Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

f6b0bb3c-r.-sambanthan-1_850x460_acf_cro

சம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன்.

யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில், சம்பந்தரின் உடல் வைக்கப்பட்டிருந்த பொழுது நூற்றுக்கணக்கானவர்களே அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள். தமது கட்சியின் முதுபெரும் தலைவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக் கணக்கானவர்களைத் திரட்ட வேண்டும் என்று ஏன் ஏற்பாட்டாளர்கள் சிந்திக்கவில்லை? உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்த கட்சிக்காரர்களும் உட்பட ஒரு தொகுதி கட்சித் தொண்டர்களைத் திரட்டியிருந்தாலே அங்கே ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு வந்திருக்கலாம்.

அஞ்சலி நிகழ்வு நடைபெற்ற மண்டபத்துக்கு அருகே யாழ் மத்திய கல்லூரி வழமை போல இயங்கியது.மண்டபத்தில் ஒலித்த சோக கீதத்தைத் தாண்டி பள்ளிக்கூடப் பிள்ளைகளின் இரைச்சல் கேட்டது.யாழ் நகரம் வழமை போல இயங்கியது.கடைகள் பூட்டப்படவில்லை; நகரத்தின் விளம்பர ஒலிபெருக்கிகளில் வளமை போல சினிமா பாடல்கள் ஒலித்தன.சோக கீதம் ஒலிக்கவில்லை. நகரத்தில் துக்கத்தின் சாயலைக் காண முடியவில்லை. சம்பந்தரின் பூத உடல் பலாலி விமான நிலையத்திலிருந்து தந்தை செல்வா கலையரங்கை நோக்கி வந்த வழி நெடுக மக்கள் திரண்டு நின்று துக்கத்தை வெளிப்படுத்தவில்லை. அப் பூதவுடலை யாழ்ப்பாணத்திலிருந்து வழியனுப்பி வைத்த பொழுதும் மக்கள் திரண்டு நின்று வணக்கம் செய்யவில்லை.

ஆனால் தந்தை செல்வாவின் பூதவுடல் தெல்லிப்பளையிலிருந்து முற்ற வெளியை நோக்கி வந்த பொழுது வழிநெடுக மக்கள் திரண்டு நின்றார்கள். சில இடங்களில் சில கிலோமீட்டர் தூரம் வரை ஊர்வலம் நீண்டு சென்றதாகத் தகவல். அது ஒரு தேசிய துக்க நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்டது. மக்கள் தன்னியல்பாக செல்வாவை தந்தை என்று அழைத்தார்கள்.தன்னியல்பாக ஆயிரக்கணக்கில் அவருடைய இறுதி ஊர்வலத்தில் திரண்டார்கள். ஆனால் சம்பந்தருக்கு அது நடக்கவில்லை. ஏன் ?

ஈழத் தமிழர்களின் நவீன அரசியலில் மிக நீண்ட காலம், இறக்கும்வரை பதவியில் இருந்த ஒரு தலைவர் அவர். தமிழ் மக்களின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுகின்ற திருக்கோணமலையின் பிரதிநிதி. ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியல், ஆயுதப் போராட்டம், ஆயுதப் போராட்டத்திற்குப் பிந்திய மிதவாத அரசியல் ஆகிய மூன்று கட்டங்களையும் தொடுக்கும் மூத்த அரசியல்வாதி. எல்லாவற்றையும் விட முக்கியமாக கிழக்கில் இருந்து எழுச்சி பெற்றவர். அப்படிப்பட்ட ஒரு மூத்த அரசியல்வாதிக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அஞ்சலி செய்யாதது ஏன்?

ஏனென்றால், சம்பந்தர் இறக்கும்பொழுது ஏறக்குறைய தோல்வியுற்ற ஒரு தலைவராகவே இறந்தார்.

சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்கு முன்னப்பொழுதையும் விட அதிகம் விட்டுக்கொடுப்பதன் மூலம் ஒரு தீர்வைப் பெறலாம் என்று அவர் கற்பனை செய்தார். அதில் தோல்வியடைந்தார். எனவே அவரை முதலில் தோற்கடித்தது சிங்கள பௌத்த அரசுக்கட்டமைப்புத்தான்.

