Jump to content

ஈழத்தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதவெறியை தூண்டவும், தமிழரின் வரலாற்றை மறைக்கவும், சுயமரியாதையும் தன்மானமும் சுயபுத்தியும் இழந்தவர்களா தமிழர்களை ஆக்கும் நயவஞ்சக செயல்களுக்காக நீங்களும் இணையத்தைப் பாவிக்காதீர்கள்.

கம்பராமாயணத்தை இலக்கிய ரசனையோடு அணுகுகிற அதேவேளை,

ஒரு தன்மானமுள்ள, சுயசிந்தனையுள்ள, சுயமரியாதையுள்ள

ஈழத் தமிழன் என்னும் வகையில்,

கம்பராமாயணம் அரசியல் மத பிரச்சார வடிவமாக இருப்பதால்,

அதற்குள் அரசியல் நுணுக்கமாக சேர்த்து உருவாக்கப்பட்டிருப்பதால்,

அதனை அரசியலாகவே அணுகுவோம். :unsure:

இலக்கியம் மதவெறியையோ.. தமிழர்களின் வரலாற்றையோ.. சுயமரியாதை சிதைவையோ காவி வரல்ல. அதற்கான சான்றுகளும் இல்லை. இலக்கிய விமர்சன கர்த்தாக்கள் என்று காலத்துக்குக் காலம் முளைத்தவர்களால் அவை புகுத்தப்பட்டுள்ளன. அதற்கு இலக்கியம் பொறுப்பாக முடியாது. கம்பன் பொறுப்பாக முடியாது. இதை நான் சொல்லவில்லை.. கைலாசபதியின் கருத்தில் இருந்து சொல்கிறேன்.

பேரறிஞர் பேராசிரியர் கலாநிதி கைலாசபதியின் கருத்தை மீண்டும் முன் வைக்கிறேன்... எந்த வகையில் இலக்கியத்துள் நீங்கள் குறிப்பிடும் அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன என்பதைக் காட்ட. அதற்காக இலக்கியத்தையும் இலக்கிய கர்த்தாவையும் சாடி இலக்கியத்தை தவறான வகையில் மக்களுக்கு அடையாளப்படுத்துவதையும் தவிர்க்க முயலுங்கள்.

"மேனாட்டு இலக்கியங்களிலுஞ் சிறந்தவை இந்திய இலக்கியங்கள் என்று பலர் காட்ட முயன்றதைப் போலவே வட மொழிலக்கியங்களிலுஞ் சிறந்தன தமிழிலக்கியங்கள் என்று நிறுவப் பலர் முயன்று வந்துள்ளனர். ஆரியர்-திராவிடர் பிரச்சினையின் வெளிப்பாடாகத் தோன்றும் இப்போதைக்கு இரு சாராரையும் பாதித்துப் போதித்துள்ளது. சாதியினடிப்படையிலும் சமயப் பிரிவினடிப்படையிலும் மொழியடிப்படையிலும் பெருமை பேசும் இப்போக்கு, இலக்கிய மதிப்பீட்டைப் பெருமளவு மலினப்படுத்தியுள்ளது. கம்பராமாயணத்தையும் பொறுத்தளவில் ஆரியர்-திராவிடர் பூசலானது. வான்மீகி-கம்பன் போட்டியாக உருவெடுத்துள்ளது. இதனால் இன்றுவரை நிதானமான ஒப்பியல் ஆய்வு நடப்பதற்குத் தடைகள் இருந்து வருகின்றன. .பா.வே. மாணிக்கநாயக்கர் எழுதிய "கம்பன் புளுகும் வான்மீகி வாய்மையும்", வெ.ப. சுப்பிரமணிய முதலியார் எழுதிய 'ராமாயண உள்ளுரைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்' என்பன போன்ற நூல்கள் ராமாயண ஆய்வு திசை தவறிய தன்மையைக் காட்டுகின்றன. இந்நோக்க நிலையினடிப்படையிலேயே "திராவிடனான இராவணனது" பெருமையை உணர்த்தும் 'ராவண காவியம்' எழுந்தது. இதனாசிரியர் புலவர் குழந்தை.

இத்தகைய விபாரீதப் போக்குகளையெல்லாம் பார்க்கும்போது, வ.வே.சு.ஐயர் முதற்றர விமர்சகராக மாத்திரமின்றி, ஒப்பிலக்கிய ஆய்வு முன்னோடியாகவும் திகழ்வதன் காரணத்தை உணரலாம். இராமாயணத்தை மட்டுமல்லாது பிற இலக்கியங்களைச் சுவைத்தபோதும், ஐயரவர்கள் தமது ஆழ்ந்த இலக்கியப் பயிற்சி காரணமாக ஒப்புநோக்கில் ஈடுபட்டார். தமிழிலே ஏதேனுமொன்றைப் படிக்கும்பொழுது, அதற்கு நிகரான பிறமொழிச் செல்வங்கள் அவருக்கு நினைவிலே தோன்றின. நாம் மேலே கூறியவாறு விவரமாக அவற்றை அவர் ஒப்பு நோக்கினாரல்லர். ஆயினும் ஒப்புநோக்க முனைந்தமையொன்றே அவரது பரந்து விரிந்த பார்வையைக் காட்டுவதாயுள்ளது. பூர்வ வரலாற்று முறை, சாதிச் சூழ்ச்சி முறை என்ற நோக்கங்களுடன் ராமாயணத்தைக் கற்பவர் மலிந்த சூழலிலே, உளநூல் முறையையும் சிற்ப முறையையும் துணைக் கொண்டு அக்காப்பியத்தை ஆய்ந்து சுவைத்த ஐயர் தனிச்சிறப்புடையவரே."

கைலாசபதி ஐயாவின் அன்றைய பார்வை இன்றும் எவ்வளவு சாலப்பொருந்துகிறது. அந்தளவுக்கு இலக்கிய விமர்சனங்கள் என்று பலரும் தங்கள் அரசியல்.. சமூக குரோத போட்டி எண்ணங்களைப் புகுத்தியுள்ளனர் சமூகத்தில். ஆனால் குற்றம் முழுக்க கம்பனிலும்.. கம்பராமாயணத்திலும் போடப்பட்டு.. இன்று அதன் இருப்பையே காலி செய்யத் துடிக்கின்றனர் சில சுயநல அரசியல்வாதிகள். :wub:

காலத்தால் முக்கியமான சிறந்த இந்தப் பார்வையை வழங்கிய கைலாசபதி ஐயா பற்றி அறிய இங்கு போங்கள்..

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E...%AE%A4%E0%AE%BF

Link to comment
Share on other sites

கம்பன் அரசியல்வாதி அல்ல இலக்கியவாதி கவிஞன். சங்கரும் மணிரத்தினமும் அரசியல் வாதிகள் அல்ல சினமாத் தயாரிப்பாளர்கள். றூபட்மேடொக் அரசியல்வாதி அல்ல வியாபாரி. HRWகுள் அரசியல் இல்லை மனிதஉரிமைகள் அமைப்பு. இந்து ராம் அரசியல்வாதி அல்ல ஒரு ஊடகவியலாளன். UTHR(J) இற்குள் அரசியல் இல்லை அது சமூகசேவை அமைப்பு என்று பட்டியல்..........

இராமாயணம் வரலாற்றின் பிரதிபலிப்பு இல்லை 1...2 புவியல் கூறுகளை தான் காட்டுது எண்டவர்தான் இராமாயணத்துக்காலை முழு இலங்கையும் தமிழரின்ரை எண்டு நிறுவலாம் எண்டவர் சில வாரங்களிற்கு முதல். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் அரசியல்வாதி அல்ல இலக்கியவாதி கவிஞன். சங்கரும் மணிரத்தினமும் அரசியல் வாதிகள் அல்ல சினமாத் தயாரிப்பாளர்கள். றூபட்மேடொக் அரசியல்வாதி அல்ல வியாபாரி. HRWகுள் அரசியல் இல்லை மனிதஉரிமைகள் அமைப்பு. இந்து ராம் அரசியல்வாதி அல்ல ஒரு ஊடகவியலாளன். UTHR(J) இற்குள் அரசியல் இல்லை அது சமூகசேவை அமைப்பு என்று பட்டியல்..........

இராமாயணம் வரலாற்றின் பிரதிபலிப்பு இல்லை 1...2 புவியல் கூறுகளை தான் காட்டுது எண்டவர்தான் இராமாயணத்துக்காலை முழு இலங்கையும் தமிழரின்ரை எண்டு நிறுவலாம் எண்டவர் சில வாரங்களிற்கு முதல். :unsure:

நீங்கள் விளங்கிக் கொண்டதில் உள்ள தவறுக்கு நான் பொறுப்பல்ல.

இராமாயணம் முழுக் கற்பனை என்று ஈழத்திருமகன் வைத்த நிலைப்பாட்டுக்கு நான் தெளிவாகச் சொன்னேன்.. அதில் குறிப்பிடப்பட்ட புவியியற்கூறுகள் சில இன்றும் கண்ணூடே என்று. அதனடிப்படையில் வரலாற்றுச் சான்றுகளை ஏன் தேடல் செய்ய முடியாது என்று. நான் எங்கும் இராமாயணம் சான்றுகள் அடிப்படையில் அமைந்த வரலாற்றின் பிரதிபலிப்பு என்று கூறவில்லை. கூறியிருந்தால் அதை இங்கு முன் வையுங்கள்.

நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டு அதை தவறான வகையில் கருத்தை திசைதிருப்ப முன் வைப்பதைத் தவிருங்கள்.

நான் மட்டும் சொல்லேல்ல கைலாசபதி ஐயா கூடச் சொல்லுறார்.. எப்படி திரிபுகளும்.. சேர்க்கைகளும்.. நடந்துள்ளன.. கம்பராமாயாண இலக்கியத்தை வைத்து என்று. ஆதாரத்தோடுதான் சொல்லி இருக்கிறேன் படியுங்கள் தெளிவுறுங்கள். என் மீதான குற்றங்களுக்கு சரியான ஆதாரங்களை முன் வைத்துக் கருத்து வையுங்கள். பதில் அளிக்கிறேன். இன்றேல் எனி இப்படியான விசமத்தனமாக விளங்கா நிலை தோற்றமளிக்க.. வரும் போலிக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கமாட்டேன். :wub:

Link to comment
Share on other sites

சரி அப்ப சொல்லவாறதன் சாரம்சம்

இராமாயணம் சான்றுகளின் அடிப்படையில் உருவான இலக்கியம் இல்லை. அதனால் அது வரலாற்றின் பிரதிபலிப்பில்லை.

ஆனால் அதில் காணப்படும் 1...2 புவியல் கூறுகளிற்கு ஒற்றுமையை இன்றும் காணக் கூடியதாக இருக்கிறது. எனவே அது முற்றுமுழுக்க கற்பனை அல்ல அதற்குள் உண்மையும் இருக்கு. அதனால் அதன் அடிப்படையில் வரலாற்றின் சமூகவியல் பக்கங்களிற்கும் சான்றுகளை தேடலாம். :unsure:

Link to comment
Share on other sites

இந்தத் தலைப்பு கம்பராமாயணத்தின் இலக்கிய ரசனை பற்ரியது அல்ல, கம்ப இராமாயணத்தின் பின்னால் இருக்கும் அரசியல் பற்றியது.தேசியத் தலைவர் மேன்மைதகு பிரபாகரன் அவர்கள் தெளிவாக தனது பார்வையை இப்படிச் சொல்லி உள்ளார்.

//மனிதரே அல்லாத ‘அரக்கராக’ முத்திரை குத்திப் பொய்யான கதைகள் கட்டினான். காலம் காலமாகக் கட்டியெழுப்பப்பட்ட அவர்களது வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கோலங்களையும் ஈவிரக்கமின்றிச் சாடினான். அவர்களை அடியோடு அழிப்பதே தர்மம் எனப் போதனை வேறு செய்தான். கடவுட் கோட்பாட்டைத் துணைக்கு அழைத்துத் தன்னைத் தெய்வ அவதாரமாகக் காட்டிக் கொண்டான். பொய்யான விளக்கங்களை வியாக்கியானங்களைக் கொடுத்தான். தான் வாழ்ந்தாற் போதும் என்ற சுயநலத்துடன் தனது எதிரிகள் மீது ஈவிரக்கமின்றிப் போர் தொடுத்தான்.இப்படியாக ஒருவரது அழிவில், இன்னொருவரது வெற்றியிற் புதிய வரலாறு எழுதப்பட்டது. உண்மை வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பொய்களையும், புழுகுகளையும் புகுத்திப் புதிய வரலாறு, வெற்றிபெற்ற மனிதனுக்குச் சார்பாக எழுதப்பட்டது. //

கம்ப இராமயணத்தின் இலக்கியச் சுவை பற்றிக் கருதாட விரும்புபவர்கள் அதற்கென தனித் தலைப்புத் தொடங்கலாம்.இந்தத் தலைப்பைத் திசை திருப்ப வேண்டாம்.கம்பைராமயணத்தின் அரசியல் பற்றி எவரும் கதைக்ககூடாது என்பவர்கள் ,மக்கள் முன் இந்த நுண் அரசியல் அம்பலப்படுத்தப்படுவதை விரும்பாதவர்கள்.

எந்த இலக்கியமும் அதனை இயற்றுவர்களின் அரசியற் பின் புலத்திலையே இயற்றப்படுகிறது.இலக்கியங்கள

Link to comment
Share on other sites

கைலாசபதியின் தளமும் வளமும்

ஹெச்.ஜி. ரசூல்

இரண்டாவதாக, கைலாசபதியின் படைப்புலகம் மிகக் குறிப்பிடத்தக்கதாய் ஈழத்து மற்றும் தமிழ் விமர்சன உலகில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியத்தை ரசனைக் கோட்பாடாக அணுகி, அதன் லயங்களில், சொல்லழகில் மயங்கிக் கிடந்த தமிழ் இலக்கிய விமர்சனத்தைக் கைலாசபதி மீட்டுருவாக்கம் செய்தார். வாழ்வின் இருப்பிற்கும், மொழிக்கும், கலாசாரத்திற்கும் இடையிலான உட்தொடர்புகளை மூலம் உருவாக்கிக் காட்டினார். மார்க்சிய சமுதாயவியல் அணுகுமுறையும், மார்க்சிய அழகியலின் பிரதிபலிப்பு கோட்பாடும் இதற்குத் துணை புரிந்தன. இந்தத் திசை வழியில் கைலாசபதி படைத்தளித்த பல நூல்களைக் குறிப்பிட வேண்டும். இது எண்ணிக்கையில் இருபத்து மூன்றாகும்.

தமிழின் சங்க இலக்கியத்தையும், பண்டைய கிரேக்க காவியங்களையும் ஒப்புநோக்கி எழுதப்பட்டதே தமிழ் வீரயுகக் கவிதை நூல். அறுபதுகளில் வெளிவந்த ‘இரு மகாகவிகள்’ தமிழ் இலக்கியப் பரப்பில் சமகால ஒப்பீட்டு இலக்கிய ஆய்வு முறையைத் துவக்கி வைத்தது.

1966-ல் பழந்தமிழ் இலக்கியங்களின் வழியாக சமய பண்பாட்டு மானுடவியல் ஆய்வுகள் எட்டுத் தலைப்புகளில் பண்டையத் தமிழர் வாழ்வும் வழிபாடும் நூலாக வெளிவந்தது. இதில் இடம்பெற்ற தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி படைப்பு இனக்குழுத் தெய்வமான சிந்துவெளி யோகி சிவன் காலப்போக்கில் வேதங்களாலும், வைதிகத்தாலும், உள்வாங் கப்பட்டுப் பசுபதியாக, அர்த்த நாரீஸ்வரனாக, மேல்நிலையாக்கச் சாதிக்கடவுளாக உருமாற்றம் அடைந்துள்ளதைக் காட்டுகிறது. ‘நாடும் நாயன்மாரும் ஆய்வு’ பல்லவர்காலச் சமூக சமய வரலாற்றை உற்றுநோக்கச் செய்கிறது. சமணர்களை அழித்தொழித்த சைவத்தின் அதிகார உருவாக்கம் பண்பாட்டுத் தளத்தில் மேற்கோப்புக் காட்சியாகத் தெரிகிறது. ஆனால் ஆழ்தளத்தில் சமணம்-சைவம் எல்லையைத் தாண்டி வணிக வர்க்கத்திற்கும் வேளாள நிலவுடமைச் சமூகத்திற்குமான - வர்க்கப் போராக கைலாசபதியால் சுட்டிக்காட்டப்படுகிறது. இப்பார்வையினூடே பேரரசும் பெருந்தத்துவமும் வணிக சமணவாதிகளை வென்ற சைவம் எவ்வாறு ஒரு பெருந்தத்துவமாகச் சோழப் பேரரசு காலத்தில் நிலைபெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

பாரதி ஆய்வுகளில் முழு ஈடுபாடு கொண்டு இயங்கிய கைலாசபதியின் எழுபதுகளில் வெளிவந்த ஐந்து கட்டுரைகள் அடங்கிய அடியும் முடியும் ஆய்வுத் தொகுதி தமிழ் இலக்கிய விமர்சனப் பரப்பின் பேசப்படாத பகுதிகளைப் பேச எத்தனித்தது. இத்தகைய உள்ளாற்றலைக் கொண்ட படைப்புகளாக அகலிகை கற்பு நெறியும் - புலைப்பாடியும் கோபுரவாசலும் என்பனவற்றைக் கருதலாம். இன்றைய நிலையில் இதனைப் பெண்ணிய மற்றும் தலித்திய நோக்கின் முன்னோடி வாசிப்பு வடிவம் எனலாம்.

