Jump to content

தீபாவளி என்றால் என்ன..??!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீப ஒளித் திருநாள்

diwali250_07112007.jpg

அடை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் அடித்து வெளுக்கும் மழை, மறுபக்கம் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி.

தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

நரகாசுரன் வதம் ...

இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன்.

நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம்.

நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.

கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன்.

நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.

கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.

நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான்.

பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.

தீபாவளியின் இன்னொரு கதை ...

இதேபோல இன்னொரு கதையும் தீபாவளிக்கு உள்ளது. அது ஏன் தீபத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கான கதையும் கூட.

ராவணனை வென்று சீதையை மீட்கிறார் ராமன். பின்னர் சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். மன்னனாக முடி சூடுகிறார். இதைத்தான் தீபாவளியாக மக்கள் கொண்டாடினராம்.

ராமரும், சீதையும் அயோத்திக்கு வந்தபோது அன்று அமாவாசை இரவு. இதனால் இருளில் தாங்கள் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் தடுமாறியுள்ளனர். இதையடுத்து அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளி கூட்டினர். இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தில், தீப ஒளியில், சரியான பாதையில் நடை போடத் தொடங்கினாராம் ராமரும், சீதையும். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயரும் வந்தது.

பிற கதைகள் ..

விஷ்ணு, லட்சுமி தேவியின் திருமணம்தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்ற ஒரு புராணக் கருத்தும் உண்டு.

வங்கத்தில் காளி தேவியை வணங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி ஒரு விதமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளித் திருநாள் மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நான்கு நாளும் ஒரு வகையான கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபடுகிறார்கள். பூஜைகள் செய்கிறார்கள்.

முதல் நாளை நரக சதுர்தசியாக கொண்டாடுகிறார்கள். தீய சக்திகள் அழிந்து (அதாவது நரகாசுகரன் அழிந்த நாள்) வாழ்வில் வளம் பிறக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

தீபாவளி தினமான 2வது நாள் அமாவாசை தினம். இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள்.

3வது நாளில் கார்த்திகை சுத்த பதயாமி தினமாக கொண்டாடப்படுகிறது.

4 நாள் யம திவிதியை தினமாக கொண்டாடுகிறார்கள். அதாவது அன்றைய தினம் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு புத்தாடைகள் கொடுத்து வணங்கி, ஆசிர்வாதம் பெறும் தினம் இது.

பட்டாசு வெடிப்பது ஏன்:

தீபாவளி என்றால் பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவுக்கு வரும். ஏன் விளக்கு ஏற்றிக் கொண்டாடுகிறோம், பட்டாசுகள் வெடிப்பது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு.

வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம். அயோத்திக்கு ராமரும், சீதையும் வந்தபோது அந்த நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும் இதற்கு இன்னொரு காரணம்.

அதேபோல, தீய சக்திகளை விரட்டியடித்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.

தென்னிந்தியாவில் நரகாசுரன் வதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ராமரும், சீதையும் அயோத்தி திரும்பியதையும், ராமர் பட்டம் சூட்டிக் கொண்டதையுமே, தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு விதமாக இந்தியாவின் ஒவ்வொரு பகுதி மக்களும் கொண்டாடினாலும் கூட தீபாவளியின் மையக் கருத்து, நலமும், வளமும் வந்து சேரும் தீபத் திருநாள் என்பதாகவே உள்ளது என்பதால் தீபாவளித் திருநாள், இந்துக்களின் மிக முக்கிய திருநாளாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்.கொம்

-----------

வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம்.

அதேபோல, தீய சக்திகளை விரட்டியடித்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.

மேற்கு நாடுகளில் இதே காரணத்துக்காகத்தான் halloween festival கொண்டாடப்படுகிறது..! :rolleyes:

Link to comment
Share on other sites

எங்களைச்சுற்றி 1000 நரகா சூரர்கள் இருக்கும் போது எப்படி நிம்மதியாய் தீபாவளி கொண்டாடுவது? எல்லா நரகா சூரர்களின் வதம் முடிக்கும் நாள்தான் எம்மவர்களுக்கு தீபாவளியே

Link to comment
Share on other sites

மகிந்த ராஜபக்ஸ தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீப ஒளியின் மூலம் அமைதியும் பயங்கரவாத இருளும் அகல வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த பொங்கலுக்கும் தான் வாழ்த்துச் சொல்லுறார்..! அதற்காக.. பொங்கலை...?????! :wub::rolleyes:

Link to comment
Share on other sites

மகிந்த நத்தாருக்கும் வாழ்த்துச் சொல்வார். ஆனால் மகிந்த தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வதற்கு விசேட அர்த்தம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த நத்தாருக்கும் வாழ்த்துச் சொல்வார். ஆனால் மகிந்த தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வதற்கு விசேட அர்த்தம் உண்டு.

