Jump to content

பிரித்தானிய தகவல்கள்


Recommended Posts

advertisment.gif

பிரித்தானியாவில் உள்ள தமிழர்களின் நிறுவனங்களில் ஆண்டு தோறும் முரசம் எனும் தொகுப்பு நூல் பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தினால் இலவசமாக வெளியிடப்படுகின்றது. இந்த தொகுப்பு ஏறக்குறைய Yellow Pages directory போன்றது. இதனுடைய இணைய பக்கத்திலும் தமிழர் நிறுவனங்கள் குறித்த விபரத்தை தேடலாம்.

http://www.murasam.com/

Link to comment
Share on other sites

  • Replies 232
  • Created
  • Last Reply

10th Tamil Sports Festival

natwest3ds.gif

tsf5fe.gif

10வது தமிழர் விளையாட்டு போட்டி லண்டன் Stoke Park இல் யூலை 31ம் திகதி ஞாயிறு தினத்தன்று காலை 9 மணியிலிருந்து மாலை 9 மணி வரை நடைபெற உள்ளது. NatWest வங்கியின் ஆதரவில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வுக்கான அனுமதி காலை 9 மணிவரை இலவசம். அதன் பின்பு அனுமதி கட்டணம் 4 பவுண்ஸ் மற்றும் வாகனங்களுக்கான தரிப்பிட கட்டணம் 5 பவுண்ஸ்.

போட்டி நடைபெறும் இடம்

Stoke Park

Parkway / London Road,

Guildford, Surrey GU1 1UP

மேலதிக தொடர்புகளுக்கு

பிரித்தானிய தமிழர் ஒன்றியம் (BTA)

Eelam House,

202 - 204 Long Lane,

London SE1 4QB.

Tel: 020 8677 7749

Email: info@britishtamils.org

Link to comment
Share on other sites

போட்டி நடைபெறும் இடத்தை அடைவது எப்படி?

By British Rail (South West Trains)

btasportsrail7du.gif

From London Waterloo

via Surbiton, Effingham Junction or

via Epsom, Effingham Junction

Get down at London Road British Rail station and walk to the grounds via london road.

By Car

btasports3ms.gif

Take A3 towards Guildford, Portsmouth

Go past the M25 and Esher (A244).

Branch left onto A3100 - Burpham.

Continue on A3100 to Guildford

Take the 2nd exit on th roundabout to

London Road. Entrance to the venue is

500 yards on the right hand side.

From M25

At Junction 10 come out, take A3

towards Guildford - Portsmouth

and follow the above.

Link to comment
Share on other sites

_41324925_firearms203.jpg

உலகின் நாகரிக மனிதர்களாக தங்களை இனங்காட்டிக் கொள்ளும் பிரித்தானியர்களின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் (England and Wales) பகுதிகளில், ஜனநாயக அமைதிப் பூங்காக்களில் 2004-05 காலப்பகுதில் நிகழ்ந்த கடும் வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் (1,184,702) அளவை எட்டி சாதனை படைத்துள்ளது...!

இதே காலப் பகுதியில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் மட்டும் நிகழ்ந்த மொத்தக் குற்றங்களின் எண்ணிக்கை 5.6 மில்லியன்...! துப்பாக்கிகளை பாவித்து செய்யும் குற்றங்களின் எண்ணிக்கை 6% த்தால் அதிகரித்துள்ளது...! மொத்தமாக துப்பாக்கிப் பாவனையால் கடந்த 12 மாதத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 73...!

பிரித்தானியாவில் இப்பகுதிகளில் அதிக வன்முறைகள் மதுபோதையின் போது நிகழ்வனவாக இருக்கின்றன...! உலகில் அதிகம் "பெருங்குடி" மக்களைக் கொண்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று...!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிரித்தானியாவின் இரு பகுதிகள்...! இதுதவிர ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்தும் பிரித்தானியாவுக்குள் அடங்கும்...! இங்கிலாந்தின் தலைநகரம்.. லண்டன்..!

Violent offences top million mark

Violent offences in England and Wales reached record levels in 2004-5 with police recording one million crimes - up 7% from the previous year.

Police figures show 1,035,046 violent incidents against the person, excluding sexual offences and robberies.

பிரித்தானியா பற்றிய சில அடிப்படைத் தரவுகள்..கீழே உண்டு...

Population: 59.6 million (National Statistics, 2003)

Capital: London

Area: 242,514 sq km (93,638 sq miles)

Major language: English

Major religion: Christianity

Life expectancy: 76 years (men), 81 years (women) (UN)

Monetary unit: 1 pound sterling = 100 pence

Main exports: Manufactured goods, chemicals, foodstuffs

GNI per capita: US $28,350 (World Bank, 2003)

Internet domain: .uk

International dialling code: +44

(bbc.com)

Link to comment
Share on other sites

10th Tamil Sports Festival

tsf5fe.gif

10வது தமிழர் விளையாட்டு போட்டி லண்டன் Stoke Park இல் யூலை 31ம் திகதி ஞாயிறு தினத்தன்று காலை 9 மணியிலிருந்து மாலை 9 மணி வரை நடைபெற உள்ளது

இந்த போட்டியில் குழு சண்டை நடைபெறும் வாய்ப்பு உள்ளதாலும் தற்போதிய நிலைமையில் பொலீசார் (ஏறத்தாள 300 பேர் தேவைப்படலாம்) இதற்கு பாதுகாப்பு வழங்க வசதியின்மையாலும் அரசு இந்த விளையாட்டு போட்டிக்கு அனுமதி மறுத்துள்ளாக சற்றுமுன்பு அறிந்தேன் :lol:

