Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஈழத் தமிழரின்  ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை வெளியிட சீமான் கடும் எதிர்ப்பு

1330668.jpg  

சென்னை: “ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றைப் பனைமரம்' திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கக் கூடாது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக 'ஒற்றைப் பனைமரம்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப்பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஈழத்தில் நடைபெற்றது வெறும் வன்முறை வெறியாட்டம் அல்ல; உலகத் தமிழர் உணர்வோடும், உயிரோடும் இரண்டற கலந்துவிட்ட விடுதலைப் போராட்டம். ஈழத்தில் வாழ்ந்த தொப்புள்கொடி உறவுகள் வன்முறையின் மீது தீராக்காதல் கொண்டு மனநோயாளிகள் போல ஒரே நாளில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடவில்லை.

இனவெறி சிங்களவர்களின் இனவழிப்பு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, தமிழர் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு இனி தங்கள் தாய் மண்ணில் வாழவே முடியாது என்ற கொடுஞ்சூழல் ஏற்பட்ட பிறகு முதலில் தொடங்கப்பட்டது தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டம்தான். 30 ஆண்டுகாலம் இனவாத இலங்கை அரசின் கொடும் அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு தோல்வியடைந்த பிறகு, வேறுவழியின்றிதான் வே.பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் என்பது இனவெறி இலங்கை அரசால் தமிழர்களின் மேல் திணிப்பட்ட ஒன்றாகும். எதிரி எந்த மொழியில் பேசுகிறானோ அதே மொழியில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர் என்பதே வரலாற்றுப் பேருண்மை.

போராடினாலும் சாவோம்; போராடாவிட்டாலும் சாவோம். ஆனால் போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தாலேயே அடிமை வாழ்வினை விட உரிமைச்சாவு மேலானது என்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றே எம்மினச்சொந்தங்கள் ஈழத்தில் போராடி இன்னுயிரை ஈந்தனர். கடந்த 2009ஆம் ஆண்டு இருபது நாடுகள் கூடி தமிழீழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்றளவும் தமிழினம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், மண் விடுதலைக்குப் போராடி வீரக்காவியங்களான மாவீரர்த்தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்புவோ முயலும் எந்தவொரு படைப்பையும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கிறேன்.
 

ஆகவே, ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றை பனைமரம்' திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக் கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையிடக்கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். மேலும், தமிழ்நாடு அரசு இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, தேவையற்ற சட்டம் - ஒழுங்கு சீர்கெடாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்” என சீமான் தெரிவித்துள்ளார்.

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நாம் தமிழர்  கட்சி எனது திரைப்படத்தை தமிழகத்தில்  வெளியிடக் கூடாது என்று அறிக்கை விட்டிருக்கிறது. மீறி திரையிட்டால்  ஆர்ப்பாட்டம் நடத்துவோம்  என்று மிரட்டியிருக்கிறார்கள்.  

சில திரையரங்க உரிமையாளர்கள்  அறிக்கையைப்  பார்த்தபின்  தங்கள்  திரையரங்குகளிலும்  படத்தை  திரையிடுமாறு கேட்கிறார்கள்.  

எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அது மட்டுமல்லாது அண்டைய மாநிலங்களிலிலும்  திரையரங்க உரிமையாளர்கள்  கேட்கத் தொடங்கியுள்ளார்கள்.  

கேரளாவில்  இதுவரை பத்து திரையரங்கங்கள்  உறுதிசெய்து விட்டன.

என் மண்ணைப் பற்றி, என் மக்களின்  வாழ்வியலைப் பற்றி என் அரசியல்  சார்ந்து படம்  செய்வது எனது உரிமை. படத்தைப் பார்த்து ஆதரிப்பதும் நிராகரிப்பதும்  பார்வையாளர்கள்  உரிமை...

அறிக்கையில்  சொல்கிறார் , படம்  பொய்ப்பிரச்சாரம்  செய்கிறதாம் அப்போ இவர்  சொல்லிறதெல்லாம்......

விதானையார் இடையில எதுக்கு கெம்பிறார்.

