• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

nedukkalapoovan

தீபாவளி என்றால் என்ன..??!

Recommended Posts

தீப ஒளித் திருநாள்

diwali250_07112007.jpg

அடை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் அடித்து வெளுக்கும் மழை, மறுபக்கம் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி.

தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

நரகாசுரன் வதம் ...

இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன்.

நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம்.

நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.

கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன்.

நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.

கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.

நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான்.

பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.

தீபாவளியின் இன்னொரு கதை ...

இதேபோல இன்னொரு கதையும் தீபாவளிக்கு உள்ளது. அது ஏன் தீபத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கான கதையும் கூட.

ராவணனை வென்று சீதையை மீட்கிறார் ராமன். பின்னர் சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். மன்னனாக முடி சூடுகிறார். இதைத்தான் தீபாவளியாக மக்கள் கொண்டாடினராம்.

ராமரும், சீதையும் அயோத்திக்கு வந்தபோது அன்று அமாவாசை இரவு. இதனால் இருளில் தாங்கள் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் தடுமாறியுள்ளனர். இதையடுத்து அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளி கூட்டினர். இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தில், தீப ஒளியில், சரியான பாதையில் நடை போடத் தொடங்கினாராம் ராமரும், சீதையும். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயரும் வந்தது.

பிற கதைகள் ..

விஷ்ணு, லட்சுமி தேவியின் திருமணம்தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்ற ஒரு புராணக் கருத்தும் உண்டு.

வங்கத்தில் காளி தேவியை வணங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி ஒரு விதமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளித் திருநாள் மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நான்கு நாளும் ஒரு வகையான கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபடுகிறார்கள். பூஜைகள் செய்கிறார்கள்.

முதல் நாளை நரக சதுர்தசியாக கொண்டாடுகிறார்கள். தீய சக்திகள் அழிந்து (அதாவது நரகாசுகரன் அழிந்த நாள்) வாழ்வில் வளம் பிறக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

தீபாவளி தினமான 2வது நாள் அமாவாசை தினம். இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள்.

3வது நாளில் கார்த்திகை சுத்த பதயாமி தினமாக கொண்டாடப்படுகிறது.

4 நாள் யம திவிதியை தினமாக கொண்டாடுகிறார்கள். அதாவது அன்றைய தினம் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு புத்தாடைகள் கொடுத்து வணங்கி, ஆசிர்வாதம் பெறும் தினம் இது.

பட்டாசு வெடிப்பது ஏன்:

தீபாவளி என்றால் பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவுக்கு வரும். ஏன் விளக்கு ஏற்றிக் கொண்டாடுகிறோம், பட்டாசுகள் வெடிப்பது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு.

வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம். அயோத்திக்கு ராமரும், சீதையும் வந்தபோது அந்த நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும் இதற்கு இன்னொரு காரணம்.

அதேபோல, தீய சக்திகளை விரட்டியடித்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.

தென்னிந்தியாவில் நரகாசுரன் வதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ராமரும், சீதையும் அயோத்தி திரும்பியதையும், ராமர் பட்டம் சூட்டிக் கொண்டதையுமே, தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு விதமாக இந்தியாவின் ஒவ்வொரு பகுதி மக்களும் கொண்டாடினாலும் கூட தீபாவளியின் மையக் கருத்து, நலமும், வளமும் வந்து சேரும் தீபத் திருநாள் என்பதாகவே உள்ளது என்பதால் தீபாவளித் திருநாள், இந்துக்களின் மிக முக்கிய திருநாளாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்.கொம்

-----------

வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம்.

அதேபோல, தீய சக்திகளை விரட்டியடித்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.

மேற்கு நாடுகளில் இதே காரணத்துக்காகத்தான் halloween festival கொண்டாடப்படுகிறது..! :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

எங்களைச்சுற்றி 1000 நரகா சூரர்கள் இருக்கும் போது எப்படி நிம்மதியாய் தீபாவளி கொண்டாடுவது? எல்லா நரகா சூரர்களின் வதம் முடிக்கும் நாள்தான் எம்மவர்களுக்கு தீபாவளியே

Share this post


Link to post
Share on other sites

மகிந்த ராஜபக்ஸ தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீப ஒளியின் மூலம் அமைதியும் பயங்கரவாத இருளும் அகல வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

Share this post


Link to post
Share on other sites

மகிந்த பொங்கலுக்கும் தான் வாழ்த்துச் சொல்லுறார்..! அதற்காக.. பொங்கலை...?????! :wub::rolleyes:

Share this post


Link to post
Share on other sites

மகிந்த நத்தாருக்கும் வாழ்த்துச் சொல்வார். ஆனால் மகிந்த தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வதற்கு விசேட அர்த்தம் உண்டு.

Share this post


Link to post
Share on other sites

மகிந்த நத்தாருக்கும் வாழ்த்துச் சொல்வார். ஆனால் மகிந்த தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வதற்கு விசேட அர்த்தம் உண்டு.

மகிந்தவுக்கு விசேட காரணம் இருக்கோ இல்லையோ உங்களிடம் இருக்கு மகிந்த சார்பா அதை வெளியிட.. பிராமண கசப்புவாதம்..! அது காட்டிக் கொடுத்திடும் உங்களை...! :wub:

Share this post


Link to post
Share on other sites

யாழ் இராணுவ தளபதி கூட தீபாவளி வாழ்த்துக்கள் கூறியுள்ளாரே?

Share this post


Link to post
Share on other sites

மகிந்த தைப் பொங்கலுக்கும் தான் வாழ்த்துச் சொன்னவர். விசேட காரணமோ, இல்லையோ அதை எதிர்க்க வேண்டிய விசேட காரணம் கன்னடர் வழி அமைப்புக்களுக்கு உண்டு.

Share this post


Link to post
Share on other sites

தீபாவளிக்கு இவ்வளவு அர்த்தங்கள் இருக்கோ??நான் நினைத்தேன் ஆட்டு இறைச்சியும் கறியும் தண்ணியும் புது சாரமும் உடுத்து சந்தியில இருந்து சண்டிதனம் பண்ணுறது தான் தீபாவளி என்று நினைத்தேன்.

மகிந்த தைப் பொங்கலுக்கும் தான் வாழ்த்துச் சொன்னவர். விசேட காரணமோ, இல்லையோ அதை எதிர்க்க வேண்டிய விசேட காரணம் கன்னடர் வழி அமைப்புக்களுக்கு உண்டு.

"அன்றொரு காலம் பலயுகங்களுக்கு முன்னம் இந்தப் பூமியில் ஒரு கருத்து பிறப்பு எடுத்தது கருத்துகளின் மைய கருத்தாக அது புனிதம் பெற்றது.மனிதர்களை அது ஆழமாக பற்றி கொண்டது.அந்த கருத்திற்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான்.மலைகளை பெயர்த்து,பாறைகளை தகர்த்து கலை வடிவம் கொடுத்தான் ஆயிரம் ஆயிரம் ஆலயங்கள் எழுந்தன.அந்த கருதிற்கு மனிதன் விளக்கங்களை கொடுத்தான்.வியாக்கியானங்கள் அளித்தான் அர்த்தங்களை குவித்தான் வேதங்கள் தோன்றின சித்தாந்தங்கள் பிறந்தன.கிரிகைகள்,சடங்குகள் தோன்றின.நிர்வனங்கள்,நிர்வாகப

??டங்கள் தோன்றின.கோசானு கோடி அடியார்கள் தோன்றினர்.ஆராதனைகள் நடத்தினர்.

அந்த மைய கருத்தில் இருந்து பல நாகரிகங்கள் தோன்றின கிறிஸ்தவ,இஸ்லாமிய,இந்து பெளத்த நாகரீகங்களாக மானிடம் பிளவு பெற்றது.போர்கள் நடந்தன் நாடுகளும்,இனங்களும் மோதின பூமியில் இரத்த ஆறுகள் ஓடின.அந்த கருத்து மனிதர்களை ஆழமாக பற்றி பிடித்து ஆட்டி படைத்தது."

இப்படி நான் சொல்லவில்லை எங்களின்ட மதிபுகுரிய ஒருத்தர் சொல்லி இருகிறார் இதுவும் கன்னடவழி அமைப்புகள் சொல்வதும் கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருக்கு போல.

Share this post


Link to post
Share on other sites

"அன்றொரு காலம் பலயுகங்களுக்கு முன்னம் இந்தப் பூமியில் ஒரு கருத்து பிறப்பு எடுத்தது, கருத்துகளின் மைய கருத்தாக அது புனிதம் பெற்றது. மனிதர்களை அது ஆழமாக பற்றி கொண்டது.அந்த கருத்திற்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான். மலைகளை பெயர்த்து, பாறைகளை தகர்த்து கலை வடிவம் கொடுத்தான் ஆயிரம் ஆயிரம் ஆலயங்கள் எழுந்தன.அந்த கருதிற்கு மனிதன் விளக்கங்களை கொடுத்தான். வியாக்கியானங்கள் அளித்தான் அர்த்தங்களை குவித்தான் வேதங்கள் தோன்றின சித்தாந்தங்கள் பிறந்தன.கிரிகைகள், சடங்குகள் தோன்றின. நிருவனங்கள், நிர்வாகபீடங்கள் தோன்றின. கோசானு கோடி அடியார்கள் தோன்றினர்.ஆராதனைகள் நடத்தினர்.

அந்த மைய கருத்தில் இருந்து பல நாகரிகங்கள் தோன்றின கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து பெளத்த நாகரீகங்களாக மானிடம் பிளவு பெற்றது.போர்கள் நடந்தன் நாடுகளும், இனங்களும் மோதின பூமியில் இரத்த ஆறுகள் ஓடின.அந்த கருத்து மனிதர்களை ஆழமாக பற்றி பிடித்து ஆட்டி படைத்தது."

அட ரொம்ப நன்னா சொல்லியிருக்காங்களே! எவா அவா?

Share this post


Link to post
Share on other sites

"அன்றொரு காலம் பலயுகங்களுக்கு முன்னம் இந்தப் பூமியில் ஒரு கருத்து பிறப்பு எடுத்தது கருத்துகளின் மைய கருத்தாக அது புனிதம் பெற்றது.மனிதர்களை அது ஆழமாக பற்றி கொண்டது.அந்த கருத்திற்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான்.மலைகளை பெயர்த்து,பாறைகளை தகர்த்து கலை வடிவம் கொடுத்தான் ஆயிரம் ஆயிரம் ஆலயங்கள் எழுந்தன.அந்த கருதிற்கு மனிதன் விளக்கங்களை கொடுத்தான்.வியாக்கியானங்கள் அளித்தான் அர்த்தங்களை குவித்தான் வேதங்கள் தோன்றின சித்தாந்தங்கள் பிறந்தன.கிரிகைகள்,சடங்குகள் தோன்றின.நிர்வனங்கள்,நிர்வாகப??டங்கள் தோன்றின.கோசானு கோடி அடியார்கள் தோன்றினர்.ஆராதனைகள் நடத்தினர்.

அந்த மைய கருத்தில் இருந்து பல நாகரிகங்கள் தோன்றின கிறிஸ்தவ,இஸ்லாமிய,இந்து பெளத்த நாகரீகங்களாக மானிடம் பிளவு பெற்றது.போர்கள் நடந்தன் நாடுகளும்,இனங்களும் மோதின பூமியில் இரத்த ஆறுகள் ஓடின.அந்த கருத்து மனிதர்களை ஆழமாக பற்றி பிடித்து ஆட்டி படைத்தது."

புத்தன்!!

அற்புதமான வசனங்கள். யார் அந்தப் பெரியவர்?

