Jump to content

தகவல் துளிகள்


Recommended Posts

வானம் ஏன் நீல நிறம்

வழக்கமான க்விஸ் கேள்வி போலாகிவிட்டது இது. இருந்தாலும் உங்களிடம் பதில் உள்ளதா?

வானத்தில் கானும் நீல நிறம் கடலின் பிரதிபலிப்பல்ல. மாறாக கடல் தான் வானத்தை பிரதிபலிப்பதால் நீல நிறம் பெறுகிறது.

வின்வெளியில் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தால் சூரிய வெளிச்சம் படும் பொருட்கள் தவிர சுற்றிலும் கருப்பாகவே இருக்கிறது. பூமியிலிருந்து பார்க்கும் போது மட்டும் நீல நிறமாகத் தெரிவதேன்? பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.

சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது. வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே, அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே, ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு (frequency). வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும், சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை.

ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும், காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள், நீர்த்துளிகள், பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.)

நாம் 'பார்ப்பது' என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. நாம் பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான். அதனால் தான் 'பார்ப்பதற்கு யாருமே இல்லாவிட்டால் வானம் எப்படி நீல நிறமாக இருக்கும்' என்று ஆதி சங்கரர் கேட்டார். இதைப்பற்றி சற்று தெளிவாகப் 'பார்க்கலாம்'!

உதாரணமாக: நாம் பார்க்கும் பருத்தி உடை பச்சை நிறம் என்றால், அந்த உடையில் படும் ஒளியில் பச்சை நிறத்திற்கான துடிப்பு மட்டும் திரும்பி வருகிறது, அது நம் கண்களில் படும் போது பச்சைச் சட்டை என உணருகிறோம். இருட்டில் எதுவும் கண்ணுக்கு தெரியாததன் காரணமும், பொருட்களில் இருந்து எந்த ஒளியும் நம் கண்ணுக்கு வந்து சேராதது தான். இதனால் தான் பனிமூட்டத்தில் அருகில் இருக்கும் நபர் கூட தெரிவதில்லை, மேகமில்லாத இரவில் நெடுந்தொலைவிலிருக்கும் நட்சத்திரத்தைக்கூட நம்மால் 'பார்க்க' முடிகிறது.

காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம். இரவில் நிலவின் ஒளி, நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

Link to post
Share on other sites
 • Replies 67
 • Created
 • Last Reply

மூளையின் சக்தி

Pathivu Toolbar ©2005thamizmanam.com

ஒரு குழந்தையின் மூளையில் சிந்திக்கக் கூடிய ஷெல்கள் 100 மில்லியார்டன் வரை உள்ளன.

ஒன்பது மாதத்தில் -

ஒரு குழந்தை தனது தாய்மொழிக்கும் வேற்று மொழிகளுக்குமான வித்தியாசங்களைத் தெரிந்து கொள்கிறது.

பத்து வயதுக்குள் -

மூளையில் உள்ள தொடர்புகள் நன்கு விருத்தியடைந்து விடுகின்றன. இந்த வயதுக்குள் மூளையில் 100 பில்லியன் தொடர்புகள் உருவாக்கப் படுகின்றன.

பத்தாவது வயதில் -மூளை முழுமையாக விருத்தியடைந்து விடும். 10 மில்லியன் செய்திகளைப் பதியக் கூடிய தன்மையையும் செயற் படக் கூடிய நிலையையும் மூளை பெற்றுவிடும். சில சமயங்களில் மணிக்கு 500 கி.மீ துரித கதியில் மூளையின் செயற்பாடுகள் இருக்கும்.

பதினாறாவது வயதில் -மூளைக்குள் உள்ள அதிகம் பாவிக்கப் படாத மூளைத் தொடர்புகள் அற்றுப் போய் விடுகின்றன.

ஒரு விநாடிக்கு கிட்டத்தட்ட 1000 தொடர்புகள் இல்லாமல் போகின்றன.

இந்த நிலையில்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட மூளை அமைப்பு உருவாகிறது.

இருபத்தைந்தாவது வயதில் -

மூளையின் அளவு ஏறக்குறைய 1500 கிராமாக இருக்கிறது. மூளைச்

ஷெல்களுக்கிடையே உள்ள சைகைப்பாதை (signalbahnen) யை நீட்டிப் பார்த்தால் அது ஏறக்குறைய ஒரு மில்லியன் கி.மீ அளவுக்கு நீளமாக இருக்கும்.

அளவுக்கதிகமான வேலை மற்றும் பிற அழுத்தங்களினால் (Stress) மூளை சுருங்கி விடலாம். உதாரணமாக எமது மூளையில் நினைவுகளைப் பதிந்து வைத்திருக்கும் பகுதிகளும், படிப்பதற்கான பகுதிகளும் 15 வீதம் வரை சுருங்கி விடும்.

முப்பத்தைந்தாவது வயதில் -

10 வயது மூளையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அரை மடங்கு தொடர்புகள்தான்

மூளையில் இருக்கும். யோசிப்பதற்கு அதிகளவு சக்திகள் தேவைப்படாது.

ஐம்பதாவது வயதில் -மில்லியார்டன் அளவில் மூளையில் உள்ள ஷெல்கள் இறந்து விடுகின்றன. ஆனாலும் எங்களது வேலைகளை ஒழுங்காகத் தொடர்ந்து செய்வதற்குப் போதுமான அளவு ஷெல்கள் இருக்கும்.

அறுபதாவது வயதில் -மூளைக்குப் பயிற்சி (GegirnJogging) கொடுப்பது நல்லது.

தனது எண்பதாவது வயதில்தான் Gothe என்பவர் தனது Faust என்ற பிரபல்யமான கதையை எழுதி முடித்தார்.

திலீபன் செல்வகுமாரன் - யேர்மனி

Link to post
Share on other sites

பறவைகள் பலவிதம்

Birds

 பறவைகள் பலவிதம்

நமது விரல் நீளமும் (இரண்டேகால் இஞ்ச்) 1.6 கிராம் எடையுமே உள்ள மிகச் சிறிய பறவையான 'ஹம்மிங்பர்ட்' (பாடும் பறவை) முதல் 9அடி உயரமும் 156கிலோ எடையும் கொண்ட நெருப்புக் கோழி வரை பறவைகள் பலவிதம் தான். அதிக எடையுள்ள 'பறக்கும்' பறவையான 'பஸ்டார்ட்' 18கிலோ வரை பெருக்கும்.

பறவைகளின் உள்ளமைப்பு மற்ற வகைகளின் கலவையாக உள்ளது. பறவைகள் முதுகெலும்புள்ளவை. பாலூட்டிகளைப் (அம்மல்ச்) போல நான்கு அறை இதயத்தையும் வெதுவெதுப்பான இரத்தத்தையும் கொண்டவை. இதன் காரணமாக சீரான உடல் வெப்பத்தையும், வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் தன்மையும் பெறுகின்றன. ஆனால் ஊர்வன (றெப்டிலெச்) போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.

சிறகுகள்:

பறவைகளின் சிறகுகளில் உள்ள முக்கிய பொருள் 'கெரோடின்'. நமது தலைமுடி, விரல் நகம் அகியவற்றில் உள்ள அதே கெரோடின், ஆனால் நமது தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்று விடும். இதனால் பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக் கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவான ஆனால் வலுவான பறப்பதற்கேற்ற 'ஏரோடைனமிக்' மேற்பரப்பை பறவைகளுக்கு அளிக்கிறது. பறக்கும் போது சிறகுகள் இடையே சிறு சிறு காற்று பொட்டலங்கள் ஏற்பட்டு மிக வெப்பம், குளிர் அகியவற்றிலிருந்து பறவைகளைக் காக்கிறது.

கண்கள்:

பறவைகள் பெரும்பாலும் கூரிய பார்வை உடையது. ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் இருக்கும். மேல் இமை மனிதர்களின் கண் இமையைப் போன்றது. கீழ் இமை தூங்கும் போது மட்டும் மூடிக் கொள்ளும். இது தவிர பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு. இது ஒளி ஊடுருவக்கூடிய தோல், கண்களை ஈரப்படுத்தவும், காற்று, அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் உதவுகிறது.

காது:

பறவைக்கு காது மிக முக்கியமானது. ஆனால் முழுவதும் உள்புறமாகவே அமைந்துள்ளது. கண்ணுக்குச் சற்று கீழே சிறிய துவாரம் இருக்கும். பெரும்பாலும் சிறிய இறகுகளால் மூடப்பட்டிருக்கும். பறவைகளுக்கு காது ஒலியைக் கேட்பதற்காக மட்டுமல்லாமல் பறக்கும் போது பேலன்ஸுக்கும் தேவைப்படுகிறது.

மூளை:

பறவைகளின் மூளை பலவிதங்களில் முழுமை பெற்றது. பறக்கும் போது விமானத்தைப் போல உடலில் அனைத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பு, உள்ளூணர்வு, உடனடியாக உணர்ந்து கொண்டு திசை மாறுதல் போன்றவற்றை செயல்படுத்துகிறது. பறவைகளின் அறிவுத் திறனும் ஆச்சரியகரமாக சிறப்பாக உள்ளது. மனித மூளையில் உள்ள சிந்திக்கும் பகுதியான 'செரிபெரல் கார்டெக்ஸ்' (Cereberal Cortex) பறவைகளில் மிகப் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. ஆனால் ஹைபர்ஸ்ட்ரியாடம் (Hyperstriatum) என்னும் மனிதர்கள் மற்றும் பாலூட்டிகளில் இல்லாத ஒரு பகுதி பறவைகளில் மூளையில் உள்ளது. இந்த பகுதியே பாடும் பறவைகள் பாட்டுக்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. பறவைகளின் அறிவுத்திறனிற்கும் இதுவே காரணமாக இருக்கலாமென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

அலகு:

பறவைகளின் உணவுமுறைக்கேற்ப அலகுகள் அமைந்துள்ளன. வானம் பாடி போன்ற மலர்களில் தேன் குடிக்கும் பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை போன்ற அசைவப் பறவைகளூக்கு சதையைப் பிய்த்து உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கும் இரையை பிடிக்க வாகான ரம்பம் போன்ற விளிம்புடைய அலகு. பழக்கொட்டைகளை உடைக்க உறுதியான அலகு, மரங்கொத்திப் பறவைக்கோ உளி போன்ற உறுதியும் கூர்மையும் கொண்ட அலகு.

