• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • சரகேப்பை சிரிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றவில்லை – ரஷ்ய இராணுவம்! .   by : Jeyachandran Vithushan சிரியாவின் முக்கிய நகரமான சரகேப்பை சிரிய கிளர்ச்சியாளர்கள் அரசாங்கப் படைகளிடமிருந்து மீண்டும் கைப்பற்றியதாக வெளியான செய்திகளை ரஷ்ய ராணுவம் மறுத்துள்ளது. ரஷ்ய இராணுவத்தை மேற்கோளிட்டு ரஷ்ய ஊடகம் ஒன்று இன்று (வியாழக்கிழமை) செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரஷ்ய ஆதரவு தாக்குதலில் சிரிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சரகேப்பை அவர்கள் மீண்டும் கைப்பற்றினர் என துருக்கிய இராணுவத்தால் ஆதரிக்கப்படும் சிரிய கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தது. எவ்வாறாயினும், ரஷ்ய இராணுவ தகவல்கள், அந்த நிகழ்வுகளை நிராகரித்ததுடன், சராகேப் மீதான கிளர்ச்சி தாக்குதலை சிரியாவின் அரசப் படைகள் வெற்றிகரமாக முறியடித்ததாகவும் கூறினார். http://athavannews.com/russian-military-source-denies-syrian-rebels-took-town-of-saraqeb-news-agencies/
    • கனடா நாடாளுமன்றில் இலங்கை குறித்த விடயம்: பிரதமர் ட்ரூடோ கருத்து! இலங்கையின் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பாக கனடா நாடாளுமன்றில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பதிலளித்துள்ளார். இது தொடர்பாக, கென்சர்வேற்றிவ் உறுப்பினர் கார்னெற்  ஜீனஸ் (Garnett Genuis) சபையில் கேள்வியொன்றை முன்வைத்தார். “இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கடந்த ஜூன் மாதம் பொதுச் சபையானது ஏகமனதாகத் தீர்மானித்தது. ஆகவே நான் பிரதமரைக் கேட்க விரும்புகிறேன், குறித்த சர்வதேச விசாரணை தொடர்பாக இதுவரை ஏதாவது முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளதா? அமெரிக்காவினால் இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள தடையில் கனடாவும் பங்கெடுக்குமா? என்று கேட்டார்.       .   இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, “நாங்கள் மனித உரிமைகளை நிலைநாட்டத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றோம். அது இலங்கையாகவோ அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் வலியுறுத்துவோம். அதற்காகவே கடந்த 2019ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் தொடர்பான பிரேரணையினை கனடா கொண்டு வந்து, மனித உரிமைகள் தொடர்பான கடமைக்கு இணங்கியது. நாங்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகளை கடுமையாக எதிர்க்கிறோம். இது இறையாண்மையின் அழிவுக்கு உதவுகிறது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் நாங்கள் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/கனடா-நாடாளுமன்றில்-இலங்க/  
    • இந்தியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கைப் பிரதமர்     by : Dhackshala ஜப்பானில் கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலிலிருந்த இரு இலங்கையர்ளையும் வெளியேற்றியதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு, ஜப்பான் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த இலங்கை உட்பட ஏனைய ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலமாக இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இடம்பெறும் வைத்திய பரிசோதனைகளின் பின்னர், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காவிட்டால், அவர்கள் இருவரும் 14 நாட்களின் பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து நன்றி தெரிவித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், ‘இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த இரண்டு இலங்கையர்களும் டோக்கியோவிலிருந்து வெளியேறி பாதுகாப்பாக டெல்லிக்கு வந்துள்ளதாக அறிவித்தார். இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான எயார் இந்தியாவின் மூலம் அவர்களை அழைத்து வந்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்’ என அந்த அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/இந்தியப்-பிரதமருக்கு-நன்/
