Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

பகுத்தறிவால் பகுத்தரிய வேண்டிய பகுத்தறிவு.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வேதம் ஓதி, பகுத்தறிவு பேசி, சுயமுரண்பட்டு.....

இவை தாம் ஈ வெ ராமசாமி என்பவர் பேசிய.. "பகுத்தறிவுகளின்" சாரம்சம். அவற்றுள் பலவற்றுள் அவரே முன்னுக்குப் பின் சுய முரண்படுகிறார். அதுமட்டுமன்றி யாழ் களத்தில் பேச தடைசெய்யப்பட்ட சொற்களும் அவர் பாவிச்ச வடிவத்தில் இருப்பதால்.. அவருக்காக தணிக்கை செய்யாமல் விடவும்.

தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும்.. இந்து மதத்தின் மீது காங்கிரஸின் மீதும் கொண்டிருந்த வெறுப்பும்.. தான் கன்னடன் என்ற இறுமாப்பும்.. இவரின் கருத்துக்களில் ஆழப்பதிந்திருப்பதைக் காணலாம்.

இடையிடையே தமிழர்களை சமாளிக்க தனது இருப்பை தமிழகத்தில் தக்க வைக்க.. ரஜனி ஸ்ரைலில்.. தத்துவம் பேசி தமிழ் மக்களை நெகிழ்விப்பத்தையும் காணலாம். யாழ் களத்திலும் இந்த பகுத்தரிவு வாதங்கள் நிறைந்து வருவதும்.. யாழ் கள நிர்வாகம் பிரச்சார மயமாக்கப்பட்ட வடிவில் அதை இங்கு அனுமதித்து வருவதும் அதற்காக ஒத்துழைப்பதும் கண் கூடு. மக்கள் சுயமாக இவை குறித்து சிந்திக்கவும் பகுத்தறியவும்.. பகுத்தரிவு வாதத்தின் உண்மையைத் தன்மையை இனங்காணவும் என்று இவை இங்கிடப்படுகின்றன.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை

இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், "தமிழ் மொழி 3000 - 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?

தமிழால் என்ன நன்மை?

தமிழ் தோன்றிய 3000 - 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகு தூரம்

"தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக... தமிழ்ப் புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேதான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள் வரை, இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கு இல்லாதவர்களாகவே ஆகி விட்டார்கள்.

பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம்

அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.

தொல்காப்பியன் மாபெரும் துரோகி

தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்து விட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில், தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

- பெரியார் எழுதிய "தமிழும் தமிழரும்' என்ற நூலிலிருந்து.

தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது?

நாட்டுக்கு "சுதந்திரம்' கிடைத்து இன்றைக்கு 20ஆவது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, "இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்'. இதுதானா? அய்யோ பைத்தியமே! தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் "சுவை' அல்லாமல், அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை, பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன்.

சிலப்பதிகாரம்

இது விபச்சாரத்தில் ஆரம்பித்து, "பத்தினி'த்தனத்தில் வளர்ந்து, முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷமாகும்.

வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா ?

சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு தமிழர் - முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ, இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?

பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?

சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

- பெரியாரின் கருத்துகள், "அறிவு விருந்து' என்ற நூலிலிருந்து.

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்

...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு - காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை - ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே - என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.

- "தாய்ப் பால் பைத்தியம்' என்ற நூலிலிருந்து.

கற்பு ஒழுக்கம் என்பது பூச்சாண்டி !

உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும், எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம் என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். அதாவது குழந்தைகளைப் பயமுறுத்த பெரியவர்கள் "பூச்சாண்டி, பூச்சாண்டி' என்பது போல், இவை எளியோரையும் பாமர மக்களையும், வலுத்தவர்களும் தந்திரக்காரர்களும் ஏமாற்றச் செய்த ஒரு பெரும் சூழ்ச்சியேயாகும்.

- "மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்' என்ற நூலிலிருந்து.

பெண்களும் கற்பும்

பெண் தன்னைப் பற்றியும், தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ள, தகுதி பெற்றுக் கொள்ள விட்டு விட வேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.

- 3.11.1935 "குடி அரசு' இதழ்

பெண்களுக்கு அறிவுரை

ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும். ஜிப்பா போட வேண்டும். நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி, அலங்கார வேஷங்கள்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். பெண்கள் எல்லாம் ஆறடி ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது, அநாகரீகமும் தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்.

- "பெரியார் ஒரு வாழ்க்கை நெறி' என்ற நூலிலிருந்து.

உண்மையான சமரசம்

ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது.

- "தந்தை பெரியார் அறிவுரை 100' என்ற நூலிலிருந்து.

பெண்ணடிமை ஒழிய...

பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும். திருமணம் என்பது மனிதத் தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது... திருமணம் என்பது ஆண்களுக்கு நன்மையாகவும், பெண்களுக்கு கேடாகவும் இருக்கிறது. பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை... எனவே, பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல. மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்.

பெண் விடுதலை

...கற்புக்காக பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான, நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்... கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கிற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

-"உயர் எண்ணங்கள்' என்ற நூலில் பெரியார்

ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது

...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. இதன் பலாபலன் எப்படியிருந்தாலும் இந்தப்படி சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானம் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மை யறிந்தும் வேறு ஏதாவதொரு காரியத்திற்காக வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றோதான் கருத வேண்டியிருக்கிறது.

...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.

அடிமைத்தனம்

மக்களின் அன்பும், ஆசையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அது இன்னவிதமாக, இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில், ஆசை என்பது ஜீவ சுபாவமானது. அதை ஏதோ நிர்பந்தத்திற்காக தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தன மேயாகும்.

கற்பு என்பது புரட்டு

சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்கு, சிறிதும் தேவையில்லாததேயாகும். எப்படி கற்பு என்ற வார்த்தையும் அதைப் பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமை கொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகும் என்றும் சொல்லுகிறோமோ, அது போலவே விபச்சாரம் என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும், பெண்களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும் காணப்படுவதோடு, அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமானதென்றும் கூட விளங்கும்.

ஒழுக்கம் அவசியமில்லை

சாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும், இந்திரியச் செயலையும் கட்டுப்படுத்தும்படியானதான கொள்கைகளை, ஒழுக்கங்களை, கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அது செலாவணியாகுமா? செலாவணியாவதாயிருந்தாலும், அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளை கவனிக்க வேண்டாமா என்றுதான் கேட்கிறோம்.

கர்ப்பத்தின் விளைவு

பெண்கள் வியாதியஸ்தர்கள் ஆவதற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும், அகால மரணமடைவதற்கும் கர்ப்பம் என்பதே மூலகாரணமாயிருக்கிறது. பெண்கள் விடுதலைக்கும், சுயேச்சைக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்லுகின்றோம்.

- "பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூலிலிருந்து.

பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால், முதலாவதாக அவர்களை கற்பு என்னும் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும். கட்டுப்பாட்டிற்காகவும், நிர்பந்தத்திற்காகவும் கற்பு ஒருக்காலும் கூடாது! கூடாது!

" தந்தை பெரியார் " சமுதாய சீர்திருத்தம் என்ற நூல் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

கேள்வி : பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்?

பதில் : கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபச்சார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலேயே, சட்டப்படி முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள்.

" தந்தை பெரியார் " குடிஅரசு 29.10.1933 - "விடுதலை' வெளியிட்ட தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்

கர்ப்பம் இடையூறானது !

""...பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாய் இருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கிறது.

...புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும், பெண்சாதி ஒரு புருஷனைத் தவிர வேறு எந்தப் புருஷனையும், எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாய் இருக்கிறது... இதுவரை கூறி வந்தவைகளாலும், இன்னும் பல காரியங்களாலும், பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது அவசியமாகும்.

- குடியரசு கட்டுரை 1.3.1931

""...இந்தக் "கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தானே, கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது...

"தந்தை பெரியார் பெங்களூரில் நிகழ்த்திய சொற்பொழிவு - விடுதலை 28.6.1973

நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள்?

-தந்தை பெரியார் "வாழ்க்கைத் துணை நலம்' எனும் புத்தகத்திலிருந்து 1938ஆம் ஆண்டு பதிப்பு

ஆண்களின் சூழ்ச்சி !

...அன்றியும் ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால், பெண்களின் அடிமைத்தனம் வளர்வதுடன், பெண்கள் என்றும் விடுதலைப் பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காக பாடு படுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம், பெண்களை ஏமாற்றுவதற்கு செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.

பெண் விடுதலை

...பெண்கள், பிள்ளைபெறும் தொல்லையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர, வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்கு கல்லுப் போன்ற உறுதியுடையதாய் இருக்கிறது.

தவிர, "பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால், உலகம் விருத்தியாகாது; மானிட வர்க்கம் விருத்தியாகாது' என்று தர்ம நியாயம் பேச சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகா விட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிடவர்க்கம் பெருகா விட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன நஷ்டம் உண்டாகி விடும்- என்பது நமக்குப் புரியவில்லை.

-"குடியரசு' (12.8.28)

பத்தினி என்பது முட்டாள்தனம்

பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள் தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.

- "விடுதலை' (4.5.73)

தேசிய குற்றம்

ஒரு பெண்ணை தாய், தகப்பன், பி.ஏ. படிக்க வைத்து, ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து, அந்தப் பெண் சமையல் செய்யவும், குழந்தை வளர்க்கவும், நகை துணி அலங்காரங்களுடன் மக்களின் கவனத்தை ஈர்க்கவும் செய்தால், பி.ஏ. படிக்க வைத்த பணம் வீண் என்பதோடு, அதற்காக சர்க்கார் செலவழித்த மக்கள் வரிப் பணமும் வீண்தானே? இது தேசிய குற்றமாகாதா?

ஆண் போல நடக்க வேண்டும்

...எனவே பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழையாமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இட வேண்டும். உடைகளும் ஆண்களைப் போல கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா பெண்ணா என்று மற்றவர்கள் கண்டு பிடிக்காத மாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்ணும் தன்னை "பெண் இனம்' என்று கருத இடமும், எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது.

- திருப்பத்தூரில் (15.9.46) பெரியார் சொற்பொழிவு

சுயேச்சைக்கு விரோதம்

...ஆகையால் ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு, கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் "பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும்' என்கிறோம்.

- "குடியரசு' (6.4.1930)

திருமணம் பெண்ணை அடிமையாக்குகிறது

புருஷன் - மனைவி சம்பந்தமே, எஜமான் அடிமை சம்பந்தமே ஒழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்பு முறை சம்பந்தமோ அல்ல. ஒரு பெண்ணை, ஒரு ஆணுக்கு அடிமையாக்குவது தவிர்த்து திருமண முறையில், புருஷன் - மனைவி முறையில் வேறு தத்துவம் இல்லவே இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன்.

""நீ என் மனைவி; நானே உனக்கு கணவன்; நீ என்னைத் தவிர வேறு யார் மீதும் காதல் கொள்ளக் கூடாது'' என்று ஒரு தலைமகன் கூறும் தத்துவத்தை - ஒரு தலைவி அப்படியே ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் அது அடிமைப் புத்திதானே? பெண்களுக்கு உரிமை வேண்டுவோர், இத்தத்துவத்தைக் கொண்டுள்ள திருமண முறைகளை ஒழித்துக் கட்ட முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டாமா?

கண்ணகி பற்றி..

"".....கோவலன் சிலம்பு வைத்திருப்பது ராஜாவினுடையது - என்று பொய்க் குற்றம் சாட்டப்பட்டதன் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாத அரசன், கோவலனை வெட்டிக் கொல்லச் சொல்லுகிறான்; கோவலன் இறந்து போகிறான். இதை அறிந்த அம்மாள் கண்ணகிக்குப் பெரும் கோபம் வந்து, நிரபராதிகளான மதுரை மக்களைச் சுட்டுச் சாம்பலாக்கினாள்... கோவலன் ஒழுக்கமற்றவன்; தாசி ஒழுக்கமற்றவள்; கண்ணகி மடப்பெண்.

""அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக்கரசிகளாய் இருக்கும் போது, கண்ணகி கற்புக்கு மாத்திரம் முட்டாள்தனம் வேண்டுமா? மற்றும் இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி? மார்பைக் கையால் திருகினால் அது வந்து விடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர, வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பை (முலை) வீசி எறிந்தால், அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் "பாஸ்பரஸ்' இருக்குமா? இந்த மூடநம்பிக்கை கற்பனையானது, என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூற முடியுமா?

""அக்கினி பகவானுக்கு கண்ணகி, "பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்களைச் சுடு!' என்று கட்டளை இட்டாளாம். அதுபோல் பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்கள் சாம்பலானார்களாம்; மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்! இதுதான் கண்ணகியின் கற்பின் பெருமையா? அவள் புத்தியின் பெருமையா? அக்கினி பகவானுக்குப் புத்தி வேண்டாமா? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால், நிரபராதிகளைச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா? என்கின்ற அறிவு வேண்டாமா? பார்ப்பனர்களை எதற்காக மீதம் விட வேண்டும்? ஆகவே, வருணாசிரம தர்ம மனு நூல், ராமாயணம், பாரதத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?...

""...பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மை மீது, கோவலனுக்குத் தண்டனை விதித்தான்.

ஆனால், கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல், ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் கற்புக்கரசி! வணங்கத்தக்கவள்! தெய்வமானவள்! பாண்டியன் "குற்றவாளி' இதுதானே சிலப்பதிகாரக் கதை? இதுதான் தமிழர் பண்பாம்! எவ்வளவு முட்டாள்தனம் இந்த மாதிரியான ஆபாசமும், அநீதியும் நிறைந்து இருக்கும் கதைகளை நாம் வைத்துக் கொண்டு, நமக்குச் சொந்தம் என்றா சொல்வது?

""இவைகளைத்தான் நாம் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்; நெருப்பு வைக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்; சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்!...''

(28.7.1951 விடுதலையில் வெளியாகிய பெரியாரின் உரை ஆதாரம் : 22.12.2001 விடுதலை)

உப்பு, மிளகாயா பெண்கள் !

"ஒருவனுடைய வீட்டு உப்பு மிளகாய் புளியை அபகரிக்க நினைப்பது எப்படி திருட்டாகுமோ, அதுபோல் அவனுடைய மனைவியையும் அபகரிக்க நினைப்பது திருட்டு ஆகும்' என்று நினைத்து, அவளை அனுபவிக்க மனத்தாலும் நினைக்கக் கூடாதாம். என்னே அடிமைத்தனம்! உப்பு, மிளகாயா பெண்கள்? கேவலம் பெண்கள் இப்படியா ஒருவனுடைய வீட்டு உப்பு, மிளகாயைப் போல் தனி உடமைச் சொத்தாகி விடுவது?

- "விடுதலை' (11.10.48)

கல்யாண முறை ஒழிய வேண்டும் !

கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. மனைவியாகி விட்டால் அதோடு சரி அவள் ஒரு சரியான அடிமை! அது மட்டுமல்ல இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் அவற்றுக்கு சொத்துக்கள் சம்பாதிப்பது , அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன?

- "விடுதலை' (28.6.73)

தமிழனுக்கு தனிவழி கிடையாது !

தமிழன் நடந்து கொள்வதற்கென்று தனிமுறை, வழிமுறை கிடையாது. தமிழனுக்கு என்று தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியம் கிடையாது.

- "குடியரசு' (27.11.43)

எல்லாமே தமிழ்தான் !

தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன் தமிழ் மகனல்லன்; தமிழை அறியாதவன்; ஆரியத்திற்குச் சோரம் போனவன். நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய ஆதிக்கத்திற்கு ஆக்கந்தேட முயற்சிப்பவன்.

- "மொழியாராச்சி' நூலிலிருந்து

தமிழின் பெயரால் பிழைப்பு !

நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், "தமிழைக் காக்க வேண்டும், தமிழுக்கு உழைப்பேன், தமிழுக்காக உயிர் விடுவேன்' என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக் கூடாது.

- "விடுதலை' (16.3.67)

தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது !

தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார்.

- "விடுதலை' (27.11.43)

இன்றைய தேவை ஆங்கிலம் !

...நாம் இன்றைய நிலைமையை விட வேகமாக முன்னேற வேண்டுமானால் - ஆங்கிலம்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனை மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும், ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும், ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- "மொழியும் அறிவும்' நூலில் பெரியார்

முக்கொலை !போதாக்குறைக்கு "பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்' என்றும் நாங்கள் "பகுத்தறிவுவாதிகள்' என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், "தமிழுக்கு தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறி விடுவோம்' என்று சொல்கிறார்கள் என்றால், இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது? உயர்தர படிப்புகளையெல்லாம் கல்லூரியிலும் கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், "மக்களை முட்டாள்களாக்குகிறோம்' என்றுதானே பொருள்? இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்? தமிழ் மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால் இது மூன்று கொலை செய்ததாகத்தானே முடியும்? இதுதானா இந்த சிப்பாய்கள் வேலை?

- "விடுதலை' (5.4.67)

திருக்குறளைக் கண்டிக்கிறேன் !

...குழந்தைகள் எல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேச வேணும். அது நல்ல நாகரீகத்தையும் கொண்டு வரது. ஏன் "குறளை' எடுத்துக்குங்க. நான் மட்டும்தான் குறளைக் கண்டிக்கிறேன். குறளோடு நின்னுட்டா வளர்ச்சியே குன்றி விடுமேன்னுதான். குறள் இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினது. பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கி விட்டது.

- பெரியார் பேட்டியிலிருந்து

கெட்ட நாற்றம் !

வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், "எல்லாம் போய் விட்டால், நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் "இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் - அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?' என்று பதில் கூறுவேன்.

