Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!

தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!(வெளிச்சம்: 022)

— அழகு குணசீலன் —

 தமிழ்த்தேசிய அரசியல் வடக்கில் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ், வன்னி மாவட்டங்களில்  தமிழரசு(2), காங்கிரஸ் (1), ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு(1), இணைந்து  நான்கு ஆசனங்களை பெற்றுள்ளன. கிழக்கில். இதற்கு மாறாக மக்கள் பெரும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். தமிழரசு மட்டும் தனித்து ஐந்து ஆசனங்கள். இந்த முடிவு தமிழ்த்தேசிய அரசியலின் காப்பாளர்கள் யார்? என்ற கேள்வியை எழுப்புகிறது.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளை பாருங்கள். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பழம்பெரும் தமிழரசுக்கட்சி வரலாற்றில் முதல் தடவையாக தென்னிலங்கை கட்சி ஒன்றினால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. என்.பி.பி. அளிக்கப்பட்ட வாக்குகளில் வெறும் 25 வீதத்தை பெற்று ஆறு ஆசனங்களில் 50 வீதமான மூன்று ஆசனங்களை பெற்றிருக்கிறது. 

 அளிக்கப்பட்ட 60 வீதமான வாக்குகளில் அரைவாசிக்கும் குறைவாகவே என்.பி.பி பெற்ற வாக்குகள் உள்ளன.ஆனால் தமிழரசுக்கட்சி (19.5) , அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (8.6), சுயேட்சை குழு 17 (8.6) வீத வாக்குகளை பெற்று மிகுதி மூன்று ஆசனங்களில் தலா ஒரு ஆசனத்தை பெற்றுள்ளன. இந்த மூன்றும் பெற்ற வாக்குகள் 36.7 வீதம். இத்துடன் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு (சங்கு) பெற்ற (6.9) வாக்குகளையும் சேர்த்தால் இது 43. 6 வீதம்.  விகிதாசார தேர்தல் முறை சார்ந்த போனஸ் ஆசன ஒதுக்கீட்டின்  அரசியல் சட்ட இருட்டறை.

  யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் நோக்கினால் என்.பி.பி. பெற்ற 80, 830 வாக்குகளோடு  ஒப்பிடுகையில் மற்றைய மூன்று ஆசனங்களையும்,  ஆசனமற்ற சங்கு பெற்ற வாக்குகளும் சுமார் 1, 40,000க்கும் அதிகமானவை.  இந்த அடிப்படையில் நோக்கும்போது மக்கள் தமிழ்த்தேசிய அரசியலை , உரிமைக்கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள் என்று நாட்டில் வீசிய என்.பி.பி. அலையின் தாக்கத்தினால் ஏற்பட்ட இந்த விளைவைக்கொண்டு சொல்ல முடியாது. ஏனெனில் கிழக்கில் மக்கள் தமிழ்த்தேசியத்தை காப்பாற்றியிருக்கிறார்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை கட்சி ஒன்று இந்த வெற்றியை பெறுவதற்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்பட்ட பின்னடைவு ஒரு முக்கியமான காரணம். அதேவேளை இணக்க அரசியல், அபிவிருத்தி பேசிய ஈ.பி.டி.பி, அங்கயன் அணி, மற்றும் தென்னிலங்கை கட்சிகளையும் அவர்கள் தமிழ்த்தேசிய கட்சிகளை விடவும் மிக மோசமாக நிராகரித்துள்ளனர், என்பதும் மறுப்பதற்கில்லை.

