Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிரித்தானிய தகவல்கள்


Recommended Posts

பிரித்தானிய தேர்தல்

பிரித்தானியாவில் தற்போது பெருந்தொகையான தமிழருக்கு ஓட்டுரிமை உள்ளது. எதிர்வரும் தேர்தலில் அவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தால் அது தாயக மற்றும் புலத்தமிழர்களுக்கு நன்மை பயக்கும்?

Link to comment
Share on other sites

 • Replies 232
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம டொனி பிளேயருக்கு தான்.. நாங்க கடந்த வருடம் தான் வாழ்வில முதல் முதல் வோட் பண்ணினம். :mrgreen:

Link to comment
Share on other sites

இங்கு ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு வலிமையுள்ள பெரிய கட்சிகள் இரண்டுதான். அவை தொழிற் கட்சியும் கன்சவேட்டிவ் கட்சியும். அவற்றில் டொனி பிளேயர் தலைமை வகிக்கும் தொழிற்கட்சியே ஓரளவு சிறுபான்மையினருக்கு ஆதரவான கொள்கைகளை கொண்டுள்ளது. ஏறத்தாள தொழிற் கட்சியை ஜதேக கட்சிக்கும் கன்சவேட்டிவ் கட்சியை சுதந்திரகட்சிக்கும் ஒப்பிடலாம்.

Link to comment
Share on other sites

நம்ம டொனி பிளேயருக்கு தான்.. நாங்க கடந்த வருடம் தான் வாழ்வில முதல் முதல் வோட் பண்ணினம். :mrgreen:

என்னுடைய ஓட்டும் தற்போதைய சூழ்நிலையில் டொனி பிளேயரின் தொழிற்கட்சிக்கே,

Link to comment
Share on other sites

வோட்டு சுத்த வேஸ்டு என்றாங்க பியோர் பிரிட்டடிஷ் பீப்பிள்...! கடந்த தேர்தலில் 50% சற்று மேலதிகமானோரே வாக்களித்திருந்தனர்...! அதுக்க 18 மில்லியனில 0.2 மில்லியனா இருக்கிற உவை வோட்டுப் போட்டுத்தான் பிளேயர் டைனிங் ஸ்றீரில குடியேறப் போறாராக்கும்...! :wink: :lol: :?:

பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கைகள் கட்சி சார்ந்தவையல்ல...எனவே உவைக்கு வோட்டுப் போட்டு நம்ம தாயகச் சனத்துக்கு ஆகப் போகிறதும் ஒன்றுமில்ல...! :idea: :P

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏங்க ஒரு சாதாரன பொதுமகன் என்ற வகையில் ஓட்டுப்போட வேண்டியது நமது கடமை.. உரிமைகளை பெறுற மாதிரி கடமைகளையும் செய்யத்தானே வேணும்.. சிறிதுளி பெரு வெள்ளம் ஆச்சே.. :idea: :wink:

Link to comment
Share on other sites

ஏங்க ஒரு சாதாரன பொதுமகன் என்ற வகையில் ஓட்டுப்போட வேண்டியது நமது கடமை.. உரிமைகளை பெறுற மாதிரி கடமைகளையும் செய்யத்தானே வேணும்.. சிறிதுளி பெரு வெள்ளம் ஆச்சே.. :idea: :wink:

ஓ... போடலாமே...யார் சொன்ன தப்புன்னு...ஆனா செல்வாக்குச் செலுத்த முடியாது...! அது கனவு...! உங்களிட்ட இல்லாத ஒற்றுமையின்மையால...உங்கள விட இங்க இருக்கிற சிங்களவன் அதிகம் செல்வாக்குச் செலுத்துறான்....அதைப் புரிஞ்சுக்கோங்க...!:P :wink: :idea:

Link to comment
Share on other sites

வோட்டு சுத்த வேஸ்டு என்றாங்க பியோர் பிரிட்டடிஷ் பீப்பிள்...! கடந்த தேர்தலில் 50% சற்று மேலதிகமானோரே வாக்களித்திருந்தனர்...! அதுக்க 18 மில்லியனில 0.2 மில்லியனா இருக்கிற உவை வோட்டுப் போட்டுத்தான் பிளேயர் டைனிங் ஸ்றீரில குடியேறப் போறாராக்கும்...! :wink: :lol: :?:

இரண்டு கட்சிகளும் ஏறத்தாள சம அளவான ஆதரவு நிலையில் இருக்கும் போது சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் ஓரளவுக்காவது உதவி செய்யும் அல்லவா?

பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கைகள் கட்சி சார்ந்தவையல்ல...எனவே உவைக்கு வோட்டுப் போட்டு நம்ம தாயகச் சனத்துக்கு ஆகப் போகிறதும் ஒன்றுமில்ல...! :idea: :P

சரி உங்கள் கருத்தின்படி தாயக மக்களுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்று வைத்துக் கொண்டாலும் இங்கு வசிக்கும் புலம் பெயர் மக்களின் வாழ்க்கையில் அது குறிப்பிட்டளவு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இங்கு வாழும் தகுதியை அல்லது அகதி அந்தஸ்தை எதிர் நோக்கி பலர் காத்து கொண்டிருக்கின்றார்கள், அவர்களது எதிர்கால அந்தஸ்தை கட்சிகளின் குடியேற்ற கொள்கைகள் பாதிக்கின்றன. அது மட்டுமல்லாமல் இலங்கை பிரச்சனையில் தமிழர்களின் ஒரு முக்கிய சக்தியாக புலத் தமிழர்கள் இருக்கின்றார்கள். புலத் தமிழ்ர்களை பாதிக்கும் விடயங்கள் மறைமுகமாக தாயக தமிழர்களையும் பாதிக்கும்,

Link to comment
Share on other sites

ஓ... போடலாமே...யார் சொன்ன தப்புன்னு...ஆனா செல்வாக்குச் செலுத்த முடியாது...! அது கனவு...! உங்களிட்ட இல்லாத ஒற்றுமையின்மையால...உங்கள விட இங்க இருக்கிற சிங்களவன் அதிகம் செல்வாக்குச் செலுத்துறான்....அதைப் புரிஞ்சுக்கோங்க...!:P :wink: :idea:

ஒற்றுமை இல்லாவிட்டால் இங்கு மட்டுமல்ல இலங்கையிலும் ஒன்றும் செய்ய முடியாது. ஒற்றுமை இன்ன்மையால் தான் இலங்கையில் ஒரு சில ஆசனங்களை ஈபிடிபி போன்ற கட்சிகள் கைப்பற்றின. 225 ஆசனங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 20 + ஆசனங்களை கொண்ட தமிழர் கூட்டமைப்பின் இருப்பு அரசை தீர்மானிக்க முடியாவிட்டாலும் நமக்கு தேவைப்படுகின்றது தானே?

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் சிறுபான்மையினருக்கு என்று ஒரு கட்சி இல்லை..சிறுபான்மையினர் என்றும் இல்லை...அப்படிச் சொன்னால் அது டிஸ்கிறிமினேசன்...உங்கள நாடு கடத்தக் கூடக் கோரலாம்....கவனம்..! எனவே பல்லின மக்களும் பிரித்தானியர்கள் என்ற வகையில்... உள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இதர சிறிய கட்சிகளுக்கும் தான் வாக்களிப்பர்...எனவே அவர்கள் இனத்துவ ரீதியாக கட்சி சார்ப்பில் பிரிந்து பெரியளவில் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்த முடியாது...வேண்டுமானால் கவுண்சில் தேர்தல்களில்...செல்வாக்குச் செய்யலாம்...அதிலும் பிரித்தானியாவில் ஒரு சிங்களவர் கவுன்சிலராக வரக்கூடிய நிலை கூட இருக்கிறது..அங்குள்ள மக்களில் அநேகர் சேவைக்குத்தான் வாக்களிக்கின்றனரே தவிர ஆள் பார்த்தல்ல..! சிறீலங்காவில் உள்ளது போல அல்ல அங்கு அரசியல்...!

அகதிகள் விவகாரத்தில் பிரித்தானியா ஐரோப்பாவிலேயே நெகிழ்வுப் போக்குடைய நாடு...அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களைக் கூட வெளியேறிப் போ என்று கட்டாயப்படுத்தும் நாடல்ல...அவர்களின் சட்டத்து ஒழுங்குக்கு மதிப்பளித்து இருக்கும் வரை இருக்க விடுவார்கள்..எனவே உவை வாக்குப் போட்டுத்தான் அகதிகள் உரிமைகள் நடைமுறைக்கு வரும் என்றால் அது சுத்தப் பித்தலாட்டம்...அது ஏற்கனவே நடைமுறையில் தான் இருக்கு...! ஆனா ஒரு விசயம்...நம்மாக்கள் செய்யிற திருவிளையாடல்கள் தான் தாயகத்தமிழரை மறைமுகமாக அதிகம் பாதிக்கிறது...எனவே குற்றவாளிகளை நாடு கடத்துவதை வரவேற்கலாம்...அது எந்தக் கட்சி செய்யினும்...! :P :idea:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குற்றவாளிகளை நாடு கடத்துவதை வரவேற்கலாம்...அது எந்தக் கட்சி செய்யினும்...!