மகிந்தவுக்கு விசேட காரணம் இருக்கோ இல்லையோ உங்களிடம் இருக்கு மகிந்த சார்பா அதை வெளியிட.. பிராமண கசப்புவாதம்..! அது காட்டிக் கொடுத்திடும் உங்களை...! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தைப் பொங்கலுக்கும் தான் வாழ்த்துச் சொன்னவர். விசேட காரணமோ, இல்லையோ அதை எதிர்க்க வேண்டிய விசேட காரணம் கன்னடர் வழி அமைப்புக்களுக்கு உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளிக்கு இவ்வளவு அர்த்தங்கள் இருக்கோ??நான் நினைத்தேன் ஆட்டு இறைச்சியும் கறியும் தண்ணியும் புது சாரமும் உடுத்து சந்தியில இருந்து சண்டிதனம் பண்ணுறது தான் தீபாவளி என்று நினைத்தேன்.

மகிந்த தைப் பொங்கலுக்கும் தான் வாழ்த்துச் சொன்னவர். விசேட காரணமோ, இல்லையோ அதை எதிர்க்க வேண்டிய விசேட காரணம் கன்னடர் வழி அமைப்புக்களுக்கு உண்டு.

"அன்றொரு காலம் பலயுகங்களுக்கு முன்னம் இந்தப் பூமியில் ஒரு கருத்து பிறப்பு எடுத்தது கருத்துகளின் மைய கருத்தாக அது புனிதம் பெற்றது.மனிதர்களை அது ஆழமாக பற்றி கொண்டது.அந்த கருத்திற்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான்.மலைகளை பெயர்த்து,பாறைகளை தகர்த்து கலை வடிவம் கொடுத்தான் ஆயிரம் ஆயிரம் ஆலயங்கள் எழுந்தன.அந்த கருதிற்கு மனிதன் விளக்கங்களை கொடுத்தான்.வியாக்கியானங்கள் அளித்தான் அர்த்தங்களை குவித்தான் வேதங்கள் தோன்றின சித்தாந்தங்கள் பிறந்தன.கிரிகைகள்,சடங்குகள் தோன்றின.நிர்வனங்கள்,நிர்வாகப

??டங்கள் தோன்றின.கோசானு கோடி அடியார்கள் தோன்றினர்.ஆராதனைகள் நடத்தினர்.

அந்த மைய கருத்தில் இருந்து பல நாகரிகங்கள் தோன்றின கிறிஸ்தவ,இஸ்லாமிய,இந்து பெளத்த நாகரீகங்களாக மானிடம் பிளவு பெற்றது.போர்கள் நடந்தன் நாடுகளும்,இனங்களும் மோதின பூமியில் இரத்த ஆறுகள் ஓடின.அந்த கருத்து மனிதர்களை ஆழமாக பற்றி பிடித்து ஆட்டி படைத்தது."

இப்படி நான் சொல்லவில்லை எங்களின்ட மதிபுகுரிய ஒருத்தர் சொல்லி இருகிறார் இதுவும் கன்னடவழி அமைப்புகள் சொல்வதும் கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருக்கு போல.

Link to comment
Share on other sites

"அன்றொரு காலம் பலயுகங்களுக்கு முன்னம் இந்தப் பூமியில் ஒரு கருத்து பிறப்பு எடுத்தது, கருத்துகளின் மைய கருத்தாக அது புனிதம் பெற்றது. மனிதர்களை அது ஆழமாக பற்றி கொண்டது.அந்த கருத்திற்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான். மலைகளை பெயர்த்து, பாறைகளை தகர்த்து கலை வடிவம் கொடுத்தான் ஆயிரம் ஆயிரம் ஆலயங்கள் எழுந்தன.அந்த கருதிற்கு மனிதன் விளக்கங்களை கொடுத்தான். வியாக்கியானங்கள் அளித்தான் அர்த்தங்களை குவித்தான் வேதங்கள் தோன்றின சித்தாந்தங்கள் பிறந்தன.கிரிகைகள், சடங்குகள் தோன்றின. நிருவனங்கள், நிர்வாகபீடங்கள் தோன்றின. கோசானு கோடி அடியார்கள் தோன்றினர்.ஆராதனைகள் நடத்தினர்.