தமிழரசுக்கட்சியின் கோரிக்கையின் பேரில் சஜீத் பிரேமதாசவுக்கும், ஈ.பி.டி.பி.யின் கோரிக்கையின் பேரில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் கொள்கை அடிப்படையிலானதல்ல என்பதையும் இந்த முடிவு காட்டுகிறது. என்.பி.பி.யின்  தேர்தல் கால நடவடிக்கைகளும், வாக்குறுதிகளும் நீண்ட காலமாக  தமிழ்த்தேசிய, மற்றும் இணக்க மற்றைய தென்னிலங்கை கட்சிகளின் மீதான நம்பிக்கையை  இழக்கச்செய்து  புதிய ஒரு வாய்ப்பை என்.பி.பி. க்கு வழங்கிப்பார்க்க  முன்வந்ததன் ஒரு விளைவு. எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய கட்சிகள் இழந்த நம்பிக்கையை எப்படி மீளப்பெறப்போகின்றன என்பதும், வழங்கிய வாக்குறுதிகளை என்.பி.பி. எவ்வாறு காப்பாற்றப்போகிறது என்பதுமே யாழ்ப்பாணத்தில் இந்த கட்சிகளின் இருப்பை தீர்மானிப்பதாக அமையும். ஆனால் யாழ். தமிழ்த்தேசிய கோட்டைக்குள் என்.பி.பி. நடாத்தியிருக்கின்ற இந்த ஊடுருவல் தாக்குதல்  தமிழ்த்தேசிய அரசியலின் தற்காலிக நிராகரிப்பு என்று கொண்டாலும் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த்தேசிய அரசியல் மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சி சுமார் 30,000 வாக்குகளையும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சுமார் 21,000 வாக்குகளையும் பெற்று தலா ஒரு கதிரையை பிடித்துள்ளன. ஆறு ஆசனங்களில் என்.பி.பி.  இரண்டு, ஐக்கிய மக்கள் சக்தி ஒன்று, சிறிலங்கா தொழிற்கட்சி ஒன்று என மற்றைய நான்கு ஆசனங்களையும் பெற்றுள்ளன. இறுதி யுத்தத்தினால்  அதிகம் பாதிக்கப்பட்ட வன்னி நிர்வாக மாவட்டங்களான மன்னார், வவுனியா, முல்லைத்தீவில் இது தமிழ்த்தேசிய அரசியல் தோல்வியாக தோன்றினும் இங்கு வன்னியின் சிங்கள, முஸ்லீம், மலையக மக்களின் வாக்காளர் பங்களிப்பு இந்த தேசிய கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவானது சகல எதிர்பார்ப்புக்களையும் நிராகரித்து தமிழ்த்தேசிய அரசியல் நிலைப்பாட்டிற்கு மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறார்களா ?  என்ற கேள்வியை எழுப்புவதாக உள்ளது. பிறந்த வீட்டில் தோற்ற தமிழரசு வளர்ந்த வீட்டில் வெற்றி பெற்றுள்ளது.  98,975(33.8) வாக்குகளை வழங்கி மூன்று ஆசனங்களுக்கு  வழிவகுத்ததன் மூலம் இலங்கையின் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும்  என்.பி.பி. வகித்த முதன்மை நிலையை மக்கள் தமிழரசுக்கட்சிக்கு வழங்கி சாதனை படைத்திருக்கிறார்கள். 

இந்த சாதனையும், என்.பி.பி.யின் புதுவரவும், கவர்ச்சியும் ரி.எம்.வி.பி. யின் ஆசன இழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. என்.பி.பி. தமிழ்த்தேசிய அரசியல் மீதான வெறுப்பை  வடக்கு கிழக்கில் அறுவடை செய்துள்ள நிலையில், மட்டக்களப்பில் அது சாத்தியப்படவில்லை. ஆனால் ஊழலுக்கு எதிராகவும், ரணில் -ராஜபக்ச ஆட்சியின் பங்காளராகவும்  மட்டக்களப்பில் என்.பி.பி பிள்ளையானை 55,498 (19.3) வாக்குகளை பெற்று தோல்வியடையச்செய்துள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளில் ரி.எம்.வி.பி. சுமார் 50 வீதத்திற்கும் அதிகமாக இழந்து 31, 286(10.9) வாக்குகளை மட்டுமே பெற்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தனியாக மட்டக்களப்பு மாவட்டத்தை மட்டும் முதன்மைப்படுத்திய ரி.எம்.வி.பி.க்கு எதிர்காலம் குறித்த ஒரு பெரும் சவாலாக இது இருக்கப்போகிறது. என்.பி.பி, தமிழரசுக்கட்சி அலைக்கு மத்தியிலும் முஸ்லீம் காங்கிரஸ் 40,139 (14.0)  வாக்குகளை பெற்று தனது பிரதிநித்துவத்தை காப்பாற்ற முடிந்துள்ளது.

