Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

sumanthiran.jpg

கொழும்பில் பல வீதிகளை திறந்து தெற்கு மக்களின் ஆதரவைப்பெற எண்ணும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறந்து யாழ்ப்பாணம் மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முன்வர வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வலி. வடக்கு மற்றும் பருத்தித்துறை, உடுப்பிட்டி மக்களின் அழைப்பின் பெயரில் அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறக்க ஆவண செய்யுமாறு விடுத்த கோரிக்கையின் பெயரில் அவர்களிடம் விபரத்தைக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமராட்சி, அச்சுவேலி, பலாலி பகுதி மக்கள் இரண்டு கிலோமீற்றர் பயணத்தில் சென்றடைய வேண்டிய விமான நிலையம் மற்றும் சில நிமிடத்தில் அடைய வேண்டிய யாழ். நகரத்தை 34 ஆண்டுகளாகப் பல கிலோமீற்றர் பயணித்தே தமது தேவைகளை நிவர்த்தி செய்கின்றனர்.

இதனைத் தடுக்க அச்சுவேலி – வசாவிளான் வீதியில் வெறும் 400 மீற்றர் பிரதேசத்தைத் திறப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எட்ட முடியும்.

கொழும்பில் ஜனாதிபதி மாளிகையை ஒட்டிய வீதி பாதுகாப்புக் காரணத்துக்காக 15 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த நிலையில் அதனைத் திறக்க உத்தரவிட்ட ஜனாதிபதி, எமது மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு 34 ஆண்டுகளாகப் பூட்டி வைத்திருக்கும் இந்த வீதியையும் திறக்க உடன் உத்தரவிட வேண்டும்.” – என்றும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/311243

  • Replies 72
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

எனது பயணகட்டுரையில் யாழில் ஜேவிபிக்கு பெருகும் ஆதரவு இட்டு எழுதி இருந்தேன். அதை பலர் நம்பாமலும் இன்னும் சிலர் ஜீரணிக்க முடியாமலும் கருத்து கூறினர் யாழ் களத்திலும், வெளியே புலம்பெயர் மக்களிடம் பேசிய போ

valavan

அவர் ஆரம்பகால யாழ்ப்பாண யூடியூப்பர் , இவருக்குத்தான் அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸ்,  இவர் எதேச்சையாக ஒருதடவை அநுரவீட்டுக்குபோய் பிஸ்கட் தேத்தண்ணி எல்லாம் குடிச்சு வந்தார் , , அப்போது இவருக்கு தெரிந்திருக்க

goshan_che

நாடகம் ரணில் வீதியை திறக்காமல் தேர்தலுக்கு நாடகம் ஆடினார், அனுர வீதியை திறந்து தேர்தலுக்கு நாடகம் ஆடினார், சும், சும்மாவே திறக்கப்படப்போகும் வீதிக்கு ஓடி வந்து குரல் எழுப்பி தேர்தலுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட யாழ். வயாவிளான் வீதி

vasaa.jpg

யாழ். பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி முதல் திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி யாழ்ப்பாணம் பலாலி வீதியில், வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தியிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீட்டர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/311421

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் 34 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்ட வீதி

image

யாழ்ப்பாணம் பலாலி வீதி - வசவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று (01) காலை ஆறு மணி முதல் அனுமதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீற்றர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/197614

  • கருத்துக்கள உறவுகள்
Posted

34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்

21 minutes ago, ஏராளன் said:

34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட யாழ். வயாவிளான் வீதி

2 நாள்ல திறக்கபோறாங்கள் எண்டு தெரிஞ்சுதான் பயபுள்ள அறிக்கை விட்டிருக்காரு போல,

இனிமே என்ன அச்சுவேலி வயாவிளான் வீதியை நான் சொல்லியே ஜனாதிபதி திறந்து வைத்தார் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு ஆயுதமா பயன்படுத்தலாம்.

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, valavan said:

2 நாள்ல திறக்கபோறாங்கள் எண்டு தெரிஞ்சுதான் பயபுள்ள அறிக்கை விட்டிருக்காரு போல,

கெளரவ மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் சேரின் கடுமையான முயற்சியின் பின்னர் திறக்கப்பட்ட வீதியை மெச்சுவதை விடுத்துக் கொச்சைப்படுத்தலாமா?