உணவு:

பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை உணவு தேடவும், உண்ணவுமே செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால் பறவைகளால் உடலில் உணவைச் சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி உண்பது அவசியமாகிறது.

பறவைகளில் சைவமும், அசைவமும் உண்டு. காகம் போன்றவை இரண்டையுமே உண்கின்றன. சில பறவைகள் ஸ்பெஷல் டயட் வைத்துள்ளது, எவர்கிளேட் கைட் என்ற பறவை நத்தைகளை மட்டுமே உண்ணும். பறவைகளின் வயிறு அசாத்தியமானவை. கடினமான கொட்டைகள், செல்பிஷ் போன்றவற்றைக் கூட நொறுக்கி செரிமானம் செய்துவிடும். சில பழக்கொட்டை உண்ணும் பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து உண்கின்றன. வயிற்றில் கொட்டைகளை நொறுக்க வசதியாகத் தான்! குஞ்சுகளுக்கு உணவு எடுத்துச் செல்ல பல பறவைகள் வாய்க்குள் சிறிய பை போன்ற பிரதேசங்களை வைத்துள்ளது.

உறக்கம்:

இரவில் வேட்டையாடும் ஆந்தை போன்றவற்றைத் தவிர பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில் உறங்குகின்றன. குஞ்சு பொரிக்கும் காலங்களில் மட்டுமே கூட்டில் உறங்குகிறது. மற்ற நேரங்களில் கிளையோ, மரப்பொந்தோ, சில சமயம் ஒற்றைக் காலிலோ கிடைத்த இடத்தில் உறங்கிக் கொள்ளும். அவைகளுக்கு மனிதனைப் போல நீண்ட நேரத்தூக்கம் தேவைப்படுவதில்லை, மூளைக்கு ஓய்வளிப்பதற்காக் உறங்குவதுமில்லை. தசைகளை தளர்த்தவும், சக்தியைச் சேமிக்கவும் மட்டுமே தூக்கம் தேவைப்படுகிறது.

ஜோடி:

பெரும்பாலான பறவைகள் ஒருவனுக்கு ஒருத்தி கொள்கையைக் கடைப்பிடிப்பவை. குறைந்த பட்சம் ஒரு சீஸனுக்காவது. வழக்கம் போல் இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. பாடுகின்ற பறவைகள் பாட்டாலேயே தங்கள் துணையைப் பிடிக்கின்றன. பெரும்பாலும் சத்தமாக நீளமாக பாடும் ஆணின் பாட்டிற்குத் தான் பெண் மயங்கி வந்து சேரும். மற்ற பறவைகள் தங்கள் இறகு அலங்காரத்தால் துணையை அசத்துகின்றன.

ஆண், பெண் இரண்டுமே முட்டையை அடைகாப்பதுண்டு. வெளிவரும் குஞ்சுகளில் பொதுவாக 10% மட்டுமே ஒரு வருடம் தாண்டி உயிர் வாழ்கிறது.

இடப்பெயர்ச்சி:

உணவுத் தேவைகளுக்காகவும் மிக வெப்பம், மிக குளிர் சீதோஷ்ண நிலைகளை தவிர்ப்பதற்காகவும் பறவைகள் வருடாந்திர இடப்பெயர்ச்சி செய்கிறது. கடல் பறவைகள் மிக அதிக தூரம் (சில வகைகள் ஒரு வருடத்தில் 32,000 கிமீ வரை) பயணிக்கின்றன.

இடப்பெயர்ச்சி செய்யும் போது அது பல அடையாளங்களைக் கொண்டு சரியான இடத்திற்கு சென்று சேர்கிறது. பகலில் சூரியனின் திசையைக் கொண்டும், இரவில் சில நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டும், பூமியின் காந்த அலைகளைக் கொண்டும், சில நில அடையாளங்களைக் கொண்டும், சில தனிப்பட்ட சத்த வித்தியாசங்களைக் கொண்டும் பாதையை உணர்ந்து கொள்கிறது.

பறவைகள் கூட்டமாகச் செல்லும் போது V போன்ற வடிவத்தில் பறப்பதைப் பார்திருக்கலாம். இவ்வாறு செல்லும் போது முதல் பறவையைத் தவிர மற்ற எல்லாப் பறவைகளும் முன்னால் செல்லும் பறவையின் இறக்கை வீச்சில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக எளிதாக பறக்கிறது.

தனியே பறந்து செல்லும் முன்னனுபவமில்லாத சில இளம் பறவைகள் சமயங்களில் வழி தப்பி அதன் இனம் செல்லும் வழக்கமான வழியை விட ஆயிரக்கான கி.மீ.க்கள் தள்ளி வந்து விடுவதையும் காணலாம்.

பரிணாம வளர்ச்சி:

முட்டையிலிருந்து கோழியா? கோழியிலிருந்து முட்டையா? என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். விஞ்ஞானிகள் இதற்கு ஒரு படி முன்னே போய் டினோசாரிலிருந்து பறவையா? என்று அலசியிருக்கிறார்கள். டினோசாரின் ஒரு வகையான தெரொபோட் (Theropod) இனத்திலிருந்து பறவைகள் தோன்றின என்று ஒரு சாராரும். அதற்கு முன்பே தெகோடோன்ட்லிருந்து (Thecodont) (இது டினோசாருக்குத் தாத்தா) பறவைகள் உருவானது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.

பறப்பதைப் பற்றியும் இரு கருத்துக்கள் உள்ளன. பறவைகளின் முன்னோர்கள் மரத்துக்கு மரம் தாவி அப்படியே பறக்கத் துவங்கினர் என்று சிலர் சொன்னாலும், நிலத்திலிருந்து இரைக் காகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தாவித் தாவி பறக்கத் துவங்கியதாக பொதுவாக நம்புகின்றனர்.

இவ்வாறு இரு கருத்துக்கள் இருந்தாலும். ஒரு விஷயம் நிரூபணமாகியுள்ளது. 'க்ரெடாசியஸ்' (Cretaceous) யுகத்தில், அதாவது 138 மில்லியன் வருடங்கள் முன்பிலிருந்து 65 மில்லியன் வருடங்கள் முன்பு வரை உள்ள காலகட்டத்தில், பறவைகள் இருந்ததற்கான சான்றுகள் கிட்டியுள்ளன.

http://www.kalanjiam.com/science/index.php?titlenum=301

Link to post
Share on other sites
 • 4 weeks later...

தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எவ்வாறு வருகிறது..?

தூக்கத்தில் நடக்கும் பழக்கம் ஒருவித மனநோயின் வெளிப்பாடாக வருகிறது. இது தூக்கத்தில் தோன்றும் கனவு நிலையில் சாத்தியப்படுகிறது. எப்படி கனவு என்பது நம் ஆழ்மனதில் அடக்கிவைக்கப்பட்டிருக்கும் நிறைவேறா ஆசைகளின் வடிகாலாக அமைகின்றதோ, அந்த மாதிரியே ஆழ்மனதில் நீண்ட காலமாக பதிந்திருக்கும் கசப்பான அனுபவங்கள், எண்ணங்கள், ஆசைகள், இச்சைகள், ஆவேச உணர்ச்சிகள் போன்றவற்றை நிறைவேற்றீக்கொள்ளும் முயற்சிதான் ‘துயில் நடை’. தூக்கத்தில் கனவுக்கு அடுத்த கட்டம் துயில் நடை. தூக்கத்தில் நடப்பதற்கும் அந்தக் கணத்தில் அவர் காணும் கனவுக்கும் தொடர்புண்டு. கனவில் தோன்றும் உணர்வுகளுக்கு ஏற்ப அவர் அசைவு கொடுக்கிறார். புரிந்துக்கொள்ள முடியாத சில வார்த்தைகளையோ, வாக்கியங்களையோ சொல்வார், எழுந்து நடப்பார், தண்ணீர் குடிப்பார், கதவைத் தட்டுவார். எல்லாம் ஓரிரு நிமிடங்கள்தான். அதற்குள் அவர் சுய உணர்வுக்கு வந்துவிடுவார். ஆனால் நடந்தது, கதவைத் தட்டியது எல்லாமே அவருக்கு மறந்துவிடும் கனவு மாதிரி.

Link to post
Share on other sites

கின்னஸ் புகழ் கோயில்

தில்லியில் உள்ள புகழ்பெற்ற அட்சர்தம் சுவாமி நாராயணன் கோயில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 86 ஆயிரத்து 342 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது இக்கோயில். உலகில் முதன்முறையாக ஒரு இந்துக் கோயில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவை.

***

ஹாரி பாட்டர் இதுவரை 65 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 35 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டுள்ளனவாம்.

நன்றி நிலாச்சாரல்.

Link to post
Share on other sites
 • 4 weeks later...

ராணுவமில்லாத நாடுகள்

உலகில் மிகப்பொப்ய ராணுவம் உள்ள நாடு சீனா என்பது எல்லோருக்கும் தொப்யும். இரண்டரை கோடி பேர் சீன ராணுவத்தில் பணியாற்றிவருகிறர்கள். இதில் 2 கோடி பேர்கள் வரை தரைப் படையிலும் ஏனையோர் கப்பல், விமானம் போன்ற படைவீரர்களாகவும் பணியாற்றி வருகிறர்கள். இதுதான் உலகின் மிகப்பொப்ய ராணுவ நாட்டின் கதை.