திருகோணமலையில் என்.பி.பி., எஸ்.ஜே.வி. யினால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழரசுக்கட்சி 34,168 (17.0)  வாக்குகளை பெற்று ஒரு இடத்தை பெற்றுள்ளது.  எனினும் இது கடந்த தேர்தலிலும்  மூன்றாவது இடத்தில் சம்பந்தர் தலைமையில் பெற்ற வாக்குகளை விடவும் (39,570 /18.5 %) சுமார் 5,000 வாக்குகள் குறைவானது. அதுவும் சங்கு அணியுடன் போட்டி தவிர்ப்பு செய்து ஓரணியில் போட்டியிட்டதனாலேயே  திருகோணமலையில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டுள்ளது. இல்லையேல் இது சாத்தியப் பட்டிருக்கவாய்ப்பில்லை. 

அம்பாறையில் வீடும், சங்கும் தனித்து போட்டியிட்ட போதும் தமிழரசுக்கட்சி 33,632 (9.27) வாக்குகளை பெற்று வெற்றி அடைந்துள்ளது அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு ஒரு நற்செய்தி. சங்கு, படகு, கார் , சைக்கிள் வீணை போன்றவை அங்கு போட்டியிட்ட போதும்  தமிழரசுக்கட்சியின் வெற்றியை அவற்றால் தடுக்க முடியவில்லை. இவை தேசிய பட்டியல் வாக்குச் சேகரிப்பை இலக்காகக்கொண்டே போட்டியிட்டன. தமிழரசுக்கட்சி  கடந்த தேர்தலில் இழந்த பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் தமிழரசு, கருணா தரப்பு போட்டி பலமாக இருந்ததால்  தமிழர் வாக்குகள் ஏற்க்குறைய சமமாக பிரிக்கப்பட்ட  நிலையில் வெற்றி பெறமுடியவில்லை.  இம்முறையும் தமிழ் வாக்காளர்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் தமிழரசு பெற்ற வாக்குகள் குறைவானவையே. காஸ் சிலிண்டர் 33,544 (9.24) வாக்குகளை பெற்றுள்ளது. ஆக, 80 வாக்குகளே தமிழரசுக்கட்சியின் வெற்றியை தீர்மானித்துள்ளன. இல்லையேல் 2020 கதையே 2024 கதையாகவும் இருந்திருக்கும்.

மொத்தத்தில் என்.பி.பி. அலையில் தமிழ்த்தேசிய அரசியல் அள்ளுண்டு போய்விட்டது என்று சொல்லுவதற்கு இந்த தேர்தல் முடிவுகள் மட்டும் போதுமானவை அல்ல. என்.பி.பி.யின் எதிர்கால செயற்பாடும்,வாக்குறுதிகளும், இனப்பிரச்சினைக்கான தீர்வு அணுகுமுறைகளுமே அதனை தீர்மானிப்பதாக அமையும். ஒப்பீட்டளவில்  பிராந்திய, சிறிய முஸ்லீம் கட்சிகளை விடவும்  குறிப்பாக அம்பாறையில் அதாவுலாலாவின் மக்கள் காங்கிரஸ் (மயில்) 33, 911(9.34) வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.  இந்த நிலையில் ஈ.பி.டி.பி, ரி.எம்.வி.பி. என்பனவற்றால்  அதனை சாதிக்க முடியவில்லை. 

தேசிய பட்டியல் கணிப்பீடு  தமிழரசுக்கட்சிக்கு ஒரு ஆசனத்தை ஒதுக்கியுள்ளது. தமிழரசு வடக்கு கிழக்கில் பெற்ற ஏழு ஆசனங்கள் இத்துடன் எட்டாகியுள்ளது . இதில் மூன்று மட்டக்களப்பு (3),  அம்பாறை(1), திருகோணமலை (1) ,  ஐந்து ஆசனங்கள். பாராளுமன்ற குழுவில் கிழக்குமாகாண உறுப்பினர்களே அதிகம் 5+2=7 ( 7:5)  

தமிழரசுகட்சிக்கு வடக்கு கிழக்கில் கிடைத்த மொத்த வாக்குகள் 2,57,000.