அந்த மையக் கருத்துத்தான் "கடவுள்" என்பது. மனித மனங்களினாலே உருவாக்கப்பட்ட எண்ணம் அது. அதை உண்மை என நம்பிவிடுவதும், அதன்மீது கோட்பாடுகளை உருவாக்கி வீணே காலவிரயத்தை செய்வதும், அதற்காக போர் என புறப்படுவதும் சுத்த முட்டாள்தனமே அன்றி வேறில்லை.

மக்கள் மறதிக்காரர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தாமாகவே ஒரு கொள்கையை உருவாக்குவது. பின்பு அதை அப்படியே நம்பிவிடுவது. அதனிடம் சரணடைந்து விடுவது. :wub::D

Share this post


Link to post
Share on other sites

"அன்றொரு காலம் பலயுகங்களுக்கு முன்னம் இந்தப் பூமியில் ஒரு கருத்து பிறப்பு எடுத்தது கருத்துகளின் மைய கருத்தாக அது புனிதம் பெற்றது.மனிதர்களை அது ஆழமாக பற்றி கொண்டது.அந்த கருத்திற்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான்.மலைகளை பெயர்த்து,பாறைகளை தகர்த்து கலை வடிவம் கொடுத்தான் ஆயிரம் ஆயிரம் ஆலயங்கள் எழுந்தன.அந்த கருதிற்கு மனிதன் விளக்கங்களை கொடுத்தான்.வியாக்கியானங்கள் அளித்தான் அர்த்தங்களை குவித்தான் வேதங்கள் தோன்றின சித்தாந்தங்கள் பிறந்தன.கிரிகைகள்,சடங்குகள் தோன்றின.நிர்வனங்கள்,நிர்வாகப

??டங்கள் தோன்றின.கோசானு கோடி அடியார்கள் தோன்றினர்.ஆராதனைகள் நடத்தினர்.

அந்த மைய கருத்தில் இருந்து பல நாகரிகங்கள் தோன்றின கிறிஸ்தவ,இஸ்லாமிய,இந்து பெளத்த நாகரீகங்களாக மானிடம் பிளவு பெற்றது.போர்கள் நடந்தன் நாடுகளும்,இனங்களும் மோதின பூமியில் இரத்த ஆறுகள் ஓடின.அந்த கருத்து மனிதர்களை ஆழமாக பற்றி பிடித்து ஆட்டி படைத்தது."

இப்படி நான் சொல்லவில்லை எங்களின்ட மதிபுகுரிய ஒருத்தர் சொல்லி இருகிறார் இதுவும் கன்னடவழி அமைப்புகள் சொல்வதும் கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருக்கு போல.

தீபாவளிக்கு இவ்வளவு அர்த்தங்கள் இருக்கோ??நான் நினைத்தேன் ஆட்டு இறைச்சியும் கறியும் தண்ணியும் புது சாரமும் உடுத்து சந்தியில இருந்து சண்டிதனம் பண்ணுறது தான் தீபாவளி என்று நினைத்தேன்.

மேலே சொன்ன உங்களின் பதில் தான் கீழே வரவேண்டியது. அரைகுறையாகக் கடவுளைப் பற்றித் தெரிந்தவர்களும், 4ம் ஆண்டோடு படிக்காமல் முன்னுக்கு வரலாம் என்று நினைத்தவர்களும், முயற்சி செய்யாமல் வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என்று நினைத்து ஏமாந்து போன, சிலர் தான் தங்களின் இயலாமையைக் கடவுள் என்று ஒன்றின் மேல் பழியைப் போட்டுத் திட்டிக் கொண்டிருப்பவர்கள்.

நீங்கள் சொன்ன இந்தக் கன்னடவழி அமைப்புக்களின் கதையைப் பார்த்தாலே தெரியும். வாழ்க்கையில் தோற்றுப் போன சிலர் தான் சுடலை ஞானம் பேசிக் கொண்டிருப்பவர்கள்.

நீங்கள் சொன்ன வசனம் கிறிஸ்தவ மதத்தில் உள்ள வசனமாகிய," இறைவன் சில விதைகளை விதைத்தான். அவை கல்லில் மேல் விழுந்தன. நீரில் மேல் விழுந்தன" என்ற வசனத்தை உல்டா பண்ணியது போலக் கிடக்கே.

Share this post


Link to post
Share on other sites

வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 - கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள்.

இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 - கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த 10 - கோடியும் அனாவசியமாய் - துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசன் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த - சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?

தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?

(‘குடிஅரசு’, தலையங்கம், 22.11.1931)

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன்

ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60- நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களாவார்களா?

புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்! பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து - புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்?

‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000-த்துக்கு 999 - பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள்.

பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது ஒன்று;

மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு;

அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று;

பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டங் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு;

இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து;

அன்று ஒவ்வொரு வீட்டிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவது ஆறு;

இந்தச் செலவுகளுக்காகக் கடன்படுவது ஏழு;

மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன் படவேண்டியிருக்கிறது என்பதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் - மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனீயப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத்துக்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாகச் சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது.

கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவை எல்லாவற்றையும் பொய் என்று ஒப்புக்கொண்டாய்விட்டது. அப்படியிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரகணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய, தீபாவளிப் பண்டிகைக்கு மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இவ்வளவு பாராட்டுதலும் செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்லவேண்டும்?

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் மூன்று.

அதாவது நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை இருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தார்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் - நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை - தீபவாளி என்று கொண்டாடவேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.-

http://thamilachi.blogspot.com/2007/11/blog-post_9257.html

Share this post


Link to post
Share on other sites

இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்?

இவருக்கு ரோட்டு ரோட்டாகச் சிலை கட்டி அபிசேகம் செய்பவர்கள், இதனால் ஏற்படும் வீண் பணவிரையம் பற்றிச் சிந்திக்க வேணும்.

Share this post


Link to post
Share on other sites

அப்ப தீபாவளிக்கு ஒரேயொரு கதை கிடையாதா?? ஏன் இந்து மதத்தில் எல்லாவற்றிற்கும் பல "கதைகள்" உள்ளன என்று யாராவது விளங்கப்படுத்துங்களேன்.. நாங்கள் புனிதமான கதைகளையும், புனிதமாக்கப்பட்ட "கதை"களையும் மட்டும் ஏற்றுக்கொண்டு, அசிங்கங்களை அழித்துவிடுவோம்.. சமூகக் கடமையல்லவா! :)

Share this post


Link to post
Share on other sites

***

தீபாவளி.. ஒரு தீபத்திருநாள். இருள் சூழ்ந்த காலப்பகுதியில் இருளகற்றி மக்கள் தங்களை குளிர்காலத்துக்குரிய காலநிலைக்கு ஏற்ப தயார்ப்படுத்த என்று கொண்டாடப்படுகிறது என்பதுதான் யதார்த்தம். அப்படி இருந்தும்... இன்னும் கிருஸ்ணரையும் நரகாசுரனையும் வைச்சு வந்த கதையை நம்பி தூக்கிப் பிடிச்சுக் கொண்டு.. அதை டிஸ்புறூவ் பண்ண நிக்கிறவையும்.. நரகாசுரனை தமிழன் என்று ஆக்கிறவையையும் என்னென்று சொல்லி.... பாராட்ட...! *** :)

Share this post


Link to post
Share on other sites

இவருக்கு ரோட்டு ரோட்டாகச் சிலை கட்டி அபிசேகம் செய்பவர்கள், இதனால் ஏற்படும் வீண் பணவிரையம் பற்றிச் சிந்திக்க வேணும்.

மேற்கூறிய கட்டுரையில் கூறிய காரணங்கள் ஒன்றும் உங்களுக்கு நியாயமாக படவில்லையா?

Share this post


Link to post
Share on other sites

தீபாவளி.. ஒரு தீபத்திருநாள். இருள் சூழ்ந்த காலப்பகுதியில் இருளகற்றி மக்கள் தங்களை குளிர்காலத்துக்குரிய காலநிலைக்கு ஏற்ப தயார்ப்படுத்த என்று கொண்டாடப்படுகிறது என்பதுதான் யதார்த்தம். அப்படி இருந்தும்... இன்னும் கிருஸ்ணரையும் நரகாசுரனையும் வைச்சு வந்த கதையை நம்பி தூக்கிப் பிடிச்சுக் கொண்டு.. அதை டிஸ்புறூவ் பண்ண நிக்கிறவையும்.. நரகாசுரனை தமிழன் என்று ஆக்கிறவையையும் என்னென்று சொல்லி.... பாராட்ட...! ***

அது சரி பூமத்திய ரேகைக்குக் கிட்டவுள்ள இந்திய இலங்கைப் பகுதிகளில் அண்ணளவாகப் 12 மணிநேரம் இரவும், பன்னிரண்டு மணிநேரம் பகலுமாகத்தானே உள்ளது.. குளிர் காலம் எப்போது ஆரம்பிக்கின்றது? மாசி மாதப் பனிகாலத்தில்தானே குளிரைக் கண்டோம்! :)

சில நேரம் வட ஐரோப்பாப் பகுதியில் நேரம் மாற்றம் செய்யும் நாளுக்கு அடையாளமாகத் தொடங்கி, கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்த பண்டிகையாக இருக்கலாம்.. :)

Share this post


Link to post
Share on other sites

அது சரி பூமத்திய ரேகைக்குக் கிட்டவுள்ள இந்திய இலங்கைப் பகுதிகளில் அண்ணளவாகப் 12 மணிநேரம் இரவும், பன்னிரண்டு மணிநேரம் பகலுமாகத்தானே உள்ளது.. குளிர் காலம் எப்போது ஆரம்பிக்கின்றது? மாசி மாதப் பனிகாலத்தில்தானே குளிரைக் கண்டோம்! :)

சில நேரம் வட ஐரோப்பாப் பகுதியில் நேரம் மாற்றம் செய்யும் நாளுக்கு அடையாளமாகத் தொடங்கி, கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்த பண்டிகையாக இருக்கலாம்.. :)

seasonsfull200304160945lj3.gif

காலமடா சாமி... வரலாறும் சமூகக்கல்வியும் எனிப் படிப்பிக்கனும் போல இருக்கே. மத்திய ரோகைக்கு அண்மையாக இருப்பினும் எங்கள் தேசத்துக்கும் மாரிகாலம் என்று ஒன்றிருக்குது கண்டிங்களோ. அக்காலத்தில பகல் குறைந்து இருள் அதிகமாக இருக்கும். மாரிகாலத்தில் உள்ள இரவுக்கும் பகலுக்கும் இடையில் குறைந்தது ஒரு மணி நேரமாவது இருள் அதிகமாக இருக்கும் வேறுபாட்டை உணரலாம். கோடையில் உள்ள இரவுக்கும் பகலுக்கும் இடையில் உள்ள நேரத்தோடு ஒப்பிடும் போது...! மாரி காலம் அதிகம் மழைகாலம் என்பதாலும் இருள் கூடுவது அதிகம் என்பதாலும்.. தீபத்திருநாள் மாரிகாலத்தில் கொண்டாடப்படும் வழமை ஏற்பட்டிருக்கும். ஏன் நரகாசுரனை அழிச்சதை சித்திரையில கொண்டாடி இருக்கலாம் தானே.... ஏன் ஐப்பசி கார்த்திகையில கொண்டாடனும்..??! :D

