Jump to content

புதைந்த ஞாபகம்.......

Recommended Posts

எப்போதாவது வந்துபோகும் ஞாபகம் தான் ஆனால் கார்த்திகை மாதமானால் எப்படியாவது மறக்காமல் வந்துவிடும்.மறந்துபோக வேண்டுமே என்று எங்கோ என்னுள் புதைத்து வைத்த அந்த புதைக்கப் பட்ட ஞாபகம் இன்றும் என்மனதில் வந்து என்னை கிளறி விட்டுப் போனது...

குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளை இந்திய அமைதிப்படை கைதுசெய்து அவர்களை சிங்கள அரசிடம் ஒப்படைக்க முற்பட்ட சமயம் தமது கொள்கையின் படி சயனைற் அருந்தி உயிர்துறந்தனர். அதற்குப் பின்னர்தான் இந்திய அமைதிப் படைக்கு எதிரான யுத்தம் வெடித்தது.

இறுதியாக கோப்பாய் எனும் இடத்தில்தான் நேருக்கு நேர் யுத்தம் நடந்ததென்று நினைக்கின்றேன் பின்னர் புலிகள் தமது தாக்குதல்களின் வியூகத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர். இருந்தாலும் குண்டுகளின் சத்தங்கள் தொடர்ந்தும் கேட்டபடிதான் இருந்தது.... !

தென்மராட்சியில் இதுவரை எதுவும் நடக்கவில்லை அதனால் சண்டை நடந்த இடத்தில் இருந்து கூடுதலானவர்கள் வெளியேறி தென்மராட்சியில் தஞ்சம் புகுந்திருந்தனர். எமது வீட்டிலும் நான்கு குடும்பத்தினர் தங்கி இருந்தனர் அதேபோல்தான் ஒவ்வொருவர் வீட்டிலும் பல குடும்பங்கள் தங்கி இருந்தனர்.

சண்டை தொடங்கியதில் இருந்து பாடசாலை நடக்கவில்லை வீட்டில் இடம் பெயர்ந்து வந்தவர்களின் பிள்ளைகளும் நானும் மற்றும் என் சகோதரர்களும் சில சமயம் பக்கத்து வீட்டாரும் சேர்ந்து ஏதாவது விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்போம். பாடசாலை போக முடியவில்லை என்ற கவலை மறந்து மற்றையவரும் இடம் பெயர்ந்து வந்தோமே என்கின்ற கவலையை மறந்தோ அல்லது மறப்பதற்காகவோ. ஏதாச்சும் விளையாடுவோம்.

எமது வீட்டில் இருந்து நகரச் சந்தை ஒரு கிலோமீற்ரர் தொலைவில் உள்ளது முன்னரை விட இப்போது தென்மராட்சியில் மக்கள் தொகை கூடியதால் சந்தை நிரம்பி வழியும். சந்தையை அண்மித்தபடி அரச மருத்துவமனை. அப்பா அங்கேதான் வேலை பார்க்கின்றார் ....

எமது வீட்டில் இருந்தவர்களும் சந்தைக்குச் சென்று திரும்பி விட்டார்கள். நானும் எமது வீட்டில் இருந்தவர்களின் பிள்ளைகளும் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம் ...

திடீரென வானத்தில் ஒருவிசித்திரமான ஹெலி பெரும் இரைச்சலுடன் வட்டமிட்டு சந்தையை நோக்கி பதிவதைக் காணக்கூடியதாக இருந்தது ஓரிரு நிமிடத்தில் .....ட்றாறாங்ங்.... என்று சத்தம் கேட்டது. பின்னர் திரும்பவும் அந்த ஹெலி மேலெழும்பி போய்விட்டது .... இதுவரையில் அப்படிச் சத்தத்தை கேட்டதேயில்லை. ஷெல், குண்டு, துப்பாக்கி, இவற்றின் சத்தங்கள் தெரியும் ஆனால் இந்தச் சத்தம் புதுவிதமாக இருந்தது....?!

முற்றத்தில் நின்ற எம்மை வீட்டினுள் வரும்படி அழைத்தார்கள்... சிறிது நேர நிசப்தம் பின்னர் வேலைக்குப் போன அப்பா இன்னமும் வீடு திரும்பவில்லையே என்று அம்மா பதற்ரப்பட.... வீட்டில் இருந்த மாமா மார் தாங்கள் போய் பார்த்து வருவதாக கூறி சைக்கிலையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

எனது மனதில் ''கடவுளே அப்பாவுக்கு ஒன்றும் நடந்திருக்கக் கூடாது நல்லபடியாக வீடுவந்து சேரவேண்டும்'' என்று இறைவனை வேண்டியபடி இருந்தேன்...!

ஞாபகம் தொடரும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாவுக்கு ஒன்டும் நடக்கவில்லை தானே???

Link to comment
Share on other sites

அண்ணா "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" என்றவுடன் நான் வந்து அண்ணாவின்ட பழைய லவ் மாட்டரை சொல்ல போறார் என்று ஓடிவந்தனான் :) (அது தானே பார்தேன் :lol: )...........கதையோட்டம் மிகவும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது :unsure: ஆனாலும் சீரியல் மாதிரி பொறுத்த இடத்தில நிற்பாட்டி போட்டீங்க :D நானும் உங்க அப்பா "நல்லபடியா வீடு வந்து" சேர வேண்டும் என்று பிரார்த்தித்து கொண்டு இந்த பகுதியில் உங்கள் "ஞாபகதிற்காக" காத்திருகிறேன் :D ................

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அப்பாவுக்கு ஒன்டும் நடக்கவில்லை தானே???

நன்றி இன்னிசை.

கதை எழுதும் போது தொடராக எழுதாது ஒரேதரத்தில் சிறுகதையாகத்தான் முடிக்கவேண்டும் என நினைத்தேன் ஆனால் நேரம் இடங்கொடுக்கவில்லை அனேகமாக அடுத்த பகுதியில் முடித்துவிடுவேன் என நம்புகின்றேன் ....

ஒரு உயிருக்கே என்ன நடந்ததோ என நினைக்கின்றீங்க நான் சொல்லவரும் கதையில் உலகுக்கே தெரியாமல் எத்தனை உயிர்கள் போயிருக்கின்றன... :) மிகுதிக்கதையில் பாருங்கள்

Link to comment
Share on other sites

அண்ணா "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" என்றவுடன் நான் வந்து அண்ணாவின்ட பழைய லவ் மாட்டரை சொல்ல போறார் என்று ஓடிவந்தனான் :icon_mrgreen: (அது தானே பார்தேன் :o )...........கதையோட்டம் மிகவும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது :lol: ஆனாலும் சீரியல் மாதிரி பொறுத்த இடத்தில நிற்பாட்டி போட்டீங்க :( நானும் உங்க அப்பா "நல்லபடியா வீடு வந்து" சேர வேண்டும் என்று பிரார்த்தித்து கொண்டு இந்த பகுதியில் உங்கள் "ஞாபகதிற்காக" காத்திருகிறேன் :( ................

அப்ப நான் வரட்டா!!

நன்றி ja(mu)na... :lol: அண்ணாண்ட லவ் மாட்டரெல்லாம் கவிதையில் சொல்லுறனான் தானே அதை கதையாவேற எழுதணுமா... :icon_mrgreen: இந்தச் சம்பவம் நடந்து நேற்றுடன் 20 வருடங்கள் ஆகிவிட்டன ... அப்ப அண்ணாக்கு எத்தினை வயதென்று கேக்கக் கூடாது... :lol: அண்ணா அப்ப ஆண்டு 9 படிக்கின்றேன் .... :icon_mrgreen:

முன்னர் கந்தப்பு தாத்தா கேட்டுக் கொண்டதாலும் அத்துடன் ....... இந்தவிடையத்தை எழுதவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாய் மனதில் இருந்தது இந்த 20 ஆண்டு பூர்த்தியை இட்டு எழுதுவோமே என்று எழுதுகின்றேன்.......தொடர்ந்தும் ஆதரவு தந்தால் இன்னும் சிலவற்றை எழுத நினைத்துள்ளேன்.....

அப்ப நான் எழுதட்டா... :D

Link to comment
Share on other sites

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே....................... அட நானும் என்னமோ ஆட்டோகிராப் படத்தில் இருந்து பாட்டு என்று வந்தால் அண்ணாவின் கதை.