Link to comment
Share on other sites

லண்டன் குண்டுவெடிப்புகளை அடுத்து இனவெறித்தனமான பழிவாங்கும் நடவடிக்கைகள்இடம்பெறக் கூடுமென்று அச்சம்------------------------------------------------------ லண்டன் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகளை அடுத்து, பிரிட்டன் முழுவதும் நான்கு பிரிட்டிஷ் முஸ்லிம்கள் குற்றச் சாட்டிற்கு உட்பட்டிருப்பதால், ஒருவேளை இன வழியில் சிறுபான்மையினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ என்று அஞ்சப்படுகிறது. லண்டன் சுரங்கப் பாதை ரயில்கள் மற்றும் ஒரு பேருந்தில் 50 இற்கும் மேற்பட்ட பயணிகள் தற்கொலைப்படை தாக்குதல்களில் மடிந்ததாக நம்பப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக ஜூலை 12 ஆம் திகதி பொலிஸார் லீட்சிலும், டியூஸ்பரி மற்றும் மேற்கு யோர்க்ஷைரிலும் சோதனைகள் நடத்தியதுடன், லீட்ஸ் பகுதியில் கட்டுப்பாட்டிற்குட்பட்ட வெடிக்கச் செய்தலையும் நடத்தினர்.

மூன்று தாக்குதல்களை நடத்தியவர்களை அடையாளம் கண்டுபிடித்து விட்டதாக கூறும் பொலிஸார், லீட்சில் உள்ள அவர்களுடைய வீடுகளை சோதனையிட்டனர். இச் சோதனைகளில் ஓர் இல்லத்தில் `கணிசமான அளவு' வெடி மருந்துப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

உள்ளூர் சமூகங்களுக்கு இடையே அமைதி நிலவ வேண்டும் என்ற உடனடியான பொலிஸாரின் வேண்டுகோள்கள் இனவாத பழிவாங்கல் தாக்குதல் பற்றிய அச்சங்களை குறைப்பதற்கு உதவவில்லை. ஒரு "மிகச்சிறிய" எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் தான் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை கவனத்துடன் செய்தி ஊடகம் வலியுறுத்திக் கூறியபோதிலும் கூட, முஸ்லிம் அமைப்புகள் இன்னும் உறுதியான முறையில் குண்டு வெடிப்புகள் பற்றிய கண்டனத்தை கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

பிரிட்டனில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் அமைப்பும் லண்டனில் நடந்த அட்டூழியத்திற்கு எதிராக வலுவாகக் கண்டித்துள்ள போதிலும், London Evening Standard தலையங்கமாகக் கூறியிருப்பதாவது;

"ஆனால், பிரிட்டிஷ் முஸ்லிம் தலைவர்களை எதிர்கொண்டுள்ள சவால் ஒரு நல்ல முஸ்லிம், பயங்கரவாதிகளை தேடிப் பிடிக்கும் முயற்சியில் இருக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஆதரவு தருபவர் என்று இருத்தல் ஆகும் என்று விளக்கிக் கூறுதல், முஸ்லிம்கள் கூட அடங்கியிருக்கக் கூடிய பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுமை இழைத்த செயலைச் செய்பவர்களிடம் சிறிது கூட நட்புணர்வு கொண்டிருக்கக் கூடாது என அவர்கள் எடுத்துரைக்க வேண்டும்". மேலும், "இனவாத நிகழ்வுகள் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்துக் கிட்டத்தட்ட இருமடங்கு அதிகரித்து விட்டன" என்றும் இந்த ஏடு கூறியுள்ளது.

ஜூலை 9 ஆம் திகதி Daily Telegraph இல் சார்ல்ஸ் மூர், லண்டனுடைய மேயர் கென் லெவிங்ஸ்டனுடைய அறிக்கையில் "இஸ்லாமும் பயங்கரவாதமும் இணைந்து செல்லுவதில்லை" என்று கூறியிருப்பதை நிராகரித்துள்ளார். மாறாக, அவை தொடர்புடையதாக "ஐரீஷ்" மற்றும் "பயங்கரவாதம்" என்ற சொற்கள் இணைந்து செல்லுவது போல் தான் இருக்கின்றன என்று மூர் வாதிட்டுள்ளார்.

மூர் கூறுகிறார்; " வெறிபிடித்தவர்கள் தங்கள் சமயம், அதன் பணியின் போது மற்றவர்களை (பலநேரம் தங்களையே) கொல்லலாம் என்று மக்களிடையே வலியுறுத்தக் கூடும். அதற்குக் கீழ்பணிந்து நடப்பவர்களும் உண்டு. ஆனால் IRA Iப் பொறுத்தவரையில் முற்றிலும் பிறர் துன்பத்தில் இன்பம் கண்டு, வெறிபிடித்து அலைந்தாலும், அவர்கள் ஓர் அரசியல் இலக்கைக் கொண்டுள்ளனர்; அது கிடைத்துவிட்டால் அவர்கள் மேலும் கொல்லமாட்டார்கள் எனக் கூற முடியும்; ஆனால், சமய வெறி பிடித்தவர்களுக்கு தாங்கள் நடந்து கொள்ளும் முறையில் இந்தக் கட்டுப்பாடு கூடக் கிடையாது".

