Jump to content

சோதிடத்தில் நம்மவர் நம்பிக்கை


  

8 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

மூடநம்பிக்கையாக நான் கருதினாலும் பலர் இதனை நம்புகிறார்கள் எங்கள் சமூகத்தில் குறிப்பாக என்றே சொல்லலாம் :lol: !!திருமணதிற்கு மட்டும் என்ற வரையறையை எடுக்க முடியாது ஏனேனின் சாதகம் பார்க்காது திருமணம் செய்த எத்தனையோ பேர் நன்றாக வாழ்கினம் என்றே சொல்லலாம் பார்த்து செய்தவர்கள் அரைவாசியில விட்டு போட்டு ஓடின சந்தர்ப்பங்கள் கூட :lol: !!ஆகவே எதுவும் எங்கள் கைகளில் தங்கி உள்ளது எமது உழைப்பு எங்களை வெற்றி பாதையில் இட்டு செல்லும்!!சோதிடத்தால ஒன்றையும் செய்ய ஏலாது. :lol: .........உதாரணதிற்கு சோதிடத்தில் நீங்கள் டாக்கடராக வருவீங்க என்று சொன்னா போலே டாக்டராக வர முடியாது நாங்கள் படித்து தான் வரமுடியும் ஆகவே என்னை பொறுத்தவரை இது ஒரு மூடநம்பிக்கை ஆகும்!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

சோதிடத்தை நம்புற நேரம் உன்னை நம்பினா வாழ்கையில வெல்வாய்!! :lol:

Link to comment
Share on other sites

எனது சொந்த கருத்து, சோதிடம் என்பது வெறும் முட்டாள் தனம்.ஒரு சிலருக்கு அபரீதமான சக்தி இருப்பதாக கேழ்வி. என்றாலும் இதுவரை அப்படி யாரையும் சந்திக்கவில்லை.

Link to comment
Share on other sites

தமிழர்கள் அறிவியல்ரீதியான சமுதாயத்தை கட்டியெழுப்புவதால் மட்டுமே அபிவிருத்தி அடையலாம். - நக்கீரன்

http://www.tamilcanadian.com/page.php?cat=563&id=5208

Link to comment
Share on other sites

"சோதிடம் தமிழரின் அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று. விஞ்ஞான வளர்ச்சி அல்லாத காலத்திலேயே, வெகு தொலைவில் உள்ள கோள்களைக் கண்டறிந்து, அவற்றைக் கணித்து, அவற்றின் இயக்கத்தை அறிந்து, அவை பூமியில் செலுத்தும் தாக்கங்களை உணர்ந்து, வரையறுத்து சோதிடம் என்கிற மாபெரும் மானுட வாழ்வியல் வழிகாட்டலை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை மூடநம்பிக்கை என்பதா?" :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோதிடத்தில் நம்மவர் நம்பிக்கை

முட்டாள் தனம்

பண விரயம்

மூட நம்பிக்கை

கட்டாயம்

நழுவல்

சில சமயம் திருமணத்திற்கு மட்டும்

சொல்பவரைப் பொறுத்து

சரியாகக் கணிப்பதற்கு யாரும் தற்போது இல்லை

இதை எவ்வாறு வாக்கெடுப்பாக எடுப்பது? என் கருத்து என்னவென்று இருக்கட்டும். ஆனால் வாக்கெடுப்பு நடத்துவது என்றால் இரண்டு பக்கத்திற்கான தெரிவும் இருக்க வேண்டுமல்லவா? முட்டாள்தனம் என்றால் அதற்குப் பதில் புத்திசாலித்தனம் என்றோ, மூடநம்பிக்கை என்றால் அறிவியல் என்றும் அல்லவா இருக்க வேண்டும்.

இங்கே கேட்பட்ட கேள்விகளும் பதில்களும் ஒரு பக்கத் தீர்வையே கொண்டிருக்கின்றன. இவ்வாறன வாக்கெடுப்புக்கள் முன்பும் சில நடந்ன. இவை ஒரு தீர்வை வலிந்து திணித்தல் செயற்பாகவே இருக்கின்றன.