Share this post


Link to post
Share on other sites

காலமடா சாமி... வரலாறும் சமூகக்கல்வியும் எனிப் படிப்பிக்கனும் போல இருக்கே. மத்திய ரோகைக்கு அண்மையாக இருப்பினும் எங்கள் தேசத்துக்கும் மாரிகாலம் என்று ஒன்றிருக்குது கண்டிங்களோ. அக்காலத்தில பகல் குறைந்து இருள் அதிகமாக இருக்கும். குறைந்தது ஒரு மணி நேரமாவது இந்த வேறுபாட்டை உணரலாம். கோடைக்கும் மாரிக்கும் இடையில்...! மாரி காலத்தில் அதிகம் மழைகாலம் என்பதால் இருள் கூடுவது அதிகம் என்பதாலும்.. தீபத்திருநாள் மாரிகாலத்தில் கொண்டாடப்படும் வழமை ஏற்பட்டிருக்கும். ஏன் நரகாசுரனை அழிச்சதை சித்திரையில கொண்டாடி இருக்கலாம் தானே.... ஏன் ஐப்பசி கார்த்திகையில கொண்டாடனும்..??! :D

அப்ப குளிர்காலம் போய் மாரி காலம் ஆகிவிட்டது.. கார்த்திகையில் ஐந்து ஐந்தரைக்கு சூரியன் மறைந்துவிடுமா இலங்கையில்?? அதுபோல ஆறரை ஏழு மணிக்கு சூரிய அஸ்த்தமனம் வருமா?? ஒரு மணிநேர வேறுபாடு இருந்தது தாயகத்தில் இருக்கும்வரை தெரியாமல் போய்விட்டது!! :) "கதை"களுக்கும் ஒரு அளவு உள்ளது! :)

Share this post


Link to post
Share on other sites

அப்ப குளிர்காலம் போய் மாரி காலம் ஆகிவிட்டது.. கார்த்திகையில் ஐந்து ஐந்தரைக்கு சூரியன் மறைந்துவிடுமா இலங்கையில்?? அதுபோல ஆறரை ஏழு மணிக்கு சூரிய அஸ்த்தமனம் வருமா?? ஒரு மணிநேர வேறுபாடு இருந்தது தாயகத்தில் இருக்கும்வரை தெரியாமல் போய்விட்டது!! :) "கதை"களுக்கும் ஒரு அளவு உள்ளது! :)

seasonsfull200304160945lj3.gif

உங்களுக்காகத்தான் பாருங்கோ படம் போட்டிருக்குது விளங்க..

உலகின் பருவகாலங்கள் 4. கோடைகாலம் குளிர்காலம் இலையுதிர்காலம் இலை தளிர்காலம். (ஊரில் பலா மரத்தை அவதானிச்சா இது தெரியும்..!) நம்ம ஊரில குளிர்காலம் மழை அதிகம் என்பதால் மாரிகாலம் என்றும் அழைப்பர் கண்டிங்களோ. கதையில்லைங்கோ.. படத்தைப் பாருங்கோ விளங்கும்..! இலங்கை மத்தியகோட்டுக்கு அண்மைல தான் இருக்கே தவிர மத்திய கோட்டில இல்லை. பூமியும் சரிஞ்சுதான் சுத்துதே தவிர நிமிர்ந்து நிற்கேல்ல. ஊரில நீங்க எங்க உதுகளை அவதானிச்சிருப்பியள்.. இப்ப புலம்பெயர்ந்து வடதுருவத்துக்க அல்லது தெந்துருத்துக்க வந்த உடன உதுகள் பெரிசாத் தெரியுதாக்கும். நாங்க ஊரிலேயே அவதானிச்சிருக்கமுங்கோ..!

சந்திரிக்கா அம்மையார் நேரமாற்றம் கொண்டு வரேக்க மாரிகாலம் இது சிரமமா இருக்கென்று மக்கள் குரல் கொடுக்கேல்லையோங்க. அது சரி ஊரில இருந்தாத்தானே உதுகள் தெரிய.

குளிர்காலம் என்று ஊரிலையும் இருக்குங்கோ..! ஐப்பசி தொடங்கி மாசி பங்குனி ஆரம்பம் வரை.. குளிர் இருக்கும்..! மாசிப்பனி மூசிப்பெய்யும் எண்டுவினம் தெரியுமாங்கோ.. நீங்கள் ஊரை மறந்திட்டியள் போல... நல்ல விசயம். அப்படியே தீபாவளியையும் மறக்கடிச்சிடுவம் என்று முயற்சிக்கிறியள் போல. கலோவின் பண்டிகை கொண்டாட பிள்ளைகளுக்கு மாஸ்கும் வெடியும் வேண்டிக் குடுப்பமே..??! அதெக்கெண்டால் நாங்கள் கண்ண மூடிக்கொண்டு ரெடியாகிடுவம். அப்பதான் பக்கத்திவீட்டு வெள்ளைக்காரனோட நாங்களும் சரிக்கு நிக்கிறதா தோற்றம் காட்டலாம்..! :D:D

Share this post


Link to post
Share on other sites

இலங்கையின் வடக்கு முனை 9 பாகை 50 கலை அகலாங்கில் முடிகின்றது. . பின்வரும் இணைப்பு சூரிய உதயம், சூரிய அஸ்த்தமனத்தைத் தருகின்றது. இதில் இருந்து எப்போது இருள் அதிகமாக இருக்கும் என்று நீங்களே கணித்துக் கொள்ளலாம்!

http://www.gaisma.com/en/location/jaffna.html

தீபாவளி வந்த தற்போதைய நாட்களில் பகல் பொழுது 12 மணித்தியாலங்களுக்கு சற்றுக் குறைவாக உள்ளது. அதற்காக ஒரு மணிநேரம் அதிகம் இருட்டு என்று அர்த்தமல்ல... எனவே இருளை அகற்ற ஐப்பசியில் தீபம் ஏற்ற வேண்டிய தேவையில்லை!

Share this post


Link to post
Share on other sites

இலங்கையின் வடக்கு முனை 9 பாகை 50 கலை அகலாங்கில் முடிகின்றது. . பின்வரும் இணைப்பு சூரிய உதயம், சூரிய அஸ்த்தமனத்தைத் தருகின்றது. இதில் இருந்து எப்போது இருள் அதிகமாக இருக்கும் என்று நீங்களே கணித்துக் கொள்ளலாம்!

http://www.gaisma.com/en/location/jaffna.html

தீபாவளி வந்த தற்போதைய நாட்களில் பகல் பொழுது 12 மணித்தியாலங்களுக்கு சற்றுக் குறைவாக உள்ளது. அதற்காக ஒரு மணிநேரம் அதிகம் இருட்டு என்று அர்த்தமல்ல... எனவே இருளை அகற்ற ஐப்பசியில் தீபம் ஏற்ற வேண்டிய தேவையில்லை!

இப்ப கொஞ்சம் முன்னாடி பகல் 12 மணித்தியாலம் இரவு 12 மணித்தியாலம் எண்டிச்சினம். இப்ப சற்று முன் பிந்தி எண்டீனம். குளிர்காலத்தில மழை என்ற ஒன்று பெய்யுங்கோ. அது பெய்யனுன்னா கருமுகில் என்ற ஒன்று வருமுங்கோ. அது வந்திச்சுன்னா சூரிய வெளிச்சம் பெரிசா வராதுங்கோ... மாரிகாலத்தில இது அடிக்கடி நடக்கிறதால.. குறிப்பா தமிழர்கள் வாழும் பகுதியில வடகீழ் பருவப்பெயற்சிக் காலம் குளிர்காலத்தோட வருவதால இருட்டு அதிகம். நான் ரெம்பவே அவதானிச்சிருக்கிறன் ஊரில கோடையில 7 மணி வரை கிரிக்கெட் விளையாடலாம். ஆனால் மாரியில 6 மணிக்கே பந்தைப் பாக்கிறது கஸ்டமாகிடும்..! அந்த வகையில கிடத்தட்ட ஒரு மணி நேரத்தை சுட்டிக்காட்டினம். அதுக்கும் மேல மாரிகால கார்முகில் இன்னும் வேளைக்கு இரட்டப் பண்ணிடுங்கோ. அதுதான் தீபம் ஏற்றி மக்கள் தங்களை மாரிகாலத்துக்கு ஏற்ப தயார் பண்ணுறாங்க தீபாவளியில... இதையெல்லாம் அலசிப் பாக்கிற திறனை கொள்ளாம.. நரகாசுரனை.. தேடித் தாக்கி.. கிருஷ்ணரை சாட்டி மக்களை மு.....ள் என்று திட்டி திட்டிறவை யாரெண்டு...???! :)

Date Sunrise Sunset Length Change

Today 06:02 17:45 11:43

+1 day 06:03 17:45 11:42 00:01 shorter

+1 week 06:05 17:45 11:40 00:03 shorter

+2 weeks 06:08 17:46 11:38 00:05 shorter

+1 month 06:16 17:50 11:34 00:09 shorter

+2 months 06:29 18:05 11:36 00:07 shorter

+3 months 06:31 18:17 11:46 00:03 longer

+6 months 05:50 18:23 12:33 00:50 longer

கிருபன் சார் தந்த தரவின் படி இன்றிருக்கும் சூரிய உதயம் - அஸ்தமனத்துக்கு இடையிலான நேர வித்தியாச்சத்துக்கும் 6 மாதத்துக்குப் பின்னாடி அதாவது சித்திரை/வைகாசி (கோடைகாலம்) காலப்பகுதியில் சூரிய உதயத்துக்கும் அஸ்மனத்துக்கும் இடையிலான நேர வித்தியாசத்துக்கும் இடையில் 50 நிமிடங்கள் என்பது தரவில் தரப்பட்டுள்ளதை தெளிவாகக் காணலாம். இது எமது கூற்றை தெளிவாக மெய்ப்பிக்கிறது..! கிட்டத்தட்ட ஒரு மணி நேர வேறுபாடு என்பதை...!

Share this post


Link to post
Share on other sites

உலகின் பருவகாலங்கள் 4. கோடைகாலம் குளிர்காலம் இலையுதிர்காலம் இலை தளிர்காலம். (ஊரில் பலா மரத்தை அவதானிச்சா இது தெரியும்..!) நம்ம ஊரில குளிர்காலம் மழை அதிகம் என்பதால் மாரிகாலம் என்றும் அழைப்பர் கண்டிங்களோ. கதையில்லைங்கோ.. படத்தைப் பாருங்கோ விளங்கும்..! இலங்கை மத்தியகோட்டுக்கு அண்மைல தான் இருக்கே தவிர மத்திய கோட்டில இல்லை. பூமியும் சரிஞ்சுதான் சுத்துதே தவிர நிமிர்ந்து நிற்கேல்ல. ஊரில நீங்க எங்க உதுகளை அவதானிச்சிருப்பியள்.. இப்ப புலம்பெயர்ந்து வடதுருவத்துக்க அல்லது தெந்துருத்துக்க வந்த உடன உதுகள் பெரிசாத் தெரியுதாக்கும். நாங்க ஊரிலேயே அவதானிச்சிருக்கமுங்கோ..!

இலங்கையில் வடகீழ் பருவம், தென்மேல் பருவம் என்று உண்டு.. வட பகுதியில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றினால் கார்த்திகையில் இருந்து மாசி-பங்குனி வரை மழை பொழியும். தென்மேல் பருவப் பெயற்சிக் காற்றினால் தென்பகுதிகளில் மற்றைய மாதங்களில் அதிக மழை பொழியும்.. நடுவில் மலை இருப்பதனால் மழை வடபகுதிக்குக் கிடைக்காது!

சரி இப்பருவங்கள் எப்படி உண்டாகின்றன..?

சித்திரையிலிருந்து புரட்டாதிவரை இந்திய உபகண்டத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் தாழமுக்கம் ஏற்படும். எனவே காற்று இந்து சமுத்திரத்தில் இருந்து வடபகுதி நோக்கி வீசும்.. அதிக ஈரப்பதன் கொண்ட காற்று இமயமலையைத் தாண்டி போக முடியாமல் மழையாகப் பொழியும்.