_________________

அவர்களிற்கே உங்கள் ஒட்டு

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் சிறுபான்மையினருக்கு என்று ஒரு கட்சி இல்லை..சிறுபான்மையினர் என்றும் இல்லை...அப்படிச் சொன்னால் அது டிஸ்கிறிமினேசன்...உங்கள நாடு கடத்தக் கூடக் கோரலாம்....கவனம்..! எனவே பல்லின மக்களும் பிரித்தானியர்கள் என்ற வகையில்... உள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இதர சிறிய கட்சிகளுக்கும் தான் வாக்களிப்பர்...எனவே அவர்கள் இனத்துவ ரீதியாக கட்சி சார்ப்பில் பிரிந்து பெரியளவில் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்த முடியாது...வேண்டுமானால் கவுண்சில் தேர்தல்களில்...செல்வாக்குச் செய்யலாம்...அதிலும் பிரித்தானியாவில் ஒரு சிங்களவர் கவுன்சிலராக வரக்கூடிய நிலை கூட இருக்கிறது..அங்குள்ள மக்களில் அநேகர் சேவைக்குத்தான் வாக்களிக்கின்றனரே தவிர ஆள் பார்த்தல்ல..! சிறீலங்காவில் உள்ளது போல அல்ல அங்கு அரசியல்...!

இங்கு பாகுபாடு பார்த்தால் டிஸ்கிறிமினேசன் என்று சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்பது உண்மைதான். இருந்து மறைமுகமாக இருப்பது வேறு விடயம்,

அகதிகள் விவகாரத்தில் பிரித்தானியா ஐரோப்பாவிலேயே நெகிழ்வுப் போக்குடைய நாடு...அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களைக் கூட வெளியேறிப் போ என்று கட்டாயப்படுத்தும் நாடல்ல...அவர்களின் சட்டத்து ஒழுங்குக்கு மதிப்பளித்து இருக்கும் வரை இருக்க விடுவார்கள்..எனவே உவை வாக்குப் போட்டுத்தான் அகதிகள் உரிமைகள் நடைமுறைக்கு வரும் என்றால் அது சுத்தப் பித்தலாட்டம்...அது ஏற்கனவே நடைமுறையில் தான் இருக்கு...!

யார் ஆட்சிக்கு வருகின்றார்கள், யார் உள்துறை கொள்கைகளை தீர்மானிக்கின்றார்கள் என்பது குடியேறிகளை நிச்சயமாக பாதிக்கின்றது, உதாரணமாக பழைய உள்துறை செயலர் டேவிட் பிளன்கட் கொண்டுவந்த குடும்பத்தாருக்கான வதிவிட உரிமை சட்டத்தின் மூலம் இங்கு குடும்பமாக வதிவிட உரிமை இல்லாமல் இருந்த பலருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்தது, இந்த திட்டத்தை கன்சவேட்டிவ் கட்சி எதிர்த்தது குறிப்பிடத்தக்கது,

ஆனா ஒரு விசயம்...நம்மாக்கள் செய்யிற திருவிளையாடல்கள் தான் தாயகத்தமிழரை மறைமுகமாக அதிகம் பாதிக்கிறது...எனவே குற்றவாளிகளை நாடு கடத்துவதை வரவேற்கலாம்...அது எந்தக் கட்சி செய்யினும்...! :P :idea:

திருவிளையாடல் செய்பவர்களை நீங்கள் சொன்னது போல் தான் செய்யவேண்டும் அதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை,

அகதிகள் உரிமைகள் நடைமுறை இல்லை என்றோ நெகிழ்வு போக்கு இல்லை என்றோ நான் சொல்லவில்லை அப்படி இருப்பதால் தான் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட பலம் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இங்கு வருகின்றார்கள்,

Link to comment
Share on other sites

பிரித்தானியா கூட ஐநா விதிகளுக்கு அமைவான அகதிகள் கொள்கையத்தான் அடிப்படையாகக் கொண்டு சட்டவரைபுகளை வைத்திருக்கிறது...! சிறிய சிறிய சட்ட நெகிழ்வுகளால் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை...தொழிற்கட்சி கொண்டு வந்த சட்டமாற்றம் கூட நாட்டின் நன்மை கருதியதே அன்றி அகதிகளின் என்று முற்றாகக் கூற முடியாது...!