அண்ணாஅ அனுபவங்களை எழுத்துருவில் சொல்லி இருக்கிறீங்க. ஆனால் தொடரும் என்று போட்டு மனசை ஏங்க வைச்சுட்டீங்க போங்க.

சீக்கிரம் அடுத்ததையும் எழுதுங்கோ. அட நானும் இறைவனை வேண்டுகிறேன் அப்பாக்கு ஒண்டும் நடந்திருக்க கூடாதென. ஆனாலும் அப்பா இப்பவும் இருக்கிறார் தானே அண்ணாஅ. அதுவரையில் ரொம்ப சந்தோசம்.

நன்றிகள். அடுத்த எபிசோட் இல் சந்திப்பம். நன்றி அண்ணா.

நன்றி நிலா.... மிகுதி அடுத்த வாரத்துள் முடித்துவிடுவேன்... நீங்களும் ராணுவத்தால் பட்ட உங்கள் அனுபவத்தை எழுதலாம்தானே... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நன்றி நிலா.... மிகுதி அடுத்த வாரத்துள் முடித்துவிடுவேன்... நீங்களும் ராணுவத்தால் பட்ட உங்கள் அனுபவத்தை எழுதலாம்தானே... :unsure:

:unsure::unsure::unsure: எழுதலாம் தான். ம்ம் எழுதுவம்.

Link to comment
Share on other sites

எப்போதாவது வந்துபோகும் ஞாபகம் தான் ஆனால் கார்த்திகை மாதமானால் எப்படியாவது மறக்காமல் வந்துவிடும்.மறந்துபோக வேண்டுமே என்று எங்கோ என்னுள் புதைத்து வைத்த அந்த புதைக்கப் பட்ட ஞாபகம் இன்றும் என்மனதில் வந்து என்னை கிளறி விட்டுப் போனது...

குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளை இந்திய அமைதிப்படை கைதுசெய்து அவர்களை சிங்கள அரசிடம் ஒப்படைக்க முற்பட்ட சமயம் தமது கொள்கையின் படி சயனைற் அருந்தி உயிர்துறந்தனர். அதற்குப் பின்னர்தான் இந்திய அமைதிப் படைக்கு எதிரான யுத்தம் வெடித்தது.

இறுதியாக கோப்பாய் எனும் இடத்தில்தான் நேருக்கு நேர் யுத்தம் நடந்ததென்று நினைக்கின்றேன் பின்னர் புலிகள் தமது தாக்குதல்களின் வியூகத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர். இருந்தாலும் குண்டுகளின் சத்தங்கள் தொடர்ந்தும் கேட்டபடிதான் இருந்தது.... !

தென்மராட்சியில் இதுவரை எதுவும் நடக்கவில்லை அதனால் சண்டை நடந்த இடத்தில் இருந்து கூடுதலானவர்கள் வெளியேறி தென்மராட்சியில் தஞ்சம் புகுந்திருந்தனர். எமது வீட்டிலும் நான்கு குடும்பத்தினர் தங்கி இருந்தனர் அதேபோல்தான் ஒவ்வொருவர் வீட்டிலும் பல குடும்பங்கள் தங்கி இருந்தனர்.

சண்டை தொடங்கியதில் இருந்து பாடசாலை நடக்கவில்லை வீட்டில் இடம் பெயர்ந்து வந்தவர்களின் பிள்ளைகளும் நானும் மற்றும் என் சகோதரர்களும் சில சமயம் பக்கத்து வீட்டாரும் சேர்ந்து ஏதாவது விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்போம். பாடசாலை போக முடியவில்லை என்ற கவலை மறந்து மற்றையவரும் இடம் பெயர்ந்து வந்தோமே என்கின்ற கவலையை மறந்தோ அல்லது மறப்பதற்காகவோ. ஏதாச்சும் விளையாடுவோம்.

எமது வீட்டில் இருந்து நகரச் சந்தை ஒரு கிலோமீற்ரர் தொலைவில் உள்ளது முன்னரை விட இப்போது தென்மராட்சியில் மக்கள் தொகை கூடியதால் சந்தை நிரம்பி வழியும். சந்தையை அண்மித்தபடி அரச மருத்துவமனை. அப்பா அங்கேதான் வேலை பார்க்கின்றார் ....

எமது வீட்டில் இருந்தவர்களும் சந்தைக்குச் சென்று திரும்பி விட்டார்கள். நானும் எமது வீட்டில் இருந்தவர்களின் பிள்ளைகளும் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம் ...

திடீரென வானத்தில் ஒருவிசித்திரமான ஹெலி பெரும் இரைச்சலுடன் வட்டமிட்டு சந்தையை நோக்கி பதிவதைக் காணக்கூடியதாக இருந்தது ஓரிரு நிமிடத்தில் .....ட்றாறாங்ங்.... என்று சத்தம் கேட்டது. பின்னர் திரும்பவும் அந்த ஹெலி மேலெழும்பி போய்விட்டது .... இதுவரையில் அப்படிச் சத்தத்தை கேட்டதேயில்லை. ஷெல், குண்டு, துப்பாக்கி, இவற்றின் சத்தங்கள் தெரியும் ஆனால் இந்தச் சத்தம் புதுவிதமாக இருந்தது....?!

முற்றத்தில் நின்ற எம்மை வீட்டினுள் வரும்படி அழைத்தார்கள்... சிறிது நேர நிசப்தம் பின்னர் வேலைக்குப் போன அப்பா இன்னமும் வீடு திரும்பவில்லையே என்று அம்மா பதற்ரப்பட.... வீட்டில் இருந்த மாமா மார் தாங்கள் போய் பார்த்து வருவதாக கூறி சைக்கிலையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

எனது மனதில் ''கடவுளே அப்பாவுக்கு ஒன்றும் நடந்திருக்கக் கூடாது நல்லபடியாக வீடுவந்து சேரவேண்டும்'' என்று இறைவனை வேண்டியபடி இருந்தேன்...!

நேரம் ஆக ஆக மனதில் பயம் குடிகொண்டது. போன மாமாவினரையும் காணவில்லையே எனும் ஏக்கம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்தது. சில மணி நேரத்தின் பின்னர் அப்பாவும் மாமாவினரும் வந்தார்கள். அவர்கள் முகத்தில் கவலை படர்ந்திருந்தது. உடையெல்லாம் ரத்தத்தால் நனைந்திருந்தது. அம்மாவும் நாங்களும் பதறியடிக்க அப்பா இடை மறித்தார். ''சத்தம் போடாதைங்கோ எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை'' என்று சொல்லி விட்டு நடந்ததை விபரித்தார்....

இந்தியன் ஆமியின் ஹெலி அப்பா மருத்துவ மனையில் இருந்த சமயம் வானத்தில் வட்டமிட்டு பின்னர் சந்தையை நோக்கி பதிந்து குண்டுகளை?? வீசியதாகவும் அதன் பின்னர் கெலி போய் சிறிது நேரத்தில் சந்தையில் இருந்து இறந்தவர்களின் உடல்களும் காயப் பட்டவர்களும் மருத்துவ மனைக்கு எடுத்து வரப்பட அவர்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட அப்பாவைத் தேடிப் போன மாமாவினரும் இணைந்து கொண்டனர். நேரம் ஆக வீட்டில் அனைவரும் பயத்துடன் இருப்பார்கள் தங்களைத்தேடுவார்கள் என்பதனால் தாம் வந்துவிட்டதாக சொன்னார்.

அன்றைய இரவு ஒருவரும் சரியாகத் தூங்க முடியவில்லை நடந்த தும்பியல் சம்பவங்களைப் பற்றிய பேச்சு. மனதில் நிறைந்திருந்தது சிறிது நேரத்தின் பின்னர் கண்ணயர்ந்து விட்டேன்.

எங்கள் வீட்டு நாய் தொடர்ந்து குரைக்க கண் விழித்து என்னவாக இருக்கும் என எட்டிப்பார்த்தேன். எனக்கு முன்னரே கண் விழித்த அப்பாவும் மற்றையவர்களும் சொன்னார்கள் நகருக்குள் ஆமி வந்து விட்டதாம் அதுதான் நகரை அண்மித்த பகுதியைச் சேர்ந்த சனங்கள் எல்லாம் கிராமத்தின் உட் பகுதிகளை நோக்கி இடம் மாறிக் கொண்டிருப்பதாக.

