Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

301096491.jpg?resize=600,375

யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தை படுமோசமாகச்  சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தொியவந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தொிவித்துள்ளனா்.

குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உட்கூற்று பரிசோதனை இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை, தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை, காதிலும் மெல்லிய கம்பியினால் துளையிட்ட அடையாளங்கள் உள்ளிட்டவற்றுடன், உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இதனையடுத்து குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

 

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்று கிடந்ததாக குழந்தையின் தாய் குழந்தையை அளவெட்டி வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கொண்டு சென்றுள்ளார்.

பின்னா் குழந்தையை அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றிய போது குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தந்தை வெளியூரில் தங்கி இருந்து வேலை செய்வதாகவும், தாயின் பராமரிப்பிலையே குழந்தை இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள தெல்லிப்பளை பொலிஸார் குழந்தையின் தாயாரை பொலிஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2024/1394724

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாய்க்கு என்ன வருத்தமோ..யாருக்கு தெரியும்..?😒

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, யாயினி said:

தாய்க்கு என்ன வருத்தமோ..யாருக்கு தெரியும்..?😒

பிறந்த உடனே தாய் தனது குட்டி(களை)யைச் சாப்பிடும் பழக்கம் மிருகங்களிடம் இருப்பதாக நான் அறிந்திருக்கிறேன்.

மனிதர்களில், தாய் வன்முறையாளாக மாறுவதை எனது அம்மம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.  அதன் காரணமாகத்தான் பச்சை வயிற்றுத்(பிள்ளை பிரசவித்த) தாய்மாருடன் வயதான பெண் உறவினர்கள் படுத்துறங்குவதாக கூறினார். 

  • Like 1
Posted
4 hours ago, Kapithan said:

பிறந்த உடனே தாய் தனது குட்டி(களை)யைச் சாப்பிடும் பழக்கம் மிருகங்களிடம் இருப்பதாக நான் அறிந்திருக்கிறேன்.

மனிதர்களில், தாய் வன்முறையாளாக மாறுவதை எனது அம்மம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.  அதன் காரணமாகத்தான் பச்சை வயிற்றுத்(பிள்ளை பிரசவித்த) தாய்மாருடன் வயதான பெண் உறவினர்கள் படுத்துறங்குவதாக கூறினார். 

முற்றிலும் ஆதாரமற்ற மூட நம்பிக்கை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
43 minutes ago, இணையவன் said:

முற்றிலும் ஆதாரமற்ற மூட நம்பிக்கை என்று நினைக்கிறேன்.

நீங்கள் தாராளமாக நினைக்கலாம். உங்களுக்குத் தடை போட முடியுமா?

😂

👇

Why do some animal parents eat their young?

Zookeepers at the Smithsonian National Zoo in Washington, D.C. recently had to remove a sloth bear cub from its mother after she ate two other cubs she had just given birth too.

While it might seem counterintuitive for mothers to eat their offspring, infanticide in the wild is well-documented, said Doug Mock, professor of biology at the University of Oklahoma. Animal parents have limited resources to dedicate to their offspring and if the baby is sick or weak, carnivores have been known to consume babies or abandon them. Cannibalism gives the mother the calories she needs to raise her healthy babies or get pregnant again.
 
Why some animals eat their offspring??
Eating your offspring may sound unthinkable, but animals from fish to birds are known to do it. Scientists have been unsure why such a behavior would have evolved, but a new study sheds light on the factors that may drive some parents to eat their young.
 
Predators Eat Babies? 
 

Predators eat babies!

They found lions tend to pray on far more young animals during the spring and summer months then previously thought which results in the killing of more animals not just due to the size of the animals but the heat causing the meat to spoil and the need for a fresh kill.

 
 
Edited by Kapithan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

They found lions tend to pray on far more young animals during the spring and summer months then previously thought which results in the killing of more animals not just due to the size of the animals but the heat causing the meat to spoil and the need for a fresh kill.