இதில் வடக்கில் 93,000. மட்டக்களப்பில் மட்டும் தமிழரசு பெற்ற 96,975 வாக்குகளையும் விடவும் இவை குறைவானவை. மொத்தமாக கிழக்கில் தமிழரசு 1,62, 000 வாக்குகளை பெற்றுள்ளது.  வடக்கு தமிழர்கள் அநுர அலையில் அள்ளுண்டு போன நிலையில் தமிழ்த்தேசிய அரசியலின் காவலர்களாக கிழக்கு தமிழ் மக்களே உள்ளனர். 

இந்த நிலையில்…….!

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவி கிழக்கிற்கு – சாணக்கியனுக்கு வழங்கப்படுமா…?

தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியலுக்கு காரணம் கிழக்கு மக்கள் அந்த ஆசனம் கிழக்கிற்கே வழங்கப்படுமா? 

தமிழரசுக்கட்சிக்கு கிழக்கு தலைமை தாங்குமா ….?

இந்த கேள்விக்கான பதிலே என்.பி.பி. பேசிய மாற்றத்திற்கான அரசியலை நெல்லுக்கிறைத்த நீராய் புல்லுக்கும் அங்கு புசியச்செய்யும்.
 
https://arangamnews.com/?p=11439

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, கிருபன் said:

தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியலுக்கு காரணம் கிழக்கு மக்கள் அந்த ஆசனம் கிழக்கிற்கே வழங்கப்படுமா?

இல்லை, சுமந்திரனுக்கு கிடைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிழக்கில் கருணாவுக்கும்  பிள்ளையானுக்கும் மட்டுமே துரோகிப்பட்டம் கொடுத்தார்கள். தற்போது வடக்கில் எத்தனை ஆயிரம்,.....? 

🤨

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிழக்கு மீண்டும் தன்னை   யார் என நிரூபித்து காட்டி இருக்கின்றது.
மீண்டுமொரு தோல்வி யாழ்ப்பாண அரசியல்வாதிகளுக்கு மட்டுமே. தமிழர்களுக்கு அல்ல.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Kapithan said:

கிழக்கில் கருணாவுக்கும்  பிள்ளையானுக்கும் மட்டுமே துரோகிப்பட்டம் கொடுத்தார்கள். தற்போது வடக்கில் எத்தனை ஆயிரம்,.....? 

2009இல் பலமாக நின்று பேசும் தகுதியை இழந்து போனோம். 2024இல் சுயத்தையே இழக்கத் தயாரகி விட்டோம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kavi arunasalam said:

2009இல் பலமாக நின்று பேசும் தகுதியை இழந்து போனோம். 2024இல் சுயத்தையே இழக்கத் தயாரகி விட்டோம். 

கோபம்தான் வருகிறது. ஆனாலும் மக்கள் தங்கள் உணர்வை ஒருபோதும் இழக்கப்போவதில்லை.

அது திரும்பவும் மிளிரும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kapithan said:

கோபம்தான் வருகிறது. ஆனாலும் மக்கள் தங்கள் உணர்வை ஒருபோதும் இழக்கப்போவதில்லை.

அது திரும்பவும் மிளிரும். 

உணர்வா? எது தமிழ் தேசியமா அல்லது வேறேதும் உணர்வா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, MEERA said:

உணர்வா? எது தமிழ் தேசியமா அல்லது வேறேதும் உணர்வா?

தமிழ்த் தேசியர்களுக்கு தமிழ்த் தேசியம். பிறருக்கு அது குற்ற உணர்வாக இருக்கலாம் அல்லது பாலியல் உணர்வாக இருக்கலாம் அல்லது தாழ்வுச்சிக்கல் உணர்வாக இருக்கலாம்,......இப்படி உணர்வுகள் பல வகை,.😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Kapithan said:

தமிழ்த் தேசியர்களுக்கு தமிழ்த் தேசியம். பிறருக்கு அது குற்ற உணர்வாக இருக்கலாம் அல்லது பாலியல் உணர்வாக இருக்கலாம் அல்லது தாழ்வுச்சிக்கல் உணர்வாக இருக்கலாம்,......இப்படி உணர்வுகள் பல வகை,.😁

தாயக தமிழர்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டாச்சு என்று எழுதிய நீங்கள் இன்று அந்தர் பல்டி அடித்தது ஏனோ? 🤣🤣🤣