- "விடுதலை' (1.6.50) "கலைமகள்' (பிப்ரவரி 73)

சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி !

...இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், ஆபாச மூட நம்பிக்கை ஆரிய கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணியால் மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றாளோ - அதுபோலத்தான் இந்த சிலப்பதிகாரம் ஆகும்.

- "விடுதலை' (28.7.51)

சுதந்திர நாள் அல்ல, துக்க நாள் !

என்னைப் பொறுத்தவரையில் நான் இதை "சுதந்திரம் பெற்ற நாள்' என்று சொல்ல மாட்டேன். அடிமையும், மடமையும், ஒழுக்கக் கேடும், நேர்மைக் கேடும் ஏற்பட ஏதுவான துக்க நாள் என்றுதான் சொல்வேன். இதை நான் இன்று மாத்திரம் சொல்லவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் என்று என்றைக்கு வெளியிடப்பட்டதோ, அன்றே சொன்னவன் நான்.

காலித் தனத்துக்குப் பெயர் வேலை நிறுத்தம், அயோக்கியத் தனத்துக்குப் பெயர் அகிம்சை; சண்டித்தனத்திற்குப் பெயர் சத்தியாக்கிரஹம். தான் பதவி பெற்ற கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, எதிர்க் கட்சி ஆளாவது முதலிய அயோக்கியத் தனங்கள், எப்படி யோக்கியமான சுதந்திரமாக இருக்க முடியும்? மற்றும் இன்றைய சுதந்திரம் என்பதில், எந்த அயோக்கியத் தனமான காரியம் விலக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்? இதை சுதந்திர ஆட்சி என்று வயிற்றுப் பிழைப்பு, பதவி வேட்டை தேசியவாதிகளும் மக்களும்தான் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர, நேர்மையான அறிவுள்ள ஜன சமுதாயத்தால் சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.

- "விடுதலை' தலையங்கம் (15.8.72)

ஏமாற்றுத் திருவிழா !

...ஆதலால், வெள்ளையருக்கும் காங்கிரஸுக்கும் ஏற்பட்ட ஓர் ஒப்பந்த ஆட்சிதானே ஒழிய, இந்திய மக்களுக்கு ஏற்பட்ட சுதந்திர ஆட்சியல்ல. இதன் பயனாய் இந்த நாட்டிலுள்ள காங்கிரஸல்லாத மக்களுக்கு நன்மை இல்லை. பிரதிநிதித்துவம் இல்லை... ஏற்படப் போகும் மாகாண ஆட்சி என்பது வெள்ளையர் அதிகார ஆட்சிக் காலத்திலிருந்த உரிமையை விட மோசமான ஆட்சியேயாகும்... ஆதலால் இம்மாதம் 15ஆம் தேதி நடக்கும் சுதந்திரத் திருநாள் என்னும் "ஆரியர் - பனியா' ஏமாற்றுத் திருவிழாவில் நாம் கலந்து கொள்வதில்லை என்கிறோம்.

- "விடுதலை' (20.8.72)

சுதந்திரம், சோறு, மானம் இல்லை !

பந்தயம் வேண்டுமானாலும் கட்டுவேன். மத்திய அரசாங்கப் பிடியில் இருந்து திராவிட நாடு தனி நாடாகப் பிரியாவிடில் சுதந்திரம் இல்லை சோறு இல்லை மான வாழ்வு இல்லை. இது உறுதி! உறுதி! உறுதி!

- "விடுதலை' (25.2.49)

வடநாட்டான் பிரதமராக இருக்கலாமா?

வெள்ளையன் ஒழிந்தது போல் வட நாட்டானும் ஒழிய வேண்டாமா, இந்நாட்டை விட்டு? இந்நாட்டிற்கு சுதந்திரம் வந்துள்ளது உண்மையாயின், எதற்காக ஒரு "இமயமலைப் பார்ப்பான்' - ஒரு வட நாட்டவன் எங்கள் நாட்டிற்கு பிரதம மந்திரியாக இருக்க வேண்டும்? எதற்காக வடநாட்டவர்கள் இங்கிருந்து நம்மைச் சுரண்டி வர வேண்டும்? கேட்பாரில்லையே இத்தமிழ் நாட்டில்... எதற்காக இந்நாட்டை வட நாட்டவன் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்து விட்டு, இந்நாட்டவர்கள் அவர்களின் சிப்பந்திகளாக, ஏவலாட்களாக பணியாற்றி வர வேண்டும்? வேறு சுதந்திரம் பெற்ற நாடுகளைப் பார்த்தாயினும் உங்களுக்கு புத்தி வரக் கூடாதா?

- "விடுதலை' (19.10.48)

சுதந்திரத்தின் சரித்திரம் !

...சுதந்திரத்திற்கும், காங்கிரஸுக்கும் அதன் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் சம்பந்தமில்லை. வெள்ளையன் தானாகவே வீசி எறிந்து விட்டுப் போன சுதந்திரத்தை எடுத்துக் கொள்ள, இந்தியாவில் கட்டுப்பாடான வேறு கட்சிகள் இல்லாமல் காங்கிரஸும் முஸ்லிம் லீகும் மாத்திரம் இருந்ததால், முஸ்லிம் லீகுக்கு பயந்து இணங்கி ஆளுக்கு கொஞ்சமாக பங்கு போட்டுக் கொண்டார்கள். அதாவது அனாதியாகக் கிடந்ததை பங்கு போட்டுக் கொண்டார்கள். இதுதான் சுதந்திரத்தின் சரித்திரம்.

அநியாயம் நிறைந்த அரசியல் சட்டம் !

இந்திய அரசாங்கமானது அநியாயம் நிறைந்து விளங்கும் அரசியல் சட்டத்தைக் கொண்டிருக்கின்றது. மேலும் அரசியல் நிர்ணயசபையாவது ஒழுங்கானது என்று சொல்ல முடியுமா?

- "விடுதலை' (22.9.51)

அரசியல் சட்டம் ஒழியட்டும் !

எனவே, இவர்களால் செய்யப்பட்ட அரசியல் சட்டம் நமக்குத் தேவையில்லை என்று நாம் கூறுவது மட்டும் போதாது. அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி தேடித்தான் ஆக வேண்டும். எனவே, நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த அரசியல் சட்டம் நமக்குத் தேவையில்லை. ஆகையால் அதன் கீழ் நாம் சட்டசபைக்குப் போவது சரியில்லை என்பதை உணர வேண்டும்.

- "விடுதலை' (22.9.51)

நெருப்பில் போட்டு பொசுக்குவோம் !

நான் சொல்கிறேன் "இந்த அரசியல் சட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த அரசியல் சட்டம் எங்களுக்கு தீங்கிழைப்பது ஆகும். இது எங்கள் பிரதிநிதிகளால் செய்யப்பட்டதல்ல. இதை நெருப்பில் போட்டு பொசுக்குவோம்....'

- "விடுதலை' (7.8.52)

தேர்தலுக்காக !

காங்கிரஸ் ஆட்சி பலத்தால், திராவிட நாடு பிரிவினை கேட்பவர்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது' என்று விதி செய்து கொண்டவுடன், தி.மு.க. "நாங்கள் திராவிட நாடு பிரச்சனையை விட்டு விட்டோம்' என்று சொல்லி, தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று இன்று ஆட்சிக்கும் வந்து விட்டார்கள். தேர்தலுக்கு அது ஒரு தடைப் பிரச்சனையாக ஆகி விட்டதால், அவர்கள் அதைப் பற்றி பேச்சு மூச்சு கூட விடக் கூடாத நிலையில் இருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் காங்கிரஸார் கையில் இருப்பதால், அவர்களுக்கு பயந்து கொண்டு அடிக்கடி தி.மு.க.வினர் காலாகாலம் பார்க்காமல் "நாங்கள் திராவிட நாடு பிரச்சனையை கைவிட்டு விட்டோம்; விட்டு விட்டோம்; விட்டே விட்டோம்' என்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு வந்து விட்டார்கள்.

- "விடுதலை' (30.3.67)

அண்ணாதுரை பற்றி பெரியார் !

அண்ணாதுரை ஏன் போனார்? திராவிடர் கழகத்தில் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது; பெரிய நிலைக்கு வர முடியாது என்று கருதினார். வெளியேறினார். சௌக்கியமாக பணம் சம்பாதித்துக் கொண்டு வாழ்கிறார். அதைப் பார்த்து ஆத்திரப்பட்டுத்தானே, நாமும் பணம் சம்பாதிக்க வேண்டும்; எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது என்று கருதித்தானே, இன்றைய துரோகிகளும் வெளியேறுகின்றார்கள்?

பொதுத் தொண்டன் எப்படி இருக்க வேண்டும் ?

பொதுத் தொண்டனுக்கு தன்னால் பாதுகாக்க, பெருக்க வேண்டிய பெரிய தொழில், சொந்த சொத்து இருக்கக் கூடாது. இருந்தால் எதிரிகளுக்கு பயந்து இலக்ஷியத்தை விட்டுக் கொடுக்க நேரும். மனைவி, பிள்ளை குட்டிகள் இருக்கக் கூடாது. இருக்கவே கூடாது. பொதுத்தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள், மக்கள் சராசரி வாழ்க்கைத் தரத்துக்கு மேல் வாழக் கூடாது; வாழவே கூடாது. வாழ வேண்டி வந்தால் வாழ்ந்து, ஆனால் ""நான் பொதுத் தொண்டன். தியாகி. கஷ்டப்பட்டவன்'' என்று சொல்லாதே. சொல்வதற்கு வெட்கப்படு. அப்படி நினைப்பாயேயானால், நீ மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட்டதாகக் கருதிக் கொண்டிருப்பவன் - என்றுதான் சொல்ல வேண்டும்.

-பெரியார் எழுதிய "கழகமும் துரோகமும்' என்ற நூலிலிருந்து.

இரண்டு தடவைக்கு மேல் பதவி கூடாது

யாராக இருந்தாலும் இரண்டு தடவைக்கு மேல் ஒரு ஆள் பதவிக்கு வரக் கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும். இப்போதுள்ளவன், சாகிற வரையில் பதவியில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அதற்காக பல காரியங்களைச் செய்ய பயப்படுகிறான். இதைத் தடுக்க வேண்டும்.

- "விடுதலை' (27.1.1970)

எந்த மதத்துக்கும், எந்த ஜாதிக்கும் சலுகை கூடாது

மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில் அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ, மதத்திற்கென்றோ எவ்விதச் சலுகையோ உயர்வு தாழ்வு அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.

- பெரியார் எழுதிய "நமது குறிக்கோள்' என்ற நூலிலிருந்து.

மது தேவை !

குடிப்பது தவறில்லை. கள் குடிச்சு செத்தவங்க எத்தனை பேர் சொல்லுங்களேன்... நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன். கள்ளுக் கடை எல்லாம் மூடி இருந்தாங்களே, அப்ப குடிக்காம இருந்தாங்களா? குடிச்சிகிட்டுத்தான் இருந்தாங்க. ஒருத்தரும் அப்போ குடியைத் தடுக்கலை. வருமானம் குறைஞ்சதுதான் மிச்சம்... ஜனங்க சோம்பேறியாய் ஆனதுக்குக் காரணமே மது ஒழிப்புதான்.

கன்னடக்காரன் !

ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே. என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னை தெலுங்கர் - நாயுடு என்றே நினைக்கிறாங்க. நான் கன்னடக்காரன்.

கொடுமை !

முஸ்லிமை எடுத்துக் கொண்டால், பெண்களை உலகத்தைக் கூட பார்க்க விட மாட்டேன் என்கிறானே. முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

- "விடுதலை' (28.6.1973)

மகான் அல்ல !

தோழர்களே! நபி அவர்களை நான் ஒரு மகான் என்றோ, அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்றோ கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில், நபி அவர்களை ஒரு மனிதத் தன்மை படைத்த சிறந்த மனிதராகத்தான் கருதுகிறேனேயல்லாமல், அதற்கு மேற்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில் கருதவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- "விடுதலை' (23.12.1953)

மடத்தனம் - புளுகு !

...அந்த கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்குத் தெரியுமா? ...இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கியம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம், புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது?

- "விடுதலை' (28.3.1960)

பார்ப்பான் காட்டிய வழி !

தமிழன் வளர்ச்சிக்கு, அறிவிற்கு, கலைகளுக்கு, சமயத்திற்கு, அரசியலுக்கு , பார்ப்பான் காட்டிய வழியைத் தவிர, ஒரு தமிழன் காட்டிய வழி என்று சொல்ல இன்று என்ன இருக்கிறது? நமது கலைஞர்கள், கவிஞர்கள், புலவர்கள், அரசியல்வாதிகள், பார்ப்பானை குறை மட்டும் சொல்லிக் கொண்டு, அவன் கலாச்சாரத்தில் மூழ்கி, அவன் காட்டிய வழியில் நடந்து கொண்டு வாழ்கிறவர்களாகத்தான் இருந்து வந்தார்கள்; வருகிறார்கள் என்பதல்லாமல், தமிழர் நலனுக்கு, வளர்ச்சிக்கு, இழிவு நீக்கத்திற்கு என்று யாராவது எந்த அளவுக்காவது பாடுபட்டார்கள் என்று ஒரு விரலையாவது நீட்ட முடிகிறதா?

சனியன் !

இன்று நமக்குப் பெரும் சனியனாக "அய்க்கோர்ட் - high court' ஒன்று இருக்கிறது. மற்ற எல்லா ஸ்தாபனங்களும், நமக்கு பெரிதும் அனுகூலமாக இருக்கின்றனவென்றே சொல்லலாம்.

- "விடுதலை' (7.10.1972)

அரக்கன் !

"காங்கிரஸ்' என்பது நமது நாட்டையும், இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான நமது சங்கத்தையும் அழிக்க வந்த ஒரு "அரக்கன்' என்றுதான் சொல்ல வேண்டும்.

- "குடியரசு' (7.11.1926)

இவர்களுக்கு எதற்கு ஓட்டு ?

...தேர்தலில் வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டு அளிக்கப்பட்டிருக்கிறது! அதாவது திருடன், காலித்தனம் செய்பவன், எதற்கும் அருகதையற்றவன், பாமரர் ஆகிய அனைவருக்கும் ஓட்டு. இவர்கள் எப்பேர்ப்பட்டவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை சற்று நடுநிலையிலிருந்து யோசித்தால், நான் ஏன் அரசியல் வேலை முக்கியமல்ல என்று கூறுகிறேன் என்பது விளங்கும்.

- "குடியரசு' (14.5.1948)

ஆகாயக் கோட்டை !

...ஆகவே காங்கிரஸானது ஆரியர் நலனுக்காகவே ஒரு போலியான, கற்பனையான, புராணக் கதைகளின் சேதிகளின் பேரில் கட்டப்பட்டிருக்கும் ஒரு மாயாஜால வித்தையென்றும், ஆகாயக் கோட்டையென்றும் சொல்லுகிறோம்.

- "விடுதலை' (12.6.1946)

ஒழிக்கப்பட வேண்டியவைகள் !

மக்களிடம் உணர்ச்சி ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால், சினிமா ஒழிக்கப்பட வேண்டும். நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால், வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும். நாட்டில் காலிகள் அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால், பத்திரிகைகள் ஒழிக்கப்பட வேண்டும். அரசியலில் நல்ல ஆட்சியும் நாணயமும் ஏற்பட வேண்டுமானால், தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

- பெரியார் பிறந்தநாள் விழா மலர் 84 (17.9.1962)

"இந்துக்கள் என்றால்...?

நான் பந்தயம் கட்டிச் சொல்வேன். நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர் கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை! இல்லை! இல்லவே இல்லை என்று கூறுவேன்.

- "கடவுள் ஒரு கற்பனையே' நூலில் பெரியார்

வயிற்றுப் பிழைப்பு !

நம் நாட்டிலும் கம்யூனிஸ்ட்காரர்கள் இருக்கிறார்கள்; இவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மட்டும் பொதுவுடமையைச் சாதனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்களே ஒழிய, பொதுமக்கள் கடைத்தேற ஒன்றும் செய்யவில்லை.... எனவே, நாட்டில் பொதுவுடமைக் கொள்கையைக் கொண்ட அரசாங்கம் ஏற்பட்டு முயன்றால்தான், மக்களின் குறைபாடுகள் நீங்குமே ஒழிய, பொறுக்கித்தின்னும் இந்த கம்யூனிஸ்ட்களின் காலித்தனம், பலாத்காரத் தூண்டுதல் மூலம் ஒன்றும் முடியாது.

- "உண்மை' (பிப்ரவரிமார்ச், 1972)

ஹிந்தி இருக்கட்டும்

இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை; அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம்... சில காரியத்திற்காக இந்தியை கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள்; ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம். பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

- "விடுதலை' (7.10.48)

இந்திய அரசாங்கம் வேண்டாம் !

எங்களுக்கு " தமிழர்களுக்கு " தமிழ் நாட்டாருக்கு - இந்திய அரசாங்கம் வேண்டாம். தமிழ்நாடு - தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு ஆட்சியில் - இந்திய யூனியனில் இருக்க விரும்ப வில்லை. நாங்கள் எங்களை, நாட்டை, தனிப்பட்ட பூர்ண சுயேச்சையுள்ள தனியரசு நாடாக ஆக்க விரும்புகிறோம். ...மத்திய கூட்டாட்சியிலிருந்து பிரிந்து கொள்ள ஆசைப்படு கிறோம். ...ஆகவே இந்திய தேசியக் கொடியை கொளுத்துவது " இந்தியக் கூட்டாட்சி என்பதில், தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் பிரஜைகளாக இருக்க சம்மதப்பட வில்லை " என்கின்ற எங்களுடைய இஷ்டமின்மையைக் காட்டுவதே யாகும்.

- "விடுதலை' (20.7.1955)

மதிப்பு தேவையில்லை !