ஆயுத மோதல்களுக்கு பின்வந்த மிதவாத அரசியலின் தலைவரான அவர் நீட்டிய கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கத் தயாராக இருந்திருந்தால். சம்பந்தரின் வழி வெற்றி பெற்றிருக்கும்.ஆனால் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு ராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற விரும்பவில்லை. அதைவிட முக்கியமாக அது அரசியல் வெற்றியாக மாற்றப்பட முடியாத ஓர் இனப்படுகொலை.ராஜபக்சக்கள் அந்த வெற்றியை ஒரு கட்சியின் அடித்தளமாக மாற்றினார்கள்.அதன் மூலம் யுத்த வெற்றிவாதத்திற்கு தலைமை தாங்கினார்கள்.

யுத்த வெற்றிவாதம் எனப்படுவது சம்பந்தருடைய விட்டுக் கொடுக்கும் அரசியலுக்கு எதிரானது.யுத்த வெற்றிவாதமானது தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் பொழுது சம்பந்தர் மட்டும் தனிக்குரலில் “ஒன்றுபட்ட இலங்கைக்குள்; பிரிக்கப்படாத இலங்கைக்குள் ; பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆயுத மோதல்களுக்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த அப்படிப்பட்ட ஒரு தலைவரை சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு உரிய முக்கியத்துவம் கொடுத்து பொருத்தமான விதத்தில் கையாளத் தவறியது. அவருடைய விட்டுக் கொடுப்புகளுக்கு பரிசாக எதிர்க்கட்சித் தலைவரின் வீடு அவர் இறக்கும்வரை வழங்கப்பட்டது. அந்த வீட்டை ஏற்றுக்கொண்டதன் மூலமும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஸ்தானத்தை இழந்த பின்னரும் அந்த வீட்டை விடாது வைத்துக் கொண்டிருந்ததன் மூலமும் சம்பந்தர் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்குத் தலைமை தாங்கும் தகுதியைக் குறைத்துக் கொண்டார்.

இப்படிப் பார்த்தால் சம்பந்தரை முதலில் தோற்கடித்தது சிங்கள பௌத்த அரசுக்கட்டமைப்புதான்.

இந்த விடயத்தில் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை நம்புமளவுக்கு சம்பந்தர் ஏமாளியாக இருந்தாரா என்ற கேள்வி எழும். அல்லது அவர் தன் சொந்த மக்களின் போருக்கு பின்னரான கூட்டு உளவியலை விளங்கிக் கொள்ள முடியாத ஒரு தலைவராக இருந்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது விளங்கிக் கொண்ட போதிலும் அதற்கு விரோதமாக செயல்பட்டவர் என்று எடுத்துக் கொள்ளலாமா? அதனால்தான் அவருடைய அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்த பொழுது மக்கள் அதற்கு ஆயிரக்கணக்கில் திரண்டு வரவில்லையா ?

இரண்டாவதாக, அவரை தோற்கடித்தது, அவருடைய அரசியல் வாரிசுகள். யாரை தன்னுடைய பட்டத்து இளவரசர்போல வளர்த்தாரோ, அவரே சம்பந்தரைக் குறித்து பொதுவெளியில் விமர்சிக்க தொடங்கினார். அவர் மற்றொரு வாரிசாக இறக்கிய விக்னேஸ்வரன் அவருக்கு எதிராகத் திரும்பினார்.தனது சொந்த தேர்தல் தொகுதியில், திருக்கோணமலையில் தன்னுடைய வாரிசாக அவர் யாரை இறக்கினாரோ, அவர் தனக்குத் தெரியாமல் நியமனங்களைச் செய்கிறார் என்று புலம்பும் ஒரு நிலைமை ஏற்பட்டது. அதாவது தன் மிக நீண்ட அரசியல் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சம்பந்தர் தனது சொந்தக் கட்சிக்காரர்களாலே மதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலின் பின் கட்சி இரண்டாக உடைந்தது. கட்சிக்காரர்களே கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள். தனது தாய்க் கட்சி உடைந்த போதும், அந்தக் கட்சியை கட்சிக்காரர்களே நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்திய பொழுதும், அதைத் தடுக்கும் சக்தியற்றவராக, கையாலாகாத ஒரு தலைவராக, சம்மந்தர் காட்சியளித்தார். அதாவது அவருடைய இறுதிக் காலத்தில் அவருடைய கண் முன்னாலேயே அவருடைய தாய்க் கட்சி உடைக்கப்படுவதையும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதையும் கையாலாகாதவராக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு அவர் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.