அதே சமயம் ஒரே ஒரு ராணுவ வீரர்கூட இல்லாத நாடுகளும் இந்த உலகில் உள்ளது என்பது ரொம்ப பேருக்குத் தொப்யாது. இதில் முத லிடம் வகிப்பது வாடிகன் நாடாகும். 0.4 சதுர கிலோ மீட்டர் சுற்றளவே இந்த நாட்டுக்கு உள்ளது. இங்குள்ள மக்கள் தொகையோ 900 பேர்கள் தான் இந்தகுட்டி நாடு எப்படி ஒரு ராணுவத்தை வைக்க முடியும். அப்படியே ராணுவம் இருந்தாலும் இந்த குட்டி ராணுவப் படையால் பிற நாடுகளுடன் எப்படி போக்ப்ட்டு ஜெயிக்க முடியும்? இந்த குட்டி நாட்டை சுற்றி இத்தாலிய நாடு உள்ளது. எனவே இதனைப் பாதுகாக்கும் பொறுப்பு இத்தாலிய நாட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வாடிகன் மட்டுமல்ல, இத்தாலியின் நடுவிலுள்ள சான்மாக்ப்நோய் என்ற நாட்டுக்கும் தனியாக ராணுவம் கிடையாது எனவே இதனை பாதுகாக்கும் பொறுப்பும் இத்தாலிய ராணுவம் தான் கவனித்து வருகிறது. இதன்படி இத்தாலி நாட்டு ராணுவம் இரண்டு குட்டி நாடுகளுக்கும் ராணுவமாக இருந்து உதவி வருகிறது.

ஐரோப்பியன் மெடிட்ரேனியன் ஓரப் பகுதியில் மொனாக்கோ என்ற பெயாப்ல் 1.95 சதுர கிலோ மீட்டர் சுற்றளவுள்ள ஒரு நாடு உள்ளது. கிக்ப்மால்டி என்ற ராஜகுடும்பம் தான் இந்த நாட்டை ஆண்டு வருகிறது. இந்த நாட்டுக்கும் தனியாக ராணுவம் இல்லாததால் பிரான்ஸ் நாட்டு ராணுவம் தான் இந்த நாட்டின் ராணுவ சேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருந்த நாவ்டு என்ற தீவு 1986-ல் சுதந்திர மடைந்தது. இருப்பினும் இந்த நாட்டின் ராணுவ தேவைகளை ஆஸ்திரேலியா தான் கவனித்து வருகிறது. சுதந்திர குட்டித்தீவு என்றக்லும் இதற்குத் தனியாக ராணுவம் கிடையாது. இதுபோல சமோவ, காப்பாற்றி ஆகிய இரண்டு தீவுகளுடைய ராணுவ தேவைகளை நியூசிலாந்து நாடும் பலாவ் என்ற தீவுடன் ராணுவ தேவைகளை அமொப்க்காவும் கவனித்து வருகிறது.

ராணுவப்புரட்சிகளும் திடீர் திடீர் ஆட்சி மாற்றங்களும் சர்வ சாதாரணமாக இருப்பதால் ஹெய்தி என்ற நாடு உலக வார்த்தைகளில் அடிக்கடி இடம் பெற்று வரும் நாடாகும். இருப்பினும் இந்த நாட்டுக்கு என்று தனியாக ராணுவ அமைப்புகள் கிடையாது ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் அங்குள்ள சிலஅமைப்புகளை சேர்ந்தவர்கள் தான் ராணுவ வீரர்களாகவும்மாறி நாட்டைக் காப்பாற்றி வருகிறக்ர்கள்.

மத்திய அமொப்க்காவில் உள்ள கோஸ்டாக்ப்க் என்ற நாட்டில் 1870 முதல் 1882 வரை ராணுவ ஆட்சி அமுலுக்கு இருந்தது. ஆனால் பிறகு இந்த நாடு சுதந்திரமடைந்தபோது எங்களுக்கு ராணுவமே தேவை இல்லை என கூறி இன்றளவும் ராணுவமே இன்றி ஆட்சி நடந்து வருகிறது. மேற்கு ஐரோப்பாவிலுள்ள அண்டோரா என்ற நாட்டிலும் ராணுவம் கிடையாது. அதே சமயம் ராணுவம் தேவைப்பட்டால் இந்த நாட்டுக்கு பிரான்சும், ஸ்பெயினும் ராணுவ உதவிகளை செய்து வருகிறது.

பனாமா நாட்டுக்கும் தனியாக ராணுவம் கிடையாது. அந்த நாட்டிலுள்ள போலீசும் கரை ஓர காவலாளிகளும் தான் தேவைப்படும்போது ராணுவ வீரர்களாகவும் மாறிக்கொள்கிறக்ர்கள். ஸ்விட்சர்லாந்து நாட்டில் ராணுவ வீரர்களில் பெரும் பகுதியினர் தங்கள் வீடுகளில்தான் வசித்து வருகிறக்ர்கள். வீடுகளில் தான் பயிற்சியும் பெற்று குடும்பத்தையும் கவனித்து வருகிறக்ர்கள். ஏதாவது தேவை ஏற்படும் போது மட்டும் தான் தங்கள் வீடுகளில் இருந்து ராணுவ முகாம்களுக்கு சென்று அங்கு இருக்கும் வீரர்களுடன் சேர்ந்து நாட்டைக் காப்பாற்ற சென்று வருகிறக்ர்கள்.

Link to post
Share on other sites
 • 1 month later...

இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன் மூளை ‌சி‌‌றியதா?

ஒரு ‌சில வ‌ரிக‌ளி‌ல் உ‌ங்க‌ள் அ‌றிவை மே‌ம்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள...

கிரீன்விச் நாட்டில் இப்போது என்ன நேரம் என்று அறிய வேண்டுமா? உங்கள் கடிகாரத்தை அப்படியே தலைகீழாக பாருங்கள். அதுதான்.

மரங்களே இல்லாத கண்டம் எது தெரியுமா? அண்டார்டிகா கண்டம்தான்.

நாம் பிறக்கும்போது நமது உடலில் இருக்கும் எல்லா பாகமும் வளரும். ஆனால் நமது கரு விழிகள் மட்டும் வளர்வதில்லை.

மனிதனின் மூளை என்றால் எல்லோருக்கும் ஒரே எடையில் இருக்குமா?

இருக்காது. அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மக்களை விட இந்தியர்களின் மூளை எடை அளவில் சற்று குறைந்துதான் காணப்படுகிறதாம். ஆனால் எடை குறைவிற்கும் அறிவாற்றலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பிறந்த குழந்தைகள் அழுது கொண்டே தான் இருக்கிறது. ஆனால்... கண்ணீர் வருமா? இல்லை

பிறந்த குழந்தைக்கு 15 நாட்கள் கழித்துத்தான் கண்ணீர் சுரப்பிகள் வளர்கின்றன.

webulagam.com

Link to post
Share on other sites

கூடுகின்ற குழந்தைச் செல்வம்

75 மில்லியன் ஜனத்தொகை 2050ம் ஆண்டளவில் வந்துவிடுமாம். அது எந்த நாடாக இருக்கும்? சுவிஸ் நாடு, ஜேர்மனி, இத்தாலி, ஒல்லாந்து…. எல்லாமே தப்புப் கணக்குத்தான். என்றாலும் நீங்கள் மோசமாக யூகிக்கவில்லை. இந்த நாடுகளை அண்டிய நாடான பிரான்ஸில்தான் இப்படியொரு ஜனத்தொகை இன்னும் 45 ஆண்டுகளில் இருக்கும் என்று கணிப்பிட்டு இருக்கின்றார்கள். கொழுத்த பணக்கார நாடுகளான மேற்கு ஐரோப்பிய நாடுகளில், ஜனத்தொகை விடயத்தில், இதுவரையில் முன்னிற்கும் ஜேர்மனியை ஓரங்கட்டிவிட்டு, பிரான்ஸ் முதலிடத்தைப் பிடிக்கப் போகின்றது என்கிறார்கள். இந்த நாட்டோடு ஒட்டி, பிரிட்டனின் ஜனத்தொகை 2050இல் 60மில்லியனை எட்டிப் பிடிக்கும் என்கிறார்கள். ஜேர்மனியின் ஜனத்தொகையோ 82 மில்லியனில் இருந்து 70 மில்லியனாக வீழ்ச்சி காணப் போகின்றதாம். இத்தாலியிலோ பிறப்பு விகிதம் மிகக் குறைவ என்பதால் 57 மில்லியனில் இருந்து 43 மில்லியன் வரையில்தான் இதன் ஜனத்தொகை இருக்கும் என்று கணிக்கப்படுகின்றது. 19ம் நூற்றாண்டு வரை, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பிராண்ஸ்தான் அதிக ஜனத்தொகையைக் கொண்டிருந்ததோடு, இக்காலகட்டத்தின் பின்புதான், ஜேர்மனியும், பிரிட்டனும் பிரான்ஸை ஓரங்கட்டி விட்டு முன்னே வந்தன. இவர்களும் ஆசைக்கு ஒன்று போதும் என்று இப்பொழுது எண்ணத் தலைப்பட்டு விட்டார்களோ?

நன்றி: புதுமை

Link to post
Share on other sites

பிரமிக்க வைக்கும் பாடி பில்டர் !

உலகின் மிகச் சிறிய “பாடி பில்டர்” எனும் பெருமையை பெற்றுள்ள இந்த ஆதித்யா இந்திய நாட்டைச் சேர்ந்தவர்.

வெறும் எண்பத்து நான்கு செண்டீ மீட்டர் உயரமும், ஒன்பது கிலோ எடையும் கொண்ட இவர் தன்னம்பிக்கையும், துணிச்சலும் மிகுந்தவராம்.

one.jpg

இவருக்கென்றே தயாராக்கப்பட்டுள்ள 1.5 கிலோ பளுவை தினமும் தூக்கி உடற்பயிற்சி செய்கிறார்.

two.jpg

கின்னஸ் நூலிலும் இடம்பிடித்துள்ள இவர் இப்போது மும்முரமாக நடனம் கற்று வருகிறாராம்.

அழகில்லை, திறமையில்லை, வசதியில்லை என்றெல்லாம் புலம்பும் இன்றைய நவீன இளைஞர்களுக்கு எதுவும் இல்லையென்று புலம்புவது இழுக்கு, வாழ்க்கையை துணிச்சலுடன் சந்திப்பதே அழகு என்று பாடம் கற்பிக்கிறார் இந்த பத்தொன்பது வயது சிறு இளைஞர்.

sirrippu.com

Link to post
Share on other sites

புகையிலைக் காற்றை முதல் சுவாசமாக...

குழந்தை இறந்து விட்டதாக எண்ணி அதை அப்படியே கிடத்தி விட்டுப் போய் விட்டாள் மருத்துவத்தாதி.