Link to comment
Share on other sites

இங்கே கேட்பட்ட கேள்விகளும் பதில்களும் ஒரு பக்கத் தீர்வையே கொண்டிருக்கின்றன. இவ்வாறன வாக்கெடுப்புக்கள் முன்பும் சில நடந்ன. இவை ஒரு தீர்வை வலிந்து திணித்தல் செயற்பாகவே இருக்கின்றன.

செவ்வாய் குற்றம் என்பதனை RH +, RH - எண்டும், உடலியலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் எண்டும் பலவாறாக விஞ்ஞான பாடத்தில் படித்த ஞாபகங்கள் இப்போதும் இருக்கிறது... ஆனால் முழுமையாக சரியாக தர மீண்டும் படிக்க வேண்டும்... ( பத்து வருசத்துக்கு மேலை ஆகீட்டுது இல்லையா) கிரகங்கள் மனிதருக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்பது பொய்யான விடயம் இல்லை...!

ஆனால் அதோடு சேர்ந்த சில மூட நம்பிக்கைகள்தான் பொய்யானவை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெளர்ணமி, அம்மாவசை நாட்களில் மனநோய் உள்ளவர்கள் கொஞ்சம் அதிகமாகத் தான் நடந்து கொள்வார்கள் என்கின்றார்கள்.

அவ்வாறு தான் கிரகங்கள் தொடர்பாகவும் கொண்டிருக்கக் கூடும். அரைகுறையாகப் படித்தவ தற்போதைய சோதிடர்களிடம், அரைகுறையாக விளக்கம் கேட்கப் போனால், எல்லாம் அரைகுறையாகத் தான் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சோதிடம் தமிழரின் அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று. விஞ்ஞான வளர்ச்சி அல்லாத காலத்திலேயே, வெகு தொலைவில் உள்ள கோள்களைக் கண்டறிந்து, அவற்றைக் கணித்து, அவற்றின் இயக்கத்தை அறிந்து, அவை பூமியில் செலுத்தும் தாக்கங்களை உணர்ந்து, வரையறுத்து சோதிடம் என்கிற மாபெரும் மானுட வாழ்வியல் வழிகாட்டலை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை மூடநம்பிக்கை என்பதா?" :lol:

ஜோதிடம் என்று மக்களின் எதிர்காலம் என்று சொல்லுவதில் புளுகுகள்.. பிரச்சனைகள்.. மூடத்தனங்கள்.. வியாபாரங்கள் இருக்கலாம். ஆனால்.. வானியல் கணிப்பீடுகள் தொடர்பில்.. எமது பஞ்சாங்கங்கள் அறிவியல் கணிப்பீடுகளோடு ஒத்திசைவதைக் காணலாம். உதாரணத்துக்கு சந்திர கிரகணம்.. சூரிய கிரகணம் தொடர்பான கணிப்பீடுகளை நாசா வெளியிட முதல்.. பஞ்சாங்கம் குறித்துவிடுகிறது. அதற்கும் ஜோதிடம் என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜோதிடக் காரர்கள் இந்தக் கணிப்பீடுகளைப் பாவிக்கின்றனர்.. ஆனால் மக்களுக்கு பலன் என்று சொல்வதில்.. இவற்றின் பங்களிப்பு என்பதற்கு எந்த விளக்கமும் சரியான வடிவில் இல்லை. வானியல் சாஸ்திரம் என்பது.. கணிதக் கணிப்பீடுகளின் படி அமைபவை. அங்கு இந்து உரோமன் இலக்கங்களுக்குப் பதிலாக.. இந்துக் காலக் கணிப்பின் கீழ் தமிழ் எழுத்துரு கொண்டமைந்த இலக்கங்கள் பாவிக்கப்பட்டு கணிப்பீடுகள் செய்யப்படுகின்றன.