"பெரும்பாலான முஸ்லிம்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல" என்று மூர் ஒப்புக் கொண்டாலும், அவருடைய சொற்கள் அவர்கள் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடும் என்ற விளைபயனை கொண்டிருக்கின்றன. "இதுகாறும் நம்மிடையே கொதி நீர் நிலையில் இருக்கும் சமயச் சிறுபான்மையைக் கொண்டிருக்கும்; இதற்குள் எங்கேயோ (ஒரு மிகச் சிறிய பகுதியாக இருந்தாலும்) ஒரு சிலர் நம்மை கொன்று விட வேண்டும் என்று விரும்புகின்றனர்..... அடையாள அட்டைகள் என்பதின் மூலம், அதிகரித்த அதிகாரத்துவ சக்திகளால் உரிமைகள் அனைத்தையும் இழக்க வேண்டிய கட்டாயத்திற்கு நம்முடைய முழு மக்கட் தொகையை தள்ளுவதைக் காட்டிலும், நாம் எங்கு அபாயம் இருக்கிறது. அதைக் கண்டு அகற்ற வேண்டும் என்பதை துல்லியமான முறையில் செயல்படுத்தும் மூலோபாயத்தை வளர்க்க வேண்டும்" என்று தான் எங்கு ஆபத்து இருப்பதாகக் கருதுவதைக் கூறும் முன்னர், மூர் கூறுகிறார்.

"பொலிஸ்காரர்களின் முறைகளை" கேள்விக்குட்படுத்தும் வகையில் மாநகர பொலிஸ் ஆணையர், இயன் பிளேயரின் "முஸ்லிம்களைக் காத்தல் பற்றிய அணுகுமுறை, சமூகத் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்களுடைய அனுமதியைக் கேட்ட பின்தான் மற்றவர்களைக் காண்கிறார். ஒரு விசாரணை தொடரப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதின் மீது அவர்கள் தடுப்பதிகாரம் செலுத்துவது நிச்சயமாக சரியான போக்கு இல்லை. அத்தகைய சமூகத் தலைவர்கள் பொலிஸ் கவனத்தில் இருப்பவர்களை பாதுகாக்க மாட்டார்கள் என நம்புவதற்கில்லை" (வலியுறுத்தல் கட்டுரையாளருடையது)

இத்தகைய அரசியல் சூழ்நிலையில் ஒரு சில வலதுசாரிக் குண்டர்கள், தாங்களே "பழிக்குப் பழி" வாங்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் மீது நாடு முழுவதும் பல இடங்களில் ஈடுபட்டிருப்பது வியப்பை அளிக்கவில்லை.

கடந்த சில நாட்களில் குறைந்தது நான்கு மசூதிகளாவது வெடி மருந்து தாக்குதலினால் ஓரளவு தகர்க்கப்பட்டுள்ளன. ஒரு சில மசூதிகள் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு கதவுகளும் பிளக்கப்பட்ட நிலையில் உள்ளன. பெல்வெடேரின் தென்கிழக்கில் சீக்கிய கோயில் ஒன்றும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது.

இனவாத Combat18 அமைப்பின் ஆதரவாளர்கள் தங்கள் வலைத் தளத்தில் மிகுந்த வெறியூட்டும் கருத்துகளை கொடுத்துள்ளனர். நோட்டிங்ஹாமில் இருந்து ஒரு தகவல் கூறுகிறது: "இறுதியில் ஒருவாறாக நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது.... நேற்று லிவர்பூலில் ஒரு மசூதிக்கு நெருப்பு வைக்கப்பட்டது. நடவடிக்கைகள் இருந்தாலும் இவை போதாது. ஒவ்வொரு மசூதிக்கும் நெருப்பு வைப்போம்".

லண்டனிலும் மற்ற பகுதிகளிலும் மக்கள் இன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தவறாக நடத்தப்படுவதாக பல தகவல்கள் வந்துள்ளன.

இதுவரை மிகத் தீவிரமான நிகழ்வு கிழக்கு மிட்லாந்துப் பகுதியில் நோட்டிங்ஹாமில் ஆசிய மனிதர் கொல்லப்பட்டதாகும். கமால் ராசா பட் என்று தன்னுடைய நண்பர் ஒருவருடன் நகரத்தில் ஆறு வாரங்களாக வசித்து வந்தவர்; இவர் நகரத்தின் மெடோஸ் பகுதியில் ஞாயிறன்று ஒரு இளைஞர் குழுவினால் இனவாத தாக்குதலுக்கு உட்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர் சுய நினைவற்று விழுந்து கிடந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் வரும்போதே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கொலைக்காக ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் இது இனவாத நோக்கத்தினால் நடந்தது என்று நினைக்கின்றனர்.

பிரிட்டனின் முஸ்லிம்சபை தனக்கு நிறைய இனவாத மின்னஞ்சல் தகவல்கள் வந்துள்ளதாகவும், சில நேரம் அது தன்னுடைய தபால் முறைகளையே மூடி வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது. `பிரிட்டனில் உள்ள முஸ்லிம்கள் அனைவருடனும் போரிட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று ஒரு தகவல் எச்சரித்துள்ளது.

இனவாத பிரிட்டிஷ் தேசியக் கட்சி, பார்கிங் இடைத் தேர்தலை ஒட்டி ஒரு ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. அங்கு அது தன்னுடைய வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வைத்துள்ளது; லண்டன் பஸ் வெடித்து சிதறும் படத்தைச் சித்திரித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது, "இனியாவது BNP கூறுவதைக் கேட்கும் காலம் வந்துவிட்டது எனத் தெரிந்து கொள்ளலாம்."