அந்த மைய கருத்தில் இருந்து பல நாகரிகங்கள் தோன்றின கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து பெளத்த நாகரீகங்களாக மானிடம் பிளவு பெற்றது.போர்கள் நடந்தன் நாடுகளும், இனங்களும் மோதின பூமியில் இரத்த ஆறுகள் ஓடின.அந்த கருத்து மனிதர்களை ஆழமாக பற்றி பிடித்து ஆட்டி படைத்தது."

அட ரொம்ப நன்னா சொல்லியிருக்காங்களே! எவா அவா?

Link to comment
Share on other sites

"அன்றொரு காலம் பலயுகங்களுக்கு முன்னம் இந்தப் பூமியில் ஒரு கருத்து பிறப்பு எடுத்தது கருத்துகளின் மைய கருத்தாக அது புனிதம் பெற்றது.மனிதர்களை அது ஆழமாக பற்றி கொண்டது.அந்த கருத்திற்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான்.மலைகளை பெயர்த்து,பாறைகளை தகர்த்து கலை வடிவம் கொடுத்தான் ஆயிரம் ஆயிரம் ஆலயங்கள் எழுந்தன.அந்த கருதிற்கு மனிதன் விளக்கங்களை கொடுத்தான்.வியாக்கியானங்கள் அளித்தான் அர்த்தங்களை குவித்தான் வேதங்கள் தோன்றின சித்தாந்தங்கள் பிறந்தன.கிரிகைகள்,சடங்குகள் தோன்றின.நிர்வனங்கள்,நிர்வாகப??டங்கள் தோன்றின.கோசானு கோடி அடியார்கள் தோன்றினர்.ஆராதனைகள் நடத்தினர்.

அந்த மைய கருத்தில் இருந்து பல நாகரிகங்கள் தோன்றின கிறிஸ்தவ,இஸ்லாமிய,இந்து பெளத்த நாகரீகங்களாக மானிடம் பிளவு பெற்றது.போர்கள் நடந்தன் நாடுகளும்,இனங்களும் மோதின பூமியில் இரத்த ஆறுகள் ஓடின.அந்த கருத்து மனிதர்களை ஆழமாக பற்றி பிடித்து ஆட்டி படைத்தது."

புத்தன்!!

அற்புதமான வசனங்கள். யார் அந்தப் பெரியவர்?

அந்த மையக் கருத்துத்தான் "கடவுள்" என்பது. மனித மனங்களினாலே உருவாக்கப்பட்ட எண்ணம் அது. அதை உண்மை என நம்பிவிடுவதும், அதன்மீது கோட்பாடுகளை உருவாக்கி வீணே காலவிரயத்தை செய்வதும், அதற்காக போர் என புறப்படுவதும் சுத்த முட்டாள்தனமே அன்றி வேறில்லை.

மக்கள் மறதிக்காரர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தாமாகவே ஒரு கொள்கையை உருவாக்குவது. பின்பு அதை அப்படியே நம்பிவிடுவது. அதனிடம் சரணடைந்து விடுவது. :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அன்றொரு காலம் பலயுகங்களுக்கு முன்னம் இந்தப் பூமியில் ஒரு கருத்து பிறப்பு எடுத்தது கருத்துகளின் மைய கருத்தாக அது புனிதம் பெற்றது.மனிதர்களை அது ஆழமாக பற்றி கொண்டது.அந்த கருத்திற்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான்.மலைகளை பெயர்த்து,பாறைகளை தகர்த்து கலை வடிவம் கொடுத்தான் ஆயிரம் ஆயிரம் ஆலயங்கள் எழுந்தன.அந்த கருதிற்கு மனிதன் விளக்கங்களை கொடுத்தான்.வியாக்கியானங்கள் அளித்தான் அர்த்தங்களை குவித்தான் வேதங்கள் தோன்றின சித்தாந்தங்கள் பிறந்தன.கிரிகைகள்,சடங்குகள் தோன்றின.நிர்வனங்கள்,நிர்வாகப

??டங்கள் தோன்றின.கோசானு கோடி அடியார்கள் தோன்றினர்.ஆராதனைகள் நடத்தினர்.

அந்த மைய கருத்தில் இருந்து பல நாகரிகங்கள் தோன்றின கிறிஸ்தவ,இஸ்லாமிய,இந்து பெளத்த நாகரீகங்களாக மானிடம் பிளவு பெற்றது.போர்கள் நடந்தன் நாடுகளும்,இனங்களும் மோதின பூமியில் இரத்த ஆறுகள் ஓடின.அந்த கருத்து மனிதர்களை ஆழமாக பற்றி பிடித்து ஆட்டி படைத்தது."

இப்படி நான் சொல்லவில்லை எங்களின்ட மதிபுகுரிய ஒருத்தர் சொல்லி இருகிறார் இதுவும் கன்னடவழி அமைப்புகள் சொல்வதும் கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருக்கு போல.