எங்கள் வீடும் பிரதான வீதியை அண்மித்து இருப்பதனால் எமக்கு பாதுகாப்பனதல்ல. ஓரிரு நாட்களிற்கு நாங்களும் ஒரு மைலேனும் கிராமத்தின் உள்ளே போய் இருந்துவிட்டு நிலமையைப் பார்த்து பின்னர் திரும்பவும் வீடு வருவோம் என முடிவெடுக்கப் பட்டது. ஆனால் எங்கு போவது...? வீட்டில் இருந்தவர்களுடன் சேர்த்து இருபது பேரும் எங்கே போய் தங்குவது ...? எனும் கேள்விகள் முன்னின்றன. பின்னர் எமது வீட்டில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போவதாக முடிவு செய்யப் பட்டு சில தினங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் , உடைகளும், பணம், நகை, போன்ற பெறுமதியானவைகளும் எடுத்துக்கொண்டு நாம் பிறந்து வளர்ந்த அந்த வீட்டை விட்டு கோவிலை நோக்கி அந்த அதிகாலையில் சூரிய உதயத்தின் முன்னரே வெளிக்கிடுகின்றோம்.

எமது அயலவர்களும் சேர்ந்து எம்முடன் வெளிக்கிட்டனர். ஆனால் பக்கத்து வீட்டு அப்பு மட்டும் வெளிக்கிடவில்லை. ''இந்த வயது போன காலத்தில என்னால அலைய ஏலாது என்ன நடக்கிற தென்றாலும் அது எனக்கு என்ர வீட்டிலையே நடக்கட்டும் நீங்கள் போட்டு வாங்கோ என்னைப் பற்றி கவலைப் படாதைங்கோ'' என விரக்தியாகப் பேசினார். எனது மனம் கனத்து வெடிப்பது போல் இருந்தது. எத்தனை பேர் இப்படி சொந்த நாட்டிலேயே சொந்த வீடுவாசலை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாக அலைகின்றார்கள். ... நினைவுகளில் நாளையைப் பற்றிய சிந்தனையுடன் நாமெல்லாம் கோவிலை நோக்கி நகரத்தொடங்கினோம்.

கோவிலை வந்தடைந்ததும் வந்த களை தீர கோவில் கிணற்றில் தண்ணீர் அள்ளி குடித்துவிட்டு கோவிலின் அருகில் இருந்த அரசமரத்தருகில் எல்லோரும் கூடி இருந்தோம். எமக்கு முன்னரே வேறு பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லோருமாக எழுபது பேர்வரை அந்தக் கோவிலில் தஞ்சம் புகுந்திருந்தோம். ஒவ்வொருவர் முகமும் வாடிப்போய் இருந்தது. எல்லோருக்கும் மதிய உணவு செய்வதற்கான ஆயத்தம் நடந்து கொண்டிருந்தது ஒவ்வொருவர் கொண்டுவந்த அரிசி,மரக்கறி,பருப்பு, போன்றவற்றை ஒன்றாகப் போட்டு கறிச்சோறாக சமைப்பதற்கு கோவிலில் ஏற்கனவே இருந்த பெரிய பாத்திரம் எடுத்து மடப்பள்ளியில் அடுப்பு பற்ற வைக்கப் பட்டது.

அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. வீட்டில் இருக்கும் அரிசி மூட்டையில் ஒன்றை போய் எடுத்துவந்தால் ஒரு சில நாட்களிற்கான சாப்பாட்டுப் பிரச்சனை இருக்காதே என்று! அம்மாவிடம் சொன்னேன் ''எமது வீட்டடிக்கு இன்னும் ஆமி வரவில்லைத்தானே..? நான் கெதியாப் போய் ஒரு மூடை அரிசியை சைக்கிலில் கட்டிக்கொண்டு வாரேனென்று! அதற்கு அம்மா சொன்னா ''போக வேண்டாம் அங்கு ஒருத்தரும் இல்லை தேவை என்றால் பிறகு பார்ப்போம்'' என்று அதற்கு நான் ''இல்லை உடனும் வந்துடுவேன்'' என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்து மிதிக்க அங்கு நின்ற நண்பன் மோகன் தானும் வருவதாகச் சொல்லி சைக்கிலில் ஏறி விட்டான்..... தூரத்தில் ''அப்பாட்டை சொல்லிட்டுப் போ' என்று அம்மா சொல்வது கேட்டது. எனது சைக்கிள் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

இடை வழியில் மோகன் சொன்னான் ''டேய் மச்சான் எதுக்கும் நகர்ப் புறம் போய் ஆமி வந்திருக்கிறானா என்று எட்ட நின்று பாத்திட்டு வருவமோ..?'' என்றான். எனக்கும் சரி போய் பார்த்தால் போயிற்று என்று தோன்ற சைக்கிள் வீட்டையும் தாண்டி நகரை அண்மித்துக் கொண்டிருந்தது.

சிறிது தூரத்தில் இருந்தே பிரதான வீதியின் குறுக்காக மணல் மூடைகள் அடுக்கப் பட்டு பாதுகாப்பு அரண் அமைக்கப் பட்டிருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ''டேய் உண்மையிலே ஆமிக்காரன் நிக்கிறாண்டா வா திரும்பிப் போவம்" என்று சைக்கிலை நிப்பாட்டினேன். ''சரி உள் வீதியால போவம் அப்படியே தபால் கந்தோரடியால போய் டச்சு றோட்டால் வீட்டுக்கும் போவம்'' என்றான் எனக்கும் அது சரியாகப் பட அரச மருத்துவ மனையுடன் இருந்த வீதியால் உட்பக்கம் போய் பின்னர் ஒரு குச்சொழுங்கையினுள் சைக்கிலை சொலுத்தும் போது அருகில் இருந்த வீட்டு மதிலின் பின்னால் இருந்து ''ஹான்ஸ் அப்'' என்ற குரல் கேட்டது. திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தால் ஓர் ஆமி எம்மை நோக்கி துப்பாக்கியை நீட்டியவாறு நின்று கொண்டிருக்க வேறு இரண்டு ஆமிக்காரர் எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தனர்!

ஞாபகம் அடித்த பகுதியில் உங்களிடம் சொல்லி முடியும் என நினைக்கின்றேன்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதைந்த ஞாபகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோசம். மேலும் வாசிக்க ஆவலாய் இருக்கிறேன் .

Link to comment
Share on other sites

ஓ அப்ப ; இந்தியனாமி உங்களையும் தலைகீழாய் கட்டித்தூக்கி சப்பாத்தி தீத்தி இருக்கிறான் போலை :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

அப்பா வந்ததில் மகிழ்ச்சி அண்ணா நடந்த சம்பவத்தை கதையாக எடுத்தியம்புவும் விதம் சிறப்பு :) .......... அட உங்களை "கான்சப்" சொல்லிட்டாங்களா :lol: அதற்கு பிறகு என்ன நடந்தது என்று பார்க்க முன்னம் தொடரும் போட்டுவிட்டீங்க நல்லா இல்லை சொல்லிட்டேன் :wub: சரி அடுத்த "புதைத்த ஞாபகம்" எப்போது வரும்!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட பாவமே

முதல் அத்தியாயத்தில் அப்பாவுக்கு என்னாச்சோ என பயந்தேன். இப்ப பார் அரிசிமூட்டை எடுக்க போய் ஹான்ஸ் அப் பண்ணிட்டு இருக்கிறதை. ஏன்னா உங்களுக்கு அந்த வயதிலும் உந்த ரிஸ்க் ஆன வேலை. சரி அடுத்த அத்தியாயத்தில் முடியுங்கோ என்ன நடந்தது என்று அறிவம்

அட அட அட உப்படியான பிரச்சினைகளுக்குள் ஒரு வீட்டில் பலர் சேர்ந்திருப்பது ரொம்ப ஜொலி ஆக இருக்கும் ல. ம்ம் எனக்கு ஜொலியாக இருந்திச்சு. அதுதான் சொன்னேன்.

Link to comment
Share on other sites

கௌரிபாலன் உண்மை கதை சுவாரசியமாக உள்ளது.மருதடியில் இந்தியன் ஆமிக்கு குண்டு வைத்த பகிடியையும் ஞாபகம் இருந்தால் எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

  • 1 month later...