Puthiyavan Rasiah

https://www.facebook.com/share/p/RqbE9yoi5ewCNMiR/

Edited by பிழம்பு
  • நிழலி changed the title to ஈழத் தமிழரின் ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை வெளியிட சீமான் கடும் எதிர்ப்பு
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒற்றைப் பனை மரம் படத்திற்கு சீமான் எதிர்ப்பு - என்ன சர்ச்சை?

ஒற்றைப் பனை மரம்: சீமான்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

புதியவன் ராசைய்யா என்பவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஒற்றைப் பனை மரம்' படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். என்ன காரணம்?

புதியவன் ராசைய்யா என்ற இயக்குநர், 'ஒற்றைப் பனை மரம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்ஷயா என்பவர் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட நிலையில், பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்தப் படம் தமிழ்நாட்டில் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்கக்கடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

 
 

அந்த அறிக்கையில், "ஈழத் தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப் பரப்பரையையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

மண் விடுதலைக்குப் போராடி வீர காவியங்களான மாவீரர் தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்புவோ முயலும் எந்தவொரு படைப்பையும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கிறேன்.

ஆகவே, ஈழவிடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றை பனை மரம்' திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

மேலும், தமிழ்நாடு அரசு இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

 
ஒற்றைப் பனை மரம்: சீமான்
படக்குறிப்பு, புதியவன் ராசைய்யா என்ற இயக்குநர், 'ஒற்றைப் பனை மரம்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி சில நாட்களுக்கு முன்பு திரையிடப்பட்டது. அதற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், இலங்கை தமிழ் பெண்களை மோசமாக இந்தப் படம் சித்தரிப்பதாகக் கூறி செய்தியாளர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்தான், இந்தப் படம் ஈழத் தமிழர்களை மோசமாகச் சித்தரிப்பதாகக்கூறி, அதனை வெளியிடக்கூடாது என சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

படம் வெளிவருவதற்கு முன்பாகவே படத்தை எதிர்ப்பது ஏன் எனக் கேட்டபோது, "போர் முடிந்துவிட்ட நிலையில், எல்லோரும் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். அந்தப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் படம் எடுத்தால் அதை ஏற்க முடியாது" என பிபிசியிடம் தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தொடர்பாளர் சே. பாக்கியராசன்.

"நாங்கள் யாரும் படம் பார்க்கவில்லை. ஆனால், பத்திரிகையாளர்களுக்கான காட்சியில் படம் பார்த்த சில பத்திரிகையாளர்கள் அதிர்ந்துபோய், எங்களிடம் சொன்னார்கள். இந்தப் படத்தை அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற பெயரில், தொடர்ந்து அந்தப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் செயல்படுகிறார்கள். போர் முடிந்து, அதில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நீதி கேட்டு நிற்கும்போது, அதற்கு உதவும் வகையிலான கதைக் களம் இருக்க வேண்டும். இது போன்ற கதைக் களத்தைக் கொண்ட படங்கள் இந்தப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும். அதனால்தான் எதிர்க்கிறோம்" என்கிறார் பாக்கியராசன்.

 
ஒற்றைப் பனை மரம்: சீமான்
படக்குறிப்பு, இந்த படத்தின் இயக்குநர் புதியவன் ராசைய்யா

இது குறித்து பிபிசியிடம் பேசிய படத்தின் இயக்குநர் புதியவன் ராசைய்யா, "அவர்கள் ஈழ விடுதலை போராட்டத்தை மையமாக வைத்து ஒரு அரசியலைச் செய்கிறார்கள். அவர்கள் இந்தப் போராட்டம் குறித்து பரப்பிவருவதற்கு மாறான கருத்தை இந்தப் படம் சொல்கிறது. அதுதான் அவர்களுக்குப் பிரச்னை" என்கிறார்.

"போர் முடிவடைந்த பிறகு ஈழத் தமிழர்கள் மிக மோசமான வாழ்வை இலங்கையில் எதிர்கொண்டுவருகிறார்கள். அதைப் பற்றித்தான் இந்தப் படம் சொல்கிறது. போர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2012-ஆம் ஆண்டுவாக்கில் முள்வேலி முகாம்களில் இருந்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அப்படிச் செல்லும் கதாநாயகி எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான் படம்.

