Jump to content

பிரித்தானிய தகவல்கள்


Recommended Posts

_41115137_newerblair203.jpg_41115261_blair_cherie203.jpg

கடிக்குறீங்க தமிழினி.

தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி தொழிற்கட்சி 653 ஆசனங்களை வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 646 தொகுதிகளில் இதுவரை 619 முடிவுகள் வெளியாகி விட்டன. இதனுடன் தொழிற்கட்சி தொடர்ச்சியாக 3வது முறை நாட்டை ஆள்வது குறிப்பிடத்தக்கது.

தொழிற்கட்சி இந்த தேர்தலில் வென்ற போதிலும் ஈராக் விவகாரம் காரணமாக அதன் ஆதரவு குறைந்திருக்கின்றது. கடந்த முறை 167 பெரும்பான்மை ஆசனங்களை வைத்திருந்த தொழிற்கட்சிக்கு இம்முறை 60 பெரும்பான்மை ஆசனங்களே கிடைக்கும்

Link to comment
Share on other sites

  • Replies 232
  • Created
  • Last Reply

இப்படியே தொழிட்கட்சி போனால் அடுத்த எலக்ஸனில ரீபிசி ராமராஜனண்ட கட்சி தான் வெல்லும் பாருங்க.. (ஜோவ்வ் நான் சொன்னதை தப்பா நினைச்சுபோடாதேங்கப்பா நான் சொன்னது.. நாட்டு எலக்ஸன் இல்லப்பா.. காமெடி எலக்ஸனில வெல்லும் எண்டு சொல்லவந்தன்) :D :|

Link to comment
Share on other sites

பிரிட்டன் பொதுத்தேர்தல்: டோனி பிளேர் வெற்றி

_41114647_cb.jpg

லண்டன், மே 7: பிரிட்டனில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக லேபர் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

மீண்டும் பிரதமர் பதவியில் அமர்கிறார் டோனி பிளேர்.

இதற்கு முன்பு கன்சர்வேடிவ் கட்சியின் மார்கரெட் தாட்சர் மட்டுமே மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 645. ஆட்சி அமைக்க 324 இடங்கள் தேவை. ஆனால் அதற்கு அதிகமான இடங்களை லேபர் கட்சி வென்றுள்ளது.

வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இராக் போரில் பிரிட்டன் பங்கேற்றதால் டோனி பிளேருக்கு நாட்டில் பலத்த எதிர்ப்பு காணப்பட்டது. இது அவரது வெற்றிவாய்ப்பை பாதிக்கும் என்று கூட ஒரு கருத்து நிலவியது. ஆனால் அஞ்சியபடி அவரது செல்வாக்கு குறையவில்லை. ஆனால் கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் லேபர் கட்சிக்கு கிடைத்த பெரும்பான்மை பலம் குறைந்துபோனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடவை லேபர் கட்சியானது அதிக மெஜாரிட்டியுன் ஆட்சியில் அமரமுடியாது என்பதால், டோனி பிளேர் முழு பதவி காலமும் ஆட்சியில் நீடிப்பாரா என்பது சந்தேகமே.

Dinamani

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடவை இரண்டு தமிழ் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள்.

ஒருவர் MITCHAM & MORDEN பகுதியில் போட்டியிட்டு 186 வாக்குகளையும் மற்றவர் GREENWICH & WOOLWICH பகுதியில் போட்டியிட்டு 61 வாக்குகளையும் பெற்றுள்ளர்.

இதில் MITCHAM & MORDEN பகுதியில் போட்டியிட்ட ரதி அழகரட்ணம் என்பவர் தனக்கு தமிழ் ஊடகங்கள் சந்தர்ப்பம் தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா.. அவங்களின்.. ஒரு பேர்ட்டியை ரீவில பாத்தன். தமிழ் மக்களிற்கு.. ஒன்றும் விளங்கிறதில்லை என்று ஒருக்கா சொன்னவா..?? அவா தானே..?? தமிழை தத்தி தத்தி கதைக்கிற :D:lol::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவதான் என்று நினைக்கின்றேன். துணிந்து ஒரு தமிழ் பெண் தேர்தலில் போட்டியிடுள்ளார். அவரிடம் குறை கண்டு கொள்ளாமல் அவருக்கு ஆதரவாக செயற்படுவதால் ஏதாவது நன்மைகள் ஏற்படுமா....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறை.. சொல்லவில்லை.. உண்மையைச்சொன்னம். தமிழ் பெண்மணி நிக்கிறாவே.. என்ன சொல்லுறா என்று கேட்டம் அப்ப தான்.. சொன்னா.. வெற்றி பெற்றிருக்கிறாவா என்ன.?? எப்படியோ.. நல்லாய் நடந்தால் சரி தான். :mrgreen: :mrgreen: :mrgreen:

Link to comment
Share on other sites

face_LAB.gifface_CON.gifface_LD.gif

LAB 355 CON 197 LD 62

324 seats needed to win

இதைவிட இன்னொரு விசயம்...லண்டன் மாநகரில... சில இடங்களில.... தமிழில் மட்டும் பிரச்சாரம் நடந்துதே... ஒலி பெருக்கி மூலம்...(வெள்ளையள் வாழும் இடங்களில் கூட அப்படி ஒன்று நடந்தது தெரியவில்லை...) அதுவும் இறுதிக்கட்டப் பிரச்சாரம்..உங்கள் வாக்குகளை தொழிற்கட்சிக்குப் போடுங்கள்...புகுந்த வீட்டுக்கு இரண்டகம் செய்தாதீர்கள்...இப்படி...எங்கட ஆக்களின்ர இந்தக் குசும்புதான் அருவருப்பை அளிக்கிற விசயம்...கேட்கிற சனம் எல்லாம் முகஞ்சுழிச்சுட்டுப் போச்சுதுகள் (மொழி புரியாமலோ இல்ல பல்லின சமூகம் வாழும் இடத்தில் இவர்கள் செய்யும் இப்படியான சின்னத்தனமான செயல் கண்டோ தெரியல்ல..!) கடைசியில கென்சவேட்டிவ்வுக்குத்தான் லண்டன் மாநாகரம் மதிப்பளிச்சது....!

இதுகள் அவசியமா கொடிகட்டிப் பறக்கும் நம்ம மரியாதைகளுக்கு மத்தியில...அதுக்க சில பேர் தமிழனிர சூத்தையை நோண்டி நோண்டி சர்வதேச தமிழ் சஞ்சிகைகள் விட்டு மகிழீனம்...கள்ளக்காட்டும் அவையே சஞ்சிகையில எழுதுறதும் அவையே போல...அவ்வளவு அச்சொட்டா தாங்க செய்கிறத எழுதுகினம்....கடவுளே இதுகள் எப்ப திருந்திறதா இருக்குதுகளோ...??! :roll: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப மதன் அண்ணா வென்றிட்டார்... வாழ்த்துக்கள் மதன் அண்ணா. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏறத்தாள தொழிற் கட்சியை ஜதேக கட்சிக்கும் கன்சவேட்டிவ் கட்சியை சுதந்திரகட்சிக்கும் ஒப்பிடலாம்.

இது ஒரு சுவாரசியமான ஒப்பீடு. பொரு்ளாதார மற்றும் சமூக விடயங்களில் சுதந்திரக் கட்சி இடதுசாரிப் போக்குக் கொண்டது. ஐதேக வலதுசாரிப் போக்குக் கொண்டது, பிரித்தானியத் தொழிற் கட்சி பாரம்பரியமாக இடது சாரிப் போக்குக் கொண்டிருந்தது. இப்போதைய "நவீன தொழிற்கட்சி" நடுவழிப் பட்டதாக இருந்தாலும், கன்சர்வேடிவ் கட்சியுடன் ஒப்பிடும் போது இடது பக்கம்தான் உள்ளது. அதன்படி பார்த்தால் ஐதேகவையும் கன்சர்வேடிவ் கட்சியையும் தான் ஒரே பக்கத்தில் வைக்க வேண்டும்.

புலத்தில் தமிழர் பொதுவாக இடதுசாரிக் கட்சிகளையே ஆதரிக்கிறார்கள். ஏனென்றால் இடதுசாரிக் கட்சிகள் தான் குடிவரவு, அகதிகள் போன்ற விடயங்களில் எங்களுக்குச் சார்பான போக்கைக் கொண்டிருக்கின்றன. உதாரணம் பிரித்தானியாவில் தொழிற்கட்சி, கனடாவில் லிபரல், அல்லது என்.டி.பீ. ஆனால், தமிழர்கள் பொருளாதார, மற்றும் குடிவரவு தவிர்ந்த மற்றைய சமூக விடயங்களில் மிகவும் பாரம்பரிய, வலதுசாரிக் கருத்துகளைக் கொண்டவர்கள் என நினைக்கிறேன். மேற்கத்தைய இடது சாரிக் கட்சிகளின் மற்றைய கொள்கைகளை விழுங்குவதில் தமிழர்களுக்குக் சங்கடமாக இருக்கும் (உதாரணங்கள்்: ஒரினச் சேர்க்கை, பெண் உரிமைகள், கருக் கலைப்பு, கடவுள்).

குடிவரவு, சிறுபான்மையினர் விடயங்களைத் தவிர மற்ற விடயங்கள் முன்னடிக்கு வரும்போது புலத் தமிழர்கள் இடதுசாரிக் கட்சிகள் பக்கமிருந்து வலது சாரிக் கட்சிகளின் பக்கத்துக்குத் தாவும் நிலைமையைக் காணக் கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

அடப்பாவி கவிதன் நான் தேர்தலில் நின்ற மாதிரி சொல்றீங்க. ஏதோ நான் எனது கருத்தை சொன்னன்.

