Jump to content

சீதை பற்றி ராமன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீதை குடிகாரி என்று ராமனே சொல்லி இருக்கிறான் (ஸ்ரீ ராமஜெயம் எழுதும் பெண்களின் கவனத்திற்கு (1))

ராமனின் சிறப்பியல்பாகச் சொல்லப்படும் முக்கிய விஷயமே, 'இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடாத யோக்கியாம்சம்' என்பார்கள். அவன், ஒரே மாதான சீதையையாவது சிந்தையால் தொட்டானா என்பது சந்தேகமாக இருக்கிறது.

இதற்கான ஆதாரங்களாக நான் வால்மீகிக்கெல்லாம் போகப்போவதில்லை. கம்ப ராமாயணத்திலிருந்து தான் எடுத்து வைக்கப் போகிறேன். இவற்றைப் படித்த பிறகு நம் பெண்கள் தமது ராம பக்தியைத் தொடரட்டும்.

"நீதி தவறிய அரக்கனின் நகரில் அவனுக்கு அடங்கி அறுசுவையுள்ள உணவுகளை விருப்பமுடன் உண்டு நெடுங்காலம் நீ உயிர் வாழ்ந்து இருக்கிறாய். உன் நல்லொழுக்கம் பாழ்படவும் நீ இறந்தாயில்லை.அந்த அச்சமே இல்லாமல் இப்போது என்ன நினைப்போடு மீண்டு வந்திருக்கிறாய் என்னிடம்? இன்னும் உன்னை விரும்புவேன் என்பது உன் எண்ணமோ?"

இவைதான், ராமன் ராவணனைக் கொன்ற வெற்றி வீரனாய் நின்றிருக்க, சீதை அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை மீட்க வந்திருப்பவனிடம் ஆவலாக வந்து அவன் எதிரே நின்ற போது அவளை வரவேற்ற ராமனின் முதல் வார்த்தைகள்.

"உன்னை மீட்பதற்காகவா போர் செய்தேன் என்று நினைத்தாய்? மனைவியைக் கவர்ந்து சென்றவனைக் கொல்லவில்லை என்கிற பழி என்னை வந்து சேர்ந்துவிடக் கூடாதே என்பதற்காகத் தான் இந்தப் போரே"

"என்னுடைய அன்பினை மறந்து இலங்கையில் மாமிசத்தையும், மதுவையும் அமிழ்தத்தினை விட சுவை மிக்கதாக எண்ணி இலங்கையில் உண்டனையே. இனி நீ எப்படி எனக்குத் தகுதியானவளாக இருக்க முடியும்?"

"நல்ல குலத்தில் பிறவாமல். புழுவைப் போல் மண்ணிலிருந்து தோன்றியவள் தானே நீ? அதற்கு ஏற்ற இயல்பினைக் காட்டி விட்டாயே"

"நாணம் முதலான பெண்மைக்குரிய குணங்களும், கற்பறம் என்கிற கலக்கமற்ற தன்மையும், நல்லொழுக்கமும், கணவனைக் கடவுளாகக் கருதும் தெளிவும் புகழும், உன் ஒருத்தியின் பிறப்பால் உலகத்தை விட்டே அழிந்து விட்டனவே"

"நல்ல குலத்துப் பெண், கணவனைப் பிரிய நேர்ந்தால், புலன் பொறிகளை அடக்கி வைப்பர்; தலைமயிரைப் பேணாது சடையாகத் திரிய விடுவர்; வாழும் போது பழி உண்டானால் தம் உயிரை விட்டுப் பழியைப் போக்கிக் கொள்வர்"

"உன் தீயொழுக்கம் என் அறிவை அறுக்கிறது; நீ செய்யக் கூடியது என்னவென்றால், உடனே நீ இறப்பாயாக; அல்லது உனக்குத் தக்கதொரு வேறிடத்துக்குச் செல்வாயாக"

இவை தாம் ராமன் உதிர்த்திருக்கும் மற்ற பொன்மொழிகள். (கம்பராமாயணம், யுத்த காண்டம் - பாடல்கள் 3954 முதல் 3960 வரை). அதுவும் தனிமையில் அல்ல; தம்பி, விபீஷணன், சுக்ரீவன், அனுமன், வானரப் படைகள், சீதையை அழைத்து வந்த அரக்கர் குலப் பெண்கள் என்று எல்லோர் மத்தியிலும்.

