Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

ஏற்றுமதி 

“சேர் அடுத்த patient ஐ வரச்சொல்லவோ எண்டு கேட்டிட்டு , 13 நம்பர் வாங்கோ ” எண்டு கிளினிக்கில நிக்கிற பிள்ளை 

கூப்பிட ரெண்டு பேர் வந்திச்சினம். 

என்ன பிரச்சினை ?

 “ நாரி நோகுது “

எத்தினை நாளா?

“ கொஞ்ச நாளா”

நாரி மட்டும் தானா இல்லாட்டி வேற எங்கேயும் நோகுதா?

“ இல்லை சில நேரம் கழுத்தும் நோகும், போன கிழமை முழங்காலும் நொந்தது” . 

கால் விறைக்குதா?

ஓம் அதோட தலையும் விறைக்குது. 

சோதிச்சுப்பாத்து ஒண்டும் இல்லை எண்டு சொல்லீட்டு , பதினெட்டு வயசு தானே படிக்கிறீங்களா எண்டு கேக்க,

“ இல்லை “ 

வேலை செய்யிறீங்களா?

“ இல்லை “ 

அப்ப என்ன செய்யிறீங்க

“ சும்மா தான் இருக்கிறன் “ 

………..

அப்ப குறிக்கிட்டது ஒரு நாப்பது வயது 

“ இல்லை அவ வெளீல போகப்போறா , கலியாணம் முற்றாகீட்டுது, அதுதான் போக முதல் எல்லாம் ஒருக்காப் பாத்தால் நல்லம் எண்டு வந்தனாங்கள், ஒருக்கா எல்லா scan உம் பண்ணிப் பாக்கலாமா” எண்டு கேட்டா , vehicle full service போட்டுத்தாறீங்களா எண்ட மாதிரி. 

அப்ப மகளுக்கு நோ எல்லாம் இல்லையா ?

“ இல்லை எனக்குத் தான் இடைக்கிடை நாரி நோகிறது. இவ இப்ப வெளீல போனாப் பிறகு தேவை எண்டு இப்ப மேக்கப், கேக் ஐசிங், தையல் எல்லாம் படிக்கிறா , ஒரு நாள் நாரி நோகுது எண்டு சொன்னவள் அது தான் போக முதல் எல்லாத்தையும் காட்டீட்டால் நல்லம் எண்டு வந்தனாங்கள். அவையும் சொன்னவை வரமுதல் உங்கயே எல்லாத்தையும் காட்டீட்டு வரச்சொல்லி, ஒரு பிரச்சினையும் இல்லைத் தானே …..” எண்டு அம்மா சொன்னதுக்கு நான் தலையை ஆட்ட மேக்கப்பை தனக்கும் அம்மாக்கும் போட்டுப் பழகிக் கொண்டிருந்த மகள் சந்தோசமா வெளிக்கிட்டுப் போனா. 

எல்லா patient உம் பாத்து முடிய , “சேர் எனக்கு கலியாணம்” எண்டு கிளினிக்கில வேலை செய்யிற பிள்ளை வந்து சொல்லிச்சுது. 

எப்ப ?

வாற மாசம்

எங்க ?

இந்தியாவில

ஏன் அங்க?

அவருக்கு இங்க வரேலாதாம்

போய் எவ்வளவு காலம்?

கொஞ்சக் காலம்

எந்த இடம்?

….

விசாரிச்சதோ ? 

“தூரத்துச் சொந்தக்காருக்குப் பக்கத்துவீட்டுக் காரருக்க தெரிஞ்ச ஆக்களாம், அவரோட நேர கதைச்சதாம் , வயசு கூடத்தான் ஆனாலும் எப்பிடியும் எனக்கு வெளீல போனாக்காணும், நான் இண்டையோட வேலையால நிக்கப் போறன்” எண்டு சொன்ன பிள்ளைக்கு வாழ்த்துச் சொல்லி எனக்கு வரேலாது இந்தாரும் என்டை gift எண்டு குடுத்த envelope ஐ வாங்கிக் கொண்டு சந்தோசமா வெளிக்கிட்டிச்சிது அந்தப் பிள்ளை. 

