-
Tell a friend
-
Topics
-
0
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி! உக்ரைனுக்கு தாக்குதல் வரம்பை இரட்டிப்பாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அமெரிக்காவின் சமீபத்திய 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இராணுவ தொகுப்பில் இது உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2022 பெப்ரவரி முதல் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவியின் மொத்தத் தொகையை 29.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகக் கொண்டுவருகிறது 150 கிமீ (93 மைல்) தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் இந்த தொகுப்பில் அடங்கும். ஆனால், இணைக்கப்பட்ட கிரிமியாவின் சில பகுதிகளைத் தாக்குவதற்கு வெடிமருந்துகள் பயன்படுத்தப்படலாம் என்ற ஊகத்தின் பேரில் அதிகாரிகள் பெற மறுத்துவிட்டனர். ‘நடவடிக்கைகள் குறித்த உக்ரைனிய திட்டங்களைப் பொறுத்தவரை, அது அவர்களின் முடிவு’ என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிக் ஜெனரல் பாட் ரைடர் ஊடகங்களிடம் கூறினார். ‘இது மீண்டும், தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவர்களின் இறையாண்மை பிரதேசம், ரஷ்ய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை திரும்பப் பெறவும் உதவும்’ என அவர் மேலும் தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள் பலமுறை உக்ரைனுக்கு தாக்குதல் ஆயுதங்களை வழங்குவதை நிராகரித்துள்ளன.போர் விமானங்கள் போன்றவையை கொண்டு உக்ரைன் ரஷ்யாவையே தாக்கும் என்ற அச்சத்தால் இது தவிர்க்கப்பட்டது. https://athavannews.com/2023/1323019
-
By கிருபன் · பதியப்பட்டது
வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார். ஸ்டாலின்கிராட் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில், உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டிய ரஷ்ய ஜனாதிபதி, வரலாறு மீண்டும் நிகழும் என எச்சரித்தார். வோல்கோகிராடில் உரையாற்றிய புடின், ‘போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பார்கள் என்று நம்புபவர்கள் புரிந்து கொள்ளவில்லை, ரஷ்யாவுடனான ஒரு நவீன போர் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். நாங்கள் எங்கள் டாங்கிகளை அவர்களின் எல்லைகளுக்கு அனுப்பவில்லை, ஆனால் பதிலளிப்பதற்கான வழிகள் எங்களிடம் உள்ளன’ என கூறினார். கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புடினின் கருத்துகளை விபரிக்க மறுத்துவிட்டார். ஆனால், ஊடகவியலாளர்களிடம், ‘கூட்டு மேற்கு நாடுகளால் புதிய ஆயுதங்கள் வழங்கப்படுவதால், பதிலளிப்பதற்கான அதன் திறனை ரஷ்யா அதிகமாகப் பயன்படுத்தும்’ என்று கூறினார். https://athavannews.com/2023/1322954 -
By கிருபன் · பதியப்பட்டது
யாழ்.துரையப்பா மைதானத்தில் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வினை முன்னிட்டு யாழ். துரையப்பா மைதானத்தில் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது. அந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1323042 -
யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு எதிர்ப்பு By DIGITAL DESK 5 04 FEB, 2023 | 09:31 AM சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிஏற்றப்பட்டுள்ளது. இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/147398
-
பிரபாகரன் ஆயுதமேந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க இடமளிக்க முடியாது – சரத் வீரசேகர பிரபாகரன் ஆயுதமேந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். நெருக்கடிக்கு மத்தியில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டு நாட்டில் பிரச்சினைகளை தோற்றுவிக்க வேண்டாம் என மகாசங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். மகாசங்கத்தினரின் ஆலோசனைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதிப்பளித்து செயற்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் சரத் வீரசேகர தெரிவித்தார். 13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக இலங்கைக்கு அமுல்படுத்தப்பட்டது என்றும் இதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சில பாதுகாப்பு வழிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தகர்க்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். https://athavannews.com/2023/1323049
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.