சுமந்திரன் சேர் அநுர ஆட்சியில் அமைச்சரானால் இன்னும் பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டுவார்!

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/10/2024 at 17:58, ஏராளன் said:

எமது மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு 34 ஆண்டுகளாகப் பூட்டி வைத்திருக்கும் இந்த வீதியையும் திறக்க உடன் உத்தரவிட வேண்டும்.” – என்றும் தெரிவித்துள்ளார்.

1 hour ago, ஏராளன் said:

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

முப்பத்து நான்கு வருடங்களாக பூட்டப்பட்டிருந்த வீதியைப்பற்றி மாறி மாறி முண்டுகொடுத்த அரசுகளுடன் வாயே திறக்காதவர், திடீரென கரிசனை வந்தது எப்படி? மக்களிடம் வாக்கு கேட்க ஒரு துருப்பு கிடைத்துவிட்டது. வாக்கு விழுந்தால் அதோடு பாராளுமன்றம் போகலாம் அல்லது ஜனாதிபதிக்கு ஒரு நன்றி, பாராட்டு அனுப்பி இணைந்துகொள்ளலாம். இப்போ பல அரசியல் வாதிகள் முன்னைய அரசோடு ஒட்டிக்கொண்டதுபோல் அனுராவோடு ஒட்ட முடியவில்லையே, ரகசியமாய் சந்தித்தாலும்  பகிரங்கப்படுத்தி விடுகிறார்கள், வரப்பிரசாதங்களும் நிறுத்தப்படப்போகிறது என்கிற  பதட்டத்தில் புகழ்ந்தும், வாக்குவங்கிக்காக தேர்தல் பிரச்சாரங்களில் இகழ்ந்தும் உளறுகிறார்கள். வர வர சுமந்திரன் வடக்கின் வசந்தத்தின் நிலைக்கு வந்து நிற்கிறார்.  வடக்கில் என்ன திட்டங்கள் நிறைவேற்றுவதென்றாலும் வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கமையவே  அமுல்படுத்தப்படும். எதற்கும் சுமந்திரன் வடக்கு ஆளுநருக்கு தூது அனுப்புவது நல்லது. அவர் சுமந்திரனை ஏற்றுக்கொண்டால். இவர்களுக்கு ஊர்சுற்றாமல், படம் காட்டாமல்,  நான் தான் சாதித்தேன் என்று புழுகித்திரியாமல் இருக்க முடியாது. எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என தெரியவில்லையே? அடுத்த தேர்தலோடு அரசியலில் இருந்து விலகுவேன் என்றார் ஒருவர், மற்றவர் தானும் சேர்ந்து வரைந்த அரசியல் யாப்பின்படி  ஒருவருடத்திற்குள் தீர்வு காணாவிட்டால் பதவி விலகுவேன் என்று கர்ச்சித்தார். இவர்கள் பேச்சு வெறும் மேடைப்பேச்சு, மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்து வேறொரு சவாலுடன் வருவார்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொண்டு.       

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீதியைத் திறக்க வேண்டியது அரசின் கடமை. அதைத் தேர்தல் நேரத்தில் திறந்ததது வாக்கு வேட்டைக்காக என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.இது போன்று மேலும் தேர்தல்கள் வரும். தமழிமக்கள மீது போடப்பட்டுள்ள அழுத்தங்களை அவை குறைக்கும். இதில் அரசியல்வாதிகள் குளிர்காய நினைப்பதை என்னவென்பது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, satan said:

எதற்கும் சுமந்திரன் வடக்கு ஆளுநருக்கு தூது அனுப்புவது நல்லது. அவர் சுமந்திரனை ஏற்றுக்கொண்டால்.

