Jump to content

நெத்தியடி


mathanarasa

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணகி கதையை நம்புபவர்கள் ராமர் பாலத்தை நம்பாதது ஏன்? - விஜயகாந்த் கேள்வி

சென்னை, செப்.22: கண்ணகி மதுரையை எரித்ததை நம்புவீர்கள், ராமர் பாலம் கட்டியதை நம்ப மாட்டீர்களா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.

காஞ்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் பி.எஸ்.சேகர் தலைமையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3,000 பேர் தே.மு.தி.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேடில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:

தி.மு.க.வும், அ.தி.மு.க. வும் உங்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதால்தான் இங்கு வந்துள் ளீர்கள். வேலையில்லா திண்டாட்டம், ஊழலை அவர்கள் ஒழிக்கவில்லை. ஊழலை ஒழிப்பேன் என்று நான் தைரியமாக கூறுகிறேன். விஜயகாந்த கட்சியில் மட்டும் ஊழல் இல்லையா என்று சிலர் கேட்கின்றனர்.

சலவைத் தொழிலாளியிடம் எல்லா வீட்டு அழுக்கு துணிகளும் வந்து சேர்கின்றன. அதை சலவை தொழிலாளி சுத்தம் செய்யவில்லையா. அதுபோல தே.மு.தி.க.வும் சலவை செய்து, கறை படிந்தவர்களை திருத்துவோம். அவர்களை ஒழுக்கத்துக்கு கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தே.மு.தி.க.வை யாராலும் அழிக்க முடியாது. ராமர் என்ன இன்ஜினியரா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார். நான் கேட்கிறேன், நீங்கள் திருவள்ளுவரைப் பற்றி புகழ்கிறீர்களே. அவர் எந்தக் கல்லூரியில் படித்தார்? கற்புக்கரசி கண்ணகி, மதுரையை தீ வைத்து எரித்ததாக கூறுவதை ஒப்புக் கொள்கிறீர்களே. ராமர் பாலத்தை மட்டும் ஏன் கட்டுக்கதை என்கிறீர்கள்.

பெங்களூரில் அவரது மகள் வீட்டில் சிலர் பெட்ரோல் குண்டு வீசினார்கள். அதற்கு முதல்வர், ராமர் குண்டு போட சொன்னாரா? என்று கேட்டுள்ளார். மதுரையில் 3 பேரை எரித்தார்களே. அது மட்டும் சரியா? தாயுள்ளத்தோடு முதல்வர் பேசுகிறார் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த தாயுள்ளம் இதற்கு முன் தெரியவில்லையா? இந்துக்களை மட்டுமே முதல்வர் தொடர்ந்து புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார். ஆனால், அவர் மற்ற மதத்தினர் விஷயத்தில் தலையிடுவதில்லை. அதற்கு காரணம் ஓட்டுதான். மற்ற மதத்தினரை பகைத்துக் கொண்டால் ஓட்டு கிடைக்காதே.

சேது சமுத்திர திட்டத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். அதற்கு காரணம், அது 2,400 கோடி ரூபாய் செலவிலான திட்டம். இது நின்று போனால், வந்ததை திரும்பத்தர நேரிடுமோ என்ற பயம்தான்.

இதை எல்லாம் கூறினால், என் மீது பொய் வழக்குகள் போடுவார்கள். சிறையில் அடைப்பார்கள். அதையும் செய்யுங்கள். நான் ஒன்றும் பயந்தவன் கிடையாது.

இப்போது அவர்கள் செயல் திட்டங்களை எல்லாம், அவர்களின் புதிய டிவி சானலில் ஒளிபரப்புவார்கள். அவர்கள் டிவியை நம்புவார்கள். ஆனால், அவர்களின் குடும்ப டிவியை நம்பமாட்டார்கள். மக்கள் வரிப்பணத்தில் கலைஞர் டிவி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதில் வரும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் பணம் யாருக்கு சென்று சேர்கிறதோ? கூட்டணி, கூட்டணி என்று கூறுகிறார்கள். ஆனால், மக்கள் முடிவு செய்துவிட்டால் கூட்டணி என்பதே தேவையில்லை. மற்ற கட்சிக்காரர்களுக்கு தனித்து நிற்கும் தைரியம் கிடையாது. ஆனால், எனக்கு இருக்கிறது. நான் சினிமாவில் சம்பாதித்த சொத்துகளை அரசியலில் இழந்திருக்கிறேன். என் நோக்கம் தமிழக மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதே.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

அப்போது, அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, மற்றும் பலர் உடனிருந்தனர்.

நன்றி: தினகரன்.

கண்ணகிக்கு ஊர் ஊராகச் சிலை அமைச்சவை தான் சொல்லவேணும். கண்ணகி கதை உண்மையோ எண்டு. அதை ஏன் கதையாக எடுக்காமல் சிலை எல்லாம் வடிச்சு அண்ணாசாலையில் நிப்பாட்டினவை என்று.

இந்தக் கேள்வியைக் கேட்ட விஜயகாந்துக்கு என் சார்பில ஓ போடுறன் B)

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

விசயகாந்து இளம் கன்று பயம் அறியாது என்றது போல் அறிக்கை விடுகிறார்."காவல் குறை "வந்து கதிரையோடை தூக்கும் போது தான் ஐ ஆம் சொறி எண்ண வாய்யா வா என்று சொல்ல இன்னும் சில காலம் பொறுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

விஜயகாந்தின் கண்ணகி பற்றிய கேள்வியில் நியாயம் இருக்கிறது.

தந்தை பெரியார் கண்ணகி பற்றிக் கூறிய கருத்துத்தான் என்னுடைய கருத்தும்.

கண்ணகி, ராமர் எதுவுமே கடவுள்கள் அல்ல. இவைகளை வணங்குவது மூடத் தனம்.

கண்ணகி காட்டும் பெண் பாத்திரமும் ஏற்கத்தக்கது அல்ல.

Link to comment
Share on other sites

ஆனால் சிலப்பதிகாரத்தில் வரும் பூம்புகார் நகரம் கடலுக்கடியினுள் தொல்பொருள் ஆராச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதே. அதேபோல் மாதவியின் மகள் மணிமேகலை பற்றி மகாவம்சமும் சொல்கின்றதே??

அதுபோல் திருவள்ளுவர் எழுதியதாக திருக்குறள் இருக்கின்றது. திருக்குறளை பல்வேறு மதத்தினரே பொதமறையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். காரணம் திருக்குறள் எந்த மதத்தையும் சார்ந்து எழுதப்படவில்லை.

இன்று விஜயகாந் ஏதோ இராமருக்கு வக்காலத்து வாங்குவதும் இந்து வோட்டுக்களைக் குறிவைத்துத்தான்.

Link to comment
Share on other sites

பூம்புகார் இருக்கிறது, அயோத்தி இருக்கிறது. திராவிடர்கள் இருக்கிறார்கள். ஆரியர்கள் இருக்கிறார்கள்.

இப்படி இருப்பவைகளைக் கொண்டு இல்லாதவைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட கதைகள் இவைகள்.

சிலப்பதிகாரம் மறைமுகமாக தமிழ் தேசியத்தை பேசுகிறது என்பதற்காக அதை பாராட்டலாம்.

ஆனால் மற்றையபடி எந்த ஒரு நீதியையும் இந்தக் கதைகளில் இருந்து பெற முடியாது.

சில திராவிட அமைப்புக்கள் கண்ணகியை முன்னிறுத்துகின்றன.

ஆனால் அது சீதை, தமயந்தி போன்ற ஆரியப் பாத்திரங்களுக்கு போட்டியாக முன்னிறுத்தப்பட்டதே தவிர, கண்ணகி கடவுள் என்பதற்காக அல்ல.

ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை.

Link to comment
Share on other sites

சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன எழுத பட்ட காலம் கிட்ட தட்ட ஒண்று... அந்தகாலத்துக்கு அண்மைவரை பூம்புகார் நகர் இருந்து இருக்க வேண்டும் அல்லது கேள்வி ஞானத்தில் இருந்து இருக்க வேண்டும்... அதுக்கான ஆதாரங்கள் இல்லை...

அதுக்கு காரணம் அந்த காலங்களை அறிந்த நண்பர்களான இளங்கோ (சமண) அடிகளும் , அவரின் நண்பர் சீத்தலையை சேர்ந்த சாத்தனார், ( சீத்தலை சாத்தனார்) எனும் பௌத்த அடிகளும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் அவர்களின் காலம் தாசி வீடுகள், களியாட்டங்கள் எல்லாம் பிரபல்யம்... கடல்கடந்து வாணிபம் செய்யும் தமிழர்கள் பலர் செல்வந்தர்களாக இருந்தனர்... அக்காலத்தில் நிலையில்லாத மனித வாழ்வின் ஒழுக்கதையும், நெறியையும் போதிக்கும் வண்ணம் காப்பியங்களை வரவேண்டியது தேவை... அதுக்காக அந்த கதாபாத்திரங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று இல்லை...