பெண் கற்பின் பிம்பத்தைக் கட்டமைத்த தமிழ் இலக்கியவாதிகளின் மனோபாவங்கள், அவற்றில் கலந்திருந்த ஆணாதிக்க அரசியல் அனைத்தையும் அகலிகை தொன்மக் கதைகள் வழி எடுத்துச் செல்கிறார். வால்மீகியாலும், கம்பனாலும், இராஜாஜியாலும், சுப்பிரமணிய முதலியாராலும், ச.து.சு. யோகியராலும், புதுமைப்பித்தனாலும் அகலிகை வெவ்வேறு விதமாகச் சார்பு நிலையோடு கட்டமைக்கப்படுவது இது கூறும் செய்தி. இதில் வெளிப்படும் ஆணாதிக்க மனோநிலைகள், இரண்டாம் பாலினமாகப் பெண்ணை அணுகும் பார்வை அனைத்துமே மறுவிவாதத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன.

புலைப்பாடியும் கோபுரவாசலும் கட்டுரையின் நந்தன் குறியீட்டுப்படிமம் அடித்தள சாதிகளின் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைக்கு அடையாளமாக எப்படி உருவாகியுள்ளது என்பதை உணரச் செய்திருக்கின்றது. சுந்தரரது திருத்தொண்டத் தொகையிலும், நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டத் தொகையிலும், சேக்கிழார் பெரிய புராணத்திலும், கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும், முருகையனின் கோபுரவாசல் நாடகத்தினூடாகவும் நந்தன் ஒரு படைப்பிலக்கியத்தினுள் உருவமைக்கப்பட்ட விதத்தையும், அது வெளிப்படுத்திய சாதிய ஒடுக்குமுறையை இடையிலான மாற்றுக்கருத்து நிலைகளையும் விவாதிக்க முயல்கிறது. இந்த வகையில் கலாநிதி. வ. மகேஸ்வரன், தெ. மதுசூதனன், முகம்மது சமீம், செ. கணேசலிங்கன், கந்தையா சண்முகலிங்கம் மலையக எழுத்தை அடையாள அரசியலாக வெளிப்படுத்திய லெனின் மதிவானம் உள்ளிட்டோரின் ஆய்வுகள் மிகுந்த நம்பிக்கையூட்டுபவையாக இருக்கின்றன.

கலாநிதி எஸ். பாலசுகுமார் முன்வைக்கும் இன்றைய பின்நவீனத்துவ கோட்பாடுகளும், பின் நவீனத்துவ எழுத்துக்களும், அவருடைய எழுத்துக்கு முன் வெறுமனே ஒன்றுமில்லாததாகிவிடும் என்று கூறுகிறார். எனினும் தற்காலப் பின் நவீனத்துவத் திறனாய்வு முறையியலுக்குக் கைலாசபதி முன்வைத்த பல்துறை சார் ஆய்வு நெறி முன்னோடியாக அமையும்.

ஒரு படைப்பு வெளிப்படுத்தும் பிரதிசார்ந்த அர்த்தம் காலம், வெளி, கலாசாரப் பின்னணியில் அது வெளிப்படுத்தும் சூழல் சார்ந்த அர்த்தம் என்பதான வாசிப்பின் அரசியலை நோக்கிப் பயணிப்பதற்குக் கைலாசபதி வழிகாட்டுகிறார். வார்த்தை, சடங்கு, நடத்தை விதிகள் என வாழ்வின் அடுக்குகள் எல்லாவற்றிற்குள்ளும் உறைந்து கிடக்கும் மேலாதிக்கங்களைத் தகர்ப்பதன் வழியாக நுண் அரசியல் செயல்பாடு கூர்மை பெறுகிறது. பழமரபுக் கதைகள், தொன்மங்கள், சமயவியல், மானுடவியல், வரலாற்றியல், நாட்டாரியல், பண்பாட்டியல் உள்ளடக்கி ஒரு படைப்பு ஊடிழைப் பிரதியாக இயங்குவதை எந்த முறையில் அணுகுவது என்பதான தேடல்களுக்கு இங்கு இடமிருக்கிறது.

தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் அயோத்திதாச பண்டிதரும், பெரியாரும், ஜீவாவும் நிகழ்த்திய குறுக்கீடும் எதிர்வினையும் இந்த வகையில் கவனிப்பிற்குரியவை. இப்பயணத்தில் மற்றுமொரு நீட்சியாகக் கைலாசபதியை பதிவு செய்யலாம்.

நவீன இலக்கிய விமர்சன முறையில் ஒவ்வொரு படைப்பின் சுயாதீனமிக்க தன்னிறைவு குறித்தும், அதன் கட்டமைப்பு, மொழிச் சொல்லாக்கம், அமைப்பாக்கம், உத்திகளின் பங்களிப்பு தொடர்புடைய அகக்கூறுகளில் அதிக கவனத்தைக் கோரியது. இந்நிலையில் கைலாசபதியின் திறனாய்வு முறை தொன்மை இனக்குழு, அடிமைச் சமூகம், நிலவுடமை மற்றும் முதலாளியச் சமூகம் என்பதான வரலாற்றுக்கால பொருள் முதல்வாத அடிப்படையை மார்க்சிய கோட்பாட்டிலிருந்து தருவித்துக்கொண்டு ஆய்வினை முன்வைத்தது.

இந்திய மார்க்சிய மூலவர்களான தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி. கோசாம்பி, சர்தேசாய், ராகுல் சாங்கிருத்தியாயன் ஆகியோர் சிந்தனை முறைகளிலிருந்தும், தனக்கானதொரு தனித்த இயங்கியல் பார்வையை உள்வாங்கிகொண்டதால் கைலாசபதியால் கோட்பாட்டு சார்ந்த விரிவானதொரு ஆய்வியல் தாக்கத்தை திறனாய்வுத் துறையில் செலுத்த முடிந்தது. இதே காலத்தில் தமிழகத்தின் பேராசிரியர் நா. வானமாமலை, ஆர்.கே. கண்ணன், தொ.மு.சி. ரகுநாதன் மார்க்சிய ஆய்வு முறையியலை பயன்படுத்திய குறிப்பிடத்தக்க அறிஞர்களாக இருந்தனர். இன்றைய மறு விவாதத்தில் மார்க்சியத்தைப் பொருளாதார வாதமாக ஒற்றைப்படுத்திப் பார்ப்பதைத் தாண்டி குடும்பம், மொழி, சாதி, சடங்கு, சமயம், கலாசாரம், சமூக மனோபாவங்கள், ஊடக அரசியல், நகல் உண்மைகள் சார்ந்த வெளிகளைப் பன்மைத்தன்மையோடு அணுகுவதற்கான பார்வை உருவாகி யுள்ளது. மேற்கத்திய மார்க்சியத்திற்குப் புதுப் பரிமாணங் களையளித்த அந்தோனியா கிராம்சி வால்டர் பெஞ்சமின், ஜீன்பால் சார்த்தர் எனச் சிந்தனையாளர்களின் வரிசை தொடர்கிறது. அமெரிக்க மார்க்சியரான பிரடிரிக் ஜேம்சனின் இலக்கிய விமர்சனமான மார்க்சியமும் உருவமும் (1961) பின் நவீனத்துவம் - பின்னை முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கம், எதிர்காலத்தின் கல்வெட்டுகள் உள்ளிட்ட பல நூல்கள் மார்க்சிய தளத்தில் தீவிரமான ஈர்ப்பைக் கோருவன. இத்தகையதான மாறிவரும் சூழல்களை உள்வாங்கி இயங்கும் கார்த்திகேசு சிவத்தம்பி உள்ளிட்ட மார்க்சியர்கள் கைலாசபதிக்குப் பிறகான கால சிந்தனை இடைவெளிகளை நிரப்புகிறார்கள்.

தமிழ் நாவல் இலக்கியத்தில் கைலாசபதி முன்னிறுத்திப் பேசிய கற்பனாவாதம், இயற்பண்பு வாதம், யதார்த்தவாதம் குறித்த கருத்தாக்கங்கள் தம் பழைய இருப்பைப் பறி கொடுத்துள்ளன. நிலப்பிரபுத்துவ பிரதிபலிப்பின் அடையாளமாக கற்பனாவாதமும், முதலாளித்துவ சமூக அமைப்பை சில சீர்திருத்தங்களோடு ஏற்றுக்கொள்வதான இயற் பண்புவாதமும், சோசலிச புரட்சி நோக்கிய தூண்டுகோலாக யதார்த்தவாதமும் என பொருளாதார அளவுகோலினால் மதிப்பிடும் முறையியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு படைப்பு பிரதி நிலப்பிரபு ஒ விவசாயி / முதலாளி ஒ தொழிலாளி / அரசு எந்திரம் ஒ நடுத்தர வர்க்கம் என்பதான இருமை எதிர்வுகளால் மட்டுமே கட்டமைக்கப்படுகிறது என்பதான வர்க்கயதார்த்தம் தனது பார்வையைக் கலாசார யதார்த்த வெளிகளிலும் விரிவுபடுத்தியுள்ளது. அடித்தள மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள், தொன்மங்கள், வாழ்வின் ரகசியங்கள், புனைவு எழுத்தாக உருக்கொள்கின்றன. மையம் தாண்டி விளிம்பு நிலை வாழ்வின் யதார்த்தம் முதன்மைப்படுத்தவும் படுகிறது. துவக்கம்-நடு-முடிவு என்பதான சுழற்சியைத் தாண்டி நேரற்ற கதை சொல்லலில் காலத்தின் ஒழுங்கும் குலைத்துப் போடப்படுகிறது.