சம்பந்தரை அவருடைய வாரிசுகளே தோற்கடித்தார்கள். யாழ்ப்பாணத்தில் அவருடைய அஞ்சலி நிகழ்விலும் அவருடைய கட்சிக்காரர்கள் அவரை தோற்கடித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒர் அரசியல் தலைவரின் அஞ்சலி நிகழ்வு என்பதும் ஓர் அரசியல் நிகழ்வுதான். அதை அதற்குரிய கால முக்கியத்துவத்தோடு விளங்கி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை கட்சிக்காரர்கள் செய்யத் தவறினார்கள்.அவரைப் பெருந்தலைவர் என்று அழைத்த கட்சிக்காரர்களே அந்த அஞ்சலி நிகழ்வை பிரம்மாண்டமானதாக ஒழுங்குபடுத்தத் தவறினார்கள். அல்லது அவர்களால் அவ்வாறு ஒழுங்குபடுத்த முடியாத அளவுக்கு மக்களின் கூட்டு மனோநிலை இருந்தது என்று எடுத்துக்கொள்ளலாமா?

அதனால் யாழ்ப்பாணத்தில் அந்த சாவீடு சோர்ந்து போன ஒரு சா வீடாகக் காட்சியளித்தது. யாழ்ப்பாணத்தில்,சம்பந்தரின் அஞ்சலி நிகழ்விலும் அவர் தோற்கடிக்கப்பட்டார். அவருடைய வாரிசுகளும் அவருடைய விசுவாசிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்டவர்களும் அவர் இறந்த பின்னரும் அவரைத் தோற்கடித்து விட்டார்கள் என்று சொல்லலாமா?

https://athavannews.com/2024/1391210

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைசி சம்பந்தர்  போர் குற்றங்களில் காப்பாற்றிய சிங்கள அரசு கூட கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட முன்வரவில்லை இதுதான் சிங்களம் .

இந்த கதிதான் கருணா பிள்ளையான் டக்லஸ் சுமத்திரன் போன்றவர்களுக்கும் .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 minutes ago, பெருமாள் said:

கடைசி சம்பந்தர்  போர் குற்றங்களில் காப்பாற்றிய சிங்கள அரசு கூட கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட முன்வரவில்லை இதுதான் சிங்களம் .

இந்த கதிதான் கருணா பிள்ளையான் டக்லஸ் சுமத்திரன் போன்றவர்களுக்கும் .

 

01_05_2012_May_Day_Sampanthan_Ranil_afte

சம்பந்தர்... தூக்கிய,  சிங்கக் கொடியை கூட,
சம்பந்தரின் பிரேதத்துக்கு போர்த்த.. சிங்களம் முன்வரவில்லை.
அங்குதான்... சிங்களவன் ஒற்றுமையாக நிற்கிறான். 

நம்முடையதுகள்தான்.... நண்டுகள் மாதிரி, காலை வாரிக்கொண்டு திரியுதுகள். 😎

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, தமிழ் சிறி said:

 

01_05_2012_May_Day_Sampanthan_Ranil_afte

சம்பந்தர்... தூக்கிய,  சிங்கக் கொடியை கூட...
சம்பந்தரின் பிரேதத்துக்கு போர்த்த.. சிங்களம் முன்வரவில்லை. 😎

