் 50 டொலர் கட்டி எடுத்தேன்.பிள்ளைகள் 20 நாட்கள் மட்டுமே நின்றபடியால் 30 நாட்கள் எடுத்தார்கள்.இரண்டுக்குமே 50 டாலர்கள்.

எனது நண்பரும் மனைவியும் போகப்போவதாக சொன்னார்கள்.ஓ நல்லதா போச்சு.கொஞ்சநாள் கூட நின்றுவிட்டு வரலாம் என்று 40 நாள்வரை ரிக்கட்ரையும் முதலே எடுத்துவிட்டார்கள்.

இப்போ சத்தமே இல்லாமல் 30 நாட்களாக மாற்றியுள்ளனர்.

இதில் நான் சொல்லி அவர் ரிக்கட் போட்டபடியால் எனக்கு ஒரு குற்ற உணர்வாக உள்ளது.

15 hours ago, goshan_che said:

என்ன @Nathamuni அப்படியே அச்சொட்டாக இலங்கை தூதுவராலய அதிகாரி மாதிரி டப் டப் என பதில் கொடுக்கிறீர்கள். 🤣🤣🤣.

பிகு

ச்…சும்மா…பகிடி🙏

என்ன தம்பி நீங்களும் போய்வந்த மாதிரி இருக்கு.

ஆனாலும் விசாபற்றி மூச்சும்விட மாட்டேன் என்று அடம்பிடிக்கிற மாதிரி இருக்கே.

இனி போகிறவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதாலேயே இந்த திரியை தொடங்கினேன்.

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போ சத்தமே இல்லாமல் 30 நாட்களாக மாற்றியுள்ளனர்.

இங்கிருந்து செல்லும்போது 30  நாட்கள் தான் தருவார்கள்.

அங்கு சென்ற பின்னர் 90  நாட்களுக்கு நீடிக்கலாம்

  • Like 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, வாத்தியார் said:

இங்கிருந்து செல்லும்போது 30  நாட்கள் தான் தருவார்கள்.

அங்கு சென்ற பின்னர் 90  நாட்களுக்கு நீடிக்கலாம்

நான் மேல போட்ட லிங்கில் விபரமாக உள்ளதே.

30 | 90 டபிள் என்றி $50.

நாம் மட்டுமே 90 கேட்போம். ஏணையோர் 30 தான்.

உள்ள போனபின் யாழ் கச்சேரீல போய் இல்லாத தாத்தா, பாட்டிய பராமரிச்சு பார்க்கோணும் என்று பிறப்புச் சான்றிதழ் காட்டினால் ஒரு வருசம் அடிச்சு தருவினம். கணக்க செலவாகாது. 

Edited by Nathamuni
  • Thanks 2
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன தம்பி நீங்களும் போய்வந்த மாதிரி இருக்கு.

ஆனாலும் விசாபற்றி மூச்சும்விட மாட்டேன் என்று அடம்பிடிக்கிற மாதிரி இருக்கே.

இனி போகிறவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதாலேயே இந்த திரியை தொடங்கினேன்.

இல்லையண்ணை கொவிட்டுக்கு பிறகு இன்னும் போகவில்லை. 

இங்கே லண்டனில் இருக்கும் முதிய உறவுகள் ஒருவர் மாறி ஒருவர், ஒவ்வொரு டிசைனில் ஒவ்வொரு தலையிடியை கொடுப்பதால் - சேர்ந்தால் போல் ஒரு 6-8 கிழமை போய் நிற்பது கடினமாகி விட்டது.

பார்ப்போம் ஒரு 4 கிழமை பிளான் இருக்கு.

டிக்கெட் விக்கிற விலைக்கு 4 கிழமைக்கு மேல் நிற்காட்டில் பிரயோசனமில்லை

  • Haha 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வாத்தியார் said:

இங்கிருந்து செல்லும்போது 30  நாட்கள் தான் தருவார்கள்.

அங்கு சென்ற பின்னர் 90  நாட்களுக்கு நீடிக்கலாம்

இந்த வருட முற்பகுதியில் 50 டாலருக்கு 30-180 நாளாக மாற்றியிருந்தார்கள்.

இப்போ சத்தமே இல்லாமல் 30 நாட்கள் மட்டுமே.

அங்கே போய் விசாவை புதுப்பிக்க 100 டாலர்கள்.

2 hours ago, Nathamuni said:

நான் மேல போட்ட லிங்கில் விபரமாக உள்ளதே.

30 | 90 டபிள் என்றி $50.

நாம் மட்டுமே 90 கேட்போம். ஏணையோர் 30 தான்.

உள்ள போனபின் யாழ் கச்சேரீல போய் இல்லாத தாத்தா, பாட்டிய பராமரிச்சு பார்க்கோணும் என்று பிறப்புச் சான்றிதழ் காட்டினால் ஒரு வருசம் அடிச்சு தருவினம். கணக்க செலவாகாது. 

நாதம் அமெரிக்காவில் மட்டும் Multiple விசா கொடுத்தார்கள்.100$.

2015-2017இல் போனபோது 70 நாட்கள் நின்றேன்.

இப்போ அது காலாவதியாகிவிட்டது.

இந்த தடவை 180 நாட்கள் என்றபடியால் இந்த விசாவுக்கு முயற்சி செய்யவில்லை.

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இல்லையண்ணை கொவிட்டுக்கு பிறகு இன்னும் போகவில்லை. 

இங்கே லண்டனில் இருக்கும் முதிய உறவுகள் ஒருவர் மாறி ஒருவர், ஒவ்வொரு டிசைனில் ஒவ்வொரு தலையிடியை கொடுப்பதால் - சேர்ந்தால் போல் ஒரு 6-8 கிழமை போய் நிற்பது கடினமாகி விட்டது.

பார்ப்போம் ஒரு 4 கிழமை பிளான் இருக்கு.

டிக்கெட் விக்கிற விலைக்கு 4 கிழமைக்கு மேல் நிற்காட்டில் பிரயோசனமில்லை

விளையாட்டுகள் மும்மரமாக நடந்த போது ஆளைக் காணவில்லை.

விடுமுறை போய்விட்டீர்கள் என எண்ணிவிட்டேன்.

  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, ஈழப்பிரியன் said:

விளையாட்டுகள் மும்மரமாக நடந்த போது ஆளைக் காணவில்லை.

விடுமுறை போய்விட்டீர்கள் என எண்ணிவிட்டேன்.

இல்லை அண்ணை. யாழ் அலுப்படித்து விட்டது என்று திண்ணையில் சொல்லி விட்டுத்தான் விலகி இருந்தேன்.

  • Haha 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, goshan_che said:

இல்லை அண்ணை. யாழ் அலுப்படித்து விட்டது என்று திண்ணையில் சொல்லி விட்டுத்தான் விலகி இருந்தேன்.

ஓ சரிசரி .திண்ணையில் நேரம் போடுவது மிகமிக குறைவு.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.