அதில் சாத்தனார் மணிமேகலையை எழுதும் போது அதில் பௌத்த அடையாளங்களையும், அடவுகளையும் சொல்ல தவறவில்லை... அதில் அவர் எவ்வளவு தேர்ச்சியானவர் எண்று புரியும் படியாக எழுதி இருக்கிறார்... அதாவது அவரின் திறந்தான் வெளியில் தெரிகிறது...

Link to comment
Share on other sites

மக்களுக்கு நல்போதனைகளுக்காக உப்படியான கதைகள் உருவாக்கியதில் தவறில்லை. ஆனால்அந்தக் கதைகளை வைத்து பல நல்லதிட்டங்களை சமயரீதியாக முடக்கப் பார்ப்பதை வளரவிடுவது ஆபத்தானது. மதம் என்பது மனிதனை நல்வழிப்படுத்துவது. ஆனால் சில வெறிபிடித்த இந்து அமைப்புக்கள் மதத்தை வைத்து அரசியல் பண்ணி மனிதனை மதம் பிடிக்க வைக்கின்றார்கள். இப்டிடியான செயல்களால் அவர்கள் இந்துக்களைத்தான் கேவலப்படுத்துகின்றார்கள் என்பதை உணர மறுக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

மக்களுக்கு நல்போதனைகளுக்காக உப்படியான கதைகள் உருவாக்கியதில் தவறில்லை. ஆனால்அந்தக் கதைகளை வைத்து பல நல்லதிட்டங்களை சமயரீதியாக முடக்கப் பார்ப்பதை வளரவிடுவது ஆபத்தானது. மதம் என்பது மனிதனை நல்வழிப்படுத்துவது. ஆனால் சில வெறிபிடித்த இந்து அமைப்புக்கள் மதத்தை வைத்து அரசியல் பண்ணி மனிதனை மதம் பிடிக்க வைக்கின்றார்கள். இப்படியான செயல்களால் அவர்கள் இந்துக்களைத்தான் கேவலப்படுத்துகின்றார்கள் என்பதை உணர மறுக்கின்றார்கள்.

நீங்கள் சொல்வது மிகச்சரி. வாழ்த்துக்கள்.

தந்தையின் வாக்கை காப்பாற்ற நாட்டையே விட்டுக் கொடுத்துவிட்டு காட்டுக்கு சென்ற இராமனை வணங்குவதாக சொல்பவர்கள் இன்று ஒரு பாலத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவதை பார்த்து நாம் அழுவதா சிரிப்பதா?

இவர்களுக்கு இராமன் வாழ்ந்து காட்டிய தத்துவங்களும் புரியவில்லை. இந்து தர்மத்தின் தத்துவங்களும் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒண்டை நீங்கள் புரிஞ்சு கொள்ள வேணும் வசம்பு

இந்து மதத்தில் உள்ளவையை என்றைக்குமே யாரும் கட்டுப்படுத்தினது கிடையாது. இசுலாமியருக்குள்ளது போல வெள்ளிக் கிழமை கூட்டுப் பிரார்த்தனையோ, கிறிஸ்தவர்களின் விதிப்படி ஞாயிறு சேர்ச்சுக்குப் போறது போலவோ கட்டாயம் வந்து வழிபடு எண்டு கட்டாயப்படுத்தியதில்லை. ஆனா இப்படியான தாங்கள் திராவிடம் கதைக்கின்றம், மாக்கிசம் கதைக்கின்றம், புடுங்கப் போறம் எண்டு தொல்லை கொடுக்கின்ற ஆட்களால் தான் பதிலுக்கு சார்பான அமைப்புக்கள் கோபப்படுகினம். இவை வந்து தாண்டவம் ஆடுமத்போது பார்த்துக் கொண்டிருக்க உணர்ச்சியற்ற சடம் இல்லைத் தானே. நான் சொல்லுறது சரியோ!

Link to comment
Share on other sites

ராமன் வாழ்ந்து காட்டிய தத்துவங்கள்:

ஊனம் உள்ள வயோதிப் பெண்களை துன்புறுத்துவது

தம்பிக்கு வாக்குறுதி அழிக்கப்பட்ட அரசை தம்பி இல்லாத நேரத்தில் அபகரிக்க முயல்வது

பார்ப்பனர்களைக் காப்பது

மற்றைய இனத்தவரின் நிலங்களை ஆக்கிரமிப்பது

எதிரியை மறைந்து இருந்து கொல்வது

சூத்திரர்களின் தலையை துண்டிப்பது

மனைவியை சந்தேகப்படுத்துவது

மனைவியை எரித்துக் கொலை செய்ய முயற்சிப்பது

மனைவியை காட்டுக்குத் துரத்துவது

குடிப்பது, பெண்களுடன் கும்மாளம் அடிப்பது

காட்டுக்குப் போய் மனைவியை நிலத்திற்குள் புதைப்பது

இப்படி ராமன் காட்டுகின்ற சீரிய தத்துவங்கள் நிறைய உள்ளன. இவைகளுக்கு ஆதாரம் ராமாயணத்தில் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் வாழ்ந்து காட்டின வாழ்க்கை

மனிசியை தாசிப்பட்டம் சூட்டி அழகு பார்த்தது( ஆதாரம்: சபேசன்)

விபச்சாரி வீட்டில் கூத்தடிச்சது ( ஆதாரம்: பெரியார் படம்)

கோவில் பணத்தில் வயிறு வள்ர்த்தது.

ஜேர்மனியில் நிர்வாண சங்கத்தில் இணைஞ்சு கசமுசா பண்ணியது.

மனிசி சாகே;கக சந்தோசப்பட்டது.

கிழட்டு வயதில் இளம்பெண் ஒண்டைக் கலியாணம் கட்டி அப்பெண்ணின் வாழ்க்கையை சீரளித்தது.

தமிழனை மற்றய சமுதாயங்களில் இருந்து பிரிச்சு வைச்சது.

பிராமணப் பெண்களைக் கற்பழிக்க வேண்டும் என்று காமவெறி கொண்டு அலைஞ்சது. (ஆதாரம்: பெரியார் வசனங்கள்)

தமிழனைக் கேவலமாகத் திட்டி அசிங்கப்படுத்தியது.

தமிழன் தோளில் ஏறிச் சவாரி செய்ஞ்சது.

தமிழருக்குள், பகுத்தறிவாளர்கள் என்ற பெயரை வைச்சு சில முட்டாள்மக்களை உருவாக்கி தன் பின்னால் வர வைச்சது.

Link to comment
Share on other sites

பார்ப்பனப் பெண்களைப் பற்றி பெரியார் அப்படி எதுவும் பேசவில்லை என்று நான் பல முறை சொல்லிவிட்டேன்.

சூத்திரப் பெண்களை (அதாவது உங்களுடைய, என்னுடைய வீட்டுப் பெண்களை) பார்ப்பான் வைத்திருக்கலாம் என்று இந்து மத வேதங்கள் சொல்கின்றன. இதைத்தான் பெரியார் கண்டித்து பேசினார்.

எனக்கு ஒரு சந்தேகம்!

பெரியார் என்ற கடவுளை நான் வணங்குவது இல்லை. நான் நீங்கள் வணங்குகின்ற ராமனைப் பற்றி கருத்துச் சொன்னால், அதற்கு பதில் சொல்வதை விட்டு விட்டு, பெரியார் பற்றி பேசுவது என்?

ராமர் என்ற உங்களுடைய "கடவுளிற்கு" சமனாக பெரியார் என்ற எங்களுடைய "மனிதரை" நீங்கள் கருதுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

ஆனால் ஒரு மனிதரை உங்கள் கடவுள்களிற்கு சமனாக நீங்கள் வைத்து வாதிப்பதற்கு உங்களுக்கு சங்கடமாக இல்லையா?

Link to comment
Share on other sites

ஒண்டை நீங்கள் புரிஞ்சு கொள்ள வேணும் வசம்பு

இந்து மதத்தில் உள்ளவையை என்றைக்குமே யாரும் கட்டுப்படுத்தினது கிடையாது. இசுலாமியருக்குள்ளது போல வெள்ளிக் கிழமை கூட்டுப் பிரார்த்தனையோ, கிறிஸ்தவர்களின் விதிப்படி ஞாயிறு சேர்ச்சுக்குப் போறது போலவோ கட்டாயம் வந்து வழிபடு எண்டு கட்டாயப்படுத்தியதில்லை. ஆனா இப்படியான தாங்கள் திராவிடம் கதைக்கின்றம், மாக்கிசம் கதைக்கின்றம், புடுங்கப் போறம் எண்டு தொல்லை கொடுக்கின்ற ஆட்களால் தான் பதிலுக்கு சார்பான அமைப்புக்கள் கோபப்படுகினம். இவை வந்து தாண்டவம் ஆடுமத்போது பார்த்துக் கொண்டிருக்க உணர்ச்சியற்ற சடம் இல்லைத் தானே. நான் சொல்லுறது சரியோ!

