சரவணபவனைத் தெரிந்திருந்தால் இது ஒரு பெரிய விடயமாகத்தெரிந்திருக்காது
சப்ரா இப்படிச் செய்யாமல் இருத்தால்தான் நாங்கள் அதிர்ச்சி அடைய வேண்டும். ஒரே ஊரான் என்றவகையில் இவனையிட்டு வெக்கப்படுகிறேன்
மலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூடி இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தையும் விளையாட்டுத்துறையில் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன.
இந்த சாதனைகளை ஆண்கள் மாத்திரமே தனக்கென சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் மலையக பெண்களும் சலைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு புஸ்ஸல்லாவ கட்டுகித்துலை பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவை சேர்ந்த சின்னகருப்பன் பவாணிஸ்ரீ என்ற சிங்க பெண் தற்போது நேபாளத்தில் நடந்து முடிந்த 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கத்தி சண்டையில் பங்குபற்றி வெங்கல பதக்கத்தை வென்று வெற்றியை தனதாக்கி கொண்டார்.
இது இலங்கைக்கும் குறிப்பாக மலையகத்திற்கும் மலையக பெண்களுக்கும் பெருமையை தேடிக் கொடுத்து உள்ளது
புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்டம் என்பது மலையகத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பிரசேத்தில் இருந்து இந்த சாதனையை நிலை நாட்டியமை பெருமையிலும் பெருமை, சாதனையிலும் சாதனை என்று தான் சொல்ல முடியும்.
சின்னகருப்பன் பவாணிஸ்ரீ தனது ஆரம்ப கல்வியை பெரட்டாசி தோட்டம் மேமொழி தமிழ் வித்தியாலயத்திலும் தொடர்ந்து அயரி பிரிவில் அமைந்திருக்கும் அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் சாதாரணதரம் வரை கல்வி பயின்று உள்ளார். தொடர்ந்து வறுமை காரணமாக கல்வியை நிறுத்திவிட்டு தொழிலுக்கு சென்றுள்ளார். தாய் ஏ.தனலெட்சுமி தந்தை எம். சின்னக்கருப்பன் இருவரும் தோட்ட தொழிலாளிகள் தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருக்கின்றனர்.
சின்னகருப்பன் பவாணிஸ்ரீ தற்போது கண்டி பல்லேகலையில் அமைந்திருக்கும் லீனியா என்று அழைக்கப்படும் பிரபல ஆடைதொழிற்சாலையில் தொழில் புரிந்து வருகின்றார். இந்த ஆடைத் தொழிற்சாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆசிரி விஜேசிங்க தலைமையில் எல்.எப்.சீ (LFC) விளையாட்டு கழகம் ஒன்று நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றது.
இந்த விளையாட்டு கழகம் மூலம் நேபாளத்தில் இம்முறை நடைபெற்ற 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் இந்த பெண்மணியுடன் 23 பேர் கலந்துக் கொண்டனர்.
இதன் போதே சின்னகருப்பன் பவாணிஸ்ரீ கத்தி சண்டை போட்டியில் கலந்துக் கொண்டு வெங்கல பதக்கம் வென்றுள்ளார்.
இவருடன் சென்ற அனைவரும் பதக்கங்கள் வென்று நாடு திரும்பி உள்ள அதேவேளை மலையக பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சின்னகருப்பன் பவாணிஸ்ரீ வெற்றி பெற்றமை சாதனைக்குறியதே.
https://www.virakesari.lk/article/71006
ஆறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் உலகிற்கு வந்த சிமோன், அந்தத் துறையில் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை.
சிமோன் பைல்ஸ்... எங்கேயோ கேட்ட பெயர் போல் உள்ளதா... 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில், ஆர்டிஸ்ட்டிக் ஜிம்னாஸ்டிக்ஸின் `வால்ட்' பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை தீபா கர்மாகர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். தீபா, நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டபோது, வெள்ளி வென்ற மரியா பஸேகாவை விட 0.713 புள்ளிகள் அதிகம் பெற்று தங்கத்தை வென்றவரே சிமோன் பைல்ஸ்.
அதே ஒலிம்பிக் போட்டியில், தன்னுடைய 19 வயதிலேயே 4 தங்கம், 1 வெண்கலம் வென்ற இவருக்கு, நிறைவு விழாவின்போது அமெரிக்க நாட்டு கொடியை ஏந்தும் வாய்ப்பும் கிடைத்தது. அன்று அனைவரையும் அசத்திய அந்த இளம் வீராங்கனை, இன்று அமெரிக்காவின் அடையாளமாக நிற்கிறார்.