பின்னைக்காலனிய நாடுகளின் எழுத்து முறையாக மாந்திரீக யதார்த்தம் தனது தீவிர செல்வாக்கைச் செலுத்துகிறது. ஒரு யதார்த்தத்தை விநோதமிக்க புனைவாகப் படைத்துக் காட்டும் முறையியலாக உள்ளது.

லத்தீன் அமெரிக்கப் புனை கதையாளர் போர்ஹேயின் வார்த்தையில் “அச்சாக அப்படியே சித்திரிக்கப்பட்டாலும் கதையில் வரும் கழுதை நிஜக் கழுதை இல்லை. கதைக் கழுதை. அப்படியானால் ஏன் அதற்கு ஐந்து கால்கள் இருக்கக்கூடாது” என்பதாகவும் இதனைச் சொல்லிப் பார்க்கலாம்.

சமகால யதார்த்தத்தை அதீதப் புனைவுகளின் மூலம் வேறுவிதமாகச் சொல்லிப் பார்க்கும் சமகாலப் படைப்புலகம் ஜால வினோதம், கதை மீறும் கதை, விஞ்ஞானப் புனைவு எனப் பல வடிவம் பெற்றுப் புதிய கதை சொல்லல் முறைகளாக மறு உருவாக்கம் பெற்றுள்ளன. கைலாசபதியை முன்வைத்து இவ்விவாதங்களை இன்னும் தொடர நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன.

கைலாசபதி : தளமும் வளமும்,

கைலாசபதி ஆய்வு வட்டம்,

கொழும்பு - 6.

விலை: ரூ. 250.00

நன்றி:கீற்று இணையத் தளம்

Link to comment
Share on other sites

http://www.noolaham.net/library/books/04/368/368.htm

இராமாயணம் நடந்த கதையா?

ந. சி. கந்தையா

தோற்றுவாய்

இராமாயணம் நடந்த கதையா - என்னும் கேள்வி பலருக்கு வியப்புத் தரலாம். நாம் நெடு நாட்களாக நம்பிவந்த புராணக்கதைகள் பல கற்பனைக் கதைகளே என்று அறிகின்றோம். இராமாயணம் உண்மையில் நிகழ்ந்த கதை எனப் பலர் நம்பிவருகின்றனர். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பண்டிதர் சவரிராயபிள்ளை, ஆர்.சி. தத்தர் போன்ற ஆராய்ச்சியாளர் இவ்வரலாறு நீண்ட கற்பனைகளுள் மறைந்து கிடக்கும் ஒரு சிறு நிகழ்ச்சியொன்றோ முற்றும் கற்பனை என்றோ கருதினார்கள். ஆராய்ச்சி அறிஞர் தமது நுண்ணிய மதிகொண்டு ஆய்ந்து வெளியிடும் ஆய்வுரைகள் பெரும்பாலும் பொது மக்களுக்கும் பிறருக்கும் கிடைப்பதில்லை. ஆராய்ச்சியாளர் தக்க காரணமின்றி உண்மையைத்திரித்துக் கூறமாட்டார்கள். அவர்கள் கூறியுள்ளவைகளை எல்லாம் இச்சிறிய நூலில் திரட்டித் தருகின்றோம்.

வால்மீகி இராமாயணம்

வால்மீகர் இராமாயணத்தை வடமொழியிற் செய்தார். இன்று வடமொழியிற் காணப்படும் இராமாயணம் வால்மீகியாற் செய்யப்பட்டதன்று என்பது ஆராய்ச்சி அறிஞர் கருத்து. முன் இருந்த இராமாயணம் பல கூட்டல், கழித்தல், திருத்தல்களோடு பதிதாக அமைக்கப்பட்டிருக்கின்றதென்

Link to comment
Share on other sites

இராமாயணமோ மகாவம்சமோ வரலாற்றைச் சொல்லும் நூல்களோ கதையோ அன்று .அவை முறையே ஆரிய உயர்வையும், பவுத்த பேரினவாதா மேன்மையையும் உருவாக்கப் புனையப்பட்ட கதைகள்.ஆனால் பண்டைய காலத்தில் வரலாறு என்பது இவ்வாறான கதைகளாலையே கூறப்பட்டது மக்களும் இவற்றை உண்மை என்று நம்பினர் இன்றும் நம்புகின்றனர்.ஆரியர் தங்களை கடவுளின் இடைத் தரகர் என்பதுவும் பல கடவுள்களின் தோற்றம் உறவு எல்லாமுமே புராணக் கதைகளால் தான் உண்மை என்று மக்களை நம்ப வைத்தனர்.எவ்வாறு சிங்களப்பவுத்த பேரினவாததிர்க்கு ஒரு மகாவம்சமோ அதே போல் ஆரிய மேலாண்மைக்கு இராமாயணம் புனையப்பட்டது.

இந்தப் புனைவை எதிர்கொள்ள எதிர்த் திசையில் புனையப்படுவதே இராவணன் கதை.இங்கே இராமாயணம் என்பது அது சொல்லும் ஆரிய மேலாண்மைக் கருத்தியலின் சான்றாக வரலாறாக இருக்கிறது.ஒரு தருணத்தில் இராமாயணத்தை உண்மை எனும் இந்து மத வெறியர்கள் அதனைக் காரணம் கூறி இராமன் பாலம் என்று கதைப் பவர்கள் இங்கே இராமாயணத்தின் அரசியலைப் புறந்தள்ளி விட்டு இலக்கியச் சுவை பற்றிப் பேசட்டாம்.இன்றும் இந்துதுவா வாதிகளின் இந்தப் புனைகதையை வைத்துத் தான் அரசியல் நடாத்துகிறார்கள்.

ஆகவே இராமாயணமும் இராமனும் அரசியலில் இருக்கும் வரை இராவணையும் நாங்கள் சொல்லிக் கொண்டு தான் இருப்போம்.ஆரியமும் அதன் எச்சங்களும் இருக்கும் வரை திராவிடமும் திராவிடக் கருத்தியலும் அரசியலும் வாழும், வளரும்.அது ஈழத்திலும் நடக்கும் தமிழ் நாட்டிலும் நடக்கும்.

Link to comment
Share on other sites

பாரதி முதல் கைலாசபதி வரை

முனைவர். கோ. கேசவன்

கைலாசபதியின் ஆய்வுப் பங்களிப்புகள்: ஒரு மதிப்பீடு

கைலாசபதியின் ஆய்வுப் பங்களிப்புகளுக்குப் பின்புலமானவுள்ள அவரது ஆய்வுமுறையியல் அம்சங்களையும் அவற்றின் மீதான விமரிசனங்களையும் கண்டறிந்தாலே இக்கட்டுரை முழுமையடையும். அவரது ஆய்வில் வரலாற்றுப் பின்னணி, சமுதாயச் சூழல், மார்க்சிய சமூகவியல், ஒப்பியல் ஆய்வு, அறிவியல் அடிப்படை ஆகியனவற்றை அவர் குறிப்பிட்டிருப்பதை இதற்குமுன் கண்டிருந்தோம். பொருளியல் நிலை என்னும் அடித்தளத்தின் மேலே கலை இலக்கியம் முதலாய மேல்தளங்கள் அமைகின்றன என்ற அடிப்படையில் தன் கட்டுரைகள் அமைவதாகக் குறிப்பிட்டாலும், மேல்தள அமிசங்களுக்கு இடையிலான பரஸ்பரத் தாக்கத்தையும், மேல்தள அமிசங்கள் அடித்தளத்தைப் பாதிப்பதையும் அடித்தள அமிசத்தின் இறுதி நிர்ணயிப்புத் தன்மையையும் பல இடங்களில் மேற்கோள்களாகவும் பருண்மை விளக்கங்களாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது பல கட்டுரைகளில், இலக்கியத்தின் கடமை பிரச்சினைகளைச் சித்தரிப்பது மட்டுமன்றி; அவற்றை மாற்றுவதும் ஆகும் என்பதைக் குறிப்பிடுகின்றார். தத்துவவாதிகட்கு கார்ல்மார்க்சு விதித்த உடமையை இலக்கியப் படைப்பாளிகட்குக் கைலாசபதி விரிவுபடுத்தினார்.