கதையை பொறுமையாக வாசித்துக் கருத்துச்சொன்ன கறுப்பி, சாத்திரி அண்ணா, ஜம்முத்தம்பி, நிலாத்தங்கை , நுனாவிலான் உங்கள் அனைவரிற்கும் மனமார்ந்த நன்றிகள் , கதையை முடிக்க நீண்ட காலம் எடுத்ததற்கு மன்னிக்கவும். நேரம் கிடைக்கும் போது இன்னும் சில கதைகள் சொல்கின்றேன் . :D பயப்பிடாதீங்கோ இப்போதைக்கு அடுத்த கதை வராது.... :D

எப்போதாவது வந்துபோகும் ஞாபகம் தான் ஆனால் கார்த்திகை மாதமானால் எப்படியாவது மறக்காமல் வந்துவிடும்.மறந்துபோக வேண்டுமே என்று எங்கோ என்னுள் புதைத்து வைத்த அந்த புதைக்கப் பட்ட ஞாபகம் இன்றும் என்மனதில் வந்து என்னை கிளறி விட்டுப் போனது...

குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளை இந்திய அமைதிப்படை கைதுசெய்து அவர்களை சிங்கள அரசிடம் ஒப்படைக்க முற்பட்ட சமயம் தமது கொள்கையின் படி சயனைற் அருந்தி உயிர்துறந்தனர். அதற்குப் பின்னர்தான் இந்திய அமைதிப் படைக்கு எதிரான யுத்தம் வெடித்தது.

இறுதியாக கோப்பாய் எனும் இடத்தில்தான் நேருக்கு நேர் யுத்தம் நடந்ததென்று நினைக்கின்றேன் பின்னர் புலிகள் தமது தாக்குதல்களின் வியூகத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர். இருந்தாலும் குண்டுகளின் சத்தங்கள் தொடர்ந்தும் கேட்டபடிதான் இருந்தது.... !

தென்மராட்சியில் இதுவரை எதுவும் நடக்கவில்லை அதனால் சண்டை நடந்த இடத்தில் இருந்து கூடுதலானவர்கள் வெளியேறி தென்மராட்சியில் தஞ்சம் புகுந்திருந்தனர். எமது வீட்டிலும் நான்கு குடும்பத்தினர் தங்கி இருந்தனர் அதேபோல்தான் ஒவ்வொருவர் வீட்டிலும் பல குடும்பங்கள் தங்கி இருந்தனர்.

சண்டை தொடங்கியதில் இருந்து பாடசாலை நடக்கவில்லை வீட்டில் இடம் பெயர்ந்து வந்தவர்களின் பிள்ளைகளும் நானும் மற்றும் என் சகோதரர்களும் சில சமயம் பக்கத்து வீட்டாரும் சேர்ந்து ஏதாவது விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்போம். பாடசாலை போக முடியவில்லை என்ற கவலை மறந்து மற்றையவரும் இடம் பெயர்ந்து வந்தோமே என்கின்ற கவலையை மறந்தோ அல்லது மறப்பதற்காகவோ. ஏதாச்சும் விளையாடுவோம்.

எமது வீட்டில் இருந்து நகரச் சந்தை ஒரு கிலோமீற்ரர் தொலைவில் உள்ளது முன்னரை விட இப்போது தென்மராட்சியில் மக்கள் தொகை கூடியதால் சந்தை நிரம்பி வழியும். சந்தையை அண்மித்தபடி அரச மருத்துவமனை. அப்பா அங்கேதான் வேலை பார்க்கின்றார் ....

எமது வீட்டில் இருந்தவர்களும் சந்தைக்குச் சென்று திரும்பி விட்டார்கள். நானும் எமது வீட்டில் இருந்தவர்களின் பிள்ளைகளும் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம் ...

திடீரென வானத்தில் ஒருவிசித்திரமான ஹெலி பெரும் இரைச்சலுடன் வட்டமிட்டு சந்தையை நோக்கி பதிவதைக் காணக்கூடியதாக இருந்தது ஓரிரு நிமிடத்தில் .....ட்றாறாங்ங்.... என்று சத்தம் கேட்டது. பின்னர் திரும்பவும் அந்த ஹெலி மேலெழும்பி போய்விட்டது .... இதுவரையில் அப்படிச் சத்தத்தை கேட்டதேயில்லை. ஷெல், குண்டு, துப்பாக்கி, இவற்றின் சத்தங்கள் தெரியும் ஆனால் இந்தச் சத்தம் புதுவிதமாக இருந்தது....?!

முற்றத்தில் நின்ற எம்மை வீட்டினுள் வரும்படி அழைத்தார்கள்... சிறிது நேர நிசப்தம் பின்னர் வேலைக்குப் போன அப்பா இன்னமும் வீடு திரும்பவில்லையே என்று அம்மா பதற்ரப்பட.... வீட்டில் இருந்த மாமா மார் தாங்கள் போய் பார்த்து வருவதாக கூறி சைக்கிலையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

எனது மனதில் ''கடவுளே அப்பாவுக்கு ஒன்றும் நடந்திருக்கக் கூடாது நல்லபடியாக வீடுவந்து சேரவேண்டும்'' என்று இறைவனை வேண்டியபடி இருந்தேன்...!

Nov 20 2007, 07:50 PM' post='361628']

நேரம் ஆக ஆக மனதில் பயம் குடிகொண்டது. போன மாமாவினரையும் காணவில்லையே எனும் ஏக்கம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்தது. சில மணி நேரத்தின் பின்னர் அப்பாவும் மாமாவினரும் வந்தார்கள். அவர்கள் முகத்தில் கவலை படர்ந்திருந்தது. உடையெல்லாம் ரத்தத்தால் நனைந்திருந்தது. அம்மாவும் நாங்களும் பதறியடிக்க அப்பா இடை மறித்தார். ''சத்தம் போடாதைங்கோ எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை'' என்று சொல்லி விட்டு நடந்ததை விபரித்தார்....

இந்தியன் ஆமியின் ஹெலி அப்பா மருத்துவ மனையில் இருந்த சமயம் வானத்தில் வட்டமிட்டு பின்னர் சந்தையை நோக்கி பதிந்து குண்டுகளை?? வீசியதாகவும் அதன் பின்னர் கெலி போய் சிறிது நேரத்தில் சந்தையில் இருந்து இறந்தவர்களின் உடல்களும் காயப் பட்டவர்களும் மருத்துவ மனைக்கு எடுத்து வரப்பட அவர்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட அப்பாவைத் தேடிப் போன மாமாவினரும் இணைந்து கொண்டனர். நேரம் ஆக வீட்டில் அனைவரும் பயத்துடன் இருப்பார்கள் தங்களைத்தேடுவார்கள் என்பதனால் தாம் வந்துவிட்டதாக சொன்னார்.

அன்றைய இரவு ஒருவரும் சரியாகத் தூங்க முடியவில்லை நடந்த தும்பியல் சம்பவங்களைப் பற்றிய பேச்சு. மனதில் நிறைந்திருந்தது சிறிது நேரத்தின் பின்னர் கண்ணயர்ந்து விட்டேன்.

எங்கள் வீட்டு நாய் தொடர்ந்து குரைக்க கண் விழித்து என்னவாக இருக்கும் என எட்டிப்பார்த்தேன். எனக்கு முன்னரே கண் விழித்த அப்பாவும் மற்றையவர்களும் சொன்னார்கள் நகருக்குள் ஆமி வந்து விட்டதாம் அதுதான் நகரை அண்மித்த பகுதியைச் சேர்ந்த சனங்கள் எல்லாம் கிராமத்தின் உட் பகுதிகளை நோக்கி இடம் மாறிக் கொண்டிருப்பதாக.

எங்கள் வீடும் பிரதான வீதியை அண்மித்து இருப்பதனால் எமக்கு பாதுகாப்பனதல்ல. ஓரிரு நாட்களிற்கு நாங்களும் ஒரு மைலேனும் கிராமத்தின் உள்ளே போய் இருந்துவிட்டு நிலமையைப் பார்த்து பின்னர் திரும்பவும் வீடு வருவோம் என முடிவெடுக்கப் பட்டது. ஆனால் எங்கு போவது...? வீட்டில் இருந்தவர்களுடன் சேர்த்து இருபது பேரும் எங்கே போய் தங்குவது ...? எனும் கேள்விகள் முன்னின்றன. பின்னர் எமது வீட்டில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போவதாக முடிவு செய்யப் பட்டு சில தினங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் , உடைகளும், பணம், நகை, போன்ற பெறுமதியானவைகளும் எடுத்துக்கொண்டு நாம் பிறந்து வளர்ந்த அந்த வீட்டை விட்டு கோவிலை நோக்கி அந்த அதிகாலையில் சூரிய உதயத்தின் முன்னரே வெளிக்கிடுகின்றோம்.