சேதுசமுத்திரத்திட்டத்தை முடக்க சில இந்து அமைப்புக்கள் இராமர் பாலமென்ற விடயத்தை கையிலெடுத்த பின்னர் தானே கலைஞர் அறிக்கை வந்தது. அதற்கு முன் கலைஞர் அதபற்றி ஏதும் சொல்லவில்லைத் தானே??

நீங்கள் சொல்வது போல் இந்துமதம் சுதந்திரம் கொடுத்துள்ளதுதான். ஆனால் அந்தச் சுதந்திரம் தான் இன்று இந்துமதத்திற்கே ஆபத்தாகியுள்ளது. ஆளாளுக்கு அறிக்கை விடுபவர்களையும் பல பெண்பித்துப் பிடித்து அலையும் சாமியார்களையும் தாராளமாக வளரவும் வழி சமைத்து விட்டது. முன்பு காஞ்சி சங்கரமடத்தில் பெரியவர் பொறுப்பிலிருந்தபோது மடமிருந்த நிலைக்கும் இன்றைய நிலைக்கும் எவ்வளவு வேறுபாடு. பெரியவர் ஆடம்பரத்தை அடியோடு வெறுத்தார். இறுதிவரை வெறும் அரிக்கன் விளக்கு வெளிச்சத்துடனேயே ( எவ்வளவோ பணக்காரர்கள் அவருக்கு நவீனவசதிகள் செய்ய முன்வந்தபோதும்) வாழ்ந்து சமாதியானவர். ஒரு துறவி எப்படியிருக்க வேண்டுமென வாழ்ந்து காட்டியவர். ஆனால் இப்போ ஆடம்பரத்தின் உச்சநிலையிலுள்ளது சங்கரமடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு சந்தேகம்!

பெரியார் என்ற கடவுளை நான் வணங்குவது இல்லை. நான் நீங்கள் வணங்குகின்ற ராமனைப் பற்றி கருத்துச் சொன்னால், அதற்கு பதில் சொல்வதை விட்டு விட்டு, பெரியார் பற்றி பேசுவது என்?

ராமர் என்ற உங்களுடைய "கடவுளிற்கு" சமனாக பெரியார் என்ற எங்களுடைய "மனிதரை" நீங்கள் கருதுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

ஆனால் ஒரு மனிதரை உங்கள் கடவுள்களிற்கு சமனாக நீங்கள் வைத்து வாதிப்பதற்கு உங்களுக்கு சங்கடமாக இல்லையா?

அதற்குக் காரணம் இருக்குது சபேசன். நீங்கள் ஆல் குற்றமில்லையோ!

உங்க கூடப் பெரியார் பற்றி ஏதும் கதைச்சால் அதை மழுப்பிறதற்காக உடனே இந்து மதத்தை இழுப்பியள். அது போலத் தான் நாங்களும் உங்கட பாணியைப் பின்பற்றுகின்றோம்.

பெரியார் அப்ப கடவுள் இல்லையோ? நீங்கள் தான் ரோட்டு முழுக்க சிலை வைக்கின்றியள். மாலை வைக்கின்றியள். பெரியார் ஒரு தமிழனின் அடையாளம் என்று அடிபடுறியள். அவருக்கு பாடல், எழுதி அவரை வைச்சுக் கும்பிடுறியள். ரோட்டு முழுக்குச் சிலை வைச்சு அதற்காக இரத்தவெறி கொண்டு அடிபடுறியள்.

ராமன் கடவுளாக மாறியனது, அவன்ர கதையில் மக்கள் கொண்ட ஈர்ப்புக் காரணமாக. அதற்கு முதல் அவனை யாரும் கடவுளாகச் சொன்னதில்லை. அப்படியே பெரியார் பற்றி நீங்கள் விடுகின்ற கதையும் ஈர்ப்பாக, தாசிப்பட்டம் சூட்டுறது என்பது திராவிடக் கொள்கையாகப் போகேக்க சிலவேளை பெரியாரும் பிரபலம் வாய்ந்த கடவுளாக மாறக் கூடும். உ;கட ஆசையும் நிறைவேறும்.

Link to comment
Share on other sites

கருணாநிதிக்கு காங். கட்டளை

http://www.maalaisudar.com/newsindex.php?i...mp;%20section=1

Saturday, 22 September, 2007 02:40 PM

.

புதுடெல்லி, செப்.22: ராமர் சேது பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளதை தொடர்ந்து, ராமர் பற்றி இனி எந்த கருத்தையும் கூற வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ராமர் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

வடநாட்டில் இந்துக்களின் ஓட்டுக்களை காங்கிரஸ் கூட்டணி இழக்கக் கூடிய அபாயம் ஏற்பட் டுள்ளது. இது பிஜேபிக்கு சாதகமாக முடியும் என்று காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது.

எனவே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் தலைமை முதலமைச்சர் கருணாநிதியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூட்டணியின் நலன் கருதி இனியும் ராமர் பற்றி எந்த கருத்தும் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை அன்று பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கருணாநிதியை தொடர்பு கொண்டு பேசினார். பெங்களூரில் முதல்வரின் மகள் வீடு தாக்கப்பட்டது குறித்து தனது கவலையை தெரிவிப்பதற்காக பிரதமர் போன் செய்ததாக கூறப் பட்டாலும், ராமர் பிரச்சனையில் நிலைமை மோசமாவதை தடுப்ப தற்காக முதல்வர் கருணாநிதியை அவர் அமைதிப்படுத்தியதாக புது டெல்லி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

Link to comment
Share on other sites

ராமன் வாழ்ந்து காட்டிய தத்துவங்கள்:

ஊனம் உள்ள வயோதிப் பெண்களை துன்புறுத்துவது

குழந்தை பருவத்தின் குறும்பு. நம்மில் பலரும் செய்தது தான்.

தம்பிக்கு வாக்குறுதி அழிக்கப்பட்ட அரசை தம்பி இல்லாத நேரத்தில் அபகரிக்க முயல்வது

இது அபாண்டம். பொய். பித்தலாட்டம்.

பார்ப்பனர்களைக் காப்பது

குடிகளை காப்பது அரசருக்கு உரியது தான்

மற்றைய இனத்தவரின் நிலங்களை ஆக்கிரமிப்பது

மூஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் செய்தது. பாகிஸ்தானில் பாதியை கேட்டு திராவிடஸ்தான் அமைப்போமா? :lol:

எதிரியை மறைந்து இருந்து கொல்வது

கெரில்லா போர் முறை. நமக்கெல்லாம் முன்னோடி. வாழ்க குருவே

சூத்திரர்களின் தலையை துண்டிப்பது

திராவிட தோழர்கள் மேலுலகம் அனுப்பிய சூத்திரர்கள் தொகை பல்லாயிரம். உயிருடன் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைப்பதை விட தலையை தூண்டிப்பது பரவாயில்லை.

மனைவியை சந்தேகப்படுத்துவது

மனிதர்களுக்கு வரக்கூடியது தான். இயற்கையானது தான்

மனைவியை எரித்துக் கொலை செய்ய முயற்சிப்பது

கொலை செய்யும் நோக்கம் கொண்டவன், யுத்தம் செய்து மனைவியை காப்பாற்ற வேண்டியதில்லை. பாவம் உங்கள் பகுத்தறிவு :lol:

மனைவியை காட்டுக்குத் துரத்துவது

கணவன் மனைவி தகராறு. உங்கள் மனைவியிடம் கேட்டால் தெரியும் உங்கள் வண்டவாளம் :lol:

குடிப்பது, பெண்களுடன் கும்மாளம் அடிப்பது

இதுவும் பச்சைப்பொய், பித்தலாட்டம். இந்த பொறுக்கித்தனங்கள் கழகத்தின் கண்மணிகளுக்கே கைவந்த கலை. மூன்று மனைவியுடனும் ஒரு பெரிய குடும்(பம்)பி உடனும் ஒரு திராவிடப் பெரியார் படும்பாடு பெரும்பாடு. நடிகைகள் வீட்டில் சோதனை செய்து பகுத்தறிந்தால் நிறைய திராவிட வேட்டிகள் கிடைக்கும். குட்டி, புட்டி, பெட்டி - உங்க அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா (நன்றி கவுண்டமணி அண்ணா) :lol:

காட்டுக்குப் போய் மனைவியை நிலத்திற்குள் புதைப்பது

எவர் செய்தது இந்த புதைபொருள் ஆராய்ச்சி. கதை சொல்ல வந்தது கற்பனை கரடி.