இப்படிப்பட்ட கணவன் அமைய வேண்டும் என்று தான் பெண்கள் விரதம் இருந்து வேண்டிக் கொள்கிறார்களா?

http://rathnesh.blogspot.com/2007/09/1_22.html

Link to comment
Share on other sites

.மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து கூற கூடாது சொல்கிறார் பவார்

மும்பை :" மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறக் கூடாது' என்று மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் கூறினார்.

ராமர் பாலம் பிரச்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து சரத் பவாரிடம் கேட்ட போது, "மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறவும் கூடாது; எந்த செயலையும் செய்யக் கூடாது. பல தரப்பட்ட கலாசாரம் மற்றும் மதங்கள் பின்பற்றப்படும் இந்தியாவில் இது மிகவும் முக்கியமானது. திராவிட கட்சிகளுக்கு இது போன்ற எண்ணங்கள் உண்டு. ராமர் பாலம் விவகாரம் தேர்தல் பிரச்னையாக உருவெடுக்கும் என தெரியவில்லை. ஆட்சியில் இருந்த போது சேது சமுத்திர திட்டத்தை உருவாக்கியவர்கள் பா.ஜ., கட்சியினர். தற்போது அது குறித்து பிரச்னை எழுப்பி அரசியல் லாபம் அடைய பார்க்கின்றனர்' என்றார்.

DINAMALAR

Link to comment
Share on other sites

(கம்பராமாயணம்இ யுத்த காண்டம் - பாடல்கள் 3954 முதல் 3960 வரை). அதுவும் தனிமையில் அல்ல; தம்பிஇ விபீஷணன்இ சுக்ரீவன்இ அனுமன்இ வானரப் படைகள்இ சீதையை அழைத்து வந்த அரக்கர் குலப் பெண்கள் என்று எல்லோர் மத்தியிலும்.

-------------------------------------------------------------------------

இணைப்பிற்கு நன்றி புனைக்குட்டி. 3954-3060 வரையான பாடல்களை எங்கே பார்க்கலாம்? இருந்தால் இணைக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

திரும்பி அழைத்து வரும்போது இப்பொழுது இங்கே உளறித் திரியும் அன்பர்கள் போலே நாட்டில் பலரும் பேசக்கூடும், என சீதையை தீக்குளிக்க செய்ய இராமர் கடுமையாக பேசுவதாக உள்ள நடிப்பு.

முன்பின் வெட்டி தவறன பொரும்ள் கொண்டு மக்களின் நம்ம்பிக்கையை சிதைக்க செய்யப் படும் உளறல்கள்.

தேவப்ரியா

Link to comment
Share on other sites

புசுக்க்குட்டி இப்ப என்ன சொல்ல வாறீங்கள். விளங்கிறமாதிரி சொல்லுங்கோ..

ராமாயணம் என்பது ஒரு கதை தானே? இதை ஏன் இவ்வளவு சீரியசாக எடுக்கிறீங்கள்? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை. அதன்படி அவர்கள் செய்கின்றார்கள். வாழ்கின்றார்கள். நாமென்ன செய்யமுடியும்?

ஒவ்வொருவருக்கும் அவரவர் கடவுளர்கள் பெரிதாக தெரியும்..