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, குமாரசாமி said:

மீண்டுமொரு தோல்வி யாழ்ப்பாண அரசியல்வாதிகளுக்கு மட்டுமே. தமிழர்களுக்கு அல்ல

அரசியல் வாதிகளைத் தெரிவுசெய்தவர்கள் தமிழர்கள்தானே?  அரசியல்வாதிகள் தோல்வி என்றால் தெரிவு செய்தவர்களும் தோல்விதானே சகோ.( A=B, B=C :. A=C) 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென் தமிழீழ மக்கள் தலைவர் வழியில் நின்று வரலாற்றைப் புதுப்பித்திருக்கிறார்கள். வட தமிழீழ மக்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அவ்வளவுதான். எனவே தேசக் கோட்பாட்டுக்கு ஒரு பங்கமும் இல்லை. யாரும் பதட்டப்பட வேண்டாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலே உள்ளபடத்தில் தவறு உள்ளது  கவகச்சேரி ஊர்காவல்துறை கிளிநொச்சி முலைதீவில் சிங்கள கட்சியால் வெற்றிபெற முடியவில்லை.

8 hours ago, Kavi arunasalam said:

2024இல் சுயத்தையே இழக்கத் தயாரகி விட்டோம். 

ஓம் 😒

37 minutes ago, நந்தி said:

அரசியல் வாதிகளைத் தெரிவுசெய்தவர்கள் தமிழர்கள்தானே?  அரசியல்வாதிகள் தோல்வி என்றால் தெரிவு செய்தவர்களும் தோல்விதானே சகோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, MEERA said:

தாயக தமிழர்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டாச்சு என்று எழுதிய நீங்கள் இன்று அந்தர் பல்டி அடித்தது ஏனோ? 🤣🤣🤣

அது ஒரு மனக்கவலையில் எழுதி இருப்பார்.. உண்மையில் தமிழ்தேசியத்தை எதிர்க்கும் யாரும் தமிழ்தேசியத்தை எதிர்ப்பதில்லை.. அதை தவறானவர்கள் கையாள்வதையே எதிர்க்கிறார்கள்.. சிலர் அதை வெளிப்படுத்தும் விதத்தில் தமிழ்தேசியத்தையே எதிர்ப்பதுபோல் எழுதிவிடுகிறார்கள் பிழையானவர்கள் மேல் உள்ள கோபத்தில்.. சாதி, தீண்டாமை பிரதேசவேறுபாடுகள் இல்லாதவர்கள் தமிழ்தேசியத்துக்கு தலைமை ஏற்று இருந்தால் யார் எதிர்க்கபோகிறார்கள்.. பிரச்சினை தமிழ்தேசியம் அல்ல அது சிக்கிஉள்ள தவறானகைகள்.. அந்த கைகளிடம் இருந்து மீட்கும் வேலையை யாராவது செய்வார்கள் என்று பலநாள் காத்திருந்தோம்.. ஊரில் அதை மக்களே ஆரம்பித்திவிட்டார்கள் இந்த தேர்தலுடன்.. புலத்திலும் ஏதாவது மாற்றம் நிகழாமலா போகும்..? காலம் ஒரு காட்டாறு.. அதன் போக்கில் எல்லாத்தையும் அடித்துக்கொண்டுபோய்விடும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, MEERA said:

தாயக தமிழர்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டாச்சு என்று எழுதிய நீங்கள் இன்று அந்தர் பல்டி அடித்தது ஏனோ? 🤣🤣🤣

தமிழ்த் தேசியம் என்பது உங்கள் வீட்டுச்  சீர்தனம் அல்ல, அதற்கு நீங்களும் விசுகரும் மட்டும் சொந்தங் கொண்டாடுவதற்கு. 

(உங்கள் இத்தனை குழப்பங்களுக்கும் உங்கள் சிந்தனை,  கிரகிக்கும் குறைபாடுதான்  காரணம் என்று இப்போதுதான் புரிகிறது. )

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kapithan said:

தமிழ்த் தேசியம் என்பது உங்கள் வீட்டுச்  சீர்தனம் அல்ல, அதற்கு நீங்களும் விசுகரும் மட்டும் சொந்தங் கொண்டாடுவதற்கு. 