கைலாசபதி தம் ஆய்வுகளை சமூகவியல் நோக்கில் செலுத்துவதாகக் குறிப்பிட்டு, மார்க்சிய சமூகவியல் என அதைத் தெளிவாக்கினார். முதலாளிய சமூகவியல், இயற்கை அறிவியல் பிரிவுகளையும் சமூக அறிவியல் பிரிவுகளையும் தத்துவ அறிவையும் ஒன்றுடன் ஒன்று பிணைத்து அவற்றின் சார்புத்தன்மையில் நோக்காமல் தனித்தனியே காண்பதுடன் அவற்றை இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்துடனும் காண்கிறது என்கிறார். மார்க்சிய சமூகவியல், விஞ்ஞான பூர்வமாகவும் புறநிலையாகவும் சமூதாயத்தை ஆராய்வதற்கு ஏதுவாக, சமுதாய இயக்கங்களையும் தத்துவ இயலையும் ஒருங்கிணைத்து இவற்றின் இயக்காற்றலை ஆராய்வதாகும். (சமூகவியலும் இலக்கியமும், பக். 15 - 20)

கைலாசபதி சொல்வதைப்போல் மார்க்சிய ஒளியில் அறிவியல் அளவில் ஆய்வு நடத்துபவர்க்கு ஒப்பியல் ஆய்வு இன்றியமையாதது (ஒப்பியல் இலக்கியம், பக். XIV). 'இவரைப் பொறுத்து சமூகவியலில் உண்டாகிய ஈடுபாடே ஒப்பியல் ஆய்வுக்கு இட்டுச் சென்றதனால், அது குறித்தே ஒப்பாய்வுகளை அதிகம் மேற்கொண்டார். ஒப்புமைகள் தோன்றக் காரணமாயிருந்த பகைப்புலத்தை விளக்குதல், படைப்பாளிகட்கும் சூழலுக்கும் உள்ள பரஸ்பரத் தொடர்பினை அறிந்து கொள்ளல் ஆகியவை இதன் அம்சங்களாக உள்ளன; இந்த ஆய்வின் மூலமாக, இரண்டு நிகழ்வுகளுக்கு இடையிலான ஒற்றுமைகட்கு மத்தியிலும் நுண்ணிய வேறுபாடுகள் கண்டறியப்பட்டு ஒரு நிகழ்வின் தனிப்பண்புகளைத் திடமாகக் கண்டறிய முடியும்; தனிப்பண்புகள், பொதுப் பண்புகள் என்பனவற்றை உணர வழிகாட்டுவதுடன் ஒப்பிலக்கிய ஆய்வு, வரலாற்று அடிப்படையிலான ஆராய்ச்சிக்கு ஏதுவாக அமைகிறது. (ஒப்பியல் இலக்கியம்,பக். 39, 47 மற்றும் 50).

இங்கு கைலாசபதியின் ஒப்பியல் ஆய்வு அடிப்படைகள், வரலாற்று அளவிலும் இயங்கியல் அளவிலும் காணப்படுகின்றன. காலம் - களம் ஆகியனவற்றில் உள்ள பண்பு ரீதியிலான வேறுபாடுகளை முற்றாகப் புறக்கணித்துவிட்டு இரண்டு பொருள்களையோ நிகழ்வுகளையோ ஒப்பாய்வு செய்தல் பயனில்லை என்பதே அவரது கருத்தாகும். மேலும் ஒப்பாய்வின் நோக்கம் இரண்டின் தனித்தன்மைகட்கு ஊடாகப் பொதுத் தன்மைகளைக் கண்டறிவதும் பொதுத்தன்மைகளினின்று தனித்தன்மைகளைக் கண்டறிவதும் ஆகும். சங்கப் பாடல்கள் - கிரேக்கப் பாடல்கள்; சித்தர் தத்துவம் - தாவோயிச நெறி; பாரதியும் - சுந்தரம்பிள்ளையும்; பாரதியும் - மேனாட்டுக் கவிஞரும் என்ற அவரது ஒப்பாய்வுகள் குறிப்பிடத்தக்கனவாக இருப்பினும், பாரதியையும் சுந்தரம்பிள்ளையையும் இணைத்து ஒப்பாய்வு செய்தல் கால - கள அளவுகளிலான பண்பு வேறுபாடுகளைப் புறக்கணித்திருப்பதைப் போலத் தோன்றுகிறது; தேசப் பற்று மொழிப்பற்று, சமூக நோக்கு ஆகியனவற்றில் பாரதி விஞ்சியிருப்பதை எடுத்துக் காட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சமனற்ற ஒப்பீடு ஆக அக்கட்டுரையுள்ளது. இன்னொன்று நமது இலக்கியத்தின் தனிப்பண்புகளையும் பிற இலக்கியங்களோடு அதற்குள்ள பொதுத்தன்களையும் கண்டறிய ஒப்பியல் ஆய்வு பயன்படும் எனக் கைலாசபதி சரியாகக் கூறி இருப்பினும், பண்டைய இலக்கியங்களையும் கிரேக்க இலக்கியங்களையும் ஒப்பாய்வு செய்யும் பொழுது, பண்டைய இலக்கியங்களின் தனித்தன்மைகளைக் கண்டறிவதிலும் வெளிப்படுத்துவதிலும் கொடுக்கப்பட்ட ஆழத்தைவிடக் கூடுதலாக பொதுத்தன்மைகளைக் காண்பதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச இலக்கியத்தின் ஒரு பகுதி தமிழிலக்கியம் என்ற கருத்துக்கு அரண் செய்வதாக இது அமைகிறது. தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு ஆகியனவற்றை முற்றாகத் துண்டித்துப் பார்க்கும் பழமை குறித்த இயக்க மறுப்பியல் கருத்தோட்டத்துக்கு கைலாசபதியின் நிலை முற்றான, எதிர்மறை நிலையாக உள்ளது; சம நிலையாக இல்லை. நமது இலக்கியத்தை சர்வதேச இலக்கியத்தின் ஒரு பகுதியாகக் கண்டறிந்து அதன் தனித்தன்மைகளையும் அடையாளப்படுத்த வேண்டும். கைலாசபதி சுட்டிக் காட்டிய ஒப்பியல் ஆய்வு நெறிகளைக் கொண்டே இதைச் செய்ய முடியும்.

தமிழாராய்ச்சி இருக்கும் நிலையில் இயக்கவியல் அறிவே பெரிதும் வேண்டப்படுவதாகும். வர்க்கக் கண்ணோட்டத்திலே கால ஆராய்வையும் சரித்திர உணர்வையும் ஆணையாகக் கொண்டு இலக்கிய ஆய்வு நிகழ்த்துவது இன்றியமையாதது (அடியும் முடியும், பக். 46 மற்றும் 262) என்கிறார். இது வர்க்கக் கண்ணோட்டம், வரலாற்றுணர்வு, இயக்கவியல் ஆகிய முறைகளைச் சுட்டுகின்றது. இதனால்தான் எதையும் மாறிக்கொண்டு இருக்கிற நிகழ்வுப் போக்கில் காண்பதோடு அவற்றின் வர்க்கக் கண்ணோட்டத்தையும் அவர் தெளிவுபடுத்துகின்றார்.

ஆய்வில் அறிவியல் தன்மையைக் கைலாசபதி பல இடங்களில் வலியுறுத்துகின்றார். ஆராய்ச்சி முறை மயக்கமின்றியும் அறிவியல் சார்ந்ததாயும் இருத்தல் வேண்டும். ஒரு நிகழ்வை பொருளை அறிவியலார் கூர்ந்து நோக்கிக் குறித்துக் கொள்வனவற்றைத் தரவுகள் என்றும், இத்தரவுகளுடன் பிற தொகுதி குறித்த தரவுகளையும் ஒப்பிடும் பொழுது குணங்களைக் காண்கிறோம் என்றும் குறிப்பிடுகிறார். இப்படிப் பல முறைகளில் கண்டபின் பொது முடிவுகளிலிருந்து விதிகள் வகுக்கப்படுகின்றன. நம் முடிவுகளைக் கருது கோள்களாகக் கொண்டு ஆய்வு நடத்தும் பொழுது அத்தகைய கருதுகோள், தவறாக திருத்தங்கட்கு உட்பட வேண்டியதாக இருப்பதையோ அறிய முடியும். இத்தகைய ஆய்வை அறிவியல் தன்மையுடையதாகக் கைலாசபதி குறிப்பிடுகின்றார். (ஒப்பியல் இலக்கியம் 11 - 12).

அறிவியல் எடுகோள்கள் முதன்மை இடம் வகிக்கின்றன. இரண்டு அடிப்படையான மெய்ம்மைகளை அவர்கள் முதற்படியாகக் கொள்வர். அவை 1) நடப்பதெற்கெல்லாம் காரணங்கள் உண்டு 2) ஒரே தன்மையான காரணங்களும் நிலைகளும் மாறாதிருக்குமானால், ஒரே மாதிரியான பயனை அளிக்கும். இதை இலக்கிய ஆய்வுக்கும் பயன்படுத்தலாம். அதாவது ஒரு நூல் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் தோன்ற சில காரணங்கள் இருத்தல் வேண்டும்; காரணங்களைத் தேட வரலாற்றுப் பார்வை தேவைப்படுகிறது; இதைப் பயன்படுத்தும் பொழுது அவற்றின் தோற்றத்துக்கு பொருளாதார - சமூக - அரசியல் நிலைகள் காரணிகளாக அமைகின்றன. இக்காரணிகளைப் புறநிலையில் வைத்து ஆராயவேண்டும். இயற்கை அறிவியல் துறைக்குப் பொருந்தக் கூடிய சோதித்தறியும் தன்மை, தற்சார்பற்ற நிலை, மயக்கமின்மை முதலியவற்றைக் கொண்டு ஆராயவேண்டும்.இரண்டாவது எடுகோளை ஒப்பாய்வில் பயன்படுத்தலாம் (ஒப்பியல் இலக்கியம், பக். 10 - 14) என்கிறார்.