தீபாவளிக்கு இவ்வளவு அர்த்தங்கள் இருக்கோ??நான் நினைத்தேன் ஆட்டு இறைச்சியும் கறியும் தண்ணியும் புது சாரமும் உடுத்து சந்தியில இருந்து சண்டிதனம் பண்ணுறது தான் தீபாவளி என்று நினைத்தேன்.

மேலே சொன்ன உங்களின் பதில் தான் கீழே வரவேண்டியது. அரைகுறையாகக் கடவுளைப் பற்றித் தெரிந்தவர்களும், 4ம் ஆண்டோடு படிக்காமல் முன்னுக்கு வரலாம் என்று நினைத்தவர்களும், முயற்சி செய்யாமல் வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என்று நினைத்து ஏமாந்து போன, சிலர் தான் தங்களின் இயலாமையைக் கடவுள் என்று ஒன்றின் மேல் பழியைப் போட்டுத் திட்டிக் கொண்டிருப்பவர்கள்.

நீங்கள் சொன்ன இந்தக் கன்னடவழி அமைப்புக்களின் கதையைப் பார்த்தாலே தெரியும். வாழ்க்கையில் தோற்றுப் போன சிலர் தான் சுடலை ஞானம் பேசிக் கொண்டிருப்பவர்கள்.

நீங்கள் சொன்ன வசனம் கிறிஸ்தவ மதத்தில் உள்ள வசனமாகிய," இறைவன் சில விதைகளை விதைத்தான். அவை கல்லில் மேல் விழுந்தன. நீரில் மேல் விழுந்தன" என்ற வசனத்தை உல்டா பண்ணியது போலக் கிடக்கே.

Link to comment
Share on other sites

வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 - கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள்.

இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 - கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த 10 - கோடியும் அனாவசியமாய் - துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசன் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த - சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?

தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?

(‘குடிஅரசு’, தலையங்கம், 22.11.1931)

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன்

ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60- நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களாவார்களா?

புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்! பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து - புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்?

‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000-த்துக்கு 999 - பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள்.

பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது ஒன்று;

மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு;

அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று;

பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டங் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு;

இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து;

அன்று ஒவ்வொரு வீட்டிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவது ஆறு;

இந்தச் செலவுகளுக்காகக் கடன்படுவது ஏழு;

மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன் படவேண்டியிருக்கிறது என்பதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் - மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனீயப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத்துக்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாகச் சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது.

கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவை எல்லாவற்றையும் பொய் என்று ஒப்புக்கொண்டாய்விட்டது. அப்படியிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரகணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய, தீபாவளிப் பண்டிகைக்கு மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இவ்வளவு பாராட்டுதலும் செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்லவேண்டும்?

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் மூன்று.

அதாவது நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை இருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தார்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் - நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை - தீபவாளி என்று கொண்டாடவேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.-

http://thamilachi.blogspot.com/2007/11/blog-post_9257.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்?

இவருக்கு ரோட்டு ரோட்டாகச் சிலை கட்டி அபிசேகம் செய்பவர்கள், இதனால் ஏற்படும் வீண் பணவிரையம் பற்றிச் சிந்திக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தீபாவளிக்கு ஒரேயொரு கதை கிடையாதா?? ஏன் இந்து மதத்தில் எல்லாவற்றிற்கும் பல "கதைகள்" உள்ளன என்று யாராவது விளங்கப்படுத்துங்களேன்.. நாங்கள் புனிதமான கதைகளையும், புனிதமாக்கப்பட்ட "கதை"களையும் மட்டும் ஏற்றுக்கொண்டு, அசிங்கங்களை அழித்துவிடுவோம்.. சமூகக் கடமையல்லவா! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

தீபாவளி.. ஒரு தீபத்திருநாள். இருள் சூழ்ந்த காலப்பகுதியில் இருளகற்றி மக்கள் தங்களை குளிர்காலத்துக்குரிய காலநிலைக்கு ஏற்ப தயார்ப்படுத்த என்று கொண்டாடப்படுகிறது என்பதுதான் யதார்த்தம். அப்படி இருந்தும்... இன்னும் கிருஸ்ணரையும் நரகாசுரனையும் வைச்சு வந்த கதையை நம்பி தூக்கிப் பிடிச்சுக் கொண்டு.. அதை டிஸ்புறூவ் பண்ண நிக்கிறவையும்.. நரகாசுரனை தமிழன் என்று ஆக்கிறவையையும் என்னென்று சொல்லி.... பாராட்ட...! *** :)

Link to comment
Share on other sites

இவருக்கு ரோட்டு ரோட்டாகச் சிலை கட்டி அபிசேகம் செய்பவர்கள், இதனால் ஏற்படும் வீண் பணவிரையம் பற்றிச் சிந்திக்க வேணும்.

