Jump to content

கோழையாக நீ!


Recommended Posts

aloneaq1.jpg

பணத்திற்காய் சீதனச் சந்தையில்

உனது வாழ்க்கையை

பொருளுக்காய் விற்கும்

ஆண் ஜாதியே- நாம்

உனக்காய் குரல் கொடுக்கவா?

இந்த கோழைகளுக்காக குரல் கொடுப்போம்

சீதனம் என்னும் கொடிய அரக்கனை கொன்றொழித்திடுவோம்...

பெண்ணே விழித்தெழு!

பேரம் பேசி தனது வாழ்க்கையை

விற்கும் நிலையில் இந்த ஆண்மகனா?

அவமானம்..... அவமானம்....

கேவலம் கேவலம் உன் நிலை கேவலம்

பணத்திற்காய் விலைபோகிறவள் விபச்சாரி

பணத்திற்காய் வாழ்க்கையை விற்பவன்

நீ மட்டும் எந்த வர்க்கம்?

நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட

நாங்கள் பொம்மைகள் அல்ல -நாங்கள்

மானமுள்ள, உணர்வுகொண்ட மாதர்கள்

பணம் செலுத்தி,பல் இளித்து

பஞ்சனை நாங்கள் தேடவில்லை

மானம் உள்ள ,எங்களுக்கேற்ற மகராஜனைத் தேடுகின்றோம்...

Link to comment
Share on other sites

இனியவள், கவிதை நன்றாக இருக்கின்றது. இப்போது பெரிதாக ஆக்கள் சீதனம் வாங்குவதாக தெரியவில்லை. குடுப்பதற்கு ஆக்கள் இருக்கும்போது வாங்கிவதற்கும் ஆக்கள் இருப்பீனம் தானே? முக்கியமாக வெளிநாடுகளில் சீதனம் வாங்குவதில்லை என்று நினைக்கின்றேன்.

மற்றது, டொக்டராக இருப்பவர்கள் எப்போதும் சீதனம் வாங்கித்தான் கலியாணம் செய்கின்றார்கள் நான் அறிந்த அளவில். அவர்கள் வாங்காவிட்டாலும், டொக்டர் மாப்பிள்ளை என்று அறிந்ததும் சனம் விழுந்தடித்து லட்சக்கணக்கில் சீதனம், வீடு, நகை, அது, இது எண்டு கொடுத்து மாப்பிள்ளையை விலைக்கு வாங்கிதுகள். இதுகள் ஒருபோதும் திருந்தப் போவதில்லை.

Link to comment
Share on other sites

சத்தியமா ஒங்கொப்பரான இனியவள் தங்கச்சி.. இஞ்ச பாருங்கோ.. சீதனம்.. கொடுக்கிறது க்கும் வாங்கிறதுக்கும் பெரும்பால பெண்கள்தான் காரணம்...

மகளுக்கு கொடுக்காட்டி பெத்தமகளுக்கு சீதனமா அஞ்சு காசு கொடுக்கமுடியலை நீ ஒரு அப்பனா என்பாங்க...

உனக்கு ரெண்டு சகோதரி இருக்கினம் அவைக்காக வாங்கணும் எண்டுவாங்க...

வாங்கினாத்தான் ஆம்பிளைக்கு கௌரவம்.. இல்லைன்னா பெடிக்கு ஏதோ பிரச்சினை இருக்கு எண்டுவாங்க...

எல்லாத்தையும் விட... சீதனப்பேரில்.. எப்பயாச்சும் மாமானார் கொடுமை எண்டு வந்திருக்கா மாமியார் கொடுமை எண்டுதான் வந்திருக்கு... மாமனார் பெண்ணில இரக்கப்பட்டு உதவி செய்யிற மாமாஸ்தான் கூடம்மா...

பெண்ணுக்குத்தான் எதிரி...

எது என்னவாக இருந்தாலும்.. பெண் வீட்ல காசு வாங்கி விலை போறது கேவலமான செயல்.. அந்த செயலுக்கு விளக்கம் சொல்லுற ஆண்... நல்ல கணவனா இருக்க மாட்டான்.. வியாபாரியாத்தான் இருப்பான்.. பெண்களே.. சீதனம் வாங்கிறவனை கட்டமாட்டேன்னு சபதம் எடுங்கோ...