அதுகள் போனாப்பிறகும் இடைக்கிடை இப்பிடிக் கன வாகனங்கள் service க்கு வந்து போய்க்கொண்டிருந்திச்சுது ஒவ்வொரு மாசமும். 

ரெண்டு மாசம் கழிச்சு இந்தியாவுக்கு கலியாணத்துக்குப் போன பிள்ளை திருப்பியும் வேலைக்கு வந்திச்சுது. 

“ஆ எப்பிடி இருக்கிறீர், கலியாணம் எப்பிடி, அவர் எங்க “? எண்டு ஆக்களுக்கு முன்னால கேட்ட கேள்விக்கு விடை உடன வரேல்லை, ஆனாலும் பிறகு வந்து , “ Sir இதுதான் photo எல்லாம் வடிவா நடந்தது. போய் sponsor க்கு அலுவல் பாக்கிறராராம் அநேமா மூண்டு மாசத்தில கூப்பிடுவன் எண்டவர் “ எண்டு நம்பிக்கையோட சொலலீட்டுப் போச்சுது. 

நாலு மாசம் கழிச்சு; 

“என்ன மாதிரி போற அலுவல் எண்டு கேக்க” , “ அவருக்கு இப்ப தான் பாஸ்போட் வந்ததாம் இனித்தான் கூப்பிடுவாராம் “ . அப்ப இந்தியாவுக்கு கள்ளப் பாஸ்போட்டிலயோ வந்தவர் எண்ட கேள்விக்கு அந்தப் பிள்ளைக்கு விடை தெரியேல்லை. 

ஆறு மாசம் கழிச்சு; 

“ Sir ஏதும் நல்ல வேலை இருந்தாச் சொல்லுங்கோ சம்பளம் இங்க காணாது , கலியாண வீட்டுக் கடனையே கட்டேலாமல் நிக்கிறம் அதோட போறதும் இன்னும் சரிவரேல்லை ” எண்டிச்சுது அந்தப் பிள்ளை. அதுக்கு மேல ஒண்டும் கேக்கேல்லை.

ஒரு வருசத்தால;

“ Sir அது சரிவரேல்லை இது அக்கான்டை மாமான்டை சம்மந்த பகுதிக்காரர் கொண்டந்தவராம் அடுத்த மாசம் இந்தியாவுக்குப் போய் அப்பிடியே போயிடுவன்” எண்டு இந்த முறை நம்பிக்கையா good bye எண்டு அதே பிள்ளை சொல்லீட்டுப் போச்சுது, பதியப்படாமல் நடந்த முதல் கலியாணம் முறிக்காமலே முறிஞ்சது ஒருத்தருக்கும் தெரியாத மட்டும் நல்லம் எண்டு நெச்சபடி நான் வீட்டை வெளிக்கிட்டன். 

இந்த முறை கலியாணத்துக்குப் போனது ஒரு மாசத்திலயே திரும்பியும் வேலைக்கு வந்திட்டுது . நான் ஒண்டும் கேக்கேல்லை. ரெண்டு பேருமே பேசாம வேலையைப் பாத்தம்.

போன மாசம்;

ரெண்டு தரம் கலியாணம் rehearsal பாத்த பிள்ளை வந்து, “ Sir நான் கனடா போப்போறன். பாங்கில கொஞ்சம் காசு காட்டினா கனடா போகலாமாம். ஏற்கனவே கொஞ்சம் கட்டீட்டன் , மற்ற எல்லாம் ரெடி , ஒரு கோடி காசு ஒரு மாசம் bank இல இருந்தாச் சரியாம் , வீட்டை அடகு வைக்க அம்மா பாக்கிறா போறது நல்லது தானே எண்டு சொன்னதுக்கு என்ன பதில் சொல்லலாம் எண்டு யோசிக்கத் தொடங்கினன். யோசிச்சு முடிக்க முதல் ஏற்றுமதிக்காய் வளத்த இன்னொரு நாட்டுக்கோழி நொண்டாத காலில நோவெண்டு சொல்லிக் கொண்டு வந்து என்னை யோசிக்க விடாமக் காப்பாத்திச்சுது. இருக்கிற முழங்காலில இல்லாத நோவுக்கு வைத்தியம் பாத்திட்டு வெளிக்கிட;

“ வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதிக்கு இருந்த தடை நீக்கம் “ எண்டு அரசாங்கம் அறிவித்தது எண்டு லோசனின் செய்திகள் தயையங்கம் சொல்ல, இது எந்த ஏற்றுமதியை எண்டு யோசிச்சபடி நடந்தன்.

Dr. T. கோபிசங்கர்

யாழப்பாணம்.

  • Like 3
  • Thanks 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, நிழலி said:

வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதிக்கு இருந்த தடை நீக்கம் “ எண்டு அரசாங்கம் அறிவித்தது எண்டு லோசனின் செய்திகள் தயையங்கம் சொல்ல, இது எந்த ஏற்றுமதியை எண்டு யோசிச்சபடி நடந்தன்.

இன்றைய நடைமுறையை உங்கள் நடையில் அழகாக தந்திருக்கிறீங்கள். “வரமுதல் உங்கயே எல்லாத்தையும் காட்டீட்டு வரச்சொல்லி, ஒரு பிரச்சினையும் இல்லைத் தானே” என்ற வரியில் கொஞ்சம் பயந்து விட்டேன். நீங்கள் ஏற்றுமதியை நினைத்தபடி நடக்கப் போய் யாழ்ப்பாணத்தில் தடக்கிட்டீங்கள்.☺️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டொக்ரர் கடும் குறும்புக்காரனா இருப்பாரோ?!
ஆனாலும் இங்க பிள்ளையள் கொஞ்சம் வெள்ளையா வடிவா இருந்தால் கட்டாயம் ஏற்றுமதி தான் என்பது உண்மை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நகைச்சுவையாய் எழுதினாலும, கவலையை அவரது எழுத்துக்களில் காண முடிகிறது

.கதைக்கு அப்பால் அவரது உணவகத்திற்கு போயிருந்தேன் ...அருமையான சாப்பாடு அதை விட மிக,மிக சுத்தமாய் வைத்திருந்தார்கள் ...டாக்குத்தர் வரி கட்டாமல் இருக்க இந்த உணவகத்தை ஆரம்பித்து விட்டார் என்று சொன்னார்கள் உண்மையோ என்று நிழலி கேட்டு சொல்லுங்கோ😂..மற்றைய பிரபல உணவகங்களோடு ஒப்பிடுகையில் விலையும் மலிவு ...தொடர்ந்தும் அதே தரத்தை பேணுவார்களாயின் சிறப்பு 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று ஊர் உலகத்தில் நடப்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்......நல்லாயிருக்கு......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/10/2023 at 14:03, ரதி said:

நகைச்சுவையாய் எழுதினாலும, கவலையை அவரது எழுத்துக்களில் காண முடிகிறது

.கதைக்கு அப்பால் அவரது உணவகத்திற்கு போயிருந்தேன் ...அருமையான சாப்பாடு அதை விட மிக,மிக சுத்தமாய் வைத்திருந்தார்கள் ...டாக்குத்தர் வரி கட்டாமல் இருக்க இந்த உணவகத்தை ஆரம்பித்து விட்டார் என்று சொன்னார்கள் உண்மையோ என்று நிழலி கேட்டு சொல்லுங்கோ😂..மற்றைய பிரபல உணவகங்களோடு ஒப்பிடுகையில் விலையும் மலிவு ...தொடர்ந்தும் அதே தரத்தை பேணுவார்களாயின் சிறப்பு 
 