இதில் சுரேஷ் பிரேம சந்திரன் கையை கூட தூக்க மனமின்றி இருக்கிறார் ஒரு நேரம் குறி வைக்கப்டவர்களில் அவரும் ஒருவர் மன்னிப்பு சிலரை தியாகி ஆக்கி விடுது சிலரை மிக மோசமான துரோகியாக்கி விடுது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பந்தர் : “பேசுவம்” - நிலாந்தன்

449313247_10168895714305075_192210070911

சம்பந்தரின் மரணம் ஈழத்தமிழ்ச் சூழலில் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது ஈழத்தமிழர்களின் கூட்டு உளவியலின் வெளிப்பாடு என்றே கூறவேண்டும். அவருடைய பூதவுடல் யாழ்.நகரப் பகுதிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நகரம் வழமைபோல இயங்கியது. அதன் ஒலிபெருக்கிகளில் சினிமாப் பாடல்கள் இசைக்கப்பட்டன. நகரம்   ஏன் துக்கிக்கவில்லை?

சமூகவலைத்தளங்களில் ஒருபகுதி அவரை கௌரவமாக அஞ்சலித்தது. இன்னொருபகுதி கேவலமாக நிந்தித்தது. அது தமிழ் அரசியல் பண்பாட்டின் வீழ்ச்சியையும் காட்டியது. நவீன தமிழ் அரசியலில் குறிப்பாக சமூக வலைத்தளங்களின் காலத்தில்; மீம்ஸ்களின் காலத்தில், அதிகம் கீழ்த்தரமாக நிந்திக்கப்பட்ட ஒரு தலைவராக சம்மந்தரைக் கூறலாம். அவருடைய இறப்பின் பின் அவரைப்பற்றி வரும் குறிப்புக்கள் பெரும்பாலும் அதைத்தான் காட்டுகின்றன

2009க்கு பின்னரான கொந்தளிப்பான ஒரு மனோநிலையின் விளைவுகளே அவை. இக்கொந்தளிப்பான கூட்டுஉளவியலுக்குத் தலைமைதாங்கி ஈழத்தமிழரசியலை ஒரு புதிய பண்புருமாற்றத்தை நோக்கிச் செலுத்த வேண்டிய தவிர்க்கப்படவியலாத ஒரு பொறுப்பை காலம் அவருடைய கைகளில் கொடுத்தது. ஆனால் அதை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதை இப்பொழுது அவரை அஞ்சலித்தும் நிந்தித்தும் வரும் குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஈழத் தமிழர்களின் நவீனவரலாற்றில் நீண்டகாலங்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இருவர். ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர். மற்றவர் சம்பந்தர். இருவருமே ஒப்பீட்டளவில் நீண்டகாலம் தமிழ்மக்களின் அரசியலை நிர்ணயித்தார்கள். குறிப்பாக சம்பந்தர் 2009க்குப்பின்னிருந்து கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ் அரசியலின் தவிர்க்கப்படமுடியாத முதிய தலைவராகக் காணப்பட்டார்.

449746428_8293497937351007_3556431345054

அவருக்கு பின்வரும் முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவதாக அவர் ஒரு மூத்த தலைவர். இரண்டாவதாக அவர் கிழக்கை மையமாகக்கொண்டு எழுச்சிபெற்ற தலைவர். மூன்றாவதாக,அவர் நீண்டகாலம் தமிழ்மக்களின் அரசியலை தீர்மானித்தவர்களில் ஒருவர்.

அவருடைய நம்பிக்கைகளை பொறுத்தவரை சம்பந்தர் ஆயுதப் போராட்டத்தில் முழுஅளவு ஆதரவாளர் அல்ல. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டார். தன்னை சுகாகரித்துக்கொண்டார். ஆனால் அதற்காக அவர் ஆயுதப் போராட்ட வழிமுறையை ஏற்றுக்கொண்டார் என்று பொருள் அல்ல. அதனை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் அவருடைய வழி எதுவென்று தொகுத்துப் பார்த்தால் தெரியவரும்.

சம்பந்தரின் வழி எது?

