Jump to content

கொஞ்சி விளையாட..!!!


Recommended Posts

baby8plvx1.jpg

கொஞ்சி விளையாட..!!!

புலர்ந்தது பொழுது

மலர்ந்தது என் வதனம்

எழுந்தேன் படுக்கைவிட்டு

தொழுதேன் உன்கால்களை

ஏன் என்று நீ கேட்கிறாயா?

எப்போதேனும் உன் கால்களை

வார நான் குனியும் போது

உனக்கு ஐயம் வராதல்லவா?

சரியன்பே கொஞ்சம்

சிரி உன்னிதழ்விரித்து...

குளிர்த்து நீராடிவிட்டு

குளிர்போக சுடுநீரில்

அன்பைக் கலந்து

அணங்கு நான்

தேநீர் தயாரிக்க

போகணும் அன்பே...

சிரி ஒருமுறை சிரி

குவி உன்னிதழைக் குவி

கவி நீயானாலும்

பல கவி நான்

எழுதுவேன் உன்னிதழ் மேல்..!

மங்கை நான் அருகிருக்க

அங்கை அள்ளத் துடிக்கையில்

அன்பே...

கொங்கைகள் ஏங்குமடா!

சங்குக் கழுத்தும்

உன்னிதழ் முத்தத்திற்காக

காத்திருக்குதடா!

பொங்குகின்ற இன்பம் கோடி

மங்கை எனக்குள்ளே...

ஏங்குகின்ற என்னை ஏனடா

அலட்சியம் செய்கிறாய்?

தூங்குகின்ற சிறு பிள்ளை போல

பாசாங்கு செய்யாதே

நடிக்காதே எழுந்திரு

துடிக்கின்றேன் காளையே

உன் அணைப்புக்குள்

நான் அடங்கணும்

சத்தமின்றி நீ இடும்

முத்தத்தில் நான் உருகணும்

மஞ்சத்தில் தோகை விரித்து

நெஞ்சில் தலைசாய்த்து

கெஞ்சலோடு நான் சிணுங்கணும்

தொட்டிலில் கொஞ்சி விளையாட

சிறு முல்லைப் பூவொன்று

நீ தருவாயா..!

பிஞ்சு விரல்கள்

என் தேகம் தொடுகின்ற

இன்பம் அதுவும் தருவாயா..!!

:wub::):D

Link to comment
Share on other sites

:D நிலாவுக்கு கொஞ்சநாளா என்னமோ ஆகிப்போச்சு..... தை பிறந்தால் வழி பிறக்கும்! :lol: ... ம்... தொடருங்கள்..... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா கவிதை நல்லாயிருக்கு விரைவில் உங்கள் ஏக்கம் தீர வாழ்த்துக்கள் :wub:

Link to comment
Share on other sites

நிலா அக்கா கவிதை சூப்பரா இருக்கு :wub: எல்லோரும் தை பிறகட்டும் வழி பிறக்கும் என்று சொல்லுறபடியா பேபியனா நான் மாட்டுபொங்கல் வரட்டும் வழிபிறக்கும் என்று சொல்லுறேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:lol::D என்ன எல்லோரும் "தை பிறாந்தால் வழி பிறாக்கும்" என்கிறீங்க?

ஏன் தீபா"வளி" பிறந்தால் "வலி" எல்லாம் பறந்து "வழி" பிறக்க கூடாதோ? :wub::lol:

கருத்துசொன்ன (நக்கலடிச்ச) அண்ணா இன்னிசை விகடகவி & ஜம்முபேபிக்கும் நன்றிங்கோ :D

Link to comment
Share on other sites

வெண்ணிநிலா உங்களுக்குள் சுரக்கும் கவிதை இனியது. உங்கள் இருவரதும் இன்பப் பொழுதிலும் தொடரும் உலகமும் சூழலும் நினைவுகளும் உருவாகும் மனச்சித்திரங்களும் சேர்ந்தால் கவிதை ஒரு நதியாக பெருகுமே. நேரமுள்ளபோது இக்கவிதையை நான் "எடிற்" பண்ணினல் எப்படி அமையும் என பார்க்கலாமா_ உங்கள் அனுமதி இருந்தால்

Link to comment
Share on other sites

அட எங்கட வெண்ணிலாவிற்கு தரைநிலவாகி.. கொஞ்சி விளையாடுகிற நேரமா இது.