Link to comment
Share on other sites

இராமன் சீதையைக் கடிந்து உரைத்தல்

கணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய

அணங்கு உறு நெடுங் கணீர் ஆறு பாய்தர,

வணங்கு இயல் மயிலினை, கற்பின் வாழ்வினை,

பணம் கிளர் அரவு என எழுந்து, பார்ப்புறா, 48

'ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,

மாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மா நகர்

ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து, இவண்

மீண்டது என் நினைவு? "எனை விரும்பும்" என்பதோ? 49

'உன்னை மீட்பான்பொருட்டு, உவரி தூர்த்து, ஒளிர்

மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற,

பின்னை மீட்டு, உறு பகை கடந்திலேன்; பிழை

என்னை மீட்பான்பொருட்டு, இலங்கை எய்தினேன். 50

'மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை

அருந்தினையே; நறவு அமைய உண்டியே;

இருந்தனையே? இனி எமக்கும் ஏற்பன

விருந்து உளவோ? உரை-வெறுமை நீங்கினாய்! 51

'கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு

நலத்தின் நிற் பிறந்தன நடந்த; நன்மைசால்

குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்

நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ. 52

'பெண்மையும், பெருமையும், பிறப்பும், கற்பு எனும்

திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,

உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்,

வண்மை இல் மன்னவன் புகழின், மாய்ந்தவால். 53

'அடைப்பர், ஐம் புலன்களை; ஒழுக்கம் ஆணியாச்

சடைப் பரம் புனைந்து, ஒளிர் தகையின் மா தவம்

படைப்பர்; வந்து இடை ஒரு பழி வந்தால், அது

துடைப்பர், தம் உயிரொடும்-குலத்தின் தோகைமார். 54

'யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்

சேதியாநின்றது, உன் ஒழுக்கச் செய்தியால்;

சாதியால்; அன்று எனின், தக்கது ஓர் நெறி

போதியால்' என்றனன்-புலவர் புந்தியான். 55

இராமனது உரை கேட்டு, முனிவர் முதலியோர் அரற்றுதல்

முனைவரும், அமரரும், மற்றும் முற்றிய

நினைவு அரு மகளிரும், நிருதர் என்று உளார்

எனைவரும், வானரத்து எவரும், வேறு உளார்

அனைவரும், வாய் திறந்து, அரற்றினார் அரோ. 56

இராமனின் கடுமொழி கேட்ட சீதையின் துயர நிலை

கண் இணை உதிரமும், புனலும் கான்று உக,

மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்,

புண்ணினைக் கோல் உறுத்தனைய பொம்மலால்

உள் நினைப்பு ஓவி நின்று, உயிர்ப்பு வீங்கினாள். 57

பருந்து அடர் சுரத்திடை, பருகு நீர் நசை

வருந்து அருந் துயரினால் மாளலுற்ற மான்,

இருந் தடம் கண்டு, அதின் எய்துறாவகைப்

பெருந் தடை உற்றெனப் பேதுற்றாள் அரோ. 58

உற்று நின்று, உலகினை நோக்கி, ஓடு அரி

முற்றுறு நெடுங் கண் நீர் ஆலி மொய்த்து உக,

'இற்றது போலும், யான் இருந்து பெற்ற பேறு;

உற்றதால் இன்று அவம்!' என்று என்று ஓதுவாள்; 59

'மாருதி வந்து, எனைக் கண்டு, "வள்ளல் நீ

சாருதி ஈண்டு" எனச் சமையச் சொல்லினான்;

யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ,

சோரும் என் நிலை? அவன் தூதும் அல்லனோ? 60

'எத் தவம், எந் நலம், என்ன கற்பு, நான்

இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்

பித்து எனல் ஆய், அறம் பிழைத்ததாம் அன்றே,

உத்தம! நீ மனத்து உணர்ந்திலாமையால். 61

'பார்க்கு எலாம் பத்தினி; பதுமத்தானுக்கும்

பேர்க்கல் ஆம் சிந்தையள் அல்லள், பேதையேன்;

ஆர்க்கு எலாம் கண்ணவன், "அன்று" என்றால், அது

தீர்க்கல் ஆம் தகையது தெய்வம் தேறுமோ? 62

'பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும்,

சங்கு கைத் தாங்கிய தருமமூர்த்தியும்,

அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்,

மங்கையர் மன நிலை உணர வல்லரோ? 63

'ஆதலின், புறத்து இனி யாருக்காக என்

கோது அறு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்?