ஆண்களே.. சீதனம் வாங்கினிங்க அத சொல்லிக்காட்டியே பெண்ணுங்க உங்க நிம்மதியை அழிச்சுடுவாங்க கஸ்டமெண்டாலும் உங்க சம்பாத்ய்த்தில வாழ்ந்தா நிம்மதி.. சீதனம் வாங்காம கட்டுங்க சந்தோசமா இருப்பீங்க..

Link to comment
Share on other sites

வணக்கம் இனியவள் உங்கள் கவிதையின் கரு மிகவும் சிறப்பானது. கலைஞன் கூறியது போல புலம் பெயர் நாடுகளில் உள்ள இளைஞர்கள் மத்தியில் சீதனம் வாங்குவது இல்லை என்கின்ற கருத்து பெருகியுள்ளது. ஆண்கள் சீதனம் வாங்கவில்லை என்றாலும் அந்த ஆண்மகனுக்கு ஏதோ குற்றம் உள்ளது அதுதான் அவர் சீதனம் வாங்கவில்லை என்கின்ற கருத்தும் எம் சமூகத்தில் உண்டு :lol: . . சீதனம் என்கின்ற அசுரனை அழிக்க ஆண்களை மட்டும் குறை சொல்வதில் பயன் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து :unsure: எந்த பெண்களாவது சீதனம் இல்லாத கணவன் எனத்தேடுகின்றார்களா. வைத்தியர் பொறியியளார் கேள்வி கூடுகின்றது அதனால் விலையேற்றம் சிதனமாக :D

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக உள்ளது.

சீதனம் வாங்காமல் கட்டினேன் என்று பெருமையடித்துக் கொள்ளும் ஆண்களும் உண்டு. இதை விட சீதனம் வாங்குவது பரவாயில்லை.

சீதனம் வாங்கினால் வாங்காவிட்டால் என்று எல்லாமே பிரச்சனை. ஆகவே சீதனக் கலாச்சாரத்தையே ஒழிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இப்போது பெரிதாக ஆக்கள் சீதனம் வாங்குவதாக தெரியவில்லை. முக்கியமாக வெளிநாடுகளில் சீதனம் வாங்குவதில்லை என்று நினைக்கின்றேன்.

உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் முதல் நான் நன்றியை கூறிக்கொண்டு.....

எல்ல விடயத்தையும் எங்களுக்கு விருப்பிய படி நாங்கள் நினைக்கலாம்,ஆனால் நாங்கள் நினைப்பது அனைத்தும் ஊண்மை என்று இல்லை!!

முதல் நாங்கள் ஒரு விடயத்தை நன்றாக தெரிந்து கொல்ல வேண்டும்.....நினையுங்கள் ஆனால் எங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று அறிந்து கொள்ளவும் வேண்டும் இல்லையா??

சிறுவயதில் இருந்து பலத்தில் வசித்து வரும் நான் எங்கள் சமூதாயத்தில் உள்ள விடயங்களை எனது நண்பியேடு விவாதிப்பதும், இந்த புலம் பெயர் நாட்டிலும் இப்படியான அதிக கொடுமைகள் நடக்கின்ரன, சில உண்மைகள் வேதனையாக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு விடைகளைத்தான் தேடமுடியும்!! வெளிநாடுகளிள் தான் அதிருத்து வருகின்றது., இது தான் உண்மை ,ரகசியமாக நடப்பதினால் இப்படியான விடையங்கள் நடை பெறவில்லை என்று முடிவு எடுத்துக்கொள்ள முடியாது....................

நன்றி

Link to comment
Share on other sites

சீதனம்" கருப்பொருளை உள்ளடக்கிய கவிதை நல்லாக இருக்கு இனியவள்.

விவாதியுங்கள். ஆடவர்களே.

Link to comment
Share on other sites

மகளுக்கு கொடுக்காட்டி பெத்தமகளுக்கு சீதனமா அஞ்சு காசு கொடுக்கமுடியலை நீ ஒரு அப்பனா என்பாங்க...உனக்கு ரெண்டு சகோதரி இருக்கினம் அவைக்காக வாங்கணும் எண்டுவாங்க...வாங்கினாத்தான் ஆம்பிளைக்கு கௌரவம்.. இல்லைன்னா பெடிக்கு ஏதோ பிரச்சினை இருக்கு எண்டுவாங்க...