அமெரிக்கர்கள் குந்தி இருந்து கொண்டு.. எதனையும் சாதிக்கவில்லை. தினமும் உள்ளதை கழித்துவிட கருத்துரைத்து பெருமைப் படாது.. உள்ளதற்குள் புதிதாக ஆராய்ந்து புதிதை கண்டறிகிறார்கள். நாம் உள்ளதைக் கைவிட வழி தேடுறமே தவிர ஆராய்ந்து எமக்கென்று ஒரு பாதையை வகுத்து பிறருடன் சமாந்திரமாகப் பயணிக்கும் திறனிழந்து நின்று கொண்டு...அடுத்தவனின் கண்டுபிடிப்பை எமதாக்கி.. பெருமை கொள்ளும் நிலையின் சிறுமையை உணர்ந்து இப்படியான அவதூறான கருத்துக்களை யாழில் நக்கல் நளினம் என்ற வடிவில் முன் வைப்பதைத் தவிருங்கள். :lol::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு: சோதிடத்தில் நம்மவர் நம்பிக்கை

கேள்வி: சோதிடம் = வானியல் சாத்திரம் ? :lol:

சோதிடம் தமிழரின் அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று. விஞ்ஞான வளர்ச்சி அல்லாத காலத்திலேயே, வெகு தொலைவில் உள்ள கோள்களைக் கண்டறிந்து, அவற்றைக் கணித்து, அவற்றின் இயக்கத்தை அறிந்து, அவை பூமியில் செலுத்தும் தாக்கங்களை உணர்ந்து, வரையறுத்து சோதிடம் என்கிற மாபெரும் மானுட வாழ்வியல் வழிகாட்டலை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை மூடநம்பிக்கை என்பதா

ஜோதிடம்.. என்பதில் பஞ்சாங்கம் உட்பட்டவற்றினதும்.. பிற வான சாஸ்திர கணிப்பீடுகளினதும் பங்களிப்பு சோடிப்புக்களுக்காக ஜோதிடத்தை நம்ப வைக்க என்று இருப்பதை.. ஜோதிடம் என்பதை அறிந்த எல்லோரும் அறிவர். நீங்கள் அறியவில்லை என்றால் அறிந்து கொள்ளுங்கள்.

அந்த வகையில்.. நீங்கள் முன் வைத்த கோள்களின் விண்ணியல் கூறுகளின் இயக்கங்களுக்கான கால அளவுகளைக் கணிப்பதில்.. ஜோதிடம் வான சாஸ்திரத்தைப் பயன்படுத்துகிறது. அந்தளவோடு.. அது முடிந்துவிட்டது. அதன் நம்பகத்தன்மையும் அந்தளவுதான்.

நீங்கள் ஜோதிடத்தை குறை கூறப் போய்.. ஜோதிடம் பாவிக்கும் வான சாஸ்திரத்தையும் தவறாக மதிப்பிடும் வகையில்... கோள்களின் இயக்கங்கள் பற்றி கணிப்பை.. நக்கல் படுத்தும் செயலை செய்ததையே நான் கண்டித்தேன். எனி நீங்கள் தயவுசெய்து பூசி மொழுகிற வேலையைச் செய்யாமல்.. உங்களின் கருத்தை தெளிவுற முன் வையுங்கள். ஜோதிடத்துக்குள் வான சாஸ்திரம் பயன்படும் நிலை இருக்கிறது. ஆனால் ஜோதிடத்தில் புரட்டுகள் மிகுந்து இருக்க.. வான சாஸ்திரம்.. அப்படியன்று. அங்கு கணிப்பீட்டியல் தான் அடிப்படை. இரண்டையும் கலந்தடிக்கும் வேலையைச் செய்யாதீர்கள். அது வாசகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும். ஜோதிடக் காரர்கள் செய்வது போன்று. :unsure:

Link to comment
Share on other sites

கிரகங்கள் அதனதன் போக்கில் கதிர்களை வீசிக்கொண்டிருக்கின்றது. அவைகள் பூமியில் மாறுதல்களை செய்கின்றன. சந்திரனுக்கும் கடலலைகளுக்கும் தொடர்பு உண்டென்று சொல்வார்கள். ஆனால் கிரகங்கள் வேணுமென்று ஒரு மனிதனுக்கு கெடுதல் செய்யவோ நல்லது செய்யவோ ஒரு முகாந்திரமும் இல்லை.

