• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

narathar

ஈழத்தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்

Recommended Posts

மாயாவுக்கு மனந்திறந்த மடல்

(உந்த மோனைக்கு மட்டும் குறைச்சலில்லை. எல்லாம் கோட்டம் அமைச்சு தமிழ்வளர்த்த effect தானுங்கோ)

இங்கே பெரியாரும் ஈழத்தமிழரும் என்ற தலைப்பில் எந்தக் கருத்தும் இடம்பெறவில்லை. அப்பதிவில் மாயா எழுதிய ஒருவரிக்கான எதிர்வினையே இது.மாயா எழுதிய வரி.

//கம்பனுக்கு கோட்டம் அமைத்து தமிழ் வளர்ப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.//

இனி கொண்டோடியின்ர முறை.மாயா அண்ணை,எனக்கொரு ஆசை.உங்க இருக்கிற கம்பன் கழகத்தாரிட்ட ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை அறிஞ்சு வலைப்பதிவியளோ?

இப்ப சூடாப் போய்க்கொண்டிருக்கிற விசயம்தான். இராமர் பாலத்தை இடிக்கலாமா வேண்டாமா எண்டு ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை எழுதுங்கோ.

நம்பமாட்டியள்.இண்டைக்கு இல்லாட்டியும் எண்டைக்காவது ஒருநாள் 'இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது' எண்டு 'கம்பனுக்குக் கோட்டம் அமைத்துத் தமிழ் வளர்த்த இலங்கைத் தமிழர்களிடமிருந்து' (நல்ல வேளை, கவனமாத்தான் சொற்களைப் பாவிக்கிறியள். ஈழத்தமிழர் எண்டு பாவிக்காமல் விட்டியள் பாருங்கோ, அங்க நிக்கிறியள் நீங்கள்) ஒப்பாரியொண்டு வரும்.

இப்போதைக்கு உவங்கள் சேது சமுத்திரத் திட்டத்தை முடிக்கப் போறேல எண்டபடியா உது கட்டாயம் நடக்கத்தான் போகுது.உங்கட அரசியல் சார்பை வைச்சே கம்பன் கழகத்தைக் கேள்விக்குள்ளாக்க முடியும்.உவையளை ஏன் யாழ்ப்பாணத்தைவிட்டு ஓடச்சொல்லிச் சொல்ல வேணும்?(சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முன்பு)

புலிகள் நடத்திய "மானுடத்தின் தமிழ்க்கூடல்" கருத்தரங்குக்கு இல்லாத தமிழ் அக்கறையா? பேர் ஊர் அறியாத யார் யாரையோவெல்லாம் எங்கெங்கோ இருந்து அழைத்து - வருவதற்குச் சாட்டுச் சொன்ன நாலைந்து பேரைக்கூட "அதென்ன மாட்டன் எண்டுறது? வாவெண்டா வரவேண்டியது தானே?" எண்டு செல்லமாக அதட்டி வரவழைத்து நடத்தப்பட்டஇக்கருத்தரங்கில

Share this post


Link to post
Share on other sites

இராமாயண இதிகாசம் - ஆரிய, திராவிடப் போராட்டத்தின் வெளிப்பாடு என்று, தந்தை பெரியார் கூறி வந்தார். அதே கருத்தை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், ஈழத் தமிழர்களிடையே பரப்பி வருகிறது.

ராமசாமி இயக்கம் இராமயணத்தைப் பொய் என்றல்லவா கூறி வருகின்றது. அது சொல்ல விரும்புவது கற்பனையானது என்ற அர்த்தத்தை.

ஆனால் தேசியத் தலைவர் பின்வருமாறு சொல்லுகின்ற கருத்தில், தேசியத் தலைவர் இராமயணத்தைப் கற்பனை என்று சொன்னதாக இங்கே எவ்வரி உண்டு. ஏன் பகுத்தறிவில் விளக்கம் குறைவோ?

இதே கதிதான் இலங்கை மண்ணை ஆதியில் ஆண்ட தமிழ் மன்னனான இராவணனுக்கும் நிகழ்ந்தது. அன்றைய போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ் மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரிபில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டது.தலைகீழாகத் திரித்துவிடப்பட்ட இந்த வரலாற்றின் தாக்கம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் முடிவுறவில்லை

இராவணன் என்பவன் தமிழ் மன்னர் என்பதைத் தேசியத் தலைவர் ஏற்றுக் கொள்கின்றார். அத்தமிழ் மன்னனை ஒருவன் கொன்றுள்ளான் என்பதையிட்டுத் தேசியத் தலைவர் வருத்தம் கொள்வதில் தவறு ஏதும் இல்லை.