நெருங்கிய உறவினரான மருத்துவர் - சுருட்டுப்பிரியர் - நம்பிக்கை இழக்காமல் குழந்தையின் வாயில் தனது வாயை வைத்து மூச்சைப் பலக்க ஊதினாரோ இல்லையோ குழந்தை பிழைத்துக் கொண்டது.

புகையிலைக் காற்றை முதல் சுவாசமாக இழுத்துப் பிறந்த அந்தக் குழந்தைதான் - பிக்காஸோ என்ற modern art மேதை.

Link to post
Share on other sites
 • 4 weeks later...

பெட்ரோலியம் தொழிலில் தட்ப வெப்ப நிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அது த்ிரவ எரிபொருளின் அடர்த்தியை தீர்மானிக்கிறது. எரிபொருள் நிரப்பப்படும் ஒவ்வொரு லாரியும் தட்பவெப்பம் கட்டுப்படுத்தப்பட்டவை. வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தாலும் பல டாலர்கள் கையைக் கடிக்கும். ஆனால், காஸ் ஸ்டேஷன்கள் எனப்படும் பெட்ரோல் பங்க்குகள் அவ்வண்ணம் வெப்பநிலை அக்கறை கொண்டவை அல்ல. அவை பெட்ரோலை நிலத்தடியில் சேமிப்பதால், உங்கள் வாகனங்களுக்கு அதிகாலையில் பெட்ரோல் நிரப்புவதே நல்லது. நிலம் குளிர்ந்திருக்கும் அவ்வேளையில் பெட்ரோலின் அடர்த்தி அதிகமாயிருக்கும். நீங்கள் நிரப்பும் ஒரு கேலன் பெட்ரோல் ஒரு கேலனாக இருப்பது அப்போது மட்டுமே. மதியம் அல்லது மாலையில் நீர்த்துப் போன எரிபொருளை நிரப்புவது, ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கின மாதிரிதான். அளவில் தில்லுமுல்லு இருக்கும்.

நீங்கள் எரிபொருள் நிரப்பப் போகிறபோது அங்கே ஒரு டாங்க்கர் லாரி பங்க்கின் நிலத்தடி சேமிப்புத் தொட்டியை நிரப்பிக் கொண்டிருந்தால் வேறு இடம் பாருங்கள். வோட்காவும் சிக்கன் பிரியாணியும் கலந்தடித்த பின் கலங்கிப்போகும் வயிறு மாதிரியே நிலத்தடி சேமிப்புத்தொட்டியில் ஒரு பிரளயமே ஏற்பட்டு குப்பை கூளம் எல்லாம் மேலே எழும்பியிருக்கும். அவற்றை அவசியம் உங்கள் வாகனத்தில் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமா ?

காலி என்று சிவப்பு விளக்கு எரியும் வரை காத்திராமல் வாகனத்தில் பாதி டாங்க் தீர்ந்தவுடனே நிரப்பி விடுவது நல்லது. டாங்க்கில் காலியிடம் அதிகமாயிருந்தால் ஆவியாதல் விரைவாய் நடக்கும். நஷ்டம் நமக்கே.

பொதுவாக பெட்ரோல் பம்ப்புகளில் மெதுவாக, மிதமாக, வேகமாக என மூன்று விதமாய் நிரப்பும் வசதி இருக்கும். சீக்கிரம் வேலை முடிய வேகமாக நிரப்பும் வசதியையே நம்மில் பலரும் தேர்வு செய்கிறோம். இனிமேல் மெதுவாக நிரப்புங்கள். வேகமாய் பெட்ரோல் நிரப்பும்போது நுரை அதிகம் ததும்பும். குழாயில் நுரை உருவாக்கும் வெற்றிடம் நீங்கள் நிரப்பி முடித்தபின் வாகனத்தின் டாங்க்கிலிருந்து ஓரளவு பெட்ரோலை திரும்ப உறிஞ்சிக் கொள்கிறது.

tamilnadu.com

Link to post
Share on other sites
 • 2 weeks later...

விரல் நகங்கள் வளர்வது போன்று பற்கள் ஏன் வளர்வதில்லை?

நகங்கள் வளர்வதற்கும், பற்கள் அவ்வாறு வளராததற்கும் அவற்றின் அமைப்புகளே காரணம். நகங்கள் தாவரங்களின் நுனிப்பகுதி போன்று தொடர்ந்து வளர்கின்றன. நகங்களின் அடிப்பகுதியில் அமைந்துள்ள உயிரணுக்களின் தொகுதியினால் (set of cells), உற்பத்தி செய்யப்படும் கெராடின் (Keratin) என்ற பொருள் மேற்கூறிய வளர்ச்சிக்குக் காரணமாக அமைகிறது. முடி, கொம்பு, நகம் ஆகியவற்றில் இப்பொருள் உள்ளது. ஆனால் பற்களோ பல் அரும்புகளில் (tooth-buds) இருந்து தோன்றுவன. இது பூக்கள் அரும்பில் இருந்து மலர்வதை ஒக்கும். பற்சிப்பி (enamel), பல்லின் கடினமான புறப்பகுதி, பல்லின் உட்பகுதி ஆகிய பல்லின் ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட உயிரணுக்களின் தொகுதியினால் உருவாகுவன. குழந்தை பிறப்பதற்கு முன்பே மேற்கூறிய உயிரணுத் தொகுதிகள் உற்பத்தி செய்ய வேண்டிய பல்லின் பகுதிகள் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. குழந்தைகட்குத் தோன்றி, விழுந்து விடும் பால் பற்களாயினும் (milk teeth) சரி, பின்னர் உருவாகும் நிலைத்த பற்களாயினும் சரி மனிதர்கட்குத் தோன்றும் ஒவ்வொரு பல்லும் தனித்தனிப் பல் அரும்பில் இருந்து தோன்றுகிறது. எனவேதான் ஒரு குறிப்பிட்ட பல் விழுந்தால் மீண்டும் அது முளைப்பதில்லை. ஆனால் எலி போன்ற சில உயிரினங்களில் பல் அரும்புகள் எப்போதும் உயிர்ப்புடன் விளங்குவதால் அவற்றின் பற்கள் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும். பற்கள் அளவுக்கு மீறி வளர்வதைத் தடுக்கவும், பற்களை குறிப்பிட்ட அளவுக்குள் ஒழுங்காக வைத்திருக்கவும் அவ்வுயிரினங்கள் எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

Link to post
Share on other sites
 • 2 weeks later...

குடிப்பழக்கத்தை தூண்டும் புரதம்: மாற்று மருந்து கண்டுபிடிக்க வழி

மதுப்பழக்கம், அது சார்ந்த நோய்க்கு ஆளானோருக்கு மூளையில் ஏற்படும் மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை திருத்துவதன் மூலம் குடிப்பழக்கத்தை கைவிடச் செய்யும் புது வாய்ப்பு உருவாகி உள்ளது. குடிப்பழக்கத்துக்கு அடிமையானோர், குடிப்பழக்கம் இல்லாதோரின் உடல்களின் மூளைப்பகுதி, பிரேத பரிசோதனையின் போது ஆய்வு செய்யப்பட்டது.

இதில், குடிப்பழக்கத்துக்கு அடிமையானோர், அதனால் நோய் ஏற்பட்டோரின் மூளைப்பகுதியில் பீட்டா-காடனின் என்ற புரதப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தான், குடிப்பழக்கத்துக்கு மூளையில் உள்ள செல்களை தூண்டுகிறது.

அதிகளவில் மது அருந்தும், குடிப்பழக்கத்துக்கு அடிமையானோரின் மூளைப்பகுதியில் இந்த புரதப்பொருள் அதிகளவில் இருப்பதும், குடிப்பழக்கம் இல்லாதோருக்கு, இவை மிகக்குறைவாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குடிப்பழக்கத்துக்கு தூண்டுவதற்கு இந்த புரதப்பொருள் தான் முக்கிய காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால், இதற்கு மாற்று மருந்து கண்டுபிடிப்பது எளிதாகி உள்ளது. எனவே, குடிப்பழக்கத்துக்கு அடிமையானோரை மீட்பதற்கு புதிய மருந்து விரைவில் விற்பனைக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது

http://www.tamilnews.dk/article/sciencenews/2079/

Link to post
Share on other sites
 • 2 weeks later...

ஒரு காகித‌த்‌தி‌ன் கதை

நா‌ம் இ‌ப்போது எ‌ளிதாக‌ப் பய‌‌ன்படு‌த்‌தி தூ‌க்‌கி எ‌றியு‌ம் கா‌கித‌ம் எ‌ப்படி ‌பிற‌ந்தது எ‌ன்று தெ‌ரியுமா?

கி.மு. 200-ல் பழைய து‌ணிக‌ள் ம‌ற்று‌ம் ‌‌மீ‌ன் வலைகளை‌க் கொ‌ண்டு கா‌‌‌கித‌ம் தயா‌ரி‌த்தன‌ர். து‌ணிகளை‌க் கொ‌ண்டு செ‌ய்ய‌ப்படுவதா‌ல் இத‌‌ன் ‌தயா‌ரி‌ப்பு செலவு அ‌திகமாகவு‌ம், அளவு‌ குறைவாகவு‌ம் இரு‌ந்தது.

300 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பிறகு மர‌ப்ப‌‌ட்‌டைகளையு‌ம், தாவர நா‌ர்களையு‌ம் சே‌ர்‌த்து கா‌கித‌ம் தயா‌ரி‌க்கு‌ம் முறையை அ‌றிஞ‌ர் சா‌ய் லு‌ன் எ‌ன்பவ‌ர் க‌ண்டு‌பிடி‌த்தா‌ர்.

எ‌னினு‌ம் தரமான, ‌ம‌லிவான கா‌கித‌ம் தயா‌ரி‌க்கு‌ம் சோதனை முய‌ற்‌சிக‌ள் தொடர்ந்து மேற்கொள்ளப்ப‌ட்டு வ‌‌ந்தன. பல நூ‌ற்றா‌‌ண்டுக‌ள் க‌ழி‌ந்தன.