    • ஐ.நா. பிரேரணையில் இருந்து இலங்கை விலகியதற்கு இராமதாஸ் கடும் கண்டனம்!     by : Krushnamoorthy Dushanthini போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா. பிரேரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகியுள்ளமை தொடர்பாக பா.ம.க நிறுவனர் இராமதாஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் இடம்பெற்ற போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த பன்னாட்டு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அறிவித்திருக்கிறது. போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கதாகும். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன,  இலங்கை, போருக்குப் பிறகு அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்த ராஜபக்ஷ  தலைமையிலான அரசாங்கம் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார். ஆனால் ஈழப் போர் முடிந்து 11 ஆண்டுகள் ஆகியும் ஈழத்தில் தமிழர்கள் அச்சமின்றி வாழும் நிலை ஏற்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மையாகும். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ள பல புள்ளிவிவரங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதி செய்கின்றன. ஈழப்போர் முடிந்து இரு ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தும் கூட இன்னும் ஈழத்தமிழர்கள் முழுமையாக அவர்கள் முன்பு வாழ்ந்த பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. ஈழத் தமிழர்களின் நிலங்கள் அவர்களிடம் முழுமையாக திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவத்தினர்  இன்று வரை வெளியேற்றப்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்களை தினேஷ் குணவர்தன ஒப்புக்கொண்டுள்ளார். ஈழப்போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவர்களின் உறவினர்களுக்கும் இப்போதுள்ள ஒரே ஆறுதல் இலங்கை போர்க்குற்ற விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் உறுதியாக இருப்பதுதான்” எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஐ-நா-பிரேரணையில்-இருந்து-2/
    • இலங்கையின் PUBG மொபைல் போட்டித் தொடருக்கு மொபிடெல் அனுசரணை     இலங்கையில் Esportsஐ ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் முன்னணி இணைய இணைப்புச் சேவைகளை வழங்கும் மொபிடெல், Gamer.LK உடன் இணைந்து இலங்கையின் மாபெரும் மொபைல் லீச் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் பிரபல்யம் பெற்ற PUBG மொபைல் விளையாட்டுப் போட்டித் தொடருக்கு இவ்வாறு மொபிடெல் அனுசரணை வழங்குகின்றது.   இலங்கைக்கு இந்தப் போட்டியின் விறுவிறுப்பைக் கொண்டு வரும் வகையில், மொபிடெல் Esports பிரீமியர் லீக் போட்டித் தொடரில், நாட்டின் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் தலா ஒரு அணி வீதம் பங்கேற்கும். போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் 2020 பெப்ரவரி 8 ஆம் திகதி முதல் இடம்பெற்றன. மாபெரும் இறுதிப் போட்டி பெப்ரவரி 22ஆம் திகதி இரத்மலானை, ஸ்டெய்ன் ஸ்டூடியோ அரங்கில் இடம்பெற்றது. இதில் 9 அணிகளான ஈஸ்டர்ன் கிளாடியேட்டர்ஸ், கந்துரட்ட கிங்ஸ், நோதர்ன் ரேஞ்ஜர்ஸ், ரஜரட்ட ஜயன்ட்ஸ், சப்ரகமுவ நைட்ஸ், சதர்ன் ஷார்க்ஸ், ஊவா பென்டிட்ஸ், வயம்ப ரெய்டர்ஸ் மற்றும் வெஸ்டர்ன் வொரியர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் பரிசுக்காக போட்டியிட்டன.  இந்த மாபெரும் Esports போட்டித்தொடரின் பரிசுத் தொகையாக ரூ. 1,000,000 வழங்கப்பட்டது. தற்போது இந்தப் போட்டியில் பங்கேற்க 300க்கும் அதிகமான அணிகள் முன்வந்திருந்தன. இலங்கையின் Esportsஐ பொறுத்தமட்டில், ஒரு போட்டித்தொடரில் பங்கேற்ற ஆகக்கூடிய அணிகளாக இது அமைந்துள்ளது. மொபிடெலின் மேம்படுத்தப்பட்ட 4G இணைப்புத்திறன் ஊடாக வலுவூட்டப்பட்டுள்ளதுடன், Facebook, YouTube, Twitch, Mixer ஊடாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இதை கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இலங்கையில் Esports ஐ ஊக்குவிப்பது மற்றும் மெருகேற்றுவதில் Gamer.LK முன்னிலையில் திகழ்வதுடன், பெருமளவு ரசிகர்களை கவர்ந்திருந்த இலங்கையின் மாபெரும் Esports நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தது. தேசிய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Esports தெற்காசிய கோப்பை போன்ற சர்வதேச Esports நிகழ்வுகளையும் Gamer.LK ஏற்பாடு செய்துள்ளது.    http://www.tamilmirror.lk/வணிகம்/இலங்கையின்-PUBG-மொபைல்-போட்டித்-தொடருக்கு-மொபிடெல்-அனுசரணை/47-246100