:huh: இப்படி இவ்வொருவரும் மற்றவரை சாட்டினால் நிச்சயம் பிரச்சனை நிறைவேறாது.......உன் சகோதரிக்கு பணம் கொடுப்பது நான்,ஆனாம் என் தங்கைக்கு பணம் கொடுப்பது நீ??இது என்ன வேடிக்கையான பேச்சு??இப்படியான வேட்டிப்பேச்சை விட்டு விட்டு நிஜத்துக்குள் வாருங்கள், இப்படியான் கதைகள் அந்த காலத்தில் ஆண் குடும்பத்தால் உறுவாகி இருக்கலாம்,ஏன் என்றால் தாங்கள் செய்யும் செயலை சரி படுத்துவதுக்காக...........................நன

Link to comment
Share on other sites

நாம் சீதனம் கொடுக்க மாட்டோம் என்கின்ற கொள்கை பற்று எப்போது பெண்கள் மத்தியில் தோன்றுகின்றதோ அப்போதுதான் இதற்கு விடுதலை :D .

இதே ,இன்று உங்கள் முன்னால் நான் ,என் கொள்கை, இபப்டி பல பெண்கள் தொடர்பார்கள் என்ற நம்பிக்கையை நான் கைவிடவில்லை!!

சீதனம் என்கின்ற அசுரனை அழிக்க ஆண்களை மட்டும் குறை சொல்வதில் பயன் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து :D

நிச்சயமாக ஆண் மட்டும் வாங்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தால் 70% குறையும், உங்களுக்கு இதை எதிர்த்து நிக்க சக்தியில்லையா??ஏன் உங்களுக்கு சுய புத்தியில்லையா, ??

நன்றி

Link to comment
Share on other sites

வெண்ணிலாவே இதிலை விவாதிக்கிறதுக்கு என்ன இருக்கு? முதலில் சீதனம் கொடுத்து திருமணம் முடிக்கமாட்டோம் என்று பெண்கள் தீர்மானிக்கட்டும் அப்புறமா நிலமையை பொறுந்திருந்திருந்து பாருங்கள்.

இப்போ என்னை பாருங்களேன் சீதனம் வாங்காமல்தான் திருமணம் முடிப்பேன் என்றேன், ஒரு பொண்ணும் என்னை திரும்பியே பார்க்கிள்றாங்க இல்லை, அப்படி யாராவது வந்தாங்கள் என்றால் முதலிலை கேட்கும் கேள்வி என்னெங்க உங்களுக்கு உடலிலை ஏதாவது குறைபாடு இருக்கா? அல்லது விவாக ரத்தா? பார்த்திங்களா எனது நிலமையை?

பிழையை உங்க பக்கம் வைத்துக்கொண்டு ஏனெங்க ஆண்களை குறை சொல்கிறீங்க?

கவிதை நல்லாயிருக்கு பாராட்டலாம், பாராட்டுக்கள்!

ஆனால் நிஷ வாழ்க்கையையுடன் ஒப்பிடாதீர்கள். கவிதையை கவிதையாகவே அணுகுங்கள் , கருத்துக்களை வையுங்கள்.விவாதியுங்கள் ஓகேயா?

Link to comment
Share on other sites

அப்படி யாராவது வந்தாங்கள் என்றால் முதலிலை கேட்கும் கேள்வி என்னெங்க உங்களுக்கு உடலிலை ஏதாவது குறைபாடு இருக்கா? அல்லது விவாக ரத்தா? பார்த்திங்களா எனது நிலமையை?

பிழையை உங்க பக்கம் வைத்துக்கொண்டு ஏனெங்க ஆண்களை குறை சொல்கிறீங்க?

வணகக்ம் வல்வைமைந்தன்,

உங்கள் கருத்துக்கு முதல் நன்றிகள்........

எங்கள் பழைய சமூகத்தை நாங்கள் திருத்த முடியாது தான்,நான் ஒத்துக்கொள்கின்றேன்,ஆனால் இன்று வழர்ந்து வரும் எங்கள் சமூதாயம் மாற்றமடைய நிச்சயமாக வாய்ப்பு உண்டு!!!