இலக்கியத்தின் இயக்க விதிகளைத் தெரிந்து கொண்டால்தான், நாம் இலக்கியத்தை நமதாக்கிக் கொள்ள முடியும்; இத்தகைய இயக்கவிதிகள் விடயச் சார்பானவை; அதாவது புறநிலை மெய்ம்மையானவை. இவற்றைத் தற்சார்பு அற்ற நிலையில் - விருப்பு வெறுப்புகளின்றி - ஆராய்ந்தாலன்றி, தெரிந்து கொள்ளல் இயலாது (ஒப்பியல் இலக்கியம், பக் 21) என்கிறார்.

அறிவியல் ஆய்வுமுறை பற்றிய மேற்குறித்த கைலாசபதியின் கருத்துகளை கலை இலக்கியத்துறைக்கும் பயன்படுத்த வேண்டும் என்றே பல இடங்களில் வற்புறுத்துகின்றார் (அடியும் முடியும், பக். 48) இது குறித்துக் காண்பதற்கு முன் அறிவுக் கோட்பாடு குறித்த அவரது கருத்துகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

பி.கு.: இன்னும் சில இருக்கின்றன. இப்பொழுது இவ்வளவும் தான் தட்டச்சு செய்ய முடிந்தது. மிகுதி பிறகு. தலைப்பு கைலாசபதி பற்றியதாக இல்லாவிட்டாலும், கைலாசபதியின் கருத்தை உள்வாங்கிக் கொள்வதற்கு முதல் அவரின் காலம், சூழல், அரசியல் பின்னணிகளைக் கருத்தில் கொள்வதே அவரையும் அவரது கருத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு உதவும். தேவைப்படுபவர்கள் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம். இதில் உள்ள கருத்துக்கள் ஏற்புடையன, ஏற்புடையன அல்ல என்பதற்கப்பால் பயனுள்ளது.

Link to comment
Share on other sites

இலக்கியம் வரலாறு ஆகுமா என்பதற்கான பதில் கீழ் உள்ள ஆய்விஉக் கட்டுரையில் சிவத்தம்பி அவர்களால் விளக்கப்படுகிறது.இலக்கியங்க

Link to comment
Share on other sites

இப் பின்னணியிலேயே இறையனார் அகப்பொருளுரை யாசரியரின் தெளிநிலையான இந்துச் சார்பினைக் கண்டு கொள்ளல் வேண்டும்.

ஐதீகவாக்கம் என்பது வரலாற்றினைத் 'தயாரிக்கும்' ஒரு வகைமுறையாகும். இறையனார் களவியலுரையிலே தரப்பட்டுள்ள சங்கம் பற்றிய கட்டுக்கதை , தமிழை இந்துசமயப்படுத்துவதற்கான, முக்கியமாக அதனைச் சைவ மரபின் ஓரங்கமாக ஆக்குவதற்கான ஒரு முயற்சியேயாகும். இவ்வாறு நோக்கும்பொழுது, தமிழிலக்கிய வரலாற்றில் இவ் ஐதீகத்துக்குரிய இடம் பெருமுக்கியமுடைய ஒன்றாகும். வெளிப்படையாகச் சமண, பௌத்தச் சார்புள்ள ஒரு நிறுவனத்தினை ('சங்க'த்தினை) எடுத்துக்கொண்டு அதற்கு ஓர் இந்து உருவும் பொருளும் கொடுக்கும் முயற்சியினை இக்கதையிலே காணலாம். இதனிலும் பார்க்கச் சுவாரசியமானது. அக்கதைக்குள் அரசர்கள் கொண்டு வரப்படும் முறைமையாகும். கதையின் அமைப்பை நோக்கும்பொழுது, அவ்வச் சங்கங்களின் காலத்திலே ஆண்ட அரசர்களின் தொகையும் இலக்கிய நடவடிக்கைகளில் (பாட்டுக் கட்டுவதில்) ஈடுபட்ட அரசர்களின் தொகையும் கதையோட்டத்துக்கு அத்துணை முக்கியமானவையல்ல. ஆனால் அதுவே கதையின் žவாதாரன பகுதியாக்கப்பட்டுள்ளது. உண்மையில்ல, சங்கம் பற்றிய கதை தொடங்கும் பகுதி பின்வருமாறு தொடங்குகின்றது.

'தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்

என மூன்று சங்கம் இரீஇயனார் பாண்டியர்'

கடவுளர்களே பங்கு கொள்ளும் ஒரு சங்கத்திற்கு ஓர் அரச தளத்தை கற்பிப்பதன் மூலம், அப்பொழுது மேற்கிளம்பும் பாண்டிய ஆட்சியை, சந்தேகத்துக்கு அப்பாலான ஒரு முறைமையில் முறைவழிப்பட்ட தாக்குவதற்கான முயற்சி இக்கதையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முச்சங்கம் பற்றிய கதை, தமிழிலக்கிய வரலாற்றை சைவத்தின் வரலாற்றுடன் இணைப்பதற்கான முதல் முயற்சியாகும்.

நாயன்மார்கள் தமிழுக்கு முற்றிலும் சைவச் சார்பான தோற்றம்பற்றிக் குறிப்பிடுவதும், தமிழை வடமொழிக்கு இணையாகக் கொள்வதும், இம்முயற்சியின் அடுத்தபடிகளாகும். இவற்றினைப்பற்றிப் பேசும் இவ்வேளையில், தமிழைச் சிவனுடன் தொடர்புபடுத்தும் இம்முயற்சிக்கா‘ன பௌத்த பதிற் குறிப்பினைப்பற்றி இங்கு குறிப்பிடலாம்.

'ஆயுங் குணத்து அவலோகி தன் பக்கல் அகத்தியன் கேட்டு

ஏயும் புவனிக்கு இயம்பிய தண் தமிழ் ஈங்க உரைக்க

நீயும் உளையோ எனில் கருடன் சென்ற நீள் விசும்பின்

ஈயும் பறக்கும் இதற்கு என் கொலோ சொல்லும் ஏந்திழையே'

- வீரசோழியம்-பாயிரம் (11)

வீரசோழிய ஆசிரியர் மகாயான பௌத்தத்தைச் சார்ந்தவராகவிருத்தல் வேண்டும். அவர் தமிழை அவலோகி தேஸ்வரரே அகத்தியருக்கு உபதேசித்தார் என்கின்றார் (இது சொல்லப்பட்ட காலம் சைவத் தமிழ் மரபைக் காக்க இராஜராஜன் முதல் சேக்கிழார் வரையுள்ள சோழப் பேரரச ஆட்சியுறுப்பினரே முன்னின்று உழைத்த காலமாகும்). இதே போன்று ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றிய மரபும் தமிழ் இலக்கியத்தின் பௌத்த சமணக் கூறுகளை முதன்மைப்படுத்துவதற்கான முயற்சிகளேயாகும். தமிழ்நாட்டில் அவர்களது பண்பாட்டுச் செல்வாக்கு ஒங்காதிருந்த காலத்தில் (9-ம் நூற்றாண்டு முதல் 11-அம் நூற்றாண்டு வரை) தாங்கள் எழுதிய இலக்கியக் கூற்றுக்குத் தனியான ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்க முனைந்தது ஆச்சரியத்தைத் தருவதன்று.

குறித்த அப்பண்பாட்டுச் சூழல்களில் வரலாறெழுது முறையியல் தொழிற்பட்ட முறையினை நோக்கும்பொழுது, இந்த ஐதீகங்களை உண்மையில் வரலாழெழுதுவதற்கான முயற்சிகளாகவே கொள்ளல் வேண்டும். எந்த ஒரு மதமும், தனது இலக்கியப் படைப்புக்கள் வெளிவரும் மொழி மீது தனக்குள்ள உரிமையினை முன்வைப்பது அத்தியாவசியமே. அதன் காரணமாக அம்மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தையே அது தனதாக்கிக் கொள்ள முயல்வது இயல்பே. நமது பண்பாட்டுச் சூழலில் இலக்கிய வரலாறு தொழிற்பட்ட ஒரு சிறப்பான அமிசமாக இதனைக் கொள்ளுதல் வேண்டும்.

பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தில், கடந்த கால இலக்கியத்தைச் சமகால சமூக-பண்பாட்டு, மத-அரசியல் தேவைகளுக்கு இயைபு படுத்தும் அடுத்த பெரும் நிகழ்ச்சியாக அமைந்தது பக்தி இலக்கியங்கள் கோவைப்படுத்தப்பட்டமையேயாகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைலாசபதி ஐயாவின் வாழ்க்கைக் காலம் ஈ வெ ராமசாமி போன்ரோரோடு ஒப்பிடும் போது எம்மை அண்மித்தது. அவர் 1933 இல் பிறந்து 1982 இல் மறைந்தார். 49 வருடங்கள் மட்டுமே வாழ்ந்தவர்.

