Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

......ஜரோப்பிய அவலம்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜரோப்பிய அவலம்

ஜெர்மனிய நகரம் ஒன்றில் ஒரு தமிழ்குடும்பத்தில் அவர்களிற்கு மூன்று பிள்ளைகள் இதில் மூத்த மகளிற்கு 12 வயது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைக்கு கணணி பற்றி படிப்பிக்க ஆசைப்பட்டனர் . ஆனால் பெற்றோர்களிற்கு கணணி பற்றிய அறிவு இல்லை அதன் காரமாக அவர்களிற்கு தெரிந்த ஒரு தமிழர் அவரிற்கு கணணி பற்றி ஒரளவு தெரியும் அவரிற்கு வயது 43 அவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் இருக்கின்றனர். அவரின் வீட்டிற்கு தங்கள் மகளை கணணி பற்றி தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தனர். அந்த நபரோ படிக்க வந்த சிறுமிக்கு கணணியில் பாலியல் பற்றிய படங்களை போட்டு காட்டி அந்த சிறுமியையும் தனது பாலியல் சேட்டைகளிற்கு அடிமைப்படுத்தி விட்டார். ஒரு நாள் இந்த சிறுமி தனது கணணியில் அந்த மாதிரி படங்களை பார்த்து கொண்டிரந்தபோது அவரது தங்கை அதனை பார்த்து விட்டு பொற்றோரிடம் சொல்லவே விவகாரம் வெளியில் வந்தது. பெற்றோர்கள் அந்த சிறுமியை விசாரிக்கவே கணணி வித்தைகள் காட்டிகொடுத்தவரின் விழையாட்டுக்களும் வெளியில் வந்தது. சிறுமியின் பெற்றோகள் காவல்துறையின் உதவியை நாடவே அவர்களும் அந்த நபரின் கணணி மற்றும் சிறுமியின் கணணணிகளை பரிசோதித்தும் பின்னர் விசாரணைகள் மூலமும் அந்த நபர் குற்:றவாளிஎன நிரூபித்து இப்போ அந்த நபர் சிறையில் இருக்கிறார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெருப்பும் பஞ்சும் பக்கத்தில் இருந்தால் என்ன தான் நடக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் யாரை நம்புவதென்றே தெரியவில்லை?வேலியே பயிரை மேய்வது போல் இருக்கின்றது :) .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தவறு இங்கே பெற்றோரிடம் தான் இருக்கிறது . புலம் பெயர்ந்து வந்து, இந்த நாட்டு பாசையை படிக்கிறதிலும் பார்க்க பணம் உழைக்கிறதுதில் தான் மும்முரமா இருக்கிறாங்க .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தவறு இங்கே பெற்றோரிடம் தான் இருக்கிறது . புலம் பெயர்ந்து வந்து, இந்த நாட்டு பாசையை படிக்கிறதிலும் பார்க்க பணம் உழைக்கிறதுதில் தான் மும்முரமா இருக்கிறாங்க .

ரெம்பக் கொடுமையா இருக்கு கருப்பி உங்க கருத்து. எங்களால ஏலுமெண்டா படிச்சிருப்பம் தானே. ஏலாததை செய்யென்றால் எப்படி...???!

ஊரில ஒழுங்கா படிச்சிருந்தா ஏன் இங்க வரப் போயினம்.. ஏஜென்சிக்கு காசு கட்டி. ஊரில ஸ்கூலை இடைல விட்டவ.. ஓல் பெயில் விட்டவை.. ஏல் பெயில் விட்டவை.. யுனில குண்டு அடிச்சவவைதான்.. முதலில வெளிநாட்டுக்கு கிளம்ப முன்னிற்கிற ஆக்கள்...!

நானும் ஊரில இருக்கேக்க யோசிக்கிறனான்.. என்னடா இங்க ஓல் பெயில் விட்டவன் எல்லாம்.. வெளிநாட்டில போய்.. பெரியாளா வாரானே.. அங்க என்னவன் மந்திரம் தந்திரம் இருக்கோ என்று. இங்க வந்தாப் பிறகுதானே தெரிஞ்சுது கோலங்கள்...!

