Jump to content

தகவல் துளிகள்


Recommended Posts

இந்தோனேசியாவில் உள்ள ஆசிரியர்களில் 50%க்கு மேற்பட்டோர் 30 வயதிலும் குறைந்தவர்களாம்.

Link to post
Share on other sites
 • 1 month later...
 • Replies 67
 • Created
 • Last Reply

பிஸ்கெட் என்றால்...

' பிஸ்கெட் என்ற வார்த்தை பிரெஞ்சு மொழியிலிருந்து தான் பிறந்தது . பிஸ்கெட் என்றால் , இரண்டு முறை சமைக்கப்பட்டது என்பதாகும் . பிஸ்கெட்டுக்கள் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருப்பதற்காக இரண்டு முறை வேக வைக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தவே அதற்கு பிஸ்கெட் என்று பிரெஞ்சு மக்கள் பெயர் வைத்தனர் .

--குமுதம் செப்டம்பர் 16, 2008 .

மிஸ்ஸான ' ஜெ ' .

ஆங்கில எழுத்துக்கள் ஆரம்பத்தில் எத்தனை இருந்தன என்று தெரியுமா ? மொத்தமே இருபத்து நாலு எழுத்துக்கள் தானாம் ! இதில் ' J ' எழுத்து ஆரம்பத்தில் இல்லை . அதற்கும் அப்புறம் கடைசியாக வந்து சேர்ந்த

விருந்தாளி ' U '.

--- குமுதம் / செப்டம்பர் 16 , 2008 .

--- தென்னாப்பிரிக்காவில் காந்திஜி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது , அங்கே கருப்பர் இனக் கைதிகளுக்கு

கொடுக்கப்படும் குல்லாய் காந்திஜிக்கும் வழங்கப்பட்டது . அதுதான் பின்னாளில் பிரசித்தமான காந்தி குல்லாயின் முன்னோடி .

---100 பூஜ்யங்களைக் கொண்ட எண்ணை ஆங்கிலத்தில் கூகால் ( GOOGOL ) என்கிறார்கள் .

--- நண்டு பக்கவாட்டில் தான் நடக்கும் .மீன் மிதந்தபடியேதான் தூங்கும் .குதிரை நின்றபடி ஓய்வு எடுத்துக் கொள்ளும் . வஞ்சகர் நெஞ்சில் வஞ்சகம் மட்டுமே குடி கொண்டிருக்கும்

--- பனிக்கட்டியில் கிருமிகள் உண்டாகாது , ஆகையால் தண்ணீரைவிட பனிக்கட்டி சுத்தமானது .

--- இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் பாதரசம் கிடைக்கிறது .

---- முதன் முதலில் 1300 -ம் ஆண்டு , ஹென்றிடிவிக் , என்பவர் கடிகாரத்தை உருவாக்கினார் .

--- மத்திய தரைக்கடலிலும், செங்கடலிலும் பவளங்கள் கிடைக்கின்றன .

--- எகிப்துதான் முதன் முதலில் காலண்டர் முறையை கண்டுபிடித்தது .

--- ' மே மாதம் 31-ம் தேதி , ' புகையிலை எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கிறோம் .

--- பூக்காத பூ , அத்திப்பூ தான் .

--- எலும்புகளின் துணையின்றி தானே அசையும் இயங்கு தசை, நாக்கு .

--- குகைக்கோயில்களில் மிகப் பெரியது , எல்லோரா .

--- மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் கட்டுவதற்காக மண் தோண்டி எடுக்கப்பட்ட பள்ளம்தான் வண்டியூர் தெப்பக்குளம் .

--- பூஜை நாட்களில் அணிந்துகொள்ளும் நீளமான சட்டைக்கு வங்காளத்தில் ' பஞ்சாபி ' என்று பெயர் . அதே சட்டைக்கு பஞ்சாபில் ' பெங்காலி ' என்று பெயர் . என்ன ஒற்றுமை !

http://santhanamk.blogspot.com/2009/03/blog-post.html

Link to post
Share on other sites
 • 5 months later...

உலகக்கிண்ணம் 2006.......தகவல் துளிகள்!

--------------------------------------------------------------------------------

சிற்பியின் ஆசை நிறைவேறியது...

18 காரட் தங்கத்தினால் வடிவமைக்கப்பட்டது தற்போதைய உலக கிண்ணம். 36.8 செ.மீ.உயரமும், 6 கிலோ 175 கிராம் எடையுள்ள இக் கிண்ணம் 1974 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தை இத்தாலி வென்று வர வேண்டும் என்று தான் பெரிதும் ஆசைப்படுவதாக கிண்ணத்தை வடிவமைத்த சிற்பி சில்வியோ கஸ்ஸானிகா ( வயது 75) கூறினார். அவரது ஆசையை இத்தாலியவீரர்கள் நிறைவேற்றினர்.

--------------------------------------------------------------------------------

அட்டைகள்

மஞ்சள் அட்டை மொத்தம் 327 (உண்மையில் 2வது மஞ்சள் அட்டையுடன் வெளியேற்றப்பட்டவர்கள் 19 பேரின் கணக்கு இதில் சேர்க்கப்படவில்லை. அதனையும் சேர்த்தால் மொத்தம் 346 ஆகிறது)

சிகப்பு அட்டைகள் மொத்தம் 28

அதிகமாக மஞ்சள் அட்டை பெற்ற நாடு போர்த்துக்கல் 24

குறைந்த மஞ்சள் அட்டை அமெரிக்கா 5 சவுதிஅரேபியா 5

அதிகமாக மஞ்சள் அட்டை பெற்றவர் கோஸ்ரின்ஹா (போலந்து) 4 அசமாவோ (கானா) 4

அதிகமாக சிகப்பு அட்டை

இத்தாலி 2 நெதர்லாந்து 2 குரேசியா 2 செக் 2 போர்த்துக்கல் 2 அமெரிக்கா 2 சேர்பியா 2

அதிகமான அட்டைகள் வழங்கப்பட்ட கறுப்பு ஆட்டம் ... போர்த்துக்கல்(9மஞ்சள் 2 சிகப்பு) எதிர் நெதர்லாந்து (7மஞ்சள் 2 சிகப்பு) வழங்கிய நடுவர் வலன்ரைன் (ருஷ்யா)

--------------------------------------------------------------------------------

இம்முறை அதிகவயது வீரர் பி.அலி 40 டுனீசியா(உ. கி. போட்டியில் கமரூன் ஜோஜர் மில்லா1994இல் 42.வயதில் விளையாடினார். இவரே அதிகவயதினர்)

மிகக்குறைந்தவயது வீரர் வல்கோற் 17 இங்கிலாந்து (பீலே வும் 17வயதிலேயே முதல் உ.கி. போட்டியில் பங்குகொண்டார்)

இளவயது வீரர்கள்(1.1.1985க்குப்அதன் பிறகு பிறந்தவர்கள்) 40 பேர் பங்கு கொண்டனர். அவர்களில் இளவயது நாயகனாகத் தெரிவானவர் பொடொல்ஸ்கி(ஜேர்மனி)

--------------------------------------------------------------------------------

அதிக நேரம் விளையாடிய வீரர் லாம் 690 , கனவாரோ 690 நிமிடங்கள்

குறைந்த நேரம் விளையாடிய வீரர் அஸோபைபா 1 நிமிடம் (பிறெட் பிரேசில் 3 நிமி)

--------------------------------------------------------------------------------

அதிகநேர விளயாடிய கோல்காபாளர் BUFFON இத்தாலி 690 நிமி

குறைந்த நேரம் விளையாடிய கோல்காப்பாளர் வில்லர் (பரகுவே) 7 நிமிடம் மட்டும்

--------------------------------------------------------------------------------

கோல் கணக்கு

அதிக கோலடித்த நாடு ஜேர்மனி 13

கோலடிக்காத நாடு டிறினிடாட் 0

2006 உ.கி.போட்டியின் முதல் கோலை அடித்தவர் ஜேர்மனிவீரர் லாம் .

