Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

இதுக்கு ஒரு என்ட்கார்டே இல்லையா.. விஜயலட்சுமி விவகாரத்தில் நாளை சீமான் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்?

Mathivanan MaranPublished: Sunday, September 17, 2023, 12:27 [IST]
Naam Tamilar Chief Seeman to appear before Police tomorrow in Actress Vijayalakshmi row

சீமானுடன் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. 2008-ம் ஆண்டு சீமான் தம்மை திருமணம் செய்து கொண்டு 3 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்; பின்னர் ஏமாற்றிவிட்டார் என 2011-ல் நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தார். அப்போது பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் திடீரென விஜயலட்சுமி தமது புகாரை திரும்பப் பெற்றதால் ஓய்ந்தது.

12 ஆண்டுக்கு பின் புகார்: ஆனால் சீமான் மீது பல்வேறு புகார்களை தொடர்ந்து வீடியோ பதிவுகளில் முன்வைத்து வந்தார் விஜயலட்சுமி. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆண்டுகளுக்கு முன் சொன்ன அதே புகாரை தூசு தட்டி நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீசில் விஜயலட்சுமி புதிய புகார் கொடுத்தார். இதற்கு தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி ஆதரவாக இருந்தார்.

போலீஸ் விறுவிறு விசாரணை: சென்னை போலீசாரும் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்து மருத்துவ பரிசோதனை நடத்தியது. பின்னர் சீமானை விசாரணைக்கு அழைத்து 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் சீமான் தரப்போ 2011-ல் முடித்துவைக்கப்பட்ட வழக்கை தூசு தட்ட என்ன காரணம்? நீதிமன்றம் ஒப்புதல் தந்துள்ளதா? என வழக்கறிஞர்கள் மூலம் கேள்வி கேட்டிருந்தார்.

விளாசிய சீமான்: மேலும் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த சீமான், விஜயலட்சுமி -வீரலட்சுமி இருவரையும் ஏக வசனத்தில் விளாசி இருந்தார். கட்சி எல்லாம் பார்க்கமாட்டேன். வீரலட்சுமியை வெட்டிப் போட்டுவேன்; நான் கேடு கெட்ட ரவுடி என்றெல்லாம் பகிரங்கமாக பிரஸ் மீட்டிலேயே எச்சரித்தார் சீமான்.

விஜயலட்சுமி திடீர் வாபஸ்: இதனிடையே புதிய திருப்பமாக நள்ளிரவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் சென்ற நடிகை விஜயலட்சுமி, சீமானை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சென்னை போலீசார் மிகவும் தாமதமாக நடவடிக்கை எடுக்கின்றனர். நான் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். சீமான் பவர்புல் மனிதர். சீமானை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதால் என்னுடைய புகாரை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என அதிரடியாக பல்டி அடித்தார். அத்துடன் தாம் பெங்களூர் செல்வதாகவும் அறிவித்துவிட்டு விஜயலட்சுமி புறப்பட்டுப் போய்விட்டார்.

வீரலட்சுமி -நாம் தமிழர் மோதல்: இன்னொரு பக்கம், வீரலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இப்போது மோதல் ஏற்பட்டுள்ளது. சீமான் வட தமிழ்நாட்டுக்குள் கால் வைக்கவே முடியாது; ஒரு சீட்டு கூட அடிக்க முடியாது என்கிறார் வீரலட்சுமி. வடதமிழ்நாட்டில் 10,15 பொதுக்கூட்டம் நடக்கப் போகிறது.. முடிந்ததை செய்யலாம் என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன்.

சீமான் நாளை ஆஜர்: இந்த தொடர் கதையின் அடுத்த அத்தியாயமாக, விஜயலட்சுமி விவகாரத்தில் சென்னை போலீசில் நாளை சீமான் ஆஜராக இருக்கிறார் என அவரது வழக்கறிஞர்கள் தரப்பினர் ஊடகங்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சென்னை போலீசில் ஆஜராகும் சீமான், விஜயலட்சுமி தம் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டதை சுட்டிக்காட்டுவார் என தெரிகிறது.

யப்பா.. இதுக்கு ஒரு என்ட் கார்டே இல்லையா?

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-chief-seeman-to-appear-before-police-tomorrow-in-actress-vijayalakshmi-row-539573.html?story=3

2 minutes ago, goshan_che said:

சீமானை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சென்னை போலீசார் மிகவும் தாமதமாக நடவடிக்கை எடுக்கின்றனர். நான் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். சீமான் பவர்புல் மனிதர். சீமானை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதால் என்னுடைய புகாரை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் 

டிஸ்கி: திருட்டு திமுக, திருட்டு சீமான் டீல் அத்தனை பவர்புல்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

டிஸ்கி: திருட்டு திமுக, திருட்டு சீமான் டீல் அத்தனை பவர்புல்.

ஆகா...ங் !!

ரீயலீ??

😂🤣



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.