Link to comment
Share on other sites

மதனராசா!

என்னுடைய வீட்டில் பெரியாரின் படம் கூட இல்லை. நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் எதற்கு வேறு யாருக்கோ பதில் சொல்கிறீர்கள்.

அடுத்து இங்கே முதலில் ஆரம்பிக்கப்பட்டது இந்து மதம் பற்றிய விவாதம்தான். பெரியார் பற்றி அல்ல. இந்து மதம் பற்றி இங்கே பேச, அதற்கு பதில் சொல்ல முடியாதவர்கள் ஆரம்பித்ததுதான் பெரியார் பற்றிய விவாதம். வேண்டுமென்றால் பழைய யாழ் களத்தை ஒருமுறை மீட்டிப் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

வெற்றிவேலைப் பாருங்கள். சரியோ, தவறோ ஒரு விளக்கத்தை தருகிறார் அல்லவா? அப்படி விவாதம் செய்யப் பழகுங்களேன். இனி வெற்றிவேலின் விளக்கத்திற்கு வருவோம்

முதலாவதை குறும்பு என்றே எடுத்துக் கொள்வோம்.

அடுத்ததைப் பார்ப்போம். கைகேயியை திருமணம் செய்கின்ற போது, கைகேயியின் தந்தை, தன்னுடைய மகளிற்கு பிறக்கும் மகன்தான் அரசனாக வேண்டும் என்று வாக்குறுதி பெறுகிறான். அரசு உரிமை பரதனுக்குத்தான் என்று இருக்கிறது. ஆனால் பரதன் இல்லாத நேரத்தில் ராமனுக்கு பட்டம் சூட்ட ஏற்பாடு நடக்கிறது. ராமன் வாரிசு என்று முடிவு செய்யப்படுகின்ற போது ஏன் பரதன் இல்லை? பரதனின் அரசை அபகரிக்க ராமன் செய்த சதி அது.

மிகுதிக்கான விளக்கத்தை மீண்டும் வந்து சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

மூன்றாவது பார்ப்பனர்களைக் காப்பது.

இதன் அர்த்தம் பார்ப்பனர்களை மட்டும் காப்பது என்பது. அரக்கர்கள் எனப்படுபவர்கள் தங்கள் பகுதிகளில் வந்த பார்ப்பனர்கள் செய்த ஆபாசக் கூத்துக்களை தடுத்தார்கள். அரக்கர்கள் எனப்படுபவர்கள் யாரையும் கொலை செய்ததாக தெரியவில்லை. ஆனால் ராமன் தங்களது பகுதியில் தமது நீதியான நிர்வாகத்தை நடத்திய அரக்கர்களை கொன்றான். நிறையக் கொலைகள் செய்த பரசுராமன் போன்ற பார்ப்பனர்களை காப்பாற்றினான்.

நான்காவது மற்றையவர்களின் நிலங்களை அபகரிப்பது.

ராமன் தன்னுடைய இடமான அயோத்தியில் இருந்து வந்து தடாகை போன்றவர்கள் ஆட்சி செய்த பகுதிகளை ஆக்கிரமித்தான். அவர்களை கொலையும் செய்தான். அப் பகுதியில் ராமனுக்கு எந்த உரித்தும் கிடையாது. காட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு ராமன்தான் அவர்களின் இடத்திற்கு வந்தானே தவிர, இவர்கள் யாரும் அயோத்திக்கு சென்று ராமன் மீது போர் தொடுக்கவில்லை

அடுத்தது எதிரியை மறைந்து இருந்து கொல்வது

ஒரு பலவீனமான இனமோ, படையோ தன்னை விட பலமானவர்களுடன் போரிடுகின்ற போதுதான் கரந்தடி யுத்தம் தேவைப்படும். வாலி ஓரு குரங்கு. ராமன் விஸ்ணுவின் அவதாரம். இங்கே எதற்கு கரந்தடி யுத்தம்?

அடுத்தது சூத்திரர்களின் தலையை துண்டிப்பது

சம்புகன் என்பவன் சாதராண குடிமகன். அரக்கன் அல்ல. அவன் தவம் செய்தான். பார்ப்பனர்கள் ராமனிடம் முறையிட்டார்கள். ராமன் சம்புகனின் தலையை வெட்டினால். சூத்திரர்கள் கடவுளை நோக்கி தவம் செய்யக் கூடாது என்பதுதான் ராமனின் தத்துவம்

அடுத்தது மனைவியை சந்தேகப்படுவது. இது மனிதர்களுக்கு வரக்கூடிய ஒன்று. ஆனால் வரவேற்கக் கூடிய ஒன்று அல்ல. பலருக்கு உதாரண புருசனாக இருக்கின்ற ராமன் சீதையை சந்தேகப்பட்டதன் மூலம் "பெண்களை சந்தேகப்பட வேண்டும்" என்ற செய்தி சொல்லப்படுகிறது.

அடுத்தது சீதை மீதான கொலை முயற்சி

சீதையை ராமன் சந்தேகப்பட சீதை நெருப்பில் இறங்கியதாக சொல்லப்படுகிறது. இன்றைக்கும் நிறைய ராமர்கள் மனைவிக்கு நெருப்பு வைத்துவிட்டு, ஸ்டவ் வெடித்ததாக சொல்வார்கள். மனைவியே தனக்கு நெருப்பு வைத்துக் கொண்டாள் என்று சொல்வார்கள். ஆகவே சீதையை ராமன் சந்தேகத்தில் நெருப்பு வைத்துக் கொல்ல முயன்றதாக நான் நம்புகின்றேன்

அடுத்தது காட்டுக்குள் துரத்தியது.

கொலை முயற்சி வெற்றி பெறாது போக, கடைசியில் காட்டுக்குள் ராமன் துரத்திவிடுகின்றான்.

அடுத்தது குடி, கும்மாளம்

இது வான்மீகி இராமாயணத்தில் வருகிறது. இதைப் பற்றி விவாதிக்கத்தான் கலைஞர் அத்வானிக்கு சவால் விட்டார். ஆனால் அத்வானி வரமாட்டார். அவருக்குத் தெரியும். ராமன் பற்றி வான்மீகி ராமாயணத்தில் இருக்கும் குறிப்புக்கள்:

உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் முறையே சுலோகம் 8.1 இல் குடி குத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி பெண்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்;. சீதை அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான். இதில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர்.சர்கா 4.2 செய்யுள் 18.21 இல் மதுபோதையில் மாமிசத்தை சுவைத்தபடி சீதைக்கு மதுவை கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாக பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.

அடுத்தது சீதையை நிலத்தில் புதைத்தது

காட்டுக்குள் துரத்திய சீதையை ராமன் பின்பு காண்கிறான். இப்பொழுது என்ன நடக்க வேண்டும். பொதுவாக பிரிந்தவர்கள் சேருவார்கள். ஆனால் என்ன நடக்கிறது? சீதையை மண் பிளந்து விழுங்கிக்கொள்கிறது. இதுதான் ராமாயணத்தில் சீதையின் முடிவு. சீதை மீது தீ வைத்து, சீதையை காட்டுக்கு துரத்தி, பின்பு காட்டில் போய் மண்ணுக்குள்ளும் ராமன் புதைத்துவிடுகிறான்.

Link to comment
Share on other sites

மறுபடியுமா..............பாவம் ராமர் அவரும் போயிட்டார் யார் மற்றவர் பெரியாரோ அவரும் போயிட்டார் ஆனா நம்ம ஆட்கள் விடமாட்டீனம் போல இருக்கு............ :lol:

(சா நாட்டில எத்தனை பேர் கஷ்டபடுது அதை பற்றி ஆராயிச்சி செய்தாலும் பரவாயில்லை சரி செய்யுங்கோ :lol: )

Link to comment
Share on other sites

மூன்றாவது பார்ப்பனர்களைக் காப்பது.

இதன் அர்த்தம் பார்ப்பனர்களை மட்டும் காப்பது என்பது. அரக்கர்கள் எனப்படுபவர்கள் தங்கள் பகுதிகளில் வந்த பார்ப்பனர்கள் செய்த ஆபாசக் கூத்துக்களை தடுத்தார்கள். அரக்கர்கள் எனப்படுபவர்கள் யாரையும் கொலை செய்ததாக தெரியவில்லை. ஆனால் ராமன் தங்களது பகுதியில் தமது நீதியான நிர்வாகத்தை நடத்திய அரக்கர்களை கொன்றான். நிறையக் கொலைகள் செய்த பரசுராமன் போன்ற பார்ப்பனர்களை காப்பாற்றினான்.

எதெற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்பீர்களே. உங்கள் வழியிலேயே வருகிறேன்.