Link to comment
Share on other sites

இந்த தடவை இரண்டு தமிழ் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள்.

ஒருவர் MITCHAM & MORDEN பகுதியில் போட்டியிட்டு 186 வாக்குகளையும் மற்றவர் GREENWICH & WOOLWICH பகுதியில் போட்டியிட்டு 61 வாக்குகளையும் பெற்றுள்ளர்.

இதில் MITCHAM & MORDEN பகுதியில் போட்டியிட்ட ரதி அழகரட்ணம் என்பவர் தனக்கு தமிழ் ஊடகங்கள் சந்தர்ப்பம் தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

நீங்கள் சொல்லி தான் இப்படி ஒருவர் போட்டியிட்டதே தெரியும். தமிழ் ஊடகங்கள் வாய்ப்பு கொடுத்தார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் வாங்கு கேட்டு சென்ற மாதிரி தெரியவில்லையே? அது தவர தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார் என்றவுடன் அதை மட்டும் வைத்து அவருக்கு வாக்களிக்க முடியாதே? தற்போதைய நிலையில் ஒரு பெரிய கட்சியுடன் (தொழிற்கட்சி, கன்சவேர்டிவ், லிபரல்) இணைந்து செயற்படுவதே நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மதன் நீங்கள் இப்போது ஏதாவது கட்சியில் சேர்ந்தவுடன் உங்களுக்கு முன்னுரிமை தரமாட்டார்கள். அடுத்து தமிழர்கள் ஓட்டு போட்டுத்தான் மற்றவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது முட்டாள்தனம். ஏனெனில் ஒவ்வெரு தொகுதியிலும் ஆகக் குறைந்தது 15000 வோட்டுக்களை பெற வேண்டும். எனவே தமிழர்களால் மட்டும் ஒரு பிரதிநிதியை தெரிவுசெய்ய முடியாது. ஆனால் தமிழ் மக்களுடைய வோட்டு பலத்தை ஒற்றுமையை இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தமிழர் போட்டியிட்டு வெளிக் காட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவி கவிதன் நான் தேர்தலில் நின்ற மாதிரி சொல்றீங்க. ஏதோ நான் எனது கருத்தை சொன்னன்.

ம்ம் அப்படி இல்லை அண்டு அக்காட்டை கேட்டன் எங்கை மதன் அண்ணாவை காணலை அவ்வளவா என்று அப்ப தான் சொன்னா, தம்பி அவர் இப்ப தேர்தலில் பிசி கண்டுக்காதைங்கோ என்று. அது தான் இங்கை பார்த்தன் ஒரு வாழ்த்து சொல்வமே என்று உடனை வாழ்த்திட்டன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மதன் சத்தத்தை காணவில்லை.......?

Link to comment
Share on other sites

அதைவிட இன்னொன்றையும் கவனீத்தீர்களா?? தேர்தல் முடிவுகள் வெளிவந்த மே 6 பிளேயரின் பிறந்ததினம். அவருக்கு பிறந்தநாள் பரிசாக மீண்டும் வெற்றி பெற்றிருக்கின்றார்.

:roll: :D :roll: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளேயருக்கு அழுத்தம் கூடுகிறது. தொழிற் கட்சியில் உள்ள பலருக்கு அவரை தொடர்ந்தும் பிரதமராக அடுத்த 3 வருடங்களுக்கு வைத்திருக்க விருப்பமில்லை.

Link to comment
Share on other sites

தற்போதைய சூழலில் பிளேயர் தனது மூன்றாவது பதவிக்காலம் முழுவதும் பதவியில் இருக்கபோவதாக அறிவித்துள்ளார். ஆனால் தொழிற்கட்சியில் பின்வரிசை எம்பிக்களால் அதிகரித்து வரும் அழுத்தம் காரணாமாக அவரால் குறிப்பிட்ட காலத்திற்கு பின் பதவி விலகவேண்டி வரலாம். இந்த தேர்தலில் தொழிற்கட்சியின் ஆதரவு 161 மெஜாரிட்டி ஆசனங்களில் இருந்து 67ஆக குறைந்தற்கு பிளேயரும் ஒரு முக்கிய காரணம். பல இடங்களிலும் பிரித்தானிய மக்கள் குறிப்பாக வெள்ளை இனத்தவர் ஒரு பொய்யருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டதை காணகூடியதாக இருந்தது. ஈராக் யுத்தத்தில் பிளேயர் பொய் கூறியதால் தான் தொழிற்கட்சியின் ஆதரவு குறைந்தது என்று தொழிற்கட்சி ஆதரவு பத்திரிகையாக டெய்லி மிரர் தவிர மற்ற பத்திரிகைகள் அனைத்தும் கருத்து கூறி உள்ளன. அடுத்தவருடம் உள்ளூராட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பிளேயர் பதவி விலகி அடுத்த நிலையில் உள்ள Gordon Brownக்கு அதிகாரத்தை அளிப்பது கட்சியை பலப்படுத்த உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இவர் தனது நாற்காலியை வெகுவிரைவில் விட்டுக் கொடுக்க வேண்டும்.......