சாதலின் சிறந்தது ஒன்று இல்லை; தக்கதே,

வேத! நின் பணி; அது விதியும்' என்றனள். 64

சீதை இலக்குவனை தீ அமைக்குமாறு வேண்டல்

இளையவன் தனை அழைத்து, 'இடுதி, தீ' என,

வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்;

உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்

களைகணைத் தொழ, அவன் கண்ணின் கூறினான். 65

அக்கினியில் குதித்தும் கற்பின் மாண்பினால் அக்கினி தீண்டாது மீண்ட சீதையை கண்ட இராமன் தன் தவறுக்கு மன்னிப்பை வேண்டவில்லை. ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. மாறாக, கருணை உள்ளத்தோடு ஏற்றுக் கொண்டான் என்கிறார் கம்பர்.

சீதையை இராமன் ஏற்றுக்கொள்ளல்

பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று,

ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ,

சூடு உறும் மேனிய அலரி, தோகையை

மாடு உறக் கொணர்ந்தனன்; வள்ளல் கூறுவான்: 83

'அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு; ஆதலால்,

இழிப்பு இல சொல்லி, நீ இவளை, "யாதும் ஓர்

பழிப்பு இலள்" என்றனை; பழியும் இன்று; இனிக்

கழிப்பிலள்' என்றனன்-கருணை உள்ளத்தான். 84

கம்பராமாயணம்-யுத்தகாண்டம்-பிராட்டி திருவடி தொழுத படலம்-(47-65, 83-84)

விளக்கவுரை இங்கே...

உண்மையான பக்தர்கள் மன்னிக்கவும். தவறான நோக்கத்தில் இங்கே இதைப் பதிவு செய்யவில்லை. ஆனால் என்னதான் வியாக்கியானம் தரப் பட்டாலும் பெண்ணடிமைத்தனத்திற்கு இதை விடச்சிறந்த சான்று இருக்க முடியாது என்பது வருந்தத் தக்க செய்தி.

பெண் பதிவர்கள் இதைப்பற்றி கருத்துச் சொல்லலாமே?

விளக்கவுரையைப் பதிவிட்ட ரத்னேஷுக்கு நன்றி.

http://valai.blogspirit.com/archive/2007/09/23/raman.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் நினைவுக்கு கம்பர் பாடலின் வரிகள் வரவில்லை ஆனால் அந்த சம்பவம் மட்டும் நினைவில் நிற்க்கின்றது. அது இதுதான்.

அன்றய முழுநாளும் காடு நெடுகலுக்கும் செய்த நடைப் பயணத்தால் இராமர் பரிவாரதினரின் மெய் சோர்ந்து விட்டதாம், எங்கே உடம்பை தரையில் கொட்டிப் படுக்கவேண்டும் போல் அப்படி ஒரு களை இருந்ததாம்.

அடுத்ததாக ஒரு படகுப் பயணம் ஒன்று செய்ய வேண்டி இருந்ததாம்,

எனவே ஒரு நாவாயில் நதியைக் கடந்து கொண்டிருக்கிறார்களாம் அந்த சோர்வுடனேயே,

நதியின் அலைகள் நாவாயோடு பொங்கி எழுந்து சண்டை செய்து கொண்டிருக்கின்றன அந்த பயணத்தில்,

அப்படி நாவாயோடு முட்டி மோதி சிதறும் தண்ணீர் முத்துக்கள் பயணிகளின் உடம்பை குளிப்பாட்டி விடுகிறது.

தண்ணீரின் குணம் என்ன? ஒளியை ஊடு புகவிடுவதுதானே

எனவே அழகை ஒளித்து வைத்திருந்த சேலையின் வேலை ஓய்வெடுத்துக் கொண்டதாம்.

எனவே சீதையோடு வந்த கூட்டத்தின் செத்துக் கொண்டிருந்த உற்சாகத்துக்கு மீள உயிர் தந்ததாம் அந்தக் காட்சி .

அண்ணனின் மனைவி, நண்பனின் மனைவி, இன்னும் சொல்லப் போனால் கடவுளின் அவதாரம்.