ஆதாரம் தாருங்கள். இது பற்றி பாடும் வால்மீகியின் சுலோகத்தையும் தாருங்கள்.

நான்காவது மற்றையவர்களின் நிலங்களை அபகரிப்பது.

ராமன் தன்னுடைய இடமான அயோத்தியில் இருந்து வந்து தடாகை போன்றவர்கள் ஆட்சி செய்த பகுதிகளை ஆக்கிரமித்தான். அவர்களை கொலையும் செய்தான். அப் பகுதியில் ராமனுக்கு எந்த உரித்தும் கிடையாது. காட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு ராமன்தான் அவர்களின் இடத்திற்கு வந்தானே தவிர, இவர்கள் யாரும் அயோத்திக்கு சென்று ராமன் மீது போர் தொடுக்கவில்லை

படைபலம் எதுவும் இன்றி வனவாசம் செல்பவன் எப்படி மற்றவர் நிலத்தை அபகரிப்பது? ஒருவனும் அவன் மனைவியும் தம்பியும் வந்து ஊரையே அபகரிப்பதற்கு அந்த ஊரவர்கள் என்ன அத்தனை பேடிகளா? புத்தி பேதலித்தவர் போல் பேசாதீர்கள்

ஆமாம் நான் யாழ்நகரில் இருந்து கொழும்பு போகும் போது என் மனைவியின் கையை எவனாவது இழுத்து பிடித்தாலும் கூட என் தம்பியை எவளாவது உறவுக்கு அழைத்தாலும் கூட நான் கைக்கட்டி பார்த்து கொண்டு தான் இருக்க வேண்டும். கொழும்பு அவர்களின் ஊராயிற்றே. இப்படி ஒரு நியாயம் பேசுவதற்கு நீங்கள் வெட்கப்படவேண்டும்.

அடுத்தது எதிரியை மறைந்து இருந்து கொல்வது

ஒரு பலவீனமான இனமோ, படையோ தன்னை விட பலமானவர்களுடன் போரிடுகின்ற போதுதான் கரந்தடி யுத்தம் தேவைப்படும். வாலி ஓரு குரங்கு. ராமன் விஸ்ணுவின் அவதாரம். இங்கே எதற்கு கரந்தடி யுத்தம்?

பலம் பலவீனம் என்பதெல்லாம் யுத்தம் நடக்கும் இடம், நேரத்தை பொறுத்தது. கரந்தடி என்பது பலமானவர்கள் மீது பலவீனமானவர்கள் தாக்குதல் நடத்தும் உத்தி அல்ல. எதிரி எதிர்பாராத போது மறைந்திருந்து தாக்கும் உத்தி. உலக வல்லரசு அமெரிக்காவும் பயன்படுத்தும் உத்தி தான் அது.

இராமனை விஷ்ணுவின் அவதாரம் என்று வால்மீகி இராமயணம் சொல்லவில்லை. நீங்கள் தான் சொல்கிறீர்கள். விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்தவரா நீங்கள்?????!!!!!

அடுத்தது சூத்திரர்களின் தலையை துண்டிப்பது

சம்புகன் என்பவன் சாதராண குடிமகன். அரக்கன் அல்ல. அவன் தவம் செய்தான். பார்ப்பனர்கள் ராமனிடம் முறையிட்டார்கள். ராமன் சம்புகனின் தலையை வெட்டினால். சூத்திரர்கள் கடவுளை நோக்கி தவம் செய்யக் கூடாது என்பதுதான் ராமனின் தத்துவம்

அரசியலில் விரும்பாத போதும் சில நடவடிக்கை எடுக்க ஆட்சியாளன் நிர்ப்பந்திக்கப்படுகிறான். நாம் முஸ்லீம்களை வடக்கில் இருந்து அனுப்ப நிர்ப்பந்திக்கப்படவில்லையா? அது போல் இதுவும் ஒரு அரசியல் தேவையாக இருந்திருக்கலாம்.

மேலும் சூத்திரன் தவம் செய்வதை இராமன் அனுமதிக்கவில்லை என்பது பொய். ஆஞ்சனேயன் எத்தனை தவவலிமை கொண்டவன் என்பது தெரியுமா உங்களுக்கு? அத்தோடு, சீதை என்பவள் ஜனகரின் சொந்த மகள் அல்லவே. ஜனகரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவள் தானே. திருமணத்தின் போது சீதையின் குலம் என்ன என்று இராமன் கேட்டதாக எங்கும் இல்லையே. முடிந்தால் இதற்கும் ஒரு கட்டுக்கதையுடன் வாருங்கள்

அடுத்தது மனைவியை சந்தேகப்படுவது. இது மனிதர்களுக்கு வரக்கூடிய ஒன்று. ஆனால் வரவேற்கக் கூடிய ஒன்று அல்ல. பலருக்கு உதாரண புருசனாக இருக்கின்ற ராமன் சீதையை சந்தேகப்பட்டதன் மூலம் "பெண்களை சந்தேகப்பட வேண்டும்" என்ற செய்தி சொல்லப்படுகிறது.

இல்லை இல்லை. எத்தனை உயர்குணம் கொண்டவனும் வாழ்வில் தடுமாறும் நிலைவரக்கூடும் என்று உணர்த்தப்படுகிறது. அத்தோடு இராமன் சீதை மேல் சந்தேகம் கொண்டதாக வால்மீகி இராமயணம் சொல்லவில்லை (என்னால் வடமொழி வாசித்து புரிந்து கொள்ள முடியும்). இது இராமன் மேல் வேறு சிலர் கொண்ட சந்தேகம்.

அடுத்தது சீதை மீதான கொலை முயற்சி

சீதையை ராமன் சந்தேகப்பட சீதை நெருப்பில் இறங்கியதாக சொல்லப்படுகிறது. இன்றைக்கும் நிறைய ராமர்கள் மனைவிக்கு நெருப்பு வைத்துவிட்டு, ஸ்டவ் வெடித்ததாக சொல்வார்கள். மனைவியே தனக்கு நெருப்பு வைத்துக் கொண்டாள் என்று சொல்வார்கள். ஆகவே சீதையை ராமன் சந்தேகத்தில் நெருப்பு வைத்துக் கொல்ல முயன்றதாக நான் நம்புகின்றேன்

நீங்கள் உண்மைகளுக்கு நெருப்பு வைத்து கொல்ல முயல்வதாக நான் நம்புகிறேன்

அடுத்தது காட்டுக்குள் துரத்தியது.

கொலை முயற்சி வெற்றி பெறாது போக, கடைசியில் காட்டுக்குள் ராமன் துரத்திவிடுகின்றான்.

சீதையை காட்டுக்கு துரத்தி, பின்பு காட்டில் போய் மண்ணுக்குள்ளும் ராமன் புதைத்துவிடுகிறான்.

ஒரு மன்னன் ஒரு பெண்ணை கொல்வதானால், தானே காட்டுக்கு செல்ல வேண்டியதில்லை. கழகத்தின் கண்மணிகளிடம் கேளுங்கள், காதும் காதும் வைத்தாற் போல் எப்படி எதிரிகளை கொலை செய்வது என்று சொல்லித் தருவார்கள்

Link to comment
Share on other sites

மூன்றாவது பார்ப்பனர்களைக் காப்பது.

அடுத்தது குடி, கும்மாளம்

இது வான்மீகி இராமாயணத்தில் வருகிறது. இதைப் பற்றி விவாதிக்கத்தான் கலைஞர் அத்வானிக்கு சவால் விட்டார். ஆனால் அத்வானி வரமாட்டார். அவருக்குத் தெரியும். ராமன் பற்றி வான்மீகி ராமாயணத்தில் இருக்கும் குறிப்புக்கள்:

உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் முறையே சுலோகம் 8.1 இல் குடி குத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி பெண்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்;. சீதை அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான். இதில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர்.சர்கா 4.2 செய்யுள் 18.21 இல் மதுபோதையில் மாமிசத்தை சுவைத்தபடி சீதைக்கு மதுவை கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாக பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஆதாரங்களை நீங்கள் தரவேண்டும். நீங்கள் வால்மீகி ராமாயணத்தில் இருப்பதாக சொல்லும் சுலோகங்களை தரமுடியுமா? இது நான் உங்களுக்கு விடும் சவால். வால்மீகி இராமயணத்தில் அப்படியான சுலோகங்கள் இராமனை பற்றி இருப்பதாக நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய். இந்த களத்தில் நீங்கள் குறீயீடு செய்து சுலோகங்களை குறிப்பிடுவதால், அந்த சுலோகங்களை நீங்கள் படித்து இருக்க வேண்டும். ஆகவே நீங்கள் நேர்மையானவராக இருந்தால் அந்த சுலோகங்களை இங்கே பதிந்து விடுங்கள் பார்க்கலாம்.