அதுதான் அந்தக் காலத்தில் எல்லாரும் BSc (London) என்று பட்டம் வைச்சிருப்பினம். ஆனால் லோக்கல் ஸ்கூலில ரீச்சரா இருப்பினம். காரணம்.. லண்டன் வந்து படிச்சிட்டு.. ஊருக்கு வந்து.. தங்கள் சேவையை வழங்கி தங்களை பெருமைப்படுத்திக் கொள்ளத்தான். ஆனால்.. இப்ப.. லண்டனுக்கு வந்தா.. படிக்கத் தேவையில்ல... ரெஸ்கோவில.. துடைக்க விட்டாலே போதும்.. நாங்க சமாளிச்சிடுவம்.

அதுவும் புலத்தில பிறந்து வளர்ந்தவை இருக்கினமே.. புலத்தில அப்பா அம்மா அசைலம் அடிக்க அவையை அண்டி பிழைக்க வந்தவை இருக்கினமே.. அவைட நினைப்பு.. கொஞ்ச நெஞ்சமில்ல. படிக்க யுனிக்கி வருவினம்.. ஆனா.. சோடி போட்டிட்டு.. சுத்திறதுதான் படிப்பே. அப்புறம்.. பிரேக்.. சோதனை அம்போ.. அதுவும் அரசாங்க லோன் எடுத்து படிக்கிறவைக்கு.. ஒரு கவலையும் இல்ல. ஏதோ சுதந்திரமான உலகில.. பறக்கிறதாத்தான் அவைட நினைப்பு. லோன்.. மூட்டையை தோளில போடுது தெரியாம.. துள்ளினம் பின்னால தெரியும்...! :D

இப்படியான நிலை இருக்கேக்க.. என்னதான் நடக்காது...! பெற்றோருக்குத் தெரியாமலே காதலிக்கினம்.. கைவிடுகினம்.. பின்னர் பெற்றோருக்கு முன்னால.. நல்ல பிள்ளைகளா நிக்கினம். இது செய்யுறவைக்கு கணணில... சேட்டை செய்யத் தெரியாதோ...????! நாங்கள் தான் நினைக்கிறம்.. பிள்ளையள் மனசு வெள்ளை என்று. அதுகள்.. மனசோ.. மலை மடு எல்லாம் கடந்து வந்திருக்கும்...! எதிர்பார்த்து ஏமாறுறது அப்பாவிப் பெற்றோர்.. இப்ப பிள்ளைகள் எதுவுமே.. பால் போல வெள்ளை மனசோட இல்லை. இருக்கவும் முடியாது. :D:lol::rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ரெம்பக் கொடுமையா இருக்கு கருப்பி உங்க கருத்து. எங்களால ஏலுமெண்டா படிச்சிருப்பம் தானே. ஏலாததை செய்யென்றால் எப்படி...???!

ரொம்பக் கொடுமைதானுங்க 43 க்கு 12 .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்கா சொன்னது போல் தவறு பெற்றோரிடம் தான் இருக்கு... அவர்கள் அந்த சிறுமியை படிக்க அனுப்பு முன் 42 வயது நபர் பற்றி அறிந்துவிட்டு படிக்க அனுப்பி இருக்க வேண்டும்.... இல்லை அவர்களும் கூட சென்றிருக்கலாம்....... இல்லை சிறுமி வீடு வந்ததும் என்ன சொல்லி கொடுத்தார் என்று விசாரித்திருக்கலாம்.. இது எல்லாம் செய்யாமல் விட்டது பெற்றோரின் பிழை தானே.....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெண்ணுக்கு 18 வயதென்றால் சட்டம் ஓகே சொல்லியிருக்கும் . அதற்குமுன் ஆணுக்கு எத்தனை வயசாயிருக்கட்டும் அது தப்புத்தான் . ஆண் தண்டிக்கப்பட வேண்டியவரே என்று சட்டம சொல்லுகிறது.

இப்ப புலம்பிப் பிரயோசனம் இல்லைத்தான் . ஆனா இனிமே இதுமாதிரி நடந்து , புலம்பாம இருக்கனும் எம்மவர் .

இப்போ பாடசாலையில் எல்லாம் கணனி பற்றிய விளக்கம் இருக்குது .

கணனி பற்றிய புத்தகங்கள் நிறையவே கடைகளில் கிடைக்கின்றது .அந்த நாட்டுமொழி தெரிந்த பிள்ளையால் ஏன் கணனியை அறிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது என்பது கேள்விக்குறியே .

