Jump to content

தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் கட்டுரை.


Recommended Posts

தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் சிறப்பான கட்டுரை.

அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்கள், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.)

ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் “எல்லீசன் என்றொரு அறிஞன்” என்ற கட்டுரை (தாமஸ் டிரவுட்மனின் ‘திராவிடச் சான்று’ மொழிபெயர்ப்பு நூலுக்கான முன்னுரை) காலச்சுவடு மே 2007 இதழில் வெளிவந்துள்ளது.

கட்டுரையின் முடிவில், “தமிழ்ப் புலமை உலகில் க.கைலாசபதியும் அவரைக் கண்மூடி வழிபடும் சிலரும் திராவிடக் கருத்தியலையும் கால்டுவெல்லையும் பழித்துவந்துள்ளதைக் காண்கிறோம்” என்று வேங்கடாசலபதி குறிப்பிட்டுள்ளார்.

இதில் கண்மூடித்தனமான வழிபாடு எங்கிருந்து வந்துள்ளது எனப் புரியவில்லை. ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்ற கருத்தியல் நிலைப்பாட்டை உருவாக்கி அதற்கு ஒரு சித்தாந்த வடிவத்தைக் கற்பித்தவர்கள் தமிழக வேளாளர்களே என்ற உண்மையைப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தவர் க.கைலாசபதி ஆவார். அதற்காகத் தமிழியல் ஆய்வுலகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது. இந்தக் கடமை உணர்வை வழிபாட்டு மனப்பான்மை என்று சொல்வது கட்டுரை ஆசிரியரின் வேளாளச் சார்பு நிலையை வெளிப்படையாகக் காட்டுகிறது.

தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்துக்கும் உரியவர்கள் வேளாளர்களே என்ற பம்மாத்து வேலை மறைமலை அடிகள் போன்றவர்களால் தொடக்கி வைக்கப்பட்டு க.ப.அறவாணன் போன்றவர்களால் இன்று வரை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

கால்டுவெல் எந்தவித உள்நோக்கமும் அற்ற உண்மையான ஆய்வாளர் அல்லர். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற அவரது நூல் மிகச் சிறப்பான ஆய்வு நூல் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில் இந்தியப் பண்பாட்டு, மரபு பற்றிய ஏளனமான பார்வையும், கிறிஸ்தவத்தை இந்த மண்ணில் வேரூன்றச் செய்ய வேண்டுமென்றால் தம்முடைய மரபு குறித்த பெருமித உணர்வை இந்த மண்ணின் மைந்தர்களிடமிருந்து நீக்கிவிட வேண்டுமென்ற நோக்கமுமே அவருடைய செயல்திட்டத்துக்குப் பின்புலமாக அமைந்த அம்சங்களாகும்.

கால்டுவெல் எழுதிய History of Tinnevelly என்ற நூலின் மூலமும், சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள மண்டல வரலாற்றுத் தொகுப்பு நூல்களின் மூலமும் தமிழர்களின் வரலாற்று உணர்வு குறித்து கால்டுவெல் கொண்டிருந்த ஏளனமான கண்ணோட்டம் புலப்படுகிறது. பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் கிழக்கிந்தியக் கும்பினியின் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்ஸியால் 1803ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டன. இவ்வம்சாவளி வரலாறுகள் குறித்துக் “கட்டுக்கதையைவிட மோசமான புனைவுகள்” என்று கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1980ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் இவ்வரலாறுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவை சில இடங்களில் சற்று மிகைப்பட எழுதப்பட்டிருப்பினும் நம்பகமான வரலாற்று அடிப்படையைக் கொண்டவையே என்பதில் ஐயமில்லை. அவ்வாறிருக்க, இவ்வளவு கடுமையான விமர்சனத்தை இவ்வரலாறுகள் குறித்துக் கால்டுவெல் முன்வைத்ததன் நோக்கம் என்ன? இந்தியர்களுக்கு வரலாற்றுப் பார்வை அறவே இல்லை என்ற எண்ணம் கொண்டவர் கால்டுவெல் என்பதுதான் இதற்குப் பதில்.

காலின் மெக்கன்ஸி, பிரான்சிஸ் வைட் எல்லிஸின் நெருங்கிய நண்பர் என்பதோடு இவ்விருவரும் ஆய்வுப் பணிகளிலும் தம்முள் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஆவர். காலின் மெக்கன்ஸியும் எல்லிஸ¤ம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் நிர்வாக அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் ஆவர். அவர்களுக்குக் கால்டுவெல்லைப் போல கிறிஸ்தவ மதப்பரப்பல் நோக்கம் இருந்ததில்லை. நல்ல நிர்வாகிகள் என்ற பெயரெடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இருந்ததால் அவர்கள் இந்த மண்ணின் மரபுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளில் காலனி ஆதிக்க மனப்பான்மை சிறிதும் இருந்ததில்லை என்பதல்ல எமது வாதம். ஆளப்படுவோரின் வாழ்வியலை அனுதாப உணர்வுடன் புரிந்து கொள்ள வேண்டுமென்ற முயற்சி அவர்களிடம் இருந்தது என்பதைத்தான் குறிப்பிட விழைகிறோம். கள ஆய்வு அனுபவங்கள் அவர்களுடைய கண்ணோட்டத்தைச் செழுமைப்படுத்தின.

கால்டுவெல்லுக்கோ மதமாற்றக் களத்தில் அமோக மகசூலை அள்ளிவிட வேண்டுமென்ற உள்நோக்கம் இருந்த அளவுக்கு இந்த மண்ணின் மரபுகள் குறித்து அனுதாபத்தோடு கூடிய புரிந்துணர்வு இல்லை. Tinnevelly Shanars என்ற அவருடைய நூல் நெல்லைச் சீமைச் சான்றோர் சமூகத்தவர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்தை விசுவாசத்தோடு பின்பற்றி வந்த சான்றோர் சாதியினரே அவர் மீது கடும் சீற்றம் கொண்டனர். ஞானப்பிரககசம் நாடார் என்ற புராடஸ்டண்ட் கிறிஸ்தவர் 1883ஆம் ஆண்டில் பாளையங்கோட்டை நீதிமன்றத்தின் மூலம் இங்கிலாந்துப் பிரதமர் கிளாட்ஸ்டனுக்கு இந்த நூலைத் தடை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோள் ஏற்கப்படாது போய்விட்டாலும்கூட, நெல்லைச் சீமையில் தம்மால் நிம்மதியாகத் தொடர்ந்து வாழ முடியாது என்று உணர்ந்துகொண்ட கால்டுவெல் கோடைக்கானலுக்குச் சென்று தம் இறுதிக்காலம் வரை, சற்றொப்ப இருபது ஆண்டுகள் அங்கேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது சான்றோர் சமூகத்தவரின் பெருமிதம் வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ இயலாத வண்ணம் அவருடைய பார்வையில் படிந்து போய்விட்ட, கிறிஸ்தவ மதம் சார்ந்த ஐரோப்பிய இன மேன்மை என்ற காமாலைக் கண்ணோட்டம்தான்.

திராவிட மொழிகள் குறித்த பிரான்சிஸ் வைட் எல்லிஸின் முன்னோடிப் பங்களிப்பிற்கு உரிய அங்கீகாரத்தைக் கால்டுவெல் வழங்கவே இல்லை. எல்லிஸ் கிறிஸ்தவ மதத்தின்பால் விசுவாசம் உடையவர் அல்லர். பெளத்த சமயம் குறித்த அனுதாபத்தோடு கூடிய புரிதல் அவரிடம் இருந்தது. திருவள்ளுவர் உருவத்தைப் பொற்காசில் பொறித்து வெளியிடும் அளவிற்கு திருக்குறளை நேசித்தவர் எல்லிஸ். சென்னைப் பட்டிணத்தின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக 27 கிணறுகள் வெட்டுவித்து வார திதி, நக்ஷத்திர யோக கரணம் (பஞ்சாங்கம்) பார்த்துப் புண்யாஹவாசனம் செய்தவர் எல்லிஸ். (திருமலை நாயக்கர் அரண்மனைக் காட்சிக்கூடத்திலுள்ள கல்வெட்டு வாசகம்.) இப்படிப்பட்ட ‘பாசண்டி’யை கால்டுவெல் போன்ற விசுவாசமான கிறிஸ்தவரால் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? இதுதான் கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் இருந்த அடிப்படைப் பிரச்சினை ஆகும்.

பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் கட்டுக்கதையைவிட மோசமானவை எனக் குறிப்பிடும் கால்டுவெல் தஞ்சைப் பெரியகோயில் மாவு விற்ற கிழவியின் பொருளுதவியால் கட்டப்பட்டது என்றும், அவள் மாவு விற்கும் நேரத்தில் மழை பெய்து மாவு கரைந்துவிட்டால் அவள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமே என்பதற்காகக் கரிகால் சோழன் மேகங்களைச் சிறை செய்தான் என்றும் குறிப்பிடும் ஓர் அபத்தமான கதையினை வரலாற்றுக் குறிப்பு என்ற பெயரில் தொகுத்துள்ளார்.

மழை பிணித்தாண்ட பாண்டிய மன்னன் பற்றிய புராணக் குறிப்பு சிலப்பதிகாரத்தில் முதன் முதலில் இடம்பெறுகிறது. புதிய கற்காலப் பண்பாட்டு நிலையிலிருந்து இரும்பு யுக நாகரிகத்திற்குத் தமிழ்ச் சமூகம் மாற்றம் அடைந்தபோது, நீரைத் தேக்கி பிரம்மாண்டமான நீர் நிலைகளை உருவாக்கிக் குடிநீர் மற்றும் நீர்ப் பாசன வசதிகளைப் பாண்டிய மன்னர்கள் மேம்படுத்தி அதன்மூலம் மழை பொய்த்த வறட்சிக் காலங்களிலும் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வகை செய்தனர் என்ற வரலாற்றினை இது உணர்த்தக்கூடும் எனத் தொல்லியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் மழை பிணித்தாண்ட பாண்டிய மன்னன் கரிகால் சோழன் என்றும், அவன் மேகத்தைச் சிறை செய்தது மாவு விற்கும் கிழவியின் வியாபாரத்தைக் காப்பதற்குத்தான் என்றும் தோன்றியிருக்கின்றன. தமிழக வரலாறு பற்றிய கால்டுவெல்லின் வரலாற்றுக் கண்ணோட்டம் இதுதான்.

பாளையப்பட்டுகளின் ஆதாரபூர்வமான வரலாற்றைக் கட்டுக்கதையைவிட மோசமானதென்று குறிப்பிடும் கால்டுவெல் “மாவு விற்கும் கிழவி” போன்ற சிறுபிள்ளைத்தனமான கதைகளை வரலாறு என்று குறிப்பிடுவதன் உட்பொருள் என்ன? கால்டுவெல் ஆய்வுக் கண்ணோட்டமில்லாத அடிமுட்டாள் அல்லர். மிகச் சிறந்த அறிஞர். ஆனால், ஆங்கிலேயர்களை எதிர்த்து இன்னுயிர் ஈந்த கட்டபொம்மன் போன்ற திராவிட வீரர்களை (பாளையக்காரர்களை) இந்த மண்ணுக்கு உரிமையற்றவர்கள் என்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்களே உண்மையான திராவிடர்கள் என்றும் ஒரு சித்திரத்தைத் தீட்ட முயன்றவர் கால்டுவெல். அவர் தமிழர்களை முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாவும் கருதியதால்தான் மாவு விற்கும் கிழவி பற்றிய அபத்தமான கதையை வரலாற்றுக் குறிப்பாகப் பதிவுசெய்துள்ளார் என்பதுதான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை. திராவிட இயக்கத்தாரின் தொடக்க கால கோஷங்களுக்கும், ‘தீ பரவட்டும்’ போன்ற இயக்கங்களுக்கும் கால்டுவெல் ஒரு முன்னோடியான உந்துசக்தியாக இருந்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. இதைத்தான் திராவிட இயக்கத்தின் “அறிவுலக வேர்கள்” என்று வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார் போலும்.