அந்த நேரத்தில் மான்குட்டியாவது மயிலாவது அடித்து சாப்பிட்டு கொண்டே போகும்கள் இந்த விடையம் முகநூலில் ரீல் போடும் லூசுக்களுக்கு விளங்குவது இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, பெருமாள் said:

அந்த நேரத்தில் மான்குட்டியாவது மயிலாவது அடித்து சாப்பிட்டு கொண்டே போகும்கள் இந்த விடையம் முகநூலில் ரீல் போடும் லூசுக்களுக்கு விளங்குவது இல்லை .

Filial cannibalism

Filial cannibalism occurs when an adult individual of a species consumes all or part of the young of its own species or immediate offspring. Filial cannibalism occurs in many species ranging from mammals to insects, and is especially prevalent in various types of fish species with males that engage in egg guardianship.[1] The exact evolutionary purpose of the practice in those species is unclear and debated among zoologists, though there is consensus that it may have, or may have had at some point in species' evolutionary history, certain evolutionary and ecological implications.

https://en.m.wikipedia.org/wiki/Filial_cannibalism#:~:text=Filial cannibalism occurs when an,that engage in egg guardianship.
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, Kapithan said:

பிறந்த உடனே தாய் தனது குட்டி(களை)யைச் சாப்பிடும் பழக்கம் மிருகங்களிடம் இருப்பதாக நான் அறிந்திருக்கிறேன்.

மனிதர்களில், தாய் வன்முறையாளாக மாறுவதை எனது அம்மம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.  அதன் காரணமாகத்தான் பச்சை வயிற்றுத்(பிள்ளை பிரசவித்த) தாய்மாருடன் வயதான பெண் உறவினர்கள் படுத்துறங்குவதாக கூறினார். 

உங்கள் கருத்தோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை..காரணம் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கிறது...மிருகங்கள் சில தங்களின் சூழ் நிலைக்கு ஏற்ப தங்கள் இரை தேடலை மாற்றிக் கொள்கின்றன.அந்த வகையில் தான் ஈன்ற கருவை தானே உண்டு பசியாறும் தன்மை எல்லா வகையான விலங்குகளுக்கும் இல்லை.எங்காவது அறப்படிச்சதுகள் ஏதாவது ஏழுதினால் அதை எல்லாம் உண்மை என்று 2024ல்  எடுத்துக் கொண்டு வாழ தொடங்கினால் மனித சமுதாயத்தில் முக்கால் வாசிப் பேர் சுய புத்தியற்றவர்களாகத் தான் வாழ வேண்டி இருக்கும்..எங்காவதிருந்து காவிக் கொண்டு வந்து இணைக்கும் போது ஒன்றுக்கு பல முறை அதன் உண்மை தன்மையை அறிந்து பகிருங்கள்.

அடுத்து அம்மம்மா ,அப்பம்மா காலத்தவர்கள் நிறைய சமய சம்பிரதாயங்கள் என்று பின் பற்றிக் கொண்டு வந்தவர்களாவர்..அந்த வகையில் ஓர் பெண் மகப் பேறு முடிந்ததும் பின் பற்றக் கூடிய விடையங்களை சில வரைமுறைகளை  சொல்லிக் கொடுப்பது இயல்பாக இருந்திருக்கலாம்.அதையும் நான் முற்று முழுதாக நம்ப மாட்டேன்..ஆனால் பிறந்த பிள்ளையை அடித்து துன்புறுத்தும் அழவுக்கு எல்லாம் முன்னைய கால பெற்றோர் இருந்ததில்லை.அப்படி பார்க்கப் போனால் உடல் வலுவிளந்து வாழும்  எத்தனையோ பேர் இப்போது இந்தப் பூமியில் வாழ்ந்தே இருக்க இயலாது.