சனி என்பதை எருமையாக முடமாக சித்தரித்துள்ளனர் வேகம் குறைவாக சுற்றும் ஒரு கிரகம் என்பதால் அவ்வாறு சில பொருள்பட பண்டய மக்கள் அதனi சித்தரித்தார்கள். பிரகாசம் இன்மையை காகத்துக்கு ஒப்பிட்டார்கள். ஆனால் காகத்துக்கு சோறுவைத்து சனியை சமாளிப்பது என்பதெல்லாம் றொம்ப ஓவரான ஒன்று என்ற கருத்தும் உண்டு. சரி அந்த கருத்தையும் தாண்டி சென்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் காகத்துக்கு சோறு வைத்துவிட்டோம் என்ற திருப்தி அடைகின்றார். அதில் நம்பிக்கை அடைகின்றார் அந்த நம்பிக்கையை அடித்தளமாக கொண்டு சில வெற்றிகள் அடைகின்றார். அது ஒரு சாதகமானது எனினும் தோல்வியடைந்து விட்டால் இருந்ததை விட பாதகமான நிலைக்கு அவரது நம்பிக்கை தள்ளப்படுகின்றது.

சோதிட வியாபாரம் என்பது இந்த நம்பிக்கை அடைந்து வெற்றி பெறுபவர்களை உதாரணம் காட்டி தோல்வி அடைபவர்களை வடிக்கையாளராக்கும் அடிப்படையை கொண்டதாகவும் இருக்கின்றது.

சோதிடம் என்பதில் விசயங்கள் உள்ளன. ஆனால் அது தனக்கு உரித்தான விசயங்களை கடநது நீண்ட தூரத்தில் உள்ளது. காலையில் வெயில் சுடுவதில்லை மதியம் சுடுகின்றது. மாலை குறைவாக சுடுகின்றது. சூரியனின் கதிர்கள் பூமியில் விழுவதுக்கேற்ப பல மாற்றங்கள் நடக்கின்றது. அல்லது பூமி சுற்றுவதுக்கேற்பவும் கதிர் வீச்சுகள் நுகரப்படலாம். இது சூரியனின் குற்றமில்லை அதன் இயல்பு. அதே போல் பல கிரகங்களை முற்காலத்தில் ஆராய்ந்தார்கள். சில ஆருடங்களை சொன்னார்கள். அவை நன்மை கருதியதாக இருந்தது. அதை வைத்து பிழைக்க வெளிக்கிட்டு அவை தீமை விழைவிப்பதாக மாற்றம் அடைந்து விட்டது. அதனால் மூட நம்பிக்கை என்று குரல்கள் எழுகின்றது. ஆம் என்பதா இல்லை என்பதா? ஒரு நல்ல விசயம் மூடத்தனமாக்கப்பட்டது என்று சொல்லாம்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் மாற்றங்கள் சில நல்ல விசயங்களை வலுவற்றதாக்கியும் விடுகின்றது. அதற்கு மாற்றீடுகளை முன்வைக்கின்றது. உதாரணமாக கடிகாரமில்லத காலத்தில் நடுசாமத்தில் குழந்தை பிறந்தால் வீட்டில் உள்ள வாழை மரத்தை வெட்டி விடுவார்கள். காலை சூரியன் உதயமாகும் போது அந்த வாழையின் தண்டு எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கின்றது என்பதை வைத்து நேரத்தை கணித்து குறிப்பெழுதுவார்கள். இப்படி நிலத்தடி நீர் பார்ப்பது. பரிவட்டம் பார்த்து மழையை கணிப்பது என்று நிறைய விசயங்கள் உண்டு. இப்போ அந்த தேவை இல்லை. விஞ்ஞானம் அதை ஈடு செய்கின்றது. ஆனால் அந்த காலத்தில் சோதிடம் உடபட பல விசயங்கள் வழிகாட்டியாக இருந்தது. அதை தவறான வழிக்குள் இட்டு சென்றது சோதிடத்தின் தவறல்ல அதை தொடர்ந்து கையாண்ட மனிதரின் தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரகங்கள் அதனதன் போக்கில் கதிர்களை வீசிக்கொண்டிருக்கின்றது. அவைகள் பூமியில் மாறுதல்களை செய்கின்றன. சந்திரனுக்கும் கடலலைகளுக்கும் தொடர்பு உண்டென்று சொல்வார்கள். ஆனால் கிரகங்கள் வேணுமென்று ஒரு மனிதனுக்கு கெடுதல் செய்யவோ நல்லது செய்யவோ ஒரு முகாந்திரமும் இல்லை.