அவர்  யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர்  பதவியில் இருந்த போது   இந்த தமிழரசு கட்சி   சுமத்திரன்.  மாவை   போன்றோர்  அலுப்பு கொடுத்தவர்கள்  தங்களின் எண்ணம் போல நடக்கவில்லை என்று    இடமாற்றம்   செய்தவர்கள்  என்று நினைக்கிறேன்    சரியாக தெரியவில்லை   பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விடயம்   இந்த ஆளுநர் இவர்களுக்கு பிடக்காத. நபர்      இவர் ஏன் யாழ்ப்பாணத்தை விட்டு போனார் தெரிந்தவர்கள்   பதியுங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, புலவர் said:

இதில் அரசியல்வாதிகள் குளிர்காய நினைப்பதை என்னவென்பது?

சும்மா இருந்து வாக்கு சேர்க்கிறவர்களுக்கு, தாங்களும் செயல் வீரர் என்று காட்ட இதுகளை எதிர்பார்த்திருப்பார்கள், சம்பவ இடத்துக்கு அழைப்பில்லாமலேயே வலியப்போய் படம் எடுத்து  தங்கள் சாதனை என்று சொல்வார்கள். செய்கிறவர்களோ தங்களுக்கு மக்கள்  வாக்கு போடுவார்கள் எனும் எதிர்பார்ப்பிலேயே  அதிரடியாக தக்க சமயத்தில் இவற்றை செய்கிறார்கள். இதைத்தான் வடக்கின் வசந்தமும் செய்கிறார், வலியப்போய் கூட்டத்தில இருப்பார், படத்துக்கு எட்டி முகம் காட்டுவார், கருத்து சொல்லுவார். அவர் சட்டம் ஒன்றும் படிக்கவில்லை, இனத்தை விற்று பதவி பெறுகிறார். இவர் படித்தவர் என்று சொல்கிறார் கட்சியை உடைத்து, தேசியத்தை விற்று பதவியில் தொடர்ந்து இருக்க பாடுபடுகிறார்.  தனது பதவியாசையை மற்றவர்மேல் திணிப்பார்.  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

கெளரவ மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் சேரின் கடுமையான முயற்சியின் பின்னர் திறக்கப்பட்ட வீதியை மெச்சுவதை விடுத்துக் கொச்சைப்படுத்தலாமா?

சுமந்திரன் சேர் அநுர ஆட்சியில் அமைச்சரானால் இன்னும் பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டுவார்!

இது ஜனாதிபதித்தேர்தலுக்கு முதலே தீர்மானிக்கப்பட்டது. எங்கடை சுமந்து இது தெரிந்து தான் அறிக்கை விட்டவர்

1 hour ago, Kandiah57 said:

அவர்  யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர்  பதவியில் இருந்த போது   இந்த தமிழரசு கட்சி   சுமத்திரன்.  மாவை   போன்றோர்  அலுப்பு கொடுத்தவர்கள்  தங்களின் எண்ணம் போல நடக்கவில்லை என்று    இடமாற்றம்   செய்தவர்கள்  என்று நினைக்கிறேன்    சரியாக தெரியவில்லை   பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விடயம்   இந்த ஆளுநர் இவர்களுக்கு பிடக்காத. நபர்      இவர் ஏன் யாழ்ப்பாணத்தை விட்டு போனார் தெரிந்தவர்கள்   பதியுங்கள்.  

அலுப்புக் குடுத்தது அங்கயனும் டக்கியும்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 
காணொளியெடுப்பவரது அண்மைய காணொளிகள் ஏறக்குறைய அநுரவிற்கான பரப்புரையாளர்போல உள்ளதும் நோக்கப்பட வேண்டியது. 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, nochchi said:

காணொளியெடுப்பவரது அண்மைய காணொளிகள் ஏறக்குறைய அநுரவிற்கான பரப்புரையாளர்போல உள்ளதும் நோக்கப்பட வேண்டியது. 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

நீங்கள் சொல்வது சரியானதுதான்.
நானும் கவனித்த அளவில் அனுரவை கடவுள் மாதிரி கதைப்பார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது சரியானதுதான்.
நானும் கவனித்த அளவில் அனுரவை கடவுள் மாதிரி கதைப்பார்.