எது எப்படி இருப்பினும் மேற் கொண்டு வருபவர்களும் தங்கள் மனதில் தோன்றுவதை எழுதட்டும்..மேலே செய்தியில் இணைக்கபட்ட பெண்ணின் நிலை சில வேகைளில் ஏற்கனவே ஏதாவது மனதளவில் தாக்கமுடையவராக இருந்திருக்கலாம்..முக்கியமாக கணவர் வெளியிடத்தில் தங்கி வேலை செய்பவராக இருக்கும் பட்பத்தில் பெண்ணுக்கு உதவிகளற்ற ஓர் நிலையில் மனது பாதிக்கப்பட்டு இருக்கலாம்..அல்லது பிள்ளை பிறந்த பின் சில , பல காரணிகளால் ஏற்பட கூடிய மன தாக்கமாக கூட இருக்கலாம்..ஆகவே ஏழுந்தமானக ஒரு சமுதாயத்தின் மேல் குறை கண்டு அம்மம்மா மற்றும் அப்பம்மா காலத்தை எல்லாம் தேர் மாதிரி இழுக்க இயலாது.

Edited by யாயினி
  • Like 5
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முயல் தனது ஒரு குட்டியை சாப்பிடும் என்று பலர் நம்பியதுன்டு.நானே கமரா வைத்துப் பாத்த போது தான் தெரிந்தது.அது சாப்பிடுவது குட்டி இல்லை கடைசயில் வரும் நஞ்சு என்டு சொல்லப்படும் ஒன்றை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Postpartum depression is not a character flaw or a weakness. Sometimes it's simply a complication of giving birth. If you have postpartum depression, prompt treatment can help you manage your symptoms and help you bond with your baby.

https://www.mayoclinic.org/diseases-conditions/postpartum-depression/symptoms-causes/syc-20376617

 

What Is Postpartum Depression?

Postpartum depression (PPD) is a complex mix of physical, emotional, and behavioral changes that happen in some women after giving birth. According to the DSM-5, a manual used to diagnose mental disorders, PPD is a form of major depression that begins within 4 weeks after delivery. The diagnosis of postpartum depression is based not only on the length of time between delivery and onset but on the severity of the depression.

Postpartum depression is linked to chemical, social, and psychological changes that happen when having a baby. The term describes a range of physical and emotional changes that many new mothers experience. PPD can be treated with medication and counseling.

The chemical changes involve a rapid drop in hormones after delivery. The actual link between this drop and depression is still not clear. But what is known is that the levels of estrogen and progesterone, the female reproductive hormones, increase tenfold during pregnancy. Then, they drop sharply after delivery. By 3 days after a woman gives birth, the levels of these hormones drop back to what they were before pregnancy.

In addition to these chemical changes, the social and psychological changes of having a baby create an increased risk of depression.

Most new mothers experience the "baby blues" after delivery. About 1 out of every 10 of these women will develop a more severe and longer-lasting depression after delivery. About 1 in 1,000 women develop a more serious condition called postpartum psychosis.

Dads aren’t immune. Research shows that about 1 in 10 new fathers get depression during the year their child is born. 

https://www.webmd.com/depression/postpartum-depression

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடித்ததால் , குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

  யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் குழந்தையின் தாயார், " குழந்தை பால் குடிக்க மறுப்பதால் , கைகள் கால்களை திருகினேன். ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை" என தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தாயை கைது செய்துள்ளதுடன் குழந்தையின் தந்தையையும் , குழந்தையை பராமரிக்க வீட்டிற்கு வந்து சென்ற பெண்ணொருவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் , குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் பாரப்படுத்திய பின்னர் , நீதிமன்ற உத்தரவின் பேரில் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது

      https://seithy.com/breifNews.php?newsID=320990&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
Posted

301096491.jpg?resize=600,375

ஒன்றரை மாதக் குழந்தை உயிாிழப்பு விவகாரம் – பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாதக் குழந்தை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பழை பொலிஸார் தொிவித்துள்ளனா்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் குழந்தையை வளர்த்த இருவரையும், குழந்தையின் தந்தையும் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர்.

அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளது.

 

குறித்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்று கிடந்ததாக குழந்தையின் தாய் குழந்தையை அளவெட்டி வைத்தியசாலைக்கு கடந்த 3 ஆம் திகதி கொண்டு சென்றுள்ள நிலையில், குழந்தையை அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றிய போது, குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உட்கூற்று பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்ட போது, குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை, தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை, உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1394803

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, யாயினி said:

உங்கள் கருத்தோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை..காரணம் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கிறது...மிருகங்கள் சில தங்களின் சூழ் நிலைக்கு ஏற்ப தங்கள் இரை தேடலை மாற்றிக் கொள்கின்றன.அந்த வகையில் தான் ஈன்ற கருவை தானே உண்டு பசியாறும் தன்மை எல்லா வகையான விலங்குகளுக்கும் இல்லை.எங்காவது அறப்படிச்சதுகள் ஏதாவது ஏழுதினால் அதை எல்லாம் உண்மை என்று 2024ல்  எடுத்துக் கொண்டு வாழ தொடங்கினால் மனித சமுதாயத்தில் முக்கால் வாசிப் பேர் சுய புத்தியற்றவர்களாகத் தான் வாழ வேண்டி இருக்கும்..எங்காவதிருந்து காவிக் கொண்டு வந்து இணைக்கும் போது ஒன்றுக்கு பல முறை அதன் உண்மை தன்மையை அறிந்து பகிருங்கள்.

அடுத்து அம்மம்மா ,அப்பம்மா காலத்தவர்கள் நிறைய சமய சம்பிரதாயங்கள் என்று பின் பற்றிக் கொண்டு வந்தவர்களாவர்..அந்த வகையில் ஓர் பெண் மகப் பேறு முடிந்ததும் பின் பற்றக் கூடிய விடையங்களை சில வரைமுறைகளை  சொல்லிக் கொடுப்பது இயல்பாக இருந்திருக்கலாம்.அதையும் நான் முற்று முழுதாக நம்ப மாட்டேன்..ஆனால் பிறந்த பிள்ளையை அடித்து துன்புறுத்தும் அழவுக்கு எல்லாம் முன்னைய கால பெற்றோர் இருந்ததில்லை.அப்படி பார்க்கப் போனால் உடல் வலுவிளந்து வாழும்  எத்தனையோ பேர் இப்போது இந்தப் பூமியில் வாழ்ந்தே இருக்க இயலாது.

எது எப்படி இருப்பினும் மேற் கொண்டு வருபவர்களும் தங்கள் மனதில் தோன்றுவதை எழுதட்டும்..மேலே செய்தியில் இணைக்கபட்ட பெண்ணின் நிலை சில வேகைளில் ஏற்கனவே ஏதாவது மனதளவில் தாக்கமுடையவராக இருந்திருக்கலாம்..முக்கியமாக கணவர் வெளியிடத்தில் தங்கி வேலை செய்பவராக இருக்கும் பட்பத்தில் பெண்ணுக்கு உதவிகளற்ற ஓர் நிலையில் மனது பாதிக்கப்பட்டு இருக்கலாம்..அல்லது பிள்ளை பிறந்த பின் சில , பல காரணிகளால் ஏற்பட கூடிய மன தாக்கமாக கூட இருக்கலாம்..ஆகவே ஏழுந்தமானக ஒரு சமுதாயத்தின் மேல் குறை கண்டு அம்மம்மா மற்றும் அப்பம்மா காலத்தை எல்லாம் தேர் மாதிரி இழுக்க இயலாது.

உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. ஆனால் ஒன்றை மட்டும் நான் நன்கு அவதானித்துள்ளதுடன் கண்களால் கண்டும் உள்ளேன். 

1) குழந்தையை ஈன்ற தாயின் மனநிலை ஆரம்பத்தில்  மிகவும் பதற்றமான அல்லது மிகவும் சீரற்ற அல்லது கொந்தளிப்பான நிலையில்   இருக்கும். 