எமது அயலவர்களும் சேர்ந்து எம்முடன் வெளிக்கிட்டனர். ஆனால் பக்கத்து வீட்டு அப்பு மட்டும் வெளிக்கிடவில்லை. ''இந்த வயது போன காலத்தில என்னால அலைய ஏலாது என்ன நடக்கிற தென்றாலும் அது எனக்கு என்ர வீட்டிலையே நடக்கட்டும் நீங்கள் போட்டு வாங்கோ என்னைப் பற்றி கவலைப் படாதைங்கோ'' என விரக்தியாகப் பேசினார். எனது மனம் கனத்து வெடிப்பது போல் இருந்தது. எத்தனை பேர் இப்படி சொந்த நாட்டிலேயே சொந்த வீடுவாசலை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாக அலைகின்றார்கள். ... நினைவுகளில் நாளையைப் பற்றிய சிந்தனையுடன் நாமெல்லாம் கோவிலை நோக்கி நகரத்தொடங்கினோம்.

கோவிலை வந்தடைந்ததும் வந்த களை தீர கோவில் கிணற்றில் தண்ணீர் அள்ளி குடித்துவிட்டு கோவிலின் அருகில் இருந்த அரசமரத்தருகில் எல்லோரும் கூடி இருந்தோம். எமக்கு முன்னரே வேறு பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லோருமாக எழுபது பேர்வரை அந்தக் கோவிலில் தஞ்சம் புகுந்திருந்தோம். ஒவ்வொருவர் முகமும் வாடிப்போய் இருந்தது. எல்லோருக்கும் மதிய உணவு செய்வதற்கான ஆயத்தம் நடந்து கொண்டிருந்தது ஒவ்வொருவர் கொண்டுவந்த அரிசி,மரக்கறி,பருப்பு, போன்றவற்றை ஒன்றாகப் போட்டு கறிச்சோறாக சமைப்பதற்கு கோவிலில் ஏற்கனவே இருந்த பெரிய பாத்திரம் எடுத்து மடப்பள்ளியில் அடுப்பு பற்ற வைக்கப் பட்டது.

அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. வீட்டில் இருக்கும் அரிசி மூட்டையில் ஒன்றை போய் எடுத்துவந்தால் ஒரு சில நாட்களிற்கான சாப்பாட்டுப் பிரச்சனை இருக்காதே என்று! அம்மாவிடம் சொன்னேன் ''எமது வீட்டடிக்கு இன்னும் ஆமி வரவில்லைத்தானே..? நான் கெதியாப் போய் ஒரு மூடை அரிசியை சைக்கிலில் கட்டிக்கொண்டு வாரேனென்று! அதற்கு அம்மா சொன்னா ''போக வேண்டாம் அங்கு ஒருத்தரும் இல்லை தேவை என்றால் பிறகு பார்ப்போம்'' என்று அதற்கு நான் ''இல்லை உடனும் வந்துடுவேன்'' என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்து மிதிக்க அங்கு நின்ற நண்பன் மோகன் தானும் வருவதாகச் சொல்லி சைக்கிலில் ஏறி விட்டான்..... தூரத்தில் ''அப்பாட்டை சொல்லிட்டுப் போ' என்று அம்மா சொல்வது கேட்டது. எனது சைக்கிள் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

இடை வழியில் மோகன் சொன்னான் ''டேய் மச்சான் எதுக்கும் நகர்ப் புறம் போய் ஆமி வந்திருக்கிறானா என்று எட்ட நின்று பாத்திட்டு வருவமோ..?'' என்றான். எனக்கும் சரி போய் பார்த்தால் போயிற்று என்று தோன்ற சைக்கிள் வீட்டையும் தாண்டி நகரை அண்மித்துக் கொண்டிருந்தது.

சிறிது தூரத்தில் இருந்தே பிரதான வீதியின் குறுக்காக மணல் மூடைகள் அடுக்கப் பட்டு பாதுகாப்பு அரண் அமைக்கப் பட்டிருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ''டேய் உண்மையிலே ஆமிக்காரன் நிக்கிறாண்டா வா திரும்பிப் போவம்" என்று சைக்கிலை நிப்பாட்டினேன். ''சரி உள் வீதியால போவம் அப்படியே தபால் கந்தோரடியால போய் டச்சு றோட்டால் வீட்டுக்கும் போவம்'' என்றான் எனக்கும் அது சரியாகப் பட அரச மருத்துவ மனையுடன் இருந்த வீதியால் உட்பக்கம் போய் பின்னர் ஒரு குச்சொழுங்கையினுள் சைக்கிலை சொலுத்தும் போது அருகில் இருந்த வீட்டு மதிலின் பின்னால் இருந்து ''ஹான்ஸ் அப்'' என்ற குரல் கேட்டது. திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தால் ஓர் ஆமி எம்மை நோக்கி துப்பாக்கியை நீட்டியவாறு நின்று கொண்டிருக்க வேறு இரண்டு ஆமிக்காரர் எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தனர்!

எனது இதயத்துடிப்பை மட்டுமல்ல மோகனின் இதயத்துடிப்பையும் என்னால் கேக்கக்கூடியவாறு இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். ஓடுவோமா? அல்லது அப்படியே கையைத்தூக்கிடுவோமா என்று சிந்திப்பதற்கே நேரம்கிடைக்கவில்லை வந்த ஆமிக்காரர் மிகவும் நெருங்கிவிட்டதால் கையை உயர்த்தினோம். வந்தவர்கள் முதலில் எமது உடலைச்சோதனையிட்டார்கள். பின்னர் கையைத்தூக்கியவாறே நகரின் உள்நோக்கி எம்மை துப்பாக்கி முனையில் இட்டுச்சென்றார்கள். நான் அப்பாவுடன் அழுது அடம்பிடித்து வாங்கிய புதிய ஏசியாச் சைக்கிலையும் அப்படியே போட்டு விட்டு இனி என்ன நடக்கப்போகின்றதோ எனும் பயத்துடன் நகருக்குள் போகின்றோம்.

காலில் ஈயத்துகள்கள் மிதிபட்டன பார்க்கும் இடமெல்லாம் இரத்தக்கறை படிந்திருந்தது நவீனசந்தையின் முற்புறத்தில் உள்ள சிற்றுண்டிக் கடை எரிந்து கரிப்பிடித்ததுபோல் காட்சிதந்தது. சுவர்கள் சன்னங்களின் துளைகளினால் சல்லடை போடப்பட்டிருந்தது. பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலிம் பார்த்த அனர்த்தங்கள் இன்று நேற்று நடந்ததை நேரடியாகப் பார்க்கும்போது மனம் கனத்தது. ஏதோ ஒரு விரக்தியில் மனம் மரத்துப் போனது.