நகைச்சுவையாய் எழுதினாலும, கவலையை அவரது எழுத்துக்களில் காண முடிகிறது  

.கதைக்கு அப்பால் அவரது உணவகத்திற்கு போயிருந்தேன் ...அருமையான சாப்பாடு

அதை விட மிக,மிக சுத்தமாய் வைத்திருந்தார்கள்

...டாக்குத்தர் வரி கட்டாமல் இருக்க இந்த உணவகத்தை ஆரம்பித்து விட்டார் என்று சொன்னார்கள்  ⁉️⁉️

மற்றைய பிரபல உணவகங்களோடு ஒப்பிடுகையில் விலையும் மலிவு  

...தொடர்ந்தும் அதே தரத்தை பேணுவார்களாயின் சிறப்பு  100%👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/10/2023 at 19:03, ரதி said:

உணவகத்தின் பெயர் என்ன?

எங்கே உள்ளது?

On 13/10/2023 at 16:17, ஏராளன் said:

டொக்ரர் கடும் குறும்புக்காரனா இருப்பாரோ?!
ஆனாலும் இங்க பிள்ளையள் கொஞ்சம் வெள்ளையா வடிவா இருந்தால் கட்டாயம் ஏற்றுமதி தான் என்பது உண்மை தான்.

லண்டனிலே மாப்பிளையாம் பெண்ணு கேக்கிறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஊர்பார்த்து வந்தாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஊர்பார்க்கப்போறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்

நல்ல நல்ல மாப்பிள்ளையாம் பெண்ணு கேக்கிறாங்க
ஆயிரமாய் சீதனத்தை அள்ள நிக்கிறாங்க
எத்தனையோ பொம்பளைங்க ஏமாந்து போனாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஏமாறப்போறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்
இந்த நாட்டினுள்ளே நரிகள் என்று யாருக்குப் புரியும்

அன்றொருநாள் நடந்ததொரு அவசரக்கலியாணம்
ப்ளேனிலேதான் பறந்துவந்தார் மாப்பிள்ளை டாம்பீகம்
மாப்பிள்ளையும் பெண்ணுமாக வெளியூர் பிரயாணம்
போன ப்ளேனில் திரும்பி வந்தாள் போச்சுது அவள் மானம்

எஞ்சினீயர் எண்டு சொல்லிப் புளுகித்தள்ளினாராம்
லண்டனிலோர் ஹோட்டலிலே வெயிட்டர் வேலைதானாம்
கொண்டுபோன காசிலேதான் காரும் வாங்கினாராம்
என்று அந்த பெண்ணும் வந்து சொல்லி அழுதாளாம்

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்

லண்டனிலே மாப்பிளையாம் பெண் கேக்கிறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஊர்பார்த்து வந்தாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஊர்பார்க்கப்போறாங்க.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

லண்டனிலே மாப்பிளையாம் பெண்ணு கேக்கிறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

ஆயிரமாயிரத்தை லட்ச லட்சமா என்று மாற்றினால் பொருத்தமாய் இருக்குமண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

ஆயிரமாயிரத்தை லட்ச லட்சமா என்று மாற்றினால் பொருத்தமாய் இருக்குமண்ணை.

ஓம் இது 70/80 களில். இப்ப கோடி எண்டுதான் போடோணும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, goshan_che said:

உணவகத்தின் பெயர் என்ன?

எங்கே உள்ளது?

லண்டனிலே மாப்பிளையாம் பெண்ணு கேக்கிறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஊர்பார்த்து வந்தாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஊர்பார்க்கப்போறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்

நல்ல நல்ல மாப்பிள்ளையாம் பெண்ணு கேக்கிறாங்க
ஆயிரமாய் சீதனத்தை அள்ள நிக்கிறாங்க
எத்தனையோ பொம்பளைங்க ஏமாந்து போனாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஏமாறப்போறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்
இந்த நாட்டினுள்ளே நரிகள் என்று யாருக்குப் புரியும்

அன்றொருநாள் நடந்ததொரு அவசரக்கலியாணம்
ப்ளேனிலேதான் பறந்துவந்தார் மாப்பிள்ளை டாம்பீகம்
மாப்பிள்ளையும் பெண்ணுமாக வெளியூர் பிரயாணம்
போன ப்ளேனில் திரும்பி வந்தாள் போச்சுது அவள் மானம்