போருக்குப் பிந்தைய இலங்கையில், கணவனை இழந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வாறெல்லாம் சிரமப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். மேலும், இஸ்லாமியர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டதும் படத்தில் வருகிறது. இதில் தமிழர்களுக்கு எதிராகவோ, இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ எதையும் சொல்லவில்லை.

என் மண் சார்ந்து, எங்களுடைய பிரச்னை சார்ந்து படமெடுப்பது எனது உரிமை. எங்கள் பிரச்னையை நான் விரும்பியபடி சொல்ல இவர்கள் அனுமதி தேவையில்லை. என் சமூகத்தை என் பார்வையில் பதிவுசெய்வேன்" என்கிறார் இயக்குனர் புதியவன் ராசைய்யா.

 
ஒற்றைப் பனை மரம்: சீமான்

ஆனால், தங்கள் எதிர்ப்பைக் கைவிடப்போவதில்லை என்கிறது நாம் தமிழர் கட்சி. "எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கும் என்பது சரிதான். ஆனால், அவரது கருத்து பொதுக் கருத்துக்கு எதிராக இருந்தால், அதை எதிர்க்கத்தானே முடியும்? ஆகவே நாங்கள் எதிர்ப்போம். கடைசிவரை கடுமையாக எதிர்ப்போம்" என்கிறார் பாக்கியராசன்.

ஒற்றைப் பனை மரம் படத்தின் பெரும்பான்மை காட்சிகள் கிளிநொச்சியிலும் 10 சதவீத காட்சிகள் தமிழ்நாட்டிலும் எடுக்கப்பட்டிருக்கின்றன. புதியவன் ராசைய்யா இதற்கு முன்பாக, 'மண்', 'யாவும் வசப்படும்' ஆகிய இரு படங்களை இயக்கியிருக்கிறார். 'மண்' திரைப்படம், இலங்கையில் பூர்வீகத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையிலான முரண்பாடைப் பற்றிப் பேசிய திரைப்படம்.

'ஒற்றைப் பனை மரம்' திரைப்படம், இதுவரை இலங்கையில் வெளியாகவில்லை. இலங்கையில் வெளியிடுவதற்காக தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு அந்தக் குழு படத்தை அக்டோபர் 14-ஆம் தேதி பார்த்துவிட்டது என்கிறார் ராசைய்யா. ஆனால், இதுவரை முடிவு ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

"ஒரு திரைப்படத்தைப் பார்த்தால் மூன்று நாட்களுக்குள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். ஏன் இன்னும் தெரிவிக்கவில்லை என எனது சட்டத்தரணி மூலம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்" என்கிறார் ராசைய்யா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Edited by ஏராளன்
Posted

தனிப்பட்ட ரீதியில் ஒரு திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மறுப்பதற்கும், ஒரு படைப்பை அரசியல் காரணங்களினால் தடை செய்வதற்கும் நான் ஆதரவு இல்லை.

அதே நேரம், இந்த புதியவன் இராசையாவிடம் இருந்து எந்த விதமான நேர்மையான கருத்துகளும் வெளி வரமாட்டாது என்பது என் அவதானம். 

கடும் புலி எதிர்ப்பும், வன்வமும் கொண்டது புதியவனின் கருத்துகள். எவராவது புலிகளின் ஏதாவது ஒரு செயல்பாட்டை முகனூலில் பாராட்டியதை இவர் பார்த்து விட்டால் அவ்வளவு தான். அதீத வன்மத்துடன் புலிகளை எந்தளவுக்கு மோசமாக சொல்ல முடியுமோ அந்தளவுக்கு தன் பின்னூட்டங்களை அதில் இடுவார்.

தன்னை ஒரு இடது சாரி என நினைத்துக் கொண்டு இருக்கும் கடும் புலி எதிர்ப்பு காச்சலால் பீடிக்கப்பட்டவர் புதியவன் ராசைய்யா.

சீமான் இந்த படத்தை எதிர்ப்பதால், இப் படத்துக்கு அதுவே விளமபரமாக போய் விடக்கூடிய நிலை உருவாகலாம். தும்புத்தடிக்கு பட்டுக் குஞ்சம் சாத்திய மாதிரி ஆகிவிடும்.

