Jump to content

இறுதித்தோட்டா உனக்குத்தான்டா..


Recommended Posts

மெதுவாகப் பேசலாம்...

அரசியல் பேசினால்..

அடுத்த அறைச்சுவரும்

கேட்குமாம்..ஏன்..

நமக்கு வம்பு...

மௌனிகளாயிருப்போம்...

யாரங்கே..

பேசவே பயப்படும் பேடிகள்..

இவர்கள்.. என்ற உண்மைகளை

சத்தமாய்.. உள்ளே

உறைப்பது..

வேறென்ன் செய்ய..

சத்தமாய் பேசிவிட்டால்..

கூட இருப்பவன்தான்..

குழி பறிக்கிறான் என்பது..

மரணத்தருவாயில்

மனதறியும்..

தமிழன் காப்பியங்களிலும்..

இலக்கியங்களிலும்தான்..

உயர்வாகப் பேசப்பட்டிருக்கிறான்..

இன்றோ இழிநிலை நோக்கியல்லவா

நடக்கிறான்...

ஒப்பற்ற வீரன்..

தலைவனாய்க் கிடைத்தும்..

உருப்படத் தெரியாமல்..

கஞ்சாக்கும் காசுக்கும்..

சோரம் போன துரோகிகள் பாதி

பதவிக்கும் பட்டத்திற்கும்

பல்லிளித்த பாவிகள் பாதி..

சின்ன சின்ன

கோபங்களை மனதிலேற்றி

தமிழினத்தின் உயிர்குடிக்கும்..

மடையர் பாதி..

ஐயோ உயிர் உயிராய் போகுதே..

மழலை மொட்டுகள் கருகுதே..

சகோதரி உடல் கிழித்து

சீரழியுதே..

தம்பி சடலம் மட்டும் வீடு வருகுதே..

சிரித்து வந்த ஆசான் தலை சிதறிக் கிடக்குதே..

ஊரெல்லாம் எரிய

உறவெல்லாம் சிதற..

வாழ்வைப் பறிகொடுத்துவிட்டோமே..

உணரமாட்டாயாடா..

இன்னுமா எதிரிக்கு

வால் பிடிக்கிறாய்..

அவன் இறுதித்தோட்டா துளைக்கப்போவது

உன்னைத்தான் என்று

இன்னு ம் புரியவில்லையாடா..

எல்லா.. பாவங்களையும் விட்டெறி...

உன் சகோதரனிடம்

மன்னிப்புக் கேள்..

உன் தாய்க்காக இறுதி யுத்தத்திற்கு வாடா..

இனி நீ துரோகி அல்ல..

இனி நீ பாவி அல்ல..

இனி நீ வீரனாவாய்..உன் பாவங்கள் கழுவப்படும்..

உன் தாய் உன்னை மன்னிப்பாய்..

உன் சகோதரங்கள் மன்னிப்பார்கள்..

இறுதி சந்தர்ப்பம்

நண்பா வாடா..

அண்ணா வாடா...

தம்பி வாடா..

மனதார மன்னிப்புக்கேள்..

தலைவனுக்காய் போராடு..

எட்டப்பன் என்றில்லாமல்

வீரன் என்று உன் பெயர்

தமிழ் ஈழக் காவியத்தில் ஏறும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி யாரைக் கூப்பிடுகிறீர்கள்?

தாயை சிதைக்க எதிரிக்கு வழி சொல்லும் ஈனரையா?

தவறு செய்யாதவர்கள் என்று யாரும் இல்லைத்தான் ஆனால் தெரிந்தும் தப்பே செய்பவர்கள் திருந்துவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

பச்சைக் குழந்தை முதல் பழுத்த கிழம்வரை எம்மினத்தின் உயிர் குடிக்கும் பகைவர்களின் காலை நக்கிப் பிழைக்கிறார்களே அவர்களை எதற்கு அழைக்கிறீர்கள்?

சராசரி மனிதாபிமானம் கூட அற்ற பிறப்புகளை அழைக்காதீர்கள். அதுகள் எக்கேடு கெட்டேனும் போகட்டும்.

Link to comment
Share on other sites

தமிழினத்தின் ஒரு சாபக்கேடு இந்த துரோகிகள் அவர்களை சாடினீர் உம் கவிதையில்

சாவின் விளிம்பில் எம் இனம் அவர் நிலை மாறும் தலைவர் வழி சொல்லுவோம்.

Link to comment
Share on other sites

எனக்கும் சொலைவெறிதான் அவங்க மேல..

யதார்த்தமா உண்யை யோசித்தால்..

ஒருவன் தப்பு பண்ணியவன்.. நீதியால்.. குடும்பத்தால்.. சுற்றத்தால்..விரட்டப்படுகிறா

Link to comment
Share on other sites

மனதார மன்னிப்புக்கேள்..

தலைவனுக்காய் போராடு..

எட்டப்பன் என்றில்லாமல்

வீரன் என்று உன் பெயர்

தமிழ் ஈழக் காவியத்தில் ஏறும்..

மாமா தங்களின் ஆதங்கத்தை கவிதையில் வெளிபடுத்திய விதம் அழகு :) வாழ்த்துகள்,ஆனாலும் இவர்களை மன்னித்து பக்கத்த்தில் வைத்து கொள்வது ஆபத்தில்லையா :) எந்த நேரத்தில் மறுபடியும் மாறுவார்கள் என்று நாம் அறியோம் அல்லவா :( !!பேபிக்கு தெரிந்ததை சொன்னேன் மாமா.... :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யாரை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்கமுடியாது என்று ஜம்மு சொல்லிட்டா..

.முடிஞ்சது முடிஞ்சு போச்சு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.