மேற்கூறிய கட்டுரையில் கூறிய காரணங்கள் ஒன்றும் உங்களுக்கு நியாயமாக படவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி.. ஒரு தீபத்திருநாள். இருள் சூழ்ந்த காலப்பகுதியில் இருளகற்றி மக்கள் தங்களை குளிர்காலத்துக்குரிய காலநிலைக்கு ஏற்ப தயார்ப்படுத்த என்று கொண்டாடப்படுகிறது என்பதுதான் யதார்த்தம். அப்படி இருந்தும்... இன்னும் கிருஸ்ணரையும் நரகாசுரனையும் வைச்சு வந்த கதையை நம்பி தூக்கிப் பிடிச்சுக் கொண்டு.. அதை டிஸ்புறூவ் பண்ண நிக்கிறவையும்.. நரகாசுரனை தமிழன் என்று ஆக்கிறவையையும் என்னென்று சொல்லி.... பாராட்ட...! ***

அது சரி பூமத்திய ரேகைக்குக் கிட்டவுள்ள இந்திய இலங்கைப் பகுதிகளில் அண்ணளவாகப் 12 மணிநேரம் இரவும், பன்னிரண்டு மணிநேரம் பகலுமாகத்தானே உள்ளது.. குளிர் காலம் எப்போது ஆரம்பிக்கின்றது? மாசி மாதப் பனிகாலத்தில்தானே குளிரைக் கண்டோம்! :)

சில நேரம் வட ஐரோப்பாப் பகுதியில் நேரம் மாற்றம் செய்யும் நாளுக்கு அடையாளமாகத் தொடங்கி, கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்த பண்டிகையாக இருக்கலாம்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி பூமத்திய ரேகைக்குக் கிட்டவுள்ள இந்திய இலங்கைப் பகுதிகளில் அண்ணளவாகப் 12 மணிநேரம் இரவும், பன்னிரண்டு மணிநேரம் பகலுமாகத்தானே உள்ளது.. குளிர் காலம் எப்போது ஆரம்பிக்கின்றது? மாசி மாதப் பனிகாலத்தில்தானே குளிரைக் கண்டோம்! :)

சில நேரம் வட ஐரோப்பாப் பகுதியில் நேரம் மாற்றம் செய்யும் நாளுக்கு அடையாளமாகத் தொடங்கி, கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்த பண்டிகையாக இருக்கலாம்.. :)

seasonsfull200304160945lj3.gif

காலமடா சாமி... வரலாறும் சமூகக்கல்வியும் எனிப் படிப்பிக்கனும் போல இருக்கே. மத்திய ரோகைக்கு அண்மையாக இருப்பினும் எங்கள் தேசத்துக்கும் மாரிகாலம் என்று ஒன்றிருக்குது கண்டிங்களோ. அக்காலத்தில பகல் குறைந்து இருள் அதிகமாக இருக்கும். மாரிகாலத்தில் உள்ள இரவுக்கும் பகலுக்கும் இடையில் குறைந்தது ஒரு மணி நேரமாவது இருள் அதிகமாக இருக்கும் வேறுபாட்டை உணரலாம். கோடையில் உள்ள இரவுக்கும் பகலுக்கும் இடையில் உள்ள நேரத்தோடு ஒப்பிடும் போது...! மாரி காலம் அதிகம் மழைகாலம் என்பதாலும் இருள் கூடுவது அதிகம் என்பதாலும்.. தீபத்திருநாள் மாரிகாலத்தில் கொண்டாடப்படும் வழமை ஏற்பட்டிருக்கும். ஏன் நரகாசுரனை அழிச்சதை சித்திரையில கொண்டாடி இருக்கலாம் தானே.... ஏன் ஐப்பசி கார்த்திகையில கொண்டாடனும்..??! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலமடா சாமி... வரலாறும் சமூகக்கல்வியும் எனிப் படிப்பிக்கனும் போல இருக்கே. மத்திய ரோகைக்கு அண்மையாக இருப்பினும் எங்கள் தேசத்துக்கும் மாரிகாலம் என்று ஒன்றிருக்குது கண்டிங்களோ. அக்காலத்தில பகல் குறைந்து இருள் அதிகமாக இருக்கும். குறைந்தது ஒரு மணி நேரமாவது இந்த வேறுபாட்டை உணரலாம். கோடைக்கும் மாரிக்கும் இடையில்...! மாரி காலத்தில் அதிகம் மழைகாலம் என்பதால் இருள் கூடுவது அதிகம் என்பதாலும்.. தீபத்திருநாள் மாரிகாலத்தில் கொண்டாடப்படும் வழமை ஏற்பட்டிருக்கும். ஏன் நரகாசுரனை அழிச்சதை சித்திரையில கொண்டாடி இருக்கலாம் தானே.... ஏன் ஐப்பசி கார்த்திகையில கொண்டாடனும்..??! :D