குறிப்பாக குடும்பமா இருந்தும் அகதியாக இருந்து அரச பணத்தைச் சுரட்ட அனுமதிப்பதைவிட நிரந்தர வதிவிட அனுமதியை வழங்கி பிழைப்புக்கு அனுப்புறது அரசுக்கு இலாபம்...! தொழிற்கட்சி தன்னுடைய கொள்கைக்கு ஏற்ப சிறிய மாற்றங்களை தந்ததே ஒழிய அடிப்படை சட்டங்கள் மாற வாய்ப்பில்லை...எதிர்காலத்தில

Link to comment
Share on other sites

பிரித்தானியா கூட ஐநா விதிகளுக்கு அமைவான அகதிகள் கொள்கையத்தான் அடிப்படையாகக் கொண்டு சட்டவரைபுகளை வைத்திருக்கிறது...!

பெரும்பான்மையான மேற்கத்தைய நாடுகள் ஐநாவின் அகதிகளுக்கான ஜெனீவா உடன்படிக்கையை ஏற்று அதன் அடிப்படையில் சட்ட வரைபுகளை வைத்திருந்தாலும் அவற்றை அமுல் படுத்தும் முறைகளை வேறுபட்டவை. நீங்கள் ஏற்கனவே சொன்னது போல் மற்றய ஜரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது பிரித்தானியா இந்த விடயத்தில் நெகிழ்வு போக்கை காண்பிக்கின்றது. ஒரே அடிப்படையாக இருந்தபோது இவை எல்லாம் வேறுபாடுகள் தானே.

சிறிய சிறிய சட்ட நெகிழ்வுகளால் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை...தொழிற்கட்சி கொண்டு வந்த சட்டமாற்றம் கூட நாட்டின் நன்மை கருதியதே அன்றி அகதிகளின் என்று முற்றாகக் கூற முடியாது...!

குறிப்பாக குடும்பமா இருந்தும் அகதியாக இருந்து அரச பணத்தைச் சுரட்ட அனுமதிப்பதைவிட நிரந்தர வதிவிட அனுமதியை வழங்கி பிழைப்புக்கு அனுப்புறது அரசுக்கு இலாபம்...! தொழிற்கட்சி தன்னுடைய கொள்கைக்கு ஏற்ப சிறிய மாற்றங்களை தந்ததே ஒழிய அடிப்படை சட்டங்கள் மாற வாய்ப்பில்லை...

சிறிய சட்ட நெகிழ்வாக இருந்த போதும் குடும்பத்தாருக்கான வதிவிட உரிமை சட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் வதிவுரிமை பெற்றனர். அவை நாட்டின் நன்மை கருதி இருந்தாலும் சரி அகதிகள் நலன் கருதி இருந்தாலும் சரி வதிவிட உரிமை கிடைத்தது தானே. மக்கள் வேலை அனுமதி இன்றி களவாக நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்துக்கும் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்வதிலும் பார்க்க வதிவிட உரிமையுடன் அதிக சம்பளத்துக்கு வேலை செய்யலாம் அல்லவா? அரசுக்கும் வரி கிடைக்கும் மக்களுக்கும் வேலை சம்பளம் கிடைக்கும்.

எதிர்காலத்தில் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து அகதிகளுக்கான ஒரு பொது சட்ட வரைபைத் தீட்டும் திட்டத்தை பிரிட்டன் பரிசீலித்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது...! :P :wink: :idea:

இந்த பொது வரைவு வந்தால் அதி நிச்சயம் அகதி அந்தஸ்து கோருபவர்களுக்கு பாதகமாக அமையும் :!:

Link to comment
Share on other sites

இப்போ சட்டத்தின் பிரகாரம் புலிகளைத் தடை செய்தாலும் அவர்களை பிரிட்டனில் அரசியல் ரீதியாக மறைமுகமாக செயற்பட பிரிட்டன் அனுமதிக்கிறது..ஆனால் அமெரிக்காவில் இந்த அளவுக்கு நெகிழ்வுத் தன்மையில்லை...! அது அவ்வவரசுகளின் ராஜதந்திர நகர்வுகளில் தங்கியுள்ளதே அன்றி...அது பிளேயரின் கட்சி கொள்கையல்ல நடைமுறைப்படுத்த...! அதேபோற்தான் அகதிகள் பிரச்சனையிலும் கட்சி சார்பான கொள்கையைக் கூட சட்ட வரைபாக்கும் போது அனைத்துக் கட்சி அங்கீகாரமும் கோரப்பட்டு...நாட்டு நலன் மக்களின் நலன் கருதித்தான் செயற்படுத்தப்படுமே ஒழிய ஒரு சில ஆயிரம் வாக்குகளால்...அதைச் சாதித்ததாகக் கொள்ள முடியாது...அதைத்தான் நாம் இங்கு குறிப்பிடுகின்றோம்...!

