Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Tamil-Thesiya-pothu-kaddamaipu.png?resiz

தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வந்துவிட்டது.
அந்த அறிக்கையானது பின்வரும் விடயங்களை தெளிவாக முன் வைக்கின்றது. முதலாவதாக, அது தமிழ் மக்களை இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம் என்று கூறுகின்றது. அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பன்னாட்டுப் பொறிமுறையின் ஊடாக வெளிப்படுத்துவதற்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

இரண்டாவதாக, அந்த அறிக்கையானது ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வுகளை நிராகரிக்கின்றது. அதேசமயம் இலங்கைத் தீவின் பன்மை தேசிய பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் இலங்கை தீவின் புதிய யாப்பானது பன்மை தேசிய அரசாக கட்டமைக்கப்பட்ட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.

மூன்றாவதாக, இன அழிப்புக்கு எதிரான பரிகார நீதியை அந்த அறிக்கை கோரி நிற்கின்றது. பரிகாரநீதி என்பது அதன் அதன் பிரயோக வடிவத்தில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பை உள்ளடக்கியதுதான் என்ற ஒரு வியாக்கியானம் உண்டு.

அந்த அறிக்கை தொடர்பாக பல்வேறு வாத பிரதிவாதங்கள் நடக்கின்றன. அந்த அறிக்கையில் பன்மைத் தேசியம் என்ற பதம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. பன்மைத் தேசிய அரசு என்ற பதம் கடந்த தசாப்தங்களில் அறிமுகத்துக்கு வந்தது.1980 களின் தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்க நாடாகிய பொலிவியாவில் சுதேச மலைவாழ் மக்களின் போராட்டங்களை முன்னெடுத்தவர்களால் பிரயோகிக்கப்பட்ட வார்த்தை அது.பொலிவியாவின் புதிய யாப்பின்படி அங்கு இருப்பது பன்மை தேசிய அரசு என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் எங்கேயும் பொலிவியா என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை. பன்மைத் தேசிய பண்புடைய ஒரு அரசைக் கட்டமைக்க வேண்டும் என்று கூறப்படுகிறதே தவிர பொலிவியாவைப்போல என்று கூறப்படவில்லை. பொலிவியாவில் இருப்பது போன்ற ஒரு தீர்வை இங்கு உருவாக்க வேண்டும் என்று அந்த தேர்தல் அறிக்கை எங்கேயும் கேட்கவில்லை.

தேர்தல் அறிக்கையில் இருப்பது ஒரு கருத்துருவதைக் குறிக்கும் வார்த்தை.பொலிவியாவில் இருப்பது ஒரு கட்டமைப்பு.இரண்டையும் ஒன்றை மற்றத்துடன் மாறாட்டம் செய்யத் தேவையில்லை.மேலும்,கஜேந்திரக்குமார் 2020ஆம் ஆண்டு ஒகஸ்ற் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாரும்போது அந்த வார்தையைப் பயன்படுத்துகிறார்.அவர் தனது உரையில் “ஸ்ரீலங்கா ஒரு பன்மைத் \தேசிய நாடு”என்று கூறுகிறார்.அவர் அப்படிக் கூறியதற்காக, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையானது, அவருடைய கட்சியின் பகிஷ்கரிப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறது என்று பொருள் கொள்ளலாமா?

அந்த தேர்தல் அறிக்கை மிகத் தெளிவாக ஈழத் தமிழர்கள் இறமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம்; தேசம் என்று கூறுகின்றது. ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வை அது நிராகரிக்கின்றது. அதுமட்டுமில்லை,அந்த தேர்தல் அறிக்கையானது நிலை மாறுகால நீதியை நிராகரித்து, பரிகார நீதியைக் கேட்கின்றது. பரிகார நீதி என்பது இனப்படுகொலைக்கு எதிராகத் தரப்படுவது. அது பெரும்பாலும் இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் தனக்கு என்ன தேவை என்பதனை அதன் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் கேட்பதற்கு உரிமை உடையது என்பதனை ஏற்றுக் கொள்கிறது.அந்த அடிப்படையில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் அந்த மக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தலாம் என்பதே பரிகாரநீதியின் பிரயோக யதார்த்தமாக காணப்படுகின்றது.

ஆனால் தேர்தல் அறிக்கையில் பொதுஜனவாக்கடுப்பு வெளிப்படையாக கேட்கப்படவில்லை, பொலிவியாவைப்போல ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வு கேட்கப்படுகிறது என்றெல்லாம் வியாக்கியானங்கள் தரப்படுகின்றன. இந்த வியாக்கியானங்கள் உள்நோக்கமுடையவை. அந்த அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் மேலோட்டமாக வாசித்து விட்டு முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அவை. சுருக்கமாகச் சொன்னால் யானை பார்த்த குருடர்களின் விமர்சனங்கள்.

தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்பது கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 40 நாள் குழந்தை அது.ஒரு 40 நாள் வயதான ஒரு கட்டமைப்பானது ஒரு பொது முடிவுக்கு வருவதில் பல நெருக்கடிகள் இருக்கும். அந்த கட்டமைப்புக்குள் ஏழு மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் 7 கட்சித் தலைவர்களும் உண்டு. மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்குள்ளும் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்ட சிவில் சமூகங்கள் உண்டு. அதுபோல கட்சித் தலைவர்கள் மத்தியிலும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உண்டு. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னுறுத்தும் விடயத்தில் அவர்கள் ஒன்றுபட்டார்கள். அதற்காக எல்லா விடயங்களிலும் அவர்கள் உருகி பிணைந்த ஒரு கட்டமைப்பாக மாறிவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

இது தமிழ் அரசியலில் ஒரு புதிய தோற்றப்பாடு. ஒரு புதிய பண்பாடு. இது இனிமேல் எப்படி வளரப்போகிறது என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபையில் உறுப்பாக உள்ள குடிமக்கள் சமூகம் ஒன்று அந்த அறிக்கையில் 13ஆவது திருத்தத்திற்கு எதிரான வாசகங்கள் வர வேண்டும் என்று கேட்டது.

அதுபோல தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் சில பொது வாக்கெடுப்பை வெளிப்படையாக கேட்க வேண்டாம் என்று வலியுறுத்தின.மொத்தம் 14 பேர்களைக் கொண்ட அந்த கட்டமைப்புக்குள் ஒரு பொது முடிவை எட்ட வேண்டியிருந்தது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.அந்த பொது முடிவுதான் வெளிவந்திருக்கும் தேர்தல் அறிக்கையாகும்.

அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் அதை விமர்சிப்பவர்கள் பெருமளவுக்கு தாங்கள் எதிர்பார்த்த தீர்வு முன்மொழிவுகள் அங்கே இல்லை என்பதை ஒரு காரணமாக முன்வைக்கின்றார்கள்.ஒரு பகுதியினர் சமஸ்ரி என்பது தெளிவாக கூறப்பட்டிருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இன்னொரு பகுதியினர் ஒரு பொதுஜன வாக்கெடுப்பு என்ற விடயம் வெளிப்படையாக கூறப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தாங்கள் வசிக்கும் நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களோடு உரையாடும் பொழுது இந்த ஆவணத்தை முன்வைத்து உரையாட வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிடும் அவர்கள், இந்த ஆவணம் தமது செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அமையக்கூடிய எல்லா அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

எனினும் எல்லாருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து அந்த ஆவணத்தைத் தயாரிக்க முடியவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு பொது முடிவை எட்ட வேண்டியிருந்தபடியால் எல்லாரையும் திருப்திப்படுத்தும் ஒரு நிலைமை அங்கே இருக்கவில்லை என்பதனை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

அந்த அறிக்கை தொடர்பில் இதுவரையிலும் வெளிவந்த பிரதிபலிப்புகளை தொகுத்து பார்க்கும் பொழுது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அந்த அறிக்கை தாயகத்திலும் டயஸ்போறாவிலும் பரவலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதனை எல்லாரும் பரபரப்போடு எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். அந்த அறிக்கைக்குள் தங்களுடைய விருப்பங்கள் கோரிக்கைகள் இணைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்புகளிடமும் இருந்திருக்கிறது. இது எதைக் காட்டுகின்றது?

அப்படி ஒரு அறிக்கை வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு,தவிப்போடு ஒருவிதத்தில் ஏக்கத்தோடு தமிழ்ச் சமூகம் களத்திலும் புலத்திலும் காத்திருந்தது என்பதை காட்டுகின்றதா?

அதுதான் உண்மை. தமிழ் மக்கள் பேரவைக்குப் பின் கடந்த சுமார் எட்டு வருடங்களாக தமிழ் மக்கள் பேரவையை போல ஒரு கூட்டு வராதா ? அது மீண்டும் ஒருமித்த குரலில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தாதா? என்ற தவிப்போடு பெரும்பாலான தமிழ் மக்கள் காத்திருந்திருக்கிறார்கள் என்பதைத்தான் அது காட்டுகின்றது. அதாவது தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரள்வதற்கும் தவிப்போடு காத்திருக்கிறார்கள் என்று பொருள்.ஆயின் தமிழ் மக்கள் பொது வேட்பாளரை வெற்றி பெறச் செய்வார்களா?

https://athavannews.com/2024/1398565

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13 ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கான தீர்வல்ல என்று சுறுவதற்கு என்ன தயக்கம்?பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை தொடர்பாக பத்திரிகையாளர் நிக்சன் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு தெளிவற்ற பதிலாக இந்தக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுதியவரே நிலாந்தன் மாஸ்டர் தான்!