கார்த்திகை தொடக்கம்,மாசி-பங்குனி வரை மத்திய ஆசியா அதிகம் வெப்பம் இல்லாமல் இருப்பதனால், இமய மலைப் பகுதிக்கு மேற்பட்ட பகுதி குளிராகவும், இந்து சமுத்திரப் பகுதி சூடாகவும் இருக்கும். எனவே காற்று வடகீழ் பகுதியில் இருந்து தென்மேல் பகுதி நோக்கி வீசும்.. அதிக ஈரப்பதன் மழையைத் தரும்¬

சரி இதற்கும் இருள் காலத்திற்கும் என்ன சம்பந்தம்?

இருள் அதிகமாக தை மாதத்தில் உள்ளதனால், தீபாவளியைத் தை மாதத்திற்கு மாற்றலாமே!

Share this post


Link to post
Share on other sites

இப்ப கொஞ்சம் முன்னாடி பகல் 12 மணித்தியாலம் இரவு 12 மணித்தியாலம் எண்டிச்சினம். இப்ப சற்று முன் பிந்தி எண்டீனம். குளிர்காலத்தில மழை என்ற ஒன்று பெய்யுங்கோ. அது பெய்யனுன்னா கருமுகில் என்ற ஒன்று வருமுங்கோ. அது வந்திச்சுன்னா சூரிய வெளிச்சம் பெரிசா வராதுங்கோ... மாரிகாலத்தில இது அடிக்கடி நடக்கிறதால.. குறிப்பா தமிழர்கள் வாழும் பகுதியில வடகீழ் பருவப்பெயற்சிக் காலம் குளிர்காலத்தோட வருவதால இருட்டு அதிகம். நான் ரெம்பவே அவதானிச்சிருக்கிறன் ஊரில கோடையில 7 மணி வரை கிரிக்கெட் விளையாடலாம். ஆனால் மாரியில 6 மணிக்கே பந்தைப் பாக்கிறது கஸ்டமாகிடும்..! அந்த வகையில கிடத்தட்ட ஒரு மணி நேரத்தை சுட்டிக்காட்டினம். அதுக்கும் மேல மாரிகால கார்முகில் இன்னும் வேளைக்கு இரட்டப் பண்ணிடுங்கோ. அதுதான் தீபம் ஏற்றி மக்கள் தங்களை மாரிகாலத்துக்கு ஏற்ப தயார் பண்ணுறாங்க தீபாவளியில... இதையெல்லாம் அலசிப் பாக்கிற திறனை கொள்ளாம.. நரகாசுரனை.. தேடித் தாக்கி.. கிருஷ்ணரை சாட்டி மக்களை மு.....ள் என்று திட்டி திட்டிறவை யாரெண்டு...???! :)

அப்ப மாரி காலத்தில கருமுகில் அதிகம் இருந்தால் 4 மணிக்கும் இருட்டியிருக்குமே! தந்த இணைப்பின்படி சூரியவெளிச்சம் எப்பவுமே 11 மணி 35 நிமிடத்திற்குக் கீழ் போனதில்லை.. எனவே இருள் அதிகம் என்பதும் அதிலும் ஐப்பசியில் இருள் அதிகம் என்பதால் தீபாவாளியைக் கொண்டாடுவது என்பதும் பொருத்தமாகத் தெரியவில்லை..

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கும் ஒரு "கதை" வைத்திருப்பீர்களே!