சமஸ்கிருத அரிச்சுவடி கூட படிக்காமல், வடமொழியில் எழுதப்பட்டுள்ள வால்மீகி இராமயணத்தை பற்றி வாதம் செய்ய அழைக்கும் கலைஞர் போன்ற பொய்யர் இல்லை நீங்கள் என்று நான் நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

வெற்றிவேல்!

சமஸ்கிருதம் படித்தவர்கள் இந்த இந்த இடங்களில் இப்படி இப்படி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதை இன்றைக்குச் சொல்லவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்கள். இதுவரை இதற்கு சமஸ்கிருதம் படித்த யாரும் மறுப்புச் சொல்லவில்லை.

கலைஞர் கருணாநிதி ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். அவர் வெளிப்படையாக வான்மீகி ராமாயணம் ராமனை குடிகாரன் என்று சொல்கிறது என்கிறார். இந்தியாவின் பிரதமர் ஆகக் கூடியவர் என்று கருதப்படும் அத்வானியை பகிரங்கமாக விவாதத்திற்கு அழைக்கிறார்.

இந்த நிமிடம் வரை இந்தியாவில் இருக்கும் 3 கோடிப் பார்ப்பனரும் வான்மீகி ராமாயணத்தில் அப்படி இல்லை என்று பதில் சொல்லவில்லை. சமஸ்கிருதம் படித்த அத்வானி கலைஞரின் சவாலை ஏற்றுக் கொள்ளாமல் நழுவுகிறார்.

இப்பொழுது நான் வான்மீகி ராமாயணத்தில் உள்ள சுலோகங்களைத் தேடித் தந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒரே ஒரு சுலோகத்திற்கு ஏதாவது அர்த்தம் சொல்வீர்கள். மிகுதிச் சுலோகத்திற்கு நேரம் கிடைக்கும் போது பதில் சொல்வேன் என்று சொல்வீர்கள்.

நான் வான்மீகி ராமாயணத்தில் எந்த இடத்தில் இந்தத் தகவல்கள் இருக்கின்றன என்பதை சொல்லியிருக்கிறேன்.

நீங்கள் அவைகளை இங்கே தந்து அதனுடைய உண்மையான அர்த்தத்தையும் தாருங்கள்!

அப்படியே அத்வானிக்கும் தொலைபேசி எடுத்து நீங்கள் கண்டுபிடித்த அர்த்தங்களை சொல்லிக் கொடுங்கள். பாவம் அவர். பேய்முழி முழித்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்

Link to comment
Share on other sites

சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!

மலர் மன்னன் -Thinnai.com

ஸேது ஸமுத்திர கால்வாய் திட்டம் என்று பெயர் சொல்கிறார்கள். ஸேது என்றாலே பாலம் என்றுதான் அர்த்தம். ஆனால் பாலமே இல்லை என்கிறார்கள். ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கு சேதுபதி என்பதுதான் பட்டப் பெயர். அதாவது பாலத்திற்கு அதிபதி. ஆனாலும் பாலமே இல்லை என்கிறார்கள். பிறகு ஏன் ஸேது ஸமுத்திரக் கால்வாய் திட்டம்? ஸேது ஸமுத்திரம் என்பது காலங்காலமாய் இருந் து வரும் அடையாளம் என்பதால்தானே? வழக்கு என்றால் வெறும் மணல் திட்டுகளின் தொகுப்பு என்பார்கள். ஆனால் அடையாளப் படுத்த மட்டும் பாலம் என்பதைத்தான் பயன் படுத்துவார்கள்! ஏன் இந்த முரண்பாடு?

கால வெள்ளத்தின் பின்னால் இன்னும் கொஞ்சம் போனால் ஸ்ரீராம ஸேது என்கிற அடையாளம் தெரியும். அது ஹிந்து தேச கலாசாரத்தின் அடையாளம். மர்யாதா புருஷோத்தம் ராமபிரானும் கீதாசாரியன் கண்ணபிரானும் ஒவ்வொரு ஹிந்துவின் அணுவிலும் உள்ளனர். சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி, சிறுவர்கள் யாவரும் ஸ்ரீராமர், சிறுமியர் எல்லாம் சீதையரே என்று பெருமிதம் கொள்ளும் ஹிந்துக்களிடம் ராமர் இருந்ததற்கான அடையாளமே இல்லை என்று சொன்னால் எதிர்வினை என்னவாக இருக்கும்? அல்லது என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவரவர் தீர்ப்பிற்கே விட்டு விடுகிறேன்.

ஆர்க்கியாலாஜிகல் சர்வே ஆப் இந்தியா என வழங்கப்படும் ஹிந்துஸ்தானத்துத் தொல்லியலாய்வு மற்றும் பராமரிப்பு அரசினர் நிறுவனம் இதுவரை ஸ்ரீராம ஸேது பற்றி எவ்வித ஆய்வும் செய்ததுமில்லை, அறிக்கை தயாரித்து ஆவணப் படுத்தியதுமில்லை. ஆகவே ஸ்ரீராம ஸேது பற்றிய விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான அருகதை அதற்கு இல்லை. மத்திய அரசின் கலாசாரத் துறை அதனிடம் தகவல் கேட்டபோதே இது பற்றி நாங்கள் ஆய்வு ஏதும் செய்ததில்லை என்றுதான் நியாயமாக அது பதிலளித்திருக்க வேண்டும்.

ஸ்ரீராம ஸேதுவைத் தொல்பொருளாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இல்லை என்று தொல்லியல் ஆய்வு மற்றும் பராமரிப்பு நினைத்துக்கொண்டிருக்கிறது என்றால் அது தன் கடமைகள் யாவை என்பதையே சரியாக அறியவில்லை என்று அர்த்தம். வெறும் புராதனக் கட்டிடங்கள் மட்டுமல்ல, இயற்கையாகவே அமைந்த நூதனமான கலாசார அடையாளங்களையும் இனங் கண்டு பாதுகாத்துப் பராரிப்பது அதன் கடமை. ஆர்க்கியாலாஜிகலை ஆர்க்கிடெக்சராஜிகல் என்று கண்டுபிடித்திருகிறார்களா என்ன?

ஸ்ரீ ராம ஸேது ஒரு நீண்ட நெடிய கால கலாசாரத்தின் அடையாளம். தொன்மையான தொரு மாபெரும் சமூகத்தின் உயிரோட்டத்தில் இறண்டறக் கலந்துவிட்ட நம்பிக்கையின் அடையாளமும் கூட. நமது தொல்லியல் துறையில் பொதுவாகப் புராதனக் கட்டிட நிர்மாணங்களைப் பற்றிய புள்ளி விவரங்களைத்தான் வைத்திருப்பார்கள்.

ஆயிரமாயிரம் ஆண்டு வயதான மரங்கள் கல்லாகிப் போய்விடுவதுபோல் எந்த யுகத்திலோ முறையான பாலம் அமைக்க வேண்டிய அவசியமோ அதற்கான அவகாசமோ இன்றிக் கடலில் பாதை அமைக்க அணை கட்டுவதுபோலப் பாறைகளை இட்டு நிரப்பிய அமைப்பின் மீது கால வெள்ளம் போர்த்தி மூடிய மணல் கெட்டித்துப் போய், உடைத்து எறிந்தால்தான் அகற்ற இயலும் என்னும் அளவுக்குக் கவசம்போலாகிவிட்டது பற்றி மத்திய அரசின் கலாசார அமைச்சகம் தனது அறியாமையின் காரணமாக விசாரித்தாலும் அல்லது உச்ச நீதிமன்றமேகூடக் கேட்டிருந்தாலும் எங்களிடம் இது பற்றி விவரம் இல்லை. காலாசாரம் தொடர்பான ஆய்வாளர்களிடமோ ஆன்மிகப் பெரியவர்களிடமோ கேளுங்கள் அல்லது புவிஇயலாளரிடம் விசாரியுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும், அந்த ஆர்க்கியாலாஜிகல் சர்வே? அதற்கு மாறாக அதிகப் பிரசங்கித்தனமாகச் சம்பந்தா சம்பந்தமின்றி ஒரு அறிக்கை தந்தால் அவ்வாறு தருமாறு அது நிர்பந்திக்கப்பட்டிருக்கும

Link to comment
Share on other sites

கேள்விகளும் - உண்மையின் மையப்புள்ளியும் கே. ஆர். மணி -Thinnai.com

நிறைய விழுமியங்கள், தத்துவங்கள், கோட்பாடுகள் காலாவதியாகின்றன. சில மட்டும் முழுமையாகயில்லாவிட்டாலும் ஒரளாவாவது தங்களை சரிசெய்துகொண்டு உண்மையென்ற மையப்புள்ளி நோக்கிபோகின்றன. மக்களுக்கு எப்போதும் நாணயத்தின் இருபக்கங்களும் முழுவதுமாய் தெரிவதில்லை. தெரிந்தாலும் பகுத்துணர நேரமே, முதிர்ச்சியோ கிடைப்பதில்லை. சில கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்வதன் மூலமே உண்மை என்கிற மையப்புள்ளியை நோக்கி நம்தேடல் தொடங்கும்.