நன்றி, நீங்களும் அவதானிதுள்ளீர்கள். குமாரசாமிஐயா இப்படித்தான் சிலர் விவேகமென்று வேண்டாத கருத்துகளை காணொளியென்று பரப்பிவருகிறார்கள்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 
திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டாவது காணொளியில்  வீடுகளைப் பார்க்க மனம் வேதனையாக இருக்கிறது.எவளவு கனவுகளோடு இந்த வீடுகள் கட்டப்பட்டிருக்கும். தற்போது அவை நினைவுகளாகக் காட்சியளிக்கின்றன. 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, valavan said:

34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்

2 நாள்ல திறக்கபோறாங்கள் எண்டு தெரிஞ்சுதான் பயபுள்ள அறிக்கை விட்டிருக்காரு போல,

இனிமே என்ன அச்சுவேலி வயாவிளான் வீதியை நான் சொல்லியே ஜனாதிபதி திறந்து வைத்தார் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு ஆயுதமா பயன்படுத்தலாம்.

நானும் இதையே எண்ணினேன்.அரசுடன் ஏதொ ஒரு விதத்தில் தொடர்பு வைத்திருக்கிறாரோ?

3 hours ago, கிருபன் said:

சுமந்திரன் சேர் அநுர ஆட்சியில் அமைச்சரானால் இன்னும் பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டுவார்!

சுமந்திரனை மந்திரியாக்காமல் விடமாட்டீர்கள் போல.

அதிலிருந்து அவரும் கட்சியும் மீண்டெளட்டும்.

2 hours ago, Kandiah57 said:

அவர்  யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர்  பதவியில் இருந்த போது   இந்த தமிழரசு கட்சி   சுமத்திரன்.  மாவை   போன்றோர்  அலுப்பு கொடுத்தவர்கள்  தங்களின் எண்ணம் போல நடக்கவில்லை என்று    இடமாற்றம்   செய்தவர்கள்  என்று நினைக்கிறேன்    சரியாக தெரியவில்லை   பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விடயம்   இந்த ஆளுநர் இவர்களுக்கு பிடக்காத. நபர்      இவர் ஏன் யாழ்ப்பாணத்தை விட்டு போனார் தெரிந்தவர்கள்   பதியுங்கள்.  

கந்தையா அங்கயனும் டக்கிளசும் மிகவும் குடைச்சல் கொடுத்ததாகவும் பல பத்திரங்களில் கையெழுத்திட மறுத்ததாகவும் மிகவும் அவமானப்படுத்தப்பட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதாகவும் ஒரு கதை அடிபட்டது.

இவரது பதவியேற்பு காணொளியில் வேறு ஒரு ஜனாதிபதி கேட்டிருந்தால் இந்தப் பதவியை ஏற்றிருக்க மாட்டேன் என்று சொல்லும் போதே எவ்வளவு புண்பட்டிருப்பார் என்று தெரிகிறது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாடகம்

ரணில் வீதியை திறக்காமல் தேர்தலுக்கு நாடகம் ஆடினார்,

அனுர வீதியை திறந்து தேர்தலுக்கு நாடகம் ஆடினார்,

சும், சும்மாவே திறக்கப்படப்போகும் வீதிக்கு ஓடி வந்து குரல் எழுப்பி தேர்தலுக்கு நாடகம் ஆடினார்,

ஆளுனர் தன் எசமானுக்காக, யுடியூப்பர் தன் வருவாய்க்கான நாடகம் ஆடினர்.

நாடகமோ, நாட்டியமோ, 

வீதி திறப்புக்கு சிறிதோ, பெரிதோ

ஆவன செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.