கிரகங்கள் வீசும் கதிர்கள் என்ன..??!கிரகங்களின் திணிவினாலான ஈர்ப்பு விசைதான் பெருமளவில் மற்றைக் கிரகங்களோடு சூரியனோடு.. சுழற்சிக்கான தன்மையைத் தீர்மானிக்கின்றன.சந்திரனின் ஈர்ப்பின் தாக்கம்... மனிதரில் செல்வாக்குச் செய்யாது என்ற உங்கள் கருத்துக்கு உள்ள முகாந்திரம் என்ன..??!நான் ஜோதிடத்தை எந்தளவுக்கு மறுத்துரைகிறேனோ.. அப்படித்தான் அறிவியல் விளக்கமற்ற இப்படியான முகாந்தரங்மின்மைகளையும் ஏற்க மறுக்கிறேன். எனவே உங்கள் முகாந்திரத்தமின்மைக்கு விளக்கம் வேண்டும்.காரணம்.. கடலலையில் செல்வாக்குச் செய்கின்ற சந்திரனின் ஈர்ப்பு ஏன் தரையில் உள்ள திணிவுகள் மீது செல்வாக்குச் செய்ய முடியாது...????! முகாந்தரமின்மைக்கு விளக்கம் தாருங்கள்..! :unsure::lol:

- - -

Link to comment
Share on other sites

கிரகங்கள் வீசும் கதிர்கள் என்ன..??!கிரகங்களின் திணிவினாலான ஈர்ப்பு விசைதான் பெருமளவில் மற்றைக் கிரகங்களோடு சூரியனோடு.. சுழற்சிக்கான தன்மையைத் தீர்மானிக்கின்றன.சந்திரனின் ஈர்ப்பின் தாக்கம்... மனிதரில் செல்வாக்குச் செய்யாது என்ற உங்கள் கருத்துக்கு உள்ள முகாந்திரம் என்ன..??!நான் ஜோதிடத்தை எந்தளவுக்கு மறுத்துரைகிறேனோ.. அப்படித்தான் அறிவியல் விளக்கமற்ற இப்படியான முகாந்தரங்மின்மைகளையும் ஏற்க மறுக்கிறேன். எனவே உங்கள் முகாந்திரத்தமின்மைக்கு விளக்கம் வேண்டும்.காரணம்.. கடலலையில் செல்வாக்குச் செய்கின்ற சந்திரனின் ஈர்ப்பு ஏன் தரையில் உள்ள திணிவுகள் மீது செல்வாக்குச் செய்ய முடியாது...????! முகாந்தரமின்மைக்கு விளக்கம் தாருங்கள்..!
--------------------------------------------------------------------------------------

கிரகங்கள் அதனதன் போக்கில் கதிர்களை வீசிக்கொண்டிருக்கின்றது. அவைகள் பூமியில் மாறுதல்களை செய்கின்றன. சந்திரனுக்கும் கடலலைகளுக்கும் தொடர்பு உண்டென்று சொல்வார்கள். ஆனால் கிரகங்கள் வேணுமென்று ஒரு மனிதனுக்கு கெடுதல் செய்யவோ நல்லது செய்யவோ ஒரு முகாந்திரமும் இல்லை

-------------------------------------------------------------------------------------