முதல் விரைவுக்கோல் 1நி8 செக்கனில். அடித்தவர் அசமாஓ கானா(செக்குடியரசுக்கு)

2006 உ.கி.போட்டியின் கடைசிக் கோலை அடித்தவர் இத்தாலி வீரர் மற்றறாஸி

ஒரு போட்டியில் அதிக(6) கோல் (1) ஆர்ஜன்ரீனா 6:0 சேர்பியா (2) ஜேர்மனி 4:2 கோஸ்ரறிகா

அதிக பந்துகளை தடுத்த காப்பாளர் இத்தாலி புப்பன் 27 போர்த்துக்கல் றிகார்டோ 25.

3 உலகக் கிண்ணத்தில் கோல் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் டேவிட் பெக்காம்.

உலகக் கிண்ணத்தில் அதிக கோல் (15வது ) அடித்த சாதனைவீரர் ரொனால்டோ ( முன்னைய சாதனை ஜேர்மனி வீரர் ஜெர்ட் முல்லர் 14 கோல்)

இப்போட்டியில் அடிக்கப்பட்டவை மொத்தம் 147 கோல்கள் (வரலாற்றில் அதிக கோல் அடிக்கப்பட்டது 1998ல் 171)

1930 முதல் 2006 வரை உலகக் கிண்ண கால்பந்து தொடர்களில் 2063 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.

தன் பக்கத்துக்கு அடிக்கப்பட்ட Own Goals கோல்கள் மொத்தம் 4

சராசரி கோல் 2.3 (64போட்டிகளில் 147 கோல்கள்)

தண்டணை உதைமூலம் முடிவான போட்டிகள் 4

நீடிக்கப்பட்ட 30 நிமிட நேரத்தில் கோல்களால் முடிவான போட்டிகள் 2

64போட்டிகள் இவ்வாறு முடிந்தன.............!

(1)கோலின் அடிப்படையில் தெளிவாக முடிவானவை 48 போட்டிகள்

(2)வெற்றி தோல்வியின்றி சமமான நிலை 10 போட்டிகள்

(3)நீடிக்கப்பட்ட நேரத்தில் முடிவானவை 2 போட்டிகள்

(4)தண்டனை உதை Penalty Shoot Out மூலம் முடிவானவை 4 போட்டிகள்

--------------------------------------------------------------------------------

வெற்றி எதுவும் பெறா நாடுகள் கோஸ்ரறீகா , சேர்பியா, டோகோ (புள்ளி 0)

முதல் சுற்றில் முழுமையான வெற்றி பெற்ற நாடுகள் ஜேர்மனி, பிரேசில், போர்த்துக்கல், ஸ்பானியா

--------------------------------------------------------------------------------

அதிக குறுங்கடவுகள் (Short passes) போர்த்துக்கல் 2,547,ஜேர்மனி 2,392.

அதிக நெடுங்கடவுகள் (Long passes) ஜேர்மனி 821 இத்தாலி 711

--------------------------------------------------------------------------------

சிறந்த மனமகிழ்வான ஆட்டத்துக்கு தேர்வான நாடு போர்த்துக்கல்.

ஒழுங்கீனத்தில் முதலிடம் பராகுவே.

--------------------------------------------------------------------------------

உலகக் கிண்ணப் போட்டியில் இத்தாலி - ஜேர்மனி அணிகள் 5 முறை மோதியுள்ளன. இத்தாலி 3ல் வெற்றி 2 சமநிலை. ஜேர்மனி 3ம் முறை இப்போது தோற்றுள்ளது.

--------------------------------------------------------------------------------

நடுவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போட்டிக்கும் 40ஆயிரம் டொலர் ஊதியமாக வழங்கப்பட்டது. இதுவே உ.கி. வரலாற்றில் உயர்வானது.

உலகெங்குமிருந்து சிறப்பான 21 நடுவர்கள் இவ்வுலககிண்ணப்போட்டியின் 64 ஆட்டங்களுக்கு பணியாற்றினார்கள். அதிகமாக Benito Archundia (Mexico), Horacio Elizondo (Argentina)ஆகியோர் தலா 5 போட்டிகளில் பணியாற்றினார்கள்

--------------------------------------------------------------------------------

பயிற்றுநர் விலகல்

ஒவ்வொரு உலககிண்ணப்போட்டி முடிவிலும் பல பயிற்றுநர்கள் விலகுவதும் விலக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது. இம்முறை விலகுபவர்கள் இதுவரை 14பேர். இவர்கள்...

லிப்பி (இத்தாலி),கிளின்ஸ்மென் (ஜேர்மனி), எரிக்சன் (இங்கிலாந்து), பெகர்மேன் (ஆர்ஜென்ரீனா), ஹிட்டின்க் (அவுஸ்திரேலியா), அட்வோகாட் (தென் கொரியா), கிமாரேஸ் (கோஸ்டாரிக்கா), மிக்செல் (ஐவரி கோஸ்ட்), இவான்கோவிக் (ஈரான்), ஸிகோ (ஜப்பான்), லா வோல்பே (மெக்ஸிகோ), ஜனாஸ் (போலந்து), பெட்கோவிக் (சேர்பியா), பீன்ஹாக்கர் (ரினிடாட்).

--------------------------------------------------------------------------------

பார்வையாளர்கள்

64 போட்டிகளையும் காண விளையாட்டரங்கில் கூடியோர் எண்ணிக்கை 3.35 மில்லியன் (3,353,655 ) ஆகும்.

உலககிண்ணப்போட்டியில் இத்தாலிக்கு எதிராக ஜேர்மனி விளையாடிய அரை இறுதிப் போட்டியை யேர்மனியில் அதிகம் பேர் பார்த்தார்கள். வீடுகளில் 31.31 மில்லியன் பேரும் பொது இடங்களில் அமைக்கப்ப்ட்டிருந்த இராட்சத தொலைகாட்சிகளில் 16 மில்லியன் பேரும் கண்டுகளித்தார்கள் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

--------------------------------------------------------------------------------

விருதுகள்

தங்கப்பந்து ..... சிடான் பிரான்சு

வெள்ளிப்பந்து ..... கனவாரோ இத்தாலி

வெண்கலப்பந்து பிர்லொ இத்தாலி

தங்ககாலணி ..... குளோஸ ஜேர்மனி

வெள்ளிக்காலணி..... கிறேஸ்போ ஆர்ஜன்ரீனா

வெண்கலக்காலணி.....றொனால்டோ பிரேசில்

சிறந்த இளவயது வீரன்....... பொடொல்ஸ்கி ஜேர்மனி

சிறந்த கோல்காப்பாளர் புப்பன் இத்தாலி

மனம்மகிழ்வாட்டம்...... போர்த்துக்கல்

http://ulagakinnam.blogspot.com/2006/07/2006.html

Link to post
Share on other sites

அமெரிக்க வனாந்திரப் பிரதேசங்களில் வசிக்கும் ராக்கூன் என்ற பறவை, சுகாதார விஷயத்தில் நம்பர் ஒன்! எந்தப் பொருள் கிடைத்தாலும், தண்ணீரில் நன்றாக கழுவிய பின்னே உண்ணும்!