எம்மை இட்டுவந்தவர்கள் பிரதான பஸ்நிலையமருகில் இருந்த மரத்தருகேவிட இன்னும் பல ஆமிக்காரர் எம்மைவந்து சூழ்ந்து கொண்டார்கள் வந்தவர்களில் சிலர் தமிழராக இருந்தனர் திரும்பவும் எமது உடல்கள் சோதனை செய்யப்பட்டது. பின்னர் புலிகள் எங்கே என்று கேட்க எமக்கு புலியென்றால் என்னவென்பதே தெரியாத பாவனையில் தெரியாது என்றோம். ரெளண்டு கட்டி அடிப்பது என்பது கேள்விப்பட்டிருக்கிறேன். சினீமாக்களிலும் பார்த்திருக்கின்றேன் ஆனால் அது அப்போது எமக்கு நிகழ்ந்தது. அடிபடாத இடமே இல்லை எனலாம் அப்போது வலிக்கவில்லை.எனது மூழை நோவை உணரும் தன்மையை மறந்திருந்ததோ என்னமோ..?? இறுதியாக துப்பாக்கியை லோட் செய்து முனையை எனது வாய்க்குள் வைத்த ஒருவர் ''சொல்லு புலிகள் எங்கு இருக்கின்றார்கள் அவர்கள் அனுப்பிய ஆக்கள்தானே நீங்கள்..? சொல்லாவிட்டால் சுட்டுவிடுவேன்'' என்றார். நான் கண்களை இறுகமூடிக்கொண்டேன். அம்மா, அப்பா, சகோதரர், மற்றும் உறவினர் நண்பர்களது முகம் சிலைட்ஷோ வாக மனக்கண்முன் ஓடிக் கொண்டிருந்தது. ''அம்மா இனி எப்போது உன்னைக் காணப் போகின்றேன் என்னேரமும் எனதுயிர் பிரியப் போகின்றது'' என்று நினைக்க அப்போது அங்கு வந்த உயரதிகாரியாக இருக்க வேண்டும் ஹிந்தியில் மற்றைய ஆமிக்காரருடன் ஏதோ கதைத்தார்... பின்னர் எமது கைகள் இரண்டும் பின்னுக்கு இரண்டு கைப் பெருவிரல்களையும் ஒன்றாக இணைத்து கயிற்றினால் நன்றாக வரிந்து கட்டப்பட்டது. ஏற்கனவே உடைக்கப்பட்ட அருகில் இருந்த கடைக்குள் எம்மை உள்ளே தள்ளிவிட்டு ''இன்னமும் அரை மணித்தியாலத்தினுள் புலிகள் எங்கே இருக்கின்றார்கள் என்பதனைச் சொல்லாது விட்டால் கடையுடன் சேர்த்து குண்டு வைத்து விடுவோம்'' என்றுவர்கள் கடைக்கு வெளியில் மூவர் எமக்கு காவலுக்கு நின்றனர்.

கடையினுள்ளே எம்மைப்போல் இன்னும் நான்குபேர் இருந்தது அப்போதுதான் தெரிந்தது. அவர்களும் எம்மைப்போல் புதினம் பார்க்க வந்து மாட்டுப்பட்டவர்கள் தான். அவர்களைக் கண்டது மனதுக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தது... அந்த ஆறுதல் நாம் மட்டுமல்ல எம்முடன் சேர்ந்து இன்னும் பலரும் சாவதற்கு இருக்கின்றார்கள் என்பதனால் அல்ல. இரவில் ஒன்றுக்குப் போவதற்கே தனியாய் போகப் பயத்தில் யாரையும் துணைக்கு கூப்பிடுவது போல் பக்கத்தில் இக்கட்டான சூழ்நிலையில் இன்னும் பலர் எம்முடன் இருந்தது கொஞ்சம் மன ஆறுதல் தந்தது.

சில மணித்தியாலங்களின் பின்னர் எங்கள் ஆறு பேரையும் வெளியில் கூட்டிவந்து கைகளின் கட்டுக்களை அவிழ்த்தார்கள். எங்களை விடுதலை செய்யப் போகின்றார்கள் என நினைத்தேன். ஆனால் நடந்தது.... நான் பார்த்தது ..... இதைவிட இறந்திருக்கலாமோ..? என்று தோன்றியது.!

பிரதான வீதியின் ஓரத்தில் பாடசாலைக்கு அருகாமையாக ஒரு வெள்ளை வான் நின்றுகொண்டிருந்தது அதனை நோக்கி எம்மை வருமாறு அழைத்தார்கள். ''என்னவாக இருக்கும் இதில் ஏற்றி எம்மை எங்காவது கொண்டு போகப் போகின்றார்களோ''..? அருகில் சென்றபோதுதான் தெரிந்தது வான் முழுவதும் துப்பாக்கி துளைத்த ஓட்டைகளாக இருந்தது சில்லும் காற்றுப்போய் இருந்தது.

எம்மைச் சுற்றி ஒன்பது ஆமிக்காரர்கள் மட்டிலிருந்தார்கள் அதில் ஒருவர் தமிழன் இன்னும் ஒருவர் தமிழ் தெரிந்தவர். தமிழ் ஆமிக்காரர் சொன்னார் ''தம்பிகளா ஓடிடாதீங்க ஓடினால் சுடும்படி உத்தரவு நம்ம ஆக்கள் எல்லா இடமும் நிக்கிறாங்க நினைச்சுக்கூட பார்க்காதீங்க. பஸ்சுக்குள் இருப்பவற்றை அப்புறப் படுத்தியதும் உங்களை வீட்டுக்கு போக விடுவாங்க'' என்றார்!

வானினுள் இதுவரைக்கும் என்ன இருக்கின்றது என்று தெரியாமல் இருந்தேன் உள்ளுக்குள் ஏறிப்பார்த்தால் அம்மாடியோவ்..... ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள், என ஒரு நாற்பது பேர்மட்டில் இறந்தபடி இருந்தனர் நான் பார்த்த காட்சியை அப்படியே என்னால் எழுத முடியவில்லை.... ....அவளவு கோரம்

அந்த நேரம் எனது மனம் கல்லாகிவிட்டது கதறவும் இல்லை கண்ணீரும் வரவில்லை அங்கிருந்த அனைவருமே அப்படித்தான் நின்றார்கள். எமக்கு முன்னர் பிடிபட்டிருந்த அண்ணா கொஞ்சம் கூடுதலாக உணர்ச்சி வசப் பட்டவராய் ''ஏன் இப்படி...???? இந்த பிஞ்சுகளைப்பார்த்தால் உங்களுக்கு போராளி மாதிரியா கிடக்கு'' என தமிழ் ஆமிக்காரரிடம் கேட்டார். அவரது மனமும் கொஞ்சம் சோர்ந்திருந்தது இருந்தாலும் அதை வெளிக் காட்டாதவர்போல் ''இரவு இந்தவழியால் வந்த வாகனம் மறிக்கும் போது நிறுத்தவில்லை அதனால்தான் இப்படியாகிவிட்டது. உள்ளே இருப்பது யாரென்று எப்படித் தெரியும்...? ..... நம்ம ஆக்களையும் உயிருடன் பிடித்து ரயரை மாலையாப் போட்டு கொழுத்தினாங்கதானே...?'' என்று தமிழ் ஆமிக்காரர் சொல்லி முடிக்க அந்த அண்ணா வாதாடுவதற்குரிய இடமில்லை இவர்களுக்கு என்ன தெரியும் சுடு என்றால் சுடுவது இவர்கள் கடமை. இவற்றை எல்லாம் இயக்குபவன் எங்கோ இருக்கான் இனி எதைப்பற்றிக் கதைப்பதும் பிரயோசனமில்லை என்பதுபோல் மெளனமானார்.

எமக்கும் இனி இதுதான் நடந்துவிடப் போகின்றதோ எனும் எண்ணம் எம் முன் விரிந்து நின்று பயமுறுத்தியது.!

ஏற்கனவே உடல்களைப் புதைப்பதற்கான குழிகள் மீன் சந்தைக்கு அருகில் உள்ள தண்டவாளத்திற்கு அடுத்த பக்கமாக ஒரு வெளிப் பிரதேசத்தில் மற்றைய ஆமிக்காரரினால் வெட்டப் பட்டுவிட்டன . உடுப்புக்கடை ஒன்று உடைக்கப் பட்டு அதில் இருந்த துணிகளை எடுத்துத் தந்தார்கள் இறந்தவர்களின் உடல்களை அத்துணிகளினால் சுற்றி புதைக்க வேண்டும். நானும் மற்றையவர்களும் ஒவ்வொரு உடலங்களாக வானில் இருந்து எடுத்து துணியால் மூடிக்கொண்டிருந்தோம். ஆனால் எனது நண்பன் மோகன் வானினுள் உடலங்களில் அணியப் பட்டிருந்த நகைகளை களற்றிக் கொண்டிருந்தான். இவனது இந்தச்செயல் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது ''டேய் என்னசெய்கிறாய்.... ?? இதெல்லாம் ஏன் இப்ப களட்டுறாய்...?'' எனக் கோபமாகக் கேட்டேன். அதற்கு அவன் சொன்னான் ''வீணாய் ஏன் இதையும் சேர்த்துப் புதைக்க வேணும்.... நீயும் வேணுமென்றால் களட்டிப் போட்டு புதைடா'' என்றான். ... ''சீ போடா நாமளே உயிருடன் போறமோ தெரியாது. எப்படியும் இந்தக் குழி ஒன்றுக்கை இவர்களுடன் நாமளும் சேரப் போறம். அதற்குள் நீ வேறு இந்த வேலை செய்யுறாய்! என்னவாவது செய் '' என்றேன் வெறுப்புடன். இதுவரைக்கும் பிண நாற்றம் வீசவில்லை எனக்கு ஆனால் இப்போதுதான் மோகனில் இருந்து அந்த நாற்றம் வீசுவதாக உணர்ந்தேன்.