இத்தகைய வலதுசாரி தாக்குதல்களில் மக்களில் மிக மிகச் சிறிய எண்ணிக்கை மட்டும்தான் ஈடுபட்டுள்ளனர் என்றாலும், லண்டன் பயங்கரவாத நடவடிக்கையில் அரசியல் குற்றத் தன்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஈராக்கிலோ மற்ற இடங்களிலோ புஷ் மற்றும் பிளேயரின் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்க்காமல், இந்தக் குண்டுவெடிப்புகள் அச்சம், சீற்றம், குழப்பம், அரசியல் நோக்கு நிலையற்ற தன்மையை பரப்பத்தான் பயன்பட்டுள்ளன.

- உலக சோசலிச இணையத் தளத்தில் இருந்து - :cry: :cry:

Link to comment
Share on other sites

மேக்கப்புக்காக ரூ.1 லட்சம் ரூபாய் செலவிட்ட பிளேர்

இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் கடந்த 6 ஆண்டுகளில் மேக்கப்புக்காக மட்டும் ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவிட்டார். பத்திரிகை போட்டோ கிராபர்களுக்கும், டி.வி. காமிரா மேன்கள் முன்பும் காட்சி அளிப்பதற்காக அவர் மேக்கப் சாதனங்கள் வாங்குவதற்கும், மேக்கப் கலைஞர்களுக்கு ஊதியமாகவும் செலவிட்டார்.

பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த போது இந்த தகவலை அரசுக்கொறடா பசாம் பிரபு தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

6 வருடத்திற்கு ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் என்பது அதிகமில்லையே. இது இந்திய ரூபாய்களாக தான் இருக்க வேண்டும். இதை பிரிட்டிஷ் ஸ்ரேலிங் பவுண்சில் மாற்றி பார்த்தால் கிட்டதட்ட 1500 பவுண்ஸ் என்று வைத்து கொள்ளலாம்.

6 வருதத்திற்கு 1500 பவுண்ஸ்

1 வருத்திற்கு 250 பவுண்ஸ்

ஆக 1 மாதத்திற்கு கிட்டதட்ட 20 பவுண்ஸ்

ஒரு நல்ல Eau de Toilette/Aftershave ~ 30 பவுண்ஸ்

Shaving Cream ~ 7 பவுண்ஸ்

Shampoo ~ 4 பவுண்ஸ்

Styling Cream/Wax ~ 5 பவுண்ஸ்

இந்த விலையில் பிளேயர் செலவு செய்வது ஒரு பெரிய தொகையா?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கடும்போக்கு முஸ்லிம் மதகுருமார் பிரிட்டனில் தடுத்து வைப்பு

_39245239_abu203.jpg

அபு கட்டாடா

ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த கடும்போக்கு மதகுருவான அபு கட்டாடா உட்பட 10 பேரை பிரிட்டிஷ் அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.

இவர்கள் இங்கே தங்கியிருப்பது பிரிட்டனின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பிரிட்டன் காரணம் கூறுகிறது.

நாட்டை விட்டு இவர்களை வெளியேற்றுவது பிரிட்டன் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது.

பிரிட்டனில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கட்டாடா அவர்கள் முன்பும் இரண்டு வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலர், அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு அவர்கள் சித்திரவதைகளை எதிர் நோக்கலாம் என்ற காரணத்தினால் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அப்படியானவர்களின் சொந்த நாடுகளிடம் இருந்து அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்ற உறுதியை இப்போது பெறக்கூடியதாக இருக்கும் என்று பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சார்ள்ஸ் கிளார்க் கூறியுள்ளார்.

ஆனால் இதனை தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் சட்டத்தரணிகள் ஏற்க மறுக்கின்றனர்.

Link to comment
Share on other sites

நாடுகடத்தல் தொடர்பில் புதிய சட்டம் குறித்து பிரிட்டன் ஆராய்கிறது

20050809105735mohammed203i-pa.jpg

ஒமர் பக்ரி முகமட் பிரிட்டன் திரும்பத் தடை

நாடுகடத்தப்படுவோர் பற்றிய வழக்குகளில் பிரிட்டனின் தேசிய பாதுகாப்பையும் நீதிபதிகள் கருத்தில் கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் புதிய சட்டம் ஒன்றைப் பற்றி தாம் ஆராய்ந்து வருவதாக பிரிட்டிஷ் அரசு கூறியுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்று நேற்று வியாழக்கிழமை 10 வெளிநாட்டவர்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.

நாடு கடத்தப்படுவோர் அந்தந்த நாடுகளால் சித்திரவதை செய்யப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெற, பிரிட்டிஷ் அரசு பல வெளிநாடுகளுடன் பேசி வருகிறது.

பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பிரிட்டன், அனைத்துலக அடிப்படை மனித உரிமைச் சட்டங்களை மீறும் நிலைக்கு வருகிறது என்று சித்திரவதைகள் குறித்த ஐ.நா பிரதிநிதி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

அனைத்துலகச் சட்டங்களின் படி ஒருவர் சித்திரவதை செய்யப்படக் கூடிய நாட்டுக்கு அவரை ஒரு நாடு கடத்தக் கூடாது.

இதற்கிடையே லெபனானுக்குச் சென்றுள்ள வன்மைவாத முஸ்லிம் மத போதகர் ஒமர் பக்ரி முகமட் அவர்கள் பிரிட்டனுக்கு திரும்பிவர பிரிட்டன் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரிட்டனில் கடந்த 20 வருடமாகத் தங்கியிருந்த பக்ரிக்கு வழங்கப்பட்டிருந்த நிரந்தர வதிவிட உரிமையையும் ரத்துச் செய்துள்ளதாக பிரிட்டனின் உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது

BBC தமிழ்

Link to comment
Share on other sites

BA flights resume amid crippling strike

British Airways said it had resumed flights at Heathrow Airport on Friday as it tries to work through a crippling dispute that has grounded more than 100,000 of its passengers during the peak summer holiday season.