மற்றும்படி இதில் வாதத்திற்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை...! :P :idea:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம டொனி பிளேயருக்கு தான்.. நாங்க கடந்த வருடம் தான் வாழ்வில முதல் முதல் வோட் பண்ணினம். :mrgreen:

என்ரை வோட் யோன் கெறிக்குதான் எப்பவுமே!!

அட அவர் அமெரிக்காவெல்லே.. மறந்து போயிட்டன்.. :roll:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் ஜே.ஆர் க்கு என்று கூறவில்லை... :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தொழிற்கட்சி குடிவரவுக் கொள்கையில் இறுக்கமாகத்தான் உள்ளது. கொன்சவேர்டிக் கட்சிக்கும் லேபருக்கும் இடையில் பெரிய கொள்கை வேறுபாடு கிடையாது. இரு கட்சிகளுமே மேற்தட்டு வர்க்கத்தை தொடர்ந்து மேற்தட்டிலும், கீழ்மட்ட தொழிலாளிகளை தொடர்ந்து கீழ்மட்டத்திலும் வைத்திருப்பார்கள். வருமான இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கிறது.

லிபரல் டெமோக்கறிற்றின் கொள்கைகள் சிறுபான்மையினருக்கு மிகவும் ஆதரவானது. அத்துடன் அவர்கள்தான் ஈராக் யுத்தத்தை தொடர்ந்து எதிர்த்து வருபவர்கள்.

Link to comment
Share on other sites

தொழிற்கட்சி குடிவரவுக் கொள்கையில் இறுக்கமாகத்தான் உள்ளது. கொன்சவேர்டிக் கட்சிக்கும் லேபருக்கும் இடையில் பெரிய கொள்கை வேறுபாடு கிடையாது. இரு கட்சிகளுமே மேற்தட்டு வர்க்கத்தை தொடர்ந்து மேற்தட்டிலும், கீழ்மட்ட தொழிலாளிகளை தொடர்ந்து கீழ்மட்டத்திலும் வைத்திருப்பார்கள். வருமான இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கிறது.

லிபரல் டெமோக்கறிற்றின் கொள்கைகள் சிறுபான்மையினருக்கு மிகவும் ஆதரவானது. அத்துடன் அவர்கள்தான் ஈராக் யுத்தத்தை தொடர்ந்து எதிர்த்து வருபவர்கள்.

நீங்கள் சிறுபானமையினர் என்று பிரிட்டனில் குறிப்பிட்டது யாரை...அவர்களைப் பிரதிநிதித்துவம் கட்சி எது...அவர்களின் வாக்குகளைக் கொண்டு பாராளுமன்றத்தில் வரும் புதிய சட்டத்திருத்தங்கள் மீது எந்தளவு ஆதிக்கம் செய்ய முடியும்...இவற்றைச் சொல்லுங்கள்...அதன் பின் நாம் சொல்கிறோம்...0.2 மில்லியனாக உள்ள ஈழத்தமிழ் பூர்வீக பிரித்தானிய குடியேற்றவாசிகள் எதைச் சாதிக்க முடியும் என்று...! :P :idea:

Link to comment
Share on other sites

 • 2 months later...

பிரிட்டனில் மே 5ஆம் திகதி தேர்தல்

_40997647_blair_ap_203.jpg

பிரிட்டனில், அடுத்த மேத்திங்கள் 5 ம் தேதி, பொதுத் தேர்தல் நடக்கும் என, பிரதமர் டோனி பிளேயர் அறிவித்திருக்கிறார்.

தேர்தலை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னர், அவர் பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்று, நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி, மகாராணி இரண்டாம் எலிஸபெத்தை வேண்டினார்.

பின்னர், டவுணிங் வீதி 10 ம் இலக்கத்திலுள்ள, தனது அதிகாரபூர்வமான இல்லத்திற்கு வெளியே, தேர்தல் தேதியை அறிவித்தார்.

தொழிற்கட்சியின் தலைவராக அவர் சந்திக்கும் மூன்றாவது தேர்தல் இது.

1997 ம் ஆண்டிலிருந்து, தொழிற்கட்சி பதவியில் இருக்கிறது.