சில மணித்தியாலங்களில் வானில் இருந்த அனைத்து உடலங்களும் புதைக்கப் பட்டு விட்டன அதில் இருந்தவர்களில் ஒருவரையும் எனக்குத் தெரிந்தவராக இல்லை இருந்தாலும் பலரது முகங்கள் இப்போதும் மனக்கண் முன் வந்து மறைவதுண்டு. பல ஆண்கள் பூனூல் அணிந்திருந்தனர் அவர்களையும் மற்றவர்களுடனேயே சேர்த்து ஒன்றாகப் புதைத்தோம். இங்கு சமயம், சாதீயம், எல்லாம் இறந்தபின் அனாதரவான உடல்களிற்கு ஏது ...? புதைப்பதா..? எரிப்பதா என்பதனைக்கூட எங்களால் முடிவு செய்யமுடியாது.! இப்போது நாங்கள் கைதியாக இருக்கின்றோம் அதனால்தான் இந்திய ராணுவத்தின் கட்டாயத்தின் பேரில் அவர்களால் கொல்லப்பட்டவர்களை புதைக்கின்றோம் என்றில்லாமல் எமது கடமை எனும் உணர்வுடன் காரியத்தை செய்து முடித்தோம். மனது அவர்களது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்துக் கொண்டது. !

இனி நாம் விடுதலையாகப் போகின்றோம் எனும் நினைவுடன் இருக்கும் போது அந்தத் தமிழ் ஆமிக்காரர் வந்து சொன்னார் இன்று இரவு அடுத்த நகருக்குரிய குறுக்கு வழிப்பாதையால் தம்மைக் கூட்டிப் போனதன் பின்னர் விடுதலை செய்வதாக. என்ன செய்யமுடியும் வாதாட முடியுமா..? சரி என்பது போல் தலையசைத்தோம் ...

மாலை ஆறு மணி இருக்கும் சரமாரியாக ஷெல் அடித்தார்கள். மனம் பதை பதைத்தது .... எனது உறவுகள், ஊர்மக்கள், என்னவானார்களோ..? எனும் ஏக்கம் மனதைப் பிடுங்க அந்தத் தமிழ் ஆமியிடமே கேட்டோம். ''ஊருக்குள் அப்பாவிப் பொது மக்கள்தான் இருக்கின்றார்கள் ஷெல் அடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கோ'' மன்றாடினோம். '' அது வெறும் பிளாஸ்ரிக் ஷெல். பாதிப்பொன்றும் வராது. இன்னும் கொஞ்சநேரத்தில் அடுத்த நகருக்கு போவதற்கு ஏதாவது எதிர்ப்பு வருகின்றதா எனப் பார்ப்பதற்குத்தான் பிளாஸ்ரிக் ஷெல் அடிக்கிறார்கள்''என்றார் அவர்.

சிறிது நேரத்தின் பின்னர் எமது கைகள் மீண்டும் பிணைக்கப்பட்டு அதன் மறுமுனையை ஒவ்வொரு ஆமிக்காரரும் பிடித்திருந்தனர் . ( மாட்டுக்கு கயிறு கட்டி அதன் மறு முணையை மாட்டு வண்டிக்காரன் பிடிப்பது போல) எம்மை முன்னே போகவிட்டு பின்னே நிரையாக கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் ஆமிக்காரர் எம்மைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் அந்தத்தமிழ் ஆமிக்காரர் இப்போது எம்முடன் வரவில்லை, ரவி எனும் பெயருடைய ஒரு ஹிந்திக்காரர்தான் அந்தப் படை நகர்வுக்கு பொறுப்பாக இருந்தார். எமது கயிற்றினை பிடித்திருந்த ஆமிக்காரர் இருவர் தமிழராகவும். மற்றைய வர்கள் தமிழ் தெரிந்தவர்களாகவும் இருந்தனர்.

சண்டை தொடங்கினால் முதலில் பலியாவது நாங்கள்தான். அதனால் அப்படி ஏதாவதென்றால் என்னநடந்தாலும் சரி ஓடிவிடவேண்டும் எனும் முடிவை மனம் எடுத்திருந்தது. அதுமட்டும் இவர்களின் வழிகாட்டிகளாகப் போவேன்.(வழிகாட்டியா மனிதக் கேடையமா என்பதுபற்றி தெரிந்திருக்கவில்லை) உள்வீதிகள், குச்சொழுங்கைகள், சில இடங்களில் வேலிகளை வெட்டி காணிகளினூடாகவும், பலரது முற்றத்திலும் கால் பதித்து நாம் நகர்ந்து கொண்டிருந்தோம். ஒருவர் வீட்டிலும் யாரையும் காணவில்லை அடித்த ஷெல்லுக்கு எல்லோரும் எங்கோ ஓடி ஒதுங்கியிருக்க வேண்டும், ஆடு, மாடுகள் மட்டும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார்கள். சிறிது நேரத்தின் பின்னர் ''சோ'' வென்று நல்ல மழை பெய்தது உடலில், உடையில் உள்ள ரத்தக் கறையை கழுவி விடவேண்டும் என்றே வந்தது போலிருந்தது.

இரவு பதினொரு மணியளவில் நகரினை அடைந்து விட்டோம். எம்மை ஒரு கட்டிடத்தினுள் இருத்தி ஐந்து பேரை காவலுக்கு விட்டு விட்டு மிகுதி ஆமிக்காரர் தமது நிலைகளைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடு பட்டனர். நடந்து வந்த களையும், காலையில் அடிவாங்கிய நோவும், பிணங்களைப் பார்த்ததால் மனதில் ஏற்பட்ட தாக்கமும் அசதியில் ஈர உடையுடனும் என்னை அறியாமலே தூங்கிவிட்டேன்.

விழித்துப் பார்க்கும்போது விடிந்திருந்தது. மற்றையவர்களும் அப்போதுதான் ஒவ்வொருவராக கண்விழித்தார்கள். எமக்கு இன்று விடுதலை கிடைத்துவிடும்! எங்கே முன்னர் எம்முடன் நின்ற அந்த தமிழ் ஆமிக்காரர் என்று சுற்றும் முற்றும் பார்த்தோம். அவரை எங்கேயும் காண வில்லை. இங்கிருக்கும் தமிழ் ஆமிக்காரரிடம் கேட்டோம் ''எப்போது வீட்டுக்கு போகலாம்'' என்று ''தமது தலைமை அதிகாரி எப்போது உத்தரவு தருகின்றாரோ அப்போது போகலாம்'' என்றார்.

அப்பா என்னைக் காணாமல் ஊரெல்லாம் தேடினார். கடைசியாக நானும் மோகனும் நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்ததினை பார்த்த யாரோ சொன்ன தகவலை வைத்து நான் ஆமியில் பிடிபட்டு விட்டேன் என்பதனை ஊகித்துக் கொண்டுள்ளார். ஆனால் உயிருடன் இருக்கின்றேனோ அல்லது எனக்கு என்ன நடந்து விட்டதென்ற செய்தி ஏதும் தெரியாமல் தவித்து. அம்மாவிடம் பாலன் சித்தப்பா வீட்டினருடன் எங்கேயோ நிற்கின்றான் எனும் பொய்யைச் சொல்லி வைத்திருந்தார்.

கையை பின்னுக்கு கட்டியது பெரும் இடைஞ்சலாக இருந்தது. மூக்கில் கடிக்கும். சொறிந்துவிடும்படி ஆமியையா கேட்கமுடியுமா...? எங்கிருந்தோ இலையான் வந்து முகத்தில் மொய்க்கும் கையைக் கட்டி வைத்தால் இலையான் கூட எம்முடன் தன் வீரம் காட்டும்.

பொறுக்க முடியாமல் ஆமிக்காரரைக் கேட்டேன் ''உங்கள் மேலதிகாரியிடம் கேட்டுச் சொல்லுங்கோ எங்களை எப்ப விடுவினம்'' என அவரும் எங்களில் இரக்கம் வந்தவராக ”இருங்கள் வருகின்றேன்” என்று சொல்லிவிட்டு பக்கத்தில் நின்ற ஹிந்திக்காரனிடம் ஏதோ சொல்லிவிட்டு தனது மேலதிகாரி இருக்கும் இடம் நோக்கி போனார்.