பாரத மாதா கொடி, பாரத நாட்டின் கொடி என்றால், அது வட நாட்டைப் பொறுத்த மட்டும்தான். நாங்கள் அதற்கு மதிப்புக் கொடுக்கத் தேவையில்லை.... காங்கிரஸ்காரர்கள் என்றால் தாய்நாட்டுப் பற்று, தாய்மொழிப் பற்று, தன்மான உணர்ச்சி, சுய அறிவு இவைகளை எல்லாம் தத்தம் செய்தாக வேண்டும்.

- "விடுதலை' (4.8.1955)

கம்யூனிஸ்ட்கள் !

...நம் நாட்டுக் கம்யூனிஸ்ட்களைப் பொறுத்த மட்டிலும் அத்தனையும் பொய்யாகி விட்டது. பெரும் அயோக்கியர்களையும், பித்தலாட்டக்காரர்களையும், கலகக்காரர்களையும், கொள்ளை, கொலையைத் தூண்டி விடும் அராஜகச் செயல் கொண்டவர்களையும், கொண்டுள்ளது.

- "விடுதலை' (5.8.1955)

நியூசென்ஸ்

...அரசியல் ரீதியில் இன்று காங்கிரஸுக்கு, காமராசருக்கு எதிர்ப்பு இல்லாமல் ஆக்கியது நமது இயக்கம்தான். பார்ப்பான் குள்ளநரி ஆகிவிட்டான். முஸ்லிம் லீக் இன்று செல்லாக் காசாகி விட்டது. "கண்ணீர்த் துளி' (தி.மு.க.) நாட்டுக்கு நியூசென்ஸாகி விட்டது.

பெரியார் பிறந்தநாள் விழா மலர் (17.9.1964)

முட்டாள்தனம் !

இந்த அதிசய காலத்தில் "எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன்' என்று முட்டாள் தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

"விடுதலை' (14.11.1972)

பலி !

இந்தத் திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காகக் கடைப்பிடிக்க வேண்டும்? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோவிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ, அது போலவே ஆணுக்குப் பெண்ணை பலி கொடுக்கிற விழாத்தானே திருமணம்? இந்த நாட்டில் மக்கள் தொகையில் சரி பாதியான பெண்கள் இனத்தை எதற்காக இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்? ...ஆண்களும் பெண்களும் இத்தகைய தொல்லைகளில் மாட்டிக் கொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா?

-"விடுதலை' (3.9.1973)

மதங்கள்

....கிறிஸ்துவ மத தர்மப்படி, "மனிதர்கள் எல்லோரும் பாவிகளே ஆவார்கள். ஏசு மூலம் ஜபம், பிரார்த்தனை செய்தால் மன்னிக்கப்பட்டு விடுவார்கள்' என்பது கட்டளையாகும். இதனால்தான் மற்ற மதங்களைவிட, கிறிஸ்துவ மதத்தில் நேர்மையற்றவர்கள் அதிகமான பேர்கள் இருக்க வேண்டியதாகி விட்டது. இஸ்லாமியர்களும் தொழுகையினால், வேண்டுகோளால் பாவம் மன்னிக்கப்பட்டு விடுகிறது என்ற கொள்கையைக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் என்பவர்களோ எல்லா விதமான பாவத்திற்கும், அவை ஒழிய கோவில், குளம், ஸ்தல யாத்திரையே போதுமானவையாகும் என்பது உறுதியான கொள்கையாகும். இந்த நிலையில், எந்த மனிதன்தான் யோக்கியனாக இருக்க முடியும்? மனிதன் எதற்காக யோக்கியனாக இருக்க வேண்டும்?

-"விடுதலை' (3.9.1973)

கம்யூனிஸ்ட்களின் வேலை !

கம்யூனிஸ்ட் -எவன் காலை நக்கியாவது வயிறு வளர்க்கிறதுதான் அவன் வேலை; இன்னின்னாரோடு தான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை. நாம் வலுத்தால் நம் கிட்டே. பார்ப்பான் வலுத்தால் அவன் கிட்டே. இன்னொருவன் வலுத்தால் அவன் கிட்டே. உலகத்தில் கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் என்றால் நம் கம்யூனிஸ்ட்தான்.

அதற்கு அடுத்தாற்போல காங்கிரஸ் - என்ன பண்ணியாவது பதவிக்கு வரணும் என்கிறவன்... இப்போது துவக்கின ஒரு கட்சி இருக்கிறது... அண்ணா முன்னேற்றக் கழகம் என்று இருக்கிறது. அவர்களுக்கு சொந்தத்திலே ஏதாவது வேலை இருக்கிறதா? அவர்கள் எதிரிகிட்டே பேசிக் கொண்டு, "காலிகளை ஒழித்து விட்டு வருகிறேன். எனக்கு ஏதாவது எச்சல்கலை போடுகிறாயா?' என்று கேட்கிறார்கள்.

- 4.11.1973ல் பெரியார் ஆற்றிய உரை

துக்க நாள், மோசடி, ஏமாற்றுதல் !

நானும் ஆரம்ப காலந்தொட்டு, "இது ஒரு மோசடி, மோசடி என்று "ஏமாற்றுதல்தான்' என்று சொல்லிக் கொண்டேதான் வந்திருக்கிறேன். சுதந்திரம் வந்தது, சுதந்திர நாள் என்ற போதே நான் சொன்னேன் "இது சுதந்திர நாள் அல்ல; துக்க நாள்; மோசடி; நம்மை ஏமாற்றத் துரோகம் செய்கிற நாள்' என்று நான் அன்றைக்கே சொன்னவன்தான்.

உரிமை !

நமக்கு ஞாயம் இருக்கிறது; இந்த டில்லி அரசாங்கத்தை மாற்ற; நமக்கு ஞாயம் இருக்கிறது, நம் அரசாங்கத்தை அமைக்க. அடியோடு இந்தியா பூராவுக்கும் மாற்றா விட்டாலும் நம் நாட்டைப் பொறுத்தவரைக்கும், நாம் தனிச் சுதந்திர ஆட்சி என்று செய்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வந்ததே முன்னே நான் சொன்னாற்போல, ஒரு பித்தலாட்டத்தினாலே வந்ததே தவிர, நமக்கெல்லாம் ஆசை இருந்து வரவில்லையே! "இந்தியா என்கிற ஒரு தேசம் ஆகணும்; அதிலே நாம் ஒரு நாட்டானாக இருக்கணும் இதற்கு ஒரே தேசம்' அப்படி என்று ஆரம்பிக்கவில்லையே.

- 8, 9.12.1973ல் பெரியார் ஆற்றிய உரை

பூணூலின் அர்த்தம் !

மானம் இருந்தால் இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? இருக்க முடியுமா? ஒரு பயல் பூணூல் போட்டுக்கிட்டு நம் எதிரிலே வருவானா? "என்னடா அர்த்தம், இந்தப் பயலுக்குப் பூணூல் இருக்கிறது; ஏ அயோக்கியப் பயலே என்ன அர்த்தம்? நீ பிராமணன், நான் சூத்திரன் என்று அர்த்தம். அப்படி என்றால் என்ன? உன்னுடைய வைப்பாட்டி மகன் என்று அர்த்தம். போடு உன்னைச் செருப்பாலே - அப்படி என்று ஆத்திரமல்லவா வரும் , நமக்கு மானம் இருந்தால்?

பொறுக்கித் தின்கிறவன் !

அடுத்தாற்போல, ஒழிய வேண்டியது காங்கிரஸ். காங்கிரஸ் ஒழிந்தது; இனிமேல் அது ஒன்றும் உருப்படியாகாது. இப்போதே இரண்டுபேரும் தொங்குகிறார்களே! இரண்டாகப் பிரிந்து, ஒன்றுக்கொன்று மானங்கெட்டுத் திரிகிறது; இப்போது ஒருவருக்கொருவர் சேர்ந்து பார்க்க லாம் என்று (நினைக்கிறது). சேர்ந்தால் இனி என்ன மரியாதை இருக்கப்போகிறது? என்ன ஆகப் போகிறது? இனி எவன் காங்கிரஸை ஆதரிப்பான், பொறுக்கித் தின்கிறவனைத் தவிர?

மந்திரி ஆகணும் என்றால் வாழ முடியாது, ஆகிறவன் ஆகிவிட்டுப் போகிறான். சட்டசபை மெம்பர் ஆகணும் என்றால் முடியாது ஆகிப் பொறுக்கித் தின்கிறவன் தின்று விட்டுப் போகிறான். இது இரண்டும் வேணாம் என்கிறவன் நான்!

நாம் விட்டது தப்பு. அயோக்கியப் பயல்களுக்கு காங்கிரஸ்காரப் பயல்களுக்கு இடம் கொடுத்தோம். அவன் பார்ப்பான். அதிலே பொறுக்கித் தின்னப் போனவன், நம் ஆள். அதிலே முக்கால் வாசிப்பேர் பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன் என்று ஒத்துக் கொள்கிறவன்.

- 19.12.1973ல் ஆற்றிய உரையிலிருந்து

நாட்டு முன்னேற்றத்துக்கு வழி

நான் 1932ல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை "கணூணிணீணிண்ஞுஞீ ஏதண்ஞச்ணஞீ ச்ணஞீ ஙிடிஞூஞு" என்றார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டேன். ""நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள, நாங்கள் பயிற்சி பெறுகிறோம்'' என்றார்கள். ""எவ்வளவு காலமாக?'' என்று கேட்டேன். ""எட்டு மாதமாக'' என்றார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி, பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?

- "விடுதலை' (28.6.73)

ஒரு தமிழ் நூல் கூட இல்லை!

...எனவே, தமிழன் இன்றைய நிலையில் தனது வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்கள் என்று தெரிந்து கொள்ளத்தக்க கருத்துக்களைக் கொண்ட தமிழ் நூல் ஒன்று கூட இன்று நமக்கில்லை.

- "விடுதலை' (28.3.60)

காந்தியமும் ஒழிய வேண்டும் !

இந்திய தேசியக் காங்கிரஸும், காந்தியமும் அழிந்தொழிந்து போவது என்பது இந்திய ஏழை மக்களுக்கு மாத்திரமல்லாமல், உலக ஏழை மக்கள் இயக்கத்திற்கே அதாவது சமதர்ம உலகத்திற்கே பெரிய இலாபகரமான காரியமாகும். இந்தியாவில் சமதர்மக் கொள்கை என்றைக்காவது ஒருநாள் ஏற்படும் என்று நினைப்போமேயானால், அது தேசிய காங்கிரஸும், காந்தியமும் ஒழிந்த நாளாகத்தான் இருக்குமே தவிர, அது ஒழியாமல் ஏற்படாது என்பது உறுதி.

"குடியரசு' (30.7.33)

காந்தியாரின் விஷம் !

தோழர் காந்தியாரை விட வைதிகர்களும், சனாதன தர்மிகளும் எத்தனையோ மடங்கு மேம்பட்டவர்கள் என்பது எனது அபிப்பிராயம். எப்படியெனில், வைதிகர்களுடைய அக்கிரமம் அயோக்கியத்தனங்கள் எனப்பட்ட விஷமானது, குருடனுக்கும் மூடனுக்கும் நன்றாகத் தெரியும்படியாக இருக்கின்றது. காந்தியாரின் விஷம், மேலே சர்க்கரைப் பூச்சு பூசி, எப்படிப்பட்ட அறிவாளியும் எடுத்துச் சாப்பிடும்படியான மாதிரியில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஆதலால், வைதிகர்களது விஷத்தை யாரும் சாப்பிட்டு செத்துப் போக மாட்டார்கள் என்பதோடு, அவ்விஷங்கள் வைதிகர்களையே கொல்வதற்குத்தான் பயன்படும் என்றும் சொல்லலாம். ஆனால் "காந்தியாரின் விஷம்' எல்லோரையும் அருந்தச் செய்து, எல்லோரையும் கொல்லத் தக்க மாதிரியில் பூச்சு பூசப்பட்டிருக்கிறது என்பதோடு, காந்தியாரை "மகாத்மா'வாக்கி பின் சந்ததிகளையும் கொல்லச் செய்யத் தக்கதாகும் என்று சொல்லலாம். ஆதலால், வைதிகப் பிரச்சாரத்தையும் சனாதனப் பிரச்சாரத்தையும் பகிஷ்கரிப்பதை விட, காந்தி பிரச்சாரத்தைப் பகிஷ்கரிக்க வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.

- "புரட்சி' தலையங்கம் (10.12.33)

காந்திக்கு அஞ்சலி

காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை... "உலக மக்களுக்குத் தொண்டாற்றுவதற்காக 125 வயது வரை நான் உயிருடன் வாழ்ந்து வருவேன்' என்று கூறிக் கொண்டே, அதற்கு ஏற்ற வண்ணம் உடலையும் பாதுகாத்துக் கொண்டே, பெருவாரியான மக்களின் போற்றுதலையும், பாராட்டுதலையும் பெற்று, அதற்காக உண்மையாய் உழைத்து வந்த மகான் காந்தியார், தனது 79ஆம் ஆண்டில் அகால மரணத்தால் முடிவெய்து விட்டார். ...இப்படிப்பட்ட இவரே இக்கதிக்கு ஆளான பின்பு, இனி எவர் எக்கதியானால்தான் என்ன என்று கூறலாம்.

- "குடியரசு' (7.2.48)

காந்தி சிலை இருப்பது அவமானம்

சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம், காந்தி... எனவே இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்... காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான் காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும் என்று சொல்லுகிறோம். அவர் செய்த அடுத்த துரோகம், நம்மை வட நாட்டானுக்கு அடிமையாக்கி விட்டுப் போனது. சுயராஜ்யம் பேசி, வெள்ளைக்காரன் வெளியே போனதும் நம்மை வடநாட்டானுக்கு அடிமைகளாக்கி விட்டார்.

- "விடுதலை' (9.10.57)

சிரிக்க மாட்டார்களா ?

இந்துக்கள் தேர் இழுப்பதைப் பார்த்து முஸ்லிம்கள் பரிகாசம் செய்து விட்டு, முஸ்லிம்கள் கூண்டு கட்டிச் சுமந்து கொண்டு கொம்பு, தப்பட்டை, மேளம், பாண்டு, வாண வேடிக்கை செய்து கொண்டு தெருவில் போய்க் கொண்டிருந்தால், உலகம் திருப்பிச் சிரிக்காதா? இந்துக்கள் காசிக்கும் இராமேஸ்வரத்துக்கும் போய் பணத்தைச் செலவழித்து விட்டு, "பாவம் தொலைந்து விட்டது' என்று திரும்பி வருவதைப் பார்த்து முஸ்லிம்கள் சிரித்து விட்டு, முஸ்லிம்கள் நாகூருக்கும், மக்காவுக்கும், முத்துப் பேட்டைக்கும் போய்விட்டு வந்து, தங்கள் பாவம் தொலைந்து விட்டது என்றால், மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா?

- "குடியரசு' (9.8.31)

மதங்களால் என்ன நலன் ?

எதற்காக "இந்து'; எதற்காக "கிறிஸ்தவம்'; எதற்காக "முஸ்லிம்' முதலிய மதங்கள் வேண்டும்? இவர்களுக்கு தனித்தனி வேதம்; வேஷம்; செய்கைகள் முதலியன எதற்காக தேவையாக இருக்கின்றன? இவைகளால் பிரிவினை உணர்ச்சியல்லாமல், சமுதாயத்திற்கு நலனென்ன என்று கேட்கிறேன்.

-"விடுதலை' (18.10.72)

தொழிலாளர் சங்கம் ஏன் ?

பொதுவாக "தொழிலாளர் சங்கம்' என்றாலே, எனக்கு அதனிடத்தில் விருப்பம் இருப்பதில்லை. அதில் ஒரு சத்து இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. சில வெறும் வெளி ஆசாமிகள் அதைத் தம் நன்மைக்கும், கீர்த்திக்கும் ஏற்படுத்திக் கொண்ட சாதனமென்பதே என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயம்.

- "குடியரசு' (30.5.26)

ஸ்டிரைக் எதற்கு ?

இப்போது எடுத்ததற்கெல்லாம் "ஸ்டிரைக்' ஆரம்பித்து விடுகிறார்கள். இதில் பெரும்பான்மை ஸ்டிரைக்குகள் சங்கங்களை நடத்துகிற ஆட்களின் ஸ்தாபனங்களின் சொந்த நலனுக்கும், மற்றபடி தங்கள் சொந்த காரியங்களை சாதித்துக் கொள்ளவுமே செய்கிறார்கள். ஸ்டிரைக்கினால் ஏற்படுகிற விளைவுகள் என்ன? ... தொழில் வளர்ச்சி கெட்டு, உற்பத்தி குறைவதோடு மட்டுமல்ல பொது மக்களுக்கும் எவ்வளவு தொந்தரவு ஏற்படுகிறது?

- "விடுதலை' (20.9.52)

அப்படியே நம்பி விடாதீர் !

சகோதரர்களே! நான் சொல்வன் எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தான்... "ஒரு பெரியார் உரைத்து விட்டார்' என நீங்கள் கருதி, அப்படியே அவைகளைக் கேட்டு நம்பி விடுவீர்களானால், அப்போது நீங்கள் யாவரும் அடிமைகளே!

- "விடுதலை' (8.10.1951)

நாளை என்ன நடக்கும்?

நாளை, ஒரு சமயம் சமதர்ம காலத்தில், "பிராமணர்கள் (சரீரத்தால் பாடுபடாதவன்) சொத்து வைத்திருந்தால், மற்றவர்கள் பலாத்காரத்தில் பிடுங்கிக் கொள்ளலாம்' என்று ஏற்பட்டாலும் ஏற்படலாம். இந்த மாதிரி மாறுதல்கள் காலத்திற்கும் பகுத்தறிவிற்கும், நாட்டின் முற்போக்கிற்கும் ஏற்றாற்போல நடந்துதான் தீரும். எனவே நான் மாறுதலடைந்து விட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை. நாளை நான் எப்படி மாறப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால், நான் சொல்வதைக் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள்.