நான் சொல்வது வேணுமென்று நல்லதோ கெட்டதோ செய்ய ஒரு முகாந்திரமும் இல்லை என்பதே. மற்றபடி நான் எங்கேயும் செல்வாக்கு செலுத்த முடியாது என்று சொல்லவில்லை. மாறாக பூமியில் மாறுதல்களை செய்கின்றது என்பதை சொல்லியிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

சோதிட கலை என்பது அருமையான பேதற்றி பேணி பாதுகாக்க வேண்டிய கலை பட் அதை சிலர் கையில் எடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள்

இங்கே ஒவ்வொரு வருஷமும் பல சோதிடர்கள் என்று சொல்லி கொண்டுவருவார்கள் இந்தியாவில் இருந்து போர முழு பேரும் எம்மவர்களும் fiji காரரும் 800 டாலர்களுக்கு மேல் கறந்து விட்டு விடுவார்கள்

இராஜகோபலன் மாதிரி சிறந்த ஜோதிடர்களும் இரக்க தான் செய்கின்றார்கள்...

Link to comment
Share on other sites

!!சோதிடத்தால ஒன்றையும் செய்ய ஏலாது. :rolleyes:ஆகவே என்னை பொறுத்தவரை இது ஒரு மூடநம்பிக்கை ஆகும்!! <_<

ஜம்மு பேபி பஞ்-

சோதிடத்தை நம்புற நேரம் உன்னை நம்பினா வாழ்கையில வெல்வாய்!! :rolleyes:

:rolleyes: பொறுத்திருந்து பார்க்கிறேனே ஜம்மு :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--------------------------------------------------------------------------------------

கிரகங்கள் அதனதன் போக்கில் கதிர்களை வீசிக்கொண்டிருக்கின்றது. அவைகள் பூமியில் மாறுதல்களை செய்கின்றன. சந்திரனுக்கும் கடலலைகளுக்கும் தொடர்பு உண்டென்று சொல்வார்கள். ஆனால் கிரகங்கள் வேணுமென்று ஒரு மனிதனுக்கு கெடுதல் செய்யவோ நல்லது செய்யவோ ஒரு முகாந்திரமும் இல்லை

-------------------------------------------------------------------------------------

நான் சொல்வது வேணுமென்று நல்லதோ கெட்டதோ செய்ய ஒரு முகாந்திரமும் இல்லை என்பதே. மற்றபடி நான் எங்கேயும் செல்வாக்கு செலுத்த முடியாது என்று சொல்லவில்லை. மாறாக பூமியில் மாறுதல்களை செய்கின்றது என்பதை சொல்லியிருக்கின்றேன்.

ஜோதிடக் காரர்கள் பலன் என்று சொல்லும் வகையில் எல்லாம் கோள்களின் உபகோள்களின் ஈர்ப்பு மனிதனில் செல்வாக்குச் செய்கின்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால்.. உபகோளான சந்திரனின் ஈர்ப்பு மனிதரில்.. அதுவும் தனி மனிதர்களில் செல்வாக்குச் செய்கிறது என்பதை அறிவியல் ரீதியாகவும் சில படிப்புக்களில் கூறியுள்ளனர்.

"Scientific studies have identified the link between the full moon and extremes in human behaviour. In a recent paper, The Lunar Cycle: Effects on Human and Animal Behaviour and Physiology, Michal Zimecki, of the Polish Academy of Sciences, analysed studies that took into account lunar activity."

http://www.timesonline.co.uk/tol/news/uk/c...icle1890193.ece

http://www.sfn.org/index.cfm?pagename=brai...s_brainsInSpace

ஈர்ப்பும் மூளையின் செயற்பாட்டு மாற்றமும் பற்றி..ஆர்வமுள்ளவர்கள் படிக்க இந்த இணைப்புக்கள்..

http://www.sfn.org/index.cfm?pagename=brai...s_brainsInSpace

சில படிப்புக்கள் சந்திரனின் ஈர்ப்பின் தாக்கத்துக்கும் மனிதர்கள் காண்பிக்கும் நடத்தை மற்றும் உளவியல் மாற்றங்களுக்கும் இடையில் தொடர்பில்லை என்றும் கூறுகின்றன. இங்கும் கூட இரண்டு கருத்தியல் நிலைகள் அங்குள்ளன. எதிலும் தீர்க்கமாக முடிவெடுக்கப்படவில்லை இன்று வரை.