(உங்கள் இத்தனை குழப்பங்களுக்கும் உங்கள் சிந்தனை,  கிரகிக்கும் குறைபாடுதான்  காரணம் என்று இப்போதுதான் புரிகிறது. )

கோவண கப்பிதனுக்கு சிந்தனைக் குறைபாடு உள்ளது என்பது ஏற்கனவே தெரியும்.

இங்கு யார் கொண்டாடினார்கள்? உங்களால் ஒன்றும் புடுங்க முடியாது..🤣

சும்மும் தமிழ் தேசியத்தை வைத்து வியாபரம் செய்யட்டும் என கூறிய தாங்கள் இன்று உரிமைப் பிரச்சனையில் நிக்கிறியள்…

Edited by MEERA
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அது ஒரு மனக்கவலையில் எழுதி இருப்பார்.. உண்மையில் தமிழ்தேசியத்தை எதிர்க்கும் யாரும் தமிழ்தேசியத்தை எதிர்ப்பதில்லை.. அதை தவறானவர்கள் கையாள்வதையே எதிர்க்கிறார்கள்.. சிலர் அதை வெளிப்படுத்தும் விதத்தில் தமிழ்தேசியத்தையே எதிர்ப்பதுபோல் எழுதிவிடுகிறார்கள் பிழையானவர்கள் மேல் உள்ள கோபத்தில்.. சாதி, தீண்டாமை பிரதேசவேறுபாடுகள் இல்லாதவர்கள் தமிழ்தேசியத்துக்கு தலைமை ஏற்று இருந்தால் யார் எதிர்க்கபோகிறார்கள்.. பிரச்சினை தமிழ்தேசியம் அல்ல அது சிக்கிஉள்ள தவறானகைகள்.. அந்த கைகளிடம் இருந்து மீட்கும் வேலையை யாராவது செய்வார்கள் என்று பலநாள் காத்திருந்தோம்.. ஊரில் அதை மக்களே ஆரம்பித்திவிட்டார்கள் இந்த தேர்தலுடன்.. புலத்திலும் ஏதாவது மாற்றம் நிகழாமலா போகும்..? காலம் ஒரு காட்டாறு.. அதன் போக்கில் எல்லாத்தையும் அடித்துக்கொண்டுபோய்விடும்..

ஓணாண்டியர் உங்களுக்கு கோவண்ணா கபிதனின் நிலை விளங்கவில்லை. சும் தமிழ் தேசியம் என்றால் இவரும் தமிழ் தேசியம் என்பார்  இல்லை என்றால் இவரும் இல்லை என்பார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, நந்தி said:

அரசியல் வாதிகளைத் தெரிவுசெய்தவர்கள் தமிழர்கள்தானே?  அரசியல்வாதிகள் தோல்வி என்றால் தெரிவு செய்தவர்களும் தோல்விதானே சகோ.( A=B, B=C :. A=C) 

70 வருடமாக ஒற்றைக்காலில் நின்ற ஈழத்தமிழர்கள்  இந்த முறை  வழி மாறி விட்டார்கள் என நான் நினைக்க மாட்டேன் சகோதரம்.
இது ஒரு தேசிய அரசியல்வாதிகளுக்கு மட்டுமான எச்சரிக்கை மட்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, MEERA said:

கோவண கப்பிதனுக்கு சிந்தனைக் குறைபாடு உள்ளது என்பது ஏற்கனவே தெரியும்.

இங்கு யார் கொண்டாடினார்கள்? உங்களால் ஒன்றும் புடுங்க முடியாது..🤣

சும்மும் தமிழ் தேசியத்தை வைத்து வியாபரம் செய்யட்டும் என கூறிய தாங்கள் இன்று உரிமைப் பிரச்சனையில் நிக்கிறியள்…

இப்போதும் கூறுகிறேன், தமிழ்த் தேசியத்தை வைத்து நீங்கள் மட்டும்தான் வியாபாரம் செய்யலாமா? சுமந்திரனும் கொஞ்சம் செய்யட்டுமே. 