“ஆரியம் போல் உலக வழக்கழிந்து ஒழியாத் தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்து மனோன்மணியத்திற்குத் தமிழ்த் தெய்வ வணக்கம் இயற்றிய பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை, கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் என்று எழுதுவதில் இப்புலமைக் கருத்தாக்கத்தின் அழகியல் / அரசியல் வெளிப்பாட்டைக் காணலாம்” என வேங்கடாசலபதி குறிப்பிடுவதில் ‘அழகியல்’ என்ற சொல்லை நீக்கிவிட்டால் பொருத்தமாக இருக்கும்.

மகாபாரதத்தைத் தமிழில் இயற்றிய வில்லிபுத்தூராரின் மகனும், திருமுனைப்பாடி நாட்டுச் சனியூர் வீரராகவாச்சாரியார் பேரனுமான வரந்தருவார்,

ஓங்கலிடை வந்துயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்றேனையது

தன்னேரிலாத தமிழ்

- என்று பாடியுள்ள வாழ்த்துப்பாவில் இடம்பெறும் தமிழ்த் தெய்வ வழிபாடு ஆரியத்தோடு ஒட்டியும் உறழ்ந்தும் தன்மயமாக்கியும் வளர்ந்த தமிழின் திறத்தை வியந்ததே தவிர ஆரியம் உலக வழக்கு ஒழிந்த மொழி என ஒப்பிட்டுப் பெருமைப்படவில்லை. வெங்கதிரோனுக்கு நிகரான கோள் எதுவும் இல்லாதது போலத் தமிழுக்கு நிகரான வேறொரு மொழி (சமஸ்கிருதம் உட்பட) உலகில் இல்லை என்று வரந்தருவார் பெருமிதத்தோடு கூறுவது வெளிவேஷம் என்று சொல்லிவிட முடியுமா? தன்னேரில்லாத தமிழைப் போற்றிய வரந்தருவார் போன்றவர்களைக்கூட ஆரியர்கள் என்று பட்டங்கட்டி இருட்டடிப்புச் செய்துவிட்டுத் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர்களைத் தமிழர்களின் தந்தையாகப் போற்றியதுதான் திராவிட இயக்கத்தின் மகத்தான சாதனை. பிராம்மணர் எதிர்ப்பு / வேளாண் தலைமை ஏற்பு / அன்னிய-ஐரோப்பிய ஆதரவு ஆகிய அடிப்படைகளே திராவிட இயக்க அறிவுலக வேர்கள் ஆகும். மனோன்மணியம் சுந்தரனாரைத் திராவிட இயக்க அறிவுலகப் பிரதிநிதிகளுள் ஒருவராக வேங்கடாசலபதி முன்மொழிவதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது. ஆனால் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் போன்ற திராவிட மொழிகள் தொடர்பான ஆய்வு முன்னோடிகளிடத்து திராவிட இயக்க அறிவுலக வேர்களைக் காண்பது அரைகுறையான புரிதலின் விளைவாக இருக்க வேண்டும் அல்லது ஆய்வு நேர்மை இன்மையின் வெளிப்பாடாக வே இருக்க வேண்டும். தாமஸ் டிரவுட்மனின் சொற்களிலேயே இதனைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

“திராவிடச் சான்றோடு திராவிட இயக்கத் தோற்றத்தை நேரடியாகத் தொடர்புபடுத்துவது இரண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த பல வரலாற்று நிகழ்வுகளின் தாக்கத்தைப் புறக்கணிப்பதாகும். மேலும், திராவிட இயக்கம், தமிழ்நாட்டோடு நின்றுவிட்டது மட்டுமல்ல, அது பிராமண எதிர்ப்பையும் தன் தோற்றத்துக்கான முக்கியக் காரணமாகக் கொண்டிருந்தது. இவை திராவிடச் சான்றிலிருந்து நேரடியாக முகிழ்த்தவை அல்ல; மேலும், திராவிடச் சான்று குறித்த ஆய்வில் எல்லிஸ¤டன் ஈடுபட்ட சங்கரய்யா, பட்டாபிராம சாஸ்திரி ஆகியோர் தெலுங்கு பிராமணர்களாவர் என்பதும் மனங் கொள்ளத்தக்கது.” (பக்கம் 224.)

மொழியியல் கண்ணோட்டத்தில் திராவிட மொழிகள் என்ற அடையாளத்தைக் காணும் முயற்சியின் ஆரம்பகட்டத்தை தாமஸ் டிரவுட்மன் (மொழிபெயர்ப்பாளரின் சொற்களில்) “அடிமுடி காணும் கதையின் மகிழ்ச்சியான பகுதி” (பக்கம் 221) என்கிறார். “அதை (திராவிட மொழிகள் என்ற கருத்தாக்கத்தை) சங்கரய்யா எல்லிஸிடமிருந்து பெற்றாரா, எல்லிஸ் அவரிடமிருந்து பெற்றாரா என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. 1800ஆம் ஆண்டிலேயே - அதாவது எல்லிஸ¤க்கும் சங்கரய்யாவுக்கும் தொடர்பு ஏற்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கும் காலத்திற்கு முன்பே - திராவிடக் கருத்தையொத்ததொரு எண்ணத்தை எல்லிஸ் வெளிப்படுத்திவிட்டார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நாம் முடிவாகச் சொல்லக் கூடியது என்னவென்றால் திராவிடக் கருத்து என்பது சென்னையில் வாழ்ந்த பல அறிஞர்களினுடைய சிந்தனைகளின் இணைவின் விளைவு என்பதேயாகும்”(பக். 221-222) என்று டிரவுட்மன் சிறிதும் குழப்பமின்றித் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்க அறிவுலக வேர்களுள் ஒருவரான மனோன்மணியம் சுந்தரனார் குறிப்பிடுவது போல, கன்னடமும் களி தெலுங்கும் துளுவும் தமிழிலிருந்து உதித்தவை அல்ல. திராவிட மொழியியல் நிபுணர்கள் திராவிட மொழிகளின் பரிணாம வளர்ச்சி பற்றி வகைதொகைப்படுத்தி ஆராய்ந்துள்ள கருத்தின்படி தமிழ் மொழி திராவிட மொழிகளிலேயே மிகவும் செம்மையான மொழியாகும். இந்தோ-ஆரிய மொழிகளில் சமஸ்கிருதம் பெற்றுள்ள இடத்தையொத்த நிலை இதுவாகும். சமஸ்கிருதத்தைவிட முற்பட்டது வேத கால ஆரிய மொழி. வேத கால ஆரிய மொழிக்கு முற்பட்டவை இந்தோ-ஆரியப் பிராகிருத மொழிகள். இது போன்றே, முந்து-தென் திராவிட மொழியிலிருந்து (அம்மொழி காலப்போக்கில் சிதைந்து வழக்கொழிந்துவிட்டது) துளு தனி மொழியாகவும் தமிழ், கன்னடம், மலையாளக் கூறுகள் கலந்த முந்து-தமிழ் (proto-Tamil) தனி மொழியாகவும் பிரிந்திருக்க வேண்டுமென்றும் முந்து-தமிழிலிருந்து கன்னடம் தனி மொழியாகவும், தமிழ்-மலையாள மொழிக் கூறுகள் கலந்த முந்து-தமிழ் மொழி தனி மொழியாகவும் பிரிந்திருக்க வேண்டுமென்றும் கி.பி. 5ஆம் நூற்றாண்டளவில் இதிலிருந்து மலையாளம் பிரிந்து சென்றுவிட்டதால் முந்து-தமிழ் மொழி தமிழ் மொழியாக நீடித்ததென்றும் மொழியியலாளர்கள் கருதுகின்றனர்.

வேறொரு சித்திரமும் சில திராவிட மொழியியல் அறிஞர்களால் தீட்டப்பட்டுள்ளது. துளுவும் தமிழும் கி.மு. 1000இல் முந்து-தென் திராவிடத்திலிருந்து பிரிந்திருக்க வேண்டுமென்றும் அதனையொட்டி முந்து-மத்திய திராவிடத்திலிருந்து தெலுங்கு கிளைத்திருக்க வேண்டுமென்றும் துளுவும் தெலுங்கும் உறவாடிக் கன்னடம் காலப்போக்கில் தனிமொழியாக உருவாகியிருக்க வேண்டுமென்றும் மொழியியல் அறிஞர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் (தெ.பொ.மீனாட்சிசுந்தர கிராமணியார்), செக்கஸ்லோவேக்கியத் தமிழறிஞர் கமில் சுவலபில் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறிருக்க, வட இந்தியப் பிராகிருதம் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்துதான் தோன்றின என்று கூறுவது எத்தகைய அபத்தமான, மொழிகளின் பரிணாம வளர்ச்சி முறைக்கு நேர்மாறான கண்ணோட்டமாக இருக்குமோ அது போன்றதே மனோன்மணியம் சுந்தரனாரின் கருத்தும் ஆகும். மனோன்மணியம் சுந்தரனாரையும் கால்டுவெல்லையும் கண்மூடித்தனமாக வழிபடும் திராவிட இயக்கத்தாருக்குத் தற்காலத்து திராவிட மொழியியல் நிபுணர்கள் குறிப்பிடும் கருத்துகள் உவப்பானவையாக இரா. இக்கருத்துகளைப் படிப்பதால் அவர்களுக்கு ஓர் ஒவ்வாமைகூட ஏற்பட்டுவிடக்கூடும். அதற்காக எல்லிஸ் துரைமகனாரின் போற்றத்தக்க தமிழ்ப் பணிகளை வரிசைப்படுத்திக் கூறிவிட்டு போகிற போக்கில் திராவிட மாயைக்கு எதிரான கருத்தியலைப் பழித்து எழுதியுள்ளது வேங்கடாசலபதியின் ஆழ்மன அரிப்புகளை வெளிப்படுத்துகிறதே தவிர வேறொன்றுமல்ல.

வள்ளுவம் பற்றிய அயோத்திதாசப் பண்டிதரின் சில குறிப்புகளை மேற்கோள் காட்டும் வேங்கடாசலபதி, வள்ளுவர் குலத்தவர்கள் இன்றைக்குப் பறையர் சமூகத்தின் ஒரு உட்பிரிவாக இருப்பதையும், அவர்களே வானநூல், சோதிடம், மருத்துவம், இசை போன்ற துறைகளில் வல்லுனர்களாக இருப்பதையும், சமயத் தலைவர்கள் என்ற பொருளில் தரங்கம்பாடி ஆவணம் ஒன்றில் அவர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதையும

Link to comment
Share on other sites

இக்கட்டுரைக்கு ஏனோ பதில் வரவேயில்லை.

நண்பர் நாரதர் அவர்களை எதிர்பார்க்கிறேன்.

மேலும் கடந்த நுற்றாண்டில் நடந்த பல தவறான தமிழ் ஆய்வுகளைப் பற்றிய கட்டுரைகளை தருகிறேன்.

வையாபுரிப்பிள்ளை குறித்து ஜெயமோகன்

எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களைப்பற்றி பி.கெ சிவக்குமார் அவர்களின் கருத்துக்களைக் கண்டேன். இது குறித்து என் தரப்பினை தெளிவுபடுத்த விழைகிறேன். நான் ஆய்வாளன் அல்ல. ஆகவே பொது வாசகனாகவும் இலக்கியவாதியாகவும் இந்த ஆய்வுச்சூழலின் வெளியே நின்று என் துறைக்குத் தேவையான அளவுக்கு மட்டும் தெரிந்து கொள்பவன். என் கருத்துக்கள் ஒரு பொது நோக்கில் அறியக்கிடைத்தவையே.