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு என்று சிந்தித்தால் அதாவது பிரிவினை அல்லாத வேறு எந்த ஒரு தீர்வைப்பற்றிச்  சிந்தித்தாலும் அதற்கு சிங்களமக்களின் சம்மதம் அவசியம் என்று சம்பந்தர் நம்பினார். எனவே சிங்களமக்களை எப்படி அரவணைப்பது?அவர்கள் மனதில் இருக்கும் பகையுணர்வை,அச்சங்களை முற்கற்பிதங்களை எப்படி நீக்குவது?என்றும் அவர் சிந்தித்தார். ஆயுதப் போராட்டம் சிங்களமக்களை பகை நிலைக்குத் தள்ளிவிட்டது என்றும் அவர் நம்பினார். எனவே சிங்கள மக்களை பகை நிலைக்குத் தள்ளாத ஒர் அரசியல் வழியை அவர் கடைப்பிடித்தார். சிங்கள மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது என்று அவர் தீர்மானித்தார். அதை நோக்கியே கட்சியைச் செலுத்தினார்.

அதனால்தான் முதலில் கஜேந்திரகுமார் அணியை வெளியேவிட்டார். அதனால்தான் சுமந்திரனை உள்ளே கொண்டுவந்தார். அதனால்தான் விக்னேஸ்வரனையும் உள்ளே கொண்டுவந்தார்.

2015ல்நிகழ்ந்த ஆட்சிமாற்றத்தில் சம்பந்தரின் பங்களிப்பு இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட ரணில்-மைத்திரி அரசாங்கம் ஐநாவின் 30/1தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. நிலைமாறுகால நீதிக்கான அத்தீர்மானத்தின் பிரகாரம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கட்டமைப்பு சார் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அதன்படி நாடாளுமன்றம் ஒரு சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு, ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மந்தர் அதில் முழுமையாக ஒத்துழைத்தார். அதுவரையிலும் இருந்த எல்லா யாப்புகளும் தமிழ்மக்களின் பங்களிப்பின்றி உருவாக்கப்பட்டவை என்பதனால், தமிழ்மக்களின் பங்களிப்போடு ஒரு புதிய யாப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கனவு கண்டார்.அதை நம்பித்தான் தமிழ்மக்களுக்கு ஒவ்வொரு பெருநாளின் போதும் வாக்குறுதிகளை வழங்கினார்.

அதுமட்டுமல்ல, மன்னாரில் நடந்த “தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்?” என்ற ஒரு கருத்தரங்கில், ஆயர்களின் முன்னிலையில்,அவர் அந்த நம்பிக்கையை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதில் உரையாற்றிய நான் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினேன். மூன்றாவது தரப்பு ஒன்றின் கண்காணிப்பு இன்றி,மூன்றாவது தரப்பு ஒன்றின் நெருக்குதல் இன்றி சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பானது, இனப்பிரச்சினையைத் தீர்க்க முன்வராது என்று நான் அந்த உரையில் சுட்டிக்காட்டினேன். ஆனால் சம்பந்தர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தலையை சாய்த்து மண்டைக் கண்ணால் என்னைப் பார்த்தபடி சொன்னார்… “சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஒரு தீர்வைத் தராது என்பது ஒரு வறண்ட வாதம்; ஒரு வறட்டு வாதம்” என்று

யாப்புருவாக்க முயற்சிகள் ஓர் இடைக்கால வரைபுவரை முன்னேறின. அந்த இடைக்கால வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதித்தபொழுது அதில் டிலான் பெரேரா ஆற்றிய உரையை இங்கு சுட்டிக்காட்டலாம். அது சம்பந்தரின் அரசியல் வழியை மிகக்கூர்மையாக வெளிப்படுத்தும் ஓர் உரை. “சம்பந்தரின் காலத்திலேயே ஒரு தீர்வைக் காணவேண்டும். அவரைப்போல விட்டுக்கொடுக்கும் ஒரு தமிழ்த் தலைவர் இனி வரமாட்டார்” என்று டிலான் உரையாற்றினார். அதுதான் உண்மை. ரணில் மைத்திரி அரசாங்கத்தோடு இணைந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக சம்பந்தர் அடியொட்ட வளைந்து கொடுத்தார். விளைவு என்ன?