அப்ப குளிர்காலம் போய் மாரி காலம் ஆகிவிட்டது.. கார்த்திகையில் ஐந்து ஐந்தரைக்கு சூரியன் மறைந்துவிடுமா இலங்கையில்?? அதுபோல ஆறரை ஏழு மணிக்கு சூரிய அஸ்த்தமனம் வருமா?? ஒரு மணிநேர வேறுபாடு இருந்தது தாயகத்தில் இருக்கும்வரை தெரியாமல் போய்விட்டது!! :) "கதை"களுக்கும் ஒரு அளவு உள்ளது! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப குளிர்காலம் போய் மாரி காலம் ஆகிவிட்டது.. கார்த்திகையில் ஐந்து ஐந்தரைக்கு சூரியன் மறைந்துவிடுமா இலங்கையில்?? அதுபோல ஆறரை ஏழு மணிக்கு சூரிய அஸ்த்தமனம் வருமா?? ஒரு மணிநேர வேறுபாடு இருந்தது தாயகத்தில் இருக்கும்வரை தெரியாமல் போய்விட்டது!! :) "கதை"களுக்கும் ஒரு அளவு உள்ளது! :)

seasonsfull200304160945lj3.gif

உங்களுக்காகத்தான் பாருங்கோ படம் போட்டிருக்குது விளங்க..

உலகின் பருவகாலங்கள் 4. கோடைகாலம் குளிர்காலம் இலையுதிர்காலம் இலை தளிர்காலம். (ஊரில் பலா மரத்தை அவதானிச்சா இது தெரியும்..!) நம்ம ஊரில குளிர்காலம் மழை அதிகம் என்பதால் மாரிகாலம் என்றும் அழைப்பர் கண்டிங்களோ. கதையில்லைங்கோ.. படத்தைப் பாருங்கோ விளங்கும்..! இலங்கை மத்தியகோட்டுக்கு அண்மைல தான் இருக்கே தவிர மத்திய கோட்டில இல்லை. பூமியும் சரிஞ்சுதான் சுத்துதே தவிர நிமிர்ந்து நிற்கேல்ல. ஊரில நீங்க எங்க உதுகளை அவதானிச்சிருப்பியள்.. இப்ப புலம்பெயர்ந்து வடதுருவத்துக்க அல்லது தெந்துருத்துக்க வந்த உடன உதுகள் பெரிசாத் தெரியுதாக்கும். நாங்க ஊரிலேயே அவதானிச்சிருக்கமுங்கோ..!

சந்திரிக்கா அம்மையார் நேரமாற்றம் கொண்டு வரேக்க மாரிகாலம் இது சிரமமா இருக்கென்று மக்கள் குரல் கொடுக்கேல்லையோங்க. அது சரி ஊரில இருந்தாத்தானே உதுகள் தெரிய.

குளிர்காலம் என்று ஊரிலையும் இருக்குங்கோ..! ஐப்பசி தொடங்கி மாசி பங்குனி ஆரம்பம் வரை.. குளிர் இருக்கும்..! மாசிப்பனி மூசிப்பெய்யும் எண்டுவினம் தெரியுமாங்கோ.. நீங்கள் ஊரை மறந்திட்டியள் போல... நல்ல விசயம். அப்படியே தீபாவளியையும் மறக்கடிச்சிடுவம் என்று முயற்சிக்கிறியள் போல. கலோவின் பண்டிகை கொண்டாட பிள்ளைகளுக்கு மாஸ்கும் வெடியும் வேண்டிக் குடுப்பமே..??! அதெக்கெண்டால் நாங்கள் கண்ண மூடிக்கொண்டு ரெடியாகிடுவம். அப்பதான் பக்கத்திவீட்டு வெள்ளைக்காரனோட நாங்களும் சரிக்கு நிக்கிறதா தோற்றம் காட்டலாம்..! :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடக்கு முனை 9 பாகை 50 கலை அகலாங்கில் முடிகின்றது. . பின்வரும் இணைப்பு சூரிய உதயம், சூரிய அஸ்த்தமனத்தைத் தருகின்றது. இதில் இருந்து எப்போது இருள் அதிகமாக இருக்கும் என்று நீங்களே கணித்துக் கொள்ளலாம்!

http://www.gaisma.com/en/location/jaffna.html

தீபாவளி வந்த தற்போதைய நாட்களில் பகல் பொழுது 12 மணித்தியாலங்களுக்கு சற்றுக் குறைவாக உள்ளது. அதற்காக ஒரு மணிநேரம் அதிகம் இருட்டு என்று அர்த்தமல்ல... எனவே இருளை அகற்ற ஐப்பசியில் தீபம் ஏற்ற வேண்டிய தேவையில்லை!