இங்கு யாழ் இணையத்தில் ஓர் அய்டியில் வந்து எழுதிவிட்டு இன்னோர் அய்டியில் வந்து தமக்குத் தாமே லைக் போடும் பெரியார்கள் செய்யும் வேலையொன்றை நிலாந்தன் மாஸ்டர் செய்திருக்கின்றார். அதாவது தனக்குத் தானே லைக் போட்டிருக்கின்றார்!😂

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனிதநாடு  (தமிழீழம்) என்பதிலிருந்து, சமஸ்டி க்கு வந்து, பொலிஸ் காணி அதிகாரங்களுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை என உலக்கை  உளிப்பிடியான கதையாக எமது தனிநாட்டுக்கான  போராட்டம்  வந்து நிற்கிறது. 

இத்தகையதொரு நிலையில் யதார்த்தத்தைப் புறம்தள்ளும் எந்தவொரு முயற்சியும்  பயனளிக்கப்போவதில்லை. மாறாக தமிழ் மக்களின் சமூக  அரசியல் உரிமைகளைக் முற்றாகக் குழிதோண்டிப் புதைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
35 minutes ago, Kapithan said:

எப்படி??

சயித்தை ஆதரிப்பதாக கூட்டம் கூடி முடிவெடுத்து அறிக்கை விட்டு விட்டு

ரணிலுக்கு பொன்னாடை போத்தி மதிப்பளித்து ரணில் வந்தால் எங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்பது தானே?? 

Edited by விசுகு
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
59 minutes ago, விசுகு said:

எப்படி??

சயித்தை ஆதரிப்பதாக கூட்டம் கூடி முடிவெடுத்து அறிக்கை விட்டு விட்டு

ரணிலுக்கு பொன்னாடை போத்தி மதிப்பளித்து ரணில் வந்தால் எங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்பது தானே?? 

இப்படித்தான் 👇

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

சயித்தை ஆதரிப்பதாக கூட்டம் கூடி முடிவெடுத்து அறிக்கை விட்டு விட்டு

ரணிலுக்கு பொன்னாடை போத்தி மதிப்பளித்து ரணில் வந்தால் எங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்பது தானே?? 

கொஞ்சம் யதார்த்தமாக யோசித்துப் பாருங்கள் விசுகு. இலங்கையின் அதியுயர் நிலையில் இருக்கும் ஜனாதிபதி வீடு தேடி வருகிறார். அது மாவைக்கு கிடைத்த மரியாதைதானே.அவரை வரவேற்பதுதானே தமிழர் பண்பு. வந்தவருக்கும் தெரியும் தமிழரசுக் கட்சியின் ஆதரவு தனக்கு இல்லை என்று. ஆனாலும் ஒரு முயற்சி செய்ய அவர் முனைகிறார். இவரும் வரவேற்று கலந்துரையாடி விட்டு, மரியாதை நிமித்தம் அறிக்கை ஒன்றை விடுகிறார். அவ்வளவுதான் இந்த விடயம். இங்கே பெரிது படுத்த வேண்டியது எதுவுமே இல்லை.

குறைகள் பிடிப்பது என்றால் எல்லோரிடமும் அது இருப்பதை பார்க்கலாம். நல்லது நடக்க வேண்டும் என்பதே உங்களைப் போன்று எனக்கும் இருக்கும் விருப்பம். தேவைகள் கருதி எங்களிடமும் மாற்றம் வரவேண்டும். அரசியலில் உள்ள நெளிவு சுளிவுகளுக்கு ஏற்ப நாமும் பயணம் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு இந்திய இராணுவத்தை வெளியே அனுப்புவதற்கு, எவருடன் சண்டையிட்டோமோ அவர்களுடனேயே பேசி  நண்பர்களாகி ஆயுதம் பெற்று இந்திய இராணுவத்தை வெளியேற்ற வகை செய்து  மீண்டும் யுத்தத்தை மேற்கொண்டோமே அது அரசியல்.