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்

லண்டனிலே மாப்பிளையாம் பெண்ணு கேக்கிறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்

எஞ்சினீயர் எண்டு சொல்லிப் புளுகித்தள்ளினாராம்
லண்டனிலோர் ஹோட்டலிலே வெயிட்டர் வேலைதானாம்
கொண்டுபோன காசிலேதான் காரும் வாங்கினாராம்
என்று அந்த பெண்ணும் வந்து சொல்லி அழுதாளாம்

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்
வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்

லண்டனிலே மாப்பிளையாம் பெண் கேக்கிறாங்க
ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஊர்பார்த்து வந்தாங்க
இன்னும் சில பொம்பளைங்க ஊர்பார்க்கப்போறாங்க.

Authentic jaffna cuisine

On 15/10/2023 at 03:38, Kapithan said:

நகைச்சுவையாய் எழுதினாலும, கவலையை அவரது எழுத்துக்களில் காண முடிகிறது  

.கதைக்கு அப்பால் அவரது உணவகத்திற்கு போயிருந்தேன் ...அருமையான சாப்பாடு

அதை விட மிக,மிக சுத்தமாய் வைத்திருந்தார்கள்

...டாக்குத்தர் வரி கட்டாமல் இருக்க இந்த உணவகத்தை ஆரம்பித்து விட்டார் என்று சொன்னார்கள்  ⁉️⁉️

மற்றைய பிரபல உணவகங்களோடு ஒப்பிடுகையில் விலையும் மலிவு  

...தொடர்ந்தும் அதே தரத்தை பேணுவார்களாயின் சிறப்பு  100%👍

டாக்குத்தரை நன்றாய் தெரியும் போல  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, ரதி said:

Authentic jaffna cuisine

டாக்குத்தரை நன்றாய் தெரியும் போல  

உணவுக்கு நியாயமான விலையை அறவிட்டால் - வரி ஏய்ப்பு,

அதிக விலைக்கு விற்றால் - கொள்ளை இலாபம் அடிக்கிறாங்கள் என அழுவது. 

இதில் எது சரி? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/10/2023 at 11:10, Kapithan said:

உணவுக்கு நியாயமான விலையை அறவிட்டால் - வரி ஏய்ப்பு,

அதிக விலைக்கு விற்றால் - கொள்ளை இலாபம் அடிக்கிறாங்கள் என அழுவது. 

இதில் எது சரி? 

நான் இந்த வைத்தியர் அப்படிப்பட்டவர் என்று சொல்லேல்ல அங்குள்ள சிலர் கதைத்ததை தான் சொன்னேன் என்று ஏற்கனவே மேலே எழுதியுள்ளேன் 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரதி said:

நான் இந்த வைத்தியர் அப்படிப்பட்டவர் என்று சொல்லேல்ல அங்குள்ள சிலர் கதைத்ததை தான் சொன்னேன் என்று ஏற்கனவே மேலே எழுதியுள்ளேன் 
 
வைத்தியர் நல்லவர், உங்கள் பார்வை தவறானது என்று நான் கூறவில்லை. 

அந்த உணவகத்தில் தரமும, விலையும், சுவையும் நன்று என்று நீங்கள் கூறியதுடன் நிற்காது, இடைச்செருகலாக வரியேய்ப்பு என்று பொருள்பட உள்குத்து ஒன்றையும் விட்டீர்கள். அது நெருடலாக இருந்தது. அதைத்தான் நான் சுட்ட விரும்பினேன்.

தற்போதைய காலத்தில், குறைகூறுவது மட்டுமே மிகப் பெரும்பாலானோரின் (நானுட்பட) செய்கையாக இருக்கிறது. அப்படி இருக்கையில் அத்தி பூத்தாற்போல நல்ல விடயத்தைக்கூறியிருக்கிறீர்கள். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.