Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3

14 AUG, 2023 | 04:36 PM
image
 

வைத்தியர்கள் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு வைத்தியர்களை இந்நாட்டுக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் விதித்துள்ள அதிக வரிப்பணமும் தற்போது நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பிரதான காரணம் எனவும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் வைத்தியசாலை நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் குணரத்ன தெரிவித்தார்.

வைத்தியர்களின் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில் இருவர் இருந்த இடத்தில் ஒருவரையும் அல்லது மூவர் இருந்த இடத்தில் இருவரையும்  பணிக்கமர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என விசேட வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/162353

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்களின் எண்ணிக்கை வெளியானது!

15 AUG, 2023 | 05:29 PM
image
 

கரவனெல்ல, தெஹியத்தகண்டிய, மஹாஓயா மற்றும் கல்முனை பிரதேசத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் மயக்க மருந்து நிபுணர்கள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

12 மாத காலப் பகுதியில் 842 சிரேஷ்ட வைத்திய அதிகாரிகளும் 274 விசேட வைத்தியர்களும் 23 அவசர சிகிச்சை நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என சங்கத்தின் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க  ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்கு அரசு உடனடியாக உரிய தீர்வைக் காணாவிட்டால் சுகாதாரத் துறையே கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/162447

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுகாதாரத் துறை உலகம் முழுவதும் வீழ்ச்சி அடையும் நிலையில்த் தான் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/8/2023 at 08:35, ஏராளன் said:

வைத்தியர்கள் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு வைத்தியர்களை இந்நாட்டுக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

 

வெளிநாட்டு வைத்தியர்களை அழைத்து இலங்கையில் வேலை செய்யுங்கோ.

ஆனால் சம்பளத்தையும் சலகைகளையும் உங்கள் உங்கள் நாடுகளில் இருந்தே பெற்றுக் கொள்ளுங்கள்.

எமது அரசிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாட்டில் 3000 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை

DOCTOR.jpg

நாட்டில் 3000இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில், 600இற்கும் அதிக விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறையால் சில வைத்தியசாலைகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 வைத்தியர்கள் வைத்திய சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதனூடாக விசேட வைத்திய நிபுணர்களுக்கு நிலவும் பற்றாக்குறை பிரச்சினை ஓரளவு நிவர்த்திக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியமையினால் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வருட காலத்திற்குள் 274 வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மையில் சுட்டிக்காட்டியது. குறித்த காலப் பகுதிக்குள் விசேட தரங்களை சேர்ந்த 842 வைத்திய அதிகாரிகளும் நாட்டை விட்டுச் சென்றுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/269170

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாதியர் சேவையில் 30,000 வெற்றிடங்கள்

தாதியர் சேவையில் 30,000இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மெதவத்த தெரிவித்துள்ளார்.

தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று வருடங்களாக உயர் மட்ட தாதியர்கள் பயிற்சிக்கு உள்வாங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Nurse.jpg

இதன் காரணமாக மூன்று வருடங்களுக்குள் வைத்தியசாலையின் செயற்பாட்டில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பினை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

https://thinakkural.lk/article/269173

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓய்வுபெற்ற விசேட வைத்தியர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

19 AUG, 2023 | 11:04 AM
image
 

சுகாதாரத் துறையின் தேவைகளை கருத்தில் கொண்டு ஓய்வு பெற்ற விசேட வைத்திய நிபுணர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதாரத் துறையில் கிட்டத்தட்ட ஐந்நூறு விசேட வைத்தியர்களின் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அந்த வெற்றிடங்களுக்காக இவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜசூரிய தெரிவித்தார்.

கொழும்பிற்கு வெளியே உள்ள தூரப் பிரதேசங்களில் விசேட வைத்தியர்களுக்கான வெற்றிடங்கள் அதிகம் காணப்படுவதாகவும் ஓய்வுபெற்ற விசேட வைத்திய நிபுணர்கள் பணிக்கு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு சகல வசதிகளையும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/162691

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வட மாகாணத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் வெளியேற்றம்; சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி

Published By: DIGITAL DESK 3

19 AUG, 2023 | 01:40 PM
image
 

வட மாகாணத்தில் ஒருவருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வட மாகாணத்தில் ஒரு வருட காலப்பகுதியில் 50 இற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் வெளிநாட்டு கல்விக்காக சென்று வராதவர்களும் உள்ளனர். அத்துடன் 20 தாதியர்களும் வெளியேறியிருக்கின்றனர்.

வைத்தியர்களும் தாதியர்களும் வெளியேறுவது எமக்கு ஒரு சவாலான விடயம். அத்துடன் அண்மைக்காலத்தில் கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கு ஆரம்பிக்கப்பட வேண்டிய தாதிய பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவில்லை. 

இவ்வருடம் தாதிய கல்லூரியில் படித்து வெளியேறுபவர்கள் இருந்தாலும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தாதிய பயிற்சிகள் இடம்பெறாத நிலை காணப்படும். ஆகவே, இந்த பகுதிக்கு புதிய தாதிகள் வரமாட்டார்கள். இதனால் நாம் சிக்கலான சவாலை எதிர்கொள்வோம்.