யாப்புருவாக்க முயற்சிகளை அதன் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேனவே 2018ல் காட்டிக்கொடுத்தார். சம்பந்தரின் கனவு கலைந்தது. அவர் தமிழ் மக்களுக்கு வழங்கிய எல்லா வாக்குறுதிகளும் பொய்த்துப்போயின. சிங்கள மக்களுக்கு நம்பிக்கை வரும் வரையிலும் விட்டுக் கொடுப்பதன் மூலம், ஒரு தீர்வைப் பெறலாம் என்ற அவருடைய நம்பிக்கை தோற்கடிக்கப்பட்டது. அந்த நம்பிக்கை மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. அதன் விளைவாக கட்சி அதுவரையிலும் வகித்து வந்த ஏகபோகத்தை இழந்தது. அடுத்த தேர்தலில் கட்சியின் வாக்குகள் சிதறின. அதுமட்டுமல்ல, கட்சியே இப்பொழுது சிதறிவிட்டது.

அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் சிதறவில்லை. தமிழரசுக் கட்சியே இரண்டாக உடைந்துவிட்டது. எனவே இப்பொழுது தொகுத்துப்பார்க்கலாம். கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் கடந்த 15 ஆண்டுகளிலும் எதைச் சாதித்தார் என்று பட்டியலிடலாம்…

முதலாவதாக,சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முற்பட்டு அதில் தோல்விகண்டார். அதாவது வரலாறு அவருக்கு வழங்கிய பெறுமதியான ஆண்டுகளை அவர் பொருத்தமான விதத்தில் பயன்படுத்தவில்லை. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான தமிழரசியலில் பண்புரு மாற்றத்துக்கு தலைமை தாங்க அவரால் முடியவில்லை. இரண்டாவதாக,சிங்கள மக்களுக்கு அதிகம் விட்டுக் கொடுத்ததன்மூலம் அவர் எதையுமே பெற முடியவில்லை. மாறாக, தான் தலைமை தாங்கிய கூட்டின் சிதைவுக்கும் அதனால் காரணமாக அமைந்தார்.

ஈழத் தமிழர்களின் நவீன அரசியல் வரலாற்றில் அதிக ஆசனங்களை கொண்டிருந்த ஒரு காலத்தில் அந்தக் கூட்டுக்கு அவர் தலைமை தாங்கினார். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் கூட்டு உடைந்துடைந்து சிறுத்துக்கொண்டு வந்து இப்பொழுது தமிழரசுக்கட்சியாக சிறுத்து விட்டது. இப்பொழுது தமிழரசுக் கட்சியும் இரண்டாக உடைந்துவிட்டது.தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவம் 22 ஆசனங்களில் இருந்து 13ஆசனங்கள் வரையிலும் உடைந்துபோனமை மகா தோல்வி.

அதுபோலவே தன்னுடைய சொந்தத் தொகுதியிலும் அவர் தொடர்ச்சியாகப் பெற்றுவந்த வாக்குகளை பட்டியலிட்டுப்பார்த்தால் அதில் படிப்படியாக வீழ்ச்சியைக் காணலாம். இப்பொழுதிருக்கும் நிலையில் திருக்கோணமலையில் தமிழரசுக் கட்சிக்குப் போட்டியாக மற்றொரு தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சி களமிறங்கினால் இம்முறை சம்பந்தர் பெற்ற ஆசனம் அடுத்த முறை கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சிலசமயம் சம்பந்தரின் அனுதாப வாக்குகள் கிடைக்கக்கூடும்.

இவ்வாறு,தான் தலைமை தாங்கிய கூட்டுக்குள்ளும் ஒரு தலைவராக தோல்வியடைந்து,தனது சொந்த தேர்தல் தொகுதியில்,தனது தாய்ப்பட்டினத்தில்,தன்னுடைய ஆதரவுத் தளத்தை படிப்படியாகத் தேய விட்டதில் தோல்வியுற்று,தான் அங்கம் வகிக்கும் மூத்த கட்சிக்குள்ளும் ஒரு தலைவராக அவர் தோல்வியடைந்து விட்டார்.