A BA franchise airline flight bound for Casablanca in Morocco left Heathrow shortly before 7 p.m. (1800 GMT) ahead of 30 other international and short-haul evening flights, a BA spokeswoman told Reuters.

Mike Street, the airline's director of customer services and operations, said BA faced a complex logistical challenge, with at least 100 aircraft and 1,000 flying crew in the wrong place.

"As a result it will take some time to return to a normal flying programme. We recognise how frustrating this must be, but we are working as hard as we can to get customers away on their holidays," he said.

The resumption of flights at Heathrow came shortly after around 1,000 BA staff, who walked out on Thursday in support of workers sacked at a catering supplier, returned to work.

Arbitrator ACAS began talks during the afternoon with the union and the catering supplier, Gate Gourmet.

"This is not our dispute. Our customers come first, and everyone involved in creating this unofficial situation must come to their senses," BA Chief Executive Rod Eddington said.

Around 100,000 passengers fly daily with BA during August, and about two-thirds of its flights, excluding franchises, use Heathrow, the world's busiest international hub

Reuters.com

Link to comment
Share on other sites

அபு ஹோட்டடாவை பிரிட்டன் ஜோர்தானுக்கு நாடு கடத்தும் இவர் ஜோர்தானிலும் தண்டனை விதிக்கப்பட்டார்

பிரிட்டனில் கைது செய்யப்பட்ட பழைமை வாத இஸ்லாமிய மதகுரு அபு ஹோட்டடா அங்கிருந்து ஜோர்தானுக்கு அடுத்தவாரம் நாடு கடத்தப்படவுள்ளார் என ஜோர்தானிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டினரில் ஹோட்டடாவுமொருவர்இ

மதகுரு அபுஹோட்டடாவும் மற்றுமிருவரும் ஏற்கனவே பெல்மார்ஸ் சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் மீது எவ்வித குற்றச் சாட்டும் சுமத்தப்படவில்லை. உள்துறை அமைச்சின் பணிப்புரைக்கிணங்க இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஜோர்தானில் இடம் பெற்று வந்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக முன்னர் ஹோட்டடா அங்கு தேடப்பட்டு வந்தவர். அவர் 1993 ஆம் ஆண்டு ஜோர்தானை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். பிரிட்டன் அபயமாளித்தது.;

அதே வேளை தொடர் குண்டுத் தாக்குதல்களுக்காக ஜோர்தானிய நீதிமன்றம் இவர் இல்லாமலே இவருக்கு ஆயுள் காலச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஜோர்தானிய இரண்டாயிரம் வருட கொண்டாட்டத்தின் போது அமெரிக்க இ இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும் இவர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது. அபு ஹோட்டடாவும் ஏனையோரும் லண்டன் லூட்டான்இ லிஸிஸ்டர்ஷெயார்இ மேற்கு பிட்லேண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் பிரிட்டிஷ் பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

veerakesari

Link to comment
Share on other sites

பிரிட்டனில் இஸ்லாத்தை பயன்படுத்தும் தெருச் சண்டியர் குழுக்கள்

20050810230818_40675320_prayers_203.jpg

முஸ்லிம் தலைவர்கள் அச்சம்

இங்கு பிரிட்டனைப் பொறுத்தவரை குறிப்பாக இளைஞர்கள் எவ்வாறு கடும்போக்கு இஸ்லாமியக் குழுக்களால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை அறிவதில் தற்போது ஆர்வம் காண்பிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் பிறந்து இங்கு குடியேறியஇ சில தீவிரவாதப் போக்குக் கொண்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மதபோதகர்கள் மீது அரசாங்கம் உன்னிப்பான கவனத்தைச் செலுத்துவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் இங்கு லண்டனில் உள்ள தெருச் சண்டியர்களின் குழுக்கள் கூட தமது கூட்டத்துக்கு ஆட்சேர்க்க இஸ்லாத்தைப் பயன்படுத்துவதாகவும் இங்கு ஒரு கவலை காணப்படுகிறது.

இப்படியான குழுக்கள் இங்குள்ள இளைஞர்களை துப்பாக்கி முனையில் இஸ்லாத்துக்கு மாற்ற கட்டாயப்படுத்துவதாகவும் லண்டனின் சில பின்தங்கிய மற்றும் வறிய பகுதிகளில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

20050804061527uk2203.jpg

கவலை அதிகரிக்கிறது

அப்படி மாறாத சில இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.

இந்த தெருச்சண்டியர் குழுக்கள் அரசியல் வன்செயல்களுடன் சம்பந்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.

ஆனால் இவர்களால் தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள் பின்னர் இலகுவில் தீவிரவாதக் குழுக்களால் ஆட்சேர்க்கப்படுவதற்கான ஆபத்துக்கள் இருப்பதாக முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் கவலை காணப்படுகிறது.

BBC tamil

Link to comment
Share on other sites

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரிட்டனில் செயற்பட முடியாது

TRO எனப்படும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலங்கையில் அறப் பணிகளைச் செய்ய பிரிட்டனில் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக நிதி சேகரித்து வந்தது.