சிலரின் கருத்துப்படி சீதை என்பது இராவணனின் மகள் என்பதும், மகளால் தான் தனக்கு மரணம் வரும் என்பதைச் சோதிடத்தால் அறிந்த இராவணன், அவரை மிதிலையில் விட்ட வந்திருக்கலாம் என்பதும், மகள் என்பதால் தான் அவளைத் தூக்கிச் செல்லும்போது தொடாமல் கொண்டு சென்றான் என்பதும், கடைசியில் சோதிடத்தின்படி, மகளாள் தான் அவன் சாகின்றான் என்பதை திரிபடையச் செய்திருக்கலாம். முன்பு நடந்த வைணவ - சைவப் போரினால் ஏற்பட்ட ஒரு விளைவாகத் தான் இராமயணம் சைவர்களைத் தாழ்த்த முனைந்திருக்கலாம்.

பொன். கணேசமூர்த்தி சொல்ல வந்தது அவ்வகையே தவிர, திராவிடக் கும்பல்கள் போல இராமயணம் பொய், கற்பனை என்று எடுத்த எடுப்பில் பகுத்தறியாமல் உளறவில்லை.

தேசியத் தலைவர் இராமயத்தைச் சொல்லுகின்ற விதத்துக்கும், திராவிடக் கும்பல்கள் சொல்லுகின்ற விதத்துக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.

முன்பு ஒரு தடவை சொன்னது போல சந்திரிக்க தீர்வுத் திட்டம் கொண்டு வந்தபோது ஐதேகவும் எதிர்த்தது, புலிகளும் எதிர்த்தார்கள். ஐதேக பாராளுமன்றத்தில் கிழித்து எறிந்தது என்பது தமிழர்களுக்கு தீர்வு வழங்கக் கூடாது என்று. ஆனால் புலிகள் எதிர்த்தது, அத்தீர்வுத் திட்டத்தில் தமிழர்களுக்கு என ஒரு வித தீர்வும் கிடைக்கவில்லை என்பதற்காக.

எதிர்த்தார்கள் என்பதற்காக ராமசாமியையும், புலிகளையும் ஒப்பிடுவது இயலாமையின் வெளிப்பாடு தான்.

யாழ்பாணத்தில் கமபன் கழகத்தினரோடு சில முறுகல் வந்தமைக்கு அதுவும் காரணம். கம்பன் கழகம், இராவணன் என்ற இராமயணத்தின் ஒரு கதாபாத்திரத்தை தாழ்த்த முனைகின்றது என்ற மனஸ்தாபம் இருந்தது. ஏனென்றால் புலிகள் நடந்த சம்பவத்தை உண்மை என ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் வரலாறு தான் திரிக்கப்பட்டது என்கின்றார்கள். ( இச்சமயத்தில் இராமர் பாலம் பற்றிய பதிலும் வரலாம்) ஆனால் அதற்காக கம்பன் கழகத்தை வெளியேற்றவில்லை. அது இராணுவம் ஆக்கிரமிக்கும் வரை செயற்பட்டுத் தான் வந்தது.

Share this post


Link to post
Share on other sites

இராமயணம் கற்பனையா?

இராமயணம் வரலாறா?

உங்கள் கருத்தென்ன?

Share this post


Link to post
Share on other sites

கன்னத்தில் முத்தமிட்டல் என்ற படம் கற்பனையா அல்லது வரலாறா என்று இன்னும் சில ஆயிரம் வருடங்களிற்கு பிறகு கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?

Share this post


Link to post
Share on other sites

கன்னத்தில் முத்தமிட்டல் என்ற படம் கற்பனையா அல்லது வரலாறா என்று இன்னும் சில ஆயிரம் வருடங்களிற்கு பிறகு கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?

கட்டப்பொம்மன் வரலாறு உண்மையா பொய்யா என ஆயிரம் வருடத்தின் பின் கேட்டால் என்ன நடக்கும். சிவாஜி போல இத்தனை வசனம் பேசியிருப்பாரோ என்று அப்போதும் அடிபடுவார்கள்

Share this post


Link to post
Share on other sites

இராமயணம் கற்பனையா?

இராமயணம் வரலாறா?

உங்கள் கருத்தென்ன?

