Jump to content

பிரித்தானிய தகவல்கள்


Recommended Posts

இலங்கை அரசியலுடன் ஒரேயடியாக ஒப்பிடவில்லை, ஒரு உதாரணத்திற்கு அப்படி கிரீன் பார்டியில் மக்கள் ஆதரவு பிரபல்யம் உள்ளவர்கள் இல்லாத நிலையில் அப்படி நடந்திருக்கலாம் என்று சொன்னேன். எப்போதும் பல பெரியதலைகளை ஒரு இடத்தில் இருந்தால் அனைவருக்கும் முக்கியத்துவம் கிடைக்காது, அதில் முக்கியத்துவம் கிடைக்காவர் தேவை உள்ள இன்னொரு இடத்திற்கு போனதும் உடன் அங்கீகாரம் கிடைக்கும் இது அனைத்து இடத்திலும் நடப்பது தான். பல நிறுவனங்களில் கூட பணியாற்றுபவர் இன்னொரு இடத்திற்கு போனவுடன் கூடிய சம்பளமும் பதவி உயர்வும் கிடைக்கிறதே அது போல இருக்கலாம் என்று சொன்னேன். இவர் கிரீன் கட்சியில் இணைந்து சிறிது காலத்தில் பதவி கொடுத்தார்கள் என்றால் அந்த கட்சியில் ஏற்கனவே இருந்து பதவி கிடைக்காமல் இவருக்கு கிடைத்தவுடன் விரக்தி அடைந்திருப்பார்கள் அல்லவா?

மேலும் அப்போது என்ன நடந்தது என்பதும் லூசியம் பகுதி நிலவரமும் எனக்கு முழுமையாக சரியாக தெரியாது. அவர் எங்கே இருக்கின்றார் என்று தெரிந்தால் தனிமடல் மூலம் சொல்லுங்கள் கேட்டு எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 232
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவரை தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியலுடன் ஒரேயடியாக ஒப்பிடவில்லை, ஒரு உதாரணத்திற்கு அப்படி கிரீன் பார்டியில் மக்கள் ஆதரவு பிரபல்யம் உள்ளவர்கள் இல்லாத நிலையில் அப்படி நடந்திருக்கலாம் என்று சொன்னேன். எப்போதும் பல பெரியதலைகளை ஒரு இடத்தில் இருந்தால் அனைவருக்கும் முக்கியத்துவம் கிடைக்காது, அதில் முக்கியத்துவம் கிடைக்காவர் தேவை உள்ள இன்னொரு இடத்திற்கு போனதும் உடன் அங்கீகாரம் கிடைக்கும் இது அனைத்து இடத்திலும் நடப்பது தான். பல நிறுவனங்களில் கூட பணியாற்றுபவர் இன்னொரு இடத்திற்கு போனவுடன் கூடிய சம்பளமும் பதவி உயர்வும் கிடைக்கிறதே அது போல இருக்கலாம் என்று சொன்னேன். இவர் கிரீன் கட்சியில் இணைந்து சிறிது காலத்தில் பதவி கொடுத்தார்கள் என்றால் அந்த கட்சியில் ஏற்கனவே இருந்து பதவி கிடைக்காமல் இவருக்கு கிடைத்தவுடன் விரக்தி அடைந்திருப்பார்கள் அல்லவா?

இதற்கு தான் நாங்கள் மற்ற கட்சியில் சேர்வதிலும் பார்க்க சுதந்திரமாக செயற்படலாம். நாட்கள் எடுக்கும் தான் ஆனால் எமது அடுத்த தலை முறையினராவது தமது கால்களில் நிற்பார்கள்....

Link to comment
Share on other sites

இந்த முறையில் கொஞ்ச ஓட்டுகள் கிடைக்கும் தேர்தலில் போட்டியிட்டார் என்ற பெயர் தேர்தல் முடிந்த பின் கிடைக்கும் அது தவிர என்ன கிடைக்கும்.