புலம்பெயர் தேசத்தில் இருந்து எதுவும் செய்யாமல் பல்லு குத்துபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனாலும் ஏதோ நடந்திருக்கிறது. மக்கள் பலன் பெறுகிறார்கள். இதனால் போறதுக்கு தமிழனிடம் கச்சை கூட இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுசரி, இந்த வீதியை திறக்குமாறு வேண்டுகோள் வைத்தவரின் தலைக்கறுப்பையே காணமே. அவருக்கு தெரிவிக்காமலேயே திறந்து விட்டார்களோ? யாராவது வந்து ஆடம்பரமாக திறந்திருந்தால், சுமந்திரன் வந்து வாய்வீச்சு விட்டிருப்பார். பாவம் அவர்தான் கோரிக்கை வைத்தார் அவருக்கு சொல்லாமலேயே எல்லாம் நடந்து முடிந்தது. இந்த மக்களின் மனம் மாறமுதல், அனுரா வருவார் வாக்கு கேட்க. சரி, செய்து காண்பித்து விட்டு கேட்பதில் தவறில்லை. ஒன்றும் செய்யாமலே வாங்குகளை வாங்கியோரும், வாங்கிக் கொடுத்தோரையும் விட  இது பரவாயில்லை. ஆனால் தேர்தல் முடிய வீதியை  பூட்டாமல் இருந்தால் சரி. பதவி வரும்போது பணிவும் வரவேண்டும், அப்படி வந்தால் அந்தபதவி நிலைக்கும். நான் வீதியை திறக்கப்போகிறேன் என்று அறிவித்திருந்தால்; தெற்கில் இருந்து ஒரு குழப்ப கோஷ்ட்டி வந்திறங்கியிருக்கும், வடக்கிலிருந்து வசந்தம், சுமந்திரன் போன்றோர்  பட்டு வேட்டிகளோடு உரிமை கோரி வந்திருப்பினம். இப்போ, இவர்களே கேட்டுத்தான் அறிதிருப்பினம் இந்த விடையத்தை. அதுவே நல்ல  விடையம். இதற்கு ரணில் எதிர்ப்பு தெரிவிப்பார். ரணிலை அன்று புலிகள் தேர்தலில் புறக்கணித்தது தவறு என எத்தனைபேர் பாடம் எடுத்தார்கள். இன்று மஹிந்தவுக்கு பாதுகாப்பு குறைக்கப்படக்கூடாது என கூறுகிறார். எனக்கு வேண்டாம் அவருக்கு பாதுகாப்பு அளியுங்கள் என்கிறார். இதிலிருந்தே அவர் அன்று பதவிக்கு வந்திருந்தால்; என்ன செய்திருப்பார் என்பதை விளங்கிக்கொள்வது ஒன்றும் கடினமில்லை அறிவுள்ளவருக்கு.      

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூன்று தசாப்தங்களாக மூடப்பட்டிருந்த வீதி வடக்கு மக்களின் வேண்டுகோளையடுத்து திறப்பு - ஜனாதிபதி

பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் மக்களின் அபிவிருத்தியை பாதுகாப்பை உறுதிசெய்வேன் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளது- 

வடமாகாண மக்கள் விடுத்த வேண்டுகோளினை ஏற்று மூன்று தசாப்தகாலத்தின் பின்னர் பலாலி அச்சுவேலி வீதியை மீளத்திறந்ததை கௌரவமான விடயமாக கருதுகின்றேன்.

பாதுகாப்பு  அமைச்சின் உதவியுடன் எங்கள் மக்களின் அபிவிருத்தி பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம் 

மூன்று தசாப்தங்களாக மூடப்பட்டிருந்த வீதி வடக்கு மக்களின் வேண்டுகோளையடுத்து திறப்பு - ஜனாதிபதி | Virakesari.lk

01 Nov, 2024 | 05:17 PM
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

புலம்பெயர் தேசத்தில் இருந்து எதுவும் செய்யாமல் பல்லு குத்துபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தான் கேட்டு வீதி திறக்கப் பட்டதாக சுமந்திரனே உரிமை கோரவில்லை இன்னும். ஆனாலும், "சுமந்திரன் லவ்வர்ஸ்"😎 இப்பவே உறுத்தலில் கதையெழுத ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த வீதியில் இருந்து ஒரு  மைல் தொலைவில் கஜேந்திரன் பற்றைக்குள் பாய் போட்டு படுத்து போராடியிருந்தால், இப்போது வீதி திறக்கப் படும் போது அந்தப் படங்களையெல்லாம் போட்டு புலவர் போன்றோர் இங்கே பிரச்சாரம் தொடங்கியிருப்பர் இப்போது!