ஆனால், டி ஆர் ஓ அமைப்பு இங்கிலாந்து அறக்கட்டளை ஆணையத்தின் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு விட்டதாக அண்மையில் செய்திகள் வந்தன.

இது குறித்து இலண்டனில் உள்ள இங்கிலாந்து அறக்கட்டளை ஆணையத்தின் ஊடகத்துறை அதிகாரி சாரா ஜேன் டிக்பியைக் கேட்ட போது இந்தச் செய்தி உண்மைதான் என்று கூறினார்.

கடந்த 2000 மாவது ஆண்டு, இந்த டி ஆர் ஒ அமைப்பு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்குவதாக இலங்கை ஊடகங்களில் வந்த செய்திகள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றும்,இதனைத் தொடர்ந்து இந்தச் செய்திகள் உண்மையா இல்லையா என்பதைக் கண்டறிய நாங்கள் முறைப்படியான விசாரணை ஒன்றினைத் தொடங்கினோம் என்றும்,

இந்த விசாரணை கடந்த ஆகஸ்டு பத்தாம் தேதி முடிவிற்கு வந்தது என்றும்,

இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த டிஆர்ஒ பிரிட்டன் அமைப்பிற்கு ஒரு இடைக்கால மேலாளர் ஒருவரை நியமித்ததாக்வும், இவர் பிரிட்டிஷ் அறக்கட்டளை கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும், டி ஆர் ஓ அறக்கட்டளைக்கும் சம்மந்தமில்லாதவர் என்றும், இதன் நிர்வாகத்தை அந்த மேலாளர் எடுத்துக் கொண்டு அவரே அதை நடத்தினார் என்றும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்த டி ஆர் ஒ அமைப்பிற்கு எந்தவித சொத்துக்களும் இல்லை, பணம் எதுவும் இல்லை இதன் செயல்பாடு நின்று விட்டது அறப் பணிகள் எதுவும் செய்யவில்லை என சில வாரங்களுக்கு முன் இந்த இடைக்கால மேலாளர் எங்களுக்கு உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தும், எங்களுடைய இறுதி விசாரணை அறிக்கை வரும் வரையிலும் எங்களுடைய அறக்கட்டளைப் பதிவுப் பட்டியலில் இருந்து டி ஆர் ஒ அமைப்பு எடுக்கப்பட்டுவிட்டது என்றும் சாரா ஜேன் டிக்பி கூறியுள்ளார்.

தங்களுடைய பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு விட்டால் டி ஆர் ஓ அறக்கட்டளை இனிமேல் செயல்படாது. இந்த அமைப்பிடம் எவ்விதப் பணமும் இல்லை அதற்கு எந்தவிதச் சொத்துக்களும் இல்லை. நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எதிலும் இந்த அமைப்பு TRO (UK) பெயரில் யாரும் ஈடுபடக் கூடாது, TRO (UK) என்ற பெயரில் எதுவும் செய்யவும் கூடாது. இந்த அமைப்பிற்கு அனுமதி கிடையாது. ஆனால், இடைக்கால மேலாளர் இதே போன்ற அறப் பணிகளைச் செய்ய புதிய ஆட்களைக் கொண்டு தமிழர் ஆதரவுக் கட்டளை, Tamil Support Foundation (TSF) என்ற பெயரில் மற்றொரு அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த TSF என்ற அமைப்பு 2005 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. டி ஆர் ஓ போன்றதொரு அறக்கட்டளை அமைப்புதான் இதுவும் என்றார் சாரா ஜேன் டிக்பி

இது பற்றி மேலும் கூறிய சாரா ஜேன் டிக்பி எங்களுடைய விசாரணையின் இறுதி அறிக்கை வரும் வரையில் டி ஆர் ஓ குறித்து இந்த விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்து என்னால் இப்பொழுது எதுவும் கூற இயலாது. வெளியில் இருந்து ஒரு மேலாளரை, அதிகாரியை நாங்கள் டி ஆர் ஓ அமைப்பை நிர்வாகம் செய்ய நியமித்தோம். அதுவே மிகத் தீவிரமான நடவடிக்கை என்று கூறலாம். வெளியில் இருந்து ஒருவரை அழைத்து அறக்கட்டளையை நிர்வாகம் செய்யச் சொல்வது நங்கள் காரணம் இல்லாமல் செய்ய மாட்டோம். டி ஆர் ஓ அறக்கட்டளையின் நிதியைப் பாதுகாக்கவே அவர் நியமிக்கப்பட்டார். உதவி தேவைப்படும் மக்களுக்கு, அறப் பணிகளுக்கு சேகரிக்கப்பட்ட நிதி சென்றடைவதை உறுதி செய்யவோ அல்லது மற்றொரு அறக்கட்டளையான தமிழர் ஆதரவு கட்டளை TSF அமைப்பிற்கு நிதியை மாற்றாவோ இதற்கு என்ன நடவடிக்கை சிறந்தது என்பதை இந்த அதிகாரி முடிவு செய்வார் என்றார் இங்கிலாந்து அறக்கட்டளை ஆணையத்தின் சார்பில் பேசவல்லவரான சாரா ஜேன் டிக்பி.