இன்று நாங்கள் சீதன் வாங்கமலும், கொடுக்காமலும் வாழ்ந்து காட்ட பிற்க் காலத்தில் உங்கள் குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் இதை மாற்றி அமைக்க வாய்ப்பு உண்டு!!!

இந்த ஆண்கள் சீதன் வாங்குவது தமது குரைகளை மறைக்கவா??இது என்ன வேடிக்கை!!

Link to comment
Share on other sites

இந்த ஆண்கள் சீதனம் வாங்குவது தமது குறைகளை மறைக்கவா??இது என்ன வேடிக்கை!!

இனியவளே!

உங்கள் கேள்விதான் வேடிக்கையாக இருக்கின்றது, அதாவது மேலுள்ள கருத்தை நான் ஒரு உதாரணமாகத்தான் சொன்னேனே தவிர, மற்றும்படி நீங்கள் நினைப்பதுபோல் இதுமட்டும்தான் காரனமல்ல.

நீங்கள் ஏற்றுக்கொண்டால் என்ன அல்லது ஏற்றுக்கொள்ளவிட்டால் என்ன இதற்கு அதிக காரணம் பெண்கள் தான் என்பது உண்மை;

Link to comment
Share on other sites

சீதனம் வாங்கிறது கேவலம்.. ஆனால் அதை ஆண்களை விட பெண்கள்தான் இல்லாமல் ஒழிக்கமுடியும்...

அதோட விவாகரத்துக்கு பிறகு.. பெண்கள் ஆண்கள்கிட்ட மாசக்கட்டணம் கேக்கிறதையும் விட்டால்.. எல்லாம் சமத்துவம்.. அப்படி ஆம்பிளையள் நோகிறதையும் பாரக்கவேண்டிக்கிடக்கு பாழாப்போ சமூகத்தில..

இனியவளோட வட்டம் சிறியது.. பரந்த உலகத்திலே உங்க அனுபவமும் குறைவு.. புதுமைப் பெண்ணா மாறலாம் ஆனால்..

மற்றவங்களை அதாவது ஆண்களை குறை சொல்லுறதால இல்லை.. பெண்ணுரிமையை நீங்க ஆண்கிட்ட கேட்டு வாங்க நினைக்கிறத விட்டு உங்க உரிமையை நீங்க எடுத்துக்கிறதால..

பெண்களால எதையும் சாதிக்க முடியும்.. நீங்களும் நம்புகிறீங்கதான?..

Link to comment
Share on other sites

வெண்ணிலாவே இதிலை விவாதிக்கிறதுக்கு என்ன இருக்கு? முதலில் சீதனம் கொடுத்து திருமணம் முடிக்கமாட்டோம் என்று பெண்கள் தீர்மானிக்கட்டும் அப்புறமா நிலமையை பொறுந்திருந்திருந்து பாருங்கள்.

இப்போ என்னை பாருங்களேன் சீதனம் வாங்காமல்தான் திருமணம் முடிப்பேன் என்றேன், ஒரு பொண்ணும் என்னை திரும்பியே பார்க்கிள்றாங்க இல்லை, அப்படி யாராவது வந்தாங்கள் என்றால் முதலிலை கேட்கும் கேள்வி என்னெங்க உங்களுக்கு உடலிலை ஏதாவது குறைபாடு இருக்கா? அல்லது விவாக ரத்தா? பார்த்திங்களா எனது நிலமையை?

உங்கள் பதில் நல்லா இருக்குங்கோ.

அதாவது ஒரு ஆணுக்கு பெண் சீதனம் கொடுத்து திருமணம் செய்தால் அந்த பெண்ணுக்கு குறை இருப்பதாக சொல்லுறியள்.

அதேபோல ஆடவன் ஒருவன் சீதனம் வாங்காமல் செய்தால் ஆடவனுக்கு என்ன குறை என பெண்கள் கேட்பதில் குற்றம் இல்லைத்தானே.

:D:D:D:lol:

Link to comment
Share on other sites

''உங்கள் பதில் நல்லா இருக்குங்கோ.

அதாவது ஒரு ஆணுக்கு பெண் சீதனம் கொடுத்து திருமணம் செய்தால் அந்த பெண்ணுக்கு குறை இருப்பதாக சொல்லுறியள்."