இ‌‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் , 18-ம் நூற்றா‌ண்டில் ரெனி டி ரீமர் என்பவர் ஒருவகை குளவியைக் கவனித்தார். அவை, மரத் துணுக்குகளை மென்று அரைத்து, பின்னர் அந்தக் கூழைத் துப்பி ‌விடு‌கி‌ன்றன. அ‌ந்த கூழை வை‌த்து அவைக‌ள் வீடு கட்டிக்கொள்வதைக் கண்டார். ஆக, மரக்கூழை ந‌ன்கு ம‌சி‌த்தா‌ல் நா‌ம் ‌விரு‌ம்பு‌ம் உருவ‌ம் பெறலா‌ம் எ‌ன்பதை அடி‌ப்படையாக‌க் கொண்டு காகிதம் தயா‌ரி‌க்கு‌ம் முறையை க‌ண்டு‌பிடி‌த்தா‌ர் ரெனி டி ரீமர்.

ஆக, கா‌கித‌ம் தயாரிக்கும் முறை ஒரு குள‌வி‌யிட‌ம் இரு‌ந்து தா‌ன் நா‌ம் க‌ற்று‌க் கொ‌ண்டோ‌ம்.

மரத்தை எப்படி சரியாக அரைத்து காகிதம் தயாரிப்பது என்று கெல்லர் என்பவர் கண்டுபிடித்தார்.

ஒரே மர‌த்‌தி‌ல் இரு‌ந்து பல வகையான கா‌கித‌ங்களை‌த் தயா‌ரி‌க்கலா‌ம். அதாவது, ஒ‌‌வ்வொரு தர‌த்‌தி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு வகையான இய‌ந்‌திர‌ம், வே‌தி‌ப் பொரு‌ட்க‌ள் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு, ‌வித‌விதமான கா‌கித‌ங்க‌ள் தயா‌ரி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.

webulagm.com

Link to post
Share on other sites

இந்திய ரகசியங்கள்

இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.

இந்தியாவின் தேசிய விலங்கு புலி, பறவை மயில்.

இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட்கிளிப்.

இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் வங்கி.

இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர்.

1911ஆ‌ம் ஆ‌ண்‌டி‌ல் இரு‌ந்துதா‌ன் புதுடெ‌ல்‌லி இ‌ந்‌தியா‌வி‌ன் தலைநக‌ராக செய‌ல்ப‌ட்டு வரு‌கிறது.

இ‌ந்‌தியா‌வி‌ல் உ‌‌ள்ள ‌மிக‌ப்பெ‌ரிய ஏ‌ரி ஒ‌ரிசா‌விலு‌ள்ள ‌சி‌லிகா ஏ‌ரிதா‌ன். இத‌ன் பர‌ப்பளவு 100 ‌கி.‌மீ‌ட்ட‌ர் ஆகு‌ம்.

இ‌ந்‌திய தே‌சிய‌க் கொடியை வடிவமை‌த்தவ‌ர் சுரே‌ந்‌திரநா‌த் பான‌ர்‌‌ஜி. ஆ‌ண்டு 1906.

இ‌ந்‌தியா‌வி‌ல் ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து இ‌ல்லாத மா‌நில‌ம் மேகாலயா.

இ‌ந்‌தியா பரு‌த்‌தி உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் ‌சிற‌‌ந்து ‌விள‌ங்கு‌கி‌ன்றது.

இ‌ந்‌திய வானசா‌ஸ்‌திர‌த்‌தி‌ன் த‌ந்தை என அழை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ஆ‌ரியப‌ட்ட‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌ன் நறுமண‌த் தோ‌ட்ட‌ம் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் மா‌நில‌ம் கேரள‌ம். இ‌ங்கு வாசனை‌ப் பொரு‌ட்க‌ள் அ‌திக‌ம் ப‌யிர‌ட‌ப்படு‌ம்.

இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் பேசு‌ம் பட‌ம் இ‌ந்‌தி‌யி‌ல் 1931ஆ‌ம் ஆ‌ண்டு வெ‌ளியானது. பட‌த்‌தி‌ன் பெய‌ர் ஆல‌ம் ஆரா.

webulagam.com

Link to post
Share on other sites
 • 2 weeks later...

Lincoln vs Kennedy

Abraham Lincoln was elected to Congress in 1846.

John F. Kennedy was elected to Congress in 1946.

Abraham Lincoln was elected President in 1860.

John F. Kennedy was elected President in 1960.

Both were particularly concerned with civil rights.

Both wives lost their children while living in the White House.

Both Presidents were shot on a Friday.

Both Presidents were shot in the head.

Now it gets really weird.

Lincoln 's secretary was named Kennedy.

Kennedy's Secretary was named Lincoln.

Both were assassinated by Southerners.

Both were succeeded by Southerners named Johnson.

Andrew Johnson, who succeeded Lincoln, was born in 1808.

Lyndon Johnson, who succeeded Kennedy, was born in 1908.

John Wilkes Booth, who assassinated Lincoln, was born in 1839.

Lee Harvey Oswald, who assassinated Kennedy, was born in 1939.

Both assassins were known by their three names.

Both names are composed of fifteen letters.

Now hang on to your seat.

Lincoln was shot at the theater named 'Ford.'

Kennedy was shot in a car called ' Lincoln' made by 'Ford.'

Lincoln was shot in a theater and his assassin ran and hid in a warehouse.

Kennedy was shot from a warehouse and his assassin ran and hid in a theater.

Booth and Oswald were assassinated before their trials.

And here's the kicker...

A week before Lincoln was shot, he was in Monroe, Maryland

A week before Kennedy was shot, he was with Marilyn Monroe.

Link to post
Share on other sites

தேன் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெடாமல் இருக்கிறதே.... எப்படி?

இதற்குக் காரணம் தேனீக்கள், தேன் செய்யும் முறையில் இருக்கிறது. தேனீக்கள் பூக்களிடம் விஜயம் செய்து சேகரிக்கும் பூந்தேனை அப்படியே சேர்த்து வைப்பதில்லை. வயிற்றில் உபரியாகா இருக்கும் சிறிய பையில் அதை வைத்து தேன்கூட்டுக்குக் கொண்டுவருகிறது. வயிற்றுக்கும் இந்தப் பைக்கும் ஒரு வால்வு இருக்கிறது. முதலில் இந்த தேனில் இரசாயன மாற்றங்கள் செய்கின்றது, குறிப்பாக தேனில் இருக்கும் சக்கரையில், அதன் பின் தேனில் இருக்கும் தண்ணீரை நீக்கிவிடுகிறது. அது தேன் கூட்டில் இருக்கும் உஷ்ணத்தால் ஏற்படுகிறது. தேன் கூட்டில் சேகரித்து வைக்கப்பட்ட தண்ணீரற்ற தேன், சரம் கெடவே கெடாது. லட்சம் வருடம் ஆனாலும் கெடாது என்கிறார்கள் .நாலாயிரம் வருடத்திற்கு முன் இறந்து போன எகிப்திய ஃபாரோ மன்னனோடு பிரமிட்டுக்குள் வைக்கப் பட்ட தேன் இதுவரை கெட்டுப் போகவில்லை!. தேனீகள் மலர்களில் மட்டும் தேன் சேகரிப்பதில்லை. சில சமயம் மற்ற பூச்சிகளிலிருந்தும் அல்லது செடிகளின் மற்ற பாகங்களிலிருந்தும் சேகரிக்கிறது! சாதாரணமாக ஒரு பவுண்டு தேன் சேகரித்துக் கொண்டுவர ஒரு தேனீ சுமார் "45,000 மைல்" துரம் அலைந்து உழைக்க வேண்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பூனை எப்படி இருளில் பார்க்கிறது ?

பூனையின் கண்கள் இருளில் பார்க்கும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளன. அதன் விழிகள் வட்ட வடிவிலிம் பெரிய அளவிலும் உள்ளன. அதனால் அதிக வெளிச்சம் உள்ளேவரும். மேலும் அதன் கண்களில் பின்புறத்தில் பிரதி பலிக்கும் பகுதியும் உள்ளது. அதனால் அது வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது. இதன் மூலம் அது ஒரு ''டார்ச்" போல செயல்படுகிறது. மேலும் இதன் விழிகளில் "ராட்" அணுக்கள் உள்ளன. இவை மங்கிய ஒளியில்செயல்படும் அளவுக்கு சிறப்புத்தன்மை கொண்டவை! இதன் மூலம் இரவிலும அவற்றுக்குக் கண்கள் நன்றாக தெரியும்! அதனால் இருட்டிலும் அவை நன்றாக வேட்டையாடுகின்றன.

Link to post
Share on other sites

ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன்(U.N), என்பது, நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு அனைத்துலக நிறுவனம். உலகில்

கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, செப்டெம்பர் 2003 நிலைவரப்படி, 191 உறுப்புநாடுகள் உள்ளன.

உறுப்பு நாடுகள்:

* அப்கானிஸ்தான் (19 நவம்பர் 1946)

* அல்பேனியா (14 டிசெம்பர் 1955)

* அல்ஜீரியா (8 ஒக்டோபர் 1962)

* அண்டோரா (28 யூலை 1993)

* அங்கோலா (1 டிசெம்பர் 1976)

* அன்டீகுவாவும் பார்பூடாவும் (11 நவம்பர் 1981)

* ஆர்ஜென்டீனா (24 ஒக்டோபர் 1945)

* ஆர்மேனியா (2 மார்ச் 1992)

* அவுஸ்திராலியா (1 நவம்பர் 1945)

* ஒஸ்திரியா (14 டிசெம்பர் 1955)

* அஸர்பஜான் (2 மார்ச் 1992)

* பஹாமாஸ் (18 செப்டெம்பர் 1973)

* பாரெய்ன் (21 செப்டெம்பர் 1971)

* பங்களாதேஷ் (17 செப்டெம்பர் 1974)

* பார்பாடொஸ் (9 டிசெம்பர் 1966)

* பெலாரஸ் (24 ஒக்டோபர் 1945)

* பெல்ஜியம் (27 டிசெம்பர் 1945)

* பெலீஸ் (25 செப்டெம்பர் 1981)

* பெனின் (20 செப்டெம்பர் 1960)

* பூட்டான் (21 செப்டெம்பர்September 1971)

* பொலீவியா (14 நவம்பர் 1945)

* பொஸ்னியாவும் ஹெர்சகோவீனாவும் (22 மே 1992)