"குடியரசு' (11.10.1931)

(பெரியார் தமிழக மக்களுக்கு வழங்கிய அறிவுரைகளின் ஒரு சிறு பகுதி, இத்துடன் நிறைவு பெறுகிறது.)

தொகுப்பு : சத்யா (தமிழ்நாட்டில் இருந்து வெளியானது ஆக்கமொன்றில் இருந்து - http://satrumun.com/)

Link to post
Share on other sites
 • Replies 67
 • Created
 • Last Reply

பெரியாரின் கருத்துக்களை இங்கே இணைத்த நெடுக்காலபோவானுக்கு நன்றி

பெரியார் சொன்ன சரியான கருத்துக்களுக்கு தவறான தலைப்பைக் கொடுத்து இங்கே கட்டுரையாளர் செய்திருக்கின்ற சதிவேலைகளை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். திரிப்பது பார்ப்பனர்களுக்கு கைவந்த கலை என்பது இங்கே பலருக்கு தெரியும்.

பார்ப்பனியர்கள் கொடுத்த தலைப்புக்களை நீக்கிவிட்டு பெரியாரின் கருத்துக்களை படித்த பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றன.

நெடுக்காலபோவானுக்கு மீண்டும் நன்றி!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனது வேலை கூற்றுக்களையும் அவற்றிடையே உள்ள முன் பின் முரண்பாடுகளையும் குழப்பங்களையும்.. தங்களின் சொந்த வாழ்க்கையில் வசனம் பேசியோர் நடந்து கொண்டு காட்டிய பிறழ்வுகளையும் இனங்காட்டுவதோடு முடிந்தது. எமது மக்கள் சுயசிந்தனை உள்ளவர்கள். பகுத்தறியும் ஆற்றலை இயல்பாகக் கொண்டவர்கள். அந்த வகையில் எதை ஏற்பது விடுவது என்பதை அவர்கள் தீர்மானிக்கட்டும். இதற்குள் பார்ப்பர்ன கதை இழுப்பு கருத்தை திசைதிருப்பும் ஒரு நடவடிக்கை என்றே நான் இனங்காண்கிறேன்..! :P

மனிதன் விலங்குகள் போல வாழ்வதுதான் சுதந்திரம் என்பதை உலகில் எங்கும் எவரும் தீர்மானிக்கல்ல...! அது ஆபத்தான எண்ணத்தின் வெளிப்பாடும் கூட. மனித இன அழிவுக்கே வித்திடக் கூடியது. :P

Link to post
Share on other sites

நெடுக்காலபோவான்!

மக்களே முடிவு செய்யட்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால், தவறான அர்த்தம் கொடுக்கின்ற தலைப்புக்களை இணைத்திருக்க மாட்டீர்கள்.

பெரியாரின் கருத்துக்களைப் பற்றி இங்கு தாராளமாக விவாதிக்கலாம். நாம் ஒரு போதும் பெரியார் சொன்னதை, சொல்லவில்லை என்று வாதிட மாட்டோம். பெரியார் சொல்லிவிட்டார் என்பதற்காக அனைத்தையும் சரி என்றும் வாதிட மாட்டோம். காரணம் நாம் பகுத்தறிவுவாதிகள்.

ஆனால் பகுத்தறிவற்றவர்களோ ஒருபுறம் இந்து மதம் சொல்வதை, சொல்லவில்லை என்று மழுப்புவதும், மறுபுறம் பார்ப்பனர்கள் சொல்வதை கேள்வி கேட்காது அதன்படி நடப்பதுமாக இருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

ஆனால் இங்கே உள்ள பகுத்தறிவுள்ளவர்கள் நெடுக்காலபோவான் இணைத்ததைப் படித்து, பெரியார் சொன்னதன் அர்த்தங்களை புரிந்து கொள்வார்கள்.

கருத்துக்களுக்கு தவறான தலைப்புக் கொடுக்கின்ற மலிவான வேலையை சிலர் செய்துள்ளார்கள் என்பதையும் பகுத்தறிந்து புரிந்து கொள்வார்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

மக்களே முடிவு செய்யட்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால், தவறான அர்த்தம் கொடுக்கின்ற தலைப்புக்களை இணைத்திருக்க மாட்டீர்கள்.

பெரியாரின் கருத்துக்களைப் பற்றி இங்கு தாராளமாக விவாதிக்கலாம். நாம் ஒரு போதும் பெரியார் சொன்னதை, சொல்லவில்லை என்று வாதிட மாட்டோம். பெரியார் சொல்லிவிட்டார் என்பதற்காக அனைத்தையும் சரி என்றும் வாதிட மாட்டோம். காரணம் நாம் பகுத்தறிவுவாதிகள்.

ஆனால் பகுத்தறிவற்றவர்களோ ஒருபுறம் இந்து மதம் சொல்வதை, சொல்லவில்லை என்று மழுப்புவதும், மறுபுறம் பார்ப்பனர்கள் சொல்வதை கேள்வி கேட்காது அதன்படி நடப்பதுமாக இருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

ஆனால் இங்கே உள்ள பகுத்தறிவுள்ளவர்கள் நெடுக்காலபோவான் இணைத்ததைப் படித்து, பெரியார் சொன்னதன் அர்த்தங்களை புரிந்து கொள்வார்கள்.

கருத்துக்களுக்கு தவறான தலைப்புக் கொடுக்கின்ற மலிவான வேலையை சிலர் செய்துள்ளார்கள் என்பதையும் பகுத்தறிந்து புரிந்து கொள்வார்கள்

இத்தலைப்போடு மட்டும் பேசுங்கள். இந்து மதம் சார்ந்து பேசவல்ல இந்தத் தலைப்பு. இந்து மதம் பார்பர்னர்களுக்கு மட்டுமுரிய மதம் அல்ல.

ஈ வெ ராமசாமி.. எவ்வளவு சுயமுரண்பாடுகளையும் தமிழ் சமூக விரோத எண்ணங்களையும் காவியுள்ளார் என்பதை இக்குறிப்புகள் எடுத்துச் சொல்லும். ஒரு இனத்தின் அடையாளமான மொழியின் இருப்பையே கேவலப்படுத்தி இருப்பவர்.. அந்த இனத்தில் விடிவுக்காக உழைத்ததாக இனங்காட்டப்படுவது போல கேவலமான நிலையை நான் எங்கும் காணவில்லை. அதற்குப் பகுத்தறிவு என்ற அடையாளமிடல் வேறு அம்மக்களை முழு முட்டாள்களாக கருதி முன்வைக்கப்படும் கருத்துக்கள்.

தமிழர்களை நாகரிகமற்ற விலங்குகளாக எண்ணி.. வாழச் சொல்ல இவருக்கு எந்த அருகதையும் கிடையாது. ஒரு பக்கம் வடநாட்டினன் எம்மை ஆளக்கூடாது என்று உச்சரிப்பவர்.. ரஷ்சியாவிலும்.. ஜேர்மனியில் கண்டவற்றை கொண்டு வந்து தமிழ் சமூகத்தின் மீது திணிப்பதும்.. அதன் மூலம் தமிழ் இனத்துக்கான பாரம்பரிய அடையாள இருப்பை சீரழிக்க விளைவதும் மிகக் கொடுமையான இன அழிப்புக்கு நிகரான செயற்பாடாகவே நான் கருதுகின்றேன். சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்கு நிகரான நிலைப்பாடு அது.

சபேசன் உங்களுக்கு பார்பர்னன் ஈ வெ யின் உரைக்கு திரிப்புச் சொல்கிறான் என்று குற்றம்சாட்ட உரிமை இல்லை என்றே நினைக்கிறேன். காரணம்... நீங்கள் இந்து மதம்.. மற்றும் மதங்கள் சொல்லும் அடிப்படைகளைக் கூட சர வர விளங்கிக் கொள்ளாது.. பகுத்தறிவென்று சுய தம்பட்டம் அடித்தபடி.. ஏற்படுத்தியுள்ள திரிபுகள் ஏராளம். அதற்கு சமஸ்கிரத பாடல்களை நீங்கள் எப்படித் திரித்தீர்கள்..தவறாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள் என்பதை கள உறவு வெற்றிவேல் தெளிவாகக் காட்டியிருந்தார். அது ஒன்றும் போதும் உங்களை இனங்காட்ட. இவை போதும் ஈ வெ ராவை இனங்காட்ட..! :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் உதில எனக்கு தெரிஞ்சத எழுத ஆசைதான். நேரமில்லை சாமி. நமக்கு வேலைக்கு போனாதான் சம்பளம் வரும். நமக்கு மோகன் அண்ணா மாதிரி வேலைத்தளத்தில் இருந்தல்லாம் இணையத்தளத்துக்கு நுழைய முடியாது.

உந்த சாமி கும்பல் எல்லாம் மண்டையில் தேங்காய் உடைத்து மண்டையை உடைக்காதீங்கோ..

பெரியார் கும்பல் மரத்தை வெட்டாமல் மரமேறி இளனீ குடிங்கோ..

ஏனுங்க இப்புட்டுக் காலமாக இதைத்தான் எழுதிட்டு இருக்குறீங்க. முடிவெடுக்க முடியல. இந்த முறையாவது ஒரு முடிவுக்கு வர பாருங்க. நம்மால முடியல.

Link to post
Share on other sites

நெடுக்காலபோவான்!

நீங்கள் இணைத்த பெரியாரின் கருத்துக்களில் பெரும்பாலானவை எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது. ஒரிரண்டு கருத்துக்கள்தான் எனக்கு உடன்பாடு உள்ளவையாக இல்லை.

நெடுக்காலபோவான் துண்டுதுண்டாய் வெட்டி ஒட்டிய பெரியாரின் கருத்துக்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

தமிழ் மொழியால் எந்தப் பயனும் இல்லை என்கிறார் பெரியார். அதற்கு தமிழ் மொழியை விட்டுவிடுங்கள் என்று அர்த்தம் இல்லை. அதை நவீனப்படுத்தி பயனுள்ளதாக மாற்றுங்கள் என்கிறார் பெரியார். தமிழை சீர்திருத்துவதற்கு பெரியார் தன்னுடைய பங்களிப்பை வழங்கி உள்ளார்.

ஒரு சிறுவன் அழுக்காக இருந்தால், அவனை நான்கு சொற்கள் திட்டிவிட்டு பின்பு குளிப்பாட்டுவது போல்தான் பெரியாரும் தழிழையும், தமிழ் புலவர்களையும் கண்டபடி திட்டிவிட்டு, பின்பு தமிழை சீர்திருத்தினார்.

தமிழ் மீது அக்கறை கொண்ட அனைவரும் தமிழை கடுமையாகவோ மென்மையாகவோ சாடியிருக்கிறார்கள் என்பது வரலாறு. இதற்கு பாரதியும் ஒரு உதாரணம்

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச

பூதச் செயல்ககளின் நுட்பங்கள் கூறும்;

மெத்த வளருது மேற்கே - அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லை - அவை

சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை

மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!

இந்த வசை யெனக் கெய்திட லாமோ!

சென்றி டுவீர் எட்டுத் திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

இதைத்தானே பெரியாரும் சொன்னார்!

குறிப்பு: திருமண மந்திர விளக்கங்கள் பற்றிய கருத்துக்கு அந்தத் தலைப்பிலேயே என்னுடைய பதிலை மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே புல்லரிக்குது சபேசன் தம்பி

தமிழை வாழ வைக்க வேண்டும் எண்டதற்காக தன்னை வருத்தின பெரியார்.

பெம்பிளையளுக்கு சூடு சொரணை வரவேணும் எண்டதற்காக, தன் மனைவியைத் தாசிப்பட்டம் சூட்டின பெரியார்

தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒரு சமூகத்தைப் பற்றி திருப்பித் திருப்பி தலித் எண்டதன் மூலம், சாதியை அழியாமல் காத்த பெரியார்.

ஆனா ஒண்டே ஒண்டு மட்டும் புரியல்ல. பிராமணப் பெண்களைக் கற்பளியுங்கள் என்று சொன்னது என்னத்துக்காக எண்டு மட்டும் புரியவே இல்லை.

ஆனா தமிழைத் திட்டித் தமிழை வளர்க்கலாம் எண்ட உங்கட கூற்று சோத்துக்குள்ள பூசணிக்காயை மறைக்கின்றதற்கு போதுமானதாக இல்லை, ஒரு பருக்கை சோத்தை வைச்சு மறைக்க முயல்வது ரெம்ப அநியாயம் சபேசன் தம்பி.

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.

நீங்கள் என்ன தான் பயனில்லை என்று சொல்லுறதாகச் சமாளிச்சாலும், அவர் சொல்லவாறது தமிழை விட்டு ஆங்கிலத்தை எல்லோரும் படியுங்கோ என்பது தான். அதை இந்த வசனத்திலும் பாக்கலாம். அதை நீங்கள் உங்கட வார்த்தைச் பிரயோகத்தால மறைக்கப் பாரக்கின்றியள். அவரை தமிழ் தேசியத்தின் தலைவராக காட்ட முனையக் கட்டி வைத்த தூண்கள் ஒவ்வொண்டாகச் சரிய அதைத் தடுக்கின்றதற்கான முண்டாகத் தான் உது தெரியுது.

தமிழ் தேசியத்தைக் காக்க ஆயுதரீதியிலும் சரி, மொழிரீதியாகவும் சரி பாராட வெளிக்கிட்டது எங்கட தேசியத் தலைவர் தான். அதற்கு இடையில் எவரையும் கொண்டு வந்து செருகிப் பெயர் வாங்கிக் கொடுக்காதையுங்கோ.

திருவள்ளுவரையும் துரோகி, ஆரிய பித்தன் எண்டு திட்டுறார். அப்படியெண்டால் கன்னியாங்குமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைச்ச கருணாநிதி ஐயாவும் துரோகி எண்டு தான் ஆவார் போலக் கிடக்கு. எனக்கு கருணாநிதி ஐhடா நிலையைப் பார்க்கப் பரிதாபமாகத் தான் கிடக்கு. தொல்காப்பியத்திற்கு வேற பொருள் எழுதியிருக்கார். ஆனால் அதையும் பெரியார் ஆரிய அடிவடி எண்ட மாதிரிச் சொல்லுறார்.

Link to post
Share on other sites

தமிழ் உயிர், தமிழைத் தவிர வேறொன்றும் கற்கமாட்டோம் என்று அடம்பிடித்தவர்களை நோக்கி பெரியார் சொன்னதை, நீங்கள் உங்களுக்கு சொன்னதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

இனத்தின் மீது, மொழியின் மீதும் பற்று உள்ளவர்களாகத்தான் பெரியார் தன்னுடைய தொண்டர்களை வளர்த்து எடுத்திருக்கிறார். பெரியாரின் கடவுள் சார்ந்த கொள்கைகளில் இருந்து வழுவிச் சென்றவர்கள் கூட, தமிழ் பற்றில் இருந்து விலகவில்லை என்ற யதார்த்தத்தை நீங்கள் ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல மதவாதப் புலவர்கள் இணைந்து தமிழைக் காட்டுமிராண்டி மொழியாக வைத்திருந்தார்கள். பெரியார் அதை கடுமைiயாகக் கண்டித்தார். மற்றைய மொழிகளிலே பல கலைகள் வளர்வதையும், அதை எதையும் அறியாது எமது தமிழ் புலவர்கள் "கண்ணகி, கற்பு" என்று பட்டிமன்றமும் நடத்திக் கொண்டிருப்பதையும் கண்டித்தார்.

இதில் தவறு என்ன இருக்கிறது?

பெரியார் பேசியது இந்தப் புலவர்களை நோக்கித்தான். அவருடைய உரைகளை முழுமையாகப் படித்தால், இதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். அவைகள் தமிழில்தான் இருக்கிறது. சமஸ்கிருதத்தில் அல்ல.

பாரதியின் பாடலைப் பாருங்கள்.

தமிழ்தாய் கதறுவது போல் பாடலை எழுதியிருக்கிறார்.

பல திசை மொழிகள் அழிந்து போக, தமிழ் அழியாது இருக்கின்ற இறுமாப்பில் தமிழ்தாய் இருக்கிறாள். அத்துடன் தமிழ் புலவர்கள் எல்லாம் தன்னை அழகுபடுத்துவதை எண்ணி பெருமையடைகிறாள். ஆனால் மேற்கு நாடுகளின் மொழியில் அறிவியல் வளர்வதையும், அவைகள் காலத்திற்கு ஏற்றபடி நவீனமாவதையும் சுட்டிக்காட்டி, தமிழில் அந்தத் தகமை இல்லையென்றும், தமிழ் இனி மெல்லச் சாகும் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

இந்த வசை எண்ணி வருந்தும் தமிழ்தாய், எட்டுத் திக்கும் சென்று அங்குள்ள கலைகள் எல்லாவற்றையும் கொண்டு வந்து சேர்க்கும்படி தமிழர்களுக்கு கட்டளையிடுகிறாள். அதுவும் இந்தப் புலவர்கள் தன்னை வளப்படுத்துவார்கள் என்று நம்புகிறாள்.

இப்படிப் பாரதி தமிழ்தாயின் வேதனையையும் வேண்டுகோளையும் நம்பிக்கையையும் பாடுகிறார்.

ஆனால் இந்தத் தமிழ் புலவர்கள் தொடர்ந்தும் "கண்ணகி, கற்பு, ராமன், சீதை" என்று பிதற்றிக் கொண்டே இருந்தார்கள். தமிழ் வளர்வதற்கு எதையும் செய்யவில்லை.