எப்படி ஐயா கம்பருக்கு இந்த இடத்தில் தன் காம சிலுமிசத்தைக் காட்ட மனம் வந்தது.

என்ன இப்படி நாகரீகவிவஸ்தை இல்லாமலா இப்படிக் காட்சிகளை பருக்குவது, என்ன கொடுமை இது

Link to comment
Share on other sites

அறிய வரும் பெண்மனம் எவ்வளவு கூசும்? (ஸ்ரீ ராமஜெயம் எழுதும் பெண்களின் கவனத்திற்கு (2))

"சீதையின் உந்திச் சுழிக்கு சிறு கூதாளிச் செடியும், நந்தியா வர்த்தமும் என்னும் இவற்றின் வட்ட வடிவமான மலர்களில் பொருந்திய அழகிய துளைகள் என்கிற உவமையை விட, கங்கையாற்றின் நீர்ச்சுழி அவளது கொப்பூழ்ச் சுழியை ஒத்திருக்கும் என்பது சரி"

"அவளுடைய வயிற்றில் பொன்னிறமான கொடியின் வடிவான மூன்று மடிப்புகள் உண்டு. அவை மன்மதன் மூன்று உலகங்களிலும் சிறந்த அழகி இவள் என்று நிலை நிறுத்திய வெற்றியின் அடையாள ரேகைகள்"

"மணிச்சிமிழ், பொற்குடம், தென்னையின் இளநீர்,பவழத்தினால் கடைந்து செய்யப்பட்ட திரண்ட சொக்கட்டான் காய் பகலில் வெளிப்பட்ட சக்கரவாகப் பறவை என்றெல்லாம் சொல்லியும் அவள் கொங்கைகளுக்கு சரியான உதாரணம் சொல்ல முடியாமல் வருந்துவேன்"

"சிவந்த நிறத்தைக் கொண்ட ஓர் அமிழ்தம் இல்லை; சீதையின் உதடுகளைப் போல அத்துணைச் சிவந்த தேனும் இல்லை.அப்படியே இருந்தாலும் அவை எடுத்து உண்டபோதன்றி நினைத்த அளவில் ஒப்பில்லாத மகிழ்ச்சியை உண்டாக்க மாட்டா"

"முகபடாம் அணிந்த மதமுடைய ஆண்யானையின் தந்தங்கள் என்பதற்கும் நிகராகாத கொங்கை மலைகளைத் தாங்கிப் பாரம் பொறுக்காத வானின் மின்னல் போன்ற இளங்கொடி"

மேற்சொன்னவை எல்லாம் ராமன் தன் மனைவியைப் பற்றி அனுமனிடம் அடையாளமாய்ச் சொன்ன வார்த்தைகளில் சில. (கம்ப ராமாயணம் - கிஷ்கிந்தா காண்டம் - பாடல் எண் 770 முதல் 809 வரை - நாடவிட்ட படலம்).

தென் திசையில் சீதையைத் தேடப் போகும் அனுமன் இந்த அடையாளங்களைக் கொண்டு அவள் தான் சீதை என்று கண்டு கொள்ள வேண்டுமாம். என்ன கண்றாவி. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் தன்னைப் பற்றி இத்தகைய 'புகழுரை'களை ஓர் அந்நியனிடம் விவரிப்பதை ஜீரணிப்பாளா? ராமனைப் போல் ஒரு கணவன் வேண்டும் என்று தவம் இருப்பவர்கள் யோசிக்கட்டும்.

இதில் கூத்து என்னவென்றால் இப்படிப் புலம்பிய பிரகஸ்பதி ராமன் தான் அவள் மீண்டு வந்ததும், "நானொன்றும் உன்னை மீட்பதற்காக சண்டையிடவில்லை; மனனவியைக் கடத்தியவனை ராமன் கொல்லாமல் விட்டானே என்கிற பழி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளத்தான் இந்த யுத்தமே" என்று வசனம் பேசுகிறான் பின்னாளில் (யுத்த காண்டம் பாடல் எண்:3955).

http://rathnesh.blogspot.com/2007/09/2_22.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புசுக்க்குட்டி இப்ப என்ன சொல்ல வாறீங்கள். விளங்கிறமாதிரி சொல்லுங்கோ..