* பொட்ஸ்வானா (17 ஒக்டோபர் 1966)

* பிரேஸில் (24 ஒக்டோபர் 1945)

* புரூனை தாருசலாம் (21 செப்டம்பர் 1984)

* பல்கேரியா (14 டிசம்பர் 1955)

* பர்கீனா(Burkina Faso) (20 செப்டெம்பர் 1960)

* புருண்டி (18 செப்டம்பர் 1962)

* கம்போடியா (14 டிசம்பர் 1955)

* கமரூன் (20 செப்டம்பர் 1960)

* கனடா (9 நவம்பர் 1945)

* கேப் வெர்டே(Cape Verde) (16 செப்டம்பர் 1975)

* மத்திய ஆபிரிக்க குடியரசு (20 செப்டம்பர் 1960)

* சாட்(Chad) (20 செப்டம்பர் 1960)

* சிலி (24 ஒக்டோபர் 1945)

* சீனா (24 ஒக்டோபர் 1945)

* கொலம்பியா (5 நவம்பர் 1945)

* கொமொரோஸ் (12 நவம்பர் 1975)

* கொங்கோ குடியரசு (20 செப்டம்பர் 1960)

* கொஸ்தா ரீக்கா (2 நவம்பர் 1945)

* கொடே டில்வொய்ரே (Côte d’Ivoire) (20 செப்டம்பர் 1960)

* குருவாற்சியா (22 மே 1992)

* கியூபா (24 ஒக்டோபர் 1945)

* சைப்பிரஸ் (20 செப்டம்பர் 1960)

* செக் குடியரசு (19 யனவரி 1993)

* கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு (17 செப்டம்பர் 1991)

* கொங்கோ ஜனநாயக குடியரசு (20 செப்டம்பர் 1960)

* டென்மார்க் (24 ஒக்டோபர் 1945)

* டிஜிபௌடி(Djibouti) (20 செப்டம்பர் 1977)

* டொமினிகா (18 டிசம்பர் 1978)

* டொமினிகன் குடியரசு (24 ஒக்டோபர் 1945)

* எக்குவடோர் (21 டிசம்பர் 1945)

* எகிப்த்து (24 ஒக்டோபர் 1945)

* எல் சால்வடோர் (24 ஒக்டோபர் 1945)

* மத்திய கோட்டு கினியா(Equatorial Guinea) (12 நவம்பர் 1968)

* எரித்திரியா (28 மே 1993)

* எஸ்தோனியா (17 செப்டம்பர் 1991)

* எதியோப்பியா (13 நவம்பர் 1945)

* பிஜி (13 ஒக்டோபர் 1970)

* பின்லாந்து (14 டிசம்பர் 1955)

* பிரான்சு (24 ஒக்டோபர் 1945)

* காபொன்(Gabon) (20 செப்டம்பர் 1960)

* கம்பியா (21 செப்டம்பர் 1965)

* ஜோர்ஜியா (31 யூலை 1992)

* ஜேர்மனி (18 செப்டம்பர் 1973)

* கானா (8 மார்ச் 1957)

* கிறீஸ் (25 ஒக்டோபர் 1945)

* கிரேனடா (17 செப்டம்பர் 1974)

* குவாத்தமாலா (21 நவம்பர் 1945)

* கினியா (12 டிசம்பர் 1958)

* கினியா-பிஸாவு(Guinea-Bissau) (17 செப்டம்பர் 1974)

* கயானா (Guyana) (20 செப்டம்பர் 1966)

* ஹயிடி (24 ஒக்டோபர் 1945)

* ஹொண்டுராஸ் (Honduras) (17 டிசம்பர் 1945)

* ஹங்கேரி (14 டிசம்பர் 1955)

* ஐஸ்லாந்து (19 நவம்பர் 1946)

* இந்தியா (30 ஒக்டோபர் 1945)

* இந்தோனேசியா (28 செப்டம்பர் 1950)

* ஈரான் குடியரசு (24 ஒக்டோபர் 1945)

* ஈராக் (21 டிசம்பர் 1945)

* அயர்லாந்து (14 டிசம்பர் 1955)

* இஸ்ரேல் (11 மே 1949)

* இத்தாலி (14 டிசம்பர் 1955)

* ஜமேய்கா (18 செப்டம்பர் 1962)

* யப்பான் (18 டிசம்பர் 1956)

* யோர்தான் (14 டிசம்பர் 1955)

* கஸக்ஸ்தான் (2 மார்ச் 1992)

* கெனியா (16 டிசம்பர் 1963)

* கிரிபாடி (14 செப்டம்பர் 1999)

* குவெய்த் (14 மே 1963)

* கிர்கிஸ்தான் (2 மார்ச் 1992)

* லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு (14 டிசம்பர் 1955)

* லத்வியா (17 செப்டம்பர் 1991)

* லெபனான் (24 ஒக்டோபர்1945)

* லெசோதோ(Lesotho) (17 ஒக்டோபர் 1966)

* லைபீரியா (2 நவம்பர் 1945)

* லிபியா (14 டிசம்பர் 1955)

* லிச்ரென்டெய்ன்(Liechtenstein) (18 செப்டம்பர் 1990)

* லிதுவேனியா(17 செப்டம்பர் 1991)

* லக்ஸம்பேர்க் (24 ஒக்டோபர் 1945)

* மடகாஸ்கார் (20 செப்டம்பர் 1960)

* மாலாவி (1 டிசம்பர் 1964)

* மலேசியா (17 செப்டம்பர் 1957)

* மாலே தீவுகள் (21 செப்டம்பர் 1965)

* மாலி (28 செப்டம்பர் 1960)

* மால்டா (1 டிசம்பர் 1964)

* மார்ஷல் தீவுகள் (17 செப்டம்பர் 1991)

* மவுரிடானியா (Mauritania) (27 ஒக்டோபர் 1961)

* மொரீஷியஸ் (24 ஏப்பிரல் 1968)

* மெக்ஸிகோ (7 நவம்பர் 1945)

* மைக்ரோனேஸியா (Micronesia, Federated States of…) (17 செப்டம்பர் 1991)

* மோல்டோவா (2 மார்ச் 1992)

* மொனாகோ (28 மே 1993)

* மொங்கோலியா (27 ஒக்டோபர் 1961)

* மொன்தநேக்ரோ (28 யூன் 2006)

* மொராகோ (12 நவம்பர் 1956)

* மொஸாம்பிக் (16 செப்டம்பர் 1975)

* மியன்மார் (19 ஏப்பிரல் 1948)

* நமீபியா (23 ஏப்பிரல் 1990)

* நவுறு (14 செப்டம்பர் 1999)

* நேபாளம் (14 டிசம்பர் 1955)

* நெதர்லாந்து (10 டிசம்பர் 1945)

* நியூசிலாந்து (24 ஒக்டோபர் 1945)

* நிக்கராகுவா (24 ஒக்டோபர் 1945)

* நிகர் (20 செப்டம்பர் 1960)

* நைஜீரியா (7 ஒக்டோபர் 1960)

* நோர்வே (27 நவம்பர் 1945)

* ஓமான் (7 ஒக்டோபர் 1971)

* பாகிஸ்தான் (30 செப்டம்பர் 1947)

* பாலாவ் (Palau) (15 டிசம்பர் 1994)

* பனாமா (13 நவம்பர் 1945)

* பபுவா நியூ கினியா (10 ஒக்டோபர் 1975)

* பராகுவே (24 ஒக்டோபர் 1945)

* பேரு (31 ஒக்டோபர் 1945)

* பிலிபைன்ஸ் (24 ஒக்டோபர் 1945)

* போலந்து (24 ஒக்டோபர் 1945)

* போர்த்துக்கல் (14 டிசம்பர் 1955)

* கடார் (21 செப்டம்பர் 1971)

* கொரிய குடியரசு (17 செப்டம்பர் 1991)

* ருமேனியா (14 டிசம்பர் 1955)

* ரஷ்ய ஒன்றியம் (24 ஒக்டோபர் 1945)

* ருவண்டா (18 செப்டம்பர் 1962)

* சாந்த கிட்சும் நேவிசும்(Saint Kitts and Nevis) (23 செப்டம்பர் 1983)

* சாந்த லூசியா (18 செப்டம்பர் 1979)

* சாந்த வின்செண்ட்டும் கிரேனடைன்சும்(Saint Vincent and the Grenadines) (16 செப்டம்பர் 1980)

* சாமுவா (15 டிசம்பர் 1976)

* சான் மரீனோ (2 மார்ச் 1992)

* சவோ டோமும் பிரின்சிபேவும்(Sao Tome and Principe) (16 செப்டம்பர் 1975)

* சவுதி அராபியா (24 ஒக்டோபர் 1945)

* செனகால் (28 செப்டம்பர் 1960)

* சேர்பியா (1 நவம்பர் 2000)

* செய்சிலெஸ்(Seychelles) (21 செப்டம்பர் 1976)

* சியாரா லெயோன் (27 செப்டம்பர் 1961)

* சிங்கப்பூர் (21 செப்டம்பர் 1965)

* சுலோவாக்கியா (19 யனவரி 1993)

* சுலவேனியா (22 மே 1992)

* சொலமன் தீவுகள் (19 செப்டம்பர் 1978)

* சோமாலியா (20 செப்டம்பர் 1960)

* தென் ஆபிரிக்கா (7 நவம்பர் 1945)

* ஸ்பானியா (14 டிசம்பர் 1955)

* சிறி லங்கா (14 டிசம்பர் 1955)

* சூடான் (12 நவம்பர் 1956)

* சூரிநாம்(Suriname) (4 டிசம்பர் 1975)

* சுவாசிலாந்து (24 செப்டம்பர் 1968)

* சுவீடன் (19 நவம்பர் 1946)

* சுவிற்சர்லாந்து (10 செப்டம்பர் 2002)

* சிரிய அரபு குடியரசு (24 ஒக்டோபர் 1945)

*செக்கிஸ்தான்(Tajikistan) (2 மார்ச் 1992)

* தாய்லாந்து (16 டிசம்பர் 1946)

* முன்னைநாள் யூகோஸ்லாவியாவின் மசிடோனிய குடியரசு (8 எப்பிரல் 1993)

* திமோர் லேஸ்தே(Timor-Leste) (27 செப்டம்பர் 2002)