1] எஸ்.வையாபுரிப்பிள்ளை முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையனவா ? இன்று அவரது இடம் என்ன ?

அல்ல. எஸ்.வையாபுரிப்பிள்ளை தன் ஆய்வுகளை நிகழ்த்தி ஏறத்தாழ ஐம்பதுவருடங்கள் ஆகின்றன. இத்தனைகாலம் அவரது ஆய்வுமுடிவுகள் அனைத்தும் அபப்டியே நீடித்து நிற்கும் என்று எவருமே வாதிட இயலாது. முதல்நிலைக் கோட்பாடுகளை உருவாக்கிய ஆய்வாளன்கூட அத்தனைகாலம் நீடித்திருக்கமாட்டான். காரணம் ஆய்வு தொடர்ந்து முன்னேறும் ஒரு பயணம்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆய்வுகளை நிகழ்த்தியபோது தமிழின் முக்கியக் கல்வெட்டுகள் பல படிக்கப்படவில்லை. இன்று தமிழ்ப் பண்பாட்டு ஆய்வில் முதல்தள தாரமாகக் கணிக்கப்படும் பல புதைபொருள் சான்றுகள் விளக்கப்படவில்லை. மானுடவியல், வேர்ச்சொல்லியல் முதலிய பிற அறிவுத்துறைகளுடன் இலக்கிய, தொல்பொருள் சான்றுகள் உரையாடவைக்கப்பட்டு முழுமையான ஆய்வு நிகழ்த்தும் முறையியல் உருவாகி வரவில்லை. அவரது காலகட்டத்தில் அறிமுகமாகியிருந்த முறைமையை கையாண்டு வையாபுரிப்பிள்ளை தன் முடிவுகளுக்கு வருகிறார். வையாபுரிப்பிள்ளையின் பல முடிவுகள் ஆய்வாளர்களால் மறுக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஆய்வாளராக அவரது முக்கியத்துவம் சில அடிப்படைக் காரணிகளால் அமைந்தது. ஒன்று ஆய்வுக்கு கொள்கைப்பிடிப்போ உணர்ச்சிகரமான ஈடுபாடுகளோ தடையே ஆகும் என்றும் ஆய்வுக்கு அடிப்படையாக அமைவது புறவயமான முறைமையே என்றும் அவர் நம்பியமை. இரண்டு ஆய்வுக்குப் பின்புலமாக தமிழ்நாட்டில் அன்று இருந்த சமூக அதிகாரத்துக்கான போட்டியில் அவர் பக்கம் சாராமல் நின்றது.

இன்று அச்சூழலை புரிந்துகொள்ளும் உதாரணமாக இரு நூல்களை வாசகர்கள் பரிசீலித்து நோக்கவேண்டுமென்று எண்ணுகிறேன். சு .கி ஜெயகரன் அவர்கள் எழுதிய சமீப கால நூலான ' ' குமரி நில நீட்சி ' ' [காலச்சுவடு பதிப்பகம்.] குமரிக்கண்டம் என்ற கருதுகோள் எவ்வாறு தமிழில் உருவாகி பரப்பப்பட்டது என்பதை விவரிக்கிறது. பிரம்மஞானசங்கத்தைச் சேர்ந்த சிலர் 'உள்ளுணர்வு ' மூலம் இந்துமகாசமுத்திரத்தில் ஒரு பெருங்கண்டம் இருந்ததாக ' கண்டடைந்து ' அதற்கு லெமூரியா என்று பேரிடுகிறார்கள். சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் குமரிக் கோடு பஃறுளி று முதலியவற்றை கடல்கொண்டதாக சில வரிகள் வருகின்றன. இங்குள்ள திராவிட இயக்க தமிழறிஞர்கள் இரண்டையும் எளிதாக இணைத்து குமரிக்கண்டம் என்ற பெரிய நிலப்பகுதி தமிழ்நாட்டுக்குத் தெற்கே பரந்து விரிந்துகிடந்ததாகவும், அங்குதான் தமிழ்ப்பண்பாடு பிறந்து ஓங்கியதாகவும் , மானுட இனமே அங்கே தோன்றியிருக்கலாம் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள். 'மேலைநாட்டு ' அறிஞர்களை மேற்கோள்காட்டி குமரிக்கண்டத்தை அறிவியல்ரீதியாக நிறுவப்பட்ட உண்மையாகவே முன்வைத்தார்கள். அது அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டு அரசு சார்பில் உலகத்தமிழ்மாநாட்டில் வெளியிடப்பட்ட செய்திப்படங்களில் கூட காண்பிக்கப்பட்டது. இன்றும் தமிழில் அது நிறுவப்பட்ட உண்மையாகவே காணப்படுகிறது. அதை ஐயப்படுவது தமிழ்துரோகமாக கணிக்கப்படுகிறது. தமிழாய்வுகள் எத்தகைய விருப்பக் கற்பனைகளாக இருந்தன என்பதற்கான ஆதாரம் இது. உண்மையில் இவர்களுடைய அப்பாவித்தனத்துக்கு உலக அளவில் கூட ஒரு சமான உதாரணம் இருக்காது.

சு கி ஜெயகரன் குமரிக்கண்டம் என்ற கருத்து எப்படி அறிவியலடிப்படையே இல்லாத ஆய்வுகள் மூலம் அபத்தமாக உருவாக்கப்பட்டது என்று விரிவாக விவரித்து அடிப்படையான சில வினாக்களை எழுப்புகிறார். இக்கருத்து தமிழில் பேசப்பட்ட இந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் இந்த எளிமையான அடிப்படைவினாக்கள் எவராலும் எழுப்பபடவில்லை என்பதைத்தான் நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். [உதாரணம் குமரிக்கடலில் அடித்தரை எவ்வளவு ஆழம் உள்ளது என்ற கேள்வி] அத்தகைய ஒரு விவாதத்துக்கான சூழலே இங்கே இருக்கவில்லை. இத்தகைய ஒரு நிலை கொண்ட ஆய்வுச்சூழல் தான் ஆபத்தானது ? எப்படி அது உருவாயிற்று ? இவ்வாறு குமரிக்கண்டத்தை 'நிறுவிய ' அதே அறிஞர்கள்தான் எஸ் வையாபுரிப்பிள்ளையை தூக்கிக் கடாசியவர்கள் என்பதை நான் நினைவில்கொள்ள வேண்டும் . வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு நெறி இத்தகைய அசட்டுத்தனங்களுக்கு முற்றிலும் எதிரானது.

இன்றும் இதேபோக்கு தொடர்வதற்குச் சிறந்த உதாரணம் தஞ்சை தமிழ் பலகலையைச்சேர்ந்த நெடுஞ்செழியன் எழுதிய 'தமிழிலக்கியத்தில் உலகாயதம் ' என்ற 'ஆய்வு ' நூல். என் நோக்கில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நகைச்சுவைப்படைப்பு இது. கிரேக்க பொருள்முதல்வாதச் சிந்தனைகள் அனைத்தும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவை என்று சொல்லாராய்ச்சி மூலம் நிறுவும் நூல் இது. நம் மேடைகளில் இதை தினமும் காணலாம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பெரியார் தாசன் சொன்னதாக கேள்விப்பட்டேன். 'பெற்றோரொத்தல் ' என்ற சொல்லில் இருந்தே Betrothal என்ற ஆங்கிலச்சொல் வந்திருக்கிறதாம். வையாபுரிப்பிள்ளை போரிட்டு தோற்கடிக்கப்பட்டது இந்த 'ஆய்வா 'ளர்களுடன்தான். இன்றும் அவருக்கு இங்கே இடமில்லாமல் இருப்பதும் இதனால்தான். இந்த ஆய்வுகளை தமிழுணர்வின் பகுதிகளாகக் காண்பவர்கள்தான் வையாபுரிப்பிள்ளை பேரைக் கேட்டாலே கொதிக்கிறார்கள். கல்விநிலைய ஆய்வுகளில் அவரது ஒரு மேற்கோளைக் காட்டினாலே அவற்றை விழத்தட்டுகிறார்கள்.

இரண்டாவதாக சமூக அதிகாரப்போட்டி. அன்றைய தமிழ்நாட்டில் சாதிகளுக்கு இடையே நடந்த அதிகாரப்போரைப்பற்றி இந்தக் குறிப்பில் கோடி காட்ட விழைகிறேன். வெள்ளையர் எடுத்த இரு மக்கள்தொகை கணக்குகள் இந்திய அளவில் பெரிய சமூகக் கொந்தளிப்புகளை உருவாக்கின. முதல் கணக்கு சாதி அடிப்படையிலும் இரண்டாவது கணக்கு வருண அடிப்படையிலும் எடுக்கப்பட்டது. வருண அடிப்படையில் சாதிக்கணக்கு எடுக்கப்பட்டபோது பல வேளாண் சாதிகள் தங்களை சத்ரியர் என்று அடையாளப்படுத்தின. உதாரணமாக நாடார் மற்றும் தேவர். இது வைசியர்களாக மட்டுமே கூறத்தக்க வேளாளர் , முதலியார் போன்றவர்களை கொதிப்படையச் செய்தது. சத்ரியர் வைசியர்களைவிட மேலானவர்கள் ஆயிற்றே. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை முதலியோர் இதற்கு எதிராக எப்படி வேளாளர்களை அமைப்பு ரீதியாக திரட்டிப் போரிடமுற்பட்டனர் என்பதெல்லாம் வரலாறு . ஆரிய வருணப்பிரிவை முற்றாக நிராகரித்து தங்களை மிகத்தொன்மையான ஒரு இனமாகக் அடையாளம் காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது இவ்வாறுதான்.

அன்றைய சூழலில் வேளாளர், முதலியார் முதலிய பிராமணரல்லாத உயர்சாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட செய்த முயற்சிகள் ஒருபக்கம். நாடார் போன்ற சாதிகள் தங்கள் இடத்தைக் கோரி நடத்திய போராட்டம் ஒருபக்கம். தலித்துக்கள் முதலியோரை முன்னிலைப்படுத்தும் நோக்குடன் ஆங்கில ஆய்வாளர் செய்த ஆய்வுகள் ஒருபக்கம் என்று மூன்று இழுவிசைகள் அன்று நிலவின. திருநாவுக்கரசரின் காலம் குறித்த கால்டுவெல்லின் ஆய்வுதான் அந்த நூற்றாண்டுகால ஆய்வுப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி எனலாம். அது பக்தி இயக்கம் மற்றும் சைவசித்தாந்தத்தின் காலத்தை வெகுவாக பின்னால் கொண்டுவந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு. அவருக்கு வேளாளரின் ஆதிக்கம் பிந்திய காலத்தது என்று காட்டி பறையர் சாதியினரை முதற்குடிகளாக முன்னிறுத்தும் நோக்கம் இருந்தது என்று ஆய்வாளர் வேத சகாய குமார் சொல்கிறார்.