"கம்பராமாயண ஆராய்ச்சி" எனும் நூலை வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்ற இந்திய சுதந்திர விடுதலைப் போராளி வழக்கறிஞர்...எழுதி இருந்தார். அதன் திறனாய்விலேயே.. கைலாசபதி ஐயா மேற்கண்ட தனது கருத்தியலை தெளிவாகத் தந்துள்ளார். அவர் ஓர் இலக்கியத்துள் எவ்வாறு.. திரிபுகளும்.. சேர்க்கைகளும் எழுந்துள்ளன அதன் அடிப்படைகளாக உள்ளவை என்ன உதாரணங்கள் என்ன என்று அழகாக எழுதி இருக்கின்றார். அந்த நிலை கண்டு வருந்தியும் உள்ளார்.

இந்த அடிப்படைகளைப் பற்றித்தான் இன்று அரசியல் அரங்கில் இராமாயணம்.. நுழையச் செய்யப்பட்டுள்ளது. ஆரிய - திராவிடக் கோசம் இராமாயணத்துள் எழவும்.. அரசியல் தான் காரணமே அன்றி.. இலக்கியம் அதற்குப் பொறுப்பாக முடியாது. இலக்கியம் தொடர்பான ஒரு சரியான ஒப்பிலக்கிய ஆய்வுக்குக் கூட இடமில்லை என்று வருத்தப்படும் அளவுக்கு இராமாயணம்.. திரிபுகளால் அதன் இயல்பிழந்து போயிருக்கிறது என்பதை உணரக் கூடியதாக உள்ளது.

கம்பராமாயணம் பற்றி... Dr. C.R. Krishnamurti,

Professor Emeritus, University of British Columbia, Vancouver, B.C. Canada பார்வைகள்...

6.2. Conclusion

In conclusion, Kampan made intelligent use of VAlmIki's story, introduced appropriate changes in accordance with the tradition and culture of the Thamizh people and presented his own ideologies to rectify social problems.

To reduce the sectarian animosities arising out of the Bhakthi movement, he stressed the concept of the Supreme Being (முதற்காரணன்) notwithstanding the different names.

To minimize disruption of married life by uncontrolled passions and the involvement of unchaste women (பரத்தையர்), he introduced the 'one man-one woman' concept as his central theme.

To improve universal brotherhood regardless of caste or creed he set up the example of rAman, Kuhan, SugrIvan and VibIdaNan.

To emphasize the nobility of forgiveness, he made rAman skillfully manoeuver Dasarathan forgive KaikEyi. Finally Kampan's genius may be ascribed to his deep moral conviction and idealism, to his capacity to express them with his tremendous literary skill, and to his success in conveying them to ordinary folks.

He first made the Absolute Being (முலப்பொருள்) born in the world as a human being, rAman. Once in this world, Kampan made rAman go through all the sufferings like ordinary men. At the end virtue won. SugrIvan's, the monkey King, on seeing rAman reflected that, after all, humanism won (மானிடம்வென்றது) :

தேறினன், அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே

மாறி, இப்பிறவில் வந்தார் மானுடர் ஆகி மன்னோ

ஆறுகொள் சடிலத்தானும், அயனும், என்று இவர்கள்ஆதி

வேறுஉள குழுவை எல்லாம், மானுடம் வென்றது அன்றே.

(நட்பு கோல் படலம் 19)

The moral is that man can win over all his obstacles if he leads a virtuous life (அறவாழ்க்கை). This advice would be an excellent remedy to most of our social problems today! No wonder that Kampan is acclaimed as the King of literary kings (கவிச்சக்கரவர்த்தி கம்பன்).

http://www.tamilnation.org/literature/kris...rti/06chola.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி அப்ப சொல்லவாறதன் சாரம்சம்

இராமாயணம் சான்றுகளின் அடிப்படையில் உருவான இலக்கியம் இல்லை. அதனால் அது வரலாற்றின் பிரதிபலிப்பில்லை.

ஆனால் அதில் காணப்படும் 1...2 புவியல் கூறுகளிற்கு ஒற்றுமையை இன்றும் காணக் கூடியதாக இருக்கிறது. எனவே அது முற்றுமுழுக்க கற்பனை அல்ல அதற்குள் உண்மையும் இருக்கு. அதனால் அதன் அடிப்படையில் வரலாற்றின் சமூகவியல் பக்கங்களிற்கும் சான்றுகளை தேடலாம். :unsure:

உங்களின் மேலுள்ள சாரம் என்பது நான் சொல்ல முனைந்ததற்கு மாறானது.

இராமாயணம்.. ஒரு இலக்கியம். அதை நான் சமூக இலக்கியமாகக் கருதி சமூகத்துக்கு வழிகாட்டத்தக்க விடயங்களைக் கருப்பொருளாக்கியுள்ளது என்று கூறி அதை இலக்கியமாகப் பார்க்க வேண்டும் என்று முன்னைய விவாதங்களிலும் முன் வைத்துள்ளேன்.

இராமாயணம்.. பரி பூரணமாகக் கற்பனையல்ல. அது நிகழ்கால புவியியல் அடையாளங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதானது.. அதனடிப்படையில் வரலாற்றுச் சான்றுகளை தேடல் செய்து பார்க்க ஏன் அனுமதிக்காது ஏன் கூடாது என்றும் வினவி இருந்தேன். சான்றுகள் கிடைப்பதும் கிடைக்காததும் இரண்டாம் பட்சம். ஆனால் இலக்கிய உரைப்பின் படி.. அதில் சான்றுகளைத் தேடுதல் தவறல்ல. தேடாமல் வார்த்தைகளால்.. இராமர் எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.. இராமர் அணை என்று அழைக்கப்படுவது சுண்ணாம்புப் பாறை.. என்று கூறுவதும் கூட ஒரு வகையில்.. கவர்ச்சியான பொய்கள் தான்.. கற்பனைதான். அதற்கும் சான்றுகள் கிடையாது.

ஆக.. வரலாற்றுச் சான்றுகள் காட்டப்பட்டுள்ள புவியியல் அடையாளங்களூடு பெற வாய்ப்பிருக்கா என்றறிந்து கொள்வதால்.. இலக்கியம் தரமிழந்து விடாது. மாறாக.. அது அப்படியான ஒரு வாய்ப்பை அளித்ததற்காக தரமுயருமே தவிர.

இராமனை ஒரு தரப்பு ஆரியன்.. பார்பர்னன் என்ற... இன்னோர் தரப்பு.. திராவிடன்.. தமிழன் என்ற.. இவை எவற்றிற்கும் ஆதாரம் கிடையாது இலக்கியத்தில். கம்பன் அந்த அளவுக்கு இலக்கியத்தை.. அரசியல் மயப்படுத்தல்ல.. அதுவும் நவகால இந்திய உபகண்டத்தின்ன் அரசியல் தேவைகள் கருதி அவன் இலக்கியம் படைக்கவில்லை. இதை உணர்ந்திருந்தும்.. இன்னும் பலர்.. இராமாயணத்தையே கட்டிக் கொண்டு.. அரசியல் நடாத்துவதும்.. சமூகப் புரட்சி நடாத்துவதும் வேடிக்கையாக உள்ளது. :lol::wub:

Link to comment
Share on other sites

ஒரு மாதிரி தேசிய தலைவரையும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் எதிரியாக காட்டி விடுங்கள்... இஸ்லாமியரை எதிரி ஆக்கியச்சு... இனி இந்துக்களா..?? நல்லது...!

உங்கட மத எதிர்ப்பை தமிழனோடை நிப்பாட்டினால் நல்லது.. அதை தேசியம் சார்ந்த விடயங்களுக்கை புகுத்தி எல்லாத்தையும் குழப்பாதீர்கள்... தேசிய தலைவரின் கருத்தாக வருவது அந்த தேசியத்தின் கருத்து... தங்களின் நலனுக்காக அதை திரிபடைய செய்வது என்பது யாழ்களத்துக்கு தான் இழுக்கு....

பெரியார் ஈவேரா சாமி இப்ப இல்லை செத்து போனார்... அவரிடம் விளக்கம் கேக்க முடியாது... ஆனால் தேசிய தலைவரிடம் கேட்க்க முடியும்... இங்கை அவரை வம்புக்கு இளுப்பவர்கள் அவருக்கு மடல் அனுப்பி கேட்க முடியும்... அல்லது கல்வித்துறை பொறுப்பாளர் இளங்குமரன்( பேபி சுப்பிரமணியம்) அண்ணாட்டையும் கேட்க்க முடியும்.... உங்களது ஊகங்களை எல்லாம் தள்ளி வச்சிட்டு அவர்களுக்கு மடல் அனுப்பும் வளியை பாருங்கள்...

யாழ்கள நிர்வாகம் இதிலை தலையிட்டு அவர்களின் கருத்தை சொல்வது நலம்...!!

Link to comment
Share on other sites

தேசியத் தலைவர் இந்து மதத்திற்கோ, இஸ்லாம் மதத்திற்கோ, அல்லது வேறு எந்த மதத்திற்கோ எதிரி அல்ல.

அவர் தமிழிற்கு எதிரானதற்கு எதிரியாக இருக்கிறார். மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்குகின்ற அனைத்திற்கும் எதிரியாக இருக்கின்றார்.