ஈராக் போரில் பிரிட்டன் சம்பந்தப்பட்டது, வாக்காளப் பெருமக்கள் பலருக்கு அவர்மீதிருந்த நம்பிக்கையைக் குறைத்துவிட்டது என்றாலும், மக்கள் கருத்துக் கணிப்புகளில், அவரின் தொழிற்கட்சி குறிப்பிடத்தக்க முன்னணியில் இருப்பதாக, அரசியல் விவகாரங்களுக்கான பிபிசி நிருபர் குறிப்பிட்டுள்ளார்.

BBC தமிழ் செய்தி

Link to comment
Share on other sites

 • 3 weeks later...

வரும் பிரித்தானிய தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கு வாழும் ஈழத்தமிழருக்கும் எமது போராட்டத்திற்கும் சாதகமாக இருக்கும்?

Link to comment
Share on other sites

நன்றி மதன் .நல்லது நீங்கள் வேளைக்கே கருத்துக்களத்திற்கு அந்த விடயத்தை கொண்டு வந்து விட்டீர்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சுஐப் எம். காசிம்- ஒவ்வொரு வருடத்தின் ஒக்டோபர் இறுதிதினம் நெருங்கி வரும் நாட்களிலே நெஞ்செல்லாம் வலியெடுக்கும் நினைவெல்லாம் தடுமாறி நீர் நிறையும் கண்களிலே உணர்வெல்லாம் தத்தளித்து உதிரம் அலையெழுப்பும்    தாயகத்தின் நினைவெழுந்து தவிதவித்து மனம் கதறும் வேகாத உடலோடு வெந்த உயிர் தொங்கி நின்று பிறந்த தாய் மண்ணினைவில் பிரிவில் துடிதுடிக்கும்    "இன்னுயிர்த் தாய் ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள் போல் நூறு பலஆண்டுகளாய் நோகாதும் நொடியாதும் ஒருயிராய், ஈருடலாய் ஒன்றிணைந்து வாழ்ந்த அந்தக் காலத்தின் நினைவெழுந்து கண்கள் குளமாகிவிடும்    ஓர் புலத்தில் தான் வாழ்ந்து ஓர் மொழியைத் தான் பேசி வாழ்ந்த அந்தக்காலத்தின் வசந்த உறவுகளில் காலக் கொடுங் கிழவன் கண்பட்டுப் போனது போல் ஒக்டோபர் தொண்ணூறு உருக்குலைக்க வந்ததுவோ?    எண்ணி முப்பத்தி ஓராண்டு போனபின்னும் இன்றைக்கு என்றாற்போல் இதயம் துடிக்கிறது    என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியவில்லை ஏனிந்தப் படையெடுப்பு என்றெவருக்கும் புரியவில்லை யாரும் கனவினிலும் இதையெண்ணிப் பார்த்ததில்லை எல்லாம் ஓரீர் நாளில் இரண்டாகப் போயிற்று    வீட்டோடு வாசல் வியாபாரச் சாலைகள் தோட்டம் துரவு தொழும் பள்ளி காணி வயல் கை கழுத்து தங்க நகை காசு பணம் உடுபிடவை அத்தனையையும் பறித்து ஆளை மட்டும் வீதியிலே வேட்டு முழக்கத்தில் விரட்டியடித்த வலி ஒக்டோபர் இறுதியினை உயிராக்கி வைக்கிறது    கண் அழுது வாய் குளறி காட்டு மேடு பள்ளத்தில் அரசியல் அகதிகளாய் யாருமிலா அநாதைகளாய் உண்பதற்கு ஏதுமின்றி உடுக்க மாற்றுடையுமின்றி வடக்கின் அடியிருந்து வடமேற்கு முடிவரைக்கும் விழுந்து எழுந்து விறகாகிக் காய்ந்தும் போய் உயிரைக் கையில் பிடித்து ஓடியது கொஞ்சமல்ல    தாய் நாடு பேய் வீடாய் தமிழகமோ சுடுகாடாய் தமிழினத்திற்குரியரல்ல தமிழ் தேசியமும் கிடையா என்று வடபுலத்தின் எண்பதாயிரம் முஸ்லிம்களும் வந்தேறு குடிகள் என்றும் விரட்டி அடித்ததுவும் வீறாப்புப் பேசியதும் ஒக்டோபர் தொண்ணூறின் ஓரங்க நாடகமாம்    நூறுகிலோ மீற்றருக்கும் நீளமான தூரத்தை நொண்டி நடந்த வலி நோவின்னும் மாறவில்லை    பாதை முழுவதிலும் படைத்தவனின் பெயர் சொல்லி அழுது மன்றாடியதை யாரும் மறக்கவில்லை    இன்றைக்கில்லாவிடினும் என்றைக்கோ ஓர் வழியை காட்டும்படி இரந்து கதறியதை மறக்கவில்லை    எல்லாச் சுமைகளையும் இறைவன் மேலே சுமத்தி ஏந்தல் நபி அவர்கள் இரங்கலுக்காய் நோன்பிருந்து வடபுலத்து முஸ்லிம்கள் வாழ்வில் ஒளி வீச அல்லாஹ்வின் பாதையிலே அடியெடுத்துச் செல்கின்றோம்..!   https://www.madawalaenews.com/2021/10/blog-post_613.html
  • Un - Tested level 1.38160 படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, 1.37895 இல்லை. கிடையான மன்சல் கோடு break out level அதனால் அது ஒரு தற்காலிகமான  வலயம். Un - Tested level 1.38160 இங்குதான் Break out traders தமது Stop loss ஐ இடுவதால் இந்த வலயம் முக்கியமாகிறது. விலை ஏன் Un - Tested level test செய்யவேண்டும்? அதற்கு கூறப்படும் காரணம் சந்தையைக்கட்டுப்படுத்துவர்கள்(Market Makers) சில்லறை வர்த்தகர்களின் stop loss கையகப்படுத்தி அதன் மூலம் தமக்கு தேவையான திரவநிலையை உருவாக்குதல். Resistance level test உம் அவ்வாறே.