பெரியார் சீற்றம் கொண்டு கண்டித்தார். இப்படி தமிழ் என்ற பெயரில் வெட்டி வேலை பார்ப்பதை விட்டு, வேறு மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

இங்கே திரிப்பதற்கு எதுவுமே இல்லை. இதுதான் வரலாறு. பாரதி கவிதையால் மென்மையாக தமிழ் தாயின் பெயரில் சொன்னார். பெரியார் கடுமையாக சொன்னார். ஆனால் நோக்கம் ஒன்றுதான்.

முக்கிய குறிப்பு: பெரியார் எந்தப் பெண்ணையும் வல்லுறவு செய்யச் சொல்லவில்லை. பெரியார் சொன்னதையோ, செய்ததையோ நீங்கள் தருகின்ற போது, அது பற்றி விளக்கம் தரலாம். மாற்றுக் கருத்து இருப்பின் விவாதிக்கலாம். நெடுக்காலபோவான் பெரியாரின் பத்திரிகைகளில் இருந்து ஆதாரம் தருகிறார். நாம் விவாதிக்கிறோம். ஆனால் மதனராசா போன்றவர்கள் தருகின்ற அபாண்டங்கள் குறித்து கருத்து எதுவும் சொல்வதற்கு இல்லை. சிங்கள அரசு விடுதலைப் புலிகளைப் பற்றி செய்கின்ற பரப்புரைகளை போன்றதுதான் இப்படியானவைகளை நான் பார்க்கிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

'ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் '

ம.வெங்கடேசன் எழுதிய நூலில் இருந்து விமர்சகர் ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவை. உதவி திண்ணை.கொம்

ஆசிரியர் ம.வெங்கடேசன் மதுரையைச் சேர்ந்தவர். 'இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர் கண்டிப்பாக ஒரு பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு.

நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் 'என்று தொடங்கும் இந்த நூலில் பல அரிய தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

தாம், இந்த நூலினை எழுத முற்பட்டதின் காரணங்களையும் முதலிலேயே பின்வருமாறு பட்டியலிட்டு விடுகிறார் ஆசிரியர்.

'நான் முதன்முதலில் ஈவே ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த எண்ணம் இதுதான்:

1. ஈவேரா தமிழுக்காக பாடுபட்டவர்

2. தாழ்த்தப்பட்டவர்களுக்காக தொண்டாற்றியவர்

3. பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்

4. பொய் பேசாதவர்; முரண்பாடு இல்லாதவர்

இந்த எண்ணத்தின் காரணமாக இவரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் அனைத்தையும் படித்தேன்.

அது மட்டுமில்லாமல் ஈவெராவின் சமகாலத்தில் வாழ்ந்த மபொ.சிவஞானம், ப.ஜீவானந்தம், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், உ.முத்துராமலிங்கத்தேவர், கி.ஆ.பெ.விசுவநாதம், காமராஜர், பாவாணர் போன்றவர்கள் எல்லாம்

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் முரண்பாட்டை எல்லாம் தோலுரித்துக் காட்டியிருப்பதையும் படித்தேன்.

அதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் பற்றி எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ - அந்தக் கருத்துக்கு - அந்த எண்ணத்திற்கு முரண்பாடாகவே அவர் செயல்பட்டு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

ஈவேராவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ள அவரது அடியார்கள் அவருடைய மறுபக்கத்தை மூடி மறைத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் மூடி மறைத்த மறுபக்கத்தை நான் பாரத தேசத்தின் ஒரு நல்ல குடிமகனின் கடமையெனக் கருதி இந்தப் பணியை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு இன்று கொண்டு வந்திருக்கிறேன்.

இந்த நூலைப் படித்து நான் எழுதியிருப்பது சரிதான் என்று திராவிடர்கழக மாயையில் இருக்கும் தோழர்கள் ஒருவராவது ஏற்றுக் கொள்வாரானால் அதுவே இந்த நூலுக்கு உண்மையான வெற்றியாகும். '

மேற்படி அறிமுகத்துடன் தொடங்கும் இந்தப் புத்தகத்தில் -

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு,இஸ்லாத்தில் சாதியைப் பற்றிய பொய்கள்,ஈவேராவின் போலிக் கடவுள் மறுப்புக் கொள்கை, சொல்லும் செயலும் முரணானவையே,வரலாற்றுத் திரிபுகள்,தாழ்த்தப் பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈவேரா ?,வைக்கம் போராட்டம் - ஈவேராவின் புளுகும், காந்தியடிகளின் பங்கும்,ஈவேராவின் ஆணாதிக்க மனோபாவம்,தேசப்பற்று இல்லாத ஈவேரா,பின்னாளில் மணியம்மையின் புளுகும், மூடநம்பிக்கைகளும்,சீடர் வீரமணியின் முரண்பாடுகளும், மூடநம்பிக்கைகளும் என்று பல்வேறு தலைப்புகளில் ஆதாரத்துடன் தம் கருத்துகளை நிறுவுகிறார் ஆசிரியர் வெங்கடேசன்.

பிற்சேர்க்கையாய் 'ஈவேராவைப் பற்றி இவர்கள் ' என்று முத்துராமலிங்கத்தேவர், பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், காமராஜர், ஜீவானந்தம் ஆகியோரின் மேடைப் பேச்சுகளும் தொகுக்கப் பட்டுள்ளன.

'ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு ' என்ற முதல் அத்தியாயத்தில் இருந்து சில சுவையான பகுதிகளைப் பார்ப்போம்.

'ஈவேரா நாட்டாலும், பழக்கவழக்கங்களாலும் தமிழராயினும், மொழியால் கன்னடர்தான். ஆம், அவரது வீட்டுமொழி கன்னடம். தாம் கன்னடர் என்பதை அவரே தமது பேச்சிலும், எழுத்திலும் பன்முறை மிகவும் பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டவர். - (டாக்டர் ம.பொ.சிவஞானம், நூல்-தமிழகத்தில் பிறமொழியினர்) என்ற குறிப்போடு முதல் அத்தியாயம் தொடங்குகிறது. '

ஈவேரா தமிழரா ?

'ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடு பட்டவர் என்றெல்லாம் இன்று ஈவெராவின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலேஉருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் 'தமிழர்

தலைவர் ' என்றெல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரைச் சொல்கிறார்களே - அவரே தம்மை பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா ?

'கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், அண்ணாதுரை தமிழர் ' (பெரியார் ஈவேரா சிந்தனைகள் - முதல் தொகுதி) என்றும், 'நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன் ' (குடியரசு 22/8/1926) என்றும் தம்மை அறிமுகப் படுத்திக் கொள்கிறார். '

'நான் கன்னடியன் ' என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் தமிழர் என்றும், தமிழர் தலைவர் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 'நான் கன்னடியன் ' என்று சொல்லிக் கொண்டே ஈவேரா தமிழ்மொழியையும், தமிழ்ப்புலவர்களையும் விமர்சித்தது கொஞ்ச நஞ்சமல்ல.

'தமிழும் தமிழரும் ' என்ற நூலில் ஈவேரா கூறுகிறார்:

' 'இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் சில புலவர்களின் பெயர்கள் அடிக்கடி அடிபடுகின்றன. அவர்கள் 1.தொல்காப்பியன், 2.திருவள்ளுவன், 3.கம்பன். இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் - தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழ்த்துரோகியே ஆவான். இவன் முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான் கூட சொல்லப் பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கி விட்ட துரோகியாவான். இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் ஆவார்கள். '

20/1/1929 குடியரசு இதழில் திருவள்ளுவரைப் பற்றி மேலும் சொல்வது:

'அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும்,மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம். '

இதுதான் மாபெரும் தமிழ்ப்புலவர்களைப் பற்றிய இவரது பார்வை.

தொல்காப்பியரும், கம்பரும், வள்ளுவரும் துரோகிகள். சரியான பட்டம்!

தமிழ்வளர்க்கப் பார் புகழும் இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்த இவர்கள் தமிழ்த் துரோகிகள் என்றால் அதே தமிழைப் பழித்த ஈவேராவும் துரோகிதானே ?

இப்படிப் பல தகவல்களை தக்க நூலாதாரத்துடன் பட்டியலிடும் ஆசிரியர் பிற்சேர்க்கையாய் அக்காலத்திய தேசியவாதத் தலைவர்கள் சிலரின் பேச்சுகளையும் தொகுத்திருப்பதும் அரிய தகவல்களஞ்சியமாய் உள்ளது.

இதில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 'ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் எடுத்து இட்டுள்ளார்.

பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை:

'தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும் ' என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல் அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால், அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, 'வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு ' என்றுபிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னாபார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல் ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று போடுகிறார்கள்.

அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில் நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.

(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)

In what way Jinnah is not a North Indian ? How is the names Jinnah and Robinson so sweet to you Sir ? How is the name of poor Tilak so bitter to you Sir ? I am not able to understand.

ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன் ? திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன் ? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம் அல்லவா ?

ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது ? அதற்கு மேல் 'வடநாட்டான் திராவிட நாட்டை சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்கவேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ' என்று சொல்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி.

டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச்சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை ? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில் 'டால்மியாபுரம் ' என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா ?

ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்குஇருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.

ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.

அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடுயார்கிட்டே கேட்கிறாய் ? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள்

பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது சொல்லலாம்.

வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த 'புரபகண்டா ' 'செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம் ? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசியஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.

'தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ' என்கிறார்கள். 1937-லேயே ஹிந்திஎதிர்ப்பு வருகிறபோது, 'ஹிந்தியைப் புகுத்தாதே ' எனராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இதுசரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் 'தமிழ் மாகாணம் ' என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்றுசொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

'ரோமாபுரி ராணி ' என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை ?

எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி ? ரோமாபுரி ராணி கதை போதாது என்று 'தங்கையின் காதல் ' என்று ஒரு கதை எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.

அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே ? வேறு என்ன ?

இதுவா தமிழ் நாகரீகம் ?

சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

Link to post
Share on other sites

மா. வெங்கடேசன் பாரதீய பவார்ட் பிளாக் கட்சியை சேர்ந்தவர். அது ஒரு இந்துத்துவ ஜாதிக் கட்சி.

அவர் எக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பறவாயில்லை. பெரியார் பற்றிய விமர்சனத்தை நேர்மையான முறையில் வைத்திருக்கலாம்.

ஆனால் அவர் ஒரே புரட்டுத்தனமாக எழுதியிருக்கிறார்.

50, 60 வருடங்கள் பொதுத் தொண்டு செய்த ஒருவர் ஆரம்பத்தில் என்ன பேசினார், பத்து வருடங்கள் கழித்து என்ன பேசினார், முப்பது வருடங்கள் கழித்து என்ன பேசினார் என்று மாறி மாறி தந்திருக்கிறார். அவைகளை எந்தச் சூழ்நிலையில் என்ன அர்த்தத்தில் பெரியார் கூறினார் என்பதை மறைத்து விடுகிறார்.

இப்படி ஒரு நூலை உலகின் அனைத்து தலைவர்கள் குறித்தும் வெளியிட முடியும். மக்களுக்காக போராட்டங்களில் இறங்கியவர்கள் பேசிய அனைத்தையும் தொகுத்து முரண்பாடுகளாக காட்ட முடியும்.

இது ஒன்றும் கடினாமான வேலை அல்ல. ஆனால் அது நேர்மையான விமர்சனம் அல்ல.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மா. வெங்கடேசன் பாரதீய பவார்ட் பிளாக் கட்சியை சேர்ந்தவர். அது ஒரு இந்துத்துவ ஜாதிக் கட்சி.

அவர் எக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பறவாயில்லை. பெரியார் பற்றிய விமர்சனத்தை நேர்மையான முறையில் வைத்திருக்கலாம்.

ஆனால் அவர் ஒரே புரட்டுத்தனமாக எழுதியிருக்கிறார்.

50, 60 வருடங்கள் பொதுத் தொண்டு செய்த ஒருவர் ஆரம்பத்தில் என்ன பேசினார், பத்து வருடங்கள் கழித்து என்ன பேசினார், முப்பது வருடங்கள் கழித்து என்ன பேசினார் என்று மாறி மாறி தந்திருக்கிறார். அவைகளை எந்தச் சூழ்நிலையில் என்ன அர்த்தத்தில் பெரியார் கூறினார் என்பதை மறைத்து விடுகிறார்.

இப்படி ஒரு நூலை உலகின் அனைத்து தலைவர்கள் குறித்தும் வெளியிட முடியும். மக்களுக்காக போராட்டங்களில் இறங்கியவர்கள் பேசிய அனைத்தையும் தொகுத்து முரண்பாடுகளாக காட்ட முடியும்.

இது ஒன்றும் கடினாமான வேலை அல்ல. ஆனால் அது நேர்மையான விமர்சனம் அல்ல.

ஈ வெ ராமசாமியின் சொற்சிலம்பத்தை நிராகரிப்பவர்கள்.. பார்ப்பர்னர்கள்.. சிவசேனாக்காரர்கள்.. ஆர் எஸ் எஸ் காரர்கள்.. பி ஜே பி தொண்டர்கள்.. பிராமணர்கள்.. என்று நீங்கள் சாதியவாதம் மதவாதம் பேசி பூசி மொழுகலாம்.. ஆனால் பிராமண சமூகத்தையே கடிந்து கொட்டி "சாதி எதிர்ப்பு" என்ற போர்வையில் சாதி காத்ததையும்.. மத எதிர்ப்பு என்ற போர்வையில் மத வெறியை வளர்த்ததும்.. ஈ வெ ரா என்ற உண்மையை மறைத்து எழுதினால்.. ஈ வெ ரா சொன்னதெல்லாம் வேதவாக்கு.. பகுத்தறிவு என்று... ஆமாம் போட்டால் அவர்கள் எல்லாம் பகுத்தரிவுத் தொண்டர்கள்.. சா சோழர்கள்..??! :D:D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தை பெரியார் தமிழ் விரோதி ?

பெரியார் தமிழை முன்னிறுத்தவில்லை, மாறாக 'திராவிடர் இயக்கம்' என்று சொல்லை முன்னிறுத்திவிட்டார், அவர் தம்மை கன்னடர் என்று கருதி இருந்ததாலேயே தான் திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினர், எனவே பெரியார் தமிழுக்கு விரோதியா ? என்கிற ஐயப்பாட்டை நண்பர் அரைபிளேடு வெளிப்படுத்தினார்.

எந்த ஒரு கொள்கைகள் அல்லது மேடை பேச்சுக்கள் ஆகியவை அவை எந்த சூழலில் சொல்லப்பட்டவை என்பதை பொதுமக்கள் நினைவு வைத்திருக்க மாட்டார்கள் என்பதால் குட்டையை குழப்பி மீன் பிடிப்பதில் அதிக மீன்களை சுலமாக பிடிக்க முடியும் என்பது ஒரு வகை உத்திதான். பெரியார் கொள்கைகளை அறிந்த நண்பர் அரைபிளேடு அதுபோல் செய்திருக்க வாய்ப்பில்லை. 'திராவிட' என்ற சொல்லே 'சூத்திர' பாசை என்று இழித்துக் கூறப்பட்ட தமிழை முதன் முதலில் பலுக்கத் தெரியாமல் (உச்சரிப்பில்) திரித்துச் சொல்லப்பட்ட தமிழின் மற்றொரு பெயர் ( பாவணர் கூற்றுப்படி தமிழ் > த்ரமிள > த்ரமிட > திராவிட). பின்னாளில் தமிழிலிருந்து திரிந்து போன மொழிகளே கன்னடம், தெலுங்கு, துளு மற்றும் மலையாளம். இவை பேசப்படும் நிலப்பரப்புகளை நாம் இன்னாளில் திராவிட நிலங்கள் என்று புதிதாக அடையாளப்படுத்தவில்லை. அவை ஏற்கனவே வடமொழியாளர்களால் அப்படி குறியீடு செய்யப்பட்டவைதான். சாதிக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தில் திராவிட என்ற சொல்லை பார்பனீய அல்லது பிராமன சித்தாந்தங்களுக்கு எதிராக பயன்படுத்தி அந்த சொல்லை வெளிக் கொணர்ந்தவர் அயோத்திதாச பண்டிதர். அதன் பிறகே பெரியாரும் அதே சொல்லை திராவிட இயக்கம் என்ற பெயருக்கு பயன்படுத்திக் கொண்டார்.

எதோ தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதிய கொடுமைகள் நடப்பதாக பெரியார் நினைத்திருந்தால் 'தமிழர் இயக்கம்' என்று கூட வைத்திருந்திருப்பார். அவர் கேரளா வைக்கம் வரை சென்று போராடி இருப்பதை நினைவு கூர்ந்து பார்க்கையில் ஒட்டு மொத்த திராவிட நிலப்பரப்பும் சாதிய கொடுமைகளில் இருந்து விடுபடவேண்டும் என்று பரந்த நோக்கில் 'திராவிடர் இயக்கம்' என்று பெயர் சூட்டி இருக்கிறார். பெரியார் தம் இயக்கம் வலுப்பெற்றிருந்தாலும் அதை அரசியல் கட்சியாக்கி நிறுவனப்படுத்த பெரியார் நினைத்தவர் அல்ல. இந்நாளில் திராவிட கட்சிகள் கொள்கைகளை மறந்து 'தூய அரசியல்' செய்து கொண்டிருப்பதை பார்க்கையில் பெரியாரின் முன்னறிதலால்(தீர்க தரிசனம்) உணர்ந்திருந்து, திராவிட இயக்கம் அரசியல் கட்சியாக வளர்ந்தால் அதனால் சமரசங்கள் ஏற்பட்டு கொள்கைகள் திரியும் என்று நன்கு உணர்ந்திருந்தார்.