http://www.biology-online.org/articles/moo...ent_belief.html

சில ஆண்டுகளால பழைய ஆய்வுத் தரவுகள் தந்த விளக்கம் குறித்து பல நிலை விவாதங்கள் அறிவியல் மட்டத்திலும் உள்ளது. காரணம் இந்தப் படிப்புகளின் பூரணத்துவமின்மை இல்லை என்பதால்...

ஒப்பீட்டியல் ஆய்வுகள்.. இந்தத் தாக்கத்தின் விளைவு குறித்து ஏற்க மறுக்கின்றன... கீழுள்ள இணைப்பைப் பார்க்கவும்

http://faculty.washington.edu/chudler/moon.html

அறிவியல் உலகிலும் இவ்விடயத்தில் இரு நிலை தன்மை உள்ளதை காட்டும் இணைப்பு...

http://thesituationist.wordpress.com/2007/...-your-emotions/

அதற்கான சாத்தியமும் மனிதனும் திணிவு சார்ந்து ஆளாளுக்கும் வேறுபடுவதால் இருப்பதில் சாத்தியம் இருக்கிறது (ஆனால் மனிதனின் திணிவு ஒப்பீட்டளவில் மிகச் சிறியது என்பதால் இந்தத் தாக்கம் பெரிதாக கணக்கில் எடுக்கப்படுவதில்லை ஆனால்.. மூளை போன்ற நுண் செயற்பாடுள்ள உறுப்புக்களில் அதன் தாக்கம் இருக்க வாய்ப்புண்டு). இந்த அறிவியல் அணுகுமுறைகளும் ஜோதிடக்காரர்களின் அணுகுமுறையும் ஒன்றென்று சொல்லவில்லை. பலன் என்று ஜோதிடக்காரர்கள் அவிழ்ப்பதில் பல புரளிகள் உண்டு. ஆனால் கோள்களின் உபகோள்களின் தாக்கம் மனிதர்களின் மீது.. அதுவும் தனிமனிதர்கள் மீது உண்டு என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதே. அந்தத் தாக்கத்தின் விளைவுகள் ஆளாளுக்கு மாறுபடலாம் அல்லது புறக்கணிக்கக் கூடியதாக அமையலாம். ஆனால் அதுதான் ஜோதிடக்காரர்கள் சொல்லும் பலன் என்று அமைவதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது.

நான் ஏலவே குறிப்பிட்டது போல ஜோதிடக்காரர்கள் கணிப்பீடுகளுக்கு வான சாஸ்திரத்தைப் பயன்படுத்துவதால்.. வான சாஸ்திரத்தின் மீதான நம்பகத்தன்மையை ஜோதிடம் மீது வைக்கலாம் என்று ஜோதிடக் காரர்கள் கருதுகின்றனர். ஜோதிடத்தில் பலன் என்று சொல்லாமல்.. மனித உளவியல் மாற்றம் நிகழுகிறது என்று சொன்னால் ஓரளவுக்கு நம்பலாம். ஆனால் எதிர்காலத்தில்.. நீ டாக்குதர் ஆவாய்.. நீ ரோட்டுக் கூட்டுவாய் என்பதெல்லாம்.. அவர்களின் கற்பனை மூட்டைகள். மனிதர்கள் மத்தியில் தொழில் சார் ஏற்றத்தாழ்வுகளை விதைத்தல். இவை கண்டிக்கப்பட வேண்டும். ஆனால் வான சாஸ்திரம் சார்ந்த கணிப்பீடுகள் மற்றும் கோள்களின் தாக்கம் மனிதர்கள் மீதும் குறிப்பிட்ட சில வகைகளில் உள்ளது என்பது.. அறிவியல் மூலமும் விளக்கப்பட முனையப்பட்டுள்ளது. இதில் உள்ள வேறுபாடுகள் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.