அது தவிர இதில் நானும் நீங்களும் இன்னும் சிலரும் சேர்ந்து பணியாற்றுகின்றோம் என்று வைத்துகொள்ளுங்கள். அதில் ஒருவருக்கு முக்கியத்துவம் இல்லை என்றவுடன் தனியாக போய் இன்னொன்றை ஆரம்பிப்பார். புல சூழ்நிலையில் தற்போதைய நிலையில் தொழிற்கட்சி சிறந்தது என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மதன் நாம் நமக்கு என்று தனியாகவிருப்பதில் தவறேதும் இல்லை என்று நினைக்கின்றேன்...?

Link to comment
Share on other sites

தவறேதும் இல்லை. பரந்து வாழும் சூழ்நிலையில் தனியாக அரசியல் பலம் இல்லாத நிலையில் தனித்து போட்டியிடுவதால் பயனேதும் இல்லை. நமக்கு ஏற்ற கட்சியுடன் சேர்ந்து இயங்குவது நல்லது.

Link to comment
Share on other sites

லண்டனில் Bromley, Waltham Forest, Westminster,Croydon, Bexley, Havering, Hillingdon உள்ளிட்ட 10 தொகுதிகளிலேயே கன்சவேட்டிவ் வெற்றி பெற்றது, தொழிற்கட்சி லண்டனில் 40க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CROYDON CENTRAL இல் 75 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தொழிற் கட்சி தனது தொகுதியை இழந்துள்ளது...

Link to comment
Share on other sites

இது ஒரு சுவாரசியமான ஒப்பீடு. பொரு்ளாதார மற்றும் சமூக விடயங்களில் சுதந்திரக் கட்சி இடதுசாரிப் போக்குக் கொண்டது. ஐதேக வலதுசாரிப் போக்குக் கொண்டது, பிரித்தானியத் தொழிற் கட்சி பாரம்பரியமாக இடது சாரிப் போக்குக் கொண்டிருந்தது. இப்போதைய "நவீன தொழிற்கட்சி" நடுவழிப் பட்டதாக இருந்தாலும், கன்சர்வேடிவ் கட்சியுடன் ஒப்பிடும் போது இடது பக்கம்தான் உள்ளது. அதன்படி பார்த்தால் ஐதேகவையும் கன்சர்வேடிவ் கட்சியையும் தான் ஒரே பக்கத்தில் வைக்க வேண்டும்.

அசோகன் வலதுசாரி, இடதுசாரி அடிப்படையில் பார்த்தால் நீங்கள் குறிப்பிட்டது போல் ஐதேகவையும் கன்சர்வேட்டிவையும் தான் ஒரே பக்கத்தில் வைக்க வேண்டும்.

இலங்கையில் கடந்தமுறைக்கு முன்பு நடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை தமிழர்கள் ஆதரிக்கவேண்டும் என்று புலிகள் உட்பட பலரும் நினைத்தார்கள் அதற்கு காரணம் அப்போதை சூழலில் சுதந்திர கட்சியை விட ஐதேக ஆட்சிக்கு வருவது நல்லது என்பதே, அதன் அடிப்படையிலேயே தொழிற்கட்சியை ஐதேகக்கு ஒப்பிட்டேன். தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் தமது வாக்குகளை ஆட்சிக்கு வரமுடியாத லிபரல் கட்சிக்கு அளிக்கும் போது அது அடிப்டையில் தொழிற்கட்சி ஆதரவாளர்களாக இவர்களின் ஆதரவு குறைவதால் கடும் போக்குள்ள கன்சவேர்டிவ்க்கு வாய்ப்பு அதிகரிக்கு என்று கூறினேன்,

புலத்தில் தமிழர் பொதுவாக இடதுசாரிக் கட்சிகளையே ஆதரிக்கிறார்கள். ஏனென்றால் இடதுசாரிக் கட்சிகள் தான் குடிவரவு, அகதிகள் போன்ற விடயங்களில் எங்களுக்குச் சார்பான போக்கைக் கொண்டிருக்கின்றன. உதாரணம் பிரித்தானியாவில் தொழிற்கட்சி, கனடாவில் லிபரல், அல்லது என்.டி.பீ. ஆனால், தமிழர்கள் பொருளாதார, மற்றும் குடிவரவு தவிர்ந்த மற்றைய சமூக விடயங்களில் மிகவும் பாரம்பரிய, வலதுசாரிக் கருத்துகளைக் கொண்டவர்கள் என நினைக்கிறேன். மேற்கத்தைய இடது சாரிக் கட்சிகளின் மற்றைய கொள்கைகளை விழுங்குவதில் தமிழர்களுக்குக் சங்கடமாக இருக்கும் (உதாரணங்கள்்: ஒரினச் சேர்க்கை, பெண் உரிமைகள், கருக் கலைப்பு, கடவுள்).