தேசியத் தலைவர் தமிழ் மக்களின் தலைவர். அவரிடம் உலகின் மற்றைய தலைவர்கள் பற்றிய சிந்தனை இருக்கும்.

தேசியத் தலைவர் தந்தை பெரியார் மீது மிக உயர்ந்த மதிப்பு வைத்திருப்பதாக நான் அறிந்திருக்கிறேன்.

விடுதலைக்காக போராடுகின்ற ஒரு தலைவருக்கு, மக்களின் விடுதலைக்காக போராடிய தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் மீது உயர்ந்த மதிப்பு இருப்பது என்பது இயல்பான விடயம்தான்.

ஆனால் பெரியாருக்காக பரப்புரை செய்ய வேண்டிய தேவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இல்லை.

பெரியார் போராடிய களம் வேறு. விடுதலைப் புலிகள் போராடுகின்ற களம் வேறு. போராட்ட வடிவங்களும் வேறு. ஆகவே தமது போராட்டத்தில் தந்தை பெரியாரை நினைவுபடுத்த வேண்டிய சந்தர்ப்பமோ, அவசியமோ விடுதலைப் புலிகளுக்கு இல்லை.

ஆனால் தமது இனத்தின் அடையாளத்திற்காக போராடுகின்ற ஒரு இனத்திடம் தன்னுடைய அடையாளங்களை அழிக்கின்ற மதத்திற்கு எதிரான சிந்தனைகள் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த சிந்தனை அனைவரிடமும் பரவக் காலம் எடுத்தாலும், இது நடந்துதான் தீரும்.

அதுவும் இந்துப் பார்ப்பனியம் பௌத்த சிங்களத்தோடு கைகோர்த்து நிற்கும் இந்த வேளையில் பெரியாரின் சிந்தனைகளை ஈழத் தமிழினம் உள்வாங்குவது தவிர்க்க முடியாதது.

Link to comment
Share on other sites

இஸ்லாத்துக்கு புலிகள் எதிரிகள் இல்லை... ஆனால் இண்று வரை அந்த மக்களின் எதிரிகளாக சித்தரிக்க பாடுகிறார்கள்... அதுக்கு எங்களின் தமிழர்களின் உபயம் அதிகம்... அது போல பெரியார் , புலிக்கள் சம்பந்தமான ஆராட்சிகள் கூட அந்த இடத்துக்குதான் கொண்டு செண்று விடும்...

பாதிரியாரின் வாகனத்துக்கு குண்டு வைத்து, பாதிரியாரைகடத்தி கொலை செய்து, மடுவுக்கான பாதைக்களை எல்லாம் மூடி இப்படி அதுக்கு எல்லாம் புலிகள்தான் காரணாம் எண்று அரசாங்கம் பிரச்சாரம் செய்கிறது... அவைகளால் புலிகளை கிறிஸ்தவ எதிரிகளாக காட்ட..! ஆனால் அவை எடுபடாமல் போவதுக்கு காரணம் எங்களின் மக்களின் கிறிஸ்தவ குருக்களுக்கும் தேவாலயங்களுக்கும் கொடுக்கும் ஆதரவு , அதுக்கு பிறகுதான் புலிகளின் செயற்பாடு....!

இப்போ நேரடியாக புலிகள் யாருக்கும் எதிரிகள் இல்லை ஆனால் மக்களின் செயற்பாடுகள் புலிகள் செய்தவைகளை வேறு விதமாக அர்த்த படுத்தியதால், செயற்பட்டதால் எமக்கு எதிரிகள்... அதுபோலதான் தலைவர் எதையோ சொல்ல.. அதை நீங்கள் அர்த்த படுத்தும் முறை எங்களுக்கு நண்பர்கள் வட்டத்தை பெருக்க உதவாது...

தங்களின் நிலைப்பாடுகள் பற்றி புலிகள் வெளிப்படையாக அறிக்கை விடுவார்கள்... ஆதுவரைக்கும் உங்களின் கருத்துக்கள் எல்லாருக்கும் குழப்பதைதான் ஏற்படுத்தும்... தங்களுக்கு இருக்கும் வேலைகளை எல்லாம் விடுத்து நாங்கள் ((பெரியாரை ஆதரித்து) இந்துக்களை எதிர்க்க வில்லை எண்று புலிகளை அறிக்கை விட வைக்காதீர்கள்.... இதுதான் தேசிய தலைமைக்கு நீங்கள் செய்ய கூடிய சிறிய உதவி....!

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகள் எந்த மதத்தவர்களுக்கும் எதிரி இல்லை.

அதே வேளை விடுதலைப் புலிகள் ஏற்கனவே பல முறை தமது அறிக்கைகளில் ஆரியத்தை, மனுதர்மத்தை, புராணங்களை, இராமாயணத்தை, பார்ப்பனியத்தை கண்டித்திருக்கிறார்கள்.

இந்த அறிக்கைகளை அவர்கள் திரும்பப் பெறவும் மாட்டார்கள். இவைகளை ஆதரிப்பதாக அறிக்கை விடவும் மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நீங்கள் கண்டிக்கின்ற விதத்துக்கும், அவர்களுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. கண்டித்தல் என்ற ஒரு பதத்தை மட்டும் வைத்து இரண்டையும் முடிச்சுப் போடலாகாது.

Link to comment
Share on other sites

தயா!

நீங்கள் சொல்வது போன்று விடுதலைப் புலிகளுக்கு முக்கிய கடமை உண்டு. இந்த நேரத்தில் அவர்கள் ஆரியம், பார்ப்பனியம் போன்றவை பற்றி தனியாக அறிக்கை விட மாட்டார்கள்.

தாங்கள் விடுகின்ற அறிக்கைகளில் இவைகளை மேலோட்டமாகத் தொட்டுக் கொண்டு செல்வார்கள்.

தேசியத் தலைவர் "இலங்கை மண்" நாடகத்திற்கு வெளியிட்ட ஆசியுரை, விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் பத்தாவது ஆண்டு விழாவிற்கு வெளியிட்ட அறிக்கை, அத்துடன் விடுதலைப் புலிகள் முக்கிய தலைவர்களின் உரைகள் போன்றவற்றில் எல்லாம் நாம் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை உணர்ந்து கொள்ளலாம்.

ஆனால் விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் மண் மீட்பிற்குத்தான் முதலிடம். மற்றவைகள் எல்லாம் அதன் பிறகுதான். ஆகவே அவர்கள் நாம் பேசுகின்ற அதே தொனியில் இவைகளைப் பற்றி பேச மாட்டார்கள்.

அத்துடன் தமிழீழத்தில் இந்துத்துவமும் பார்ப்பனியமும் கட்டுப்படுத்தக் கூடிய அளவில்தான் உள்ளது.

ஆனால் ஐரோப்பாவில் அப்படி அல்ல. இந்துத்து வெறி ஈழத் தமிழர்களின் மனதில் ஊறி, அவர்களின் மூளையை மழுங்கடித்து வருகிறது. எமது தமிழக உறவுகளை கொச்சைப் படுத்துகின்ற அளவிற்கு இந்த வெறி வளர்ந்துள்ளது. ஆகவே ஐரோப்பில் உள்ள நிலைக்கு ஏற்றபடித்தான் எங்களுடைய தொனி இருக்கும்.

Link to comment
Share on other sites

இந்துவம் எங்கும் இல்லாத அளவுக்கு ஈழத்தில் இருக்கிறது , அங்கு திருவிழாக்கள் எல்லாமே நடை பெறுகின்றன, ( எல்லா மதங்களினதும்) அங்கு மந்திரங்கள் தமிழில் தான் சொல்ல வேண்டும் எண்று கட்டுப்பாடு கிடையாது.. லத்தீன், ஆங்கிலம், அரபு, சமஸ்கிருதம் எல்லாமே அனுமதிக்கப்பட்டவை... அதை தாண்டிய தனிப்பட்ட கருத்துக்களை ஒரு தேசியத்தின் கருத்துக்களாக நிறுவ நிக்காதீர்கள்.. அவை கொள்கை பிரகடனமோ... அல்லது அறிக்கைகளோ இல்லை...

அப்படி தாங்கள் ஒரு கடப்பாட்டுக்கு வந்துவிட்டால் அதை தீவிரமாக அமுல்படுத்தும் ஆழுமையும், வல்லமையும் தமிழர் தேசியத்துக்கு இருக்கிறது... அதை அவர்கள் செயற்படுத்த இல்லை எண்றால் என்ன அர்த்தம் என்பதை யோசித்து பாருங்கள்...

Link to comment
Share on other sites

எது முதல்? என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. தமிழீழ விடுதலை என்பதே அது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது தாயக விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்துள்ள அமைப்பு. எப்படியாகப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்கிற தெளிவு அவர்களிடம் உள்ளது. எனவே அந்த அமைப்பை மத சார்பு அமைப்பாகவும், மத எதிர்ப்பு அமைப்பாகவும் காட்டுதல் அவசியமற்றது என்பதை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அக்கறையுள்ளவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.