* டோகோ (20 செப்டம்பர் 1960)

* டொ(T)ங்கா (14 செப்டம்பர் 1999)

* டிரினிடாட்டும் டுபாகோவும் (Trinidad and Tobago) (18 செப்டம்பர் 1962)

* துனீசியா (12 நவம்பர் 1956)

* துருக்கி (24 ஒக்டோபர் 1945)

* துருக்மேனிஸ்தான்(Turkmenistan) (2 மார்ச் 1992)

* துவாலு(Tuvalu) (5 செப்டம்பர் 2000)

* உகண்டா (25 ஒக்டோபர் 1962)

* உக்கரெய்ன் (24 ஒக்டோபர் 1945)

* ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (9 டிசம்பர் 1971)

* ஐக்கிய இராச்சியமும் வட அயர்லாந்தும் (24 ஒக்டோபர் 1945)

* ஐக்கிய தான்சானிய குடியரசு (14 டிசம்பர் 1961)

* ஐக்கிய அமரிக்கா (24 ஒக்டோபர் 1945)

* உருகுவே (18 டிசம்பர் 1945)

* உஸ்பெஸ்கிஸ்தான் (2 மார்ச் 1992)

* வானுவாடு(Vanuatu) (15 செப்டம்பர் 1981)

* வெனிற்சுவேலா (15 நவம்பர் 1945)

* வியட்நாம் Viet Nam (20 செப்டம்பர் 1977)

* யேமன் (30 செப்டம்பர் 1947)

* சம்பியா (1 டிசம்பர் 1964)

* சிம்பாவ்வே (25 ஓகஸ்ட் 1980)

ஆதாரம்:

1. htttp://www.un.org

2. http://ta.wikipedia.org

Link to post
Share on other sites
 • 2 weeks later...

மனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள்!

நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உ‌ண்மைக‌ள் வெ‌ளி வ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம் ஏ‌ன் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் கூட ஏ‌ற்படு‌த்து‌ம்.

அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இ‌ங்கே...

பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையை‌ப் போலவே நா‌க்‌கி‌ல் உ‌ள்ள வ‌ரிகளு‌ம் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் வேறுபடு‌ம்.

ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.

க‌ண் தான‌த்‌தி‌ல் கரு‌ப்பு ‌வி‌ழிக‌ள் ம‌ட்டுமே அடு‌த்தவரு‌க்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

webdunia.com

Link to post
Share on other sites
 • 2 weeks later...

01. திருக்குறளில் 1330 குறள்கள், 14000 சொற்கள், 41294 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் ஒரு இடத்தில் கூட தமிழ் என்ற வார்த்தையை வள்ளுவர் பயன்படுத்தவில்லை.

02. தமிழில் மிகமிக மூத்த காப்பியம் தொல்காப்பியம். அதன் தனிச்சிறப்பு அதற்கு கடவுள் வாழ்த்து கிடையாது.

03. லிபியா இங்கிலாந்தைவிட ஏழு மடங்கு பெரியது ஆனால் அங்கு ஒரு ஆறுகூட கிடையாது.

04. உலகப்புகழ் பெற்ற மேனலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

05. உலகை அழவைத்த உறிட்லருக்கும் அரை மீசை உலகை சிரிக்க வைத்த சார்லி சப்ளினுக்கும் அரை மீசை.

06. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

07. பாகிஸ்தான் என்ற சொல்லின் தமிழ் விளக்கம் புனிதர்களின் நாடு என்பதாகும்.

08. கட்டார் நாட்டில் பெண்களுக்கு கார் ஓட அனுமதி கிடையாது.

09. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

10. சாக்கிரட்டீசின் உயிரைப் பறித்தது Nஉறம்லாக் என்ற விசக் கசாயம்.

11. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

12. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

13. அமெரிக்க ஜனாதிபதியின் காரின் இலக்கம் 100 என்றே இருக்கும் மாறாது.

14. பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

15. காகங்கள் இல்லாத நாடு அவுஸ்திரேலியா.

16. மலையாள நடிகர் பிரேம் நசீர் 85 கதாநாயகிகளுடன் நடித்து உலக சாதனை புரிந்தவர்.

17. கௌரவர்கள் 100 பேர்கள் அவர்களோடு பிறந்த ஒரே சகோதரியின் பெயர் துச்சலை.

18. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

19. வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

20. இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நேரு 17 வருடங்களும், இந்திரா காந்தி 16 வருடங்கள், ரஜீவ்காந்தி 5 வருடங்களுமாக மொத்தம் 38 வருடங்கள் ஒரே குடும்பத்தினர் அந்த நாட்டை ஆண்டனர்.

21. முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

22. வரலாற்றில் மிகப்பெரிய அறிஞராகப் போற்றப்படும் சாக்கிரட்டீசுக்கும், Nஉறாமருக்கும் எழுதவோ, வாசிக்கவோ தெரியாது.

23. ஆண் கழுதைக்கும், பெண் குதிரைக்கும் பிறப்பதுதான் கோவேறு கழுதை.

24. பல உயிர்களை கொன்று குவித்த உறிட்லர் ஒரு சைவ உணவுக்காரன்.

25. பீ.பீ.சியின் தமிழோசை 1941ம் ஆண்டு மே 30 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

26. இராவணனின் மகன் இந்திரஜித்துவின் உண்மைப் பெயர் மேகநாதன்.

27. பெரிய புராணத்தின் முதல் பாடலான உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்ற பாடல் 63 எழுத்துக்களைக் கொண்டது. அதுபோல பெரியபுராணம் 63 நாயன்மார் வாழ்வை எடுத்துரைப்பது அதிசயமான ஒற்றுமையாகும்.

28. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி தட்சணாமூர்த்தி.

29. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

30. இந்தி நடிகர் தேவ்ஆனந்திற்கும் நடிகர் ரஜினிக்கும் உள்ள ஒற்றுமை இருவரும் பஸ் கண்டக்டர்கள்.

31. விமான விபத்தை கண்டறிய உதவும் பிளாக் பொக்சின் உண்மையான நிறம் மஞ்சள்.

32. நாற்பதிற்கும் மேற்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகளில் ஜோன் எப் கெனடி மட்டுமே கிறீஸ்தவத்தின் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்.

33. 18 ஆண்டுகளில் 1000 ற்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி சாதனை படைத்த எழுத்தாளர் ராஜேஸ்குமார்.

34. பூனையின் முன்னங்காலில் ஐந்து விரலும், பின்னங்காலில் நான்கு விரல்களும் உண்டு.

35. நத்தை ஒரு மைல் து}ரத்தைக்கடக்க மூன்று வாரங்கள் ஆகும்.

36. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

37. வேர்க்கடலை வியாபாரியாக இருந்து அமெரிக்க ஜனாதிபதியானவர் ஜிம்மிகார்ட்டர். வெள்ளை மாளிகைக்கு நடந்தே சென்று பதவியேற்ற ஜனாதிபதியும் இவர்தான்.

38. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.

39. தடை செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் தியாகபூமி.

40. 100 சினிமா படங்களை இயக்கிய தமிழ்பட இயக்குநர் இராம நாராயணன் இது ஒரு இந்திய சாதனை.

Link to post
Share on other sites
 • 3 weeks later...

வீட்டில் பால் காய்ச்சும்போது அது பொங்கி வருவதைப் பார்த்திருக்கிறீர்கள்

அல்லவா? சற்றே அசந்தாலும் பொங்கி வழிந்து வீணாகிவிடும்.

i ) பாலைக் காய்ச்சும்போது அது ஏன் பொங்கி வருகிறது?

பால் என்பது தண்ணீர், புரதம் , மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் பல தாதுப்

பொருட்கள் அடங்கிய கலவை. பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி (DENSITY)

தண்ணீரின் அடர்த்தியைவிட குறைவாக இருப்பதால் பாலின்

மேற்ப்பரப்பில் அவை மிதக்கின்றன.

தண்ணீரின் கொதிநிலை வெப்பம் 100 oC. ஆனால், பாலில் உள்ள கொழுப்பு

50 ocல் உருக ஆரம்பித்துவிடும். பாலை காய்ச்சும்போது 50 oc நிலை

வரும்போதே பாலில் உள்ள கொழுப்பு உருகி, மேற்ப்பரப்பில் வந்து ஒரு

மெல்லிய படலமாகப் படர்ந்து நிற்கிறது. எந்த ஒரு திரவத்தைக் கொதிக்க

வைத்தாலும் அந்தத் திரவத்திலிருந்து காற்றுக் குமிழ்கள் தோன்றி மேலே

கிளம்பி வரும். பால் சூடாகும் போதும் காற்றுக் குமிழ்கள் உருவாகி மேலே

வரும். மேற்ப்பரப்பில் கொழுப்புப் படலம் ஏடாகப் படிந்து இந்தக் குமிழ்கள்

வெளியேறுவதை தடை செய்வதால், சிறு சிறு குமிழ்கள் ஒன்றாக

இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி அந்த ஏட்டுப் படலத்தோடு

மேலெழும்பி பொங்கி வழிகிறது.

ii) தொடர்ந்து கிளறிக்கொண்டே இருந்தால் பொங்கி வழிவதில்லை ஏன்?

பாலை ஒரு கரண்டியால் தொடர்ந்து கிண்டிக் கொண்டேயிருந்தால்

மேற்ப்பரப்பில் ஏடு படிவது தடுக்கப் படுகிறது. தோன்றும் காற்றுக்

குமிழ்கள் வெளியேறிவிடும் எனவே பால் பொங்கி வழிவது

தடுக்கப்படுகிறது.

iii) தண்ணீரைக் காய்ச்சினால் ஏன் பொங்குவதில்லை?

தண்ணீரில் கொழுப்போ, மாவுச்சத்தோ, புரதங்களோ இல்லை. எனவே

மேற்ப்பரப்பில் ஏடு எதுவும் படிவதில்லை. காற்றுக் குமிழ்கள் தடையின்றி

வெளியேறலாம். எனவே நீரை கொதிக்க வைக்கும்போது அது

பொங்குவதில்லை.

Link to post
Share on other sites
 • 2 months later...

மனிதனால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் எது ?