கம்ப ராமாயணம் ஒரு இலக்கியம். என்ற அடிப்படையில் தான் நோக்கப்பட வேண்டும். இந்த இணைப்பில் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் கம்பர் ராமாயணம் தொடர்பான இலக்கியப் பார்வை எந்த வகையில் எழுகிறது என்று பார்த்துவிட்டு.. கம்பராமாயணம்.. கற்பனை இலக்கியமா... அல்லது கால இலக்கியமா என்பதை தேடல் செய்யுங்கள்.

இலக்கியத்தை இலக்கியப் பண்புகளோடு நோக்க வேண்டும். மாறாக.. அரசியல்.. மத சாயமிட்டு அதை நோக்குவது தவறு என்பதை கைலாசபதி அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry349501

தலைவர் ஒரு இலக்கிய விமர்சகர் அல்ல. அவர் இலக்கியம் தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டார் அந்தளவும் தான். அது இலக்கிய விமர்சனமாக.. இராமாயணத்தை எதிர்த்தல் வட இந்திய ( அதை இங்கு ஆரிய எதிர்ப்பாக்கிவிட்டுள்ளனர்) எதிர்ப்பாக.. சித்தரிக்க முனைவதும்.. அதற்கும் ஈவெ ராமசாமியின் நிலைப்பாட்டுக்கு முடிச்சுப் போடுவதும்.. இலக்கியத் திறனாய்வுப் பார்வையன்று. இலக்கியத்தை இலக்கியமாக நோக்கும் திறனற்ற நிலைதான் இதற்குக் காரணம்.

Share this post


Link to post
Share on other sites

இதன்ன நெடுங்காலபோவான் கேள்வி! முட்டைக்குள் முடி புடுங்குவது தான் எம் பகுத்தறிவு.

பகுத்தறிவு, பகுத்தறிவு என்று 100 வருடமாகக் கதைக்கின்றார்களே, குறைந்த பட்சம் விஞ்ஞானத்தில் ஏதாவது செய்தார்களா என்று கேட்டால் அது பூச்சியமே!

இதில் கடவுளை நம்பினபடியால் தான் தமிழன் சாதிக்கவில்லை என நொண்டிச் சாட்டு வேறை. கடவுளை நம்பாதர்கள் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள்?

Share this post


Link to post
Share on other sites

இலக்கியத்தை அரசியலாகப் பார்க்காதீர்கள்!

விளையாட்டை அரசியலாகப் பார்க்காதீர்கள்!

கலைகளை அரசியலாகப் பார்க்காதீர்கள்!! :wub:

எல்லாவற்றுக்கு பின்னாலும் நுட்பமான அரசியல் ஒளிந்துள்ளது.

இராமயணம் என்பது இலக்கியம் என்பதற்கும் அப்பால் அரசியலாக

ஆக்கப்பட்டதனால் தான் அதனை அரசியலாக நோக்கும் நிலை!

இராமயணத்தை அரசியலாக்கித்தான்

இன்றைய இராமர் பால சர்ச்சையும்

அன்றைய இராமர் கோயில் சர்ச்சையும்.

எல்லாவற்றுக்குள்ளும் அரசியல் நுட்பமாக

நுழைக்கப்பட்டிருக்கிறது.

புகுத்தப்பட்டிருக்கிறது.

திணிக்கப்பட்டிருக்கிறது. :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

இலக்கியத்தை அரசியலாகப் பார்க்காதீர்கள்!

விளையாட்டை அரசியலாகப் பார்க்காதீர்கள்!

கலைகளை அரசியலாகப் பார்க்காதீர்கள்!! :rolleyes:

எல்லாவற்றுக்கு பின்னாலும் நுட்பமான அரசியல் ஒளிந்துள்ளது.

இராமயணம் என்பது இலக்கியம் என்பதற்கும் அப்பால் அரசியலாக

ஆக்கப்பட்டதனால் தான் அதனை அரசியலாக நோக்கும் நிலை!

இராமயணத்தை அரசியலாக்கித்தான்

இன்றைய இராமர் பால சர்ச்சையும்

அன்றைய இராமர் கோயில் சர்ச்சையும்.

எல்லாவற்றுக்குள்ளும் அரசியல் நுட்பமாக

நுழைக்கப்பட்டிருக்கிறது.

புகுத்தப்பட்டிருக்கிறது.

திணிக்கப்பட்டிருக்கிறது. :rolleyes:

இதைத்தான் யாழிலும் தொடர்கிறார்களே. யாராவது.. கம்பராமாயணத்தின் இலக்கியத்தன்மை குறித்து கருத்துரைத்திருக்கிறீர்களா..??!