நீண்டு தொடரும்........

சில நேரங்களில் சில கேள்விகள் :

1) பாஜக ஆட்சியில்தானே இந்த சேதுசமுத்திரத்திட்டம் ஆரம்பித்தது ? இப்போது ஏன்

அது எதிர்க்கிறது ? அரசியல் ஆதாயம்தேடித்தானே ?

அப்படித்தான் தெரிகிறது. அப்படியும் இருக்கலாம். எப்போதெல்லாம் மக்கள் நலத்திட்டங்கள் அரசியலின் வாக்குறுதியாக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதன் உண்மை முகம் தோற்கடிக்கப்படுவது சகித்துக்கொள்ளமுடியாத உண்மை.

2) தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குபதிலாக அவரின் மகள் வீட்டில் செய்தது தவறுதானே ?

ஆம். தவறுதான். மிகப்பெரிய தவறு. குடும்பம் வேறு. அரசியல் வேறு. அம்பை எய்தவனை விட்டுவிட்டு வேடிக்கைபார்ப்பவர்களை முட்டும் அலங்காநல்லூர் மாட்டின் கதைபோலயிருக்கிறது. எதிர்ப்புகள் தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கவேண்டும். அங்கு செய்யமுடியாத கையலாகதனத்தின் வெளிப்பாடே இது. குடும்பம் ஆட்சியில் மட்டும் பங்குபெறுகிறது, பாபத்திலும் பங்கேற்கட்டுமே என்று வால்மீகிக் கேள்விகளை கேட்காதீர்கள். தவறு. தவறுதான். நல்ல மானிடதர்மத்திற்கு அது அழகல்ல.

2. அ) இதன் தொடர்ச்சி/ பின் விளைவு எவ்வாறு அமையலாம் ?

வாய்ப்பு 1 : கொஞ்ச நாளைக்கு பிறகு மறந்துபோகிற அரசியல் சண்டையாக மாறலாம்.

வாய்ப்பு 2 : நாளைக்கு தமிழரிருக்கும் எல்லாயிடங்களிலும் இது தொடரப்படலாம். எப்படி சங்க பரிவாரம்

இந்துக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளின் பிரதபலிப்பு என்று சொல்லப்படுகிறதோ, தமிழக முதல்வரின், ஒரு சில பழுத்து, விழப்போகிற திராவிடத்தலைகளின் காலம் காலமான எதிர்ப்பும், அடித்தளமற்ற ஆரவராமான இந்து எதிர்ப்பும் தமிழகத்தின் மொத்தக்குரலென நம்பப்படலாம். அல்லது நம்புவிக்கப்படலாம்.

வாய்ப்பு 3 : தமிழகத்தில் இந்துத்துவத்தின் வேர் மேலும் ஆழப்படலாம். தேசிய கட்சிகள் தமிழகத்தில் பலப்படுவது மிகமுக்கியமான ஒன்று. ராமரை ஆதரிக்காத திராவிட கட்சிகள் அடுத்த மாநிலத்திற்கு தாவுவதற்கு/ பரவுவதற்கு நல்ல காரியமாய் அமையலாம்.

வாய்ப்பு 4 : [நீங்களும் கொஞ்சம் யோசியுங்கள் ]

3) தமிழக முதல்வரின் பேச்சு இந்துக்களின் இதயத்தை புண்படுத்துவதாக அமைவதாயிருக்கிறதே. இவரது எதிர்ப்பை வேறு நல்ல வார்த்தைகளில் சொல்லியிருக்க கூடாது ?

இது என்ன புதுசா ? இந்து திருடன், இது சூத்திர ஆட்சி, ஏன் சீதை முதுகில் மூன்று கோடில்லை என்பதான மலிவான, ஆரோக்கியமற்ற தளத்திலிருந்து எழுந்த கொள்கைகளால் கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சியிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்கமுடியும். இரத்தத்திலே ஊறிய திராவிட பராம்பரியத்தின் எதிர்ப்புக்கொள்கைதானேயிது. எதிர்த்தாலும் நல்ல, ஆரோக்கியமான வார்த்தைகளால் எதிர்க்கிற கம்யூனிஸ்டு கட்சிகளின் முதிர்ச்சியை நீங்கள் எதிர்பார்ப்பது உங்களின் தவறு. மற்றவர்களை புண்படுத்துவதன் மூலமும், ஆக்ரோசமாய், நாராசமாய் பேசுவதன் மூலமே தங்களின் கருத்துக்கள் பரப்பப்பட முடியும் என்று நம்புகிற தத்துவ ஆதாரமும், சில போலியான வெற்றியும் கொண்டவர்களிடம் வேறேதை எதிர்பார்க்கீறீர்கள். கனிமீது நம்பிக்கையற்று காய் மீதான நம்பிக்கை கொண்ட பழைய தலைமுறையது. கனிந்தால் நல்ல மொழி வருமென எதிர்பார்ப்பதைவிட வேறென்ன சொல்ல ?

4) ராமசேது சமுத்திரத்தை ஒரு நடுநிலை இந்தியான எப்படி எதிர்கொள்வேன் ?

ராம் கட்டியதாகவேயிருந்தாலும், ராம் ஒரு தியாகத்தின் பிரம்மம். வேறு வழிகளிருந்தாலும் தான் கட்டிய பாலத்தை இடிக்கவேண்டுமென்றால் தயக்கமின்றி தருபவன். தனது அரசாங்கப்பதவியையே தந்தவனுக்கு இது சூஜுபி.. இதை இடிப்பதன் மூலம் மட்டுமே பாலம் கட்டமுடியும் என்ற நிலையிருந்தால் அவன் மேல் பாரத்தை போட்டு ஆரம்பிக்கலாம். மற்ற வழிகளிலும் குறைந்த செலவில் அதுமுடியுமென்ற பட்சத்தில் அதை கையாள்வதே சிறந்தது. நம்புவர்களுக்கும், நம்பாதவர்களுக்கும் ஒரு லெவல் ப்ளேயிங் பீல்டு கொடுத்தாகவேண்டும். நம்புவர்களுக்கு - நாட்டில் நலந்தான் முக்கியமென உணரச்செய்யலாம். என்ன தேர்தல்முடியும் வரை பொறுத்திருக்கவேண்டும் ஒரு ஆரோக்கியமான விவாத சூழலுக்காக.

5) 'சிவில் போர். .போய்க்கொண்டிருக்கிறது. எரிகிற தீயில் முதல்வரின் வார்த்தைகள் எண்ணெய் ஊற்றும்..' அத்வானியின் கமெண்ட் ?

பதில்: ஓவர் பில்டப். இல்லாத போரை எதற்கு தேவையில்லாமல் ஆரம்பிப்பானேன்..செய்ய வேண்டியது நிறையயிருக்கிறது. தமிழகத்தில் பாஜ காலுன்ற இந்த திராவிட மண்குதிரைகள் தேவைதான். எவ்வளவு சீக்கிரம் தேசிய கட்சிகளின் பலத்தை பெருக்கமுடியுமோ அவ்வளவு சீக்கரம் வளர்க்கப்பாருங்களய்யா..

6) ஒரு முஸ்லிம் கடவுளை இப்படி சொல்லியிருந்தால் என்னவாயிருக்கும் ?

இது ஒரு தேவையற்ற ஆனால் தேவையான ஒப்பிடு. உண்மை என்கிற மையப்புள்ளியை நோக்கி போகிற எந்த இந்துவுக்கும் இந்த உறுத்தலிருக்க கூடாது. அதுதான் வாசுதேவ குடும்பகத்தின் சிறப்பே. ஆனால் பொய் மதச்சார்பின்மை பேசுகிற காங்கிரசு முதலான கட்சிகள், இதை ஆழமாய் யோசிக்கவேண்டும்.

7) சங், தமுமுக, விஹபி போன்ற அடிப்படைக்குழுக்கள் தேவையானவையாயென்ன ? அவற்றை அழிப்பதால் நிரந்திரமான அமைதி ஏற்படுமல்லவா ?