  • Like 2
  • Thanks 2
Posted

பனைமரம்" திரைப்படத்தின் இயக்குனர் புதியவன் ராசையா செய்தியாளர் சந்திப்பு

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

தனிப்பட்ட ரீதியில் ஒரு திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மறுப்பதற்கும், ஒரு படைப்பை அரசியல் காரணங்களினால் தடை செய்வதற்கும் நான் ஆதரவு இல்லை.

உண்மை. அது அவரது படைப்பு. பார்ப்பவர்கள் விமர்சனத்தை வைக்கட்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நிழலி said:

தனிப்பட்ட ரீதியில் ஒரு திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மறுப்பதற்கும், ஒரு படைப்பை அரசியல் காரணங்களினால் தடை செய்வதற்கும் நான் ஆதரவு இல்லை.

அதே நேரம், இந்த புதியவன் இராசையாவிடம் இருந்து எந்த விதமான நேர்மையான கருத்துகளும் வெளி வரமாட்டாது என்பது என் அவதானம். 

கடும் புலி எதிர்ப்பும், வன்வமும் கொண்டது புதியவனின் கருத்துகள். எவராவது புலிகளின் ஏதாவது ஒரு செயல்பாட்டை முகனூலில் பாராட்டியதை இவர் பார்த்து விட்டால் அவ்வளவு தான். அதீத வன்மத்துடன் புலிகளை எந்தளவுக்கு மோசமாக சொல்ல முடியுமோ அந்தளவுக்கு தன் பின்னூட்டங்களை அதில் இடுவார்.

தன்னை ஒரு இடது சாரி என நினைத்துக் கொண்டு இருக்கும் கடும் புலி எதிர்ப்பு காச்சலால் பீடிக்கப்பட்டவர் புதியவன் ராசைய்யா.

சீமான் இந்த படத்தை எதிர்ப்பதால், இப் படத்துக்கு அதுவே விளமபரமாக போய் விடக்கூடிய நிலை உருவாகலாம். தும்புத்தடிக்கு பட்டுக் குஞ்சம் சாத்திய மாதிரி ஆகிவிடும்.

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் போன்றவர்கள் இயக்கத்தை ஆதாரமாக வைத்து றொக்கெட் விடுபவர்கள் 🙂. தமது அடிப்படை ஆட்டம் காண வெளிக்கிட்டால் மூர்க்கமாக எதிர்ப்பார்கள். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை, இது தெரியாத ஆள் அவரில்லை, ஆனால் அவர் இந்தத் தடத்தில் வெகுதூரம் போய் விட்டார். இந்த எதிர்ப்பு பிழைப்புவாத அரசியல் மட்டுமே.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/10/2024 at 10:55, நிழலி said:

இந்த புதியவன் இராசையாவிடம் இருந்து எந்த விதமான நேர்மையான கருத்துகளும் வெளி வரமாட்டாது என்பது என் அவதானம்

200% உண்மை 

ஈழத்தில் இருந்து முன்னர் வெளிவந்த சில படங்களுக்கு தமிழ் நாட்டில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இப்படம் வெளிவர எப்படி அனுமதியளித்தார்கள்? ஏதோ உள்குத்து உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, theeya said:

ஈழத்தில் இருந்து முன்னர் வெளிவந்த சில படங்களுக்கு தமிழ் நாட்டில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இப்படம் வெளிவர எப்படி அனுமதியளித்தார்கள்? ஏதோ உள்குத்து உள்ளது 

theeya,  உண்மைதான். இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் இந்தியாவில் திரையிடப்படுவதில்லை என்ற உங்கள் கருத்து சரியானதுதான்.

உள்குத்தாகவும் இருக்கலாம். உள் நோக்கமாகவும் இருக்கலாம்.

சிறீமா காலத்தில் (எழுபதுகளில்) இந்தியத் திரைப்படங்கள் மட்டுப் படுத்தப்பட்டன. அப்பொழுது இலங்கைத் திரைப்படக் கூட்டுத் தாபனம் ஊடாகத்தான் இந்தியத் திரைப்படங்கள் வாங்கப்பட்டன. அவர்கள் தெரிவு செய்து வாங்கும் படங்களை மட்டுமே திரையிட முடியும். திரைப்படங்களின் தரங்கள், விலைகள் எல்லாம் கவனிக்கப்பட்டன.  அதேநேரம் இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு ஊக்கமும் உதவிகளும் வழங்கப்பட்டன.