பொன், வெள்ளி, ஈயம், செம்பு, இரும்பு, தகரம், பாதரசம் ஆகியன மக்களால் பழங்காலத்தில் இருந்து பயன் படுத்தப்பட்டு வரும் உலோகங்கள். இருப்பினும் மனித இனத்தால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகமாகக் கருதப்படுவது தங்கமே. ஆற்றுப்படுகைகளில் பொன் தாதுக்கள் பாள வடிவில் அறியப்பட்டன. கற்காலத்தின் இறுதிப் பகுதியில் இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அப்போதிருந்தே நகையும் அணிகலன்களும் செய்ய இவ்வுலோகம் பயன்பட்டு வருகின்றது.

பண்பலை ஒலிபரப்பு (F M Transmission) என்பது என்ன ?

வானொலியின் ஒலிபரப்பிலும், தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், உயர் அதிர்வெண் (high fequency) கொண்ட மின் காந்த அலைகள் (electro magnetic waves) குறை அதிர்வெண் கொண்ட ஒலி, ஒளி சமிக்கைகளைச் (audio, video signals) சுமந்து செல்லும் சுமப்பான்களாகப் (carriers) பணி புரிகின்றன. அவ்வாறு சுமந்து செல்லும்போது, மின்காந்த அலைகள், ஒலி, ஒளி அலைகளால் பண்பாக்கம் பெறுகின்றன.

இப்பண்பாக்கம் இரு வழிகளில் செய்யப்படலாம். அதிர்வெண் (frequency) மாற்றத்தின் மூலமும், அலையின் வீச்சை (amplititude) மாற்றுவதன் மூலமும் செய்யலாம். முதலில் குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவது அதிர்வெண் பண்பாக்கம் (FM - Frequency Modulation) எனப்படும். அடுத்ததை அலைவீச்சு பண்பாக்கம் (AM - Amplitude Modulation) என்பர். மின்னல், இடி போன்றவற்றால் AM ஒலிபரப்பில் கர கர ஒலி, ஒலி இடையூறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. ஆனால் FM ஒலி பரப்பில் இத்தகைய இடையூறுகள் ஏதுமின்றி துல்லியமான ஒலியைக் கேட்கலாம். தொலைக்காட்சியில் FM மூலம் ஒலியும், AM மூலம் ஒளியும் பரப்பப்படுகின்றன. FM மூலம் இயங்கும் வானொலியின் ஒலிபரப்பு பண்பலை ஒலிபரப்பாகும்.

ஊற்றுப்பேனாவில் (Fountain pen) உள்ள மை, ஏறக்குறைய தீர்ந்து விட்ட நிலையில், அதிகமாக வெளியே கொட்டுவது ஏன் ?

பேனா முள் (nib), மையைத் தேக்கிவைக்குமிடம், மையை முள்ளுக்குச் செலுத்தும் வழி ஆகிய மூன்றும் பேனாவின் முக்கியமான பகுதிகளாகும். பேனாவைப் பயன்படுத்தி எழுதும் போது, கூர்மையான பேனா முள்ளின் பிளவு வழியாக மை கசிந்து தாளில் எழுதும் வாய்ப்பு உண்டாகிறது. மை தேங்கியுள்ள இடத்திலிருந்து மை வெளியேறுவதனால் உண்டாகும் காலி இடத்தில் காற்று நிரம்பிவிடும். இதனால் மை தேக்ககத்திலும், வெளியேயுள்ள வளி மண்டலத்திலும் ஏற்படும் காற்றழுத்த வேறுபாடு சமன் செய்யப்படுகிறது. காற்று உள்ளே செல்வதற்கு வசதியாக பேனா முள்ளின் நடுவில் ஒரு சிறு துளை இருப்பதையும் காணலாம். மை தேக்ககத்திலிருந்து மை வெளியேற வெளியேற, அவ்விடத்தில் நிரம்பும் காற்றின் கொள்ளளவும் மிகுதியாகிக்கொண்டே செல்லும். ஒருவர் பேனாவைப் பிடித்து எழுதிக் கொண்டே இருக்கும்போது, அவர் கை விரல்களின் சூடு உள்ளே இருக்கும் காற்றையும் சூடுபடுத்தும். மை தேக்ககத்தில் பெருமளவு மையும், ஓரளவு காலி இடமும் அவ்விடத்தில் காற்றும் இருக்கும்போது மேற்கூறிய வெப்பத்தினால் உண்டாகும் விளைவு மிக மிகக் குறைவே. ஆனால் சிறிதளவு மையும் பெருமளவு காலி இடமும் அவ்விடத்தில் பெருமளவு காற்றும் நிரம்பி இருக்கும்போது, வெப்பத்தினால் காற்று விரிவடையும். தன் விளைவாக, மை உந்தித் தள்ளப்பட்டு பேனா முள்ளின் வழியாக சிந்திக் கொட்டத் துவங்கும். மிகச் சிரிதளவே மை இருக்கும்போது அதிகமாக மை கொட்டுவது தன் காரணமாகவே.

பச்சை மிளகாயைத் தின்ற வாயில் உண்டாகும் காரத்தை இனிப்புப் பண்டம் எவ்வாறு தணிக்கிறது ?

பச்சை மிளகாயை ஒருவர் கடித்துத் தின்றவுடனே, அவர் நாவில் அமைந்திருக்கும் சுவையரும்புகள் (taste buds) கிளர்ச்சியடைகின்றன; கார உணவைத் தின்ற செய்தி நரம்புத் துடிப்புகள் (nerve impulses) மூலம் மூளைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் ஏற்படும் கார உணர்ச்சி இனிப்பைத் தின்பதன் மூலமோ அல்லது குளிர்ந்த பானங்களை அருந்துவதன் மூலமோ நீக்கப்படுகிறது அல்லது குறைக்கப்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், காரத்தைத் தின்ற வாயில் சர்க்கரை போன்ற இனிப்புப் பண்டங்கள் பட்டவுடனே, ஏற்கனவே குறிப்பிட்டவாறு சுவையரும்புகள் கிளர்ச்சியுற்று, நரம்புத்துடிப்புகள் மூலம் இனிப்பு தின்ற செய்தி மூளைக்கு அனுப்பப் படுகிறது; எனவே இனிப்புச் சுவையுணர்வு கார உணர்வை மங்கவைத்து விடுகிறது. அடுத்த காரணம், பால், தயிர் போன்ற நீர்மப் பொருட்களை உண்டவுடனே, நாவில் உண்டாகும் ஊற்றுநீரிலுள்ள வேதிப்பொருட்கள், சுவையரும்புகளை கிளர்ச்சியடையச் செய்து முன்பு சொன்ன முறைப்படி கார உணர்வைத் தணிக்கின்றன.

டாக்டர் ரா விஜயராகவன்

Link to post
Share on other sites

1. பறவை இனங்களில் ஆந்தையின் முட்டை மாத்திரமே உருண்டை வடிவில் இருக்கும்.

2. இரவு வேளைகளிலும் ஒக்சிசனை வெளிப்படுத்தும் தாவரங்கள் துளசியும் அரசமரமும் தான்.

3. இலங்கையில் முதன்முதலாக உற்பத்தி செய்யப்பட்டு 2003 நவம்பரில் மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தில் பதிவாகி விற்பனைக்கு வந்த கார் மைக்கரோ ஆகும்.

4. முதலையில் அடி வயிற்றுப் பகுதி தோலில் "புல்லட் புரூவ்" உடை தயாரிக்கிறார்களாம்.

5. உலகில் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் உள்ள நாடு இந்தோனேசியா.

6. பல பாடல்களைப் படைத்த பாரதியார் தாலாட்டுப் பாடல்களைப் பாடவே இல்லை.

7. 93 நாடுகளில் ஒரே நேரத்தில் விற்பனையாகி புத்தக உலகில் சாதனன படைத்த "ஹரிபொட்டர்" புத்தகத்தை எழுதியவர் இங்கிலாந்து பெண் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் ஆவார்.

Link to post
Share on other sites
 • 1 month later...

Hiding your Data

This is very easy and nice and secure way to hide your files.

Create a folder and call it One.

Now move all the files that you want to secure from prying eyes into that folder.

Open a command window and rename the One folder you just created to control panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}

at the prompt type :

ren One control panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}

Now when you click on your folder still named One in windows. The only thing it will do is open the control panel.

To recover your files rename the control panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} back to One

ren control panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} One

Now when you open the folder control panel there is all your files ready to veiw only by you. This works on all windows versions.

Link to post
Share on other sites
 • 2 weeks later...

விலங்குகளுக்குத் தெரியுமா?

சமீபத்தில் நடைபெற்ற சுனாமி பேரலைத் தாக்குதலில் இலங்கையில் சுமார் 21000 மனிதர்கள் சுனாமியால் உயிரிழந்தனர் . மனிதர்களின் இறந்த உடல்கள் கரையோரப்பகுதிகளில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ஆனால் இலங்கையைச் சேர்ந்த வனத்துறை அதிகார்கள் இந்த சுனாமி தாக்குதலில் விலங்குகள் ஏதும் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை என்ற ஆச்சரியத்தைத் தெரிவித்துள்ளனர். விலங்குகளுக்கு சுனாமி பேரலைத் தாக்குதலைப் பற்றி முன் கூட்டியே அறிந்து உயரமான இடங்களுக்குச் சென்று தப்பித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இலங்கையில் உள்ள மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயம் யலா வனவிலங்கு சரணாலயமாகும். இந்தச் சரணாலயம் 391 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. இந்த சரணாலயத்தில் 200 யானைகளும் மற்றும் பல அரிய விலங்கு வகைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த வனவிலங்கு சரணாலயத்திற்குள் சுனாமி தாக்குதலின் காரணமாக நீர் புகுந்து சேதத்தை விளைவித்துவிட்டது. இதில் யலா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்த 200 பேர் இதன் காரணமாக மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சரணாலயத்தில் இருந்த மரங்கள் பல சுனாமி தாக்குதலின் காரணமாக வேறோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளது. இந்த சரணாலயத்தில் இருந்த விலங்குகளில் ஒன்று கூட இறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சிக்குரிய ஒரு விஷயமாகும்.

நன்றி சுனாமி அறிந்ததும் அறியாததும் புத்தகத்திற்கு!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.