2) குட்டிகளை ஈன்ற நாய் தனது குட்டியைக்  கொன்று தின்பதைக் கண்டுள்ளேன். 

8 hours ago, சுவைப்பிரியன் said:

முயல் தனது ஒரு குட்டியை சாப்பிடும் என்று பலர் நம்பியதுன்டு.நானே கமரா வைத்துப் பாத்த போது தான் தெரிந்தது.அது சாப்பிடுவது குட்டி இல்லை கடைசயில் வரும் நஞ்சு என்டு சொல்லப்படும் ஒன்றை.

நச்சுக்கொடி என்று சொல்வார்கள் 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிசுவின் தலையை சுவரில் மோதினேன்; கொல்லப்பட்ட குழந்தையின் தாய் ஒப்புதல்!

 

அளவெட்டியைச் சேர்ந்த 45 நாள் சிசு உயிரிழந்த விவகாரத்தில், சிசுவின் தலையைச் சுவருடன் மோதிக் கொடூரமாகத் தாக்கியதை விசாரணையில் தாய் ஒப்புக்கொண்டுள்ளார் .

கடந்த சனிக்கிழமை தாய்ப்பால் அருந்திவிட்டு, தூங்கிய சிசு அதிகாலையில் நினைவற்றிருந்ததையடுத்து, அளவெட்டி பிரதேச மருத்துவமனைக்கு சிசு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், சிசு ஏற்கனவே உயிரிழந்து விட்டது என்று தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர். அளவெட்டியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற 45 நாள் சிசுவே உயிரிழந்தது. வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபால்சிங்கம் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார். சிசுவின் உடலில் காயங்கள் காணப்பட்டதை அடுத்து சிசுவின் இறப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிசுவின் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. உடற்கூற்றுப் பரிசோதனையில் சிசுவின் கால் எலும்பில் முறிவு இருந்ததும், தலைக்குள்ளும்,காது. வாய் என்பவற்றின் உட்புறங்களிலும் காயங்கள் இருந்தமையும் கண்டறியப்பட்டது. தாயிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சிசு பால் அருந்தாததால் கால்களை முறுக்கினேன் என்று தெரிவித்திருந்தார். விசாரணைகளை அடுத்துத் தாய் கைது செய்யப்பட்டார்.

தாயிடம் பொலிஸார் மேற்கொண்ட தொடர் விசாரணைகளில், சிசுவைக் கடுமையாகத் தாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். சிசு தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்ததால் தலையைச் சுவரில் மோதித் தாக்கியமையையும், காதுக்குள் பிரம்பை விட்டு குத்தியமையையும் தாய் ஒப்புக் கொண்டுள்ளார்.
சிசுவின் கால் எலும்பு முறிவு நாட்பட்டதாகக் காணப்படுகின்றது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. தாய் தனது வாக்குமூலத்தில் சிசுவின் காலை மிதித்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் ஏற்பட்ட எலும்புமுறிவை அடுத்தே சிசு தொடர்ச்சியாக அழுதிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

தாயிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 7 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாயை மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை குற்றத்தடுப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
 

https://newuthayan.com/article/சிசுவின்_தலையை_சுவரில்_மோதினேன்;_கொல்லப்பட்ட_குழந்தையின்_தாய்_ஒப்புதல்!

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிமேல் காலத்தில் ஒரு பெண் தாய்மை அடைவதற்க்கு உடல் மற்றும் மன நிலையில் தகதி உள்ளவரா என்றும் சோதிக்க வேணும் போல.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

சிசுவின் தலையை சுவரில் மோதினேன்

நிலைமை மோசமாக போய்கொண்டிருக்கிறதே 😟



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
    • ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே...........   கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது   சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள்   நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன்   அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை   ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன்   எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர்   அழுது அழுது மகிழ்வாக இருந்தேன்   இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.