அந்த நேரத்தில் இலங்கையில், நிர்மலா, குத்துவிளக்கு, கோமாளிகள், வாடைக்காற்று, நான் உங்கள் தோழன்என்று  பல தமிழ்ப்படங்கள் வெளிவந்தன. அவற்றுக்கு ஆதரவும் இருந்தன. ‘இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாதுஎன்று இந்தியா இலங்கையுடன் சேர்ந்து கூட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டது. பைலற் பிரேம்நாத், தீ, இரத்தத்தின் இரத்தம், நங்கூரம், மாமியார் வீடு….. என பல படங்கள் தயாராகின. பின்னர் போராட்டச் சூழலிலானாலும் ஜேஆரின் ஆட்சியில் இருந்த தாராளக் கொள்கையினாலும் நிலமை மாறிபழைய குருடிகதையானது.

இப்பொழுது இலங்கையில் வந்துள்ள ஆட்சி மாற்றத்தினால்  ‘உள் நோக்கம்’  கூட இருக்கலாம். புலிகளை, போராட்டத்தை கொச்சைப் படுத்தி படம் இருப்பதால்உள்குத்துஆகவும் இருக்கலாம். அல்லது வடக்குப்பகுதி இந்தியாவுக்குள் வந்து விட்டது என்ற எண்ணமாகவும் கூட இருக்கலாம்.

ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கைத் திரைப்படம் தமிழகத் திரையரங்குகளில் வெளிவர வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாராவது படம் பார்தீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, goshan_che said:

யாராவது படம் பார்தீர்களா?

 

ஆம். கோவிட்டுக்கு முன்னர் Surbiton இல் ஒரு ஹோலில் பிரத்தியேகமாக திரையிடப்பட்டபோது பார்த்தேன்!

கதை மறந்துபோயிருந்தது.. ஆனால் விமர்சனங்களை வாசித்து பல காட்சிகள் நினைவுக்கு வந்தது. சில காட்சிகள் திணிக்கப்பட்டவை போலிருந்தாலும், இறுதிப் போருக்குப் பின்னர் நிகழ்ந்தவற்றை ஓரளவு வெளியே கொண்டுவந்தது உண்மைதான். இப்போது எல்லோருமே இறுதிப் போரிலும் அதன் பின்னரும் நிகழ்ந்தவற்றை மறந்து, அல்லது தவிர்த்து வாழப்பழகிவிட்டோம், காணாமல் போன உறவுகளை இன்னும் தேடிக்கொண்டு இருப்பவர்களைத் தவிர!

 

குறிப்பு: புதியவன் என்ற பெயருடன் படங்கள் எடுக்க முன்னரே அவரை 90களின் ஆரம்பத்தில் இருந்து ஓரளவு பழக்கம்😀 அப்போது London Tooting இல் இருந்ததனால் அடிக்கடி காணும் சந்தர்ப்பம் இருந்தது. இடது சாய்வான மாற்றுக் கருத்துக்காரர்களில் ஒருவர். எனினும் அவருடைய நண்பர்களில் பலர் புலிகளின் ஆதரவாளர்கள். அவருக்கு  தடிப்புக் கதையும், ஊரில எவடம் என்று பூர்வீகம் தேடும், தமது பரம்பரையின் பெருமை பேசும்  யாழ்ப்பாணிகளைப் பிடிக்காது!

 

நண்பர் @பெருமாள் க்கும் தெரிந்திருக்கும், ஆனால் அவர் கறுப்பு-வெள்ளை என்று பிரிப்பவர். நான் சாம்பலில் எத்தனை நிழல்கள் என்று எண்ணுபவன்😎

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, கிருபன் said:

ஆம். கோவிட்டுக்கு முன்னர் Surbiton இல் ஒரு ஹோலில் பிரத்தியேகமாக திரையிடப்பட்டபோது பார்த்தேன்!

