• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • உலகப்பொருளாதாராம் வேகமாக சரிந்து வருகின்றது. இந்த ஆண்டின் தாக்கம் பல ஆண்டுகளாக நீடிக்கும்.  பொருளாதார சரிவில் சிங்களமும் சிக்கிய ஆகும். வருமானம் இல்லாமல் திக்காடும். இவர்கள் வளர்க்கும் இரானுவமே இவர்களுக்கு எதிராக திரும்பலாம்.    
    • புத்திசாலித்தனமாகச் செயற்படுவதன் மூலமும் வைத்தியர்களின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலமும், நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெறலாமென்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை தொடர்பில், சுகாதார அமைச்சின் நல்வாழ்வுத்துறைத் திணைக்களம், விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுற்றுச்சூழல் வெப்பநிலையானது, சாதாரண நிலைமையை விட, இந்நாள்களில் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த அதிக வெப்பநிலை காரணமாகவும் அதனால் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், பொதுமக்கள் அவதானமான இருக்கவேண்டும். அதிக ஆபத்துள்ள பிரிவுகள்: சாதாரணமாக, உடலில் காணப்படும் வெப்பநிலையானது, வியர்ப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இருப்பினும், சுற்றுச்சூழல் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது, இந்தச் செயற்பாடு முறையாக இடம்பெறாது. இந்நாள்களில், இலங்கையின் சுற்றுச்சூழல் ஈரப்பதம், 95 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமானது, சிலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சிறுவர்கள், 4 வயதுக்குக் குறைந்த குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், பருமன் அதிகரித்தவர்கள், அதிக எடை கொண்டவர்கள், நோயாளிகள் ஆகியோர், இந்நாள்களில் கனவனமாக இருக்க வேண்டும். எவ்வாறு பாதுகாப்புப் பெறுவது? தற்போது நிலவும் அதிக வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறவேண்டுமாயின், வழமையை விட அதிகளவில் நீரைப் பருக வேண்டும். கடுமையான உடற்பயிற்சிகளின் போது பருக வேண்டிய நீலை விட அதிகளவில் பருக வேண்டும். அவ்வாறு உடற்பயிற்சியின் போது, மணித்தியாலத்துக்கு 2 முதல் 4 கிளாஸ் நீர் அருந்துவது சிறந்தது. இது, சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு கட்டாயம். சாதாரணமாக உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் உப்பின் அளவே, உடலுக்குப் போதுமானது. அனைத்துத் தரப்பு மக்களும், விசேடமாகச் சிறுவர்கள், தங்களது உடலால் தாங்கக்கூடிய அளவில் மாத்திரமே பணிகளை முன்னெடுக்க வேண்டும். உடற்பயிற்சிகளை, காலை அல்லது மாலை வேளைகளில் மாத்திரம் செய்யவும். இவ்வாறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுவோர், உடற்பயிற்சியின் இடைக்கிடையே, நிழலுள்ள இடங்களுக்குச் சென்று ஓய்வெடுப்பது அத்தியாவசியம். சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், வீட்டிலோ அல்லது மூடிய இடத்திலோ இருப்பது சிறந்தது. அல்லது, நிழல் உள்ள இடத்தில் இருப்பது உகந்தது. காற்றுப் பதனாக்கி (AC) உள்ள இடங்களில் இருப்பது சிறப்பு. மின்விசிறிகள் இருப்பினும் உகந்தது. குளிர்ந்த நீரில் குளிப்பது, உடல் வெப்பத்தைக் குறைக்கும். இளம் நிறங்களிலான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. உடலை முழு அளவில் மறைக்கும் ஆடைகளை அணிவது உகந்தது. உடலைச் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக, தொப்பியொன்றை அணிவதையோ அல்லது குடையொன்றைப் பயன்படுத்துவதையோ வழக்கமாகக் கொள்ளுங்கள். எதைச் செய்யக்கூடாது? இவ்வாறான வெப்பம் அதிகமாகக் காணப்படும் காலங்களில், பொதுமக்கள் செய்யக்கூடாத விடயங்கள் சில உள்ளன. சூடான உணவுகள், பாணங்கள், விசேடமாக சுடச்சுட தேநீர் அருந்தக் கூடாது. காற்றுப் புகாத அறைகள் அல்லது இடங்களில் இருக்கக் கூடாது. மதுபானம், அதிக