உங்களுடைய இந்த கருத்து சும்மா விவாதிக்கவேண்டும் என்பதிற்காகவே பதிந்துள்ளது என்பதை எல்லோராலும் புரியக்கூடியதாகவுள்ளது.

வெண்ணிலா இன்றைய காலகட்டம் ரொம்ப வித்தியாசம், சீதன விடயத்தில் பெண்கள்தான் தூண்டுகிறாங்க என்பது தான் எனது விவாதம்.

அதாவது பாருங்க சீதனம் அதிகம் கொடுத்து திருமணம் முடித்தால் தங்கள் குடும்ப கௌரவம் கூடுகிறதாக நம்பும் ஒரு கூட்டமும்.

ரொம்ப படித்த கஷ்ரப்பட்ட குடும்பத்தில் பிறந்த ஆண்களை விலை கொடுத்தாவது வாங்கவேண்டும் என்ற பெண்களின் பெற்றோரும் இந்த சமூகத்தில் நிறைய இருக்காங்க.

இப்படியே நிறைய நடைமுறைச்சாத்தியமான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆகவே சீதனத்தை ஒழிக்கவேண்டுமென்றால் பெண்கள் சார்பாரால் மட்டும் மனம் வைத்தால் மட்டுமே சாத்தியப்படும் என்பது அசைக்க முடியாத உண்மை.

Link to comment
Share on other sites

உங்களுடைய இந்த கருத்து சும்மா விவாதிக்கவேண்டும் என்பதிற்காகவே பதிந்துள்ளது என்பதை எல்லோராலும் புரியக்கூடியதாகவுள்ளது.

நீங்கள் சொன்னதுக்கு தான் நானும் பதில் சொன்னேன் என்பதையும் எல்லோராலும் புரிய முடியும். :D நான் ஒன்றும் சும்மா விவாதிக்க வரவில்லை சரியா. நீங்கள் சொன்னதுக்காக தான் நானும் அக்கருத்தை வைத்தேனே தவிர எனக்கு சும்மா சும்மா எல்லாம் எழுத தெரியாது.

Link to comment
Share on other sites

யாழ்கள உறவுகளே,

என் மனதில் பட்டவை,என் கண்கலால் கண்டவை,என் காதால் கேட்டவை!

இதனால் இந்த கவிதை உறுவாகியது!!

நிச்சயமா இங்கு பல உறவுகள் கூறி இருந்தார்கள் இந்த பெண்களாள் தான் இந்த சீதனம் கேட்க்கப் படுவதாகவும் ,நாங்கள் கேட்க்கவில்லை என்றும்!!

இப்படி பட்ட கருத்துக்களிளும் உண்மைகள் உண்டு,நான் மறுக்கவில்லை!!!

ஆனால் எனக்கு என்ன புரியவில்லை என்றால்

உங்கள் தாய் சீதனம் வேண்டும் என்று கேட்டால் ஏன் உங்களாள் இதை புரக்கனிக்க முடியவில்லை?

அதே பானியில் பெண்களும் நாங்கள் திருமணத்திற்க்கு சீதனம் கேடுக்க மாட்டேம் என்று முடிவேடுத்தால் ,இந்த சீதன பிரச்சனை நிச்சயமாக வரும் காலத்தில் அழிந்து பேகலாம்!!!

ஆனால் சீதனத்தை பெண்கள் தான் கேட்க்கின்றனர்,எனக்கும் இந்த விடையத்திற்க்கும் எந்த சம்மந்தம் இல்லை என்று கூறுவதில் எந்த பயணும் இல்லை என்பது என் கருத்து!!

எல்லோரும் முயற்ச்சி எடுத்தால் வழர்ந்து வரும் எங்கள் புதிய சமூதாயம் நிச்சயமாக மாற்றம் அடையும்!!

இதர்க்கு அனைவரின் ஒற்றுலைப்பும் வேண்டும்!!

நன்றி யாழ் உறவுகளே!