கதை மறந்துபோயிருந்தது.. ஆனால் விமர்சனங்களை வாசித்து பல காட்சிகள் நினைவுக்கு வந்தது. சில காட்சிகள் திணிக்கப்பட்டவை போலிருந்தாலும், இறுதிப் போருக்குப் பின்னர் நிகழ்ந்தவற்றை ஓரளவு வெளியே கொண்டுவந்தது உண்மைதான். இப்போது எல்லோருமே இறுதிப் போரிலும் அதன் பின்னரும் நிகழ்ந்தவற்றை மறந்து, அல்லது தவிர்த்து வாழப்பழகிவிட்டோம், காணாமல் போன உறவுகளை இன்னும் தேடிக்கொண்டு இருப்பவர்களைத் தவிர!

 

குறிப்பு: புதியவன் என்ற பெயருடன் படங்கள் எடுக்க முன்னரே அவரை 90களின் ஆரம்பத்தில் இருந்து ஓரளவு பழக்கம்😀 அப்போது London Tooting இல் இருந்ததனால் அடிக்கடி காணும் சந்தர்ப்பம் இருந்தது. இடது சாய்வான மாற்றுக் கருத்துக்காரர்களில் ஒருவர். எனினும் அவருடைய நண்பர்களில் பலர் புலிகளின் ஆதரவாளர்கள். அவருக்கு  தடிப்புக் கதையும், ஊரில எவடம் என்று பூர்வீகம் தேடும், தமது பரம்பரையின் பெருமை பேசும்  யாழ்ப்பாணிகளைப் பிடிக்காது!

 

நண்பர் @பெருமாள் க்கும் தெரிந்திருக்கும், ஆனால் அவர் கறுப்பு-வெள்ளை என்று பிரிப்பவர். நான் சாம்பலில் எத்தனை நிழல்கள் என்று எண்ணுபவன்😎

 

தகவலுக்கு நன்றி ஜி.

படம் ரொம்ப பழசு போல இருக்கு, இதை இப்பதானா தமிழ்நாட்டில் வெளியிடுகிறார்களா?

அண்ணனுக்கு வெட்டுவதை வெட்டி இருந்தா லைக்காவுக்கு கொடுத்த ஆதரவை கொடுப்பாரே?

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, goshan_che said:

தகவலுக்கு நன்றி ஜி.

படம் ரொம்ப பழசு போல இருக்கு, இதை இப்பதானா தமிழ்நாட்டில் வெளியிடுகிறார்களா?

அண்ணனுக்கு வெட்டுவதை வெட்டி இருந்தா லைக்காவுக்கு கொடுத்த ஆதரவை கொடுப்பாரே?

பழைய மதுரா ஓனர் இப்பவும் பில்டிங் ஓனர் அவர்தான் 2௦19 ல் வந்த படத்துக்கு இப்ப ஏன் அழுகிரான்கங்கள் ? தேவையில்லாமல் சீமான் இலவச விளம்பரம் கொடுத்து உள்ளார் @நிழலிசொல்வது போல் புலி காய்சல்உள்ள நபர் நேரில் பார்த்தால் மிக அமைதியானவர் .

கடைசியாக மோர்டனில் ஒன் பவுண்டு சொப் மிக அமைதியாக நடாத்தி கொண்டு இருந்தார் இந்தியன் ஆமி காலத்தில் யாழில் இருந்து  வல்வைக்கு சென்ற மினி பஸ் படுகொலை செய்தவர் பெயரில் இவரின் பெயர் உள்ளது நேரில் கேட்டேன் அது தான் இல்லை என்கிறார் !...................

இப்போதும் தமிழ் நாட்டில் இருக்கிறார் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடுகிறார் போல் உள்ளது .

ஆள் லண்டன் வந்தால் மிகுதி கதைப்போம் அதை இங்கு பகிர்ந்து கொள்கிறன் நன்றி @கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@கிருபன் 50 சாம்பல் நிற நிழல்கள் படித்தாகி விட்டதா ?

அலுப்பு தட்டும் என்று அமேசனில் ஒதுக்கி விட்ட  ஒன்று தற்போது இரண்டு பவுன் ஆக்கும் .



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.