குளிர்பாணங்கள், குளிரான சாப்பாடுகள், இனிப்புச் சுவை அதிகமான பானங்களை அருந்தக்கூடாது. பொதுமக்களுக்கு அவதானம் தேவை இந்நாள்களில், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும். ஒருவர் உடலை வருத்தி ஏதாவது செய்துகொண்டிருக்கும் போது, அவருக்கு உடல் சோர்வு, நெஞ்சில் படபடப்பு, மூச்செடுப்பதற்குச் சிரமப்படுதல் போன்ற விளைவுகளை எதிர்நோக்கினால், உடனடியாக அவர் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு, நிழலான இடத்துக்கோ அல்லது குளிர்மையான இடத்துக்கு அவரை அழைத்துச் செல்லுங்கள். அவரை ஓய்வெடுக்கச் செய்யுங்கள். அதேபோன்று தலைப் பாரம் அல்லது தலைச்சுற்று போன்று ஏற்படுவதாயின், அதை அருகில் இருப்பவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். சூரிய வெப்பத்தால், உடலின் தோல் சிவப்பாக வாய்ப்புள்ளது. இதனால், அரிப்பு ஏற்படக்கூடும். சில வேளைகளில், சூட்டுக் காயங்கள் அல்லது கொப்புளங்களும் ஏற்படலாம். சன் கிரீம் மூலம், இதைக் குறைத்துக்கொள்ளலாம். தோல் அல்லது கழுத்து, நெஞ்சு, மார்புப் பகுதிகளில் அரிப்பு ஏற்படலாம். குளிர்மையான இடங்களில் இருப்பதாலும் உடலைக் குளிர்மையாக வைத்திருப்பதாலும், இவ்வாறான சிக்கல்களிலிருந்து விடுபடாலாம். அதிக வெப்பம் காரணமாக, சிறுவர்களுக்கு எரி காயங்கள் ஏற்படக்கூடும். அதனால், வைத்தியரொருவரிம் அவர்களைக் காண்பித்தது சிறந்தது. தசைப் பிடிப்புகள், இக்காலங்களில் அதிகளவில் ஏற்படக்கூடும். இதன்போது, உப்பு, சீனி கலந்த பானங்கள் பருகுவதோடு, ஓய்வாக இருப்பது சிறப்பு. ஒரு மணித்தியாலத்துக்குள் நிலைமை வழமைக்குத் திரும்பாவிடின், வைத்தியரை நாடுவது சிறந்தது. வெப்ப பக்கவாதம் (heat strokes) அதிக வெப்பம் காரணமாக, சிலருக்கு வெப்ப பக்கவாதம் (heat strokes) ஏற்படக்கூடும். உடலால் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமற்போனால், அது, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யக்கூடும். இதனால், வெப்ப பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் இந்நோய் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. விசேட அவதானமிக்க தரப்பைச் சேர்ந்த நபர்கள், தற்போது நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலையால், மிகவும் பாதுகாப்புப் பெறவேண்டும். சிறுவர்கள், 4 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இந்த வெப்பநிலை மாற்றத்தை அதிகளவில் உணர்திறன் கொண்டிருக்கிறார்கள். இதனால், தங்களது உடல் வெப்பத்தைச் சீராக வைத்திருக்க, மற்றவர்களைச் சார்ந்திருப்பார்கள். இதேவேளை, உடல் பருமன் அதிகமானோரால், தங்களுடைய தோலுக்குக் கீழுள்ள எண்ணெய்ப் படிவத்தால், உடல் வெப்பத்தைக் குறைத்துக்கொள்ள முடியாது. அதனால், இலகுவான ஆடைகளை அணிந்து, குளிர்மையான இடங்களில் இருப்பதும், சிறுவர்களுக்கும் இலகுவான ஆடைகளை அணிவித்து, அவர்களையும் குளிர்மையான இடத்தில் வைப்பதும் சிறந்தது. அத்துடன், சிறுவர்களுக்கு அடிக்கடி நீராகாரங்கள், நீர் என்பவற்றைப் பருக்கச் செய்வதோடு, சூடான உணவுகள், பானங்களை அவர்களுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அதிக-வெப்பத்தால்-வெப்ப-பக்கவாதம்-ஏற்படலாம்-அவதானமாக-செயற்படவும்/150-246161
    • எம்.சி.சி ஒப்பந்தத்தை இன்று கைசாத்திட்டாலும்  தான் மகிழ்ச்சியடைவேன் எனத் தெரிவிக்கும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அந்த ஒப்பந்தத்தால் ஒரு மாத்திரை அளவுக்கூட இலங்கையின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதெனவும் தெரிவித்தார். மாத்தறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவில் கடன் சலுகை கோரியதால் வேறு  எந்த நாடும் இலங்கைக்கு சிறிய வட்டிக்கு கடன் தர முன்வராத நிலைமை காணப்படுவதாகவும்,  இதுவரை இலங்கையிலுள்ள எந்தவொரு நிதி அமைச்சரும் வெ ளிநாடுகளிடம் அவ்வாறதொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.  