அந்நூலுக்கு எதிராக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை செய்த கால ஆராய்ச்சியும் மாணிக்கவாசகர் காலம் குறித்து மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியும் அக்காலத்தை வெகுவாக முற்காலத்துக்குக் கொண்டுசென்றன. அதற்குரிய தரவுகள் சேர்க்கப்பட்டன, தர்க்கங்கள் உருவாக்கபப்ட்டன . இந்த நோக்கின் நீட்சியாகவே அடுத்த கட்டத்தில் தமிழின் தொன்மையை மேலும் பின்னகர்த்தி குமரிக்கண்டத்துக்குக் கொண்டுசெல்லும் திராவிட இயக்க அலை எழுந்தது

இதில் வையாபுரிப்பிள்ளை கால்டுவெல்லையே அதிகம் சார்ந்திருக்கிறார் என்பதே உண்மை. அவர் வேளாளராக தன்னை உணரவில்லை. அவருக்கு இருந்த ஐரோப்பிய ஆய்வுநெறிகள் மீதான நம்பிக்கையே வென்றது. அவரது முக்கியக் குறைபாடு என்னவென்றால் அவர் ஐரோப்பிய ஆய்வு முறைமை மீதான நம்பிக்கையை ஐரோப்பிய ஆய்வாளர் மீதான நம்பிக்கையாக மாற்றிக் கொண்டார் என்பதுதான். இங்கு கால்டுவெல் பின்னகர்ந்த போது வையாபுரிப்பிள்ளையும் பின்னகர்ந்தார். ஆனால் பொதுவாக தென்தமிழகத்தின் சீரிய ஆய்வாளர்களில் கணிசமானபேருக்கு வையாபுரிப்பிள்ளை முக்கியமான முன்னோடி . கெ கெ பிள்ளை, ப.அருணாச்சலம், பேராசிரியர் ஜேசுதாசன் , அவரது மாணவர்களான அ கா பெருமாள், எம் வேத சகாயகுமார் முதலியோர் உதாரணம்.

ஆய்வுகள் முன்னகரும்தோறும் வையாபுரிப்பிள்ளையை எதிர்த்த 'கடற்கோள்வாதிகள் ' மேலும் மேலும் கேலிக்குரியவர்களாக மாறி காலக்கோளுக்கு ஆளாகி மறைவதையே காண்கிறோம். சமீபத்தில் வெளிவந்த ஐராவதம் மகாதேவனின் நூலும் வையாபுரிப்பிள்ளையின் பாதையிலேயே நகர்கிறது. அதனாலேயே அந்த மகத்தான நூல் குறித்தும் பல தமிழறிஞர்கள் ஐயத்துக்கு இடமான மெளனம் சாதிக்கிறார்கள்.[தொன்மையான தமிழ் எழுத்துரு பிராம்மி என்பது எப்படிப்பட்ட ஒரு சர்ச்சையை உருவாக்கியிருக்கவேண்டும்! ]

வையாபுரிப்பிள்ளை சம்ஸ்கிருத ஆதரவாளரா ?

எந்த ஒரு ஆய்விலும் ஒட்டியும் வெட்டியும் தரப்புகள் விவாதிக்கவேண்டியுள்ளது . தமிழ் சம்ஸ்கிருத உறவைப் புரிந்துகொள்வதில் மூன்று சாத்தியக்கூறுகளை நாம் உருவகிக்கலாம். தமிழ் தொன்மையும் தனித்தன்மையும் உடையது. சம்ஸ்கிருத உதவி இல்லாமலேயே நிலைநிற்கும் வலிமை கொண்டது. தமிழில் சம்ஸ்கிருதம் கலப்பது ஒரு வரலாற்று மோசடி-- இது ஒருவாதம். தமிழ் சம்ஸ்கிருதத்த்தை ஒட்டி வளர்ந்த ஒரு இரண்டாம்கட்ட மொழி என்பது இன்னொரு வாதம். தமிழும் சம்ஸ்கிருதமும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவை என்பது மூன்றாம் தரப்பு.. மூன்று தரப்புகளும் தொடர்ந்து விவாதிக்கும்போதே ஒரு ஆய்வுச்சூழல் உருவாகிறது. இதில் வையாபுரிப்பிள்ளை நடுநிலையான தரப்பை எடுத்தார். இந்திய மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருதத்துடன் உரையாடி வளர்ந்தவை என்றும் தமிழுக்கு சம்ஸ்கிருதத்தின் கொடை மிக மிக முக்கியமானது என்றும் அவர் வாதிட்டார் எனலாம். சம்ஸ்கிருதம் சார்ந்த கருத்துக்கள்ளை வையாபுரிப்பிள்ளை வலுவாக முன்வைத்தமைக்குக் காரணம் அவர் ஐரோப்பிய ஆய்வாளர்களை அதிகம் சார்ந்திருந்தமைதான். அப்போது இந்தியவியலில் சம்ஸ்கிருதத்தை மையமாக்கி ஆராய்வதே பொதுவான போக்காக இருந்தது. இன்றும் அப்போக்கு வலுவாக உள்ளது.அன்று சம்ஸ்கிருத வேர்ச்சொல்லாராய்ச்சி வலுவாக இருந்தமையால் அவரது நோக்கு சம்ஸ்கிருதச் சார்பு கொண்டதாக இருந்தது. ஆனால் தமிழ் வேர்ச்சொல்லாராய்ச்சியின் சாத்தியங்களை அவர் அங்கீகரித்தார். அன்று நிலவிய பொதுவான போக்கு முதல்தரப்புதான். அது வையாபுரிப்பிள்ளைக்கு எதிராக ஒரு பெரிய காழ்ப்பு அலையை உருவாக்கி அவரை ஆரிய அடிவருடி தமிழ்த்துரோகி என்றெல்லாம் முத்திரைகுத்தச் செய்தது.

நிரூபணவாதம் சாராத அறிவுத்துறைகளில் எந்த தரப்பும் இறுதியாக நிறுவப்படுவது இல்லை, எந்தத் தரப்பும் முற்றாக அழிவதுமில்லை. ஆகவே மேலே சொன்ன மூன்று தரப்பும் எப்போதும் இருக்கும். எந்த ஒரு புது கருத்தையும் மூன்று கோணங்களும் தங்கள் நோக்கில் ஆராய்ந்து தங்களுக்குள் விவாதித்து தெளிவுபடுத்துவதே ஆரோக்கியமானதாகும். நானறிந்தவரை கேரளக் கலாச்சார ஆய்வில் தமிழ்மைய நோக்கு சம்ஸ்கிருத மைய நோக்கு என்ற இரு நோக்குகளும் ஆக்கபூர்வமான விவாதத்தையே நிகழ்த்திவருகின்றன. இவற்றின் முரணியக்கமே அங்குள்ள ஆய்வு நகரும் விசை. தமிழில் காழ்ப்பும் வசையும் மூலம் பிற தரப்புகள் அடக்கப்பட்டமையால்தான் ஆய்வுகள் அசட்டுத்தனத்தின் எல்லைக்கே சென்றன. [ ஒரு வேடிக்கை நினைவுக்கு வருகிறது . ஆய்வுக்கோவை என்ற வருடாந்தர பிரசுரம் தமிழறிஞர்களால் வெளியிடப்படுகிறது. அதில் ஒரு கட்டுரை கண்ணகி ஒரு கன்னி என்று விரிவாக பேசி நிறுவ முயல்கிறது. அதை இந்து நாளிதழில் திறனாய்வுசெய்த இந்திரா பார்த்த்த சாரதி 'இத்தனை ஆதாரம் காண்பித்த ஆசிரியர் ஒரு டாக்டர் சர்டிஃபிகெட்டையும் இணைத்திருக்கலாம் ' என்று எழுதினார்] சம்ஸ்கிருதச் சார்பு உள்ள அறிஞர்கள் பலர் மிக முக்கியமான ஆய்வுகள் செய்துள்ளனர்[ உதாரணம் பக்திகாலகட்டம் குறித்த ப அருணாச்சலம் ஆய்வு] அவை இங்கே உதாசீனம் செய்யபப்டுகின்றன.

வையாபுரிப்பிள்ளையின் தரப்பு வலுவாக நிறுவப்படவேண்டும். அது ஒரு சக்தியாக சூழலில் செயல்பட வேண்டும். அதன் மறுதரப்பு ஆரோக்கியமாக இருப்பதற்குக் கூட அது அவசியம்.

வையாபுரிப்பிள்ளை குறித்து என் கருத்து என்ன ?

என் நண்பர்கள் முழுக்க முழுக்க வையாபுரிப்பிள்ளை ஆதரவாளர்கள். ஆனால் எனக்கு சில ஐயங்கள் மற்றும் கருத்துக்கள் உள்ளன. ஆய்வாளன் அல்ல என்பதனால் நான் அது குறித்து எழுதுவது இல்லை.

குமரிக்கண்டம் என்ற கருத்து அறிவியல் அடிப்படை இல்லாத ஒன்றாகவே இன்றுவரை உள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் நம் மொழியின் சொற்கள், எராளமான தொன்மங்கள் ஆகியவற்றை குமரிக்கண்டம் கடல்கொண்டது என்ற மையக்கருத்து இன்றி இணைக்கவோ புரிந்துகொள்ளவோ இயலாது என்று எனக்குப் படுகிறது.[உதாரணம் தென்புலத்தோர் என்றால் மூதாதையர்] நான் இப்போது எழுதும் 'கொற்றவை ' என்ற நாவலில் புனைவுசார்ந்து அதை செய்ய முயல்கிறேன். ஒரு கருதுகோளாக, விவாதத் தரப்பாக குமரிக்கண்டம் இருந்தபடியேதான் இருக்கவேண்டும். அதை முழுக்க நிராகரித்துவிட இயலாது.

தமிழ் வேர்ச்சொல்லாக்கம் பலவகையான உள்நோக்கங்களும் அசட்டுத்தனங்களும் உடையது என்றாலும் அதில் முக்கியமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று எண்ணுகிறேன். பாவாணரின் வேர்ச்சொல்லாக்கமுறைமையை நான் ஐயப்படுகிறேன்.ஆனால் அவரது மொழிசார்ந்த நுண்ணுணர்வு பல வாசல்களை திறந்துள்ளது. என் மரபை புரிந்துகொள்ள அவர் மிக மிக முக்கியமானவர். வையாபுரிப்பிள்ளை அளவுக்கே முக்கியமானவர். சொல்லப்போனால் ஒரு படைப்பாளியாக எனக்கு அவர் வையாபுரிப்பிள்ளையை விடவும் முக்கியமானவர். நான் கையாளும் சொற்களை அறிய அவரை நான் சார்ந்திருக்கிறேன். அவர் வையாபுரிப்பிள்ளை மீது கொண்ட காழ்ப்பை ஒருவகை புலமைக்காய்ச்சலாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். அவரது தரப்பு தமிழில் எப்போதும் வலுவாகவே இருக்கும் -- இருக்க வேண்டும்.

ஆக நான் விழைவது ஒரு பெரிய விவாதப்புலத்தை. அதில் வையாபுரிப்பிள்ளையும் பாவாணரும் இரு முக்கியமான வல்லமைகள். பாவாணர்மீது இன்று குருட்டுத்தனமான பற்று கட்டப்படுகிறது. அவரது பாணியில் அசட்டு ஆய்வுகள் குவிந்து சூழல்சீர்கேட்டை உருவாக்குகின்றன. ஆகவே அவரை எதிர்த்து எழுத நேர்கிறது. வையாபுரிப்பிள்ளையின் மகத்தான சாதனைகள் கூட முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றன. ஆகவே அவரைப் பற்றி பேசவேண்டியுள்ளது அவ்வளவுதான்.

வையாபுரிப்பிள்ளை பற்றி இன்று செய்யவேண்டியது...

வியாபுரிப்பிள்ளையின் மகன் -- அமெரிக்கர் என்றார்கள்-- அவரது நூல்களை முழுமையாக பிரசுரிக்க முயன்று சில தொகுதிகலுடன் நின்று விட்டது. தமிழ்ச்சுடர்மணிகள் போன்ற நூல்களை இன்று மீண்டும் கொண்டுவரவேண்டும். யாரிடம் பதிப்புரிமை உள்ளது என்பது சிக்கலாக உள்ளது

வையாபுரிப்பிள்ளை குறித்து நூல் எழுத முற்றிலும் தகுதியானவர் முனைவர் அ கா பெருமாள். அவர் ஏற்கனவே எழுதிய நூலை வையாபுரிப்பிள்ளையின் வரலாற்றுடன் சேர்த்து எழுதும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அடுத்த வருடம் தமிழினி பிரசுரமாக நூல்வெளிவரக்கூடும்

**

Link to comment
Share on other sites

அன்பர் தேவப்பிரியாவுக்கு,

வெற்றி வேலர் இங்கு வந்தும் உங்கள் தமிழ்ப் புலமையை வாழ்த்திச் செல்ல முதல், மேற் கூறிய பதிவை நீங்கள் எழுதினீர்களா அல்லது பிகே சிவகுமார் எழுதினார என்பதைத் தெளிவு படுத்தவும்.ஏனெனில் மேற் கூறிய பதிவு எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது பற்றிய விபரமோ அதன் இணைப்போ இங்கே வழங்கப்படவில்லை.