டிஆர் ஒ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்று மறுக்கும் அந்த அமைப்பின் இயக்குனர்களின் ஒருவரான என்.எஸ். மீர்த்தி அவர்கள், இது தொடர்பான விசாரணைகள் முடியும் வரை ஆங்கில அதிகாரிகள் மற்றும் டி ஆர் ஒ வின் அதிகாரிகள் அடங்கிய தமிழர் ஆதரவு கட்டளை என்னும் அமைப்பு ஒன்றை ஏற்படுத்திய பிரிட்டனின் அறக்கட்டளைகள் ஆணையம், டி ஆர் ஓவின் நிதியை புதிய அமைப்புக்கு மாற்றியுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் விசாரணை முடிவுகள் வரும் வரை டி ஆர் ஓ என்னும் அமைப்பு செயற்பட முடியாது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

BBC தமிழ்

Link to comment
Share on other sites

ஆசிய மாணவர்களைத் தாக்கிய வெள்ளைக்கார இளைஞருக்கு சிறை

லண்டன்,

இனக்குரோத வெள்ளையர் குழுவைச் சேர்ந்த இளைஞரொருவருக்கு லண்டன் மாவட்ட நீதிமன்றமொன்று 16 மாத கால சிறைத்தண்டனை விதித்தது.

நீதிபதி தனது தீர்ப்பின் போது "ஓநாய்கள் தேடி ஓடக் கூடிய மிருகத்தை கண்டு பிடித்து விரட்டுவதற்கு ஒப்பான ஓர் சம்பவம் இதுவாகும்' எனக் குறிப்பிட்டார்.

மேற்படி இனவாதக் குழு மூன்று ஆசிய மாணவர்களை வழிமறித்து நையப்புடைத்துள்ளது. தாக்குதலுக்குள்ளான மூன்று மாணவர்களில் இருவர் சுயநினைவிழந்துள்ளனர். இதையடுத்து இக்குழு கைது செய்யப்பட்டது.

இம்மூன்று மாணவர்களில் ஒருவர் அஸ்கர் அலி என்பவரின் புதல்வராவார். இவர் 1980 களின் ஆரம்பத்தில் ஜம்மு காஷ்மீர் பிரதேசத்திலிருந்து வந்தவராவார்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட் ஜேம்ஸ் பீற்றர் என்ற இளைஞருக்கு 18 வயதாகும். இவரின் குழுவில் 100 இளைஞர்கள் வரை இருக்கிறார்கள். இக்குழுவினர் தம் பாடசாலைக்கருகில் விளையாடும் 11, 14 வயது சிறுவர்களை துரத்திப் பிடித்து தாக்குவது வழக்கமாகும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்குழுவினர் சம்பவ தினத்தன்று 11 வயதான இரு மாணவர்களை நையப் புடைத்து தரைமீது தள்ளி உதைத்தார்கள். இவ்விருவரையும் காப்பாற்ற முற்பட்ட 14 வயதுடைய சிறுவனொருவரையும் இக் குழுவினர் இழுத்தெடுத்து, தடியால் அடித்தும், கீழே தள்ளி மிதித்தும், உதைத்தும் தாக்கியுள்ளனர். இவரும் சுயநினைவிழந்துள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக் குழுவினர் தாக்குதல் நடத்தும் போது இனத்துவேச கோசங்களை எழுப்பியுள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜேம்ஸ் பீற்றர்ஸுக்கு 16 மாத கால சிறைத் தண்டனை விதித்த நீதிவான், ""இனக்குரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு இரக்கம் காட்டப்பட மாட்டாது'' என தமது தீர்ப்பில் தெரிவித்தார்

Veerakesari

Link to comment
Share on other sites

'பயங்கரவாத தடுப்புக்கு சில நாட்களில் நடவடிக்கை'- பிரிட்டிஷ் அமைச்சர்

20050714114540clarke_afp203main.jpg

அமைச்சர் சார்ள்ஸ் கிளார்க்

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த அல்லது அவர்களை நிரந்தரமாக நாட்டினுள் ஒதுக்கி வைக்க தனது புதிய அதிகாரங்களின் கீழ் தான் அடுத்த சில தினங்களில் நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் சார்ள்ஸ் கிளார்க் கூறியிருக்கிறார்.

எவ்வகையான நடவடிக்கைகள் சட்டத்துக்கு ஒவ்வாத நடவடிக்கைகள் என்று கொள்ளப்படும் என்பது பற்றி பிரிட்டிஷ் அரசு பட்டியல் ஒன்றை லண்டன் குண்டு வெடிப்பை அடுத்து வெளியிட்டிருக்கிறது.

இவற்றுள் பயங்கரவாத வன்முறைகளை ஆதரித்து எழுதுதல், பிரசுரித்தல், போதித்தல், பிரசுரங்கள் விநியோகித்தல் ஆகியன அடங்கும்.

பயங்கரவாதத்தில் ஈடுபட மற்றவர்களைத் தூண்டுதலும் இதில் அடங்கும்.

தமது நடத்தைகளின் மூலம் இந்தச் சட்டங்களை மீறியவர்கள் பற்றிய உலகளாவிய கணனி விபரப்பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சார்ள்ஸ் கிளார்க் கூறியுள்ளார்.

தமது புதிய அதிகாரங்களை அமைச்சர் பயன்படுத்த முனையும் போது, சட்ட ரீதியான ஏராளமான சவால்களை அவர் எதிர் நோக்கலாம் என்று எமது பிபிசி உட்துறை விவகார ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் கடந்த வாரமும் இவ்வாரமும் பொதுப் பரீட்சைகளுக்கான முடிவுகள் வெளியாகி இருக்கின்றன..! ஜிசிஈ ஏ லெவல் எனப்படும் உயர்தரப் பரீட்சைக்கு சமனான பரீட்சை முடிவுகளும் மற்றும் ஜிசிஎஸ்சி எனப்படும் சாதாரண தரத்துக்கு சமனா பரீட்சை முடிவுகளும் வெளியாகி விட்டன...! பெறுபேறுகளின் அடிப்படையில் எல்லாவற்றிலும் ஆண்களை விட பெண்களே முன்னணியில் திகழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்..! அத்தோடு இரண்டு பரீட்சைகளிலும் சித்தியடைந்தோரின் சதவீதம் என்பது 96% க்கும் மேலாகும்...!