அதேபோல் மறுதிசையில்,   அரச ஊழியர்கள் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயால் நல்லாட்சி அரசாங்கம் அதிகரித்ததென தெரிவித்த அவர்,  கடந்த ஜனாதிபதி தேர்தலில் வரிசையாகச் சென்று புதிய அரசாங்கத்துக்கு வாக்களித்த ஆசிரியர்களை அடித்து விரட்டும் நிலைக்கும் அரசாங்கம் ஆளாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.  அதேபோல் நல்லாட்சி அரசாங்கம் ,எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் அவசியமாக நிதியை ஒதுக்கீடு செய்தே இடைக்கால கணக்கு அறிக்கையை சமர்பித்திருந்தாகவும் தெரிவித்த அவர், புதிய அரசாங்கம் மக்களை ஏமாற்றும் வகையிலான வரிச்சலுகைகளை அறிவித்து அரசாங்கத்திடம் நிதி இல்லை என்கிறது என்றும் சாடினார்.  எவ்வாறாயினும் பொய்களை மாத்திரமே கூறி ஆட்சியை கைபற்றிய அரசாங்கத்துக்கு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலைமையில் வரும் அடக்குமுறையே பிரயோகிக்கபடுமென தெரிவித்த அவர், முதல் தடவையாக ராஜபக்‌ஷர்கள் பிறந்த பூமியிலேயே உள்நாட்டு கிரிக்கெட்  ரசிகர்களும் அடித்து விரப்பட்டபடுகிறார்கள் என்றார்.  அத்தோடு, இன்று வீதிப்போக்குவரத்தை சீர்படுத்தும் நோக்கில் அதனை முப்டையினரை களமிறக்கியுள்ளதாக தெரிவித்த அவர், எம்.சி.சி ஒப்பந்தம் மூலம் நாட்டின் போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே கைசாத்திடப்பட இருந்தாகவும் தெரிவித்தார்.  எவ்வாறாயினும், எம்.சி.சி ஒப்பந்தத்தை கைசாத்திட்டால் இன்றும் தான் மகிழ்ச்சியடைவேன் எனத் தெரிவித்த அவர், அதனால் ஒரு மாத்திரை அளவுக்கூட இலங்கையின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதெனவும் தெரிவித்தார்.  http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/எம-ச-சயல-மததர-அளவககட-பதபப-வரத/150-246200
    • 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.  ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 2002ம் ஆண்டுமுதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு படைக்கு உதவும் வகையில் 14 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட காலமாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வரவும், தனது வீரர்களை வாபஸ் பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். இதையடுத்து, தலிபான்கள்- அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் சுமுக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் இருந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா - தலிபான்கள் இடையே கத்தார் நாட்டின் தோஹாவில் இன்று மாலை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த உடன்படிக்கை மூலம், ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும். ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா கலந்து கொள்கிறார். முன்னதாக காபூல் சென்ற அவர், ஆப்கனில் அமைதி மற்றும் ஸ்திரமான நிலை ஏற்படுவதற்கு இந்தியாவின் பரிபூரண ஆதரவை தெரிவித்தார். ஆப்கன் வெளியுறவு அமைச்சரை சந்தித்த அவர், அமெரிக்கா-தலிபான் இடையிலான அமைதி உடன்படிக்கை குறித்த இந்தியாவின் கண்ணோட்டம், ஆப்கானிஸ்தான் வளர்ச்சி பெற இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆப்கானிஸ்தானில் அமைதி, நல்லிணக்கம் ஏற்படுவதில் முக்கிய பங்காற்றி வரும் இந்தியா, அந்த நாட்டில் பல்வேறு மறுசீரமைப்புத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆப்கனின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தையே இந்தியா தான் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/102023/அமெரிக்கா--தாலிபான்-இடையேஇன்று-அமைதி-ஒப்பந்தம்கையெழுத்து...-முடிவுக்குவரும்-18-ஆண்டு-போர்