இப்பவோ #தொண்டையில முள்ளு😂

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Justin said:

தான் கேட்டு வீதி திறக்கப் பட்டதாக சுமந்திரனே உரிமை கோரவில்லை இன்னும். ஆனாலும், "சுமந்திரன் லவ்வர்ஸ்"😎 இப்பவே உறுத்தலில் கதையெழுத ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த வீதியில் இருந்து ஒரு  மைல் தொலைவில் கஜேந்திரன் பற்றைக்குள் பாய் போட்டு படுத்து போராடியிருந்தால், இப்போது வீதி திறக்கப் படும் போது அந்தப் படங்களையெல்லாம் போட்டு புலவர் போன்றோர் இங்கே பிரச்சாரம் தொடங்கியிருப்பர் இப்போது!

இப்பவோ #தொண்டையில முள்ளு😂

🤣 கிழக்கு மாகாண வாக்குகளை சிதறடித்து, அம்பாறையின் தமிழ் பிரதிநிதிதுவத்தை கேள்விக்குள்ளாக்கி, அதன் மூலம் கிடைத்த வாக்குகளை வைத்து தேசிய பட்டியல் ஆசனம் எடுத்த கஜனையா சொல்கிறீர்கள்🤣.

அவரை பெரிய கஜே அம்பாறைக்கு நேர்ந்து விட்டார். தேர்தலின் பின் சில தடவை தலைகறுப்பை காட்டினாராம்.

வாக்காளர்கள் வலை விரித்து தேடுகிறார்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nochchi said:

திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 
காணொளியெடுப்பவரது அண்மைய காணொளிகள் ஏறக்குறைய அநுரவிற்கான பரப்புரையாளர்போல உள்ளதும் நோக்கப்பட வேண்டியது. 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

அவர் ஆரம்பகால யாழ்ப்பாண யூடியூப்பர் , இவருக்குத்தான் அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸ்,  இவர் எதேச்சையாக ஒருதடவை அநுரவீட்டுக்குபோய் பிஸ்கட் தேத்தண்ணி எல்லாம் குடிச்சு வந்தார் , , அப்போது இவருக்கு தெரிந்திருக்கவில்லை இலங்கை முழுவதும் இவர் பிரபல்யமாகபோறார் எண்டு, சிங்கள செய்திதாள்கள், தொலைகாட்சியிலெல்லாம் இவர் அநுர வீட்டுக்கு போனதுபற்றி செய்தி வந்தது,

வீடியோ போட்டு அண்ணன் விடிய எழும்பி பார்த்தால் அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை, யாழ் யூடியூப்பர்ஸுக்கு  50 பேர் பார்வையிடுவதே பெரிய விஷயம், இவரின் அந்த வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர் , 6000 பேருக்குமேல் கருத்துக்கள் இட்டனர், அதில் முக்கால்வாசிபேர் சிங்களவர்

ஒரேநாளில் மேலதிகமாக 100k சப்ஸ்கிரைப்பர்ஸ் அவருக்கு கிடைத்தனர், அத்தோடு அவர் அகில இலங்கை சிங்கள விசிறியானார், உடல் மண்ணுக்கு உயிர் அநுரவுக்கு என்ற ரேஞ்சுக்கு போனார்.

வெளிநாட்டிலிருந்து எம்மவர் சிலர் இப்படி பண்ணாதீங்கோ எண்டுசொல்லியும்  மிரட்டியும் பார்த்தார்கள், தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று அவருக்கு போன் பண்ணினவர்களின் நம்பரையும் பொதுவெளியில் பகிர்ந்தார்.

இவர்போல இன்னுமொருத்தர் இருக்கார் அவருக்கு கடந்த ஒரு மாசமா அநுரவை தவிர வேற எதுவும் தெரியாது அவர் :

பிரச்சனை என்னவென்றால் பல இளைஞர்கள் இப்போது வேலை வெட்டியைவிட்டு யூடியூப்பே முழுநேர வேலையாக செய்கிறார்கள், பார்வையாளர்களின் எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள், மாசம் முடிய காசு வேணுமே.