வீட்டிற்கு எப்படி காவலாளி முக்கியமோ அதுபோல அடிப்படை குழுக்களான விஎஸ்பி போன்ற குழுக்கள் அவசியம். அவைகள் வீட்டிற்கு வெளியில் தேவையான வேலைக்கு மட்டுமே நிறுத்தப்படவேண்டுமேயன்றி, வீட்டின் தலைவனுக்கான அதிகாரத்தை வாசலின் கூர்கா எடுத்துக்கொள்ளக்கூடாது. அடிப்படை குழுக்கள் எல்லா மதத்திற்கும் அவசியமானதும் கூட. ஆனால் அவை கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கவேண்டும். அவை எழுப்பும் குரல்களின் நியாயம் பொதுத்தளங்களுக்கு உடனடியாக கொண்டுவரப்படவேண்டும். சரிசெய்யப்படவேண்டும். ஒரு தரமான ஜனநாயகத்தின் வேலை இதுபோன்ற அடிப்படைக்குழுக்களுக்கு அதிகமான வேலை இல்லாமல் செய்வதேயாகும். இது முஸ்லிம் குழுக்களுக்கு பொருந்தும். அவையனைத்தும் ஜனநாய கோட்டுக்கள் நின்று செயல்படவேண்டுமென்பதை சொல்லத்தேவையில்லை.

8) காங்கிரசு ஏன் திமுகவை இப்படி பேசாதீங்க என்று சொல்லக்கூடாது ?

அப்பூ.. என்ன ஜோக் சொல்றீங்க.. ஏற்கனவே சிவப்பு குத்து தாங்கமுடியலை. திருப்பி கறுப்புகிட்டவேற அடிவாங்கணுமா.. எங்களுக்கு அப்படியெல்லாம் தீர்மானமான மானம், கொள்கை, கருத்துன்னு வெச்சிக்கரதில்லை.. நாங்க தீர்மானமாயிருக்கறது.. எப்படியாவது

அஞ்சு வருசத்தை கழிச்சு கூட்டிடணும்னுதான.. என்று யாராவது காங்கிரசுக்காரர் சொன்னால் நீங்கள் யாரும் அதிர்ச்சியடையமாட்டீர்கள்தா

Link to comment
Share on other sites

வெற்றிவேல்!

சமஸ்கிருதம் படித்தவர்கள் இந்த இந்த இடங்களில் இப்படி இப்படி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதை இன்றைக்குச் சொல்லவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்கள். இதுவரை இதற்கு சமஸ்கிருதம் படித்த யாரும் மறுப்புச் சொல்லவில்லை.

இல்லை இல்லை! மற்றவர்கள் எழுதும் கருத்துக்களையும் மறுப்புக்களையும் படிக்காது, நீங்கள் "விடுதலை"யில் வரும் புரளிகளை மட்டும் படித்து கொண்டிருந்தால் நாம் என்ன செய்வது.

கலைஞர் கருணாநிதி ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். அவர் வெளிப்படையாக வான்மீகி ராமாயணம் ராமனை குடிகாரன் என்று சொல்கிறது என்கிறார். இந்தியாவின் பிரதமர் ஆகக் கூடியவர் என்று கருதப்படும் அத்வானியை பகிரங்கமாக விவாதத்திற்கு அழைக்கிறார்.

இந்த நிமிடம் வரை இந்தியாவில் இருக்கும் 3 கோடிப் பார்ப்பனரும் வான்மீகி ராமாயணத்தில் அப்படி இல்லை என்று பதில் சொல்லவில்லை. சமஸ்கிருதம் படித்த அத்வானி கலைஞரின் சவாலை ஏற்றுக் கொள்ளாமல் நழுவுகிறார்.

அத்வானியுடன் ஆங்கிலத்திலோ, இந்தியிலோ கருணாநிதிக்கு விவாதம் பண்ண முடியுமா? ஏற்கனேவே BJP H.ராஜா தமிழில் விவாதம் புரியலாம் வாருங்கள் என்று கருணாநிதிக்கு சவால் விட்டிருப்பதை அறியாதவரா நீங்கள். அதற்கு, நான் இராமன் மீது அவதூறு ஒன்றும் சொல்லவில்லையே என்று கருணாநிதி பின் வாங்கி கொண்டதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?

நீங்கள் தமிழ் தவிர்ந்த வேறு இந்திய பத்திரிகைகள் படிப்பதில்லையா? படியுங்கள் நிறைய சவால்களை காணலாம். எதிர் சவால்களையும் காணலாம். கதாநாயகனை கயவனாக உலகில் எந்த காவியமும் காட்டுவதில்லை என்ற பொதுவான உண்மையை கூட உணரமுடியாத உன்மத்தரிடம் பேசி ஆவதென்ன?

இப்பொழுது நான் வான்மீகி ராமாயணத்தில் உள்ள சுலோகங்களைத் தேடித் தந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒரே ஒரு சுலோகத்திற்கு ஏதாவது அர்த்தம் சொல்வீர்கள். மிகுதிச் சுலோகத்திற்கு நேரம் கிடைக்கும் போது பதில் சொல்வேன் என்று சொல்வீர்கள்.

நான் வான்மீகி ராமாயணத்தில் எந்த இடத்தில் இந்தத் தகவல்கள் இருக்கின்றன என்பதை சொல்லியிருக்கிறேன்.

நீங்கள் அவைகளை இங்கே தந்து அதனுடைய உண்மையான அர்த்தத்தையும் தாருங்கள்!

இங்கே நான் இருக்கும் நாட்டில் வால்மீகியின் மூலப்பிரதிகளை எடுக்கும் வசதி இல்லை. இணையத்தில் கிடைக்கும் என்றும் நினைக்கவில்லை.

பலரின் மதநம்பிக்கைக்கு எதிராக இவ்வளவு பாரதூரமான விடயங்களை கூறும் நீங்கள், அப்படி கூறும் சுலோகங்களை நேரிடையாக ஆராய்ச்சி செய்யாமல், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கருத்துக்களை வைக்கும் அடிமுட்டாளாக இருக்க மாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை.

அதனால் நீங்கள் வாசித்து அறிந்து கொண்ட அந்த வால்மீகியின் சுலோகங்களை தயை கூர்ந்து இணைத்து விடுங்கள். நமக்கும் அந்த சுலோகங்களை தேடி ஓடும் நேரம் மிச்சம். உங்களுக்கும் இப்போதே அவற்றிற்கான விளக்கம் கிடைத்து விடும்.

மற்ற மூன்று மந்திரங்கள்: மந்திரங்கள் அல்ல அவை தந்திரங்கள். எங்கே இருந்து பெற்றீர்கள் அவற்றை? எந்த நூலில் உள்ளவை அவை? விபரம் சொல்லுங்கள் என்று கேட்டு பல வாரங்கள் ஆகிவிட்டது. மூச்சே காட்டாமல் இருந்து விட்டு, இன்று காட்சியை அப்படியே மாற்றி போடுகிறீர்களா? நீங்கள் மந்திரங்கள் என்ற பெயரால் எழுதி இருக்கும் தந்திரங்களில் வடமொழி அகராதியிலேயே இல்லாத சொற்கள் இருக்கின்றன. அத்தனை பிழைகள். அதனால் மூல நூட்களின் விபரம் தாருங்கள், நாம் மந்திரத்தின் சரியான பிரதியுடன் விளக்கமும் தருகிறோம்.

அப்படியே அத்வானிக்கும் தொலைபேசி எடுத்து நீங்கள் கண்டுபிடித்த அர்த்தங்களை சொல்லிக் கொடுங்கள். பாவம் அவர். பேய்முழி முழித்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன்

அத்வானிக்கும் அடுத்த வீட்டு வாணிக்கும் பாடம் எடுப்பது நமது வேலை இல்லை

ஐயா பெரியவரே! அத்வானிக்கு எவ்வளவு வடமொழி பாண்டித்தியம் உள்ளது என்று எனக்கு தெரியாது. அது போகட்டும் வால்மீகி இராமாயணத்தில் ஏதோ இருப்பதாக புரளி கிளப்பும் கருணாநிதி அந்த சுலோகங்களையும் சொல்லி விடுவது தானே.

ஒரு பழம்பெரும் நூலை மேற்கோள் காட்டும் போது அது சம்பந்தப்பட்ட சுலோகத்தையும், அந்த சுலோகம் அந்த நூலில் எங்கு உள்ளது என்ற குறியீட்டையும் குறிப்பிடவேண்டும் என்ற விவஸ்தை கூட கிடையாதா இந்த கருணாநிதிக்கு.

ஆட்சி பறி போகும் என்றால் அந்தர் பல்டி அடித்து விட மாட்டாரா நம் தானைத்தலைவர்?

டெல்லி ஆட்டம் காணும் என்றால் கருணாநிதியை கழற்றி விட எத்தனை நாளாகும் காங்கிரஸுக்கு?

பொறுத்திருந்து பார்ப்போம்!

நான் என்ன இராவணனா ராமா

நீ என்னை சாய்த்திடல் சரிதானா

ஒரு பேச்சுக்கு நான் சொன்ன பேச்சு

என் மூச்சுக்கு அது ஆப்பு ஆச்சு

என்று கலைஞரின் கவிதை வந்தாலும் வரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.