பெற்றோர் பிள்ளை கணனியில் தேர்ச்சி பெற வேண்டும் எண்டு விரும்பி படிக்க அனுப்பினாங்களோ தெரியல . அப்படியெண்டால் பல இடங்களில் கணனி வகுப்புகள் நடைபெறுகிறது அங்கே பிள்ளையை சேர்த்து விட்டிருக்கலாம் .

பிள்ளை வீட்டில் என்ன கணனியில் படிக்கின்றாள் என்பது பற்றிய ஒரளவுக்கெணும் அதைப்பற்றி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அதைவிட்டு தொலைக்காட்சியில் நாடகத்தொடர் பார்ப்பதும் , ஒருவர் மாறி ஒருவர் வேலைக்கு செல்வதுமாய் இருந்தால் இவர்களை கண்காணிப்பவர்கள் யார் ?

இனி வருங்காலங்களில பெற்றோரும் பிள்ளைகளில் நிறைய அக்கரை எடுத்துக்க வேணும் . பிள்ளைகளுக்கு விருப்பமான வற்றை வேண்டிகொடுத்து அதில் இன்பங்கண்டு அவர்களை திருப்திபடுத்துவது மட்டும் அல்ல வாழ்க்கை . அதையும் விட பிள்ளைகளை ஆளுமை நிறைந்தவர்களாக சமூகத்தில் வழிநடத்துவது பெற்றோரின் பாரிய கடமை .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன எங்கே பார்த்தாலும் இப்படி தான் செய்தியா இருக்கு என்னால முடியல நான் வேற பேபி கவனமாக இருக்க வேண்டும் :lol: !!கறுப்பி அக்கா சொல்லுறது எல்லாம் சரி கணணி பற்றி அறிவு வேண்டும் என்றா கணணி புத்தகம் வாங்கொ கொடுக்கலாம் அல்லது கண்ணி பிரத்தியோக வகுப்புகளிற்கு அனுப்பலாம் :lol: ..........ஆனா நம்ம ஆட்கள் காசை மிச்ச படுத்த போய் தான் இப்படி எல்லாம் அனுப்புறவை பிறகு ஏதாவது நடந்த பிறகு மூக்கால அழுது கொண்டு இருப்பீனம் :lol: .....பெற்றொரின் பிழை தான் 12 வயசு சிறுமி என்றாலும் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிற்கு இப்படியான விசயங்கள் எல்லாம் அத்துபடி (ஜம்மு பேபியை தவிர :lol: ) அப்படி இருந்தும் இந்த பிள்ளைக்கு இந்த அறிவு இல்லாம இருந்ததிற்கு பெற்றோரும் ஒரு காரணம் :o ......!!சிலர் பிள்ளைகளிற்கு சிலவிசயங்கள் தெரியகூடாது என்று வளர்ப்பார்கள் அதனால் தான் இப்படியான பிரச்சினைகள் எல்லாம் தோற்றம் பெறுகிறது என்பது என் பார்வையில்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"உலகத்தில் இருக்கிறவன் திருந்த வேண்டும் என்று பார்க்காம நாம நாலு விசயத்தை தெரிந்து உலகதிற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்"!!

Link to post
Share on other sites

நானும் ஊரில இருக்கேக்க யோசிக்கிறனான்.. என்னடா இங்க ஓல் பெயில் விட்டவன் எல்லாம்.. வெளிநாட்டில போய்.. பெரியாளா வாரானே.. அங்க என்னவன் மந்திரம் தந்திரம் இருக்கோ என்று. இங்க வந்தாப் பிறகுதானே தெரிஞ்சுது கோலங்கள்...!

இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?

"ஊரில எங்களுக்கு கீழ இருந்தவனெல்லாம், இங்க வந்து பொருளாதாரரீதியா முன்னேறிட்டான்"

"ஊரில ஓ.எல். இல் சித்தியடையாவிட்டால், அவனால வாழ்க்கைல முன்னேற முடியாது"

"படிச்சு பாஸ் பண்ணினவனின்ர தலைக்கு பின்னால ஒளிவட்டம் இருக்கு"

"ஊரில ஒழுங்கா படிக்காதவனெல்லாம் இங்க இப்படி நல்ல நிலைமையில இருக்கிறான் எண்டால் அவன் கள்ளவேலையள் செய்துதான் அப்பிடி முன்னேறியிருக்கிறான்"

:)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.