அதனால் பரபரப்புக்காக என்ன என்னமோ எல்லாம் செய்து பார்த்தார்கள், என் உயிருக்கு ஆபத்து , இதுதான் எனது கடைசி காணொலி என்றெல்லாம் போட்டு எவராவது பாப்பாங்களா என்று அலைவார்கள், எத்தனைநாளுக்குத்தான் யாழ்ப்பாணத்தை சுற்றிக்காட்டுவது?

அவர்களுக்கு இப்போ கிடைத்த வரம் அநுர அலை அதைவைத்து பிழைப்பு ஓட்டுகிறார்கள், அவர்களுக்கு தேவை வருமானம்.

நிரந்தரவேலை, கல்வி, தொழில் முயற்சி என்று எதுவுமில்லாமல்  விடிய எழுந்தால் கமராவும் கையுமாக அலைகிறார்கள், திடீரென்று யூடியூப் வருமானம் ஒருநாள் நின்றுபோனால் வருஷங்களையும் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு முகட்டை பார்த்துக்கொண்டு முதுகை சொறிய வேண்டியதுதான்.

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, valavan said:

 திடீரென்று யூடியூப் வருமானம் ஒருநாள் நின்றுபோனால் வருஷங்களையும் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு முகட்டை பார்த்துக்கொண்டு முதுகை சொறிய வேண்டியதுதான்.

இது நிகழ சாத்தியமில்லை என நினைக்கிறேன். நாசா ரொக்கற் விட்ட விபரத்தையே "யூ ரியூபர் வந்து சொன்னால் தான் நம்புவேன்" என்று இருக்கும் தமிழ் புலம்பெயர் விசிறிகள் இருக்கும் போது எப்படி இந்த வியாபாரம் படுக்கும்?

(நாசா உதாரணம், ஏனெனில் நாசா பல ஆண்டுகளாகவே தன் செயல்பாடுகளை தனியாக இணையத் தளம் வைத்து பொது மக்களுக்கு மிகவும் சிறப்பாக பிரபலப் படுத்தி வருகிறது. அதை அறியாமல் யூ ரீயுபர்களின் பொய்களை நம்பி "அமெரிக்கா சந்திரனில் இறங்கவில்லை" என்று நம்புவோர் எம்மிடையே இருக்கிறார்கள்)  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

நாடகம்

ரணில் வீதியை திறக்காமல் தேர்தலுக்கு நாடகம் ஆடினார்,

அனுர வீதியை திறந்து தேர்தலுக்கு நாடகம் ஆடினார்,

சும், சும்மாவே திறக்கப்படப்போகும் வீதிக்கு ஓடி வந்து குரல் எழுப்பி தேர்தலுக்கு நாடகம் ஆடினார்,

ஆளுனர் தன் எசமானுக்காக, யுடியூப்பர் தன் வருவாய்க்கான நாடகம் ஆடினர்.

நாடகமோ, நாட்டியமோ, 

வீதி திறப்புக்கு சிறிதோ, பெரிதோ

ஆவன செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.

புலம்பெயர் தேசத்தில் இருந்து எதுவும் செய்யாமல் பல்லு குத்துபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவர்களுக்கு பட்டாசு கோஸ்டி என்று பேர்.  🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, valavan said:

அவர்களுக்கு இப்போ கிடைத்த வரம் அநுர அலை அதைவைத்து பிழைப்பு ஓட்டுகிறார்கள், அவர்களுக்கு தேவை வருமானம்.

வளவனவர்களே இணைப்புக்கும் கருத்துக்கும் நன்றி. சற்றுமுன் ஒரு காணொளி பார்த்தேன்.யாழிலும் இணைத்துள்ளேன். அதில் அந்தச் சகோதரி (32ஆவது நிமிடத்தில்) சொல்கின்ற விடயத்தை இதுபோன்ற யூரூப்பர்களது ஆழமான பார்வையற்ற பரப்புரைகள் செயற்படுத்திவிடுமோ என்று யோசிக்க வைக்கிறது. வீதியைத் திறந்துவிட்டு, உள்ளேயுள்ள படைமுகாமுக்கு அவன் வேலியைப்போடுவதை ஒரு யூரூப்பர்கூடக் கேட்கவில்லை. கதைக்கவில்லை. 
நட்பார்ந்து நன்றியுடன்
நொச்சி
 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.