கனவுகள் இரவு முழுவதும் வருகின்றன என்றும், 90 நிமிட இடைவெளி விட்டு அவை தோன்றுகின்றன என்றும், சராசரியாக ஒரு இரவு உறக்கத்தில் நாலரை கனவுச் சம்பவங்கள் வருகின்றன என்றும் கண்டறியப் பட்டுள்ளன.

ஜப்பான் நாடு மட்டுமே மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத கற்றுக் கொடுக்கிறது.

உலகில் உள்ள ஜீவராசிகளிலேயே அதன் உருவத்தோடு ஒப்பிடும்போது, மிகப் பெரிய மூளை எறும்புக்குத்தான் இருக்கிறது.

உடலில் இருக்க வேண்டிய நீரின் அளவில் இரண்டு சதவீதம் குறைந்தால், தாகம் எடுக்கும். 10 சதவீதத்துக்கு மேல் குறைந்தால், உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

உங்கள் உடம்பில் எவ்வளவு ரத்தம் உள்ளது என்று நீங்களே சொல்லி விடலாம். உங்கள் எடையை பன்னிரென்டால் வகுத்துக் கொள்ளுங்கள். வருவதுதான் ரத்தத்தின் எடை என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

சீனர்கள் காகிதத்தை காகிதக் குளவி என்னும் பூச்சிகளைப் பார்த்து கண்டறிந்தார்களாம். காகிதக் குளவிகள் தாம் கூடு கட்ட மரங்களைக் கடித்து துருவி, தன் உமிழ்நீரைக் கலந்து கூழாக்கி, காகிதம் போன்றதோர் பொருளை உருவாக்கி, அதனால் கூடு கட்டுகின்றன.

ஒரு கொசு தன் எடையைப் போல் இரண்டு பங்கு ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டு பறக்க முடியுமாம்.

உலகத்தில் அன்றாடம் இரண்டாயிரம் குழந்தைகள் இருதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இவை பெரும்பாலும் ஒரு வயதிற்குள்ளேயே மாண்டு விடுகின்றன.

சோவியத் யூனியனில் அமைந்துள்ள நிலத்தடி மருத்தவமனையில் சுமார் 8000 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று, தங்கள் உடல்நலம் தேறியிருக்கின்றனராம். 178 மீடடர் நிலப் பரப்பிற்கு அடியில் அமைந்துள்ள உப்புச் சுரங்கத்தில் உள்ள இந்த மருத்துவமனை, 7 வருடங்களாக இயங்கி வருகின்றது. இங்கு சுத்தமான காற்றும், அதிகளவு பிராண வாயுவும், நுண்ணுயிரிகள் அற்ற சூழ்நிலையும் இருக்கின்றது என்று மருத்தவர்கள் கூறுகிறார்கள்.

எட்டாம் எண்ணின்மீது சீனர்களுக்குப் பெரும் பிடிப்பு உண்டு.

சீனர்கள் 8-ஐ ஒரு அதிர்ஷ்ட எண்ணாகக் கருதுகின்றனர். 2003-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஒரு சீன விமான நிறுவனம் “88888888” என்ற தொலைபேசி எண்ணைப் பெற செலவிட்ட தொகை 2,80,723 அமெரிக்க டாலர்கள்.

எரித்திரியா 35 ஆண்டு கால விடுதலைப் போராட்டத்தின் பின்பு 1993-05-24ல் விடுதலையடைந்தது. இதன் பரப்பளவு 1,24,000 சதுர கிலோ மீட்டர். 35 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

உலகில் இரண்டாவது மிகப் பெரிய நாடு கனடாவாகும். இதன் பரப்பளவு 9.9 மில்லியன் சதுர கிலோமீட்டர்.

உலகில் உள்ள இரண்டாவது பெரிய தீவு நியூ கெனியாவாகும். இதன் பரப்பளவு 777,000 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

உலகில் உள்ள இரண்டாவது பெரிய பாலைவனம் ஆஸ்திரேலிய பாலைவனமாகும். இதன் பரப்பளவு 1,550,000 சதுர கிலேர் மீட்டராகும்.

உலகின் இரண்டாவது பெரிய நகரம் மெக்சிக்கோ ஆகும்.

சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்ட லூனா என்ற விண்கலம் 1959 ஜனவரி 2ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இக்கலமே சந்திரனைத் தாண்டி வெற்றிகரமாக பறந்து சென்ற முதலாவது விண்கலமாகும்.

இந்தியாவின் முதல் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பலின் பெயர் ஐ.என்.எஸ் சக்ரா என்பதாகும்.

விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல் நாடு இந்தியா. 1929ம் ஆண்டு இதற்கென ஒரு செட் சிறப்பு தபால் தலைகளை இந்தியா வெளியிட்டது.

அமெரிக்காவில் உள்ள கூர்லி இயந்திர நிறுவனத்தினர் 1907ம் ஆண்டு துணி துவைக்கும் இயந்திரத்தினைக் (வாஷிங் மெசின்) கண்டு பிடித்தனர்.

கி.மு 200 ஆண்டுகளுக்கு முன் சீனப் பெருஞ்சுவர் எதிரிகளிடமிருந்து தமது நாட்டைப் பாதுகாக்கவென பெரும் மனிதவலுவின் பிரயோகத்தால் கட்டியெழுப்பப்பட்டது.

உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து தீவாகும். இதன் பரப்பளவு 2,175,600 சதுர கி.மீ ஆகும்.

பயணிகள் ரயில் போக்குவரத்து முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் 1820ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ், அலெக்சாண்டர், ரிமன் கியோர் 1850ம் ஆண்டு குளிர்சாதனப் பெட்டியைக் (ப்ரிட்ஜ்) கண்டு பிடித்தனர்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்கோனி என்பவர் 1895ம் ஆண்டு வானொலிப் பெட்டியைக் கண்டுபிடித்தார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பெயர்டு என்பவர் 1926ம் ஆண்டு தொலைக் காட்சிப் பெட்டியைக் கண்டுபிடித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?

நியூயார்க்.

நாய்க்கு எத்தனை பற்கள் உண்டு? 42

யானைக்கு எத்தனை பற்கள் உண்டு? 4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?

கொங் கொங்.

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?

ஈராக்.

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?

ஆல்பிரட் நோபல்.

நின்று கொண்டு தூங்கும் மிருகம் எது?

யானை.

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?

நிலக்கரி.

கப்பலை சுமந்துசெல்லும் விமானமுள்ள நாடு?

ரஷியா.

நோபல் பரிசு எந்த ஆண்டிலிருந்து வழங்க தொடங்கினர்?

1901

ஈபிள் டவரின் உயரம் என்ன?

320 அடி

மனிதமூளை தனது ஆயுள் காலத்தில் எத்தனை செய்திகளை பதிவு செய்யக்கூடியது?

10 கோடி

குளிர்ச்சியான கோள் எது?

புளுட்டோ

மனிதன் சாதரணமாக ஒரு நாளில் (24 மணி) எத்தனை தடவைகள் சுவாசிக்கிறான்?

26000 தடவைகள்

ரேடியத்தில் வெளிப்படும் கதிர்கள் எவை?

