Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
19 AUG, 2023 | 09:10 PM
image
 

கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் உயிரை மாய்த்துள்ளார்..

கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த இந்த இளைஞன் இன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்

2020 க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றவர் இவர். மொரட்டுவ பல்கலைகழக அனுமதி கிடைத்து, அங்கு கல்வி பயில சென்றிருந்தார்.

https://www.virakesari.lk/article/162729

  • கருத்துக்கள உறவுகள்
Posted

19 வயது பெண்ணை காதல் செய்த 54 வயது நபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இங்கே 22 வயது முதன்மை மாணவன் தற்கொலை செய்கின்றார். இரண்டும் வேறுபட்ட இடங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்கள். ஆனால், எம்மவர்கள் இவை மூலம் எதையாவது கற்றுக்கொள்வார்களா?

அவன் பிரச்சனை என்னவோ.. ஆனால், முதன்மை மாணவன் தற்கொலை செய்யும் அளவுக்கு அவன் மனம் பலவீனமாக உள்ளது. எங்கள் கல்வித்திட்டம் முறையானது என்றால் முதன்மை மாணவன் தற்கொலைக்கு செல்ல மாட்டான்? அல்லது முதன்மை மாணவனாக வந்திருக்க மாட்டான்?

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

19 வயது பெண்ணை காதல் செய்த 54 வயது நபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இங்கே 22 வயது முதன்மை மாணவன் தற்கொலை செய்கின்றார். இரண்டும் வேறுபட்ட இடங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்கள். ஆனால், எம்மவர்கள் இவை மூலம் எதையாவது கற்றுக்கொள்வார்களா?

அவன் பிரச்சனை என்னவோ.. ஆனால், முதன்மை மாணவன் தற்கொலை செய்யும் அளவுக்கு அவன் மனம் பலவீனமாக உள்ளது. எங்கள் கல்வித்திட்டம் முறையானது என்றால் முதன்மை மாணவன் தற்கொலைக்கு செல்ல மாட்டான்? அல்லது முதன்மை மாணவனாக வந்திருக்க மாட்டான்?

 

தென்கிழக்கு ஆசியாவில். இலங்கையில் தற்கொலை மரணங்கள் அதிகம் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

இதன் காரணம், தென் பகுதியோ, வட பகுதியோ, அரச பயங்கரவாதத்தினால் மரணம் எப்போதும் வரலாம் என்கிற மனநிலையினை வளர்த்துக்கொண்டதால் போலவோ தெரியவில்லை.

Posted

கணிதப்பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் தற்கொலை!

கணிதப்பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் தற்கொலை!

 

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மாணவர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி, விவேகானந்தநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் தேனுஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன், 2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மனவேதனையின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://tamil.adaderana.lk/news.php?nid=176669



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.