உங்கள் சாதி சமய வெறி எங்கே தமிழரை நிறுத்தி வைத்துள்ளது என்பதை உற்றுப் பாருங்கள். 😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அது ஒரு மனக்கவலையில் எழுதி இருப்பார்.. உண்மையில் தமிழ்தேசியத்தை எதிர்க்கும் யாரும் தமிழ்தேசியத்தை எதிர்ப்பதில்லை.. அதை தவறானவர்கள் கையாள்வதையே எதிர்க்கிறார்கள்.. சிலர் அதை வெளிப்படுத்தும் விதத்தில் தமிழ்தேசியத்தையே எதிர்ப்பதுபோல் எழுதிவிடுகிறார்கள் பிழையானவர்கள் மேல் உள்ள கோபத்தில்.. சாதி, தீண்டாமை பிரதேசவேறுபாடுகள் இல்லாதவர்கள் தமிழ்தேசியத்துக்கு தலைமை ஏற்று இருந்தால் யார் எதிர்க்கபோகிறார்கள்.. பிரச்சினை தமிழ்தேசியம் அல்ல அது சிக்கிஉள்ள தவறானகைகள்.. அந்த கைகளிடம் இருந்து மீட்கும் வேலையை யாராவது செய்வார்கள் என்று பலநாள் காத்திருந்தோம்.. ஊரில் அதை மக்களே ஆரம்பித்திவிட்டார்கள் இந்த தேர்தலுடன்.. புலத்திலும் ஏதாவது மாற்றம் நிகழாமலா போகும்..? காலம் ஒரு காட்டாறு.. அதன் போக்கில் எல்லாத்தையும் அடித்துக்கொண்டுபோய்விடும்..

நான் ஒருபோதும் தாயகம் தமிழ்த் தேடியத்தைக் கைவிட்டுவிட்டதாகக் கருதியதில்லை. அது தமிழரின் இரத்தத்துடன் கலந்தது.  விபு க்களுக்கு எதிரானவர்கள் கூட இதை மறுக்க மாட்டார்கள்.

மீரா எங்காவது ஒரு  கருத்தாடலின் இடையே உள்ள ஒரு வசனத்தைக் கையிலெடுத்து அதை  பிதற்றுகிறார். 

அவரது கொள்ளளவு அம்புட்டுதே. 

கவனமாகப் பாருங்கள்,. இங்கே யாழ் களத்தில் கூட சுமந்திரனை வைத்துத்தான் வியாபாரம் நடக்கிறது கடந்த பல மாதங்களாக. 

இந்த தேர்தலில் எமக்கு ஏற்பட்ட நீண்டகாலப் பாதிப்புக்களைப் பற்றி ஒருவருக்கும் கவலையில்லை. 

தேர்தலுக்கு முன்னர், சுமந்திரன் தேர்தலில் வெல்வாரா? தேர்தலின் பின்னர்  சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வாரா என்பதுதான் பேச்சு. 

ஒருவருக்கும் தங்கள் தவறுகளையிட்டு வெட்டமில்லை. 

வெட்கம் கெட்டவர்கள். 

1 hour ago, MEERA said:

ஓணாண்டியர் உங்களுக்கு கோவண்ணா கபிதனின் நிலை விளங்கவில்லை. சும் தமிழ் தேசியம் என்றால் இவரும் தமிழ் தேசியம் என்பார்  இல்லை என்றால் இவரும் இல்லை என்பார்.

நான்  என்ன உங்களைப் போன்று மறவன் புலவின் சிஸ்யனா சொந்தப் புத்தி இல்லாமல் இன்னொருவனைப் பின்பற்ற,? 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Kapithan said:

கவனமாகப் பாருங்கள்,. இங்கே யாழ் களத்தில் கூட சுமந்திரனை வைத்துத்தான் வியாபாரம் நடக்கிறது கடந்த பல மாதங்களாக.

என்னாது? 

Vadivelu Shocked GIF - Vadivelu Shocked Winner - Discover ...

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kapithan said:

இப்போதும் கூறுகிறேன், தமிழ்த் தேசியத்தை வைத்து நீங்கள் மட்டும்தான் வியாபாரம் செய்யலாமா? சுமந்திரனும் கொஞ்சம் செய்யட்டுமே. 