Link to comment
Share on other sites

சீதனம் பற்றிய கருபொருளை கொண்ட இனியின் கவிதை மிகவும் நன்றாக இருகிறது வாழ்த்துகள் :) !!ஆனாலும் புலத்தை பொறுத்தவரை உதாரணமாக அவுஸ்ரெலியாவை எடுத்து கொண்டா எம் சமூகத்தில் இந்த பிரச்சினை இல்லை என்றே கூறலாம் ஏனேனின் ஆணிற்கு சமனா பெண் படித்து இருக்கா வேலைக்கு போகிறா அதன் பின் என்ன தேவை :) !!ஆகவே இப்படியான சூழலில் சீதனம் என்ற வார்த்தை பெரிதாக அடிபடுவதில்லை ஆனால் அதே நேரம் இலங்கையை பொறுத்தவரைக்கும் இந்த பிரச்சினை இருக்கு அத்துடன் இலங்கையில் உள்ள மணபெண்ணிற்கு வெளிநாட்டில் மணமகனை தேடுவார்கள் அவர்கள் சீதனத்தையும் நன்கு கொடுக்கும் சந்தர்ப்பம் தான் அதிகம் இவ்வாறான சந்தர்பங்கள் பலவற்றை கேள்வி பட்டுள்ளேன் :) !!இவர்கள் அள்ளி கொடுக்கும் போது வசதி அற்றவர்களிற்கு இது பாரிய சுமையாக அமைகிறது!! :)

ஆனாலும் இலங்கையை தனியாக எடுத்து கொண்டா இந்த பிரச்சினை இருக்கு இந்த தொழில் செய்யும் மாப்பிள்ளைக்கு இவ்வளவு சீதனம் என்று சிலர் நியமித்துள்ளது தான் மற்றவர்களுக்கு பிரச்சினையாக உள்ளது இதில் இருபாலாரினது பிழை இருக்கு என்றே கூறலாம் ஒருவரை மட்டும் பிழை கூறமுடியாது!! :)

ஆகவே புலத்தை பொறுத்தவரை இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்று தான் கூறமுடியும் உதாரணதிற்கு என்னை எடுத்து கொள்ளுங்கோ இங்கே படிக்கிறேன் படித்து முடித்து நல்ல வேலை கிடைக்கும் அதற்கு பின்னர் ஒரு வீட்டை வாங்குவன் நல்லதொரு வாகனத்தை வாங்குவன் இதை எல்லாம் ஒரு 26 வயசிற்குள்ள செய்து முடித்திடுவன் அதே போல் தான் இங்கே இருக்கும் பெண்ணும் செய்வா இப்படியான நிலையில் "சீதனம்" என்ற பிரச்சினை வருவதில்லை என்றே சொல்லலாம்!! :(

இது என்னுடைய பார்வையில் பிகோஸ் நான் பேபி ஆச்சு!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"சீதனம் வாங்கிறதும் தப்பு கொடுக்கிறதும் தப்பு ஜம்மு பேபி அப்படி எல்லாம் செய்யாது"

Link to comment
Share on other sites

ஆகவே புலத்தை பொறுத்தவரை இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்று தான் கூறமுடியும் உதாரணதிற்கு என்னை எடுத்து கொள்ளுங்கோ இங்கே படிக்கிறேன் படித்து முடித்து நல்ல வேலை கிடைக்கும் அதற்கு பின்னர் ஒரு வீட்டை வாங்குவன் நல்லதொரு வாகனத்தை வாங்குவன் இதை எல்லாம் ஒரு 26 வயசிற்குள்ள செய்து முடித்திடுவன் அதே போல் தான் இங்கே இருக்கும் பெண்ணும் செய்வா இப்படியான நிலையில் "சீதனம்" என்ற பிரச்சினை வருவதில்லை என்றே சொல்லலாம்!! :)

ஆமாம் இது உண்மை தான், இப்படிப்பட்ட மாற்றங்களாள் எங்கள் புதுசமூதாயம் நிச்சயம் சிறப்படயும்!!

எங்கள் பேபி அச்சாப்பையன்!!!

நன்றி பேபி... :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சீதனமே பேயே பிசாசே என்றவை பிரதானமா மூன்று வகைக்க அடங்கினம்..

1. சீதனம் கொடுக்க வழியில்லாதவ. குறிப்பா அப்பர்மார் குடிச்சு வெறிச்சு உழைக்கிறத அழிச்ச குடும்பங்களில உள்ள பெண்கள்.

2. சீதனம் வாங்க தகுதியற்ற ஆண்களும் அவர்களின் பின்னணியில் உள்ள பெண்களும்.