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • உடையார், செயப்பிரகாசம் - ஜெயமோகன் லடாய் போன மாதம் நடந்தது. பல பதிவுகள் ஜெயமோகன் தளத்திலும் முகநூலிலும் படித்திருந்தேன். செயப்பிரகாசம் சார்பில் சட்டநடவடிக்கை (வக்கீல் நோட்டீஸ்) அனுப்ப, பதிலுக்கு ஜெயமோகன் செயப்பிரகாசம் மீது வழக்குப்போட்டிருக்கின்றார். அதை மீளப்பெறுமாறு பலர் கேட்டிருக்கின்றார்கள் என்ற மட்டில் உள்ளது. இதையெல்லாம் யாழில் இணைத்து பக்கங்களை வீணாக்க விரும்பாததால், அதைவிட பலருக்கு இவர்கள் இருவரையும் தெரியாததால், ஒட்டவில்லை.   ஜெயமோகன் செயப்பிரகாசம் பற்றி எழுதிய சில வரிகள்..  இலக்கியச்சூழலுக்கு வெளியே உள்ள அரசியல்வாதிகள்,சாதிச்சங்க ஆட்கள் இலக்கியவாதிகளை மிரட்டுவதை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். பா.செயப்பிரகாசம் சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச்சூழலில் அரசியல் பேசுபவர்கள் பொதுவாக என்னென்ன பேசுவார்களோ அதையெல்லாம் பேசியவர், அவ்வளவுதான். பார்ப்பனிய எதிர்ப்பு ,முதலாளித்துவ எதிர்ப்பு ,அமெரிக்க எதிர்ப்பு  ,ஒட்டுமொத்தமாக அரசுஎதிர்ப்பு. ஆனால் அரசின் செய்தித்தொடர்பாளராக பணியாற்றினார்.   இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை தெளிவுறுத்த விரும்புகிறேன். ஒன்று நான் மிகமிக கடுமையாக கண்டிப்பது இந்த கண்டனத்தில் பா.செயப்பிரகாசம் அவர்கள் ஒரு பொருட்படுத்தத் தக்க சிறுகதையாசிரியர் என்று சந்தடி சாக்கில் சொல்லி வைத்திருப்பதைத்தான். அதை இதில் கையெழுத்திட்டிருக்கும் எழுத்தாளர்கள் எவரேனும் ஏற்பார்கள் என்றால் அவர்கள் மேற்கொண்டு இலக்கியம் பேசாமலிருப்பதே ந
  • ஜேர்மனியால் மேற்கொள்ளப்பட்ட போலந்து தாக்குதலை அடுத்து ஹிட்லரின் எதிர்கால திட்டங்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கிய பின்னர், இதுவரை அரசியல் நகர்வுகள் மூலம் யுத்தத்தை தவிர்க்கலாம் என்று  நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள் யுத்தம் தவிர்க்கமுடியாதது என்பதை உணர்ந்து தமது நாடுகளின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கையுடன் ராணுவ ரீதியிலான சிந்திக்க தொடங்கின. அந்த வகையில் சோவியத்தின் முக்கிய நகரான லெனின்கிராட் என்று அன்று அழைக்கப்பட்ட சென்ற் பீற்றர்ஸ்பேர்க் பின்லாந்து எல்லைக்கு மிக நெருக்கமான அமைந்திருந்ததால் பின்லாந்து எல்லைகளை ஆக்கிரமிப்பதே தனது பாதுகாப்புக்கு வழி என்ற நினைத்த ஸ்ராலின் பின்லாந்து மீது தனது படை நடவடிக்கைகளை தொடங்கியது. நோர்வே மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்த பிரிட்டன் முனைந்த போதும் ஜேர்மனி முந்திக்கொண்டது.   தெற்கு பால்டிக் பிரதேசத்தை பலப்படுத்தியாகிவிட்டது என்னும் நிலையில் அடுத்து ஃபின்லாந்து மீது தனது கவனத்தை திருப்பியது சோவியத்யூனியன். ரஷியப் பேரரசின் ஒரு பகுதியாக நீடித்த ஃபின்லாந்து அக்ரோபர் புரட்சிக்கு பிறகே சுதந்திரத்தை அனுபவித்தது என்றாலும் அச்சமயம் கலவரமும் கலகமும் ஃபின்லாந்தை மாறி மாறி அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஜனநாயக நாடாக இருந்த அந்த தேசத்தை குட்டிச்சுவராக்கியவர் Baron Mannerheim. ஸார்  மன்னரிடம் (ரஷ்ய முடியாட்சியில் அதன் மன்னரை Tsar  என அழைப்பது வழக்கம்.) ஜெனரலாக இருந்தவர். இவர் வருகைக்கு பிறகு, ஃபின்லாந்து சோவியத் எதிர்ப்புக்கான அடித்தளமாக மாறியது. யார் சோவியத்தை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி, யார் ஸ்ராலினுக்கு எதிராக சதி செய்ய வேண்டுமானாலும் சரி, இங்கே இடம் உண்டு. வரவேற்பு உண்டு. பிரிட்டனின் மேற்பார்வையில் இங்கு வரிசையாக பல பாதுகாப்பு கோட்டைகள் அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஜேர்மனி தன் பங்கிற்கு விமானத்தளங்களை அமைத்துக் கொடுத்தது. மொத்தம் 2000 விமானங்களை நிறுத்தி வைப்பதற்கு போதுமான அளவுக்குப் பெரிய தளம் அது. ஃபின்லாந்திடம் அப்போது இருந்ததோ வெறும் 150 விமானங்கள் மட்டுமே. இந்த 150 விமானங்களுக்கு இத்தனை பெரிய தளம் அங்கே அமைக்கப்பட்டதற்குக் காரணம் சோவியத்திற்கு எதிரான தளமாக  அதை பிற நாடுகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்னும் நோக்கம் மட்டுமே.   பின்லாந்தின் எல்லைகளை குறித்த சோவியத்தின் கவலை ஃபின்லாந்தை பலப்படுத்தவேண்டிய, தனது எல்லைகளை பாதுகாக்கவேண்டிய அவசியம் சோவியத்திற்கு இருந்தது. எதிரி தேசங்கள் வந்து கூடாரம் அமைத்து தாக்குதல் தொடுக்கும் வரை சும்மா இருப்பதற்கில்லை. போலந்து வரை வந்துவிட்ட நாசிகளால் ஃபின்லாந்தை ஆக்கிரமிக்க எத்தனை நாள் பிடிக்கும்? பிரிட்டனும் பிரான்ஸும் கூட ஜேர்மனி பக்கம் இருப்பது போல அக்கறையில்லாமல் இருப்பதால் தனக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்லவேண்டிய அவசியம் சோவியத்திற்கு. பேசிப்பார்க்கலாம் என்று முடிவு செய்தது சோவியத். ஃபின்லாந்துக்கு சோவியத்திடம் பெறுவதற்கு சில விஷயங்கள் இருந்தன. குறிப்பாக, பொருளாதார உதவி. ஃபின்லாந்தின் பொருளாதாரம் கிட்டத்தட்ட சிதைந்து போயிருந்தது. எங்கிருந்தும் எந்த உதவியும் கிடைத்தபாடில்லை. இந்நிலையில் சோவியத் உதவிக்கரம் நீட்டினால் பற்றிக்கொள்ளும். இரண்டாவது, Leningrad Murmansk ரயில்வே பாதையைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதி. வெளியுலகத்தோடு  தொடர்பு கொள்ள வேண்டுமானால் ஃபின்லாந்துக்கு இந்த ரயில் தடம் அவசியம். சோவியத்தின் உதவி இல்லாமல் இந்தப் பாதையைப் பயன்படுத்தமுடியாது. இந்த இரு உதவிகளையும் ஃபின்லாந்துக்கு அளித்து அவர்கள் ஒப்புதலுடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாமா என்று யோசித்தது சோவியத். ஒக்ரோபர் 5, 1939 அன்று ஃபின்லாந்தை தொடர்பு கொண்டது சோவியத். உங்கள் பிரதிநிதி யாரையாவது அனுப்பி வையுங்கள். தொங்கலில் இருக்கும் சில விஷயங்களைப் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். ஃபின்லாந்தின் எதிர்வினை விசித்திரமாக இருந்தது. உடனடியாக தனது எல்லையில் ராணுவத்தைக் குவித்தது. தலைநகரம் ஹெல்ஸின்கியில் இருந்து பெண்களையும் குழந்தைகளையும் துரிதமாக அப்புறப்படுத்த ஆரம்பித்தது. பங்கு சந்தையை இழுத்து மூடியது, கையோடு அமெரிக்காவையும் தொடர்பு கொண்டது. ஆபத்தில் இருக்கிறோம், உதவி தேவை. சோவியத்திற்கு புரியவில்லை. அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டோம்? ஏன் இந்த அநாவசிய பீதியும் குழப்பமும்? உட்கார்ந்து பேசலாம் என்று மட்டுமே சொன்னோம். பிறகு , புரியவைத்தார்கள். உங்கள் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து லெனின்கிராட் (தற்போதைய பெயர் சென்ற் பீற்றர்ஸ்பேர்க்) தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறது. அரசியல் குழப்படியும் பொருளாதாரக் குழப்படியும் அதிகம் இருக்கும் உங்கள் தேசத்தால் உங்கள் எல்லைகளை பாதுகாகமுடியாது. நீங்கள் அவ்வாறு தவறும் பட்சத்தில் உங்கள் எல்லைகள் எதிரிகளால் கைப்பற்றப்படும். இது சோவியத்தில் நலன்களுக்கு அச்சுறுத்தலானது. நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுவொன்றுதான். லெனின்கிறராடில் இருந்து உங்கள் எல்லையை பின்னோக்கிக் கொண்டு செல்லுங்கள். கடல்புறத்தில் உள்ள சில சிறிய தீவுகளை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். பதிலுக்கு இதைவிட கூடுதல் நிலப்பரப்பை உங்களுக்கு வழங்குகிறோம். கூடுதல் என்றால் கிட்டத்தட்ட இரட்டிப்பு. தற்போதைய நிலபரப்பைப் போலவே வளமானதாக அந்தப் பிரதேசம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுகிறோம். இன்னொரு உதவியும் வேண்டும். லெனின்கிராடோடு இணைக்கும் Hangoe அல்லது வேறு ஏதேனும் ஒரு நுழைவாயிலை எங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு லீசுக்கு கொடுங்கள். பாதுகாப்புக்காக கடல்படை தளத்தை அங்கே அமைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஆரம்பத்தில் அதற்கு இணங்குவதை போல் காட்டிக்கொண்டாலும்,  ஃபின்லாந்தின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் கோரிக்கைகளைத்தான் சோவியத் எழுப்பியுள்ளது என்று அரசாங்க அறிவிப்பை வெளியிட்டார் அதிபர் கஜன்டேர். பிறகுதான் பின்வாங்க ஆரம்பித்தது ஃபின்லாந்து. தருகிறோம் ஆனால் இப்போது இல்லை. முப்பது வருடம் ரொம்ப அதிகம். வேண்டுமானால் ஒரு சில ஆண்டுகள் போட்டுக்கொள்ளலாம். இரு மடங்கு பிரதேசம் போதாது. கூடுதல் பிரதேசம் தேவை. ஒரு மாதத்திற்கு இழுத்தடித்தார்கள். ஏதேதோ காரணங்கள் சொன்னார்கள். நியூயோர்க் ரைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டது. ஃபின்லாந்து சோவியத்தோடு உடன்படிக்கை செய்து கொள்ள தயக்கம் காட்டுவதற்கு காரணம் அமெரிக்காவின் ராஜதந்திரம். சோவியத்தோடு சேராமல் ஃபின்லாந்திடம் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தன. சோவியத்திற்கு புரிந்துவிட்டது. இனி ஃபின்லாந்து பயன்படாது. எதிரணியில் சிக்கிவிட்டது. சோவியத்தின் யூகம் சரிதான் என்பது நவம்பர் இறுதியில் தெளிவானது.   சோவியத் – பின்லாந்து யுத்தம் – Winter war   நவம்பர் 30,1939 அன்று சோவியத் படைகள் ஃபின்லாந்துக்குள் நுழைந்தன. ஃபின்லாந்து போர்பிரகடனம் செய்தது. பனிக்கால போர் (Winter war) என்று இந்த யுத்தம் அழைக்கபட்டது. இந்த யுத்தம் நடைபெற்ற போது வெப்பநிலை கிட்டத்தட்ட -45 பாகையாக இருந்தது.    கையோடு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து உதவியையும் கோரியது. ஐரோப்பிய நாடுகள் ஃபின்லாந்திற்கு ஆதரவு கொடுத்தன. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் சோவியத் செய்தது  தவறுதான். என்ன இருந்தாலும் சிறிய நாடான ஃபின்லாந்தின் மீது  சோவியத் போர் தொடுத்தது முறைகேடான செயல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வேலை. சோவியத்தால் ஐரோப்பா போர்களமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்நிய நாடுகள் மீது தலையிடுவதே அதன் வேலையாகப் போய்விட்டது. லீக் ஒஃவ் நேஷன்ஸ் உடனடியாக சோவியத்தை விலக்கிவைத்தது. ஆச்சரியம் என்று தான் சொல்லவண்டும். செக்கோஸ்லவாக்கியா, போலந்து என்று ஹிட்லர் வரிசையாக ஒவ்வொரு நாடாக கபளீகரம் செய்து வந்த போது சும்மா இருந்த லீக், சோவியத் என்றதும் உடனடி நடவடிக்கை எடுத்தது  விநோதம் தான். ஃபின்லாந்து மீதான சோவியத்தின் தாக்குதல் குறித்து பல வரலாற்றாசிரியர்கள் வேறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளர்கள். சில கருத்துக்கள் பின்லாந்து மீது சோவியத் ஆக்கிரமிப்பு என்றும், வேறு சில கருத்துக்கள் யுத்த மேகங்கள் சூழ்ந்து வருகையில் சோவியத்யூனியன் தனது எல்லைப்பாதுகாப்பிற்காக எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறுகின்றன. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மூன்றும் பெரும்குரல் எழுப்பின. ஐயோ நாம் தான் அப்போதே சொன்னோமே. நாம் பயப்படவேண்டியது ஹிட்லரை பார்த்து அல்ல. ஸ்டாலினை பாரத்துதான். எப்படி நம் கண்முன்பாகவே ஃபின்லாந்தை ஆக்கிரமிக்கிறார்கள் பாருங்கள். கம்யூனிசம் எத்தனை ஆபத்தான சித்தாந்தம் என்று படித்து படித்துச் சொன்னோமே, பார்த்தீர்களா? முதலாளிகள் முதலாளித்துவம் என்று நம்மை திட்டிக்கொண்டிருந்தார்களே, பாருங்கள். சோவியத்தின் ஆக்கிரமிப்பு யுத்தம் இப்படித்தான் இருக்கும். உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள் சோவியத்தை வீழ்த்துவோம். முதலாளித்துவத்தை செழுமைப்படுத்துவோம். சோவியத்தை பொறுத்தவரை அது லெனின்கிராட்டை பாதுகாப்பதற்கான போர். ஆகவே தயங்காமல் முன்னேறினார்கள். முதல் கட்டமாக ஃபின்லாந்தின் ஆர்டிக் துறைமுகம் கைப்பற்றபட்டது. லெனின்கிராட்டை நெருங்குவதற்கான மார்க்கமாக அது அமைந்தது என்பதே காரணம். இதற்கு இரு வாரங்கள் பிடித்தன. இரண்டாம் கட்ட போர், ஆமை வேகத்தில் நடந்தது. கடும் குளிர் தொடங்கியிருந்தது. மூன்றவாவது கட்டம், வான்வழித் தாக்குதல். ஃபின்லாந்தின் ராணுவத் தளங்கள் தேர்வு செய்யப்பட்டு தாக்கியழிக்கபட்டன. ஆயதத் தொழிற்சாலைகள் ரயில்ப் பாதைகள், துறைமுகங்கள், விமானத்தளங்கள் ஆகியவை மீது குண்டுகள் வீசப்பட்டன. நான்காம் கட்ட போர் ஒரு மாத காலும் நீடித்தது. நோக்கம் Mannerheim Line பகுதியை உடைத்து முன்னேறுவது. ஊடுவல் கடினமானது என்று கருதபட்ட இந்தப் பகுதியில் வரிசை வரிசையாக பாதுகாப்பு கோட்டைகள் எழுப்பப்பட்டிருந்தன. இதை அகற்ற முடிவு செய்த சோவியத், பலமான பீரங்கிகளை உருட்டிக்கொண்டு வந்தது. பாதுகாப்பு அரண்களைத்தான் முதலில் தாக்கினார்கள். அரண்கள் அமைக்கப்படிருந்த அடித்தளம் தகர்க்கப்பட்டது, பிறகு கோட்டை விழுந்தது. மார்ச் 12, 1940 அன்று மாஸ்கோவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஃபின்லாந்துக்கும் சோவியத்திற்கும் இடையில் தூதுவர் போல செயற்பட முடியும். என்று கேட்கப்பட்ட போது பிரிட்டன் மறுத்துவிட்டது. பிரான்ஸுக்கும் விருப்பமில்லை. சோவியத் ஃபின்லாந்தை முடியடித்ததையும், கடினமான பாதுகாப்பு அரண்களை தகர்த்ததையும், இறுதியில் சோவியத்திடம் ஃபின்லாந்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டதையும் இந்த இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீ ஏன் சோவியத்துடன் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று சண்டைக்கு வந்தார் டலாடியர். என்னையும் சாம்பரலைனையும் விட ஸ்டாலின் பலம் வாய்ந்தவரா? ஃபின்லாந்தை காரணமாக வைத்து சோவியத் மீது போர் தொடுக்கவேண்டும் என்று இந்த இரு நாடுகளும் கணக்கு போட்டு வைத்திருந்தன. ஆனால், அதற்குள் சோவியத்  போரை முடித்து கொண்டுவிட்டது. சோவித்துக்கும் ஃபின்லாந்துக்கும் இடையில் இணைப்பாக செயல்பட ஸ்வீடன் ஒப்புக்கொண்டபோது பிரிட்டனும் பிரான்ஸும் முகத்தை சுளித்துக்கொண்டன. சோவியத் Mannerheim Line பகுதியை இணைத்துக்கொண்டது. ஹாங்கோ கைப்பற்றப்பட்டது. அதே சமயம், Petsamo என்னும் பகுதியையும் அதிலுள்ள நிக்கல் சுரங்கதையும் ஃபின்லாந்திடமே திருப்பித் தந்தது. நவம்பர் 30, 1939 தொடக்கிய போர் மார்ச்13, 1940 ல் முடிவடைந்தது. 20, மார்ச் 1940 மாதம் பிரான்ஸ் பிரதமர் டலாடியர் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஃபின்லாந்தை காப்பாற்ற முடியாததால் எழுந்த கடும் விமர்சனங்களால் எடுக்கப்பட்ட முடிவு. பின்னர் பவ்ல் ரெனாய்ட் (Paul Reynaud) பொறுப்பேற்றுக்கொண்டார். சோவியத் லெனின்கிராட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய பகுதிகளை மாத்திரம் தேர்வு செய்து அவற்றை மட்டும் இணைத்துக்கொண்டது. இது ஆக்கிரமிப்பு போர் அல்ல, பாதுகாப்பு போர் தான் என்பதை அழுத்தமான பதிவு செய்தது. ஸ்வீடனின் ஆதரவு இதில் சோவியத்திற்கு கிடைக்காமல் விட்டிருந்தால் பிரிட்டனும் பிரான்ஸும் சோவியத்திற்கு எதிராக போரை தொடுக்க கூடி நிலைமை இருந்தது. போலந்து பிறகு ஃபின்லாந்து. சோவியத்தின் தொடர் வெற்றி பிரிட்டனையும் பிரா்னஸையும் ஆட்டம் காணச் செய்தது. சோவியத்யூனியனுக்கு இத்தனை பலமா? பொதுவுடமை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், தொழிற்சங்கம் என்று பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது இத்தனை சக்தி. ஃபின்லாந்து கோட்டையை தகர்த்து தவிடுபொடியாக்கும் படியான நவீன பீரங்கிகளை இவர்கள் எப்படிப்பெற்றார்கள். ஐயோ, நாம் நினைத்ததை விட அதிக பலமுள்ள தேசமாக அல்லவா இருக்கிறது சோவியத்யூனியன்? இத்தனை அபாகரமானவரா ஸ்ராலின்?  இது நமக்கு அச்சுறுத்தல் தான். சோவியத்தின் வெற்றி ரூமேனியாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது. அடுத்து ஒரு வேளை நம்மிடம் திரும்புவார்களோ? ரூமேனியாவின் அச்சத்திற்கு காரணம் பெஸ்ஸராபியா (Bessarabia) முதல் உலகப் போர் முடிவில், அதாவது 1918 ல், சோவியத்யூனியனிடம் இருந்து பெஸ்ஸராபியாவை கைப்பற்றியிருந்தது ரூமேனியா. லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி வெற்றி பெற்று, புதிய சோவியத் அரசை கட்டுமானம் செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. இனியொரு போர் வேண்டாம் என்று போல்ஷ்விக் கட்சி முடிவு செய்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரூமேனியா பெஸ்ஸராபியாவை ஆக்கிரமித்து இணைத்துக்கொண்டது. சோவியத்தின் பலம் இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுவிட்டதால், தன் மீது சோவியத் போர் தொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தது ரூமேனியா. சோவியத் போர் தொடுக்கவில்லை. ஆனால் பேசியது. நீங்கள் செய்தது தவறு. திருப்பிக்கொடுத்துவிடுங்கள். ரஷ்ய கப்பல்கள் Danube பகுதிக்குள் நுழைந்தன.  போர் எதுவும் தேவைப்படவில்லை. ரூமேனியா அடிபணிந்தது. பார்டிக் முதல் கருங்கடல் வரை Hangoe   முதல் Danube வரை எல்லைகளைப் பலப்படுத்தி விட்டாயிற்று. ஸ்ராலின் சற்றே சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். ஹிட்லர் நிமிர்ந்து உட்கார்ந்தார். மேற்குலக நாடுகளிடம் இருந்து எந்தவித தொந்தரவும் இதுவரை இல்லை. இன்னும் சொல்லப்போனால் என்னை கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம் அவர்கள் உதவிதான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே அபாயம் சோவியத்யூனியன். போலந்து, ஃபின்லாந்து என்று அடுத்தடுத்து அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் புதிய எச்சரிக்கை செய்தியை அனுப்பிக்கொண்டிருக்கின்றன. இவர்களைத் தடுத்து நிறுத்தியாகவேண்டியுள்ளது. ஆரம்பிக்கலாம்.   நோர்வே மீது ஹிட்லரின் பார்வை நோர்வேயை தேர்வு செய்திருந்தார் ஹிட்லர். ஜேர்மனிக்கு பிரிட்டன் வைத்திருந்த செக்மேட் நோர்வே. முதல் உலகப்போர் சமயத்தில் வைத்த செக்மேட் அது. ஜேர்மனியின் தொழில் உற்பத்திக்கு(எனவே ஆயுத உற்பத்திக்கும்) இரும்பு இறக்குமதி அவசியம். ஜேர்மனி தனது இரும்பு தேவைகளுக்கு நோர்வே துறைமுகத்தைத்தான் சார்ந்திருந்தது. வடக்கு ஸ்வீடனில் உள்ள சுரங்கங்களில் இருந்து கொண்டுவரப்படும் இரும்பு நோர்வே துறைமுகம் வழியாக ஜேர்மனிக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். முதல் உலகப்போருக்கு பிறகு ஜேர்மனியின் இரும்பு போக்குவரதைக் கண்காணிக்கவேண்டும் என்பதற்காக பிரிட்டன் தனது ராணுவத்தளத்தை நோர்வேயில் அமைந்திருந்தது. நோர்விக் என்னும் துறைமுகத்திற்கு அருகில். ஒக்ரோபர் 1939 ல் இது குறித்து ஹிட்லரிடம் தெரிவிக்கபட்டது நோர்வே நமக்கு முக்கியம். ஒரு வேளை பிரிட்டன் கைப்பற்றிவிட்டால் நாம் முடங்கிவிடுவோம். ஆயுதத் தொழிற்சாலை முடங்கிப்போகும். பிரிட்டனுக்கு முன்னால் நாம் முந்திக் கொள்ளவேண்டியது அவசியம். உங்கள் போர்த் திட்டத்தில்  நோர்வே இருக்கட்டும். அதெற்கென்ன ஆகட்டும் என்றார் ஹிட்லர். திட்டத்தை விரிவாக்குபவர்களை அவர் எப்போதும் கடிந்து கொண்டதில்லை. பிரிட்டனும் நோர்வே குறித்து தான் சிந்தித்துக்கொண்டிருந்தது. பிரிட்டிஷ் போர் கபினெட்டில் அப்போது புதிதாக இணைந்து கொண்டிருந்த சேர்ச்சில், நோர்வே மீது தீவிர ஆர்வம் செலுத்துபவராக இருந்தார். சாம்பர்லைனிடம் விரிவாக பேசினார். நோர்வே நமக்கு அவசியம். நோர்வே துறைமுகத்தை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிச்சயம் ஜேர்மனி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும். இதையே சாக்காக வைத்து நோர்வேயை நாம் கைப்பற்றிவிடலாம். என்ன சொல்கின்றீர்கள். பின்னால் இது தான் நடந்தது என்றாலும் அப்போதைக்கு சாம்பர்லைன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தயங்கினார். ஹிட்லர் இன்னொரு காரியம் செய்தார். பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் அமைதி ஒப்பந்தக் கோரிக்கை அனுப்பிப்பார்த்தார். ஒக்ரோபர் 10 ம் திகதி பிரிட்டன் ஜேர்மனியின் அமைதிக் கோரிக்கையை நிராகரித்தது. இரு தினங்களை கழித்து பிரான்ஸும் அதையே செய்தது. சரி போ என்று விட்டுவிட்டார் ஹிட்லர். திட்டத்ததை முன்னெடுத்து செல்வதில் அவருக்கு எந்தவித தயக்கமும் இல்லை. டிசம்பர் 19, 1939 ல் இருந்தே யோசிக்க ஆரம்பித்துவிட்டார். ஒரே ஒரு ராணுவ டிவிசன் போதும் முடித்துவிடலாம் என்று ஆரம்பத்தில் திட்டமிட்டனர். பின்னர் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இரண்டு அம்சங்கள் மிகவும் முக்கியம் என்று கணித்தனர். ஒன்று, அச்சமூட்டுவது. எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தப்படவேண்டும். நோர்வேயை ஆச்சரியத்திலும் ரத்தத்திலும் ஒரே நேரத்தில் மூழ்கடிக்கவேண்டும். அங்கே ஏதோ சலசலப்பு கேட்கிறதே என்று சாம்பரலைன் திரும்பி பார்ப்பதற்குள் இந்த பிரதேசம் ஜேர்மனிக்கு சொந்தமானது என்னும் பலகையை மாட்டி நம் ஆட்களை நிறுத்திவிடவேண்டும். இரண்டாவது அம்சம், ராணுவ பலம். நவீன அதிவேக ஜேர்மன் போர்க்கப்பல்களை இந்த தாக்குதலின் போது நாம் பயன்படுத்தவேண்டும். அதற்கேற்றாற்போல விரிவாகத் திட்டமிடவேண்டும். துரிதமாக தாக்குதலை ஆரம்பித்து ஒவ்வொரு பிரதேசமாக கைப்பற்றிக்கொண்டே செல்லவேண்டும். சுதாகரிப்பதற்கு அவகாசம் கொடுத்துவிடக்கூடாது. போர்கப்பல்கள் மட்டுல்லாமல், விமானப்படை, ரைஃபிள் பிரிகேட், காலாட்படை அனைத்தும் தயாராகவேண்டும்.  