பெரியார் சுதந்திர நாளை துக்க தினமாக அறிவித்ததற்கு காரணமே ஆட்சி அதிகாரம் என்பது ஆதிக்க சக்திகளின் கைகளில் வீழ்ந்து மீண்டும் இந்திய பழமை வாதத்தைத் தாங்கிப் பிடித்து, மூவர்ண கொடி என்பது நான்கு வருண கொடியாகவே ஆகிவிடும் என்று நம்பியதால் தான். அதையே தான் மகாத்மா காந்தி வேறு வடிவில் வலியுறுத்தினார். அதாவது சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார். பெரியார் சொன்னதும் சரி, மகாத்மா சொன்னதும் சரி இரண்டுமே ஆதிக்க சக்திகளின் கையில் மீண்டும் இந்தியா விழுந்துவிடும் என்று நன்கு உணர்ந்தாதால் ஏற்பட்ட மாற்றுச் சிந்தனைகள். அண்ணாதுரை போன்றவர்கள் சுதந்திர தினம் என்பது சுதந்திர போராட்ட வீரர்களின் குறுதிக்கு கிடைத்த பலன் என்றும் அந்த சுதந்திர தினத்தை துக்க நாளாக அறிவித்தது தவறு என்று போர் கொடி தூக்கிவிட்டு திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாக்கினார். திராவிட கட்சிகளின் உதயம் என்பது சுதந்திரம் அடைந்ததை குறித்த வெளிப்படையான கருத்துக்களால் பெரியாருக்கும் அவரது பற்றாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உருவான இயக்கம் தான். திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தின் மாற்றுக் கட்சியாக உருவாக்கி முதல்வராக அமர்ந்த அண்ணாதுரை அவர்களும் அந்த வெற்றியை பெரியாருக்கு காணிக்கையாக்கி தாம் பெரியாரின் பாசறையை சேர்ந்தவர் என்று பெரியாருக்கே புரியவைத்தார் என்பது பெரியார் திரைப்படத்திலும் பதிவாகி இருக்கிறது.

பெரியாரின் தமிழ்பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்தகாலத்தில் தமிழ் முற்றிலும் சிதைந்ததாகவே இருந்தது. அப்பொழுது இருந்தது தமிழ் 'மொழி' அல்ல, வடமொழியை கலந்து திரிக்கப்பட்ட மணிப்பவள தமிழ் 'பாஷை'. அதன் இயல்பு நடையெல்லாம் தொலைந்து போய் பக்தி இலக்கியங்களையும், வடமொழி மொழிப்பெயர்பான இராமயணம், மகாபாரத கதா கலேசபங்களைத்தான் விழாக்களில் அரங்கேற்றி வந்தனர். பெரியார் அறிந்திருந்த தமிழ் காட்டு மிராண்டி 'பாசை' என்று சொல்லும் அளவுக்கு அது களங்கப்பட்டு இருந்தது. திருக்குறளுக்கு கொடுக்கப்பட்ட திரிக்கப்பட்ட விளக்கங்கள் போன்றே சிலப்பதிக்காரகதைகளின் உட்பொருளை சிதைத்து கற்பை முன்னிறுத்தி அவை உயர்வாக பேசப்பட்டது. இதையெல்லாம் பார்த்தே பெரியார் பழமைவாதம் பேசும் மொழியாக தமிழை நினைத்து தமிழ் 'காட்டு மிராண்டி பாசை' என்றார். பின்னாளில் அவர் கொடுத்த ஊக்கத்தில் தான் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர் போன்றவர் தமிழில் இருந்த வேற்று மொழிச் சொற்களுக்கு மாற்றான புதிய தமிழ் சொற்களை சங்க இலக்கியங்களில் இருந்து அறிமுகப்படுத்தினர். பக்தி பாடல்கள் எழுதினாலும் பெரியாரின் சீர்த்திருத்த எழுத்துக்களைத்தான் அவற்றில் பயன்படுத்துகிறோம் :D பெரியாரின் தமிழ்குறித்த விமர்சனங்கள் பெற்றவர்கள் பிள்ளையை கண்டிப்பது போன்று அக்கரைகளினால் எழுந்த கோபமேயன்றி அது துவேசம் இல்லை.

'மெல்லத் தமிழினி சாகும்' என்று சொல்லில் தமிழ் வீழவேண்டும் என்ற ஆசையில் தான் பாரதி தமிழுக்கு சாபம் கொடுத்தான் என்று நாமாகவே நினைத்து கேள்வி எழுப்பி பாரதியின் தமிழ்பற்றை குறைபட்டுக் கொள்ளவது எவ்வளவு நம் அறியாமையை காட்டுமோ, அது போல் தான் தந்தை பெரியாரின் தமிழ் குறித்த பேச்சுக்கள் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள்.

பதிவர்: கோவி.கண்ணன் at 9/10/2007 09:40:00 AM

தொகுப்பு : கட்டுரைகள், பெரியார்

http://govikannan.blogspot.com/2007/09/blog-post_10.html

மேற் கொண்ட பதிவில் கூறப்படும் அரைபிளேடு என்பவர் ஒரு பதிவர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.ஏனெனில் ஒரு மட்டுறுத்தினருக்கு அந்தச் சொல் களத்தில் கருதாடும் சிலரை நாபகப் படுத்துகிறாதாக கருதுப்பட எழுதி இருந்தார்.ஆகவே இத்தால் சகலருக்கும் அறியத் தருவது யாதெனில் அரை பிளேடு என்பது ஒரு பதிவர் தனக்குத் தானே இட்டுக்கொண்ட பெயர்.குறுக்காலபோவான்,சனியன் மாதிரி சிலபேருக்கு இப்படியான பெயர்கள் வைப்பதில் விருப்பம் ஆக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்! ' - ஈ.வே.ரா.வின் முழக்கம்

தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில் பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை, தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத வெறியர்கள், ஆரிய அடிவருடிகள், துரோகிகள் என்றெல்லாம் முத்துக்களை உதிர்த்துவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரை எதிர்த்து மனசாட்சி கொண்ட ஒரு தமிழனும் கொதித்து எழவில்லையா என்று இன்றைய இளைஞர்கள், தன்மானத் தமிழர்கள்

ஆச்சரியப்படலாம். அப்படிக் கொதித்தெழுந்த பலர் இருந்தனர். ஆனால் அவர்களின் நியாயமான பேச்சுகள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பெருவாரி பத்திரிகைகள்

அவற்றைப் பிரசுரிப்பதும் இல்லை.

சொல்லப் போனால் ஈவேராவின் தமிழ்மொழி மற்றும் தமிழ்மரபு வெறுப்பினைக் காலப்போக்கில் உணர்ந்து கொண்ட அவர் தொண்டரடிப்பொடிகளில் சிலரே அவருக்கு எதிராகக் கொந்தளித்து எழுந்ததும் இன்று திரிக்கப்பட்டுள்ள திராவிட வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை.

உதாரணமாய் ம.வெங்கடேசன் அவர்கள் திரட்டியிருக்கும் மேலும் சில தகவல்களைப் பார்க்கலாம்.

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரில்

மாநிலம் அமையச்செய்த அறப்போராட்டங்களை அறவே வெறுத்து வந்தார் ஈவேரா. தமிழ்நாடு என்ற பெயரே அவருக்கு ஒவ்வாமல் இருந்தது. திராவிடநாடு என்ற பெயரைப் புறம்தள்ளிவிட்டு மபொசியின் தமிழரசுக்கழகம் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு ' என்று முழக்கமிட்டு வந்தது ஈவேராவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இன்னதைத்தான் பேசுவது என்ற விவஸ்தை எப்போதும் இல்லாத நாயக்கர், மபொசியை மனதில் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாய்த் தமிழர்களைத் திட்ட ஆரம்பித்தார்.

11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது:

'தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர்ஆட்சி, தமிழ் மாகாணம் என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். '

(இப்படியான ஈ வெ தான் தமிழர் என்றும்.. தமிழர்களின் விடிவெள்ளி என்றும் இனங்காட்டப்படுகிறார். ஈ வெ யை தமிழகத்தில் முன்னிலைப்படுத்துவதே அநாவசியமானது பித்தலாட்டத்தனமானது...!)

தொடர்ந்து மேடைகளில் தமிழர் என்போர் கருங்காலிகள், பித்தலாட்டக்காரர்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்.

ஈவேரா இப்படி மனம்போனபடி பொதுவாய்த் தமிழர்களை வைதுவருவதைக் கண்டித்துதிருச்சி முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்.

யார் இந்த கி.ஆ.பெ. ?ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய முன்னாள் சீடர்தான் அவர்.

ஈவேராவுடன் ஒன்றாகப் பணியாற்றிப் பின்பு கட்சியின் கொள்கைகளில் இருந்து ஈவேராமசாமி நாயக்கர் நழுவி விட்டதாகக் கூறி வெளிவந்தவர். தமிழுக்காக அரும்பாடு பட்டவர்.அவர் 25.1.1948 அன்று தமிழர்நாடு என்ற ஏட்டில் வரைந்த கட்டுரை

பின்வருமாறு:-

அண்மையில் சென்னை கோகலே ஹாலில் திரு.சி.டி.டி.அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 'தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழரசுக் கட்சி என்பதும், தமிழர் ராஜீயம் என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள் ' என்று பெரியார் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். இது ஏற்கனவே பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

இப்பொழுது 'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் ' என்று எழுதியும், பேசியும் வருகிறார்கள். ஆகவே வேண்டுமென்றே திட்டம் போட்டு வைய முன்வந்திருப்பதாக நன்கு விளங்குகிறது.

இதனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு தமிழ் அரசு என்று கூறக்கூடாதென்றும், திராவிடம், திராவிடர், திராவிடக்கழகம், திராவிடநாடு, திராவிட அரசு என்றே கூறவேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டின் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து வருகிறது. காரணம், ஆந்திர, மலையாள, கன்னட மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே முன்னெடுத்துக் கூறிவரும்போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக்கூடாது ? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.

எவ்விதமாயிருந்தாலும் மாறுபட்ட கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம்தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து இக்கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானதுதானா என்பதைப் பொதுமக்களே கருதிப்பார்க்க வேண்டும்.

ஆந்திர நாட்டுக்குச் சென்று, ஆந்திரர், ஆந்திரநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா ?

கேரள நாட்டுக்குச் சென்று, கேரளர், கேரளநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா ?

கன்னடிய நாட்டுக்குச் சென்று, கன்னடியர், கன்னடநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா ?

இனியேனும் சொல்வாரா ? இதுவரை சொல்லவில்லையென்றால் தமிழர், தமிழ்நாடு என்று சொல்லுகிறவர்களை மட்டும்

பித்தலாட்டக் கருங்காலிகள் என்று சொல்லுவானேன் ?

பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று சும்மா சொல்லி விடுவது மட்டும் போதாது. காரணம் காட்டிக் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாதது அவர்களுடைய ஆத்திரத்தைக் காட்டுகிறதே தவிர உண்மையைக் காட்டுவதாக அறிவாளிகளால் ஒப்ப முடியாது.

மற்றொரு நண்பர், கிராமணியார் (ம.பொ.சி) அவர்களைத்தான் அவ்வாறு கூறியிருக்கிறார்என்று நினைத்து நமக்கு எழுதி இருக்கிறார். இது உண்மையானால் நேரடியாக எழுதி இருக்கலாமே! அப்படி இருந்தாலும் கூட கிராமணியார் ஒரு மாறுபட்ட கருத்தினர் என்பதற்காக அவரது தமிழ்ப்பற்றும், தமிழ்நாட்டுப்பற்றும் நமக்குத் தேவையில்லாமல் போய்விடுமா ?

இதற்காக அவரைப் பித்தலாட்டக்காரர் என்றும் கருங்காலி என்றும் கூறுவது முறையா என்பதையும் அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழர் கழகத்தையும், தமிழரசுக் கழகத்தையும் நேரடியாகத் தாக்கி, தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டுப் பற்றுள்ள மக்களை வேண்டுமென்றே வைதிருக்கிறார் என்று முடிவாகத் தெரிகிறது.இதை மெய்ப்பிக்க கழகம் என்ற சொல்லை எடுத்துவிட்டு, தமிழர், தமிழரசு என்று சுட்டிக்காட்டி வைதிருப்பதே போதுமான சான்றாகும்.

நம்மைப் பொறுத்தவரையில் பெரியாரின் தன்மைக்கு இச்சொற்கள் ஏற்றதல்ல என்றே கூறுவோம்.இப்போது கூறியதை அவர் திரும்பப் பெற வேண்டும். இன்றேல் தாம் கூறியதைக் காரணம் காட்டிமெய்ப்பிக்க வேண்டும். இதுவே தமிழர், தமிழரசு, தமிழ்நாடு தமிழருக்கேஎன்று கூறுகிற 'பித்தலாட்டக் கருங்காலி 'களின் கோரிக்கையாகும்.

(நன்றி: புதிய தமிழகம் படைத்த வரலாறு - ம.பொ.சி)

Link to post
Share on other sites

இந்து மதத்திற்கு எதிராக பரப்புரை நடக்கிறதாம். அதனால் இங்கே சிலர் பெரியாருக்கு எதிராக பரப்புரை நடத்துகிறார்களாம்.

இப்படி ஒரு பரிதாபகரமான வங்குறோத்து நிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டாம்.

பெரியார் சொல்வதைப் பாருங்கள்!

சகோதரர்களே! நான் சொல்வன் எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தான்... "ஒரு பெரியார் உரைத்து விட்டார்' என நீங்கள் கருதி, அப்படியே அவைகளைக் கேட்டு நம்பி விடுவீர்களானால், அப்போது நீங்கள் யாவரும் அடிமைகளே!

- "விடுதலை' (8.10.1951)

நாளை என்ன நடக்கும்?

நாளை, ஒரு சமயம் சமதர்ம காலத்தில், "பிராமணர்கள் (சரீரத்தால் பாடுபடாதவன்) சொத்து வைத்திருந்தால், மற்றவர்கள் பலாத்காரத்தில் பிடுங்கிக் கொள்ளலாம்' என்று ஏற்பட்டாலும் ஏற்படலாம். இந்த மாதிரி மாறுதல்கள் காலத்திற்கும் பகுத்தறிவிற்கும், நாட்டின் முற்போக்கிற்கும் ஏற்றாற்போல நடந்துதான் தீரும். எனவே நான் மாறுதலடைந்து விட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை. நாளை நான் எப்படி மாறப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால், நான் சொல்வதைக் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள்

இதைத்தான் நாமும் சொல்கிறோம். எதை யார் சொன்னாலும், அதை தீர ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். சொல்வது பெரியார் என்பதற்காகவோ, அல்லது பூணூல் கட்டிய பார்ப்பான் என்பதற்காக அப்படியே கேட்காதீர்கள்.

நான் பகுத்தறிவு உள்ளவன். அதனால் பெரியார் சொன்ன அனைத்தையும் கேட்பதில்லை. எனக்கு சரி என்று படுவதைத்தான் ஏற்கிறேன். மற்றவைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு போகிறேன்.

ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

உங்களுக்கு தெரியாத ஒரு மொழியில் ஏதாவது எழுதியிருந்தால், அதில் கையெழுத்துப் போடுவீர்களா? ஆனால் செய்கிறீர்கள்: பிறப்புத் தொடக்கம், இறப்பு வரைக்கும் நடக்கின்ற அத்தனை விழாக்களிலும் தெரியாத ஒரு மொழியில் பார்ப்பான் உங்களை திட்டித் தீர்க்க நீங்கள் தலையாட்டி விட்டு வருகிறீர்கள்.

நீங்கள் வணங்கிய கடவுளை எல்லாம் இல்லாமல் செய்துவிட்டு, அவர்கள் தங்களுடைய கடவுளை தங்களுடைய மொழியில் பூசை செய்து கொண்டு உங்களை தோப்புக் கரணம் போடச் சொல்ல நீங்கள் போடுகிறீர்கள்.

கடவுள் இருக்கும் கோயிலுக்குள்ளும், கருவறைக்குள்ளும் உங்களுக்கு வருவதற்கு உரிமை இல்லை, நீங்கள் கீழ்சாதி மக்கள் என்று சொல்ல அதையும் மானம் ரோசம் இல்லாமல் கேட்கிறீர்கள்

இதிலே எந்த ஒரு மாற்றத்தை செய்வதற்கும் தைரியம் இன்றி தத்துவ விளக்கம் சொல்லிவிட்டு தப்பி ஓடுகிறீர்கள்

என்றைக்காவது தன்மானத்தோடு ஏன் என்ற கேள்வி கேட்டது உண்டா? அடிமைப் புத்தியோடுதானே இருக்கிறீர்கள். பார்ப்பான் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பச் செய்வது அடிமைப் புத்திதானே?

எப்பொழுது நீங்கள் தன்மானம் உள்ள மனிதராகப் மாறப் போகிறீர்கள்?

பெரியார் சொல்வதை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். நல்ல விடயம். ஆராய்ந்து நல்லன இல்லாதவற்றை புறம் தள்ளுங்கள். பெரியாருக்கு அடிமையாக இருக்காதீர்கள்.

அப்படியே மதங்களிற்கும் அடிமையாக இருக்காதீர்கள். அங்கும் ஏன் என்று கேட்டு மாற்றத்தை கொண்டு வாருங்கள். தன்மானம் உள்ள மனிதராக வாழப் பழகுங்கள்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

காஞ்சி பிலிம்ஸ் said...