ராமாயணம் என்பது ஒரு கதை தானே? இதை ஏன் இவ்வளவு சீரியசாக எடுக்கிறீங்கள்? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை. அதன்படி அவர்கள் செய்கின்றார்கள். வாழ்கின்றார்கள். நாமென்ன செய்யமுடியும்?

ஒவ்வொருவருக்கும் அவரவர் கடவுளர்கள் பெரிதாக தெரியும்..

ஒரு ககதைக்குப் போய் இவ்வளவு பில்டப் கொடுக்கினமா? வேலை வெட்டியும், கொள்கையும் இல்லாட்டில் இப்படி ஏதாவது செய்தால் தானே உண்டு.

புனைகதை, கட்டுக்கதை எண்டு இவர்கள் சொல்லுகின்ற ஒண்டுக்கு இவ்வளவு ஆராட்சி செய்கினம் எண்டால்... இவர்கள் எல்லாம் பகுத்தறிவு வாதிகளாம். ஐயோ ! ரஐயோ!

Link to comment
Share on other sites

ஒரு ககதைக்குப் போய் இவ்வளவு பில்டப் கொடுக்கினமா? வேலை வெட்டியும், கொள்கையும் இல்லாட்டில் இப்படி ஏதாவது செய்தால் தானே உண்டு.

புனைகதை, கட்டுக்கதை எண்டு இவர்கள் சொல்லுகின்ற ஒண்டுக்கு இவ்வளவு ஆராட்சி செய்கினம் எண்டால்... இவர்கள் எல்லாம் பகுத்தறிவு வாதிகளாம். ஐயோ ! ரஐயோ!

பகுத்து அறிபவர்கள் எல்லாவற்றையும் பற்றித் தான் ஆராச்சி செய்வினம்.உங்களை மாதிரி ஒரு ஆராச்சியும் இன்று வெறுமையான வரிகளை வேலை வெட்டி இல்லாத் தனமா எழுத மாட்டினம்.

ஒரு புனை கதையில சொல்லப்படுற பாலத்துகாகப் போய் இப்படி துள்ளிக் குதிப்பது பாஜாகாவும் விஎச்பி என்னும் இந்து மத வெறியர்கள் தான்.அதுகாகத் தான் இப்படி பில்டப் கொடுக்க வேண்டி இருக்கு.

Link to comment
Share on other sites

  • 2 months later...

சீதை குடிகாரி என்று ராமனே சொல்லி இருக்கிறான் (ஸ்ரீ ராமஜெயம் எழுதும் பெண்களின் கவனத்திற்கு (1))

இவை தாம் ராமன் உதிர்த்திருக்கும் மற்ற பொன்மொழிகள். (கம்பராமாயணம், யுத்த காண்டம் - பாடல்கள் 3954 முதல் 3960 வரை). அதுவும் தனிமையில் அல்ல; தம்பி, விபீஷணன், சுக்ரீவன், அனுமன், வானரப் படைகள், சீதையை அழைத்து வந்த அரக்கர் குலப் பெண்கள் என்று எல்லோர் மத்தியிலும்.

http://rathnesh.blogspot.com/2007/09/1_22.html

பூனைக்குட்டி அவர்கள் கணவன் மனைவி தங்களுக்குள் ஆயிரம் பிரச்சனைப்படுவார்கள். பின்னர் சேர்ந்து கொள்வார்கள். இதற்குப்பிறகுதான் அவர்களுக்கு பிள்ளையே பிறந்தது.

அதையெல்லாம் நீங்கள் தூக்கிப்பிடிச்சுக் கொண்டு........ :lol::lol:

இதைப் பக்கத்தில் கேட்டுட்டு வெளியில் வந்து சொன்னான் பாருங்க.... அவனைச் சொல்லணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.