அஞ்சலிப் பரணி பாடி முடியாத நேரதில் முக்கியம் தானோ..? சரி சரி சிரியுங்கோ சிரித்துக் கொண்டே கவி படியுங்கோ அல்லது கவி வடியுங்கோ.

தீப ஒளி வாழ்த்துக்கள் சும்மா ஒரு கடமைக்குக் கூட சொல்ல முடியாத நாட்களாகி விட்டது.

இருந்தாலும் கவிதை அருமையிலும் அருமை:lol: வெண்ணிலா வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அஞ்சலிப் பரணி பாடி முடியாத நேரதில் முக்கியம் தானோ..? .

சுனாமியில் அடிபட்டு மீண்டதுபோல இருக்கிறது. ஆனாலும் வாழ்க்கையும் ஒரு இனத்தின் இருப்பும் ஜீவ நதிபோல. அது தேங்காமலும் அதேசமயம் பின்வாங்காமல் முன் நோக்கியும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும். இதுதானே கலைகள் தரும் சேதி. இதுதானே விடுதலையின் இயங்கியல்.

Link to comment
Share on other sites

வெண்ணிநிலா உங்களுக்குள் சுரக்கும் கவிதை இனியது. உங்கள் இருவரதும் இன்பப் பொழுதிலும் தொடரும் உலகமும் சூழலும் நினைவுகளும் உருவாகும் மனச்சித்திரங்களும் சேர்ந்தால் கவிதை ஒரு நதியாக பெருகுமே. நேரமுள்ளபோது இக்கவிதையை நான் "எடிற்" பண்ணினல் எப்படி அமையும் என பார்க்கலாமா_ உங்கள் அனுமதி இருந்தால்

:o தாராளமாக எடிற் பண்ணுங்க . அபப்டியே அதை என் பார்வைக்கும் காட்டுங்க. நன்றிகள் poet :lol:

Link to comment
Share on other sites

அட எங்கட வெண்ணிலாவிற்கு தரைநிலவாகி.. கொஞ்சி விளையாடுகிற நேரமா இது.

அஞ்சலிப் பரணி பாடி முடியாத நேரதில் முக்கியம் தானோ..? சரி சரி சிரியுங்கோ சிரித்துக் கொண்டே கவி படியுங்கோ அல்லது கவி வடியுங்கோ.

தீப ஒளி வாழ்த்துக்கள் சும்மா ஒரு கடமைக்குக் கூட சொல்ல முடியாத நாட்களாகி விட்டது.

இருந்தாலும் கவிதை அருமையிலும் அருமை:lol: வெண்ணிலா வாழ்த்துக்கள்.

:o என்ன வசி அண்ணா இப்படி கேட்டுப்புட்டீங்க நான் கொஞ்சி விளையாடிய நெரத்தின் பின்னர் தான் அஞ்சலிப்பரணி பாட வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துடுட்து. :lol::D அதற்காக என்னை போய் இக்கவிதை முக்கியமோ என கேட்டால் என்ன செய்ய?

நன்றிகள் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கவிதை அழகு. எல்லோரும் சொல்லுற மாதிரி தை பிறந்தால் வழி பிறக்கட்டும்

Link to comment
Share on other sites

தை பிறந்தால் வழி பிறக்கும் . (எல்லாரும் சொல்லுறாங்க நானும் சொல்லிப்பாக்கிறன் :lol: ).... வாழ்த்துக்கள் நிலா ! :o

Link to comment
Share on other sites

உங்க கவிதை அழகு. எல்லோரும் சொல்லுற மாதிரி தை பிறந்தால் வழி பிறக்கட்டும்

:lol: என்னப்பா எல்லோரும் நக்கல் அடிக்கிறாங்க என்று பார்த்தால் நீங்களுமா? தாங்க முடியல்லைப்பா :lol:

தை பிறந்தால் வழி பிறக்கும் . (எல்லாரும் சொல்லுறாங்க நானும் சொல்லிப்பாக்கிறன் :) ).... வாழ்த்துக்கள் நிலா ! :)

:rolleyes::wub: உண்மையாக என்னால் உங்க லொள்ளுகளை தாங்க முடியல்லையுங்கோ

Link to comment
Share on other sites

நிலவிற்கே ஆசை வந்தால்

பூமிதான் தாங்குமா?