:rolleyes:

மேற்கூறிய பதிவிக்கும் இராமகி அவர்கள் தகுந்த விளக்கம் அழிதுள்ளார், பின்னூடமாக பிகே சிவகுமாரின் பதிவில்.

http://pksivakumar.blogspot.com/2004/09/2.html#comments

At 8:06 AM, இராம.கி said...

அன்பிற்குரிய சிவக்குமார்,

வையாபுரியாரின் பங்களிப்பு ஒரு சில ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் அவர் சொல்லியது எல்லாமே ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. நமக்கு முன்னர் மிகப் பலர் வையாபுரியாரைப் புரட்டி எடுத்திருக்கிறார்கள். அதில் தமிழறிஞர் பலரும் உண்டு. அதை எல்லாம் படித்திருப்பிர்களா என்று தெரியாது. வையாபுரியாரின் ஒவ்வொரு பத்தாம் பசலிக் கருத்தையும் இப்பொழுது மீண்டும் எடுத்துத் திருப்பிப் போட்டு இன்னொரு சுற்று தேவையில்லாத வாக்கு வாதத்தை நீங்கள் எழுப்புவது ஏனென்று தெரியவில்லை. (ஆறுமுக நாவலருக்கும், இராமலிங்க வள்ளலாருக்கும் இடையே நடந்த வாக்குவாதங்களை இப்பொழுது படித்துவிட்டு மீண்டும் இன்னொரு சுற்று வரவிட்டால் எப்படி இருக்கும், அது போலத்தான் இது.)

இந்தப் புலனத்தில் நீங்கள் வைக்கும் பல கருத்துக்களையும் மறுத்து எழுத முடியும் தான். (ஓரையும் நாளும் எதைக் குறிக்கின்றன என்று அறிவீர்களா? ஓரை கிரேக்கத்தில் இருந்து வந்தது என்பதற்கோ, அது தமிழ் இல்லை என்பதற்கோ நீங்கள் அறிந்து ஒரு விளக்கம் சொல்லுங்களேன்? காப்பியம், நாடகம் என்பவை தமிழ் அல்ல என்பதற்கும் வையாபுரியாரின் சொல்லை வைத்துக் கொண்டு நொண்டி வழக்காடாமல் உங்கள் விளக்கம் சொல்லுங்களேன்.) ஆனாலும் மறுத்து எழுத முற்பட்டால் எனக்குச் சலித்துப் போகிறது. இது போன்ற உருப்படி இல்லாத வல்வழக்குகளில் கருத்தியல் காரணமாய் ஈடுபடும் நேரத்தில், பயன்தரும் படியாய், சில தமிழாக்கங்களில் ஈடுபடலாம், வரலாற்றில், பொருளியலில், அறிவியலில், நுட்பியலில் புதிதாய்த் தமிழில் ஏதேனும் ஒன்றைச் செய்யலாம் என்ற மனம் தெளிவுறுத்துகிறது. எனவே உங்களோடு வாக்குவாதத்தைத் தவிர்க்கிறேன்.

பொதுவாய், அரசியல் வல்வழக்காடிகளோடு மன்றாடிக் கொண்டு "நான் இந்நாள் வரை கற்புள்ளவள்" என்று மூதலித்துக் கொண்டே இருப்பதும், இந்தக் கலவைகளால் இன்னொரு மலையாளமோ, கன்னடமோ, தெலுங்கோ பிறப்பது தவிர வேறொன்றும் நடவாது என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருப்பதும் மிகுந்த ஆற்றாமையைத்தான் கொடுக்கிறது.

உங்களுக்கு என்ன வேண்டும், மீண்டும் ஒரு மணிப்பவளமா, இல்லை தமிங்கிலமா, செய்துவிட்டுப் போங்களேன், இந்தத் தமிழ் செத்தொழிந்து போகட்டுமே? பத்தாண்டில் ஆவதை உங்கள் கட்டுரையால் எட்டாண்டில் செய்துவிடுவீர்களா? அப்படிச் செய்து, எல்லோரும் கடைத்தேறலாம், என்ன சொல்லுகிறீர்கள்? தமிங்கிலம் என்ற பொதுமொழி வளர்ந்தோங்கட்டும். வாட் டூ யூ சே? ஆர் யூ கேம் டு தட்? படிப்பதற்கு நன்றாய் இருக்குமே? இதை விடுத்துக் கழகங்களையும், தனித்தமிழ் ஆர்வலர்களையும் வெறுத்துத் தூற்றி எறிய வேண்டுவது எதற்கு? அதற்கு வையாபுரியாரைத் துணைக்கு அழைக்க வேண்டியதும் எதற்கு? எது அறிவியல் சார்ந்த கருத்து?

அன்புடன்,

இராம.கி.

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பர்களே,

நான் திண்ணை ஆசிரியர் ஜெயமோகன் கட்டுரை பதித்தேன்.

நண்பர் நாரதர் அக்கட்டுரையை சற்றும் படிக்காமல் வேறொரு எழுத்தாளர் எழுதியதாக எடுத்து அதற்கு இராம்.கி அவர்கள் கொடுத்த பதிலையும் பதித்துள்ளார்.

நண்பர் நாரதர் தயவு கூர்ந்து பதிவைப் படித்து பதில் தர வேண்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பர்களே,

நான் திண்ணை ஆசிரியர் ஜெயமோகன் கட்டுரை பதித்தேன்.

நண்பர் நாரதர் அக்கட்டுரையை சற்றும் படிக்காமல் வேறொரு எழுத்தாளர் எழுதியதாக எடுத்து அதற்கு இராம்.கி அவர்கள் கொடுத்த பதிலையும் பதித்துள்ளார்.

நண்பர் நாரதர் தயவு கூர்ந்து பதிவைப் படித்து பதில் தர வேண்டும்.

நீங்கள் திண்ணையில் இருந்து உருவி ஜெயமோகனால் எழுதப்பட்ட கட்டுரையை எந்தவித இணைப்பும் இல்லாமல், நீங்கள் எழுதியது போல் இணைதுள்ளீர்கள்.வெற்றிவேல் வந்து வாழ்த்தும் சொல்லி விடுவார்.உங்களிடம் இருக்கும் நேர்மயற்ற தன்மையைக் காட்டவே அதனைக் குறிப்பிட்டேன்.தின்ணையில் வெளிவந்த கட்டுரையை அடிப்படையாக வைத்தே பிகே சிவகுமார் எழுதிஉள்ளார் அதற்க்கெ இஆரமகி அய்யா அவர்கள் பதில் சொல்லி உள்ளார்.இவை எல்லாம் நீங்கள் உருவி உங்களுடையதாகச் சொன கட்டுரை பற்றிய விடயங்களே.

ஏன் இப்படி இங்கு மோசடியாகச் செயற்படுகிறீர்கள்? உங்கள் நோக்கம் என்ன?

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பர்களே,

மேலும் கடந்த நுற்றாண்டில் நடந்த பல தவறான தமிழ் ஆய்வுகளைப் பற்றிய கட்டுரைகளை தருகிறேன்.

தமிழரைத் தேடி - 1 -பிரகஸ்பதி

1. முன்னுரை:

தமிழ்ச் சமூக வரலாற்றையும், இந்திய சமூக வரலாற்றையும் வரலாற்றறிஞர்களும், வரலாற்றாய்வாளர் எனக்கூறிக் கொள்வோரும் தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ப மனம் போன போக்கில் புனைந்து வருகின்றனர். தொல்பொருள் தடயங்களுக்கு, தொல்லியல் அறிஞர்கள் கூறும் விளக்கங்களை இவர்கள் முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு அமைந்த தொல்லியல் அறிஞர்களின் விளக்கங்களை மட்டுமே, பெரும்பாலும் இவ்வரலாற்றறிஞர்கள் கணக்கில் கொள்கின்றனர். இத்தகைய போக்கினை தமிழக (தென் இந்திய) வரலாற்றாய்வாளர்களிடையே அதிக அளவில் காணமுடிகின்றது. இதன் விளைவாக, பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்ச் சமூக வரலாறு பலபுதிர்களை உள்ளடக்கியதாக உள்ளது. தொல்லியல் தடயங்கள் கூறும் செய்திகளை முமுமையாகக் கணக்கிலெடுத்துக்கொண்டு விறுப்பு, வெறுப்பற்ற நிலையில் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுத முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பண்பாட்டு மரனுடவியலில் முற்றிலும் புதிய கோட்பாடு ஒன்று இங்கு முன்வைக்கப்பட உள்ளது. எனவே சற்று விரிவாக எழுதவேண்டிய தேவையைக் கருதி இதனை ஒரு தொடராக எழுத திண்ணை இணையதள இதழ் ஆசிரியரும், வாசகர்களும் அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

1.1. தமிழ்மொழி தோன்றிய பொமுதே செம்மொழியான விந்தை:

கி.மு.300-கி.பி.200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சங்ககால பாடல்கள், இலக்கிய, இலக்கண வளம் நிறைந்ததாக காணப்படுகின்றன. இக்காலக் கட்டத்தில் தமிழ் எழுத்திற்கும், சொல்லிற்கும் மிகத்தெளிவான இலக்கணம் வகுக்கப்பட்டுவிட்டதை தொல்காப்பியம் மூலம் அறியமுடிகின்றது. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் பேசப்பட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் நிகராக தமிழ்மொழி விளங்கியது என்பதை அறுதியிட்டு கூறமுடியும்.

மனிதகுல வரலாற்றில் உலோகப்பயன்பாடு தோன்றி அரசு நிலை கொண்ட பின்னரே மொழியைச் செம்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உலகில் முதன்முதலில் மருதநில வாழ்க்கைத் தோன்றிய சுமேரியாவில், ஊருக் நகரில் கி.மு.3400 வாக்கில் ஏறத்தாழ 700 குறியீடுகளைக் கொண்டிருந்த எழுத்துமுறை புழக்கத்தில் இருந்ததை அறியமுடிகின்றது. இக்காலக் கட்டத்தில், சுமேரியாவிலும் அதன் அண்டைப் பகுதிகளிலும் நிலையான பல நகர அரசுகள் வாழ்ந்தன. அந்நகர மாந்தர் செம்பு பயன்பாட்டுடன் கூடிய மருதநில வாழ்வை மேற்கொண்டிருந்தனர். கி.மு.2900ல் அதே சுமேரிய பகுதியில் நில புரபுத்துவ அரசுகள் பல தோன்றிய நிலையில், கூனிபார்ம் (ஆப்பு எழுத்து) என அழைக்கப்பட்ட எழுத்துமுறை தோன்றியது. அக்காலக் கட்டத்தின் மேற்காசியாவில் பல்வேறு அரசுகளில் வாழ்ந்த, பல்வேறு மொழிபேசிய மக்களும் கூனிபார்ம் எழுத்து முறையையே பயன்படுத்தினர். இவ்வெழுத்து முறையின் அடுத்தக் கட்ட வளர்ச்சியான நவீன காலத்தில் நாம் பயன்படுத்தும் நெடுக்கணக்கு (alphabet) எழுத்துமுறை, பாலஸ்தீனப் பகுதியில் அமைந்திருந்த கானன் தேசத்தில் கி.மு. / 600 வாக்கில் தோன்றியது. மொழி வளர்ச்சியில் பூர்வ குடிகளாக கருப்பர்கள் வாழ்ந்த மேற்காசியா இத்தகையை நீண்ட நெடிய வரலாற்றினைக் கொண்டிருந்த போதும் இக்காலக்கட்டத்தில் அங்கு பேசப்பட்ட மொழிகள் எதுவும் செம்மொழிகளாகப் பரிணமித்து விடவில்லை. அதன்பின் இப்பண்டைய மேற்காசிய (சுமேரிய) பண்பட்ட குடிகளுடன் உறவுகொண்டு அப்பண்பாடுகளை தமதாக சுவீகரித்துக்கொண்ட, வெள்ளையின குடிகளின் மொழிகளான ஹீப்ரூ, கிரேக்கம், லத்தீன், அரேபியம் போன்ற மொழிகள் மிகவும் பிற்காலத்தில் செம்மொழிகளா பரிணமிக்கும் வாய்ப்பைப் பெற்றன.