கம்பன் கழகம்.. கம்பன் கோட்டம்.. என்பவையெல்லாம் இலக்கிய அமைப்புகள். அரசியல் அமைப்புக்கள் அல்ல. இதை முதலில் புரிந்து கொண்டு.. பின்னர் முடிச்சுப் போடும் கைங்கரியத்தை அரங்கேற்றுங்கள்.

கம்பன்.. அரசியல்வாதியல்ல. கவிஞன். அவனிடம் இலக்கிய நயம் தான் மிகுந்திருந்திருக்கும். ஆனால் அவனின் பின்பு உருவானவர்கள் இன்று வரை.. ஆரிய - திராவிட மாயைக் கோட்பாடுகளை தூக்கிக் கொண்டு வட இந்திய தென்னிந்திய எதிர்ப்பை பிரிவினையை ஆழப்படுத்தி.. அரசியல் மற்றும் சமூக இலாபம் தேட திணித்தவைதான்.. புகுத்தியவைதான் ஒன்று.. இணைய அரங்கில்.. சிலாகிக்கப்படுகின்றன.

ஆனால் இலக்கிய அறிஞர்களோ.. கம்பன் இராமாயணத்தை இலக்கியமாக படிக்கும் படி கேட்கின்றனர்...???! இப்போ இதில் யார் வம்பர்கள்.. கம்பனா.. இல்ல.. அவனைத் தொடர்ந்து கம்பராமாயணத்துக்கு விளக்கவுரை எழுதிய நபர்களா...????! :rolleyes::wub:

Share this post


Link to post
Share on other sites

ராமாயணம் பொய் என்றுதான் தந்தை பெரியாரும் சொல்கிறார். தேசியத் தலைவரும் சொல்கிறார்.

தமிழர்களையும், தமிழ் மண்ணையும் இழிவு படுத்துவதற்காகவே இராமாயணம் ஆரியர்களால் உருவாக்கப்பட்டது.

உண்மையான வரலாறு ஒன்று பொய்யான கதை மூலம் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறத

Share this post


Link to post
Share on other sites

இதன்ன நெடுங்காலபோவான் கேள்வி! முட்டைக்குள் முடி புடுங்குவது தான் எம் பகுத்தறிவு.

முட்டைக்குள் முடி புடுங்குவதா? முட்டையில் முடி புடுங்குவதா? :wub:

தலைவர் ஒரு இலக்கிய விமர்சகர் அல்ல.

ஏன் இலக்கிய விமர்சகர் இல்லை என்கிறீர்கள்?

இலக்கியத்தை இலக்கியமாக நோக்கும் திறனற்ற நிலைதான் இதற்குக் காரணம்.

இலக்கியத்துக்கு பின்னாலுள்ள அரசியலை நோக்கத் தெரியாத திறனற்ற நிலைதான் இதற்குக் காரணம்.

Share this post


Link to post
Share on other sites

ஏன் இலக்கிய விமர்சகர் இல்லை என்கிறீர்கள்?

இலக்கியத்துக்கு பின்னாலுள்ள அரசியலை நோக்கத் தெரியாத திறனற்ற நிலைதான் இதற்குக் காரணம்.

நீங்கள் பேராசிரியர் கைலாசபதி ஐயா அவர்கள் எழுதிய குறிப்பை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதைப் படியுங்கள்.

இலக்கியத்தில் கம்பன் எங்காவது.. ஆரியம் திராவிடம் கதைத்திருக்கிறானா..???! தமிழன் சிங்களவன் என்று கதைத்திருக்கிறானா...???!

இலக்கியவாதியான கம்பனை விட... அவனின் இராமாயணத்துக்கு விளக்கம் எழுதிறம் என்று இறங்கி ஒரு இலக்கியத்தை.. ஆரிய - திராவிட.. இனத்துவ.. மதத்துவ சாயம் பூசிக் கெடுத்தது.. யார்.. கம்பனல்ல... பின் வந்த விளக்கவுரைகாரர்கள்.

அவர்களின் தாக்கம் தலைவரிலும் இருக்கலாம்.. இந்த இலக்கியம் தொடர்பில். அது நேர்மையான இலக்கிய விமர்சனம் அல்ல என்பதை கைலாசபதி அவர்கள் சொல்லிவிட்டுள்ளார். நான் அல்ல..! :wub::rolleyes:

"மேனாட்டு இலக்கியங்களிலுஞ் சிறந்தவை இந்திய இலக்கியங்கள் என்று பலர் காட்ட முயன்றதைப் போலவே வட மொழிலக்கியங்களிலுஞ் சிறந்தன தமிழிலக்கியங்கள் என்று நிறுவப் பலர் முயன்று வந்துள்ளனர். ஆரியர்-திராவிடர் பிரச்சினையின் வெளிப்பாடாகத் தோன்றும் இப்போதைக்கு இரு சாராரையும் பாதித்துப் போதித்துள்ளது. சாதியினடிப்படையிலும் சமயப் பிரிவினடிப்படையிலும் மொழியடிப்படையிலும் பெருமை பேசும் இப்போக்கு, இலக்கிய மதிப்பீட்டைப் பெருமளவு மலினப்படுத்தியுள்ளது. கம்பராமாயணத்தையும் பொறுத்தளவில் ஆரியர்-திராவிடர் பூசலானது. வான்மீகி-கம்பன் போட்டியாக உருவெடுத்துள்ளது - பேராரிசிரியர் கைலாசபதி. MA PhD."

தொடர்ந்து வாசிக்க..

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry349501

Share this post


Link to post
Share on other sites

தலைவர் ஒரு இலக்கிய விமர்சகர் அல்ல. அவர் இலக்கியம் தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டார் அந்தளவும் தான்.

கைலாசபதி சொல்வது இருக்கட்டும். மேற்கண்டது நீங்கள் சொன்னது தானே.

நான் அல்ல..!

பிறகு இப்ப நீங்கள் அல்ல என்கிறீர்கள்? :wub:

Share this post


Link to post
Share on other sites

கைலாசபதி சொல்வது இருக்கட்டும். மேற்கண்டது நீங்கள் சொன்னது தானே.

பிறகு இப்ப நீங்கள் அல்ல என்கிறீர்கள்? :rolleyes:

தலைவர் ஓர் இலக்கியவாதி என்பதற்கு உங்களிடமுள்ள ஆதாரம் என்ன...???!

கைலாசபதி அவர்களின் கூற்றின் அடிப்படையில் நான் எனது கருத்தை முன் வைத்தேன். இலக்கியத் திறனாய்வில்.. அரசியல் கலப்பு என்பது.. சரியான அணுகுமுறையல்ல.

தலைவர் சொல்லிட்டார் என்பதற்காக.. இராவணன் தமிழன் ஆக முடியாது..???! தலைவர் இதைச் சொல்ல.. அவர் செய்த ஆய்வுகள் என்ன..??! இலக்கியவாதியாக மட்டுமன்றி.. அறிவியல் ரீதியாக உட்பட. அதை தலைவரின் மேற்கோளை இட்டு செய்தியிடும் போது தர வேண்டும். நாம் தலைவர் மீது வைத்திருக்கும் மதிப்புக்காக.. உலகம் அவர் சொல்வதை எல்லாம் மதிக்கும் என்று போலித்தோற்றம் காட்டக் கூடாது. உலகம் புஷ் சொன்னாலும் ஆதாரம் தேடும்.. தலைவர் சொன்னாலும் தேடும்.

தலைவர் ஒரு மக்களின் இனவிடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் பெருமைக்குரியவர். அவருக்கு என்று தனிப்பட்ட சில பார்வைகள் இலக்கியங்கள் தொடர்பில் இருக்கும். அதை அவர் வெளியிடுவது என்பது அவரின் உரிமை. ஆனால் அதுதான் முடிந்த முடிவென்பது போல் காட்டுவது.. தவறானது. தலைவர் சொல்லிட்டார் என்பதற்காக இராமாயண பாத்திரமான இராவணன் தமிழன் ஆக முடியுமா...???! உலகில் இதை ஆதாரம் காட்டி நிறுவ முடியுமா...???! :rolleyes::wub::rolleyes:

Share this post


Link to post
Share on other sites

கட்டபொம்மன் வரலாற்றைத்தான் கட்டபொம்மன் படம் சொல்லுது என்று வாதிடுவது பற்றித்தான் பிரச்சனை. கட்டபொம்மன் வரலாற்றை கட்டப்பொம்மன் படம் திரைக்கதையின் கருவாக கொண்டிருக்கிறது. அதில் வரும் வசனங்கள் உட்பட்ட ஏனைய விபரங்கள் படத்தை எடுத்தவர்களின் நோக்கத்திற்கு ஏற்ப எழுதி உருவாக்கப்பட்டிருக்கிறது.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் திரைக்கதை ஈழத்தில் நடக்கும் போராட்டத்தை கருவாகக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் ஏனைய விபரங்கள் படத்தை எடுத்தவர்களின் நோக்கத்தை எதிர்பார்ப்பை திருப்த்திப்படுத்துவதற்காக எழுதி உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் இராமாயணம் அந்தக்காலத்தில் நடந்த முக்கிய வராலாற்று நிகழ்வுகளை கருவாகக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் ஏனைய விபரங்கள் அதை எழுதியவரினதும் அவரிற்கு பின்புலமானவர்களினதும் நோக்கத்தை எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும். அதை வரலாறு என்று ஏற்க முடியுமா?