நீங்கள் நீண்டகாலம் ஒரு அமைப்பில் இருப்பதால், அதன்மேல் உள்ள ஈடுபாட்டால் சிலவற்றை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அவர்களுடைய காலம் இனி வரப் போவது இல்லை. இன்றைய தளம் வேறு. இப்பொழுது நடப்பது ஆயுதப் போராட்டமல்ல. அரசியல் போராட்டம்.

  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kapithan said:

ஆட்டுக்குள் மாடு...???

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, Kavi arunasalam said:

உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை.  அவர் ஒரு சாதாரண பொறுப்பில் இருந்தால். 

உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் பிரான்ஸில் உள்ள எனது ஊரின் ஒன்றியத்தின் தலைவராக இருந்த நேரத்தில் எனது ஊரில் இருந்து 3 தலைகள் வந்து என்னை சந்தித்தார்கள். அந்த மூன்று பேரும் எனது உறவினர்கள் மட்டும் அல்ல நான் மிகவும் மதிப்பவர்கள். ஆனால் ஒன்றியத்தின் தலைவராக ஒன்றியத்தின் யாப்புக்குள் நின்று தான் என்னால் பேச முடிந்தது. அவர்கள் வந்த நோக்கம் மற்றும் என்னை தனியே சந்தித்த நோக்கம் நிறைவேறவில்லை. 

ஆனால் மாவை சிங்களவரை மோட்டுக் கூட்டம் என்று இன்னும் நினைத்தபடி சயித் வெல்ல அவரது கட்சி பிரச்சாரம் செய்ய இவர் ரணில் வெல்ல வேண்டும் என்று அறிக்கை விடுவதை நீங்களும்....??

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, விசுகு said:

ஆட்டுக்குள் மாடு...???

சாரி,...

உங்கள் வயதுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற பக்குவம் உங்களுக்கு வேண்டும் விசுகர்.

😁

23 minutes ago, விசுகு said:

உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை.  அவர் ஒரு சாதாரண பொறுப்பில் இருந்தால். 

உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் பிரான்ஸில் உள்ள எனது ஊரின் ஒன்றியத்தின் தலைவராக இருந்த நேரத்தில் எனது ஊரில் இருந்து 3 தலைகள் வந்து என்னை சந்தித்தார்கள். அந்த மூன்று பேரும் எனது உறவினர்கள் மட்டும் அல்ல நான் மிகவும் மதிப்பவர்கள். ஆனால் ஒன்றியத்தின் தலைவராக ஒன்றியத்தின் யாப்புக்குள் நின்று தான் என்னால் பேச முடிந்தது. அவர்கள் வந்த நோக்கம் மற்றும் என்னை தனியே சந்தித்த நோக்கம் நிறைவேறவில்லை. 

ஆனால் மாவை சிங்களவரை மோட்டுக் கூட்டம் என்று இன்னும் நினைத்தபடி சயித் வெல்ல அவரது கட்சி பிரச்சாரம் செய்ய இவர் ரணில் வெல்ல வேண்டும் என்று அறிக்கை விடுவதை நீங்களும்....??

""தேவைகள் கருதிஎங்களிடமும் மாற்றம் வரவேண்டும். அரசியலில் உள்ள நெளிவு சுளிவுகளுக்கு ஏற்பநாமும் பயணம் செய்ய வேண்டும்.""

என கவி அருணாச்சலம் அவர்கள் தெளிவாகவே கூறியிருப்பது தங்களுக்குப் புரியாது. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Kapithan said:

சாரி,...

உங்கள் வயதுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற பக்குவம் உங்களுக்கு வேண்டும் விசுகர்.

😁

""தேவைகள் கருதிஎங்களிடமும் மாற்றம் வரவேண்டும். அரசியலில் உள்ள நெளிவு சுளிவுகளுக்கு ஏற்பநாமும் பயணம் செய்ய வேண்டும்.""

என கவி அருணாச்சலம் அவர்கள் தெளிவாகவே கூறியிருப்பது தங்களுக்குப் புரியாது. 

😏

தவறை தவறு என்று சொல்லவும் உணரவும் வேண்டும் காண். 

இப்போ அவரது கட்சித் தொண்டர்கள் எப்படி சயித்தை ஆதரித்து மேடையில் பேசமுடியும்????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, விசுகு said:

நான் பிரான்ஸில் உள்ள எனது ஊரின் ஒன்றியத்தின் தலைவராக இருந்த நேரத்தில் எனது ஊரில் இருந்து 3 தலைகள் வந்து என்னை சந்தித்தார்கள். அந்த மூன்று பேரும் எனது உறவினர்கள் மட்டும் அல்ல நான் மிகவும் மதிப்பவர்கள். ஆனால் ஒன்றியத்தின் தலைவராக ஒன்றியத்தின் யாப்புக்குள் நின்று தான் என்னால் பேச முடிந்தது. அவர்கள் வந்த நோக்கம் மற்றும் என்னை தனியே சந்தித்த நோக்கம் நிறைவேறவில்லை. 