சமஸ்கிருதம் சார்ந்த மக்கள் இந்தியாவிற்குள் குடியேறும் முன் ஈரான் (பண்டைய எல்லாமைட்) பகுதியில் பல நூற்றாண்டுகள் வாழ நேர்ந்ததால், அம்மொழியும் மேற்காசிய மொழி வல்லுநர்களின் துணையுடன் செம்மொழியாக பரிணமித்துவிட்டது. மேற்காசியாவுடன் நேரடி தொடர்பில்லாத சீனமக்கள், ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகள் நிலையான அரசுகளுடன் கூடிய மருதநில வாழ்க்கையை மேற்கொண்ட பின்பே சீன மொழி செம்மொழியாக பரிணமித்தது.

இச்செம்மொழிகளுக்கெல்லாம் விதிவிலக்காக தமிழ்மொழி உள்ளது. தொன்றுதொட்டு தமிழகத்திலேயே வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்களாலேயே சங்ககால தமிழ்ச் சமூகம் தோற்றுவிக்கப்பட்டதாக தமிழக வரலாற்றாய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனால், தமிழகத்தில் வாழ்ந்த பூர்வகுடி மக்களோ, கி.மு.800க்கு முன் உலோக பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. தென்தமிழ்நாட்டில் வாழ்ந்த பூர்வகுடிமக்கள் கி.மு.4000லிருந்து சிறுகற்கால பண்பாட்டு மட்டத்திலும், பிறபகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடிமக்கள் கி.மு.1800லிருந்து புதிய கற்கால பண்பாட்டு மட்டத்திலும் வாழ்ந்து வந்ததை தொல்பொருள் தடயங்கள் மூலம் அறியமுடிகின்றது. இவ்விரு பண்பாட்டு குடிகளும் மிக எளிமையான பொருளியல் வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தனர். மொழி வளர்ச்சிக்கான எந்தவிதமான தடயங்களையும் இப்பண்பாடுகளில் காண முடியவில்லை. இத்தகைய எளிய மேய்ச்சல் வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்களிடம் மொழி வளர்ச்சி தோன்றியிருக்கக்கூடும் என எதிர்ப்பார்ப்பது அறிவியலுக்கு முற்றிலும் புறம்பானதாகும். அறிவுப்பூர்வமாக சிந்தித்தால், கி.மு.800க்கு முன் தமிழகம் முழுவதும் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் பல்வேறு மொழிகளையே பேசினர் என துணிந்து கூறலாம்.

தமிழகத்தில், கி.மு. 800-கி.மு.500 வாக்கில் சேர நாட்டிலும் (இன்றைய கேரளா), தென்பாண்டி நாட்டிலும் இரும்பு பயன்பாடு தோன்றியதை தொல்பொருள் தடயங்கள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வுலோக பயன்பாடு கி.மு.300 வாக்கில் தமிழகம் முழுவதும் பரவி, மருத நில வாழ்க்கையின் அடிப்படையில் அமைந்த அரசுருவாக்கத்திற்கு அடிகோலியது. இச்சூழல் தமிழகம் முழுவதும் வாழ்ந்து வந்த பூர்வகுடி, பழங்குடி மக்கள் ஒரே மொழியைப் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். மருத நில நாகரிகம் தோன்றிய சில நூற்றாண்டுகளுக்குள் இலக்கிய மொழியாக பரிணமித்துவிட்ட தமிழ், மிகவும் எளிமையான கொடுமொழியாகவே இருந்திருக்க முடியும். மாறாக, சமகாலத்திய செம்மொழிகள் அனைத்தையும் விட ஒரு படி மேலாகவே தமிழ்மொழி செவ்வியல் தன்மையை அடைந்திருந்ததை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. மிக நீண்ட கால மருதநில வாழ்க்கையை மேற்கொண்டு மொழிவளர்ச்சியை படிப்படியாக தோற்றுவித்திருந்த மக்களின் மொழிகளான சுமேரியன், எல்லாமைட் போன்ற மொழிகள் கூட செவ்வியல் தன்மையை அடைந்திருக்கவில்லை. ஆனால், திடீரென நாகரிக மக்களாக மாறிய தமிழரின் மொழி சிறப்பான செவ்வியல் தன்மையுடன் விளங்கியது மிகப்பெரும் புதிரேயாகும்.

மொழியியலில் மட்டுமல்லாமல், சங்க கால தமிழர், தொழில்நுட்பம், வணிகம், போக்குவரத்து, விவசாயம், போர்முறை அறநெறி, போன்ற பல்வேறு துறைகளிலும் சமகாலத்திய வளர்ந்த சமூகங்களுக்கு இணையாக வளர்ந்திருந்ததை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

இப்புதிரை விடுவிக்கும் வகையில் தமிழக வரலாற்றாய்வாளர்களிடையே இருவகையான கருதுகோள்கள் நிலவுகின்றன.

1.2 ஆரிய மாயை (அல்லது) ஐரோப்பிய மாயை

தமிழ் மொழி தோன்றிய பொழுதே செம்மொழியான புதிரை விடுவிக்கும் வகையில் 'ஆரியமயமாதல்' என்ற கருதுகோள் முன்வைக்கப்படுகின்றது. தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் வட இந்தியாவிலிருந்து குடியேறிய ஆரியராகிய பிராமணரால் வளர்த்தெடுக்கப்பட்டவை என்பது இக்கருதுகோளின் சாராம்சமாகும். இக்கருதுகோள், பிறப்பிலேயே தமிழ்மொழி செம்மொழியான புதிரை எளிதில் நீக்கிவிடுகின்றது. இக்கோட்பாட்டை எதிர்ப்போர் இதனை ஆரியமாயை எனவும் கூறுவர்.

கி.மு.600 வாக்கில் வடஇந்தியாவிலிருந்தது தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய பிராமணர்கள் தமிழ் அரசர்களை கத்தியின்றி, இரத்தமின்றி தங்களின் பண்பாட்டு மேலாண்மையினால் வென்றனர் என்பது இவர்களின் கருத்தாகும். இதற்கு ஆதரவாக புராணங்கள் கூறும் அகத்தியனின் தென்னகக் குடியேற்றம் தொடர்பான கதைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். வடஇந்திய மார்க்ஸிய வரலாற்றறிஞர் டி.டி.கோசாம்பியின் கீழ்க்கண்ட குறிப்புகள் ஆரிய மாயையின் கருத்தோட்டத்தைப் புரிந்து கொள்ள உதவும்.

" வரலாற்றைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு தெற்கிலுள்ள இராஜவம்சப்ப்ட்டியல் இன்பமான பொழுதுபோக்கு இக்ஷவாகு, பல்லவர், பாணர், கடம்பர், சேதியர், கலச்சூரி, சாளுக்கியர், சோழர், பாண்டியர், சேரர் மற்றும் வேறு பல மன்னர்கள் கொண்ட பட்டியல் கவர்ச்சியாக இருந்தாலும் பொதுவாக அர்த்தமற்றது. இடைக்கால இந்திய வரலாற்றைப் பற்றிய புத்தகங்களில் இந்த விவரங்களைப் படித்துக்கொள்ளலாம். ஆனால் இப்புத்தகங்கள், பொதுவாக இம்மன்னர்களால் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டத் தவறிவிட்டன. உயர்ந்த பிராமணப்பண்பாடு, பழங்குடி மக்கள் மீது திணிக்கப்பட்டது, அல்லது அவர்களால் சுவீகரித்துக்கொள்ளப்பட்டது. அதே சமயத்தில் பரிமாற்ற உணர்வின் அடிப்படையில், பிராமணர்கள் பூர்வகாலப் பழங்குடி மரபுக் கூறுகளை ஏற்றுக்கொண்டனர்". (டி.டி.கோசாம்பி: பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாகரீகமும் பற்றிய வரலாறு, முதற்பதிப்பு பிப் - 1989; பக் 349)

சங்ககால வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்க்குடிகளை, கோசாம்பி போன்ற ஆய்வாளர்கள் பழங்குடிகளாக்கி மகிழ்வது தொல்பொருள் தடயங்களுக்கு பெரிதும் முரண்படவில்லைதான். எனினும் தமிழ்வேந்தர் குடியினர் உள்ளிட்ட தென்னக அரசர்களின் வம்சப் பட்டியலை கேலிக்குள்ளாக்கி பேசுவது ஏற்புடையதாகத் தோன்றவில்லை. தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டுடன் கூடிய மருதநில வாழ்க்கை கி.மு.500லேயே தோன்றியிருந்ததற்கான தொல்பொருள் தடயங்கள் நூற்றுக்கணக்கான இடங்களில் 75 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருந்த நிலையில், பண்டைய தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய கோசாம்பியின் கருத்து மிகப்பெரிய கேலித் கூத்தாகும்.

புராதன இந்திய சரித்திர அறிமுகம் என்ற நூலில் மோரியர் பற்றிய தமிழ் இலக்கியச் சான்றுகள் குறித்த தனது கருத்தை கோசாம்பி வெளியிட்டுள்ளார்.

"மோரியர் காலத்தில் தமிழ் இலக்கியம் வளர்ச்சியடைந்திருந்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. மோரியர் காலத்தில் தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகம் நிலவியிருந்தது. எழுத்தும் இலக்கியமும் தோன்றவில்லை. இக்கருத்தை நான் மாற்றிக்கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை." என, மேற்கண்ட நூலில் கோசாம்பி குறிப்பிடுகின்றார்

மோரியர் காலமாகிய கி.மு.300ல், தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகமே நிலவியது எனக்கூறும் கோசாம்பியின் கீழ்கண்ட குறிப்புகள் அவரது உள்ளக்கிடக்கையை மேலும் தெளிவாக்குகின்றது.

"மொழி விவசாயம் ஆகியவற்றின் வளர்ச்சிக்குரிய ஊக்கம் வடக்கிலிருந்து பெரிய அளவுக்கு கி.மு.6ம் நூற்றாண்டில் தெற்கே வந்தடைந்தன." (டி.டி.கோசாம்பி: பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாககீகமும் பற்றிய வரலாறு, பக் - 202)

"விந்திய மலைக்குத் தெற்கே ஊடுருவிய ஆரியக் குடியேற்றத்திற்கும், அகத்திய கோத்திரத்திற்கும் சில தொடர்புகள் உண்டு. தெற்கிலுள்ள பெருங்கற்காலத்துடன் அத்தொடர்புகளை உறுதி செய்யலாமென்ற ஆர்வம் எழுந்தாலும் அதன் அடிப்படை இன்றளவும் தெய்வீக கற்பனை வடிவிலேயே உள்ளன." (டி,டி.கோசாம்பி: பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாகரீகமும் பற்றிய வரலாறு, பக் - 164)

கி.மு.600ல் வடக்கிலிருந்து தமிழகத்திற்குள் குடியேறிய ஆரியப்பார்ப்பனர், பழங்குடிகளாக வாழ்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு மொழியையும், விவசாயத்தையும், கற்றுக்கொடுத்தனர் என்பது கோசாம்பியின் கொள்கையாகும். மோரியர் காலமாகிய கி.மு.300 வரை தமிழகத்தில் புதியகற்கால நாகரிகமே நிலவியது என்றும், இக்கருத்தை தான் மாற்றிக் கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கோசாம்பி அடித்துக் கூறுகின்றார். எனவே கி.மு.600லேயே தமிழகத்திற்குள் குடியேறிவிட்டதாக் கருதப்படும் ஆரியரிஷி கோத்திரத்தினரும், புதியகற்கால பண்பாட்டு மட்டத்திலேயே தமிழகத்திற்குள் குடியேறினர் என்றுதான் கோசாம்பி கருதியிருக்க வேண்டும்.