Link to comment
Share on other sites

இல்லை மதன் நீங்கள் இப்போது ஏதாவது கட்சியில் சேர்ந்தவுடன் உங்களுக்கு முன்னுரிமை தரமாட்டார்கள். அடுத்து தமிழர்கள் ஓட்டு போட்டுத்தான் மற்றவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது முட்டாள்தனம். ஏனெனில் ஒவ்வெரு தொகுதியிலும் ஆகக் குறைந்தது 15000 வோட்டுக்களை பெற வேண்டும். எனவே தமிழர்களால் மட்டும் ஒரு பிரதிநிதியை தெரிவுசெய்ய முடியாது. ஆனால் தமிழ் மக்களுடைய வோட்டு பலத்தை ஒற்றுமையை இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தமிழர் போட்டியிட்டு வெளிக் காட்டலாம்.

எந்த ஒரு கட்சியிலும் சேர்ந்தவுடன் முன்னுரிமை தர மாட்டார்கள் தான். ஆனால் அதற்காக தனியே சுயேச்சையாக நின்றால் கொஞ்ச ஓட்டுக்களே கிடைப்பதுடன் அதனால் எதனையும் சாதிக்க முடியாது. அதனால் தமிழர்கள் அந்தந்த பகுதி தேசிய கட்சிகளுடன் சேர்ந்து இயங்குவதே நல்லது என்று நினைக்கின்றேன். அவற்றுடன் இணைந்து தமிழர்கள் பணியாற்றி எதிர்காலத்தில் வேட்பாளராக கூட வரலாம் அப்படி வராமல் போனால் கூட தொகுதி எம்பிக்களுடன் இணக்கமாக வேலை செய்து நம்து தேவைகளை பிரைச்சனைகளை புரியவைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தெரியுமா LEWISHAM பகுதியில் சின்னத்தம்பி என்பவர் 41 வருடங்களாக தொழிற் கட்சியுடன் இருந்து பல வேலைத்திட்டங்களை கட்சிக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெற்றிகரமாக செய்து முடித்தவர். ஆனால் அவருக்கு தொழிற்கட்சி முன்னுரிமை வழங்கவில்லை . பின்னர் அவர் கட்சி மறிய போது அந்த கட்சி LEWISHAM பகுதி நியமன MAYOR ஆக பதவியில் இருத்தியது. 41 வருட சேவையில் தொழிற்கட்சி அவருக்கு கொடுத்தது என்ன...?

Link to comment
Share on other sites

சின்னத்தம்பி குறித்து அறிந்திருக்கின்றேன், அவர் எந்த கட்சிக்கு மாறினார் கிறீன் பார்டிக்கா? தொழிற்கட்சி அவருக்கு என்ன செய்திருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படித் தான் நினைக்கிறேன்.....

மற்ற கட்சியினர் கொடுத்த பதவியை இவர்கள் கொடுத்திருக்கலாம் தானே.....?

Link to comment
Share on other sites

அவர் குறித்து கொஞ்சம் கேள்விபட்டிருக்கின்றேன் எது உண்மை எது பொய் தெரியாது. கிரீன் பார்ட்டி மூலம் லூசியம் பகுதி மேயரானார் என்று அறிந்தேன். அவர் அத்தனை வருடங்கள் சேவை செய்திருந்தால் நிச்சயம் பதவி கொடுத்திருக்கதான் வேண்டும். அந்த சமயத்தில் அவருக்கு மேல் இன்னும் சில பெரிய தலைகள் லூசியம் பகுதியில் இருந்தார்களோ தெரியவில்லை, அப்படி இருந்திருந்தால் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்திருக்காது. இன்னொரு கட்சியில் அந்த அளவிற்கு பிரபல்யமானவர்கள் இல்லாத நிலையில் யாராவது ஒரு பிரபல்யமானவர்கள் போய் சேர்ந்தால் உடன் பதவி கொடுப்பார்கள். இது அனைத்து இடத்திலும் நடப்பது தான்.

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியில் யாழ் மாவட்டத்தில் பெரிதாக யாரும் இல்லாத நிலையில் சேந்து கொஞ்ச காலத்திலேயே மகேஸ்வரன் எம்பியாகி அமைச்சராகவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியலும் இங்கத்தய அரசியலும் ஒன்றா...?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.