:wub: நீங்களுமா அக்கா நக்கல் பண்ணுறீங்க? வானிலாவுக்கு ஆசை வந்திச்சா பூமி தனக்குமோ தெரியா ஆனால் இந்த வெண்ணிலாவுக்குமா? :lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub::D:huh::blink:

என்ன சார் ஆச்சுது. மழைக்க நனைஞ்சு நனைச்சு சளிபிடிச்சிட்டா..!

வெண்ணிலா பெண்ணிலாவாயிட்டுது போல..! எனி எல்லாம் இப்படித்தான் கவிதையா வரும்.. வயசுக் கோளாறு என்றது இதைத்தான்.

பிள்ள ஏதேனும் நல்ல செய்தியெட்டா களத்திலும் சொல்லுங்கோ நாலு பெரிய மனிசர் வாழ்த்துவமில்ல. :D:lol:

Link to comment
Share on other sites

:wub::D:huh::blink:

:lol::D

வெண்ணிலா பெண்ணிலாவாயிட்டுது போல..! எனி எல்லாம் இப்படித்தான் கவிதையா வரும்.. வயசுக் கோளாறு என்றது இதைத்தான்.

பிள்ள ஏதேனும் நல்ல செய்தியெட்டா களத்திலும் சொல்லுங்கோ நாலு பெரிய மனிசர் வாழ்த்துவமில்ல. :D:lol:

:lol: என்ன நெடுக் அண்ணா இப்படி சொல்லிடீங்க? அப்போ வெண்ணிலா இவ்வளவுநாளும் ஆணிலாவாகவா இருந்திச்சு? :( ஐயோ வயசுக்கோளாறுமில்லை ஒரு கோளாறுமில்லை. சும்மா எழுதினேன் அதை இங்கே போட்டால் இப்படியா எல்லோரும் நக்கலடிப்பீங்க?

ஹாஹா நல்ல சேதி ஒண்ணுமில்லை. அபப்டியிருந்தால் என் அன்புத்தம்பி ஜம்மு எல்லாமே சொல்லுவான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" கொஞ்சி விளையாட"

கஞ்சமின்றி

மஞ்சத்தில் கொஞ்சிட

வெட்கத்தை விட்டு

கெஞ்சி கேட்கும்

நிலாவின்

கொஞ்சும் கவிதை!

அழகா இருக்கு!!!

நிலா! ஒரு முரண்பாடு அதுதான் விளங்கவில்லை.

" தொழுதேன் உன்கால்களை

ஏன் என்று நீ கேட்கிறாயா?

எப்போதேனும் உன் கால்களை

வார நான் குனியும் போது

உனக்கு ஐயம் வராதல்லவா?"

இந்த வரிகள்!

காதலோடும்...

தேடலோடும்..

எழுதியது என நினைக்க

நெஞ்சினில்

ஊடலோடு

எழுதியது போல் இருக்கு!

" எப்போதும் உன் கால்களை வார"

சிறு மழலையை

தொட்டிலில் கொஞ்சிடவா

மஞ்சத்தில்

மன்னனை தழுவுகிறார்கள் பெண்கள்?

அப்போ...

காதலோ? ஏன்

சிறு துளி தேடல் கூடவா இல்லை

அந்த கொஞ்சலில்?? :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் நிலா.... காலங்காத்தால தேனீருக்கு முதலே இப்படி கவிதையா?? இன்னும் அடிக்கடி கவிதைகள் பொங்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நிலா.... காலங்காத்தால தேனீருக்கு முதலே இப்படி கவிதையா?? இன்னும் அடிக்கடி கவிதைகள் பொங்க வாழ்த்துக்கள்

:lol::lol: ஏன் இப்படி கேட்கிறீங்க? :unsure: இது கவிதையுங்கோ :(

Link to comment
Share on other sites

" கொஞ்சி விளையாட"

கஞ்சமின்றி

மஞ்சத்தில் கொஞ்சிட

வெட்கத்தை விட்டு

கெஞ்சி கேட்கும்

நிலாவின்

கொஞ்சும் கவிதை!

அழகா இருக்கு!!!

நன்றிகள் இவள் அக்கா. உங்களின் இவ்வரிகளும் அழகு.

நிலா! ஒரு முரண்பாடு அதுதான் விளங்கவில்லை.