புதியகற்கால பண்பாட்டு மட்டத்தில் வாழ்ந்த கருப்பரிடம் மொழியும் பண்பாடும் வளர்ந்திருக்கவில்லை என்றும், அதே பண்பாட்டு மட்டத்தில் தமிழகத்திற்குள் குடியேடிறிய ஆரிய கோத்திரத்தினர் வளர்ந்த பிராமணப் பண்பாட்டைக் கொண்டிருந்தனர் என்றும் மனம் போன போக்கில் டி.டி.கோசாம்பி போன்ற சிறந்த வரலாற்றறிஞர் எழுதுவது வியப்பாக உள்ளது. அகத்தியனின் குடியேற்றத்துடன் டி.டி.கோசாம்பியால் சரியாகவே தொடர்புபடுத்தப்படும் பெருங்கற்கல்லறை பண்பாடு நன்கு வளர்ந்த நிலையிலிருந்த இருப்பு பயன்பாட்டு மருதநில விவசாயப் பண்டபாடாகும். கி.மு.600ல் தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய கோத்திரத்தினர் இரும்பு பயன்பாட்டுடன் கூடிய மருதநில விவசாய நாகரிகத்தை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுடைய வளர்ச்சியடையாத கொடுமொழியை செம்மைப்படுத்தி 'செந்தமிழை' தோற்றுவித்தனர் என்று கூறினால் கூட ஏற்புடையதாக இருக்கும்.

அவ்வாறு கூறினால், கி.மு.600லேயே செம்மைப்படுத்தப்பட்டுவிட்ட தமிழ் மொழியில் மோரியர் காலமாகிய கி.மு.300ல் (சங்க காலம்) இலக்கியங்கள் தோன்றியிருக்க வாய்ப்பு உண்டாகி, தமிழக அரசவம்ச பட்டியலுக்கும் அர்த்தமுண்டாகிடும் என்பதால் முன்னுக்குப்பின் முரணாக கோசாம்பியார் குறிப்பிடுகின்றார் போலும். ஆரிய ஆர்வலர்கள் கருதுவது போல், வட இந்தியாவிலிருந்து தர்ப்பைப் புல்லை ஆயுதமாகக் கொண்ட பிராமணர் (அகத்திய கோத்திரத்தினர்) ஒருபோதும் தனிக்கூட்டமாக தென்னகம் குடியேறிவிடவில்லை. தமிழகவேந்தர் வேளிர் குடியுடன் கூடவே பிராமணர்களின் தென்னக் குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசகுலத்தவரின் பூர்வீகம், வடஇந்தியா என்பதற்கு புறநானூற்று பாடல் ஒன்று சான்று பகர்கின்றது.

"நீயே வடபால் முனிவன் தடவினுட் தோன்றி

செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை

உவரா வீகைத் துவரை யாண்டு

நாற்பத் தொன்பது வழிமுறை வந்த

வேளிருள் வேளே விறற் போரண்ணல்." (புறம் : 201) இப்புறநானூற்றுப் பாடலில், தமிழக வேளிர் குடியினர் சங்ககாலத்திற்கு 49 தலைமுறைக்கு முன் வட இந்தியாவிலுள்ள துவாரகையை ஆண்ட அரசகுலத்தவரின் வழிவந்தவர்கள் என்ற செய்தி பதிவாகியுள்ளது. துவாரகை யதுகுல மன்னன், கண்ணனுடன் தொடர்புடையது குறிப்பிடத்தக்கது.

கி.மு.600லிருந்து தமிழகம் முழுவதும் கிடைக்கக்கூடிய பெருங்கற்கல்லறை பண்பாடு குஜராத் பகுதியிலிருந்து தமிழகத்திற்குள் பரவியிருக்கலாம் என்ற தொல்லியல் அறிஞர்களின் கருத்தும் புறநானூற்றுப் பாடலின் செய்திக்கு உயிரூட்டுவதாக உள்ளது. தொல்லியல் அறிஞர் எஸ்.இராமச்சந்திரன், சங்க கால உற்பத்திக் கருவிகள் என்ற கட்டுரையில், தமிழக பெருங்கற்கல்லறைகளில் கிடைக்கக்கூடிய தொல்பொருட்கள் பெரும்பாலும், இரும்பினால் தயாரிக்கப்பட்ட போர் ஆயுதங்களாகவே உள்ளன எனக் குறிப்பிடுகின்றார். இச்செய்தியிலிருந்து, தமிழக பெருங்கற்கல்லறை பண்பாட்டினை போர்குடிகளான தமிழக அரசர்குடியினரின் குடியேற்றத்துடன் தொடர்புப்படுத்த முடிகின்றதேயன்றி, டி.டி.கோசாம்பி கருதுவதுபோல் அகத்திய (பிராமண) கோத்திரத்தவரின் குடியேற்றத்துடன் தொடர்புபடுத்த முடியவில்லை. அவ்வாறாயின் தமிழகத்தில் வழங்கப்படும் அகத்தியன் தொடர்பான கதைகளுக்கு பொருள் ஏதும் இல்லை எனக்கூறலாமா? இச்சிக்கலுக்கு நக்கினார்க்கினியரின் உரை ஒன்று தீர்வு நல்கின்றது.

" துவராபதி போந்து நிலங்கடந்த

நெடுமுடியண்ணல் வழிக் கண்ணரசர்

பதினெண்மாயும், பதினெண்குடி

வேளிருள்ளிட் டாரையு மருவா

ளரையுங் கொண்டு போந்து காடு

கெடுத்து நாடாக்கி". (தொல்: எழுத்ததிகாரம்: பாயிரம்: நச் உரை)

இதன் பொருளாவது, சிவபெருமானின் விருப்பத்திற் கிணங்க தென்திசை நோக்கி பயணித்த அகத்தியன், வழியில் துவாரகை சென்று, மாவலியிடமிருந்து பூமியை அபகரிக்க, நிலம் அளந்த நெடுமுடியண்ணலாகிய திருமாலின் வழி வந்த வேந்தர் குடியினரையும், பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும்இ அருவாளரையும் தன்னுடைன் அழைத்துக் கொண்டு, தமிழகம் குடியேறி, பின் அவர்களின் உதவியுடன் காடு கெடுத்து நாடாக்கினான் என்பதாகும். அதாவது அகத்திய முனிவரின் தலைமையிலேயே தமிழக அரசகுலத்தவர் வட இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்துள்ளதாக நச்சினார்க்கினியர் உரைக்கின்றார். வடக்கிலிருந்து குடியேறிய பிராமண கோத்திரத்தினர், சுத்தியின்றி, இரத்தமின்றி தங்கள் பண்பாட்டு மேலாண்மையினாலேயே தனிழக பூர்வகுடி மக்களை வென்றெடுத்தனர் என்ற ஆரிய ஆர்வலர்களின் கருதுகோள், பேனை பெருமாளாக்கிக் காட்டும் வித்தையே ஆகும். சிறந்த போர் குடிகளான தமிழக வேந்தர் குடியினர் தங்களுடன் குடிபெயர்ந்த வேளிர் மற்றும் அருவாளர் ஆகிய போர் குடிகளின் துணை கொண்டு, தமிழகத்தில் ஏற்கனவே வாழ்ந்து வந்த பழங்குடிமக்களை தங்களின் வாளின் வலிமையால் வணக்கியதையே சங்க இலக்கிய குறிப்புகளும், தொல் பொருள் தடயங்களும் நிறுவுவதாக உள்ளன. இப்போர் குடிகளுக்கு குரு நிலையில் தலைமையேற்று வழி நடத்தியவர் அகத்திய கோத்திரத்தினர் ஆவர். எனவே, தமிழக அரசர் குடியினரையும் பிராமண கோத்திரத்தினரையும் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரித்துப் பார்ப்பதற்கு தமிழகச் சூழலில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உணரவேண்டும்.

எனவே, பிராமணமயமாதல் அல்லது ஆரியமயமாதல் என்ற ஆரிய ஆர்வலர்களின் கருகோள் அவர்களது சொந்த விருப்பத்திற்கேற்ப, பல ஆதாரங்களைத் திரித்துக் கூறியும், திரிக்கமுடியாத ஆதாரங்களை மறைத்தும் கட்டப்பட்ட ஒரு மாயையாகும். மனித இனங்களில் ஐரோப்பிய இனங்களே உயர்ந்தவை, ஐரோப்பிய இனங்களில் ஆரிய இனமே உயர்ந்தது. ஆரியரில் பிராமணரே உயர்ந்தவர் என்ற கருத்துதான் ஆரியமாயையின் சாராம்சமாகும்.

டி.டி. கோசாம்பி கருதுவது போல், மொழி வளர்ச்சியில் சிறிதும் முன்னேற்றம் பெற்றிராத புதியகற்கால பண்பாட்டு குடிகள் வாழ்ந்த தமிழகத்தில், ஆரியமயமாதல் நடைபெற்றிருக்குமேயானால், தமிழ்மொழி அரசியல் மற்றும் சமூகவியல் தொடர்பான பல சொற்களை சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய சொற்கள் தமிழுக்கே உரியனவாக, நாடு, கூற்றம், ஊர், சீறூர், பாடி, பட்டணம், பாக்கம், குறும்பு, வேந்தன், நாடன், ஊரன், மகிழ்னன், வேளிர், வெற்பன், சிலம்பன், சேர்ப்பன், புலம்பன், கிழவன், சான்றோன், ஏனாதி, எட்டி, சீறூர் மன்னன், பெருமகன், பெருங்குடி, சிறுகுடி, நாள்மகிழ் இருக்கை, சான்றோர் அவையம், ஐம்பெருங்குழு, என்பேராயம், நெடுமுடி, குறுமுடி, செங்கோல், அரசுகட்டில், அரியணை, வெண்கொற்றக்குடை, கொடி, முத்திரை, முரசு, கடிமரம், தேர், கஞ்சுகமாக்கள், துhதர், ஒற்றர், திருமுகக்கணக்கு, உழைச்சுற்றாளர், அகவர், படைச்சிறுக்கன், கட்டியங்காரன், உழையர், பெருங்கணி என்று ஒரு பெரும் பட்டியலையே கொடுக்கலாம். சமயத்துறையிலும் தேவையான அளவிற்கு தனித்தமிழ் சொற்கள் நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்மொழி சமஸ்கிருத சொற்கள் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதைப் போல், சமஸ்கிருதமும் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதை காண முடிகின்றது. எனவே, சில சொல் பரிமாற்றகளைக் கொண்டு சமஸ்கிருதம் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்தியது என்றோ அல்லது தமிழ்மொழி சமஸ்கிருதம் மீத ஆதிக்கம் செலுத்தியது என்றோ கூறுவது அறிவுக்கு ஒவ்வாத ஒன்ற.