இப்ப கொஞ்சம் முன்னாடி பகல் 12 மணித்தியாலம் இரவு 12 மணித்தியாலம் எண்டிச்சினம். இப்ப சற்று முன் பிந்தி எண்டீனம். குளிர்காலத்தில மழை என்ற ஒன்று பெய்யுங்கோ. அது பெய்யனுன்னா கருமுகில் என்ற ஒன்று வருமுங்கோ. அது வந்திச்சுன்னா சூரிய வெளிச்சம் பெரிசா வராதுங்கோ... மாரிகாலத்தில இது அடிக்கடி நடக்கிறதால.. குறிப்பா தமிழர்கள் வாழும் பகுதியில வடகீழ் பருவப்பெயற்சிக் காலம் குளிர்காலத்தோட வருவதால இருட்டு அதிகம். நான் ரெம்பவே அவதானிச்சிருக்கிறன் ஊரில கோடையில 7 மணி வரை கிரிக்கெட் விளையாடலாம். ஆனால் மாரியில 6 மணிக்கே பந்தைப் பாக்கிறது கஸ்டமாகிடும்..! அந்த வகையில கிடத்தட்ட ஒரு மணி நேரத்தை சுட்டிக்காட்டினம். அதுக்கும் மேல மாரிகால கார்முகில் இன்னும் வேளைக்கு இரட்டப் பண்ணிடுங்கோ. அதுதான் தீபம் ஏற்றி மக்கள் தங்களை மாரிகாலத்துக்கு ஏற்ப தயார் பண்ணுறாங்க தீபாவளியில... இதையெல்லாம் அலசிப் பாக்கிற திறனை கொள்ளாம.. நரகாசுரனை.. தேடித் தாக்கி.. கிருஷ்ணரை சாட்டி மக்களை மு.....ள் என்று திட்டி திட்டிறவை யாரெண்டு...???! :)

Date Sunrise Sunset Length Change

Today 06:02 17:45 11:43

+1 day 06:03 17:45 11:42 00:01 shorter

+1 week 06:05 17:45 11:40 00:03 shorter

+2 weeks 06:08 17:46 11:38 00:05 shorter

+1 month 06:16 17:50 11:34 00:09 shorter

+2 months 06:29 18:05 11:36 00:07 shorter

+3 months 06:31 18:17 11:46 00:03 longer

+6 months 05:50 18:23 12:33 00:50 longer

கிருபன் சார் தந்த தரவின் படி இன்றிருக்கும் சூரிய உதயம் - அஸ்தமனத்துக்கு இடையிலான நேர வித்தியாச்சத்துக்கும் 6 மாதத்துக்குப் பின்னாடி அதாவது சித்திரை/வைகாசி (கோடைகாலம்) காலப்பகுதியில் சூரிய உதயத்துக்கும் அஸ்மனத்துக்கும் இடையிலான நேர வித்தியாசத்துக்கும் இடையில் 50 நிமிடங்கள் என்பது தரவில் தரப்பட்டுள்ளதை தெளிவாகக் காணலாம். இது எமது கூற்றை தெளிவாக மெய்ப்பிக்கிறது..! கிட்டத்தட்ட ஒரு மணி நேர வேறுபாடு என்பதை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் பருவகாலங்கள் 4. கோடைகாலம் குளிர்காலம் இலையுதிர்காலம் இலை தளிர்காலம். (ஊரில் பலா மரத்தை அவதானிச்சா இது தெரியும்..!) நம்ம ஊரில குளிர்காலம் மழை அதிகம் என்பதால் மாரிகாலம் என்றும் அழைப்பர் கண்டிங்களோ. கதையில்லைங்கோ.. படத்தைப் பாருங்கோ விளங்கும்..! இலங்கை மத்தியகோட்டுக்கு அண்மைல தான் இருக்கே தவிர மத்திய கோட்டில இல்லை. பூமியும் சரிஞ்சுதான் சுத்துதே தவிர நிமிர்ந்து நிற்கேல்ல. ஊரில நீங்க எங்க உதுகளை அவதானிச்சிருப்பியள்.. இப்ப புலம்பெயர்ந்து வடதுருவத்துக்க அல்லது தெந்துருத்துக்க வந்த உடன உதுகள் பெரிசாத் தெரியுதாக்கும். நாங்க ஊரிலேயே அவதானிச்சிருக்கமுங்கோ..!

