Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

plastic.jpg

நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய முள்கரண்டிகள், குழாய்கள், பிளாஸ்டிக் மாலைகள், பிளாஸ்டிக் இடியப்ப தட்டுகள் மற்றும் உணவுக் கொள்கலன்கள் என்பன தடை விதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் உள்ளடங்குகின்றன.

பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்பனவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த தடைகளை மீறி பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/274998

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு தடவை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை

நாட்டில் ஒரு முறை மற்றும் குறுங்கால தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய உறிஞ்சு குழாய்கள் (ஸ்ட்ரோவ்), கத்திகள் கரண்டிகள், முள்ளுக்கரண்டிகள், தட்டுகள், கோப்பைகள், ப்ளாஸ்டிக் மாலைகள் மற்றும் இடியப்பத் தட்டுகள் போன்ற பொருட்களை இறக்குமதி செய்தல் விற்பனை செய்தல், இலவசமாக அல்லது கண்காட்சிக்காக வழங்குதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகாரச் சபையின் தலைவர் சுபுன். எஸ். பத்திரகே தெரிவித்துள்ளார். குறித்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், இன்று முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/275062

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/9/2023 at 06:50, ஏராளன் said:

நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவைகளை தடை செய்வது நல்ல விடயம்.

மேற்கு நாடுகளிலேயே இன்னமும் முற்றாக தடைவிதிக்க முடியவில்லை.

இவைகளை தடை செய்ய முன் மாற்று வழிகளையும் முதலில் கண்டறிய வேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, ஈழப்பிரியன் said:

இவைகளை தடை செய்வது நல்ல விடயம்.

மேற்கு நாடுகளிலேயே இன்னமும் முற்றாக தடைவிதிக்க முடியவில்லை.

இவைகளை தடை செய்ய முன் மாற்று வழிகளையும் முதலில் கண்டறிய வேண்டும்.

  கனடாவில் சில கடைகளில் 5 சதம் 10 சதத்திற்கு விற்ற பிளாஸ்றிக் பை இப்போ புதிய நடை முறை என்ற ஒரு வகைக்குள் போன பின் துணியிலான பை கிழமைக்கு ஒரு விலையாக இருக்கிறது.வீடு முழுக்க நிறம் நிறைமாக துணிப்பை தான் சில வேலைகளில் துப்பரவு செய்யும் போதும் எரிச்சலாக இருக்கும்.அது மட்டுமல்ல ரிம்கொன்றின்ஸ் கோப்பிக்கடைகளில் சூப் வாங்கும் போது ஒரு கரண்டி தருகிறார்கள் அது சூப் குடிச்சுட்டு இருக்கும் போதே நனைஞ்சு முறிஞ்சுடும் தற்காலிக கண்டுபிடிப்புக்கள் தானே.அதன் தரம் அவ்வளவு தான்..

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, யாயினி said:

  கனடாவில் சில கடைகளில் 5 சதம் 10 சதத்திற்கு விற்ற பிளாஸ்றிக் பை இப்போ புதிய நடை முறை என்ற ஒரு வகைக்குள் போன பின் துணியிலான பை கிழமைக்கு ஒரு விலையாக இருக்கிறது.வீடு முழுக்க நிறம் நிறைமாக துணிப்பை தான் சில வேலைகளில் துப்பரவு செய்யும் போதும் எரிச்சலாக இருக்கும்.அது மட்டுமல்ல ரிம்கொன்றின்ஸ் கோப்பிக்கடைகளில் சூப் வாங்கும் போது ஒரு கரண்டி தருகிறார்கள் அது சூப் குடிச்சுட்டு இருக்கும் போதே நனைஞ்சு முறிஞ்சுடும் தற்காலிக கண்டுபிடிப்புக்கள் தானே.அதன் தரம் அவ்வளவு தான்..

தங்கச்சி இங்கும் போன வருடத்திலிருந்து தடை என்பதால் கொஞ்சம் சாமான்கள் போடக் கூடியதாக 20-25 சதமென்று விற்கிறார்கள்.

ஆரம்பத்தில் பழைய ஞாபகத்தில் கைவீசிக் கொண்டு போய் பணம் கொடுத்து பையை வாங்கி வீட்டிலும் நிறைய பைகள் சேர்ந்துவிட்டன.

இப்போ வீட்டிலிருந்து கொண்டு போக பழகிவிட்டோம்.

சில மாநிலங்களில் பழைய பிளாஸ்ரிக் பைகளையே பாவிக்கிறார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்யப்படும்!

news-03.jpg

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்தும் என சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் ஒரு தடவை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டி பொருட்களுக்கு தடை விதித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பூலோகத்தை அச்சுறுத்தும் பொருட்களின் சுழற்சியை முழுமையாகக் குறைத்துவிடுவோம் என நம்புகிறோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபைகளின் 5ஆவது மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் நசீர் அகமத் இவ்வாறு தெரிவித்தார்.

ஆசியா-பசிபிக் (APAC) பிராந்தியமானது 2021 ஆம் ஆண்டில் உலகின் மொத்த பிளாஸ்டிக் உற்பத்தியில் பாதிக்கும் அதிகமான உற்பத்தியை உற்பத்தி செய்துள்ளது என்றும், இது உலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் தாயகமாகவும் உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கான வட்ட பொருளாதாரத்திற்கு மாறுவதில் APAC ஒரு தலைமையாக இருக்க முடியும் என்று நம்பிக்கைவெளியிட்டுள்ளார்.

மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மைக்ரோபிளாஸ்டிக் உள்ளிட்ட பிளாஸ்டிக்குகள் இப்போது நமது இயற்கை சூழலில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன.

கடந்த ஆண்டு ஐ.நா.சுற்றுச்சூழல் பேரவையின் (UNEA-5.2) மீண்டும் தொடங்கிய ஐந்தாவது அமர்வில், கடல் சூழல் உட்பட பிளாஸ்டிக் மாசுபாடு தொடர்பான சர்வதேச சட்டப்பூர்வ கருவியை உருவாக்க வரலாற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் கூறினார். தீர்மானம் (5/14) ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) நிர்வாக இயக்குனரிடம் “கருவியை” உருவாக்குவதற்கு அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழுவை (INC) கூட்டுமாறு கோரியது, இது பிளாஸ்டிக்கின் சுழற்சி, அதன் உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் அகற்றல் உட்பட முழு வாழ்க்கை சக்கரத்தையும் குறிக்கும் ஒரு விரிவான அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்

கடல் சூழல் உட்பட பிளாஸ்டிக் மாசுபாடு தொடர்பான சர்வதேச சட்டப்பூர்வக் கருவியின் பூஜ்ஜிய வரைவு உரை INC தலைவரால் வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பரில் கென்யாவின் நைரோபியில் திட்டமிடப்பட்டுள்ள அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழுவின் மூன்றாவது அமர்வில் வரைவு பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/275381

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாப்பாட்டு தட்டில் வைச்சு குடுக்கிற பிளாஸ்டிக் ஐ முதல்ல நிப்பாட்ட சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒவ்வொரு வருடமும் நடைமுறை படுத்தும் திடடம். எனக்கு தெரிந்த வரைக்கும் கடந்த ஐந்து வருடங்களாக தடை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நடைமுறையில்தான் கொண்டு வர முடியவில்லை.

இந்த அமைச்சர் இதையும் விட மோசமான முறையில் சுற்றாடலை சேதப்படுத்திக்கொண்டு இருக்கிறார். மண் அள்ளுவது, கண்ணா காடுகளை அழிப்பது போன்ற செயட்பாடுகளை நிறுத்தினாலே சுற்றாடலை பாது காக்கலாம். 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.