ஆல்பா பீட்டா காமா

தேனீக்கு எத்தனை கண்கள்?

5 கண்கள்

தேனீ கூடுகட்ட பயன்படுத்தும் மெழுகின் அளவு எவ்வளவு?

1.5 அவுன்ஸ்

தேனீ ஒரு மணிநேரத்தில் எத்தனை பூக்களில் தேன் எடுக்கும்?

800 பூக்கள்

கண்டம் நகர்வானது வருடத்திற்கு 2.5 செ.மீ அளவில் இடம்பெறுகின்றது. இது நமது கை விரல் நகத்தின் வளர்ச்சி வீதத்திற்கு சமமானதாகும்.

கிறிஸ்து காலத்தில் 971ம் ஆண்டில் முதலாவது பல்கலைக்கழகம் எகிப்தில் கெய்ரோவில் நிறுவப்பட்டது.

ஸ்பானிய ஓவியரான பிக்காசோ 1950ல் நடத்தப்பட்ட அமைதி மாநாட்டிற்கு இவர் அமைதியைப் புறாவாக உருவகப்படுத்தி ஓர் அடையாள ஓவியம் உருவாக்க அதை உலகம் அமைதியின் சின்னமாக ஏற்றுக் கொண்டது.

உலகில் மிக வேகமாக ஓடக் கூடிய மிருகம் சீட்டா என்ற புலியினமாகும். இதன் வேகம் மணிக்கு 96.5 கிலோ மீட்டர்களாகும்.

முதன் முதல் பெண்கள் உரிமைகள் மாநாடு 1848ல் நியூயார்க்கில் நடைபெற்றது.

ரோமானியரான அப்பிசியஸ் என்பவரே முதன் முதல் சமையல் முறையினை நூல் வடிவில் எழுதியவராவார்.

650ம் ஆண்டு பாரசீகரால் காற்றாடி கண்டுபிடிக்கப்பட்டது.

ஒலிபெருக்கியானது முதன் முதல் 1924ல் அமெரிக்கரான ரைஸ் கெல்லொக் என்பவர் கண்டுபிடித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஓவின்ஸ் கோர்மிங் என்பவர் முதன் முதல் 1938ல் கண்ணாடி இழை நாரினை கண்டுபிடித்தார்.

1628ல் இங்கிலாந்து விஞ்ஞானியான வில்லியம் ஹார்வே என்பவர் முதன் முதல் மனிதனின் குருதிச் சுற்றோட்டத்தை கண்டறிந்தார்.

முதன் முதல் மின் காற்றாடியை 1882ல் வீலர் என்னும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் கண்டு பிடித்தார்.

உலகின் மிகப்பெரிய நகரம் ஜப்பானில் தலைநகரமாகிய டோக்கியோவாகும்..

1990ல் கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் ஒன்றிணைந்தன.

உலகில் மிக வேகமாக ஓடக்கூடிய பறவையினம் தீக்கோழியாகும். இது மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.

1938ம் ஆண்டு புளோரசன்ட் மின்குமிழ் முதன் முதல் கண்டுபிடிக்கப்பட்டது. ஜெனரெல் எலக்ட்ரிக் வெஸ்டிங் கவுஸ் என்ற அமெரிக்க நிறுவனமே இதனைக் கண்டுபிடித்தது.

கி.மு 1500 ஆண்டுகளுக்கு முன் இந்து சமயம் இந்தியாவில் உருவானதாக கருதப்படுகின்றது.

2ம் உலக மகா யுத்தத்தின் போதே முதன் முதல் யுத்த களத்தில் விமானம் பயன்படுத்தப்பட்டது. ரெட் பரோன் என்ற விமானத்தை ஜெர்மனி பயன்படுத்தியது.

1851ல் முதன் முதல் உலகளாவிய கண்காட்சி இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் 6 மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர்.

1863ல் முதன் முதல் நிலக்கீழ் புகை ரதச் சேவை இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1776ம் ஆண்டு பிரிட்டானியக் கடலோடியான ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாக் கண்டத்தைக் கண்டுபிடித்தார்.

பசிபிக் பெருங்கடல் பயணத்தின்போது நியூசிலாந்து, டஹித்தி, முதலான பல தீவுக்கூட்டங்களையும் கண்டுபிடித்தார்.

1922ல் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. 1941-1945ற்கு இடைப்பட்ட இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் 20 மில்லியன் சோவியத் நாட்டவர்கள் இறந்தனர்.

பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் சார்ள்ஸ் டார்வின் ஆவார்.

முதன் முதல் டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டீசல் என்பவராவார். இவர் 1895ல் இதனைக் கண்டறிந்தார்.

உலகின் மிகப்பெரிய பாலைவனம் வட ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனமாகும். இதன் பரப்பளவு 8400000 சதுர கிலோ மீட்டர்களாகும். (3250000 மைல்கள்).

1949ம் ஆண்டு வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் அமையம் உருவாக்கப்பட்டது.

1957ல் ஐரோப்பிய நாடுகள் சில ஒன்றிணைந்து ஐரோப்பிய சங்கத்தினை நிறுவின.

உலகின் மிக உயரமான நிர்மாணமாக வார்ஸ்சோ அமைப்பின் வானொலி பரிவர்த்தனைக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. போலந்தில் புளொக் என்ற இடத்தில் உள்ள மிக உயரமான கட்டடத்தில் 1974ம் ஆண்டு நிர்மானிக்கப்பட்ட இதன் உயரம் 646 மீட்டர் ஆகும்.

உலகில் மிக நீளமான பாலம் ஜப்பானில் உள்ள கொன்சு-சிக்கோ என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1780 மீற்றர் ஆகும்.

பேர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளுக்கிணங்க பைபிளை முதன் முதல் தமிழில் மொழி பெயர்ப்புச் செய்தவர் ஆறுமுகநாவலர்.

1885ல் திருத்தியமைக்கப்பட்ட இரு சக்கர வண்டியை வடிவமைத்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டெரி என்பவராவார்.

1783ம் ஆண்டு மொண்ட் கொல்வியர் என்ற பிரஞ்சு நாட்டவரே முதன் முதல் பறக்கும் பலூனைக் கண்டுபிடித்தவராவர்.

இரையே இல்லாமல் பாம்பு 25 மாதங்களும், தவளை 16 மாதங்களும், மூட்டைப்பூச்சி 6 மாதங்களும் உயிர் வாழும்.

ரோமானியப் பேரரசின் தலைவர்களான் ஜூலியஸ்சீசர், அகஸ்டின்சீசர் ஆகிய இருவருமே, இன்று வழக்கிலுள்ள நாட்காட்டி அமைப்பிற்கு முதலில் வித்திட்டவர்கள். ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களும் இவர்களது பெயரினை குறித்து வைத்தவையாகும்.

1954ல் அமெரிக்க கான்சர் மையம் முதன்முதலாக சிகரட் பிடித்தால் புற்றுநோய் வருமென்று கண்டு பிடித்துச்சொல்லியது.

உலகிற்கு முதன்முதல் தபால் முத்திரையை அறிமுகப்படுத்திய நாடு இங்கிலாந்தாகும். 1840ல் பிளாக்பென்னி முத்திரை இங்கிலாந்தில் விநியோகிக்கப்பட்டது.

முதலாவது பயணிகள் புகையிரதம் 1825ல் இங்கிலாந்தில் சேவையிலீடுபடுத்தப்பட்டது.