இலங்கையில் வடகீழ் பருவம், தென்மேல் பருவம் என்று உண்டு.. வட பகுதியில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றினால் கார்த்திகையில் இருந்து மாசி-பங்குனி வரை மழை பொழியும். தென்மேல் பருவப் பெயற்சிக் காற்றினால் தென்பகுதிகளில் மற்றைய மாதங்களில் அதிக மழை பொழியும்.. நடுவில் மலை இருப்பதனால் மழை வடபகுதிக்குக் கிடைக்காது!

சரி இப்பருவங்கள் எப்படி உண்டாகின்றன..?

சித்திரையிலிருந்து புரட்டாதிவரை இந்திய உபகண்டத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் தாழமுக்கம் ஏற்படும். எனவே காற்று இந்து சமுத்திரத்தில் இருந்து வடபகுதி நோக்கி வீசும்.. அதிக ஈரப்பதன் கொண்ட காற்று இமயமலையைத் தாண்டி போக முடியாமல் மழையாகப் பொழியும்.

கார்த்திகை தொடக்கம்,மாசி-பங்குனி வரை மத்திய ஆசியா அதிகம் வெப்பம் இல்லாமல் இருப்பதனால், இமய மலைப் பகுதிக்கு மேற்பட்ட பகுதி குளிராகவும், இந்து சமுத்திரப் பகுதி சூடாகவும் இருக்கும். எனவே காற்று வடகீழ் பகுதியில் இருந்து தென்மேல் பகுதி நோக்கி வீசும்.. அதிக ஈரப்பதன் மழையைத் தரும்¬

சரி இதற்கும் இருள் காலத்திற்கும் என்ன சம்பந்தம்?

இருள் அதிகமாக தை மாதத்தில் உள்ளதனால், தீபாவளியைத் தை மாதத்திற்கு மாற்றலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்சம் முன்னாடி பகல் 12 மணித்தியாலம் இரவு 12 மணித்தியாலம் எண்டிச்சினம். இப்ப சற்று முன் பிந்தி எண்டீனம். குளிர்காலத்தில மழை என்ற ஒன்று பெய்யுங்கோ. அது பெய்யனுன்னா கருமுகில் என்ற ஒன்று வருமுங்கோ. அது வந்திச்சுன்னா சூரிய வெளிச்சம் பெரிசா வராதுங்கோ... மாரிகாலத்தில இது அடிக்கடி நடக்கிறதால.. குறிப்பா தமிழர்கள் வாழும் பகுதியில வடகீழ் பருவப்பெயற்சிக் காலம் குளிர்காலத்தோட வருவதால இருட்டு அதிகம். நான் ரெம்பவே அவதானிச்சிருக்கிறன் ஊரில கோடையில 7 மணி வரை கிரிக்கெட் விளையாடலாம். ஆனால் மாரியில 6 மணிக்கே பந்தைப் பாக்கிறது கஸ்டமாகிடும்..! அந்த வகையில கிடத்தட்ட ஒரு மணி நேரத்தை சுட்டிக்காட்டினம். அதுக்கும் மேல மாரிகால கார்முகில் இன்னும் வேளைக்கு இரட்டப் பண்ணிடுங்கோ. அதுதான் தீபம் ஏற்றி மக்கள் தங்களை மாரிகாலத்துக்கு ஏற்ப தயார் பண்ணுறாங்க தீபாவளியில... இதையெல்லாம் அலசிப் பாக்கிற திறனை கொள்ளாம.. நரகாசுரனை.. தேடித் தாக்கி.. கிருஷ்ணரை சாட்டி மக்களை மு.....ள் என்று திட்டி திட்டிறவை யாரெண்டு...???! :)

அப்ப மாரி காலத்தில கருமுகில் அதிகம் இருந்தால் 4 மணிக்கும் இருட்டியிருக்குமே! தந்த இணைப்பின்படி சூரியவெளிச்சம் எப்பவுமே 11 மணி 35 நிமிடத்திற்குக் கீழ் போனதில்லை.. எனவே இருள் அதிகம் என்பதும் அதிலும் ஐப்பசியில் இருள் அதிகம் என்பதால் தீபாவாளியைக் கொண்டாடுவது என்பதும் பொருத்தமாகத் தெரியவில்லை..

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கும் ஒரு "கதை" வைத்திருப்பீர்களே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.