பெரியாரை, யார்? என்று கேட்கும் இந்த தலைமுரையினருக்கு, பெரியாரை அரிமுகம் செய்ய இப்படியான எதிர்விமர்சன நூல்களே தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த விமர்சன நூலுக்கு அமையப்போகும் பதில்கள், பெரியாரை கொஞ்சம் தான் தெரியும் என்று சொல்லும் என்னை போன்றவர்களுக்கு, பெரியாரை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதே பொல் இந்த நூலை எழுதியவரின் அடையாளம் நமக்குத் தேவையில்லை. அதை யார் உயர்த்தி பிடித்துள்ளார்கள் என்பதை தான் கவனிக்க வேண்டும். சோ.ராமசாமிக்கு ஜால்ரா போடும் விசுவாமித்ரன் என்பது ஒன்றே போதும் இந்த நூலின் நோக்கத்தை புரிந்துகொள்ள. அனால் இந்த நூல் பெரியாரின் பெரியாரிசத்தை இன்னும் உச்சிக்கு கொண்டுபோகும் என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். கீதையின் மறுபக்கத்திற்கு எதிர்வினை என்று நினைத்து யானை தன் தலையிலேயே மண்ணைவாரி போட்டு கொண்டுவிட்டது. இந்த நூலுக்கு நாம் ஒரு வகையில் நன்றி செலுத்தியாகதான் வேண்டும்.

என்னுடைய பதிவை முழுவதுமாக மீண்டும் ஒரு முரை வெளியிட்டதற்கு நன்றி திரு.ராகவன். காஞ்சி பிலிம்ஸ்க்கு இருக்கும் வாசகர் supportடை விட உங்களுக்கு அதிகம்.

// இதை எழுதியிருப்பவர்

கண்டிப்பாக ஒரு பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு.

நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்'//

கண்டிப்பாக அதில் சந்தேகம் இல்லையென்பேன்.தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த ஒருவரை விட்டே இந்த நூலை எழுத வைத்த "அவாளின்" சாணக்கியதனத்தை புரிந்துகொள்ள "மற்ற" சமூகத்திற்கு இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டு காலம் பிடிக்குமோ

http://dondu.blogspot.com/2006/09/blog-post.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் என்ற மாயைப் பதத்தை திணித்து தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளங்களை திட்டுமிட்டு அழிப்பதே ஈ வெ ராவின் தொழில். அவர் ஒரு தமிழ் தேசியத் துரோகி என்பதை மேலுள்ள கட்டுரைகள் அனைத்தும் வெளியிடுவதோடு இந்த உண்மை.. ஈ வெ ரா வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்ந்த தமிழர்களால் இனங்காட்டப்பட்டுள்ளமை குறித்து ஆதாரங்களையும் முன் வைத்திருப்பது மிகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

திராவிட வாதத்தை காவித்திரிபவர்கள்.. சிந்திக்க வேண்டிய வேளையும் இதுதான்..! தமிழர் தமிழ் நாடு.. தமிழ் தேசியம் இவை இருக்க.. நமக்கு திராவிடம் என்ற மாயையும் திராவிடத்தை முன்னுறித்தி தமிழர்களின் அடையாளத்தை அழிக்க நினைத்த ஈ வெ ராவும் தேவையில்லை.. அதைப் புகுத்தி தமிழர்களின் இருப்பை அழிக்க நினைத்தவர்களை முன்னிலைப்படுத்தலும் தேவையில்லை..! தமிழர்கள் எனியும் கருங்காலிக் கூட்டமாக இருக்க முடியாது. அதற்கான தேவையும் இல்லை. ஈழத்தின் தமிழீழத் தலைவன் அதை மாற்றி அமைத்து வருகிறான். தமிழர்களுக்கு என்றொரு நாடு உருவாகும் வேளையிலாவது தமிழர்கள் திராவிடத்துக்குள் பதுங்கி இருப்பதை நிறுத்தி.. தமிழர்களாக தங்கள் தனித்துவ அடையாளங்களுடன் உலகில் இனங்காணப்பட தங்கள் அடையாளங்களோடு வெளி வர வேண்டும். அவ்வேளை தமிழ் சமூகத்தின் சமூக விடுதலையையும் நாம் காண வேண்டும். திராவிடம் என்ற போலிப் போர்வை தமிழர்களுக்கு எனியும் அவசியமில்லை. தமிழர் நாம் எமது பாரம்பரியம் எங்கிருப்பினும்.. தமிழர்.. தமிழ் தேசம் என்போம். திராவிட போலிப் போர்வை எமது தனித்துவத்தை அழிக்க திணிக்கப்பட்ட ஒன்று. அதைத் திணித்தவர்களையும் இனங்கண்டு முற்றாகப் புறக்கணிப்போம். இந்த மாற்றம் தமிழகத்திலும் உலகெங்கும் தமிழர்கள் மத்தியில் உணரப்பட வேண்டும். :P

தமிழன் கன்னடனா கொல்லப்படும் போது தமிழன் என்று உச்சரிப்பவர்களே.. இன்னும் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்துவது வெட்கக் கேடானது..! :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் ரசிகர்கள், அவர் கொள்கைகளை எதிர்க்கிறவர்கள் எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரை. 19.9.2004 ஜூனியர் விகடனில் ஞாநி எழுதிய கட்டுரை.

தீண்டாமை என்ற மிகப் பெரிய சமூகக் கொடுமைக்கு எதிராக இருபதாம் நூற்றாண்டில் நடந்த முதல் மாபெரும் போராட்டம்... வைக்கம் போராட்டம்! 1924-ல் நடந்த அந்தப் போராட்டத்துக்குக் காரணம், மாதவன் என்ற ஈழவ சாதி வக்கீலை திருவனந்தபுரம் நீதிமன்றத்துக்குள் பணிக்குச் செல்லவிடாமல் தடுத்ததுதான். நீதிமன்றம் அரண்மனை வளாகத்தில் இருந்தது. மகாராஜா பிறந்த நாளுக்காக யாகம் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஈழவர் அந்த வளாகத்தில் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று மாதவன் தடுக்கப்பட்டார்.

கேரளா முழுவதும் கோயில்களை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்ற தடை இருந்தது. இதையெல்லாம் எதிர்த்துதான் வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில், நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்தை முன்னெடுத்த 19 முக்கிய தலைவர்களும் கைதானதும், போராட்டம் தொய்வடைந்தது. சிறையில் இருந்த தலைவர்கள் ஜார்ஜ் ஜோசப்பும் கேசவ மேனனும் அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் செயலாளருக்குக் கடிதம் அனுப்பினார்கள். 'நீங்கள் வந்து தலைமை ஏற்றால்தான் போராட்டம் தொடர முடியும். உடனே வாருங்கள்' என்ற அந்தக் கடிதம் வந்தபோது, பண்ணைபுரத்தில் பொதுக்கூட்டம் பேசிவிட்டு, ஈரோடு திரும்பிவந்த காங்கிரஸ் செயலாளர் உடனே வைக்கம் சென்றார். அவர் தலைமை ஏற்றபிறகுதான் வைக்கம் போராட்டம் சூடுபிடித்தது. அவர்தான் 'அய்யா', 'பெரியார்', 'தந்தை பெரியார்' என்றெல்லாம் அன்புடன் பலராலும் அழைக்கப்படுகிற ஈ.வெ.ராமசாமி (1879-1973).

பெரியார் தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் காரராகத்தான் தொடங்கினார். ஈரோடு நகராட்சித் தலைவராகவும் பெரும் வியாபாரியாகவும் இருந்தவரை அரசியலுக்கு அழைத்துவந்தவர்கள் ராஜாஜி, வரதராஜுலு நாயுடு இருவரும்தான்.

அரசியலுக்கு வந்ததும் அரசாங்கப் பதவிகளைப் பிடிப்பதுதான் பலருக்கும் லட்சியம். ஆனால், பெரியார் அரசியலுக்குள் நுழையும்முன்பு, தான் வகித்துவந்த பல்வேறு பதவிகளை உதறிவிட்டு வந்தார். வியாபாரிகள் சங்கத் தலைவர், தென்னிந்திய வியாபாரிகள் சங்க நிர்வாக சபை உறுப்பினர், இன்கம்டாக்ஸ் டிரிப்யூனல் கமிஷனர், டவுன் ரீடிங் ரூம் செக்ரெட்டரி, ஹைஸ்கூல் போர்ட் செக்ரெட்டரி, தாலூகா போர்ட் பிரசிடெண்ட், முனிசிபல் சேர்மன், ஜில்லா போர்ட் மெம்பர், வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரெட்டரி, ப்ளேக் கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான பிரசிடெண்ட், உணவு கண்ட்ரோல் டிஸ்ட்ரிப்யூஷன் ஆபீஸர் உட்பட மொத்தம் இருபத்தொன்பது பதவிகளையும் விட்டுவிட்டு அரசியலில் நுழைந்தார். கடைசிவரை தேர்தலில் போட்டியிடவில்லை. எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. அவர் மறைந்தபோது அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். காந்திய இயக்கம், பொது உடைமை இயக்கம், திராவிட இயக்கம் என்று தமிழ்நாட்டின் மூன்று பெரும் இயக்கங்களிலும் தீவிரப் பங்காற்றிய முதல் பெரும் தலைவர் அவர்தான். காங்கிரஸில் காந்தியின் தலைமையை ஏற்று இருந்தபோது, தமிழகம் முழுவதும் கதர் துணியைப் பரப்பினார். தன் குடும்பம் முழுவதும் கதர் உடுத்தச் செய்தார். மதுவிலக்குப் போராட்டத் துக்காக, தனக்குச் சொந்தமான கள் இறக்கும் தென்னைமரங் களையே வெட்டித் தள்ளினார். ஒத்துழையாமை இயக்கத்துக்காக நீதிமன்றப் புறக்கணிப்பு செய்து, வழக்குகளின் மூலம் தனக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களை இழந்தார்.

கொள்கையில் உறுதி என்பதை அவர் கடைசிவரை தளர்த்தியதில்லை. ராஜாஜியுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான நண்பராக இருந்தார். ஆனால், கொள்கைப் போராட்டத்தை விட்டுக்கொடுத்த தில்லை. ராஜாஜி இறந்தபோது தன் நோயையும் பொருட்படுத்தாமல், சக்கர நாற்காலியில் சென்று இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். ‘சுயநலமற்ற வரான ராஜாஜி, இட ஒதுக்கீடு, சாதி ஒழிப்பு என்ற இரண்டையும் ஏற்றுக்கொண்டு, காங்கிரஸ் கட்சி மூலமாகவே அதைச் செயல்படுத்தியிருந்தால், நான் கடைசிவரை அவர் தொண்டனாகவே மகிழ்ச்சியுடன் என் காலத்தைக் கழித்திருப்பேன்’ என்று அப்போது பெரியார் எழுதினார்.

அநாதை இல்லக் குழந்தைகளுடன்..

வைக்கம் போராட்டத்திலேயே அவருடைய கொள்கை உறுதியைப் பார்க்கலாம். காந்தி, ராஜாஜி, சீனிவாச அய்யங்கார் என்று சக காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக்கொண்டும்கூட போராட்டத்தை நிறுத்திவிட்டு, சென்னை திரும்ப மறுத்தார் பெரியார்.

இந்தப் போராட்டத்துக்காக கைதான பெரியார், சிறையில் இருந்தபோது, அவருக்கு எதிராக சத்ரு சம்ஹார யாகம் ஒன்றை கேரள சனாதனிகள் நடத்தி னர்கள். யாக முடிவில் எதிரி (ஈ.வெ.ரா.) சாகவேண்டும் என்பது நோக்கம். ஆனால், யாகத்தின் முடிவில் மகாராஜா இறந்துவிட்டார். பெரியாரைக் குறிவைத்து அனுப்பிய யாக பூதம் திருப்பிக்கொண்டு ராஜாவையே கொன்றுவிட்டது என்று சிறை வார்டன் தன்னிடம் சொன்னபோது, அப்படிச் சொல்வதும் மூட நம்பிக்கைதான் என்றார் பெரியார்.

தீண்டாமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, வகுப்புவாரி இட ஒதுக்கீடு, பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற பெரியாரின் கொள்கைகள் அளவுக்கு முக்கியமானவை, அவருடைய பெண்ணுரிமைக் கோட்பாடுகள். தன் மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மாள் இருவரையும் போராட்டங்களுக்குத் தலைமை ஏற்க வைத்தார். சடங்குகள் இல்லாத எளிமையான சுயமரியாதை திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். 1929-லிருந்து நான்கே ஆண்டுகளில் அப்படிப்பட்ட எட்டாயிரம் திருமணங்களை சுயமரியாதை இயக்கம் நடத்தி வைத்தது. திருமணம் செய்யும் உரிமை, செய்யாமல் இருக்கும் உரிமை, பிடிக்காத திருமணத்திலிருந்து வெளியேறும் உரிமை, திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் உரிமை, குழந்தை பெறும் உரிமை, பெறாமல் இருக்கும் உரிமை, இவையெல்லாம் பெண்ணுக்கு உரிய உரிமைகள் என்று அவர் முன்னோடியாக பிரசாரம் செய்திருக்கிறார். பெண்களுக்கு எல்லா உத்தியோ கங்களிலும் சரி, பாதி இட ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று 80 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் போட்டவர் அவர்.

இன்று கல்வி நிலையங்களிலும் அரசு வேலைகளிலும் எல்லா சாதியினரும் இருப்பதற்கான முக்கியமான காரணங் களில் ஒருவர் பெரியார். அவர் இதற்காகப் போராடத் தொடங்கிய காலத்தில், கல்லூரிப் படிப்பு படித்தவர்களில் நூற்றுக்கு 65 பேர் பிராமணர்கள். மீதி 35 பேர்தான் எல்லா சாதியினரும். ஆனால், அன்று மக்கள் தொகையில் நூற்றுக்கு 97 பேர் பிராமணரல்லாதவர்கள்தான். அன்று அரசாங்க வேலைகளில் உயர் பதவிகளில் நூற்றுக்கு 47 இடங்களில் பிராமண அதிகாரிகள், 30 இடங்களில் ஆங்கிலேயர்கள், 23 இடங்கள்தான் மீதி எல்லா சாதியினருக்கும்.

ஒரு பெரும் சமுதாயத்தின் கல்வி நிலை, வேலை நிலையை மாற்றி அமைத்த பெரியார், மூன்றாவது வகுப்புக்கு மேல் படித்தவரல்ல. ஆனால், அவர் கொண்டுவந்த மொழிச் சீர்திருத்தத்தைப் பின்பற்றித்தான் இந்தக் கட்டுரைகூட எழுதப்படுகிறது. காந்தி, நேரு, போஸ், திலகர், ராஜாஜி என்று மெத்தப் படித்தவர்களே பெரும் தலைவர்களாக இருந்த காலகட்டத்தில், பெரியார்தான் மூணாங்கிளாஸ் படித்த தலைவர். ஆனால், பெரும் படிப்பு படித்த பலரை அவரது இயக்கம் ஈர்த்து, அவருக்குத் தொண்டர்களாகப் பணிபுரியச் செய்தது. காங்கிரஸிலிருந்து சுயமரியாதை இயக்கம்வரை பெரியார்கூட நெருக்கமாக இருந்து அவர் நடத்திய பத்திரிகைகளில் எழுதிய மற்றும் பொறுப்புவகித்த எஸ். ராம நாதன், குத்தூசி குருசாமி, அண்ணா, கி.வீரமணி, ஆனைமுத்து எனப்பலரும் முதுநிலைப் பட்டதாரிகள்.

ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக் காக சாகும்வரை ஓயாமல் பிரசாரம் செய்ததில் அவரை மிஞ்ச உலக அளவில் கூட யாரும் இல்லை. வருடத்தில் பாதி நாள் டூர்தான். மீட்டிங்தான்.

90-வது வயதில் 41 நாள் டூர். 180 கூட்டம்.

91-வது வயதில் 131 நாள் டூர். 150 கூட்டம்.

93-வது வயதில் 183 நாள் டூர். 249 கூட்டம்.

94-வது வயதில் 177 நாள் டூர். 229 கூட்டம்.

வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 38 நாள் டூர். 42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார். சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருந்தது.

பெரியாரின் வாழ்க்கை, சுமார் 500 எபிசோடுகளில் ஒரு மெகா சீரியலாக எடுப்பதற்கான தகுதியும் தகவல்களும் நிரம்பியது. அதை ஐந்து எபிசோடுகளாக எடுக்க பொதிகை சேனல் எனக்கு வாய்ப்பளித்தது. என் மீடியா அனுபவங்களில் இது மறக்கமுடியாத செறிவான அனுபவம். பெரியார் பெயரைச் சொல்லி அதிகாரத்தை, ஆட்சியைப் பிடித்தவர்கள் நடத்தும் சேனல்கள் எதுவும் இன்றுவரை பெரியார் பற்றி அரை மணி நேர நிகழ்ச்சிகூட தயாரித்ததில்லை என்பதும் பெரியார் வாழ்க்கையின் விநோதங்களில் ஒன்று. அவர்களுக்கு, பெரியாரின் தேவை முடிந்து விட்டிருக்கலாம்... ஆனால், தமிழக மக்களுக்கு இன்றும் பெரியார் தேவைப்படுகிறார் என்பதுதான் உண்மை.

ஓ... அடுத்த ஈ.வெ.ர

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றி ருக்கும் படங்களை எடுத்தவர், பத்திரிகைத் தொடர்பாளரான ஈ.வெ.ரா. மோகன். பெயரைப் பார்த்ததும், இவர் பெரியாரின் சொந்தக்காரர் என்றுதான் பெரும் பாலும் நினைப்பார்கள். ஆனால் இவர், ஈரோடு வெங்கடேசனின் மகன் ராம்மோகன். அவர் பெரியாருடனான தன் புகைப்பட அனுபவத்தைச் சொல்கிறார்.

''பிராமணரான நான் அக்ரஹாரத்தில் பிறந்து வாழ்ந்தாலும் பெரியார்மேல அபார ரசிப்பு உள்ளவன். ஒருநாள் 'பெரியாரையும் படமெடுத்தா என்ன?'னு தோணுச்சு. அவர் வீட்டுக்குப் போனேன். உள்ளே கூட்டிட்டுப் போய் என்னை பெரியாரிடம் 'ஈ.வெ.ரா.மோகன்’னு அறிமுகம் செய்து வெச்சாங்க. 'ஓ... அடுத்த ஈ.வெ.ரா-வா?’னு கேட்டவர் என்னைப் பற்றி விசாரிச்சார்.