1555ல் புகையிலை ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் டைனோசர்களின் ஆதிக்கம் நிலவியது.

வெந்நீர் சுவையில்லாமல் இருப்பதற்குக் காரணம், நீரைக் கொதிக்க வைக்கும் போது நீருக்குச் சுவையூட்டும் வாயு வெளியேறிவிடுகின்றது.

1665ல் இங்கிலாந்து விஞ்ஞானியான ஐசார்க் நியூட்டன் புவியீர்ப்புக் கொள்கையைக் கண்டுபிடித்தார்.

உலகின் முதலாவது ஒலிம்பிக் போட்டி கி.மு 776ல் கிறீஸ் நாட்டில் நடைபெற்றது.

1903 ல் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரைட் சகோதரர்களால் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

1290ல் முதன் முதல் வாசிக்கக்கூடிய மூக்குக் கண்ணாடி இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது.

1914ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ஆரம்பித்து 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி வரையிலான 1561 நாட்கள் முதலாம் உலக மகா யுத்தம் நடந்தது. இதில் 1 கோடி படை வீரர்களும் 2 கோடி மக்களும் இறந்தனர்.

1897ல் பாதுகாப்பு முகச்சவரக் கத்தியை கிங்.சி.கில்லட் என்பவர் கண்டுபிடித்தார்.

உலகின் இரண்டாவது பெரிய நகரம் மெக்சிக்கோ ஆகும்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கொலட் என்பவரால் முதன் முதல் 1836ல் பிஸ்டல் ரிவால்வர்-ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

உலகில் முதன் முதல் அச்சிட்டு வெளியிடப்பட்ட நூல் டிமோன் சுட்ரா என்பதாகும். இது 868ல் சீனாவில் வெளியிடப்பட்டதாகும்.

சினிமாத் துறையின் மைய நிறுவனமாக 1913ம் ஆண்டு ஹாலிவூட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

முதன் முதல் காற்று நிரப்பப்பட்ட டயர் 1845ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்தவர் ஸ்கொட்டிஸ் நாட்டைச் சேர்ந்த பொறியியலாளரான ரொபேட் டபிள்யு தாம்சன் என்பவராவார்.

உலகில் முதலாவது பல்கலைக்கழகம் எகிப்தில் கெய்ரோவில் 971ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.

1787ம் ஆண்டில் முதன் முதலாக டாலர் நாணயம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதன்முதல் 1510ம் ஆண்டு ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாக கடல் வழியாக கரிபியன் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

உலகப்புகழ் பெற்ற பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தை நிர்மாணித்த பொறியியலாளர் யார் தெரியுமா? அவர்தான் ஈஃபில் அலெக்சாண்டர் குற்படவ்.

தண்ணீருக்குள் பறக்கும் பறவை ஒன்று உள்ளது. அதன் பெயர் டிப்பர்.

பைபிளில் மோசஸுக்கு கடவுள் காட்சியளித்ததாகக் கூறப்படும் இடம் சீனாய் மலை. இங்கிருந்துதான் மோசஸ் 10கட்டளைகளைப் பெற்றுவந்தார் என்பது யூதர்களின் - கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்த மலை எகிப்தில் உள்ளது.

மணிக்கு 1000கிமீ வேகத்தில் தடையற்றுப் பறக்கும் ஒரு ஜெட் விமானம் இங்கிருந்து சூரியனைச் சென்றடைய 17ஆண்டுகள் ஆகும்.

இந்தியாவின் மிகப்பெரிய ஆலமரம் கோல்கத்தா தாவரவியல் தோட்டத்தில் உள்ளது.

ஷங்க் என்ற பிராணி எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தன்னைச் சுற்றி சிறிது தூரத்திற்கு மிகவும் துர்நாற்றமான நீரைப் பீய்ச்சியடிக்கும்.

டமான்டுவா என்ற விலங்கு தன்குட்டியை எப்போதும் தன் முதுகிலேயே சுமந்து செல்லும். எவ்வளவு உயரமான மரத்திலும் வெகு விரைவாக ஏறிவிடும்.

ஒரு ஆண் எலியும் ஒரு பெண் எலியும் சேர்ந்து ஓர் ஆண்டுக்கு 1372குட்டிகளை ஈன்றெடுக்கும்.

உலகிலேயே சிலைகள் அதிகம் கொண்ட கோவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில். இங்கு 33,000 சிலைகள் உள்ளன.

உலகிலேயே மிக நீண்ட பிரகாரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மூன்றாம் பிரகாரம் ஆகும்.

மிக நீளமாக வளரும் செடி - பிரம்புச்செடி

காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தை சூட்டியவர் - ரவீந்திரநாத் தாகூர்.

கருப்புத் தங்கம் என்றழைக்கப் படுவது - மிளகு

கோள்களில் சிறியது - புளூட்டோ, பெரியது - ஜூபிடர்

நாம் வாழும் இந்தப்பூமியே ஒரு காந்தம் என முதலில் குறிப்பிட்டவர் - வில்லியம் கில்பர்ட்

ஐ.நா. சபை என்னும் பெயரை உருவாக்கியவர் - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

கிழக்கிந்திய ஸ்காட்லாந்து எனப்படுவது - மேகாலயா

சாவகத்தீவு என அழைக்கப்பட்டது - இந்தோனேஷியா

உலோகங்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது - பூளூட்டோனியம்

யுரேனியத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹெர்சல்

இந்தியாவின் மிக நீண்ட பீச்: மெரினா பீச், சென்னை. இது 13 கி.மீ நீளமுடையது. உலகின் 2 வது மிக நீண்ட பீச் ஆகும்.

உலகின் மிகப்பெரிய கோவில் - ஆங்கர்வாட்

உலகின் பழமையான விளையாட்டு - போலோ

சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1950

இந்தியா சுதந்திரம் அடைந்த கிழமை - வெள்ளிக்கிழமை

ஆங்கிலேயர்கள் லிட்டில் இங்கிலாந்து என்று அழைத்த ஊர் - உதகமண்டலம்

அதிக சிறைச்சாலை கொண்ட மாநிலம் - மராட்டியம்

செல்போனின் தந்தை என வர்ணிக்கப்படுபவர் - மார்ட்டின் கூப்பர்

ஜீரோ வாட் பல்ப் என்பது உண்மையில் எத்தனை வாட் கொண்டது - 15 வாட்

ஆங்கில மொழியில் அதிகம் பயன்படும் முதல் வார்த்தை – The

ஆக்டோபசி என்ற மீன் இனத்தைப் போன்று ராட்சச கைகளைக் கொண்ட கலாமர் என்ற கடல் மீன் வகை பிரான்ஸ் நாட்டு மர்சேய் என்ற ஆழ்கடல் பகுதியில் அதிகம் கிடைக்கிறது. ஐரோப்பிய மக்கள் விரும்பி உண்ணும் இந்தப் பெரிய மீன் அவ்வளவு எளிதில் வலைகளில் சிக்காது. சமீபத்தில் பிடிக்கப்பட்ட இந்த மீன் ஒன்றின் நீளம் மட்டும் மூன்று மீட்டர்.

உலகிலேயே மூன்று நாடுகளில்தான் சந்தனமரங்கள் உள்ளன. அவை இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகும். இவற்றுள் மிக அதிகப் பரப்பளவில் சந்தன மரங்கள் இந்தியாவில்தான் உள்ளன.

பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிய முதல் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்தான். கதையின் பெயர் டேவிட் காப்பர் பீல்டு.

பிரிட்டீஷ் இந்திய காலத்தில் இந்தியாவின் கோடைகாலத் தலைநகர் சிம்லா.

1938-ல் ஹோவர் ஹூக்ஸும் நான்கு உதவியாளர்களும் 3 நாட்கள், 19 மணி, 17 நிமிடங்களில் உலகை வலம் வந்தனர். அவர்கள் பயணம் செய்த விமானத்தின் பெயர் "NEW YORK WORLD FAIR"

.

சீனாவில் குழந்தைகளின் வயதை அவர்கள் தாயின் வயிற்றில் உருவானதில் இருந்து கணக்கிடுகிறார்கள்!

எத்தகைய கோடையிலும் அசோக மரத்தில் இலைகள் முழுமையாக உதிர்ந்து விடுவதில்லை!

முள்ளங்கி என்பது கிழங்கு அல்ல, செடியின் வேர்!

பாம்பின் கண்களில் எப்போதும் நீர் ததும்பி நின்று பளபளப்பாகக் காணப்படும். ஆனால் பாம்புகளால் அழ இயலாது!

குயில் ஒரு புத்திசாலியான பறவை. அது தனக்காக ஒரு கூட்டை கட்டிக் கொள்வதில்லை. அதனால் முட்டையிடும் காலங்களில் தனது முட்டைகளை வேறு பறவைகளின் கூடுகளில் போட்டுவிடும். கூட்டின் சொந்தக்காரப் பறவை தனக்கே தெரியாமல் குயிலின் முட்டையையும் அடைகாக்கும். குஞ்சு பொரித்தவுடன் குஞ்சாக இருக்கும் குயில் இன்னும் பொரிக்காமல் இருக்கும் மற்ற முட்டைகளை கூட்டிலிருந்து கீழே தள்ளிவிடும். ஆனாலும் கூட்டின் சொந்தக்காரப் பறவையானது குயில் குஞ்சினையும் தமது குஞ்சாகவே பாவிக்கும்.

சென்னையில் 1876-ஆம் ஆண்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போதைய ஆளுநர் பக்கிங்ஹாம் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக அடையாற்றையும் கூவம் ஆற்றையும் இணைக்கும் கால்வாய் ஒன்றை வெட்டினார். அவர் நினைவாக இது பக்கிங்ஹாம் கால்வாய் என்றழைக்கப்படுகிறது.

நகம் நாள் ஒன்றுக்கு 0.1மில்லி மீட்டர் வளரும். நகத்திற்கு உணர்ச்சி கிடையாது. ஏனெனில் உணர்வு நரம்புகள் இல்லை. ஆனால் புதிய செல்கள் உற்பத்தியாகும்.

சாதாரணமாக அமிலத்தில் வைரங்கள் கரையாது. அதிக சூடுபடுத்தினால் மட்டுமே கரையும்.

நன்றி: முத்தமிழ் மன்றம்

Link to post
Share on other sites
 • 1 month later...

ஷேக்ஸபியர்:: பிறந்த நாளும் , இறந்த நாளும் ஒரே தேதியில் தான். பிறந்தது 23-04-1564.இறந்தது 23-04- 1616.

கிரேக்க மெகஸ்தனிஸ்: சிறந்த பேச்சாளராக இருந்து சரித்திரத்தில் ஓர் உன்னதமான் இடம் பெற்றாலும் , இளம் வயதில் அவருக்குத் திக்குவாய் ! இழுத்து, இழுத்துத் தடுமாறித்தான் பேச முடியும். !

சாக்ரடீஸ்: மூன்று மகன்கள் இல்வாழ்க்கை திருப்தி இல்லை. எப்பொதும் சண்டை போடும் மனைவி.அவளிடம் மட்டும் சாக்ரடீஸின் தர்க்கம் எடுபடாமல் போனது.

லியோ டால்ஸ்டாய் பிறந்த வருடம் - 1828.

எகிப்து நாட்டின் கடைசி மன்னன்-பரூக்.

இங்கிலாந்தின் சரித்திரத்தை இயற்றியவர்= மெக்காலே

ஏசுவின் முதல் சீடர்- செயிண்ட் ஆண்ட்ரு.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் எனற பெயர் நர்ஸிங்குடன் தொடர்புடையது.

முதன் முதலில் உலகப்படம் வரைந்தவர் - தாலமி.

நெல்சன் நெப்போலியனை இறுதியாக வாட்டர் லூ போரில் தோற்கடித்தர்ர்.

வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர்-ஆல்பிரட் நோபல்.

முதன் முதலில் கட்டப்பட்டதும் , மிகப் பழமையனதுமான கலங்கரை விளக்கம் எகிப்தில் உள்ளது.

காலரா என்ற கொள்ளை நோய்க்கான் கிருமியைக் கண்ட ஜெர்மானியர்_ராபர்ட் கோச்..

ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை உருவாக்கியவர்- இயான் ஃப்ளௌமிங்.

இயேசுவைக் காட்டிக் கொடுத்த சீடர்- ஜூடாஸ் இஸ்காரியட்.

http://santhanamk.blogspot.com/2008/08/blog-post_04.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நுநாவிலானுக்கு ஒரு ஓ...................போட வேணும்!!!!!

நான் யாழ் களத்தை படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை

இவ்வளவு தொகையில் இவ்வளவு விடயங்களை அதுவும் அத்தனையும் பலன் தரும்

பொக்கிசங்களாக வந்ததை பார்க்கவில்லை!!!!

உங்கள் இணைப்பு அத்தனையும் அருமை!!!!!

படிப்பதறகு நாட்கள் தேவை!!!!

அதனுடன் பலவற்றை குறிப்பு எடுக்க வேண்டும்

எனவே மோகன் அண்ணாவிடம் சொல்லி நீண்ட நாட்களுக்கு

பதிவை வைத்திருக்க சொல்லுங்கள் நன்றி

அன்புடன்

தமிழ்மாறன்

Link to post
Share on other sites
 • 1 month later...

நன்றி தமிழ்மாறன்.

உல‌கி‌ல் ‌மிக‌‌ப்பெ‌ரிய ‌விஷய‌ங்க‌ள் பல உ‌‌ள்ளன. அவ‌ற்‌றி‌ல் ‌சிலவ‌ற்றை இ‌ங்கே‌ காணலா‌ம்.

உல‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிய மலை நமது இமயமலையாகு‌ம். ‌மிக‌ப்பெ‌ரிய ‌சிகர‌ம் எவர‌ெ‌ஸ்‌ட் ‌‌சிகரமாகு‌ம்.

உல‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிய ‌நீ‌‌ர்‌‌வீ‌ழ்‌ச்‌சி நயாகராவாகு‌ம்.

உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.

உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.

உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து. 1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ. இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.

உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.

உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீ.

உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.

உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.

உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.

உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.

உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.

உல‌கி‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய ந‌தி நை‌ல் ந‌தியாகு‌ம்.

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும்.

http://tamil.webdunia.com/miscellaneous/kidsworld/gk/0910/23/1091023043_1.htm

Link to post
Share on other sites
 • 2 months later...

டால்பின் மீன்களால் ஒரு கண்ணைத் திறந்து கொண்டு தூங்க முடியும்.

போலார் கரடிக்கும் சிங்கத்துக்கும் சண்டை வந்தால், போலார் கரடி சிங்கத்தை வீழ்த்தி விடும்.