உங்கள் சாதி சமய வெறி எங்கே தமிழரை நிறுத்தி வைத்துள்ளது என்பதை உற்றுப் பாருங்கள். 😏

கோவண்ணா கபிதன், இவ்வளவும் நடந்தமைக்கு காரணம் சும்…

இது கூட உங்களுக்கு புரியவில்லை… 

கிறீஸ்தவர்கள் கூட சும்மை கைவிட்டார்கள்….. உங்கள் சாதி சமய வெறி சும்மை அரசியலில் இருந்து ஓரங்கட்டியுள்ளது.

9 hours ago, Kapithan said:

நான் ஒருபோதும் தாயகம் தமிழ்த் தேடியத்தைக் கைவிட்டுவிட்டதாகக் கருதியதில்லை. அது தமிழரின் இரத்தத்துடன் கலந்தது.  விபு க்களுக்கு எதிரானவர்கள் கூட இதை மறுக்க மாட்டார்கள்.

மீரா எங்காவது ஒரு  கருத்தாடலின் இடையே உள்ள ஒரு வசனத்தைக் கையிலெடுத்து அதை  பிதற்றுகிறார். 

அவரது கொள்ளளவு அம்புட்டுதே. 

கவனமாகப் பாருங்கள்,. இங்கே யாழ் களத்தில் கூட சுமந்திரனை வைத்துத்தான் வியாபாரம் நடக்கிறது கடந்த பல மாதங்களாக. 

இந்த தேர்தலில் எமக்கு ஏற்பட்ட நீண்டகாலப் பாதிப்புக்களைப் பற்றி ஒருவருக்கும் கவலையில்லை. 

தேர்தலுக்கு முன்னர், சுமந்திரன் தேர்தலில் வெல்வாரா? தேர்தலின் பின்னர்  சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வாரா என்பதுதான் பேச்சு. 

ஒருவருக்கும் தங்கள் தவறுகளையிட்டு வெட்டமில்லை. 

வெட்கம் கெட்டவர்கள். 

நான்  என்ன உங்களைப் போன்று மறவன் புலவின் சிஸ்யனா சொந்தப் புத்தி இல்லாமல் இன்னொருவனைப் பின்பற்ற,? 😁

ஆம் சும்மிற்கு வாக்களிக்காத தமிழ் கிறீஸ்தவர்கள் எல்லாம் உங்கள் பார்வையில் வெங்கம் கெட்டவர்கள்…

சச்சியின் (எதிர்வு கூறும்)அறிவுகூட உங்கள் ஒருவருக்கும் இல்லை…

  • கருத்துக்கள உறவுகள்
Posted

466557745_122138482646374225_54178750949

20 hours ago, விளங்க நினைப்பவன் said:

மேலே உள்ளபடத்தில் தவறு உள்ளது  கவகச்சேரி ஊர்காவல்துறை கிளிநொச்சி முலைதீவில் சிங்கள கட்சியால் வெற்றிபெற முடியவில்லை.

467480944_4008796686071225_1148248082394

இப்ப சரியா....

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, MEERA said:

கோவண்ணா கபிதன், இவ்வளவும் நடந்தமைக்கு காரணம் சும்…

இது கூட உங்களுக்கு புரியவில்லை… 

கிறீஸ்தவர்கள் கூட சும்மை கைவிட்டார்கள்….. உங்கள் சாதி சமய வெறி சும்மை அரசியலில் இருந்து ஓரங்கட்டியுள்ளது.

ஆம் சும்மிற்கு வாக்களிக்காத தமிழ் கிறீஸ்தவர்கள் எல்லாம் உங்கள் பார்வையில் வெங்கம் கெட்டவர்கள்…

சச்சியின் (எதிர்வு கூறும்)அறிவுகூட உங்கள் ஒருவருக்கும் இல்லை…

தாங்கள் முதியோர் பாடசாலைக்குப் போவது நன்று மீரா.

உங்கள் சாதி சமய வெறி இங்கே யாழ் களம் முழுமையாக அறிந்த ஒன்று. இதனை தாங்கள் மறுக்க முயன்றால் தாங்கள் கட்டியிருக்கும் வேட்டியைக் உருவி தங்கள் முகத்தை மூடுவதாக அர்த்தப்படும். 

🤣

Edited by Kapithan

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.