அத்துடன், வெளிநாடுகளில் தாதிகளை வரவேற்பதனால் அவர்கள் வேலையை முடிவுறுத்தி வெளியேறலாம். எனவே, எதிர்வரும் காலம் சவாலை எதிர்கொள்ளும் காலமாக அமையும்.

அத்துடன், இலங்கை பூராகவும் மருந்து தட்டப்பாடு ஏற்பட்டு வருகின்றது. இருந்த போதிலும் 90 வீதத்திற்கும் அதிகமான மருந்துகள் அந்தந்த வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

வவுனியா வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு ஒரு நாளைக்கு 40 பேருக்கு செய்யப்படுகின்றது. இதனை செய்வதற்கான திரவத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் தற்போது அது தேவையான அளவு உள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் மருந்து தட்டுப்பாடு வட மாகாணத்தில் அனைத்து வைத்தியசாலையிலும் ஏற்பட்டிருந்தது. இதனால் பொது மக்கள் அசௌகரியத்தினை சந்தித்திருந்தனர். 

தற்போது நிலைமை ஓரளவு சுமூகமாகி வருகின்றது. இருந்தபோதிலும் ஒரு சில கிளினிக் மருந்துகள் மற்றும் விசேட வைத்தியத்திற்காக வழங்கப்படும் மருந்தை பெற்று வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. இதற்கு வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் நிர்வாகத்தினர் நன்கொடையாளர்களிடம் மருந்துகளை பெற்று சிகிச்சையை வழங்கி வருகின்றளர் எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/162704

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசு காணாது எண்டு உள்ளூர் காரன் கிளம்ப, வெளியூர்காரனை எப்படி கொண்டரப்போகினம்?

காசு?

கடைசீல இந்தியாவில இருந்து இறக்கப் போயினமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாட்டை விட்டு வெளியேறவுள்ள 5 ஆயிரம் வைத்தியர்களை தக்க வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுங்கள்! - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

21 AUG, 2023 | 05:18 PM
image
 

(எம்.வை.எம்.சியாம்)

பிரச்சினைகள் நெருக்கடிகளாக மாறும் வரையில் அதிகாரிகள் பொறுப்பில்லாமல் தூங்கிக்கொண்டிருந்தனர். வாய் இருக்கிறது என்பதற்காக வெறுமனே புலம்புகின்ற சுகாதார அதிகாரிகள் குறைந்தபட்சம் வெளியேறவுள்ள 5 ஆயிரம் வைத்தியர்களை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்த நிலைமையை இழுத்தடிப்பு செய்யாமல் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விசேட வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பிரச்சினைகள் நெருக்கடிகளாக மாறும் வரையில் அதிகாரிகள் பொறுப்பில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தனர். 

வெளிநாடு சென்றுள்ள வைத்தியர்களின் சேவையை இரத்து செய்வதாகவும் அவர்களை கறுப்பு பட்டியலில் சேர்ப்பதாகவும் பேசும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர்கள் இது தொடர்பில் தலையீடு செய்யாமல் அவர்களை அனுப்பி விட்டு பார்த்துக்கொண்டு இருந்தனர். 

இந்த நிலைமை தீவிரமடைந்து முழு சுகாதார துறையும் பிளவுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி இழுத்தடிப்பு செய்யாமல் பிரச்சினைகளை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

கடந்த வருடம் சுமார் 1,500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி அவர்கள் சென்றுள்ள நாடுகளில் வைத்திய தொழில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் சுமார் 5 ஆயிரம் வைத்தியர்கள் முதன்மை பட்டப்படிப்பு மற்றும் முதுமானி பட்டப்படிப் புகளை மேற்கொள்ள அந்த நாட்டுக்காக சென்று மருத்துவ தொழில் ஈடுபடுவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

ஆகவே வைத்திய துறையில் தெளிவாக திறமைசாலிகள் வெளியேறும் நிலையே இதுவாகும். நாட்டில் வைத்திய துறையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை வேறு எந்த துறையிடனும் ஒப்பிட முடியாது. இது முக்கியமாக நிலையாகும். 

மருத்துவத்துறைக்கு ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் முழுமையாக வைத்தியராகுவதற்கு சுமார் 7 வருடங்கள் செல்கின்றன. விசேட வைத்தியராகுவதற்கு 10 அல்லது 12 வருடங்கள் செல்கின்றன. 

இன்று தீர்வை பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்தால் பதிலை பெற்றுக்கொள்வதற்கு நீண்டகால காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. 

வாய் இருக்கிறது என்பதற்காக வெறுமனே புலம்புகின்ற சுகாதார அதிகாரிகள் குறைந்தபட்சம் வெளியேறவுள்ள 5 ஆயிரம் வைத்தியர்களை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுங்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/162872



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.