  • "தர்மம் தலைக்ககும்" இரக்க குண பெண்மணி ஒருத்தி தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்... அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு, ஏதோ முனகிக் கொண்டே போவான். இது அன்றாட வழக்கமாயிற்று!. ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று, கிழவன் என்ன முனகுகிறான் என்று செவிமடுத்து கேட்டாள். அவன் முனகியது, இதுதான்: "நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்." தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான். 'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்; "நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும், "இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்; " ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ; ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்; செஞ்ச புண்ணியம் ஒனக்கே திரும்பும்" ன்னு தினம் தினம் உளறிட்டுப் போறானே' என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள். 'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள். 'நன்றி கெட்ட கூனனை' நினைத்து மன உளைச்சலுக்கு ஆளானாள்! நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி, கொலை வெறியாக மாறியது!ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என மதில் மேல் வைக்கப் போனாள். மனம் ஏனோ கலங்கியது; கை நடுங்கியது. 'அவன் அப்படி இருந்தாலும், சே... நாம் ஏன் இப்படியாகணும்'னு அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள். வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்; இட்லியை எடுத்துக் கொண்டு, வழக்கம்போல, "நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ; நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! " என்று சொல்லிக் கொண்டே சென்றான்! அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!. அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்; வாசலில் வாலிபன் ஒருவன் கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான். வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!. "அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;மயங்கி விழுந்துட்டேன்; கண் முழிச்சு பாத்தப்போ... யாரோ ஒரு கூனமுதுகு கிழவன் என்னை தூக்கி உட்கார வச்சு ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான். இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!இதைக் கேட்டதும், பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்! 'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்... அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!' என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன.. "நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் " ...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது! எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை... புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை.... "செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்" "ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்" "வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே"
  • பரீட் இக்பால் - யாழ்ப்பாணம். யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 31ஆண்டுகளாகின்றன. 31ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம்.   “யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும், பனையிலையும் புகையிலையும் நன்றாக வளரும்” என்ற இனிய பாடல் வரிகளே யாழ் மண்ணின் இனிமைக்கு சான்றாகும்   1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் எம் வாழ்வின் துரதிர்ஷ்ட நாள். இப்படியானதொரு கோரச்சம்பவத்தை எதிர்பார்க்காத எம் முஸ்லிம் மக்கள் அனைவரும் தம் அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுமார் காலை 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர். முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத அப்பாவி மக்களாகிய நாம் அனைவரும் அதிகூடிய புலிகளின் வருகையைப் பார்த்துத் திகைத்தோம். சோனகத் தெருவை சுற்றியிருந்த அயல் கிராமங்களுக்கு வியாபாரத்திற்காக சென்ற எம் முஸ்லிம் சகோதரர்களை அவசரமாக சோனகத் தெருவிற்கு செல்லுமாறு புலிகள் அக்கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு விடுத்தார்கள். வியாபாரத்திற்கு சென்ற எம் சகோதரர்கள் நிகழவிருக்கும் விபரீதம் தெரியாமல் உடனே சோனகத் தெருவிற்கு விரைந்தார்கள்.    