Jump to content

வேர்கள்


Recommended Posts

seyalveerar.jpg

மலர்களின் அழகில் களித்திருப்போம்

வேர்களின் வலிகள் புரிவதில்லை

மரங்களின் நிழலில் குளித்திருப்போம்

வேர்களின் தியாகம் புரிவதில்லை

மண்ணுக்குள்ளே அவை புதைந்திருக்கும்

எங்களின் கண்ணுக்குத் தெரிவதில்லை

- - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ஒவ்வொரு முறையும்

உங்கள் மரணத்தின் போது

நான் மெளனித்துப் போகிறேன்

கூனிக் குறுகித் தலை குனிந்து!

Link to comment
Share on other sites

ஒளியாய் எழுந்தார்கள்…

செவ்வானத்தை கிழித்து எழும்

எம் தேசத்தின்

சூரியப்புதல்வர்கள்

நேற்று சிரித்த எம்

தேசத்தின் செல்வங்கள்

இன்று விதையாய்

மண்ணின் மடியில்….

நாளை எம் இனம் விடும்

நிம்மதிப் பெருமூச்சு

நீங்கள் நேற்று விட்ட

உயிர் மூச்சு

ஒருவனாய் உலாவி

ஒரு சேனையாய்

விரிந்து

எதிரிகளை

எதிர்கொணடீர்கள்

வருடங்கள் பலவாய்

உடலை வருத்தி

பயிற்சிகள் எடுத்து

சிறந்தவனாய்

புறப்படும் முன் நீங்கள்

உதிர்க்கும்

புன்னகையில்

எம் தேசத்தின்

விடியல் தெரிகின்றது

கூடவே

குற்ற உணர்வு

என்னை கொல்கின்றது

கல்லிதயமும் கரையும்

உங்கள்

கடசிப்புன்னகைதான்

இந்த பிறப்பில் என்னால்

இறுதி வரை

விளங்க முடியாத

உன்னதம்

எம் தேசத்தில்

கதிரவன்

கண்ணீரும் குருதியும்

கலந்த குளத்தில் இருந்து

எழுகின்றது

நீங்கள் சூரியப்புதல்வர்கள்

விடிவிற்க வந்தவர்கள்

மாலையில் சூரியன்

மறைவது போல்

இன்று இரவு நீங்கள்..

நாளை மீண்டும் வருவீர்கள்

உறுதியாய்…

புதிய வீரர்களாய்…

காலம் உள்ளவரை

எம் தேசம் உள்ளவரை

ஒளியாய்

காவலனாய்

ஒவ்வொரு நாளும் கதிரவனாய்

உங்களில் கண்விழிப்போம்

கண் கலங்கி

வணங்குவோம்

எம் தேசத்தின்

திசைபார்த்து

தலை வணங்குகின்றோம்

தலைவனுக்கு துணையாய்

நின்று

உங்களுக்கு

அகவணக்கம் செலுத்தும்

தகுதியை பெறுவேன்

Link to comment
Share on other sites

மலர்களின் அழகில் களித்திருப்போம்

வேர்களின் வலிகள் புரிவதில்லை

மரங்களின் நிழலில் குளித்திருப்போம்

வேர்களின் தியாகம் புரிவதில்லை

மண்ணுக்குள்ளே அவை புதைந்திருக்கும்

எங்களின் கண்ணுக்குத் தெரிவதில்லை

அருமையான வரிகள் இந்த வரிகளில் பல கேள்விகள் இறுதியில் கண்ணுக்குள் தெரிவதில்லை என்று கவிதை முடிந்தாலும் பலருக்கு தெரிந்தும் தெரியாதவர்கள் போல் இருப்பது தான் வேதனையிலும் வேதனை!! :)

அத்துடன் சுகன் அண்ணாவின் கவிவரிகளும் உணர்வுபூர்வமாக உள்ளது!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'வேர்"

ஆறு வரிகளில் அழகாக, ஆழமாக முகவரி காட்டியுள்ளது.

சுகனின் கவி வரிகளும் வேர்களைப் போற்றி அமைந்திருக்கிறது.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இளைஞன் சுகன் இருவரின் கவிதையும் மிகவும் உணர்வு பூர்மானதாக உள்ளது. பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.