3. ஊருக்கு உபதேசிக்கிற பெண்கள் அதுதாங்க நம்ம பெண்ணிலைவாதம் என்ற கூழ்முட்டையை அடிக்கிற கூட்டம். அவை தங்க பிள்ளைகளுக்கு கொடுத்து டாக்டர் மாப்பிள்ளை எடுப்பினம். ஊரார் பிள்ளைகள கண்டவனுக்கும் கட்டி வைக்க.. சீதனமே சீ பணமே என்பினம்.

புத்திசாலிகள் கொடுத்து தங்க வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளினம். :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னதுக்கு தான் நானும் பதில் சொன்னேன் என்பதையும் எல்லோராலும் புரிய முடியும். :) நான் ஒன்றும் சும்மா விவாதிக்க வரவில்லை சரியா. நீங்கள் சொன்னதுக்காக தான் நானும் அக்கருத்தை வைத்தேனே தவிர எனக்கு சும்மா சும்மா எல்லாம் எழுத தெரியாது.

அந்தாள் இப்பதா வருத்தமா இருந்திட்டு வந்திருகிறார். அடிக்காதைங்கோ...தாங்க மாட்டார். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சீதனமே பேயே பிசாசே என்றவை பிரதானமா மூன்று வகைக்க அடங்கினம்..

1. சீதனம் கொடுக்க வழியில்லாதவ. குறிப்பா அப்பர்மார் குடிச்சு வெறிச்சு உழைக்கிறத அழிச்ச குடும்பங்களில உள்ள பெண்கள்.

2. சீதனம் வாங்க தகுதியற்ற ஆண்களும் அவர்களின் பின்னணியில் உள்ள பெண்களும்.

3. ஊருக்கு உபதேசிக்கிற பெண்கள் அதுதாங்க நம்ம பெண்ணிலைவாதம் என்ற கூழ்முட்டையை அடிக்கிற கூட்டம். அவை தங்க பிள்ளைகளுக்கு கொடுத்து டாக்டர் மாப்பிள்ளை எடுப்பினம். ஊரார் பிள்ளைகள கண்டவனுக்கும் கட்டி வைக்க.. சீதனமே சீ பணமே என்பினம்.

புத்திசாலிகள் கொடுத்து தங்க வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளினம். :):)

சரியாச்சொன்னிங்கள். நானும் சிலரை பார்திருக்கிறேன். அவைக்கு சிதணம் குடுக்க வசதி இருக்காது அதால சீதணம் கேக்கிற ஆக்களை குறை சொல்லுவினம். ஆனால் தங்கள் உறவுப் பெடியங்களின் பெற்றோருக்கு "நல்லா வாங்கி செய்யுங்கோ" எண்டு அடவைஸ் பண்ணுவினம்.

என்னுடைய கருத்துக்கு வறேன்....

(இதிலை இரண்டு வகை உண்டு - எங்கடை ஆக்கள் இரண்டையும் ஒன்றாக பார்து குழப்புவார்கள்.

1. அப்பணமோ, பொருளோ, சொத்தோ, திருமணம் செய்யும் கணவன் மனைவிக்கு.

2. மாப்பிளையின் பெற்றோர், சகோதரத்திற்கு. (இது எங்கள் சமூகத்தில் அவ்வளவு இல்லை என்றே நினைக்கிறேன்)

காதலிச்சு திருமணம் செய்யிறவை சீதணம் எதிர்பார்த்தால் பிழை.

பேச்சு/ பெற்றோரால் ஒழுங்கு செய்யபடும் திருமணம் எண்டால் சீதணம் எதிர் பார்ப்பதில் பிழை சொல்ல முடியாது. ஒரு தரப்பினர் மற்ற தரப்பினரிடிடம் என்ன இருக்கென்று பார்பார்கள். எங்கடை ஆக்கள் பொதுவா பார்பது சாதி, சமயம், ஊரில குடும்ப அந்தஸ்து, படிப்பு, லுக்கு, வேலை....இவை யாவருக்கும் பொதுவானவை.

பெண் பகுதியினர்ஆணுக்கு திருமணமாகாத சதோதரிகள் இருக்கோ எண்டு பாப்பினம். - காரணம் nதியும் தானே...அவர் பிறகு தங்கைக்கு சீதணம் குடுத்திடுவார்.