நான் 'என் பூர்வீகம் ஈரோடுதான்’ என்றபடி, என் தாத்தா, அப்பா பெயரையெல்லாம் சொன்னேன். பெரியார் ஈரோடு நகர சேர்மனாக இருந்த காலத்தில் என் தாத்தா முனிசிபல் கவுன்சிலரா இருந்தவர். அதையெல்லாம் சொன்ன பெரியார், நான் விரும்பினபடியெல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

படுத்தபடி ஒரு போஸ், புத்தகம் படிக்கும்விதமாக ஒரு போஸ், அவருக்குப் பிரியமான நாய்களை வைத்துக்கொண்டு ஒரு போஸ்னு பல கோணங்களில் எடுத்தேன். அதுதான் நான் பெரியாரை முதலும் கடைசியுமாகப் பக்கத்தில் பார்த்தது. ஆனா, 'அவரோடு நின்று ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு தோணாமல் போச்சே’னு இன்றுவரை வருத்தப்பட்டுக்கிட்டே இருக்கேன்’’ என்ற ஈ.வெ.ரா.மோகன்

http://idlyvadai.blogspot.com/2007/02/blog-post_07.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரில்

மாநிலம் அமையச்செய்த அறப்போராட்டங்களை அறவே வெறுத்து வந்தார் ஈவேரா. தமிழ்நாடு என்ற பெயரே அவருக்கு ஒவ்வாமல் இருந்தது. திராவிடநாடு என்ற பெயரைப் புறம்தள்ளிவிட்டு மபொசியின் தமிழரசுக்கழகம் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு ' என்று முழக்கமிட்டு வந்தது ஈவேராவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இன்னதைத்தான் பேசுவது என்ற விவஸ்தை எப்போதும் இல்லாத நாயக்கர், மபொசியை மனதில் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாய்த் தமிழர்களைத் திட்ட ஆரம்பித்தார்.

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரில்

மாநிலம் அமையச்செய்த அறப்போராட்டங்களை அறவே வெறுத்து வந்தார் ஈவேரா. தமிழ்நாடு என்ற பெயரே அவருக்கு ஒவ்வாமல் இருந்தது. திராவிடநாடு என்ற பெயரைப் புறம்தள்ளிவிட்டு மபொசியின் தமிழரசுக்கழகம் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு ' என்று முழக்கமிட்டு வந்தது ஈவேராவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இன்னதைத்தான் பேசுவது என்ற விவஸ்தை எப்போதும் இல்லாத நாயக்கர், மபொசியை மனதில் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாய்த் தமிழர்களைத் திட்ட ஆரம்பித்தார்.

11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது:

'தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர்ஆட்சி, தமிழ் மாகாணம் என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். '

இந்த ஒரு குறிப்பும் போதும்.. ஈ வெ ராவின் உள்நோக்கத்தை வெளிக்காட்ட. ஈ வெ ராவை முன்னிலைப்படுத்தல்.. தமிழ் தேசிய விரோதம் என்றே கொள்ளப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் மத ரீதியில் அவரின் கொள்கைகளை வெறுத்தவர்களின் பங்கு அவரை தெளிவாக இனங்காட்ட உதவியுள்ளது. இவ்வகை ஆதாரபூர்வக் குறிப்புகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு.. ஈ வெ ரா தொடர்பாக போலித் தோற்றம் தமிழர்கள் மத்தியில் வளர்க்கப்படுவது தமிழ் தேசியத்துக்கும் தமிழர் தேசங்களின் இருப்புக்கும் ஆபத்தானது. தமிழர்களைப் பொறுத்தவரை அந்நியர்களை விட ஆபத்தானவர் ஈ வெ ராவ் என்ற கன்னடர்.எமது சமூக விடுதலையை நாமே தீர்மானிப்போம். ஈ வெ ரா தேவையில்லை எமக்கு.. கருத்துரைக்க.

*** தணிக்கை

Link to post
Share on other sites

எங்களுக்கு " தமிழர்களுக்கு " தமிழ் நாட்டாருக்கு - இந்திய அரசாங்கம் வேண்டாம். தமிழ்நாடு - தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு ஆட்சியில் - இந்திய யூனியனில் இருக்க விரும்ப வில்லை. நாங்கள் எங்களை, நாட்டை, தனிப்பட்ட பூர்ண சுயேச்சையுள்ள தனியரசு நாடாக ஆக்க விரும்புகிறோம். ...மத்திய கூட்டாட்சியிலிருந்து பிரிந்து கொள்ள ஆசைப்படு கிறோம். ...ஆகவே இந்திய தேசியக் கொடியை கொளுத்துவது " இந்தியக் கூட்டாட்சி என்பதில், தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் பிரஜைகளாக இருக்க சம்மதப்பட வில்லை " என்கின்ற எங்களுடைய இஷ்டமின்மையைக் காட்டுவதே யாகும்.

- "விடுதலை' (20.7.1955)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழப் போராட்டத்திலும் தந்தை பெரியாரின் தாக்கம்!

இலங்கையில் தமிழ்த் தேசிய உணர்வு உருவாக்கத்திலும் எடுத்துரைப்பிலும் திராவிட இயக்கத்தின் பெரியாரின் செல்வாக்கு மிகக் கணிசமானதாகும். இலங்கையில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கு மிகவும் வரையறுக்கப்பட்ட ஒரு வரவேற்பே இருந்தது. ஆனால் இருந்தது என்பது உண்மை. 1920,30 களில் 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது.

உதாரணமாக, கரவெட்டி என்னும் கிராமத்தில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார். இத்தகைய ஒரு குழுமம் கிழக்கிலங்கையிலுமிருந்தது. பிற்காலத்தில் தமிழரசுக் கட்சியின் பத்திரிக்கையின் ஆசிரியராக விளங்கிய எஸ்.டி. சிவநாயகம் மட்டக்களப்பில் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பினார்.

அவர் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்களாக செ. இராசதுரை (பின்னர் பாராளுமன்ற அங்கத்தினர்/அமைச்சர்), எஸ்.இ. கமலநாதன் ஆகியோர் விளங்கினர். அரசியல் நிலைப்பட்ட தமிழின உணர்வு வளர்ச்சியில் 1949 இல் தோற்றுவிக்கப்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கிய ஆர்வம் காட்டிற்று. இந்தக் கட்சியினர் தங்கள் கட்சிப் பிரசாரங்களில் அண்ணாதுரை, திமுகவின் கருத்துப் பரப்புகைக்குப் பயன்படுத்திய சொற்பொழிவு முறைமையைப் பயன்படுத்தினர். இவர்களும் பாசறை, தளபதி போன்ற பதங்களைப் பயன்படுத்தினர்.

இத்தகைய பின்பற்றுகைகளுக்கு மேலே சென்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், திராவிட இயக்கத்தினருடன் நேரடித் தொடர்புகளும் ஏற்படுத்தினர். தமிழரசுக் கட்சித் தலைவர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் அ. அமிர்தலிங்கமும், பெரியாரையும் அண்ணாதுரை அவர்களையும் சந்தித்தனர் (தமிழரசுக் கட்சி வெள்ளிவிழா மலர் 1974).

இலங்கையில் வாழ்ந்து வரும் இந்திய வழிசாவழித் தமிழரிடையே, குறிப்பாக 1950 களில் திராவிட இயக்கம் முக்கியமான அரசியற் செல்வாக்குக் கொண்டிருந்தது. இச்செல்வாக்கு இலங்கையின் மலையகத்தில் (Hill Country of Sri Lanka) உள்ள தோட்டத் தொழிலாளரிடையே பரவத் தொடங்கியதும் அக்கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. இலங்கைத் திராவிட இயக்கத்தின் வரலாற்றில் இளஞ்செழியனுக்குள்ள இடம் முக்கியமானதாகும்.

இந்த வரலாற்றுண்மையை அண்மையில் வெளிவந்த பெ.முத்துலிங்கத்தின் 'எழுதாத வரலாறு' (கொழும்பு 1997) என்னும் நூல் வெளிக்கொணர்ந்துள்ளது.

* * * * * * * * * * * * * * * * * *

பெரியார் பற்றிய இத்தகைய சிந்தனைகள் தமிழ்த் தேசியத்தினைத் தமது அரசியல் நிலைபாடாகக் கொள்கின்றன. இலங்கையில் நடைபெறும் ஆயுதந்தாங்கிய ஈழத்துத் தமிழர் விடுதலை இயக்கத்தின் ஊடாட்டம், இந்தச் சிந்தனை உருவாக்கத்திற் கணிசமான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது என்று கூறலாம்.

இன்று முன்னணியில் நிற்கும் புலமை முக்கியத்துவமுள்ள பல இளைஞர்கள் இந்தக் கண்ணோட்டத்திற் பிராமணியத்தின் கடுமையான விமர்சகர்களாக உள்ளனர் என்பது கவனத்திற்கொள்ளப்படவேண்டிய ஒரு சமூகவியல் உண்மையாகும்.

இவர்கள் பற்றி இவ்வாய்வின் தொடக்கத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.

இவர்களின் இந்த எழுத்துச் சிந்தனைப் போக்குகள், கடந்த சில வருடங்களாகக் காணப்படாத முறையில் தமிழ்நாட்டின் சிந்தனை வெளிப்பாடுகளில் இருதுருவத் தன்மையைக் காட்டுகின்றன.

இத்தகைய ஒரு புலமை நிலை தோன்றுவதற்கான இன்னுமோர் அரசியற் பின்புலத்தையும் அறிந்துகொள்வது அவசியமாகும்.

முன்னர் பொதுவுடைமைக் கட்சிகளோடு தொடர்புகொண்டிருந்த, அவற்றிலிருந்து பிரிந்து சென்றவர்களே பெரியாரின் மீள்கண்டுபிடிப்பில் முன்னுக்கு நிற்கின்றனர்.

ஆனால், இந்த மீள்கண்டுபிடிப்பில் ஒரு முக்கிய அமிசம் உள்ளது. இந்தப் பெரியாரிய மீட்பு, செயற்பாடு சார்ந்த ஓர் அரசியல் நடைமுறையாக மாறாது, பண்பாட்டுத் துறை நடவடிக்கையாகவே உள்ளது என்பது முக்கியமான ஒரு விடயமாகும்.

* * * * * * * * * * * * * * * * * *

நூல் : திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு

நூல் ஆசிரியர் : கா. சிவத்தம்பி

மின்நூலாக்கம் : இ. பத்மநாப ஐயர்

இந்நூலை முழுமையாக வாசிக்க இங்கே சொடக்கவும்.

http://dravidatamils.blogspot.com/2007/01/blog-post_19.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியமும் தந்தை பெரியாரும்-

-முனைவர் த.செயராமன்.

(முனைவர் த.செயராமன்- தமிழ்த்தேசிய ஆய்வறிஞர்,வரலாற்றுத் துறைப் பேருரையாளர்,அ.வ.அ கல்லூரி,மன்னம்பந்தல்,மயிலாடு

Link to post
Share on other sites

வரலாறு தெரியாதவர்கள் இங்கே தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இந்தியாவில் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் இருக்கவில்லை. தெலுங்கு தேசம், கன்னடம், கேரளா என்று அனைத்தையும் உள்ளடக்கி சென்னை மாகாணம் என்றுதான் இருந்தது. இதைத்தான் "திராவிடநாடு" பெரியார் குறிப்பிட்டார். சென்னை மாகாணத்தை பல மாநிலங்களாகப் பிரிக்காது, ஒரு தனிநாடாக பிரிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருந்தது. அந்தத் தனிநாட்டைத்தான் அவர் திராவிட நாடு என்று சொன்னார்.

அத்துடன் பெரியார் கன்னடர், மலையாளிகள், தெலுங்கர் என்று அனைவரின் தாய்மொழியாக தமிழைத்தான் பார்த்தார்.

தமிழன், தெலுங்கன், கன்னடியன் மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன் தமிழ் மகனல்லன்; தமிழை அறியாதவன்; ஆரியத்திற்குச் சோரம் போனவன். நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய ஆதிக்கத்திற்கு ஆக்கந்தேட முயற்சிப்பவன்.

- "மொழியாராச்சி' நூலிலிருந்து (ஆதாரம் தந்த நெடுக்காலபோவனுக்கு நன்றி)

தமிழை தாய் மொழியாகக் கொண்ட இந்த மக்களுக்கு ஒரு திராவிட நாடு அமைப்பதுதான் ஆரம்பத்தில் பெரியாரின் இலட்சியமாக இருந்தது. தனிநாடு கேட்கின்ற பெரியாருக்கு தனிமாநிலம் கேட்பவர்கள் போராட்டத்தை பலவீனப்படுத்துபவர்களாக தென்பட்டதில் ஆச்சரியம் இல்லை.

திராவிட நாட்டுக் கொள்கை மற்றைய திராவிட இனங்கள் மத்தியில் வரவேற்பு பெறாததை உணர்ந்த பெரியார் பின்பு தனித் தமிழ்நாடு அமைய வேண்டும் என்றும் முழக்கமிட்டார்.

தமிழர்களை தமிழர்கள் ஆள வேண்டும் என்று விரும்பியவர் பெரியார். அவர் காமராஜரை ஆதரிக்கும் போது கூட, காமராஜர் பச்சைத் தமிழன் என்பதால் ஆதரிக்கிறேன் என்று சொன்னார்.

தமிழர்கள் சுதந்திரமாய் வாழ வேண்டும். தமிழர்களை தமிழர்கள் ஆள வேண்டும், தமிழ் மொழி வளம் பெற வேண்டும் என்று போரடிய பெரும் தலைவர் தந்தை பெரியார்

Link to post
Share on other sites

இங்கே பெரியாரின் முன்னெடுப்புகளுக்கு எதிராக பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் பெரியாரின் முன்னெடுப்புக்கு பின்னால் ஒரு பலமான நியாயம் இருந்தது நிராகரிக்கப்பட்டே வருகின்றது. இதே ஒரு நிராகரிப்பு வள்ளலார் காலத்திலும் இருந்தது. இராமலிங்க வள்ளலார் சாதி மற்றும் மூடப்பழக்கங்கவழக்கங்களை நீக்கி அனைவரும் சமம் என்றதொரு புதிய ஆன்மீக பாதையை சித்தர்கள் வழியில் முன்வைத்தார். இதை மிகக்கடுமையாக எதிர்த்தது யாழ்பாணம் ஆறுமுக நாவலர். அந்த நேரம் ஈழத்திலிருந்து ராமலிங்கர் சார்பாக யாரும் கதைத்தாக இல்லை. ஆத்திக வழியிலேயே ஒரு மாற்றத்தை செய்வதை விரும்பாத சமூக மனம் நாத்திக பெரியாரின் கருத்துக்களின் நியாயத்தை உள்வாங்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஆனால் அன்று வள்ளலாரின் மனிதாபிமானத்துக்கு எதிரானது போல் இன்றய நிலை ஈழத்தில் இல்லை. பெரியாரின் நியாயப்பாடுகளை புரிந்து கொள்ளவும் சிலர் உள்ளனர் என்பதே உண்மை.

ஈழத்தில் சைவமும் தமிழும் என்ற ஒரு தனித்துவமான போக்கு அதன் சுயத்தை இழந்து இந்துத்துவத்துடன் கைகோர்ப்பு வேலைகளை செய்துகொண்டிருக்கும் இந்த காலத்தில் பெரியார் கருத்துக்கள் அம்பேத்கார் கருத்துக்கள் எமது சமூகத்திற்கும் வந்தே தீரும் எனெனில் எமது சமூகத்திலும் சாதிய பிரச்சனைகள் ஒழிந்து விடவில்லை. அவைகள் வேறுவடிவங்களாகவும் வர்க்கங்களாகவும் உருமாறிக்கொண்டுதான் உள்ளது.

இன்னும் உருப்பெறாததும் அங்கிகரிப்பை வேண்டி நிற்கும் எமது தேசத்தில் தமிழ்பேசும் முஸ்லீம்களின் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது. புலம்பெயர் தேசங்களில் ஈழத் தலித்துக்கள் மாநாடுகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அடயாளப்படுத்த முடியாத அளவுக்கு சிறு விடயங்கள் பெரிதாக அடயாளப்படுத்தப்படுகின்றன. இது எமது ஒற்றுமையை சீர்குலைத்து மக்களை மேலும் பிளவு படுத்தும் ஒரு நடவடிக்கை ஆக கருத முடியும். இதில் சிங்களத்தின் சதிகளும் இருக்கின்றது. இருந்தாலும் யாழ் மையவாதம் என்பது எவ்வளவு தூரம் விரிகின்றதோ அவ்வளவு தூரம் சமூக சீர் குலைவுகள் மேற்கண்டவாறு ஏற்படத்தான் செய்யும். யாழ் மையவாதம் என்பது மேல்சாதி மேல் வர்க்கம் அதனுடன் சேர்ந்து நிற்கும் மதம் என்பன சேர்ந்த ஒன்று என்பது தெளிவான விடயம். இந்த யாழ் மையவாதம் என்னும் கருத்தும் பூதகரமாக பிரச்சாரத்துக்கு பயன்படுகின்றது என்பதை கவனிக்க வேண்டும்.

எதை எப்படி எதிர்த்தாலும் விமர்சித்தாலும் ஆதரித்தாலும் மூன்று முக்கிய விடயங்களை மறப்பது நல்லதல்ல. 1. இருப்பில் இருக்கும் எமது மக்கள் பிரச்சனை மற்றும் முரண்பாடு. 2 தற்போது எமது தாயகம் எதிர்நோக்கும் பிரச்சனை. 3. நாம் எந்த தளத்தில் இருந்து கருத்துக்களை முன்வைக்கின்றோம். இவைகள் பிரதானமானது.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.