ஒரு தலைவர் தன் வாரிசுகளாகக் களமிறக்கும் அரசியல்வாதிகள் அந்த தலைவரின் பெயரை வரலாற்றில் ஸ்தாபிப்பவர்களாக அமையவேண்டும். ஆனால் சம்பந்தர் கொண்டு வந்த சுமந்திரனோ அல்லது விக்னேஸ்வரனோ அவ்வாறு இருக்கவில்லை. விக்னேஸ்வரன் சம்பந்தரின் வழி தவறு என்று கூறி அவரிடமிருந்து விலகிச் சென்றார். சுமந்திரன் சம்பந்தரின் பட்டத்து இளவரசர் போல காணப்பட்டார்.ஆனால் கட்சிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பொழுது அவர் சம்பந்தரை பொதுவெளியில் அவமதித்தார். தன்னுடைய வாரிசினாலேயே அவமதிக்கப்படும் ஒரு தலைவராக சம்மந்தர் அவருடைய இறுதிக் காலத்தில் காணப்பட்டார்.

அவருடைய தாய்க் கட்சி நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டபொழுது அதைத் தடுக்கும் சக்தியற்றவராக அவர் இருந்தார். சாதாரணமாக ஒரு குடும்பத்தில் பிணக்கு என்று வரும்பொழுது மூத்தவர்கள் அதைத் தீர்த்து வைப்பார்கள். கட்சிக்குள்ளும் அப்படித்தான். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முது தலைவர்கள் பிணக்குகளைத் தீர்த்துவைப்பார்கள். ஆனால் மிக மூத்த தலைவராக அவருடைய சொல்லை  அவருடைய வாரிசே கேட்கவில்லை. விளைவாக கட்சி நீதிமன்றத்தில் நிற்கிறது. அது மட்டுமல்ல அவருடைய சொந்த தேர்தல் தொகுதியில் தன்னை மதியாமல் நியமனங்கள் செய்யப்படுகின்றன என்ற பொருள்பட அவர் ஒரு முறைப்பாட்டைச்  செய்யுமளவுக்கு பலவீனமாக காணப்பட்டார்.  சம்பந்தரின் சுமார் இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தை மதிப்பிட இது ஒன்றே போதும்.அவர் தன்னுடைய  தாய்க் கட்சியைச்  சிதைய விட்ட ஒரு தலைவர். அவரால் எப்படித் தேசத்தைத் திரட்டியிருக்க முடியும்?

எனவே சம்பந்தரின் கடந்த சுமார் இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தை தொகுத்துப் பார்த்தால் கிடைக்கும் விடை என்ன? திருகோணமலையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மதகுரு,அவர் ஒரு முக்கியமான சமூக அரசியல் செயற்பாட்டாளர்,சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார், “சம்பந்தர் இறந்தால் அவருடைய கல்லறையில் என்ன வார்தையைப் பொறிக்க வேண்டும்?” என்று. “என்ன வார்த்தை” என்று நான் கேட்டேன். அவர் சொன்னார் “பேசுவம்” என்று போடலாம்.
 

https://www.nillanthan.com/6813/



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எவருக்கும் நிபந்தனை அற்ற ஆதரவு இல்லை ஐயா. நடக்கும் முறையில்தான் ஆதரவும், எதிர்ப்பும். ஆரம்பத்தில் கூத்தாடினாலும், தேர்தல் நெருங்கிய சமயம் அருச்சுனா போக்கில் நல்ல மாற்றம் தெரிந்தது.  ஆனால்…வெற்றிக்கு பின்…பழைய பல்லவிக்கு மாறி விட்டார் போல தெரிகிறது.
    • நாமலின் அட்டோர்னி அட் லா தகமையை எவரும் கேள்வி கேட்கமுடியாது….. ஏன் என்றால் அவருக்காக தனி அறையில் இருந்து பைனல் எக்சாம் எழுதியவர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ்🤣
    • நன்றி கிருபன்,  யாம் ஒன்றும் சிறுவன் இல்லையே,..விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் எமக்கும் உண்டு.  🤣
    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.