சிறிது நேரத்தின் பின்னர் எமது கைகளின் கட்டுக்கள் அவிழ்த்து விடப்பட்டன எமது விடுதலைக்காக அனுமதி பெற்றுவந்த ஆமிக்காரர் எம்மை இருவர் இருவராக பாதுகாப்பு முன்னரங்கம் வரை அழைத்துச் சென்று “பிரதான வீதியைப் பாவிக்காமல் உள்பக்கமாக உங்கள், உங்கள் வீடுகளுக்கு போங்கோ. வேறு பிரிவு ஆமிக்காரரிடம் இனி பிடிபட்டால் எம்மால் ஒன்றும் செய்யமுடியாது... கவனமா போங்க” என்றார் மோகன் ஏற்கனவே போய் விட்டான் நானும் மற்றைய அண்ணாவும்தான். எமது வீடு பிரதான வீதியின் எதிர் எதிர்த்திசைகளில் என்பதால் நாமும் பிரிந்து தனித்தனியாக பயனித்தோம்...!

விடுதலையாகிவிட்ட மகிழ்ச்சி கொஞ்சம் இருந்தாலும் நேற்றிரவு அடித்த ஷெல்லினால் எனது ஊரில் என்ன நடந்திருக்குமோ என்ற ஏக்கம் மனதினை வாட்டியது. அரைமணித்தியாலத்தில் ஊருக்குள் வந்துவிட்டேன் இது வரைக்கும் ஒரு மனித முகத்தையும் காண முடியவில்லை. விக்கிரமாதித்தன் கதைகளில் படித்த ஏதோ ஓர் முனிவரால் சபிக்கப்பட்ட ஊர்போல காட்சிதந்தது நம்மூர். கால்கள் என் இருப்பிடம் எங்கே என்று தடுமாறியது. எங்கே போவது...? வீட்டுக்குப் போவதா..? அல்லது புகலிடமாய் போன கோவிலுக்கு போவதா...? முதலில் கோவிலுக்கு போவோம் என முடிவு பண்ணி கால்கள் கோவில் நோக்கி நடந்தன..... மனதில் நேற்றுப் புதைத்த இறந்த உடல்களின் முகங்கள் வந்து வந்து போயின. எங்கிருந்தோ பறந்த குருவி ஒன்று எவ்வளவு இடம் இருந்தும் என் தலையில் எச்சமிட்டுப் போனது. கண்களில் நீர்கசிய கால்கள் நடைபிணமாய் புகலிடம் தேடியது!!!

[இத்துடன் புதைந்தது ஞாபகம்.]

Link to comment
Share on other sites

சோகமான உண்மைப்பதிவு கௌரிபாலன் இப்படியான உங்கள் உண்மைப்பதிவுகளை எழுதி ஒரு வலைப்பூவில் சேமியுங்கள் கட்டாயம் இனிவருங்காலங்களில் அனைவரும் படிக்க வேண்டிய எங்கள் வராலாறு இவைகள்தான். நானும் முடிந்தளவு பதிவுகளாக்கி வருகிறேன்.

Link to comment
Share on other sites

கதையில் இறுதியில் கெளரி அண்ணா தப்புவார் என்று நேக்கு முதலே தெரியும் :lol: எப்படி என்று கேட்கிறியளோ இல்லாட்டி எப்படி இப்ப கதை எழுதிவியள் அது தான் :lol: ....... ஆனாலும் அந்த நேரத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை :D .. என்னவோ சுகமாக தப்பி வந்ததில சந்தோசம் நேக்கு :lol: ..உண்மை சம்பவத்தை கதையாக நகர்த்தி சென்ற விதம் அருமை அண்ணா!! :)

ஆனால் எனது நண்பன் மோகன் வானினுள் உடலங்களில் அணியப் பட்டிருந்த நகைகளை களற்றிக் கொண்டிருந்தான்.

இப்படியும் ஆட்கள் இருப்பீனமா :D போகும் போது என்னத்தை நாம கொண்டு போக போகிறோம் :) அதுகுள்ள சா இவரை நினைக்கவே வெறுப்பா இருக்கு! :) !

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சோகமான உண்மைப்பதிவு கௌரிபாலன் இப்படியான உங்கள் உண்மைப்பதிவுகளை எழுதி ஒரு வலைப்பூவில் சேமியுங்கள் கட்டாயம் இனிவருங்காலங்களில் அனைவரும் படிக்க வேண்டிய எங்கள் வராலாறு இவைகள்தான். நானும் முடிந்தளவு பதிவுகளாக்கி வருகிறேன்.

நன்றி சாத்திரி அண்ணா வலைப்பூ ஒன்றினை உருவாக்கி வருகின்றேன் நேரம் கிடைக்கும்போது வேறு பலவும் எழுதும் எண்ணம் இருக்கின்றது . தங்கள் வலைப்பூவும் பார்த்தேன் அருமை

கதையில் இறுதியில் கெளரி அண்ணா தப்புவார் என்று நேக்கு முதலே தெரியும் :) எப்படி என்று கேட்கிறியளோ இல்லாட்டி எப்படி இப்ப கதை எழுதிவியள் அது தான் :( ....... ஆனாலும் அந்த நேரத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை :D .. என்னவோ சுகமாக தப்பி வந்ததில சந்தோசம் நேக்கு :lol: ..உண்மை சம்பவத்தை கதையாக நகர்த்தி சென்ற விதம் அருமை அண்ணா!! :D

நன்றி ஜம்ஸ்தம்பி அங்க தப்பி இப்ப இங்க உங்களிடம் மாட்டி முழிக்கிறேனே... :D

இப்படியும் ஆட்கள் இருப்பீனமா :wub: போகும் போது என்னத்தை நாம கொண்டு போக போகிறோம் :D அதுகுள்ள சா இவரை நினைக்கவே வெறுப்பா இருக்கு! :D !

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கெளரிபாலன் ,

உங்கள் ஞாபகங்கள் இந்தியப்படைகளின் காலத்து துயரங்களை நினைவில் நிறுத்தி அந்தக்கொடிய காலத்துள் மீளவும் கொண்டு போகிறது. எழுத்தோட்டமும் ஞாபக மீட்டலும் சம்பவத்துக்குள் வாசகரை அழைத்துப்போகிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

''குளிர்வாடை'' என்ற சிறுகதையை எழுதிய கொளரிபாலன் நீங்களா ?

Link to comment
Share on other sites

கெளரிபாலன் ,

உங்கள் ஞாபகங்கள் இந்தியப்படைகளின் காலத்து துயரங்களை நினைவில் நிறுத்தி அந்தக்கொடிய காலத்துள் மீளவும் கொண்டு போகிறது. எழுத்தோட்டமும் ஞாபக மீட்டலும் சம்பவத்துக்குள் வாசகரை அழைத்துப்போகிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

தாங்கள்தரும் ஊக்கத்திற்கும் வாழ்த்துக்களிற்கும் நன்றிகள்

''குளிர்வாடை'' என்ற சிறுகதையை எழுதிய கொளரிபாலன் நீங்களா ? ''நான் அவன் இல்லை” சாந்தியக்கா.... :lol:

Link to comment
Share on other sites

நான் அவன் இல்லை சே கிட்டடியிலை பாத்த படத்தின்ரை பெயரா இருக்கு :lol:

Link to comment
Share on other sites

உங்கள் ஞாபகங்களை வாசிக்கும் போது இந்தியன் ஆமி காலத்தில் நடந்த

துயரங்களை ஞாபகப்படுத்தி மீளவும் அந்த துயரங்கள் எல்லாம்

இப்போ நடந்த மாதிரி மனதை கனக்க வைக்கிறது. அந்தளவு உயிரோட்டத்துடன்

எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

தங்கள் பாராட்டிற்கும் தரும் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் ரசிகை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனதில் புதைக்கப்பட்ட ஞாபகங்களை அனுபவஉணர்வுடன் எம்மில் விதைத்த உங்கள் எழுத்துநடை

எம் உணர்வுகளைத் தட்டி எம் மனதிலும் ஞாபகம் வருதே....நன்றி தொடருங்கள்.

Link to comment
Share on other sites

துயர் படிந்த ஒரு காலத்தை கண்முன்னே கொண்டுவந்தீர்கள். மனம் பாரமாகி விட்டது. நிஜங்கள் நிழலாய் தொடர்கின்றது. இது தான் எம் காலத்தின் இலக்கியம். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.