இராமாயணத்தில இலக்கிய நயம் இருக்கு அதன் படி அதை அணுகுங்கோ இரசியுங்கோ என்பது கன்னத்தில் முத்தமிட்டால் இல நல்ல cinematogrphy direction music acting emotions இருக்கு அதை ஒரு சினிமா இரசனையோடு பாருங்கோ போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது என்று கீச்சிடாதேங்கோ எண்டமாதிரிகிடக்கு. :rolleyes:

இன்று சினிமாவினுள் அரசியல் புகுந்திருப்பது போல் தான் அன்று எழுதப்பட்ட(இன்று இலக்கியங்களாகப் பார்க்கப்படுப)வைக்குள்ளும் அரசியல் இருக்கு. சமகாலத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் அரசியல் சினிமாவில் பிரதிபலிக்கிறது என்றாலே அப்படி ஒன்றும் இல்லை என்று வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். இதுக்குள்ள இனி பல ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்னர் நடந்த அரசியல் இலக்கியங்களிற்குள்ளை புராணங்களுக்கை இதிகாசங்களுக்கை உள்ளதைப் பற்றி :wub:

Share this post


Link to post
Share on other sites

தலைவர் ஓர் இலக்கியவாதி என்பதற்கு உங்களிடமுள்ள ஆதாரம் என்ன...???!

இலக்கியவாதி என்று நான் சொன்னேனா? :wub:

அத்தோடு

இலக்கியவாதிக்கும் இலக்கிய விமர்சகருக்கும்

வேறுபாடு இருக்கிறது என்று நினைக்கிறேன்?

Share this post


Link to post
Share on other sites

இராமாயணம் வரலாற்றின் பிரதிபலிப்பு என்பதற்கான ஆதாரங்கள் என்ன..???!

இராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் அமைந்திருந்த வரலாற்றுத் தொன்மைகள் என்ன..??! அவற்றை நிறுவக் கூடிய.. அம்சங்கள் எங்கிருக்கின்றன.. இன்று. ஓரிரண்டு புவியியல் கூறுகளைத் தவிர வேறென்ன சான்றுகள்.. உண்டு.. இராமாயணம்.. வரலாற்றின் பிரதிபலிப்பு என்று காட்ட....???!

ஓர் இலக்கியம் என்பது வரலாற்றடிப்படையில் தான் பிறக்க வேண்டும் என்பது நியதியல்ல...!

Share this post


Link to post
Share on other sites

இலக்கியவாதி என்று நான் சொன்னேனா? :wub:

அத்தோடு

இலக்கியவாதிக்கும் இலக்கிய விமர்சகருக்கும்

வேறுபாடு இருக்கிறது என்று நினைக்கிறேன்?

அதைத்தான் கைலாசபதி சொன்னார். இலக்கியத்தில் ஆழ இருப்பவன் ஒருவன் தான் சரியான இலக்கியத் திறனாய்வைச் செய்ய முடியும். அரசியல்.. சாதி.. மொழி.. மேலாண்மைகள் திணிக்காத இலக்கியத் திறனாய்வு என்பதை இலக்கியவாதிதான் செய்ய முடியும் எங்கிறார்..!

தலைவரை இந்த மேற்கோள் கருதி இலக்கிய விமர்சகர் என்ற நிலையில் சொல்லிட முடியாது. அவர் இராமாயணம் தொடர்பில் ஒரு முழுமையான விமர்சனத்தை இலக்கிய வடிவில் இறங்கி முழுமையாகத் தரவில்லை. அவர் குறிப்பிட்டிருப்பது ஒரு இலக்கியம் தொடர்பான சுய அபிப்பிராயம் என்றே கொள்ள வேண்டும். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

இராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் அமைந்திருந்த வரலாற்றுத் தொன்மைகள் என்ன..??! அவற்றை நிறுவக் கூடிய.. அம்சங்கள் எங்கிருக்கின்றன.. இன்று. ஓரிரண்டு புவியியல் கூறுகளைத் தவிர வேறென்ன சான்றுகள்.. உண்டு.. இராமாயணம்.. வரலாற்றின் பிரதிபலிப்பு என்று காட்ட....???!