சிமோனுடன் சேர்த்து நான்கு குழந்தைகளைப் பெற்ற அவரது தாயால், அவர்களை முறையாக வளர்க்க முடியாமல் போய்விட்டது. அமெரிக்காவின் `ஃபாஸ்டர் கேர்' கட்டமைப்புக்குள் சிமோன் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, சிமோனையும் அவரது தங்கையையும் ஒரு தாத்தாவும் பாட்டியும் தத்தெடுத்து வளர்த்தனர். ஆறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் உலகிற்கு வந்த சிமோன், அந்தத் துறையில் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை.
5 முறை உலக சாம்பியன் பட்டம், மொத்தமாக 25 தங்கப்பதக்கங்கள், 2015 மற்றும் 2019-ல் `அமெரிக்காவின் சிறந்த ஒலிம்பிக் வீராங்கனை' பட்டம் எனப் பல்வேறு சாதனைகளைப் படைத்த சிமோன், மீண்டும் மீண்டும் தன்னுடைய சாதனைகளையே முறியடித்துக்கொண்டிருக்கிறார் . பல நேரங்களில் ஜிம்னாஸ்டிக்ஸில் 0.1 மற்றும் 0.01 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும். அப்படிப்பட்ட விளையாட்டில், கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பின் ஆல்ரவுண்ட் பிரிவில், 2.1 புள்ளிகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றார் சிமோன்.
ஜிம்னாஸ்டிக்ஸில் ஏற்கெனவே இருக்கும் வல்லமை பெற்றிருக்கும் வீரர்கள், தாங்களாகவே உருவாக்கிய திறன்களைப் போட்டிகளில் செய்து காட்டியபின், அதற்கான மதிப்பீடு புள்ளிகளைப் பெற, சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் களகத்துக்கு அனுப்பப்படுவர். அந்தத் திறன்களும் புதிதாக சேர்க்கப்பட்டு, அந்தந்த வீரர்களின் பெயரில் அழைக்கப்படும். அப்படி சிமோன் பைல்ஸ் தன் பெயரில், தரை பயிற்சியில் 2 திறன், (பைல்ஸ், பைல்ஸ் II ), வால்ட் பிரிவில் ஒரு திறன், பேலன்ஸ் பீமில் ஒரு திறன் எனப் பல்வேறு திறன்களை வைத்துள்ளார்.
இத்தனை திறன்களைத் தன் பெயரில் பொறித்து வைத்திருக்கும் சிமோன், ``என்னைப் பொறுத்தவரை என் பெயரில் வெற்றிகளைப் பெறுவதே எனக்கு உற்சாகம் அளிக்கிறது. களத்திற்குச் சென்று என்னால் புதிய திறன்களை எத்தகைய அழுத்தத்திலும் செய்துகாட்ட முடியும். இப்படி நிரூபித்துக் காட்டுவது எனக்குப் பெரும் உந்துதலாக உள்ளது" என்கிறார்.
2018-ம் ஆண்டு, தோஹாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது, நுரையீரல் பிரச்னையால் அவதிப்பட்டபோதும் 4 தங்கம், 1 வெண்கலம் வென்றார் சிமோன். அவர் களத்தில் மட்டும் வீராங்கனையல்ல. தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைத் தைரியமாக உலகிற்குச் சொல்லி மற்ற பெண்களையும் மனம்திறக்கவைத்தவர்.
லேரி நாஸர் என்ற விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவர், தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக வெளியுலகிற்குச் சொன்னார். இவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் குற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைப் பற்றி பேசிய சிமோன், ``நாங்கள் அவர்களை (அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் கழகம்) எப்படி நம்ப முடியும்? எப்போதும் புது ஆள்களைக் கொண்டுவருகிறார்கள். பல வருடங்களாக எனக்குத் தெரிந்தவர்களே என்னை ஏமாற்றியதால், புது ஆள்களைக் கொண்டுவரும்போது என்னைச் சுற்றி சுவர்களை எழுப்பிக் கொள்கிறேன். எங்களால் செய்ய முடிந்தது, அவர்கள் எங்களை ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்புவது மட்டுமே. ஆனால், அந்த நம்பிக்கையும் ஒரு `டைம் பாம்'தான். காத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.
2016-ல் தன் வாழ்க்கை வரலாற்றை `கவரேஜ் டு சோர்' என்ற தலைப்பில் 'மிசேல் பர்ல்போர்ட்' என்ற பத்திரிகையாளருடன் சேர்ந்து எழுதினார். இந்தப் புத்தகம், அதிகம் விற்பனையானது. 2020 ஒலிம்பிக் தான் பங்கேற்கப் போகும் கடைசி போட்டி என்று அறிவித்துள்ளார் சிமோன். தங்க மங்கையாகவே ஓய்வுபெற வாழ்த்துகள்!
https://sports.vikatan.com/sports-news/gymnast-simone-biles-ready-to-rock-in-2020-olympics