ஆரியமாயை, பண்டைய உலக வரலாற்றை தங்கள் விருப்பத்திற்கேற்ப திரித்து சித்தரித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய மாயையின் இந்திய வடிவமாகும். ஐரோப்பிய மாயையினரால் தோற்றுவிக்கப்பட்ட குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய சித்திரத்தைக் கொண்டு ஐரோப்பியரே உலகின் முதல் ஆணாதிக்க சமூகத்தினராகப் பரிணமித்தவர் என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இந்திய சமூகத்தில் இந்தோ ஆரியரே முதல் ஆண்வழி சமூகத்தவர் என ஆரிய ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். கி.மு. 4000 ஆண்டளவில் ஆரியர் வாழ்ந்ததாகக் கருதப்படும் காகேசியப்பரப்பில், நால்சிக் என்ற இடத்திலுள்ள புதிய கற்காலக் கல்லறைகளில் ஆண்களை வலது புறமும் பெண்களை இடது புறமுமாகச் சாய்த்துப் புதைத்திருந்ததை இதற்குச் சான்றாகக் காட்டுகின்றனர். இது ஏற்கக்கூடியதுதான். ஆனால் சமகாலத்தில் மேற்காசியாவில் வாழ்ந்துவந்த கருப்பின மக்கள் வேட்டை நிலையில் தோன்றிருந்த ஆண்வழி சமூக அமைப்பைக் கடந்து உலோகப் பயன்பாட்டையும், நீர்ப்பாசனத்துடன் கூடிய விவசாயத்தினையும் அறிந்து மிக வளர்ந்த பண்பாட்டு நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர். இது மட்டுமின்றி மேற்காசியாவிலிருந்து பரவிய பண்பாட்டின் மூலமே ஆரியர் உட்பட்ட ஐரோப்பியரிடம் புதிய கற்காலப் பண்பாடு தோன்றியது என்பதை தொல்பொருள் தடயங்கள் தெளிவாக நிறுவுகின்றன.

மேற்காசிய கருப்பின மக்கள் புதிய கற்கால நாகரிகத்தை ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லும்வரையிலும் ஆரியர் தாய் தலைமையிலான இரத்த உறவுக் குடும்ப அமைப்பு கூட்டங்களாகவே வாழ்ந்துள்ளனர் எனத் தெரிகிறது. இதற்கு கிரேக்கப் புராணங்கள் சான்றாக உள்ளன. கிரேக்க புராணங்கள்படி முதலில் சூனியத்திலிருந்து கேயா என்ற பூமித் தாயும் டார்டாரஸ் (Tartarus) என்ற பாதாள உலகக் கடவுளும் ஈராஸ் (Eros) என்ற காதல் தெய்வமும் தோன்றினர். பூமித்தாய் கேயா ஆண் துணையின்றி கன்னித்தாயாகி யுரேனஸ் (Uranus) என்ற ஆகாயக் கடவுளையும் அவுரியா என்ற மலை தெய்வத்தையும் பாண்டஸ் (Pontus) என்ற கடல் தெய்வதத்தையும் தோற்றுவித்தாள். பின் யுரேனஸைக் கணவனாக்கிக் கொண்ட கேயா, மூன்று ஒற்றைக் கண் அரக்கர்களையும் மூன்று 50 தலைகள் கொண்ட அரக்கர்களையும் பெற்றெடுத்தாள். பிள்ளைகளால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் எனக் கருதிய யுரேனஸ் அவர்களைப் பாதாள உலகிற்குள் தள்ளிவிடுகிறான். இச்செயல் கேயாவை வெறுப்படையச் செய்தது. இந்நிலையில் இவ்விருவருக்கும் டைட்டன் (Titan) என அழைக்கப்பட்ட அசுரர்கள் பிறந்தனர்.

கடைசி டைட்டனாகிய குரோனஸ் (Cronus) தனது தாயின் விருப்பப்படி தந்தை யுரேனஸைக் கொன்று கடவுளர்களின் தலைவனாகிறான். பின் குரோனஸ் தன் சகோதரி ரியா (Rhea) - வை மனைவியாக்கிக் கொள்கிறான். அதன் பின் குரோனசின் மகன் ஜீயஸ் (Zeus) தந்தையை வென்று மேலுலகத்தின் கடவுளாகிறான். ஜீயஸ் தனது சகோதரி ஹீரா (Hera)- னவ மணந்து வேறோர் கடவுளின் மனைவியாகிவிட்ட மற்றோர் சகோதரி டெமடரைக் (Demeter) காதலிக்கிறான் என்பதாகச் சொல்கிறது கிரேக்கப் புராணம்.

கிரேக்கப் புராணப்படி கேயா தனது மகன் யுரேனஸை கணவனாக்கிக் கொள்கிறாள். மேலும் சகோதர, சகோதரிகளுக்குள் மணவுறவிருப்பது மிக இயல்பாகக் காட்டப்பட்டுள்ளன. தந்தை சொந்த மகன்களை போட்டியாளனாகக் கருதி பாதாள உலகிற்கு அனுப்பிவிடுவதும் பிள்ளைகள் தந்தையைக் கொன்று பதவியைக் கைப்பற்றுவதும் கூறப்படுகின்றன. பிள்ளைகளைப் போட்டியாளராகக் கருதுகிற கடவுளர்களையோ அல்லது தந்தையைக் கொன்று பதவியை எடுத்துக் கொண்ட மகன்களையோ இந்துப் புராணங்களில் காணமுடியாது.

மேலும் சகோதர, சகோதரி மண உறவு இந்துப் புராணங்களுக்கு முற்றிலும் அன்னியமானது. மாறாக இந்துப் புராணங்கள் காட்டும் மணஉறவுகள் மாற்று சகோதர மண உறவை (Cross Cultural Marriage) அடிப்படையாகக் கொண்டுள்ளன. மாற்று சகோதர மணஉறவு வட இந்திய ஆரிய சமூகத்திற்கும் கூட அன்னியமானதாகும். கி.மு. 6-ஆம் நுhற்றாண்டைச் சேர்ந்த போதாயன தர்ம சூத்திரம் மாற்று சகோதர மண உறவு தென்னிந்தியருக்கே உரியது எனக்கூறுகிறது. இந்துப் புராண மரபுகள் திராவிடருக்கே குறிப்பாக தமிழருக்கே பொருந்தி வருவதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கில மொழி உறவுப் பெயர்களான பிரதர் - இன் - லா, சிஸ்டர் - இன் - லா, சன்- இன் - லா, டாட்டர் - இன் - லா போன்றவை இரத்த உறவுக் குடும்ப அமைப்பின் சாயலைக் கொண்டுள்ளன. ஐரோப்பியர், காட்டுமிராண்டி நிலையிலிருந்து மிகவும் பிற்காலத்திலேயே நாகரிகத்திற்குள் நுழைந்ததால்தான் இத்தகையப் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நீடித்திருக்கின்றன. வேறு சில பண்பாட்டு எச்சங்களும் கூட இதற்கு வலு சேர்க்கின்றன.

பெண்களின் கற்புநெறி என்பது ஆண்களின் தனிவுடைமையைப் பாதுகாக்கக் கூடிய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் மிகமுக்கியக் கூறாகும். கி.மு. 1750-இல் பாபிலோனிய அரசன் முராபி வகுத்த சட்டங்கள் முதல் மனு ஸ்மிருதி வரையிலும் உலகின் நிலப்பிரபுத்துவ சமூகச் சட்டங்கள் அனைத்தும் பெண்களின் கற்பு

நெறிக்கு மிக முக்கியமான இடத்தைக் கொடுத்துள்ளன. ஐரோப்பிய சமூகம், பெண்கள் கற்பு நெறியைப் பேணுவதற்காக கொடுமையான சட்டங்களை பழங்காலத்திலிருந்தே பெற்றிருந்த போதிலும் கூட கற்புநெறியைக் கடைப்பிடித்துக் காக்க முடியாமல் தடுமாறுவதை நாம் காண்கிறோம். அங்கு நட்புள்ள எந்த ஒரு ஆணும், பெண்ணும் பொது இடத்தில் கட்டிப்பிடிப்பதும் முத்தமிடுவதும் இயல்பானதாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. விவாகரத்தும், மறுமணமும் வெகு இயல்பானதாக அங்கு உள்ளன. விழாக்களில் ஆணும், பெண்ணும் சேர்ந்து ஆடுவதும் பாடுவதும் வரைமுறையற்ற நிலையில் மேட்டுக்குடியினரிடமும் நடைபெறுகிறது. இவ்வாறு இருபாலரும் சேர்ந்து ஆடுவதை தமிழகக் கிராமப்புறங்களில் கூட நாம் காணமுடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சங்க கால உண்டாட்டுகளில் கூட இருபாலரும் சேர்ந்து வரைமுறையின்றி கூத்தாடும் வழக்கம் இல்லை. ஐரோப்பியரின் இன்றைய நடனக்கலை காட்டுமிராண்டி நிலை இனக்குழு நடனங்களின் ஒரு வளர்ந்த வடிவமாகவே தெரிகின்றது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பின் வளர்ந்த வடிவத்தை தமிழ்ச் சமூகம் சங்க காலத்திலிருந்து கொண்டுள்ளது. கற்புநெறி, தமிழ்ச் சமூகத்தின் மனதளவிலேயே பதிவாகியுள்ள அளவு வேறெந்த சமூகத்திலும் இல்லை. கி.மு. 1500-ல் லேயே பாபிலோனியா, அக்காடியன், அசிரியா, ஹிட்டைட், காசைட், மிட்டானி போன்ற நிலப்பிரபுத்துவ அரசுகளை மேற்காசியாவில் தோற்றுவித்திருந்தும்கூட ஐரோப்பியரிடம் தமிழர் அளவுக்கு கற்புநெறி மனதிலே பதிந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு. 1500-க்கும் முன்பே, மிக நீண்ட காலமாக தந்தை வழிச் சமூகமாகவும் அதனடிப்படையில் தோன்றிய தனிவுடமைச் சமூகமாகவும் வாழ்ந்திருந்ததாலேயே பெண்களின் கற்புநெறி இவ்வளவு ஆழமாக தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றியுள்ளது எனக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

சங்க கால தமிழ் வேந்தர் குடியினரில் பாண்டியரும், சோழரும் இரண்டாயிரம் ஆண்டுகளாக சிறுபகுதியையேனும் ஆட்சி செய்து வந்ததற்குச் சான்றுகள் உள்ளன. சேரரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளனர். இந்நீண்ட கால வரலாற்றில் ஒரேயொரு பெண் அரசிகூட வேந்தர்கள் சார்பில் அரசுக் கட்டிலில் அமரவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சமூகம், ஆண்வழி சமூக அமைப்பில் நீண்ட காலம் வாழ்ந்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று எனலாம்.

ஆரிய (ஐரோப்பிய) மாயையினர், அம்மாயையிலிருந்து விடுபட்டு விவாதிக்கப்படும் விஷயங்களை சீர்துhக்கிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வளவு நீண்ட விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருள் குறித்து பண்பாட்டு மானுடவியலாளர் பரிசீலனை செய்வாராயின் அது பயனுடையதாக அமையும்.

ஆரிய மாயைக்கு எதிராக வளர்த்தெடுக்கப்பட்ட மற்றுமொரு மாயை, நீண்ட காலமாக தமிழ்ச் சமூக வரலாற்றை ஆட்டிப்படைத்து வருகின்றது. ஆரிய மாயையை விட மிக மோசமான அளவில் தமிழ்க் குடிகளின் வரலாற்றை குழி தோண்டி புதைத்து வரும் இம்மாயையை அடுத்துக் காண்போம்.

(கட்டுரை ஆசிரியர் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவன ஆய்வாளர்.)

brahaspathy@gmail.com

திண்ணையில் பிரகஸ்பதி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.