" தொழுதேன் உன்கால்களை

ஏன் என்று நீ கேட்கிறாயா?

எப்போதேனும் உன் கால்களை

வார நான் குனியும் போது

உனக்கு ஐயம் வராதல்லவா?"

இந்த வரிகள்!

:lol::lol:இல்லைக்கா அது சும்மா விளையாட்டு வரிகள். அதாவது காலைவாரணும் என்று திட்டம் தீட்டிட்டாங்க. நானும் பதிலுக்கு அப்படி சொல்லிட்டேன். அதனால் தான் இவ்வரியில் நான் தொழுவேனே தவிர கால்களை வாரமாட்டேன் என சொல்லி இருக்கிறேன்.

காதலோடும்...

தேடலோடும்..

எழுதியது என நினைக்க

நெஞ்சினில்

ஊடலோடு

எழுதியது போல் இருக்கு!

:(ஊடலும் இல்லை தேடலும் இல்லை கூடலும் இல்லை. அப்படி ஒன்று நிஜங்களில் நிகழுமாயின் கவிதை அப்போது உயிரோட்டமாக வரும். இது சாதாரணமாக கற்பனைக்கவிதையே.

" எப்போதும் உன் கால்களை வார"

சிறு மழலையை

தொட்டிலில் கொஞ்சிடவா

மஞ்சத்தில்

மன்னனை தழுவுகிறார்கள் பெண்கள்?

அப்போ...

காதலோ? ஏன்

சிறு துளி தேடல் கூடவா இல்லை

அந்த கொஞ்சலில்?? :unsure:

இதற்குப்பதில் தற்போது சொல்ல முடியல்லை. ஏன்னா நான் இப்பவும் செல்வி வெண்ணிலா. :(:(

Link to comment
Share on other sites

வெண்ணிலா, நீங்கள் மஞ்சத்தில் கொஞ்சி (கெஞ்சி) விளையாடுகிறீர்களோ இல்லையோ.... இங்க கருத்துச் சொல்லும் கன பேர் தங்கட ஆசைகளை சொல்லி விளையாடுகினம்... :lol: (களத்தில யாரும் கோவிக்கக்கூடாது... )

ஆனாலும் வெண்ணிலா நீங்கள் காலை வாரணும் என்று எழுதிறதெல்லாம் மகா தப்பு தான்...(பழங்காலத்தில பெண்கள் கணவன் காலில் ஏன் விழுந்தாங்க என்று இப்ப தானே விளங்குது... என்ன பாவம் என்றால் யாருக்கும் காலை வார சந்தர்ப்பம் கிடைக்கலப் போல....நீங்க என்றாலும் சாதிச்சுக் காட்டுவீங்க என்று நம்பிறன்.... பாவம் யார் அந்த அப்பாவியோ....?கடவுள் காக்க.... )

Link to comment
Share on other sites

வெண்ணிலா, நீங்கள் மஞ்சத்தில் கொஞ்சி (கெஞ்சி) விளையாடுகிறீர்களோ இல்லையோ.... இங்க கருத்துச் சொல்லும் கன பேர் தங்கட ஆசைகளை சொல்லி விளையாடுகினம்... :) (களத்தில யாரும் கோவிக்கக்கூடாது... )

ஆனாலும் வெண்ணிலா நீங்கள் காலை வராணும் என்று எழுதிறதெல்லாம் மகா தப்பு தான்...(பழங்காலத்தில பெண்கள் கணவன் கால்ல ஏன் விழுந்தாங்க என்று இப்ப தானே விளங்குது... என்ன பாவம் என்றால் யாருக்கும் காலை வாரா சந்தர்ப்பம் கிடைக்கலப் போல....நீங்க என்றாலும் சாதிச்சுக் காட்டுவீங்க என்று நம்பிறன்.... பாவம் யார் அந்த அப்பாவியோ....?கடவுள் காக்க.... )

:lol: ஓ இங்கை கருத்துச் சொல்லி விளையாடுறார்களோ. அப்போ நீங்களுமோ ரூபன்?

:lol: சாதிச்சுடுவம் அதில் என்ன சந்தேகம்? :icon_idea: அப்பாவி பாவமோ? ஹீஹீஹீ :huh:

"கடவுள் காக்க" அட இதை இன்னும் மறக்கல்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.