தலைநகரம் ஒஸ்லோவும் அருகிலுள்ள நகரங்களும் பேர்கன், நார்விக், ற்ரொம்ஸோ, ற்ரொன்ட்ஹைம், ஸ்ரவாங்கர். (Oslo, Bergen, Narvik, Tromsö, Trondheim, Stavanger) திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு ஜெனரல் von Falkenhorst என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் முதல் உலகப்போரின்போது ஃபின்லாந்தில் பணியாற்றியவர். பிரதேச முன் அனுபவம் கொண்டவர். திட்டம் முழுமையடைந்ததும் அதற்கு ஒரு செல்லப்பெயர் சூட்டப்பட்டது. – Operation Weserübung. மார்ச் முதலாம் திகதி ஹிட்லர் திட்டத்தை கொஞ்சம் நீடித்தார். எப்படியும் பெரும்படையுடன் போகப்போகிறோம். நோர்வேயுடன் சேர்ந்து கூடவே டென்மார்க்கையும் கைப்பற்றிவிடலாமே!  இப்போது விட்டால் அதற்கென்று தனியே ஒரு நடை போகவேண்டியிருக்கும். இரண்டையும் முடித்து விட்டு வந்தால் ஒரு வேலை தீர்ந்தது. என்ன சொல்கின்றீர்கள்? டென்மார்க் முக்கியமான பிரதேசம் என்பதில் சந்தேகம் இல்லை. சிறிய நாடு. ஆனால் ஜேர்மனியின் எல்லையோடு சேர்த்து ஒட்டிக்கொண்டுள்ள நாடு. சோவியத் அதன் எல்லைகளை காத்துக்கொண்டதை போல் நாங்களும் எங்கள் எல்லைகளை காத்துக்கொள்ள வேண்டாமா? நாளையே டென்மார்க்கை நுழைவாயிலாகக் கொண்டு சோவியத்தோ பிரிட்டனோ தாக்காது என்று என்ன நிச்சயம்?  அத்துடன் நோர்வே மீதான தாக்குதலுக்கு டென்மார்க் பின்தளமாக பாவிக்க வேண்டிய அவசியம் உண்டு. மற்றொரு பக்கம், ஜேர்மனி கைப்பற்றுவதற்குள் நாம் நோர்வேயைச் சுற்றி வளைத்து விட வேண்டும் என்னும் நோக்கில் வேகவேகமாக பாய்ந்து முன்னேறியது பிரிட்டன். போரில் யாருடனும் கூட்டுச் சேராமல் தனித்து இருந்த நோர்வேயின் நடுநிலைத் தன்மையை முதலில் குலைத்தது பிரிட்டன் தான். பிரிட்டனின் அத்துமீறல் ஹிட்லரை திருப்திப்படுத்தியது. நாளை யாரும் ஜேர்மனியை குறைகூற முடியாது. அப்படி சொல்வதாக இருந்தாலும் பிரிட்டனைத் தான் முதல் ஆக்கிரமிப்பாளர் என்று அழைக்கவேண்டியிருக்கும். பிரிட்டன் கடற்படை தயாரானது, ஏப்ரல் 8ம் திகதி நோர்வேக்குள் பிரிட்டன் காலடி எடுத்து வைத்தது. ஜேர்மனி வரும் என்று தெரியும். நோர்வேயை கைப்பற்றும் என்றும் தெரியும். அப்படி நடக்கும் சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று பிரிட்டன் திட்டமிடவில்லை. வீரர்களும் குழம்பி நின்றனர், ·        பிரிட்டன் வருவதை நோர்வே விரும்பவில்லை, ஜேர்மனி விரும்பவில்லை. எதிர்க்கிறார்கள். நாம் என்ன செய்யவேண்டும்? ·        ஜேர்மனியை எதிர்த்து போராடவேண்டுமா அல்லது நோர்வேயை எதிர்த்தா? ·        சுரங்கங்களை நாம் என்ன செய்யவேண்டும்? அவற்றை கைப்பற்றுவது மட்டும் தான் நம்முடைய பசியா அல்லது நோர்வேயை பாதுகாக்க வேண்டுமா?   பிரிட்டன் குழம்பி தவித்த வேளையில் ஜேர்மனி ஏப்ரல் 9, 1940 அதிகாலை வேளை டென்மார்க்கை தாக்கியது. இது இருமுனை தாக்குதல். ஒரு பக்கம், ஜேர்மானிய தூதர் Renthe Fink  டென்மார்க்கில் அயல் துறை அமைச்சரிடம் பேசிக்கொண்டிந்தார். பிரிட்டனும் பிரான்ஸும் உங்களைத் தாக்குவதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நிகழலாம். உங்களை அவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு ஜேர்மனி முடிவு செய்துள்ளது. எங்கள் படைகள் வந்துகொண்டிருக்கின்றன.(அவர் பேசிக்கொண்டிருந்தபோது, படைகள் உள்ளே நுழைந்துவிட்டன.) எதிர்ப்பு காட்டவேண்டாம். அநாவசியமாக சங்கடப்படவேண்டாம். சரணடைந்துவிடுங்கள். மிச்சத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஒருவேளை நீங்கள் இதற்குச் சம்மதம் தெரிவிக்க மறுத்தால், உங்கள் தலைநகரம் கோப்பன்ஹேகன் மீது குண்டுகள் வீசப்படும். வேறு வழி தெரியவில்லை. ஏப்ரல் 9, 1940 அன்றே மிக குறுகிய நேரத்தில் டென்மார்க் சரணடைந்தது. சண்டை சில மணி நேரங்களே நடைபெற்றதால் இழப்புகளும் மிக குறைவாகவே இருந்தது.   நோர்வே யுத்தம். ஏப்ரல் 8,1940 ல் நோர்வே தாக்குதல் ஆரம்பித்திருந்தது. வான் வழி, தரை வழி, கடல் வழி மூன்றிலும் தாக்குதல் கொடுத்தது ஜேர்மனி. இரண்டு மாதங்கள் நீடித்த இந்த யுத்தம், ஜுன் 10, 1940 ல் முடிவடைந்தது. நேச நாடுகளின் ஆதரவையும் தாண்டி ஜேர்மனி நோர்வேயை முறியடித்து ஆக்கிரமித்தது. டென்மார்க்கைப் போல் அல்லாமல், நோர்வே எதிர்ப்பு யுத்தத்தை இறுதிவரை நடத்திய பிறகே சரணடைந்தது. வடக்கு பகுதியில் நார்விக் துறைமுகத்திற்காக மிக கடுமையான யுத்தம் நடைபெற்றது. நோர்வே, பிரிட்டன், பிரான்ஸ், போலந்து ராணுவத்தின் கூட்டு அணி நார்விக் துறைமுகத்திற்காக கடும் சண்டையிட்டது. Battle of Narvik என்று அடையாளப்படுத்தப்பட்ட இந்த யுத்தம் பல கட்டங்களாக நடைபெற்றது. மே 28 ம் திகதி, ஜேர்மனியை முறியடிக்கவும் செய்தது. ஆனால் ஜுன் 9 ம் திகதி ஜேர்மனி நார்விக்கை மீண்டும் கைப்பற்றியது. இத்துடன் முடிந்து விடவில்லை. ஸ்வீடனையும் தொட்டுப் பார்த்தது ஜேர்மனி. நார்வே, டென்மார்க் மற்றும் பால்டிக் கடல் பகுதிகளை கைப்பற்றிய பிறகு ஸ்வீடனையும் சுற்றி வளைத்தது. ஸ்வீடன் அவர்களுக்கு தேவையில்லை. தேவை ராணுவத் தளபாடங்களையும் துருப்புக்களையும் ஸ்வீடன் வழியாகக் கொண்டு செல்வதற்கு அனுமதி மட்டுமே. ஸ்வீடன் நடுநிலை வகித்த நாடு என்பதால் ராணுவ வழிமுறைகள் பிரயோகிக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஜுன் 18, 1940 ல் ஓர் உடன்படிக்கையை செய்துகொண்டார்கள்.   பிரிட்டனில் அரசியல் குழப்பம் மே 7 மற்றும் மே 8,1940 ல் பிரிட்டன் கொமன்ஸ் சபையில் சூடான விவாதங்கள் நடைபெற்றன. ஆரம்பித்து வைத்தவர் சேர் ரோஜர் கீஸ். அட்மிரல். (Sir Roger Keyes) நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. ராணுவச் சீருடையை நான் இங்கே அணிந்து வந்ததன் காரணம் என் சக ராணுவத்தின் கவலையை  இங்கே தெரியப்படுத்த தான். என் நண்பர்கள் அனைவரும் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். கடல்படையை குறை சொல்லமுடியாது. நாங்கள் முழு பலத்துடன் தான் இருக்கிறோம். பிரச்சனை, தலைமையில் தான்.   பிரதமர் சாம்பர்லைன் பதவி விலகல் – புதிய பிரதமராக சேர்ச்சில் சாம்பர்லைன் மீது பரவலாக அதிருப்தி பரவியிருந்ததை அனைவரும் அறிவர் என்றாலும் முதல் முதலாக அதை அழுத்தமாக பதிவு செய்தவர் ரோஜர் கீஸ் தான். இவர் அமர்ந்ததும், சாம்பர்லைன் கட்சியை (கன்சர்வேடிவ் கட்சி) சேர்ந்த லியோ அமரி (Leo Amery) எழுந்தார். எனக்கு இந்த ஆட்சியில் சிறிதளவும் திருப்தியில்லை. போர் விவகாரங்களை நம் பிரதம மந்திரி நாம் எதிர்பார்த்தவாறு கையாளவில்லை. மிகவும் வருத்தமளிக்கக்கூடிய செயல் இது. புதிய தேசிய அணி ஒன்று உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், முதல் உலகப் போரில் பிரதமர் லாயின் ஜோர்ஜ்க்கு கீழ் ராணுவ கபினெட் ஒன்று செயற்பட்டு வந்ததைப் போல் இப்போதும் ஒரு கபினெட் ஆரம்பிக்கவேண்டும். எதிரிகளோடு மோதி அழிக்கும் வலுவும் தீரமும் கொண்டவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும். வெற்றிமீது தீரா காதல் கொண்ட ஒருவர் நமக்கு தேவை. இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் புகழ் பெற்ற ஒரு வாக்கியத்தையும் சொல்லி தன் உரையை முடித்துக்கொண்டார். உருப்படியாக ஒன்றையும் செய்யாமல் மிக நீண்ட காலமாக இங்கே அமர்ந்திருக்கிறாய். உடனே வெளியேறு. கடவுளின் பெயரால் சொல்கிறேன் வெளியேறு. மறுநாள், எதிர்க்கட்சி தலைவர் (லேபர் கட்சி) ஹெர்பேர்ட் மாரிஸன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். ஓ செய்யலாம், வாக்கெடுப்பு நடத்தினால்தான் எனக்கு இங்கே எத்தனை நண்பர்கள் என்று தெரியவரும். நான் தயார் என்னை என் நண்பர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்றார் பிரதமர் சாம்பர்லைன். நிச்சயம் நான் இல்லை என்று தன் கையை உயர்த்தினார் கன்சர்வேடிவ் உறுப்பினர் ராபேர்ட் பூத்பை. முதல் உலகப்போரில் பிரிட்டன் வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்தவர் என்று அறியப்பட்ட முன்னாள் பிரதமர் லாயிட் ஜோர்ஜ் எழுந்தார். நம் பிரதமருக்கு நண்பர்கள் யார் என்பது இங்கே முக்கியமல்ல. அது பிரச்சனையும் அல்ல. தேசம் நிறைய தியாகங்கள் செய்யவேண்டும் என்று சாம்பர்லைன் சமீபத்தில் சொல்லியிருக்கிறார். தியாகம் செய்ய இந்த தேசம் தயாராக இருக்கிறது அதற்கான ஒரு தலைமை உருவானால். என் விண்ணப்பம் இது தான். நம் பிரதமர் முதலில் தன் பதவியை தியாகம் செய்யட்டும். இறுதியாக சேர்ச்சில் பேசினார். சண்டை சச்சரவுகள் இதோடு சாகட்டும். தனிப்பட்ட சண்டைகளை மறப்போம். நம் வெறுப்பை நம் எதிரி மீது காட்டுவதற்காக சேமித்து வைப்போம். கட்சி நலனை புறக்கணிப்போம். அது இப்போது முக்கியமல்ல. நம் சக்தியை ஒன்று திரட்டுவோம். நம் தேசத்தின் ஒட்டு மொத்த வலிமையையும் ஒன்றாக்குவோம். பலமாக குதிரைகள் நம் தேசத்தை முன்னால் இழுத்துச்செல்லட்டும். விவாதத்தை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சாம்பர்லைன் தோற்றுப்போனார். மே 10 ம் திகதி சாம்பர்லைன் தனது பதவியை துறந்தார். சேர்ச்சில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.(கன்சர்வேடிவ் கட்சி தலைவராக சாம்பர்லைன் நீடித்தார்) கன்சர்வேடிவ்க் கட்சி, லிபரல் கட்சி, லேபர் கட்சி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நபர்களை தேர்ந்தெடுத்து புதிய கூட்டணியை உருவாக்கினார் சேர்ச்சில். நோர்வே டிபேட் அல்லது நார்விக் டிபேட் என்று இந்த சம்பவம் அழைக்கப்படுகிறது. ஃபின்லாந்து தாக்குதலின் போதும் சரி, நோர்வே தாக்குதலிலும் சரி பிரிட்டன் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. ஜேர்மனியை வளரவிட்டது தவறு போன்ற குற்றச்சாட்டுகள் சாம்பர்லைன் மீது சுமத்தப்பட்டன. அதன் விளைவு தான் இந்த சூடான விவாதம். சாம்பர்லைனை ஆதரித்த பலரே அவருக்கு எதிராக திரும்பினர். சாம்பர்லைனின் அரசியல் அணுகுமுறையை தொடக்கம் முதலே தீவிரமாக எதிர்த்து வந்த சேர்ச்சில், இந்த முறையும் தன் தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தினார். சோவியத்துக்கும் ஃபின்லாந்துக்கும் இடையிலான போரின் போது ஃபிரெஞ்சு பிரதமர் டிலாயர் பதவி விலகியதை போலவே ஜேர்மனி நோர்வே போரின் காரணமாக பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லைன் பதவி விலகவேண்டிவந்தது. (தொடரும்)   நூல்  இரண்டாம் உலகப்போர் எழுதியவர்  மருதன் வெளியீடு கிழக்கு பதிப்பகம்  2009 மே