பல சான்றுகள் உள்ளன

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=332107

Share this post


Link to post
Share on other sites

தலைவர் ஒரு இலக்கிய விமர்சகர் அல்ல.

தலைவர் ஓர் இலக்கியவாதி என்பதற்கு உங்களிடமுள்ள ஆதாரம் என்ன...???!

இப்ப என்ன சொல்ல வாறீங்கள்?

அவர் இலக்கியவாதி இல்லையா? அல்லது

அவர் இலக்கிய விமர்சகர் இல்லையா? அல்லது

அவர் அவ் இரண்டும் இல்லையா?

Share this post


Link to post
Share on other sites

இராமாயணத்தில் வரலாறு உண்டு என்பதற்கு ஆதாரம் என்ன என்பதுதான் வினவல். இராமாயணம் கொண்டிருப்பது அனைத்தும் கற்பனை என்பதல்ல அதன் நிலை. இராமாயணத்தில் சில புவியியல் அம்சங்கள் இனக்காட்டப்பட்டுள்ளன. அதன் பின்னணியில் வரலாற்றை தேட சான்று பெற முடியுமா என்று நோக்குதல் வேறு.. இராமாயணம் வரலாற்றின் பிரதிபலிப்பு என்று பிரகடனம் செய்வது வேறு. அதை இங்கு சிலர் புரியாமல் இருக்கிறீர்கள்.. கவனித்தில் கொள்ளுங்கள். :wub:

இப்ப என்ன சொல்ல வாறீங்கள்? அவர் இலக்கியவாதி இல்லையா? அல்லதுஅவர் இலக்கிய விமர்சகர் இல்லையா? அல்லதுஅவர் அவ் இரண்டும் இல்லையா?

அவர் இரண்டுமே இல்ல. சாதாரண இலக்கிய ரசிகர். தனது அபிப்பிராயத்தைச் சொன்னார். அந்தளவும் தான்.அதற்கு இலக்கிய விமர்சனத் தோற்றம்.. இலக்கிய திறனாய்வுத் தோற்றம்.. இலக்கியவாதித் தோற்றம் காட்டுவதை விட்டுவிடுங்கள். தலைவரை இழுத்து ஈ வெ ராமசாமிக்கும்.. கம்பன் கோட்டத்துக்கும் சித்தப்பன் பெரியப்பன்.. சக்களத்தி உறவு பேணுவதை நிறுத்துவது யாழ் களம் இலக்கிய திசையில்.. கம்பராமாயணத்தை அணுக உதவும். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

அவர் இரண்டுமே இல்ல.

அவர் இலக்கியவாதி இல்லை என்று எதனை வைத்து சொல்கிறீர்கள்?

யாழ் களம் இலக்கிய திசையில்.. கம்பராமாயணத்தை அணுக உதவும்.

நாம் இந்தத் தலைப்பில் கம்பராமாயணத்தின் இலக்கியம் பற்றிக் கதைக்கவில்லைத்தானே?

கம்பராமாயணத்தின் அரசியல் பற்றித்தானே கதைக்கிறோம்.

வேண்டுமென்றால், ஒரு தலைப்புத் தொடங்கி கம்பராமாயணத்தின் இலக்கியதரம் பற்றி கதையுங்கள். யார் வேண்டாமென்றார். கம்பராமயணத்துள் நுணுக்கமாக வளர்க்கப்பட்டுள்ள அரசியல் பற்றி கதைக்கவே கூடாது என்பது போலல்லவா இருக்கிறது. :wub:

Share this post


Link to post
Share on other sites

அவர் இலக்கியவாதி இல்லை என்று எதனை வைத்து சொல்கிறீர்கள்?

நாம் இந்தத் தலைப்பில் கம்பராமாயணத்தின் இலக்கியம் பற்றிக் கதைக்கவில்லைத்தானே?

கம்பராமாயணத்தின் அரசியல் பற்றித்தானே கதைக்கிறோம்.

வேண்டுமென்றால், ஒரு தலைப்புத் தொடங்கி கம்பராமாயணத்தின் இலக்கியதரம் பற்றி கதையுங்கள். யார் வேண்டாமென்றார். கம்பராமயணத்துள் நுணுக்கமாக வளர்க்கப்பட்டுள்ள அரசியல் பற்றி கதைக்கவே கூடாது என்பது போலல்லவா இருக்கிறது. :lol:

இலக்கியத்தில் அரசியல் உள்ளதாக இலக்கிய விமர்சனங்கள் மூலம் பக்கச் சார்புகள் அடிப்படையில் ஒரு எண்ணக்கருவைப் புகுத்திவிட்டு.. அதற்குள் அரசியல் தேடுவது என்பது நல்ல ஏமாற்று வித்தை.

