Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

யாழ் நேசக்கரம்


Recommended Posts

picture005bfh8.jpg

யாழ் நேசக்கரத்தின் கடைமைத்திட்டத்தின் பணத்தினை திருமதி கெளரி நடேசன் அவர்களிடம் யாழ் உதயன் பத்திரிகையின் கணக்காளர் திரு. பரமேஸ்வரன் அவர்கள் கையளிக்கின்றார்.

gowrynadesanbeb2.gif

யாழ் நேசக்கரத்தின் கடமைத்திட்டத்தின் அடிப்படையில் உலகெங்கும் வாழும் நேசக்கர உறவுகளால் வழங்கப்பட்ட பணத்தினை முதலாவது திட்டத்திற்கமைய மட்டக்களப்பில் வைத்து சிறீலங்கா புலனாய்வு பிரிவினரால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் நடேசன் அவர்:களின் குடும்பத்திற்கு யாழ் உதயன் பத்திரிகை நிறுவனத்தினுடாக ரூபா ஒரு இலட்சம் வழங்கப்பட்டது.அதற்கான ஆதாரங்களாக படம் மற்றும் திரு.நடேசன் அவர்களின் மனைவியின் கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. அவரின் கடிதத்தில் பிரான்ஸ் மற்றும் லண்டன் நேச நண்பர்கள் எனறே குறிப்பிட்டுளார். அவரிற்கு சரியான விளக்கத்தை கொடுக்காதது எனது தவறுதான். எனவே மற்றைய நாடுகளில் உள்ள நேசக்கர உறவுகளிடம் அதற்கு மன்னிப்பு கோருவதுடன்.இனிவரும் காலங்களில் இப்படியான தவறுகள் வராமல் பார்த்து கொள்கிறேன்.அது மட்டுமல்ல உதயன் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் கடந்த இரண்டு வாரங்களாக ஜரோப்பிய நாடுகளில் இருந்ததால் ஆதாரங்களை எடுப்பதற்கு எனக்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது. எனவே முதலாவது திட்டம் நல்லபடியாக நிறைவேறியதில் மகிழ்ச்சி மற்றைய உறவுகளுடனும் அதை பகிர்ந்து கொண்டு இரண்டாவது திட்டத்திற்கு தயாராவோம். இரண்டாவது திட்டம் தமிழீழ பெண்கள் அமைப்பினருடன் இணைந்த பெரிய திட்டம் எனவே அதனைப்பற்றி கொஞ்சம் விரிவாகவே எழுத வேண்டியுள்ளதால் விரைவில் அடுத்த திட்டம்பற்றிய விபரங்களை இணைக்கிறேன்.நன்றி

yaalneesakkarammf1bm9.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி சாத்திரி.

நேசக்கர சின்னம் சூப்பராக இருக்கு. வரைந்தவர் யார்?

Link to post
Share on other sites

இணையவன் பண்டிதர் நுணாவிலான் உங்கள் ஆதரவிற்கும் நன்றிகள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள நிர்வாகம் ஒதுங்கி இருக்க முனைந்த போதும் விடாமுயற்சியாக யாழ் கள உறவுகள் சிலர் மேற்கொண்ட அயராத உழைப்பினால் இத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது.

இத்திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து யாழ் கள உறவுகளும் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உடையவராவர்.

இத்திட்டத்தில் டன் மற்றும் சாத்திரியின் உழைப்புகள் சிறப்பாக பாராட்டப்பட வேண்டியவை. எங்கள் ஒத்துழைப்புக்கள் உங்களின் நியாயமான மனிதாபிமானப் பணிக்கு என்றும் இருக்கும்..!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சாத்திரி,

நேசக்கரத்தில் பங்களிப்போருக்குப் பெருமையையும், பங்களிப்பில் இதுவரை இணையாதவர்களுக்கு இணையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் வண்ணம் உங்கள் பதிவு உள்ளது.

Link to post
Share on other sites

குறுக்ஸ் மற்றும் வல்வைசகாரா உங்கள் ஆதரவு தொடர வேண்டிக்கொண்டு யாழ்கள நிருவாகம் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் காரணமாக சிறிது தயங்கினாலும் பின்னர் இத்திட்டத்திற்கு ஆதரவாக ஒரு பக்கத்தை பிரத்தியோகமாக திறந்து நேசக்கரதிட்திற்கு ஆரவு தந்ததற்காக அவர்களிற்கும் நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் நேசக்கர உறுப்பினர்கள் அனைவரி ஒத்துழைப்புகும், பொறுப்பை ஏற்று சிறப்பாக செய்த பொறுப்பாளர்களுக்கும் மிக்க நன்றி. கஸ்ரப்பட்டு செய்தது வீனாகவில்லை.

மேலும் நேசக்கர அமைப்பின் இரண்டாவது பங்களிப்பும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்...... :wub:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வெற்றிக்கு முக்கிய காரணம் டண் அவர்களும் சாத்திரி அவர்களும் தான்.

Link to post
Share on other sites

இதில் இணைந்து செயல்பட்ட அனைத்து உறவுகளுக்கும் எனது நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to post
Share on other sites

நேசக்கர திட்டம் தொடர்பான செய்தி இன்றிரவு தரிசனம் தொலைக்காட்சி சேவையில் பிரதான இரவுசெய்திகளிலும் நீங்கள் பார்க்கலாம் நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப பொருமையாக இருக்கிறது சாத்திரி.தொடர்ந்து பயணிப்போம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்தொரு ஆக்கபுர்வமான முயற்சி

இந்த திட்டத்தை முன்வைத்த டக்கு அங்கிளுக்கும் சாத்திரி அங்கிளுக்கும்

மற்றும் இத்திட்டம் பயனுள்ளவகையில செயற்பட ஆதரவு தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்

Link to post
Share on other sites

மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் உறுப்பினர்களை இணப்பதன் மூலம் எமது வேலை திட்டத்தை விரிவு படுத்தலாம் என்பது எனது அவா.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

டண்,சாத்திரியார் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.உங்கள் பணிக்கு என் ஆதரவு என்றும் இருக்கும்.

Link to post
Share on other sites
 • 6 years later...
 • கருத்துக்கள உறவுகள்

இப்பிடிதத்தான் தொடங்கியதா நேசக்கரம்???

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அது தான் சொல்லி இருக்கே எப்படி தொடங்கினது என்று..

அதுக்கு பிறகு கேள்வி கேட்டு தான் தெரிஞ்சு கொள்வீங்களா ..??

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.