காலை 10 மணியளவில் புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டுச் சென்றனர். நாம் அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினோம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. எம்மை ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். நாம் அனைவரும் என்ன ஏதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது இளம்பருதி என்ற புலி உறுப்பினர் ஒருவன் மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே! உங்களுக்கொரு துயரச் செய்தி. நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று "இளம்பருதி" கூறியதுதான் தாமதம் எமக்கு தலைசுற்றி உலகமே ஒருகணம் இருண்டு விட்டது. இது கனவா? இல்லை நனவா? என்று உணர முடியாமல் தடுமாறி விட்டோம். அடுத்தது என்ன செய்வதென்று புரியாமல் எதிர்காலமே எம் கண்களுக்கு சூனியமாக தென்பட்டது. ஜின்னா மைதானமே கதிகலங்கியது. எம் பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் மாலை மாலையாக ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினோம். எம் சகோதரர்கள் சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். “எம் பிறந்த மண்ணை விட்டு நாம் ஏன் போக வேண்டும்? இது எங்களுடைய சொந்த இடம்; நாங்கள் போக மாட்டோம்” என கூச்சலிட்டார்கள். பெண்கள் கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள்.    புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச் சப்தத்தினால் அதிர்ந்தது. நாம் அனைவரும் பயந்து நடுநடுங்கி விட்டோம். வீட்டில் இருந்தவர்களும் ஜின்னா மைதான துப்பாக்கி வேட்டுச் சப்தத்தை கேட்டு எம்மவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என தெரியாது அல்லோல கல்லோலப்பட்டு ஜின்னா மைதானத்தை நோக்கி நடுநடுங்கி விரைந்தனர். ஜின்னா மைதானம் மேலும் நிறைந்து வழிந்தது. இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. பயந்து, நடுங்கி, அழுது வீங்கிய முகங்களுடன் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தை விட்டு அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றோம். எமக்கு நடந்த அநியாயத்தைப்போல இனி யாருக்குமே நடக்கக் கூடாது. சொந்த ஊரை விட்டு, சொந்த வீட்டை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறுவது என்றால் சும்மாவா?    ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திலிருந்து வீடுகளுக்கு சென்றதுதான் தாமதம் புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள். 2 மணித்தியாலங்களில் வெளியேறுங்கள் என்று மைதானத்தில் வைத்துக் கூறிவிட்டு வீடுகளினுள் புகுந்து உடனே வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். இனி இங்கிருந்து பயனில்லை, மீறி இருந்தால் உயிர்தான் போகும், எங்கேயாவது போய் உயிரோடாவது இருப்போம், பிள்ளைகளைக் காப்பாற்றுவோம் என்ற நோக்கில் நாம் அனைவரும் பிறந்த மண்ணை விட்டு பிரிய ஆயத்தமானோம். கண்ணில் நீருடனும் நெஞ்சில் கனச் சுமைகளுடனும் நடைபிணமாக வெளியேறினோம்.    பெண்கள் சிலர் தமது பணம், நகைகளை மறைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற முனைந்தனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள். காதணிகளைக்கூட விடவில்லை. நகைகளுடன் காணப்பட்ட பெண்கள் ஒரு மஞ்சாடி நகை கூட உடலில் இல்லாத நிலையைப் பார்க்கும்போது மிகுந்த கவலை ஏற்பட்டது.   பிறந்து ஓரிரு நாட்கள் கூட கடக்காத பச்சிளம் பாலகர்களை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு நின்ற எம் சகோதரிகளையும் கட்டிலோடு படுக்கையில் கிடந்த வயதான நோயாளர்களை கையில் ஏந்தி நின்ற எம் இளைஞர் சமூகமும் தத்தளித்து நின்ற அந்த அவலக் காட்சி எம் மனக்கண் முன் தோன்றி மறைகின்றது. அந்த கசப்பான அனுபவத்தை மறக்க முயன்றாலும் அன்றைய நினைவுகள் எம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக நிழற்படங்களாக ஓடிக்கொண்டே இருக்கின்றது......    விடுதலைப் புலிகளின் எண்ணத்தில் இக்காட்சிகள் எவ்வாறு தோன்றினவோ தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் பேசும் தமிழே எங்களின் தாய்மொழியும்கூட. எங்களுக்கு இந்தக் கதியா? சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள்.    வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.   2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று மட்டும் கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.    காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதலளித்தது.    முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  31 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும்.   தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம்.      .    முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம்.    .    யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 31 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற கனவு நனவாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். ஆமீன்...!!  பரீட் இக்பால் யாழ்ப்பாணம்.   https://www.madawalaenews.com/2021/10/31_27.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.