  • புயலிலே ஒரு தோணி: எக்காலத்துக்குமான படைப்பு. சுயாந்தன்     எளிய வாசகனாக இருந்த எனது வாசிப்பின் தொடக்கம் கல்கியில் இருந்து ஆரம்பித்தது. சடுதியாக ஜெயமோகனை வந்தடைந்தேன்.  பாலையில் இருந்து மருதம் வந்தது போன்ற ஆதூரவுணர்வு என்னுள் ஏற்பட்டது என்றே கூறுவேன். அதன் பின்பு ஒரு காலமும் நான் வணிக எழுத்துக்களின் பக்கம் சென்றதில்லை. அதனை ஒரு பொருட்டாக மதிக்கவும் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் கொண்டுள்ளேன். அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரத்தில் இந்த வணிக எழுத்துக்கான எதிர்ப்பு விதைகள் உள்ளன என்று அதனை வாசிக்கும் நாம் ஒவ்வொருவரும் உணரமுடியும்.    அண்மையில் ப.சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி நாவல் வாசித்து முடித்தேன். இதனை வாசித்ததும் என்னுள் ஒரு விபரீதமான எண்ணம்  தோன்றியது. ஆங்கில யுத்தத் திரைப்படங்களைக் காணும் எந்த எளிய ரசிகனுக்கும் உண்டாகும் யுக்தியற்ற எண்ணப்பாடு இது. அதாவது இந்நாவலைத் தமிழில் திரைப்படமாக்கினால் எந்த இயக்குநருக்கும் நடிகருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று. உண்மையில் என்னிடம் தெரிவுகளே இல்லை. இந்நாவலைத் தமிழில் திரைப்படமாக்கும் தொழிநுட்ப மற்றும் ஏனைய உத்திகள் இல்லை. இம்முயற்சி இந்நாவலைச் சிறுமைப்படுத்தும். அந்த அளவுக்கு இந்நாவலின் தரம் அதீதமானது. இந்நாவலின் வாசிப்பு எனக்கு அபரிமிதமான அனுபவங்களை உண்டாக்கியது. குறிப்பாக வணிக எழுத்துக்கும் தீவிர எழுத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை அறியத்தந்தது என்றும் கூறமுடியும்.    பாண்டியன் என்ற கதாபாத்திரம் ஒரு இலட்சிய பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளது. பலர் இக்கதாபாத்திரத்தை அராஜநாயகன் என்று குறிப்பிடுகின்றனர். அது மேலோட்டமான வாசிப்பின் வெளிப்பாடு.     நாவலில் "தமிழ்ப் பேரவை" என்றொரு அத்தியாயம் வருகிறது. இது நாவலில் முக்கியமான உரையாடல்பகுதி. பாண்டியனின் (சிங்காரம்) உலகளாவிய குரல் முரண்பட்டு ஒலிக்கும் இடம் இது. தன் நாவல் முழுக்க அங்கதம் கொண்டு நிரப்ப பாண்டியனை அதிகம் பயன்படுத்தியுள்ளார் சிங்காரம். அத்துடன் அவனை இலட்சிய நாயகனாக்கப் பல இடங்களில் முனைகின்றார்.    கு.அழகிரிசாமிக்கு பழந்தமிழ் இலக்கியங்களில் அதிலும் குறிப்பாக முத்தொள்ளாயிரம் என்ற இலக்கியத்தில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. அதை ஒரு முக்கியமான பழந்தமிழ் இலக்கியம் என்றும் கு.அ குறிப்பிட்டுள்ளார். அதுபோல ப.சிங்காரம் தனது மேற்படி புனைவில்  முத்தொள்ளாயிரத்தின் தமிழ்க் குறியீட்டை மூன்று பாடல்களைக் கொண்டு விபரித்துள்ளார். அடுத்துவரும் அத்தியாய உரையாடல்களுக்கு அதுவே துணையாக நிற்கிறது.   தென்னன் நெடுமாடக் கூடல் அகம், பூம்புனல் வஞ்சி அகம், வேல்வளவன் பொற்பார் உறந்தை அகம் என்று முடிவுறும் மூன்று பாடல்களிலும் தமிழ்வாழ்வின் போகம் முழக்கமிடப்பட்டுள்ளது. இதுதான் ஆரம்பகாலத் தமிழ் வாழ்வுக்கான அழிவின் சான்று என்று ஒரு தத்துவமும் எள்ளலும் கலந்த அத்தியாயத்தைக் கொண்டுவருகிறார் சிங்காரம். இதனை பாபிலோனியனின் வீழ்ச்சியுடன் ஒப்பிட்டு கதை சொல்லும் விதம் மிக உன்னதமான ஒரு உத்தி. புதுமைப்பித்தன் தன் மரபின் மூடத்தன்மைகளை எள்ளிநகையாடும் அதே போதம் சிங்காரத்திடம் சன்னதமாக வெளிப்படுகிறது.    தமிழ்ப்பெருமை பேசுபவர்களைப் பார்த்து "தவறான நம்பிக்கைகளின் மீது எழும் தற்பெருமை உண்மையைச் சந்திக்க நேரிடின் தன்னிளப்பமாக மாறிவிடும்" என்கிறார்.    'கால இடத் தேவைகளுக்கு ஏற்ப சமுதாய அமைப்பு முறை தோன்றுகிறது, மாறுகிறது. ஜாதிமுறை வெவ்வேறு பெயர்களுடன் எல்லாச் சமுதாயங்களிலுமே இருந்திருக்கிறது. இருந்து மாறியிருக்கிறது. எனவே நமது ஜாதிமுறை பற்றி நாம் வெட்கப்படத் தேவையில்லை. இன்றைய சூழ்நிலையில் இப்போதிருப்பது போன்ற ஜாதிமுறை தேவையா என்பது கேள்வி. எனக்குத் தெரிந்த வரையில் ஜாதி ஒழிப்பு வேலையல்ல முதற்கடமை. நம் மக்களிடையே பரந்த மனப்பான்மையை வளர்ப்பதையே முதல் வேலையாகக் கொள்ள வேண்டும். அறிவு வளர்ச்சி காரணமாகத் தோன்றும் பரந்த மனப்பான்மைக்கு ஜாதி சமய இனமொழிப் பிரிவுகள் யஆவுமே வெறும் விளையாட்டு வேலிகள்' இது ஜாதிமுறை தோன்றியமைக்கான காரணத்தை நாடகத்தன்மையில் பாண்டியன் கூறிய பதில்.    நாவலின் தொடக்கம் எந்தத் தமிழ் நாவலும் தராத ஒரு உற்சாகத்தை அளித்தது. மெடானின் போர்க் காட்சியும் ஜப்பானியர்களின் ஊடுருவலும் இயற்கை இகந்த விதத்தில் வர்ணிக்கப்படுகிறது. பாண்டியனின் அறிமுகம் ஒரு திரைநாயகனுக்கான அறிமுகம் போன்றது. முதல் ஆறு அத்தியாயங்கள் ஒரு போர்நாவலுக்கான சுவாரசியத்துடன் விரிவுறுகின்றது. பின்னர் திடீரென செட்டியார்களின் வணிக எழுச்சி வீழ்ச்சி பற்றிய விவரணைகள் இடம்பெறுகின்றன. அவை அங்கங்கே சலிப்பை உண்டாக்கினாலும் நாவலின் நகர்வில் தளர்வை ஏற்படுத்தவில்லை. அதற்கு சிங்காரம் கையாண்ட மொழிநடையும் இயற்கை வர்ணனையும் இன்னொரு காரணம் என்பேன்.    இந்நாவலுக்கான தகவல்களும் தரவுகளும் மிகத் துல்லியமானவை. இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன்- ஜெர்மனி- அமெரிக்கா- பிரிட்டன்- ஜப்பான் முதலிய நாடுகள் தமது ஆதிக்கத்தை உலக அரங்கில் நிலைநாட்ட மேற்கொண்ட அழிச்சாட்டியங்கள் சித்திரமாக்கப்பட்டுள்ளது. அப்போர்களுக்குத் தலைமை தாங்கிய ஜெனரல்களின்  பெயர் விபரம் தொட்டு அந்தச் சமர்களின் முக்கியத்தூவம் இழப்புக்கள் வரையும் பதிவு செய்யப்படுகிறது. மேலும் முக்கியமாக இந்திய தேசிய இராணுவம் மற்றும் இந்திய விடுதலை பற்றி மிக முக்கியமான சித்திரம் பதியப்படுகிறது. அது பாண்டியனின் உள்ளார்ந்த விருப்பம். அதற்காகத் தன்னையே இறுதியில் இழக்கிறான். சுபாஸ் சந்திர போஸ் வழங்கிய வேலையை முடித்து அவரிடம் பாராட்டை வாங்கி மேலும் தனது திறமைகளைக் காட்டுகிறான்.  இந்தோனேசியாவில் இருந்து டச்சுப் படைகளைத் துரத்த வேண்டும் என்று அங்கேயே போராளிக்குழு அமைத்து இணைகிறான். அந்த இலட்சியத்துக்காகவே பாண்டியன் இறந்து போகிறான்.    இந்நாவல் என்னைப் பொறுத்த வரை ப.சிங்காரத்தின் மிக உச்ச படைப்பு என்றே கூற வேண்டும். எக்காலத்துக்கும் உரிய நாவல் இது. இதிலுள்ள வாழ்க்கைப் படிப்பினைகள் இலட்சிய வேகங்கள் மிகப்பழுத்த அத்வைதிக்குரியவை. அதே நேரம் லௌகீகத்தின் பகட்டு மற்றும் நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்படுகிறது. அதனால்தான் செட்டியார்களின் வாழ்க்கை நீண்ட அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் சிங்காரத்தின் பழந்தமிழ் அறிவு பிரமிக்க வைக்கிறது. மிகச் சிலரே தமது படைப்புக்களில் துல்லியமாக  செவ்விலக்கிய பேரிலக்கியக் காட்சிகளைக் காட்டுவார்கள். அவர்களில் தலையாயவர் சிங்காரம். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, சங்க இலக்கியம், கம்பராமாயணம், திருக்குறள் என்று இன்னோரன்ன இலக்கியச் சுவைகளைத் தனது படைப்புக்களின் பொருத்தமான இடங்களில் பொருத்திவிடுகிறார்.   இந்நாவல் பற்றிப் பலர் விரிவாக எழுதியுள்ளனர். அதில் ஜெயமோகனின் 'வரலாற்று அபத்தத்தின் தரிசனம்' மிக முக்கியமானது. மற்றும் சி.மோகனின் கட்டுரைகளும். இந்நாவலைப் படித்த பின்னர் இவற்றையும் வாசிப்பது நாவலின் உபரி அர்த்தங்களை நமக்களிக்கும்.    எனது அண்மைய பயணங்கள் நீண்டதூரங்களுக்கு மோட்டார் வண்டியில்தான் அமைகின்றது. முன்பும் அப்படித்தான். இனியும் அதுவே என் விருப்பு.  அப்போது நான் இந்நாவலை எண்ணிக் கொள்வேன். புயலிலே சிக்கிய பாண்டியன் என்ற கதாபாத்திரமாக என் பயணத் தூரங்களின் விருப்பு வெறுப்புக்களை மாற்றிக் கொள்வேன். அதுவே என் மீவிருப்பு.    உங்களில் யாருக்காவது பயணம் , யுத்தம், உளவு, போராட்டம், இலக்கியம் என்ற வகையில் ஒரு படைப்பை வாசிக்க ஆர்வம் இருந்தால் புயலிலே ஒரு தோணி வாசியுங்கள். அதன் ஆழங்கள் எந்தக் கடலிலும் கப்பலுக்கு இலகுவில் நங்கூரம் போடக்கூடியது.    http://www.suyaanthan.com/2020/07/blog-post.html
  • மஹாவம்சம் தமது உன்னதமான நூல் என்று புலுடா விட்டுக்கொண்டிருந்தார்கள் இந்த பிக்குமார்கள். மக்களும் இவர்களை கேள்வி கேட்டால் வில்லங்கம் என்று பேசாமல் இருந்து விட்டார்கள். சமூக ஊடகங்கள் வந்த பின்னர், சிங்கத்துக்கு எப்படி மனிதப் பிள்ளைகள் பிறக்க முடியும் என்று கேள்விகள் கேட்க, ஆடிப்போய்.... ராவணனை சிங்களவர் ஆக்க முனைகிறார்கள். அதனால் தான் கோணேஸ்வரர், கோகன்னர் ஆக மாத்தப் பார்க்கிறார்கள். இப்ப போய், நம்ம சங்கரி ஐயா, திருடனுக்கு தேள் கொட்டிற மாதிரி ஆனந்தமான கேள்வி கேட்டால்.... என்ன பதில்தான் கிடைக்கும்?