கம்பன் அரசியல்வாதியல்ல. இலக்கியவாதி. கவிஞன்.

முன்னர் சொன்னது போல கம்பன் சொல்லாதுகளை அல்லது சொன்னவற்றை தங்கள் வசதிக்கு திரித்து கம்பனுக்கே விளக்கம் கொடுத்தவர்களின் விமர்சனங்கள்.. விளக்கவுரைகளின் அடிப்படையில் கம்பராமாயாணத்தை அணுகுவது தவறு. அதை ஒரு இலக்கியவடிவமாக மட்டும் காட்டுங்கள். காணுங்கள். அதுவும் சமூக இலக்கியமாக...!

இலக்கியத்துள் ஆரிய - திராவிட.. வட இந்திய - தென்னிந்திய.. தமிழன்.. வட இந்தியன்.. பார்பர்னன் - சூத்திரன் போன்ற கற்பனைகளை திணித்து.. அதன் வடிவில் அதை சமூகத்துக்குக் காட்டாதீர்கள். இலக்கியத்தின் உண்மைத் தன்மையை கைலாசபதி போன்ற பேரறிஞர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். ஈ வெ ராமசாமி போன்ற உணர்ச்சி வேகத்துக்கு செல்லெடுத்து மக்கள் மீது சவாரி விட்டு அரசியல் விளையாட்டு விளையாடுவது போன்றதல்ல இலக்கியத் திறனாய்வு என்பது. அதற்கு ஆழமான சிந்தனை.. ஒப்பியல் தன்மை என்று பல காரணிகள் அவசியம்.

இலக்கியத்தை இலக்கியமாகக் காணுங்கள். அரசியல் கலந்து சுய லாபம் தேடும் அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக அதைப் பாவிக்காதீர்கள். மக்களின் முன் தவறான கோணத்தில் இலக்கியத்தை முன்னுறுத்தாதீர்கள். :unsure::wub:

Share this post


Link to post
Share on other sites

பல சான்றுகள் உள்ளன

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=332107

இதில் சான்றுகள் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றை இனங்காட்டி.. அவை எந்த வகையில் வரலாற்று உண்மைகளாக நிறுவப்பட்டுள்ளன. அதற்காக கையாளப்பட்ட அறிவியல் மற்றும் தொல்பொருள் சான்றுகள் அல்லது வழிமுறைகள் என்ன என்பதை சொல்வீர்களா...???! :unsure:

Share this post


Link to post
Share on other sites

இலக்கியத்தை இலக்கியமாகக் காணுங்கள். அரசியல் கலந்து சுய லாபம் தேடும் அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக அதைப் பாவிக்காதீர்கள். மக்களின் முன் தவறான கோணத்தில் இலக்கியத்தை முன்னுறுத்தாதீர்கள்.

மதவெறியை தூண்டவும், தமிழரின் வரலாற்றை மறைக்கவும், சுயமரியாதையும் தன்மானமும் சுயபுத்தியும் இழந்தவர்களா தமிழர்களை ஆக்கும் நயவஞ்சக செயல்களை செய்ய முனையும் அற்பர்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இராமயணத்தை அரசியலற்ற இலக்கியமாக முன்னிறுத்தாதீர்கள். மக்களை பொய்மைகளுக்குள்ளும், புரட்டுகளுக்குள்ளும் தள்ளாதீர்கள்.

கம்பராமாயணத்தை இலக்கிய ரசனையோடு அணுகுகிற அதேவேளை,

ஒரு தன்மானமுள்ள, சுயசிந்தனையுள்ள, சுயமரியாதையுள்ள

ஈழத் தமிழன் என்னும் வகையில்,

கம்பராமாயணம் அரசியல் மத பிரச்சார வடிவமாக இருப்பதால்,

அதற்குள் அரசியல் நுணுக்கமாக சேர்த்து உருவாக்கப்பட்டிருப்பதால்,

அதனை அரசியலாகவே அணுகுவோம். :unsure:

- - -

[கருத்துக்களத்தின் போக்கு தொடர்பான கருத்துக்களையும் விவாதத் தலைப்பின் கீழ் கலக்காமல், யாழ் உறவோசை போன்ற பகுதிகளை அதற்கு பயன்படுத்திக் கொள்ளவும். அல்லாவிடின், கருத்துக்கள நிர்வாகத்தினருக்கு அறியத் தரவும்.]

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.