காட்டெருமையின் கண்களுக்கு வண்ணங்கள் தெரியாது. கறுப்பு-வெள்ளை தான்

அமேசான் காடுகளில் காணப்படும் விஷத் தவளை ஒன்றின் உடலில் 2, 200 பேரைக் கொல்லும் அளவுக்கு விஷம் இருக்கும்.

வீடுகளில் வளர்க்கப்படும் தங்க மீனின் நினைவுத் திறன், 3 நொடிகள் மட்டுமே.

இந்தியாவில் மட்டும் 5 கோடி குரங்குகள் உள்ளன. நீங்கள் இதைப் படிக்கும் நேரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

பன்றி தனது அதிகபட்ச வேகத்தில் ஓடினால் 7.5 நிமிடங்களில் ஒரு மைல் தூரத்தைக் கடந்து விடும்.

ஈமு கோழிகளால் பின் நோக்கி நடக்க முடியாது.

Link to post
Share on other sites

இந்தியாவில் மட்டும் 5 கோடி குரங்குகள் உள்ளன. நீங்கள் இதைப் படிக்கும் நேரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

இந்தியாவில் குரங்குகள் நூறு கோடிக்கும் மேலை இருக்கிறது...

Link to post
Share on other sites
 • 2 months later...

மனிதனால் உருவாக்கபட்ட மிகச் சிறந்த, பயனுள்ள வானூர்தி ஆகும்.

mi26t.jpg

ஹெலிகாப்டரால் செங்குத்தாக மேலே உயரவும், கீழிறங்கவும், முன்னோக்கி, பின்னோக்கியும், பக்கவாட்டிலும் பறக்க முடியும். இதனால் நகராமல் ஒரே இடத்திலும் தொடர்ந்து பறக்க இயலும். ஹெலிகாப்டர் தரையிறங்கவும், மேலேறவும் சிறிய இடமிருந்தால் போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர் பறக்கும் நுட்பம் பல நுற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கபட்டுவிட்டது என்பதே உண்மை. கி.பி. 4-ம் நுற்றாண்டில் சீன நாட்டில் ஒரு விளையாட்டுக் கருவி உருவாக்க பட்டது. அக் கருவியில் ஹெலிகாப்டர் விசிறி போல இருந்தவற்றின் உதவியால் அது காற்றில் சுற்றி பறந்தது. 1483-ம் ஆண்டில், பிரபல ஓவியரான லியனார்டோ டாவின்சி, ஒரு ஹெலி காப்டருக்கான மாதிரியை வரைந்தார். ஆனால் முதல்முறையாக 1907-ம் ஆண்டில்தான் ஹெலி காப்டரில் வெற்றிகரமாக பறக்கபட்டது. பிரெஞ்சு நாட்டவரான பால் கோர்னு அச்சாதனையை புரிந்தார். அவர் சுமார் 2 மீட்டர் உயரத்தில் 20 நொடிகள் பறந்தார்.

அடுத்து 1936-ம் ஆண்டில், இரட்டை விசிறி ஹெலிகாப்டரை ஹென்ரிக் போக்கே உருவாக்கினார். ரஷியாவில் பிறந்த பொறியாளரான இகோர் சிகோர்ஸ்கி, ஓர் ஒற்றை விசிறி ஹெலிகாப்டரை 1939-ல் அமெரிக்காவில் உருவாக்கினார். `சிகோர்ஸ்கி விஎஸ்- 300′ என்ற அந்த ஹெலிகாப்டர், போரில் பயன்படுத்தபட்ட முதல் ஹெலிகாப்டர் ஆகும்.

இன்று உலகிலேயே பெரியது, ரஷியாவின் `எம்ஐ 26′ ஹெலிகாப்டர் ஆகும். இதில் 20 மெட்ரிக் டன் எடையளவுக்குச் சரக்குகளை எடுத்துச் செல்ல முடியும். இது சாதாரண ஹெலிகாடர்களில் எடுத்துச் செல்லபடும் அளவை விட பத்து மடங்கு அதிகம். கடந்த 2005-ம் ஆண்டில் பாகிஸ்தானில் பூகம்பம் ஏற்பட்டது. அபோது, பாதிக்கபட்ட பகுதிகளுக்கு `புல்டோசர்களை’யும், மற்ற அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துச் செல்ல ஐ.நா.வால் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தபட்டது.

Link to post
Share on other sites
 • 2 months later...

தற்கால அறிவியல் வகைப்பாட்டின் படி உயிரினங்களை எட்டு நிலைகளாக வகுப்பர். அவை: ஆட்களம், இராச்சியம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் ஆகும்.

1849 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலாவை, உதயணன் 1994 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.

உலகில் பழங்கள், பருப்புகள், சுவைப்பொருட்கள் ஆகியவற்றை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும்.

இணை அறுவடை இயந்திரம் என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும்.

மார்ச் 16, 2009 இல் ஐக்கிய அமெரிக்காவின் மொத்த தேசிய கடன் $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், மொ.உ.உ இல் 65%) ஆகவும், வீடுகளின் கடன் (US household debt) 11.4 டிரில்லியனாகவும் (2005) உள்ளது.

கணவாய்க்கு மூன்று இதயங்கள் உண்டு. இதன் குருதி நீல நிறத்தில் இருக்கும்.

அண்டத்தின் முழுமையான ஆற்றல் அடர்த்தியில் நாம் இதுவரை அண்டம் என்று எண்ணியிருந்தது 4% மட்டுமே. இன்றுவரை 22% நேரடியாக அறிய இயலாத கரும் பொருளாலும் (dark matter), 74% நேரடியாக இன்றுவரை அறிய இயலாத கருமை ஆற்றலாலும் (dark energy) ஆனது என தற்போது இயற்பியலாளர்களால் கருதப்படுகிறது.

தற்போது தனிம அட்டவணையில் உள்ள 117 தனிமங்களில் 18 மட்டுமே மாழையிலி (உலோகம் அல்லாதவை), இவையும் மிகக் கூடிய அழுத்தத்தில் மாழைகளாக (உலோகங்களாக) மாறும்.

உலகில் வழங்கிவந்த பல்வேறு மருத்துவ முறைகளில் அலோபதி என்ற மேற்குநாட்டு மருத்துவ முறையே அறிவியல் முறையை உள்வாங்கி தற்கால மருத்துவமாக மருபியது.

தேவாரங்கள் எனப்படுபவை 7 ம், 8 ம் நூற்றாண்டுகளில் மூன்று நாயன்மார்களால் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) தமிழில் எழுதப்பட்ட 8227 சைவ சமயப் பாடல்கள் ஆகும்.

ஐக்கிய அமெரிக்க அரசு புகையிலை (சிக்கிரட்) உற்பத்தியாளர்களருக்கு எதிராக நுகர்வோர் உடல் நலக் கேடு தொடர்பாக தொடுத்த வழக்கின் ஏற்பாடாக 245 பில்லியன் டொலர்களை நிறுவனங்கள் செலுத்தின.

சராசரியாக ஆணுடைய மூளைக்கு பெண்ணுடையதை விட 6.5 மடங்கு அதிக சாம்பல் பொருள் (gray matter) உண்டு, பெண்ணுடைய மூளைக்கு 10 மடங்கு அதிக வெள்ளைப் பொருள் (white matter) உண்டு.

உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி கோழி ஆகும், 2004 ம் ஆண்டில் 16,194,925,000 கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டன.