ஆண்பகுதியினர் பெண்ணுக்கு வரும் சொத்தை(சீதணத்தை) பார்பார்கள். சிலர் கேக்க மாட்டினம் ஆனால் கஸ்ரபட்ட இடம் எண்ணடா தவிர்த்திடுவினம்.

எனிவே...இப்பிடி பார்க்கும் போது 2 சம்மந்தம்(பெண் பகுதி) வருகுதெண்டு

வையுங்கோ... ஒரு பகுதியினர்கொஞ்சம் கஸ்ரம்அந்த பிள்ளை லோன் எடுத்து படிச்சதால ஒரு 40,000 டொலர் லோன் இருக்கு. வேலை செய்த நேரங்களிலயும் பெற்றோருக்கு உதவியதால சேமிப்பு எண்டு ஒண்டும் பெரிசா இல்லை.

மற்ற பகுதி சொல்லுது எங்களுக்கு ஒரு மகள்தான். அதால எங்களுக்கு மோர்கேஜ் கட்டி முடிஞ்ச 2 வீட்டில ஒரு வீடு அவாக்குதான். எங்களுக்கு இருக்கிற கார் காணும, முழுதா பணம் கட்டி வாங்கின 2008 அக்குறா எம்.டி.எக்ஸ் அவாக்குதான.; அதோட நங்கள் காசு கட்டிதான் யூனிவர்சிட்டியில படிப்பிச்சனாங்கள் அதால அவாக்கு ஸ்ருடன்ற் லோனும் இல்லை. அவா கோப்பில வேலை செய்து கொஞ்சமா ஒர 50,000 டொலர் காசும் வைச்சிருக்கிறா எண்டு சொன்னால்...

நான் முதலாவதா சொன்ன பெண்ணை தான் திருமணம்செய்து அவாவின்ர ஸ்ருடன்ற் லோனை 2 பேருமா உழைச்சு கட்டி பிறகு 2 பேருமா வீடொண்டை வாங்கி 25 வருசத்தில கட்டி இருக்க வேணும் எண்டு நீங்கள் நினைச்சால் அது என்தப்பில்லை.

Link to comment
Share on other sites

ஜயா சபேஸ் பயப்பிடாதீங்க நான் இப்போ திடகாத்திரமாகத்த்தான் இருக்கிறேன். உண்மையைச்சொல்லப்போனால் ஏதாவது சாக்குப்போக்குச்சொல்லி கதையை வேறுவிதமாக முடித்து விடுவீங்க.

சகோதரி வெண்ணிலா அவர்களே! உங்கள் கருத்துக்கு பதில் கருத்து கூறியதுமாதிரித்தான் எனது கருத்து தோன்றும் ஆனால் நான் பொதுவாகத்தான் கூறினேன் என்பது மற்றவர்களுக்கு புரியுமோ இல்லையோ உங்களுக்கு புரியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இனியவள் நீங்கள் பல கவிதைகளை எழுதியுள்ளீர்கள் இருந்தும் இந்த கவிதை சமூகத்திற்கு பல விடயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

மீண்டும் எனது பாராட்டுக்கள்.!

Link to comment
Share on other sites

சகோதரி வெண்ணிலா அவர்களே! உங்கள் கருத்துக்கு பதில் கருத்து கூறியதுமாதிரித்தான் எனது கருத்து தோன்றும் ஆனால் நான் பொதுவாகத்தான் கூறினேன் என்பது மற்றவர்களுக்கு புரியுமோ இல்லையோ உங்களுக்கு புரியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

உங்களுடைய இந்த கருத்து சும்மா விவாதிக்கவேண்டும் என்பதிற்காகவே பதிந்துள்ளது என்பதை எல்லோராலும் புரியக்கூடியதாகவுள்ளது.

:) வல்வையண்ணா நீங்கள் கூறியது சரி என்பதால்தான் நானும் அதற்கு பொருத்தமாகத்தான் என் பதிலையும் வைத்தேன். ஆனால் நீங்கள் மீண்டும் அதற்கு பதில் அளிக்குமுகமாக பதில் அளித்து என்னமோ நான் சும்மா விவாதிக்க வந்ததாக என் மீது குறை சொன்னமையால் தான் நான் அப்படி எழுதினேன். :(:):)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.