Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல்

மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல்.

பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1407705

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல்

மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல்.

பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1407705

இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் ''''

எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...

 அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் ....

இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குப் போடுவதைவிட 

வேட்பாளர்கள் கூடுதலாக உள்ளதாலே இப்படி பார்க்கின்றனரோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, ஈழப்பிரியன் said:

வாக்குப் போடுவதைவிட 

வேட்பாளர்கள் கூடுதலாக உள்ளதாலே இப்படி பார்க்கின்றனரோ?

பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.