உலகின் மிகப் பெரும் தீவு கிறீன்லாந்து ஆகும்.

2008 இல் இணையத்தில் உள்ள இந்திய மொழி உள்ளடக்கத்தில் 19% தமிழில் உள்ளது.

Link to post
Share on other sites
 • 1 month later...

உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையைத் தயாரித்து வழங்கியவர் ஜவஹர்லால் நேரு.

மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்துமாம்

லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.

உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டரங்கம் பராகுவே நாட்டில் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2,40,000 பேர் அமர்ந்து போட்டிகளை கண்டு ரசிக்கலாமாம்.

பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது.இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி

கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடுமாம்.

ஒலியைவிட வேகமாச் செல்லும் விமானத்தின் பெயர் சோனிக் விமானம். இது 1969-ல் முதன்முதலாகப் பறந்த போது மணிக்கு 2,333 கி.மீ. வேகத்தில் பறந்தது.

தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்குமாம்.

சூனியம் அல்லது சுழி (zero) என்ற எண் இந்தியர்களால் 3 ஆம் நூறாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது

நிலவின் மேற்பரப்பை துல்லியமாக படம் பிடித்த முதல் விண்கலம் ரேஞ்சர் 7 என்பதாகுமாம் .

புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.

Link to post
Share on other sites
 • 1 month later...

boycott.jpg

ஆங்கிலத்தில் பாய்காட்(boycott) என்று ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஒத்துழைக்காமல் தவிர்ப்பது, ஒன்றாய் இனைந்து புறக்கணிப்பது என்பது இதன் பொருள். இந்த சொல் எப்படி வந்தது ? தெரியுமா?

ஐயர்லாந்தில் காடுகளிலும், தோட்டங்களிலும் வேலை செய்ய காப்டன் சார்லஸ் பாய்காட்(charles boycott) என்ற ஐரிஸ் கான்ட்ராக்டர் கூலியாட்களை நியமித்து வேலை வாங்கி வந்தார். கூலியாட்களும் ஐரிஸ்காரர்கள். இவர்களிடம் மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் நடந்து கொண்டார் பாய்காட். பல நாட்கள் பொறுத்திருந்தும் விடிவு எதுவும் ஏற்படாததால் அந்த கூலியாட்கள் அனைவரும் ஒன்றாய் இனைந்து பாய்காட்டின் காண்ட்ராக்ட் வேலையை செய்ய மறுத்து அவரை புறக்கணித்தனர். அந்தப் பகுதியில் அவர் தனித்து விடப்பட்டார். அவரின் வேலையாட்கள் அவரின் நிலத்தில், வீட்டில் வேலை செய்ய மறுத்து விட்டனர், அவ்வூரில் உள்ள வியாபாரிகளும் இவருடன் வணிகம் செய்ய மறுத்துவிட்டனர். தபால் கொடுப்பவர் கூட தபாலை கொடுக்க மறுத்துவிட்டாராம். அந்த பகுதி மக்கள் யாருமே அவருக்கு ஒத்துழைக்கவில்லையாம்.

அவருடைய நிலத்தில் அறுவடைக்கு ஆள் கிடைக்காமல் வேறு இடங்களில் இருந்து சொற்ப ஆட்களை கொண்டு அறுவடை செய்தாராம், 50௦ தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஆயிரத்திற்கும் மேற்ப்பட காவலர்களை நியமிக்க வேண்டியதாகிவிட்டது . வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அறுவடையால் கிடைத்த லாபத்தை விட காவலர்களுக்கும் விவசாயக் கூலிகளுக்கும் கொடுத்த பணம் அதிகம் ஆகிவிட்டது.

இந்த நிகழ்வுக்கு பின்னர்தான் இத்தகைய ஒத்துழையாமையை பாய்காட் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். முதன் முதலில் 1880 இல் பாய்காட் என்ற பதத்தை டைம்ஸ் பத்திரிகை ஒரு ஒத்துழையாமை போராட்டத்தை பற்றிய செய்தியில் உபயோகப்படுத்தியது.

http://en.wikipedia.org/wiki/Charles_Boycott

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை சனத்தொகையில் ஒன்றரை லட்சம் பேர் பார்வையற்றோர் October 12, 2010

இலங்கை சனத்தொகையில் 1 லட்சத்து 50 ஆயிரம்பேர் பார்வை இழந்தவர்கள் என்றும் 4 லட்சம் பேர் பார்வை குறைபாடு உடையவர்கள் என்றும் சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=48024

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!!

அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது.

http://paadumeen.blogspot.com/2010/08/blog-post_6495.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ Published On Fri Oct 1 2010]

Number of billionaires in India: 49

Number of people who have no choice but to defecate in the open: 638 million

Percentage living on less than $1 a day: 34.3 per cent

Percentage who say they are quite happy, based on survey: 47 per cent

Number of luxury vehicles sold in 2009: 9,000

Number of people in India: 1.19 billion

Number employed by Indian Railways: 1.54 million

Number of Indians who die because of diarrhea every day: 1,600

Year India’s water demand is expected to exceed supply: 2020

Number of cellphones in India in 2000: 2.9 million

Number of cellphones in India in 2008: 296 million

Average life expectancy in India: 63.7 years

Time it took a toxic pesticide leak in Bhopal to kill 3,000 people: 7 hours

Time elapsed between the Bhopal disaster and convictions of eight Union Carbide officials: 26 years

Average marriage dowry paid to a husband in rural India in 1995: $1,509 CDN

Annual male salary in the same province in 1995: $251.58 CDN

Estimated number of female fetuses aborted since 1985: 10 million

Number of doctors convicted for sex-selective abortion as of 2006: 4

Number of defendants acquitted in India’s criminal courts in 1999: 1,163,454

Number of defendants acquitted in next 25 countries on the list combined: 1,050,989

Link to post
Share on other sites
 • 3 weeks later...

உலகம் முழுவதிலும் தமிழர்கள் – ஒரு புள்ளிவிபரம்

இந்தியா: 63,000,000 , ஸ்ரீலங்கா : 3,600,000 ,மலேசியா: 2,000,000, பர்மா: 500,000, சிங்கப்பூர்: 410,000, கனடா: 400,000, இங்கிலாந்து: 300,000, மொரிசியஸ்: 1,30,000, ரியுனியன் : 126,000, இத்தாலி : 100,000, அமெரிக்கா : 100,000, ஜெர்மனி : 60,000

தென்னாப்பிரிக்கா:over 500 000, பிரான்ஸ்: 60,000, சுவிட்சர்லாந்து : 43,000, இந்தோனேசியா : 40,000,குவாடிலோபே :40,000, ஆஸ்திரேலியா : 30,000,நெதெர்லாந்து : 20,000, நோர்வே: 12,000, ஸ்வீடன் : 10,000,தாய்லாந்து : under 10,000, மாலத்தீவு : under 10,000, டென்மார்க் : under 7,000, நியுசிலாந்து : 3,000 மற்றும் பல நாடுகளில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆஹா! பயனுள்ள எவ்வளவு தகவல்கள், தொடரட்டும் வாழ்த்துக்கள் நுணா!! :rolleyes:

Link to post
Share on other sites

ஆஹா! பயனுள்ள எவ்வளவு தகவல்கள், தொடரட்டும் வாழ்த்துக்கள் நுணா!! :lol:

நன்றி சுவி அண்ணா.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.