GCSE GRADES A*-C

England: 60.8%

Northern Ireland: 71%

Wales: 61.3%

All boys: 57%

All girls: 65.2%

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பிரிட்டனுக்கான தெற்காசியரின் பங்களிப்பு

20050901155620asian203.jpg

பிரிட்டனின் முன்னணி தெற்காசிய வர்த்தகர்கள்

பிரிட்டனின் மொத்த பொருளாதார உற்பத்தியில் பத்து சதம் பிரிட்டனில் வாழும் தெற்காசிய வம்சாவளியினரால் உருவாக்கப்படுவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று மதீப்பீடு செய்துள்ளது.

பிரிட்டனின் மொத்த மக்கள் தொகையில் தெற்காசிய வம்சாவளியினர் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளனர், ஆனால், ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டனின் பொருளாதாரத்திற்கு கிட்டத்தட்ட நூற்று எண்பது பில்லியன் அமெரிக்க டாலருக்கு சமமான அளவில் பங்களிப்புச் செய்வதாக ஆசிய தொழில்சார் பணிகளில் இருப்போர் மையத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

பல ஆயிரம் கோடிகள் கொண்ட தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தும் இலட்சுமி மிட்டலின் வெற்றிவரகமான வர்த்தகம் மற்றும் பிற தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தோரையும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

கடந்த ஜூலை மாதம் இலண்டனில் சில முஸ்லிம் இளைஞர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு தங்களுடைய வாழ்க்கை கடும் அழுத்தத்திற்குள்ளாகியிருப்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

_40767224_petrolprice203.jpg

பிரித்தானியாவில் எரிபொருள் விலை மிக உச்சத்திற்கு சென்றுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு சாதாரண வகை பெற்றோல் லீற்றர் 91 ஆக இருந்தது, ஆனால் சில இடங்களில் தற்போது லீற்றர் 1 பவுஸ்சுக்கு விற்கப்படுகின்றது. இதனை எதிர்த்து நுகர்வோர் சங்கத்தை சேர்ந்தோர் லண்டனில் இருந்து வேல்ஸ் செல்லும் 4 நெடுஞ்சாலையில் போராட்டங்களையும் அதன் பின்பு எண்ணை சுத்திகரிப்பு ஆலைகளின் முன்னால் மறியல் போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டிருக்கின்றார்கள். இந்த போராட்களினால் எரிபொருள் விநியோகம் குறையலாம் என்ற அச்சத்தில் அனைவரும் பெற்றோலை சேமித்து வைக்க முயன்றால் பெற்றோல் நிலையங்கள் முன் கியூக்கள் உருவாகலாம்.

ஹூம் இப்படி பெற்றோல் விலை கூடினா எப்படி சுத்தி திரியிறது :lol:

Link to comment
Share on other sites

இங்கும் அதே நிலைதான் மதன்.............

Sfr.1.20 - 1.30க்கு இருந்த பெற்றோல் sfr1.71 - 1.75 (Swiss Frank)வரை போகிறது.

என்ன செய்வது?

ஐரோப்பா முழுவதுமல்ல

உலக நாடுகளில் விலை அதிகரித்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

இங்கு ஜெர்மனியிலும் 1.10-1௧.20 யூரோவில் இருந்து 1.35௧௧௧-1.45யூரோவாக உயர்ந்துள்ளது.

Link to comment
Share on other sites

ஐரோப்பா முழுவதுமல்ல

உலக நாடுகளில் விலை அதிகரித்திருக்கலாம்.

அமெரிக்காவில் ஏற்பட்ட கத்தரினா சூறாவளியை தொடர்ந்து அங்குள்ள எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் கிடைக்காமையாலே இந்த விலை உயர்வு என்றூ சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

2005090914223920050906192807_39997000_chinapetrol203.jpg_40804148_body203apok.jpg

போராட்களினால் எரிபொருள் விநியோகம் குறையலாம் என்ற அச்சத்தில் அனைவரும் பெற்றோலை சேமித்து வைக்க முயன்றால் பெற்றோல் நிலையங்கள் முன் கியூக்கள் உருவாகலாம்.

நேற்று புதன் கிழமை தொடங்கிய போராட்டத்தால் பெற்றோல் கிடைக்காத என்ற அச்சத்தில் லண்டனில் திங்கட்கிழமையே அனைவரும் எரிபொருளை சேமிக்க ஆரம்பித்து விட்டார்கள். திங்கட்கிழமை ஒரு இடத்திலும் பெற்றோல் எடுக்க முடியவில்லை, நான் போன பெற்றோல் நிலையங்களில் பெரும்பாலாவை பெற்றோல் முடிந்து மூடியிருந்தது, அப்படியில்லாமல் திறந்திருந்த ஒரு சில நிலையங்களிலும் பெரிய கியூ. அன்று பெற்றோல் எடுப்பதற்க்காக கிட்டத்தட்ட 1 மணித்தியாலத்திற்கு மேல் கியூவில் நிற்க வேண்டிருந்தது. செவ்வாய் கிழமையும் நிலமை மோசம் தான், தற்போது ஓரளவு பரவாயில்லை,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.