விசிகு, ஒன்றியத்தின் தலைவராக இருந்து  அதன் யாப்புக்குள் கட்டுப்பட்டு செயற்பட்ட உங்களது   நேர்மையைப் பாராட்டுகிறேன். 👏

இப்பொழுது தமிழரசுக் கட்சியை  எடுத்துக் கொள்ளுங்கள். சிறீதரன், அரியநேத்திரன் ஆகியோர் கட்சியின் யாப்புக்குள் கட்டுப்பட்டு இருக்கிறார்களா? கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை கட்சிக்குள் இருந்து கொண்டே வெளியில் உமிழ்ந்து கொண்டிருக்கிறார்களே நியாயமாகத் தெரிகிறதா?  பொது வேட்பாளராகப் போட்டியிட அரியநேத்திரன் தனது கட்சியிடம் கேட்டாரா? கட்சிதான் அனுமதித்ததா? ஒரு கட்சியின் யாப்புக்குள் கட்டுப்படாதவர்கள் எப்படி தமிழினத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவார்கள்?

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
37 minutes ago, Kavi arunasalam said:

விசிகு, ஒன்றியத்தின் தலைவராக இருந்து  அதன் யாப்புக்குள் கட்டுப்பட்டு செயற்பட்ட உங்களது   நேர்மையைப் பாராட்டுகிறேன். 👏

இப்பொழுது தமிழரசுக் கட்சியை  எடுத்துக் கொள்ளுங்கள். சிறீதரன், அரியநேத்திரன் ஆகியோர் கட்சியின் யாப்புக்குள் கட்டுப்பட்டு இருக்கிறார்களா? கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை கட்சிக்குள் இருந்து கொண்டே வெளியில் உமிழ்ந்து கொண்டிருக்கிறார்களே நியாயமாகத் தெரிகிறதா?  பொது வேட்பாளராகப் போட்டியிட அரியநேத்திரன் தனது கட்சியிடம் கேட்டாரா? கட்சிதான் அனுமதித்ததா? ஒரு கட்சியின் யாப்புக்குள் கட்டுப்படாதவர்கள் எப்படி தமிழினத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவார்கள்?

தலைவர் எவ்வழியோ மக்கள் அவ்வழி.???

இதைத் தான் தவறு என்கிறேன்.

இப்போ ரணில் (நரி) எதுக்காக தமிழரசுக் கட்சி தனது முடிவை அறிவித்து சிக்கலில் கட்சி இருக்கும் போது இவரது வீட்டுக்கு வரணும்?? இவரை கௌரவ படுத்தவா?? கட்சியை பலவீனப் படுத்த அல்லவா.?  அப்படியானால் வென்றது யார்??

அப்படியானால் தோற்றது தமிழரசுக் கட்சி அல்லவா,???அதன் தலைவரின் அறிக்கை தான் தவறு என்கிறேன். சந்தித்தது கூட தவறு இல்லை.

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து ஹிந்தியாவை கை கழுவிவிட்டாலே ஆயிரம் பிரச்சனைகள் இல்லாமல் போய் விடும்.

இன்னுமொன்று....

ஹிந்தியர்களுக்கு  இலங்கையில் தங்கள் ஆதிக்கம் இல்லாமல் போனால் ஏதாவது காரணம் கூறி மீதமாக இருக்கும் தமிழர்களை அழிக்கவும் தயங்கமாட்டார்கள்.

இந்த நாசமாய் போன ஹிந்திய தலையீடுகள் இல்லாதிருந்தால் விடுதலைப்புலிகள் காலத்திலேயே தமிழர்களுக்கு ஒரு விடிவு பிறந்திருக்கும். இதற்கு சிங்களமும் ஆயுத்தமாக இருந்ததாம். இடையில்  புகுந்த ஹிந்தியெனும் மந்தி........😡

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் இனித் தொடராக அமையப்போவது சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் கூடிய அரசுகளே.

இப்போது உள்ள கேள்வி அவ்வாறு அமையப்போகும் அரசுகளில் தமிழ்ச் சிறுபான்மையினர் தங்களுக்கு உரிய இடத்தைப் பிடித்துக்கொள்வதா அல்லது அதை மீண்டும் முஸ்லிம்களிடம் விட்டுவிடுவதா என்பதுவே.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.