குடிவரவு, சிறுபான்மையினர் விடயங்களைத் தவிர மற்ற விடயங்கள் முன்னடிக்கு வரும்போது புலத் தமிழர்கள் இடதுசாரிக் கட்சிகள் பக்கமிருந்து வலது சாரிக் கட்சிகளின் பக்கத்துக்குத் தாவும் நிலைமையைக் காணக் கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிச்சயமாக நாம் பல விடயங்களில் நாம் வலதுசாரி கொள்கையை தான் ஆதரிப்போம். அந்த சமயம் கட்சிக்கு உள்ளேயே வலதுசாரி போக்கை எடுக்ககூடிய சாத்தியங்கள் இருக்கின்றன,

Link to comment
Share on other sites

CROYDON CENTRAL இல் 75 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தொழிற் கட்சி தனது தொகுதியை இழந்துள்ளது...

நீங்கள் குறிப்பிட்ட தொகுதியில் கன்சவேட்டிவ் கட்சியை சேர்ந்த Andrew Pelling 19974 வாக்குகளையும் தொழிற்கட்சி சேர்ந்த Geraint Davies 19899 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இதன் அடிப்படையில் வெளிநாட்டவர்கள் லிபரல் கட்சிக்கு அளித்த வாக்குகளை தொழிற்கட்சிக்கு அளிப்பதுடன் வாக்களிக்காமல் இருந்த நம்மவர்கள் பலரும் வாக்களித்திருந்தால் தொழிற்கட்சி வெல்லும் சாத்தியம் இருந்திருக்கலாம். நம்மவர்களில் பலரும் வாக்களிப்பதில்லையே என்ன செய்ய :D

Link to comment
Share on other sites

[

நிச்சயமாக நாம் பல விடயங்களில் நாம் வலதுசாரி கொள்கையை தான் ஆதரிப்போம்.

அப்ப நீங்கள் கட்சி அரசியலில் இறங்கியிருக்கிறீர்கள் என்கிறீர்கள். அப்ப நம்ம வருங்கால பிரதமருக்கு எல்லோரும் ஓ போடுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது கொஞ்சம் ஓவராக தெரியல.........

Link to comment
Share on other sites

உது கொஞ்சம் ஓவராக தெரியல.........

எமக்கு கற்பித்த ஆசிரியர் சொல்லி தந்தது கற்பனையில் கஞ்சத்தனம் வைக்க கூடாதெண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒருக்கால் ஓ போடுங்கோ...... ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

மதன் என்ன சத்தத்தை காணவில்லை.....

Link to comment
Share on other sites

ஐயோ குளக்ஸ் நான் தமிழர்கள் என்று பொதுவாக சொன்னேன், ஆளை விடுங்க சாமி

Link to comment
Share on other sites

பிரிட்டனில் டோனி பிளேர் பதவி விலக கோரிக்கை

பிரிட்டனில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருந்தாலும், மக்கள் இடத்தில் கட்சியின் ஆதரவு சரிந்துள்ளதாக முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் டோனி பிளேர் தனது கட்சிக்குள்ளிருந்தே பெருகிவரும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்டுவருகிறார்.

அவர் பதவியிலிருந்து இறங்க வேண்டும் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரத் தொடங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பிரான்க் டாப்சன், பிளேர் தலைவராக நீடித்தால் தொழிற்கட்சிக்கு எப்போதுமே ஆதரவு தர முடியாது என வாக்காளர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரம் பிளேருக்கு ஆதரவாகவும் குரல்கள் ஒலித்துள்ளன. மூத்த அமைச்சர் ஒருவரான டேவிட் பிளங்கெட், கட்சிக்குள்ளிருந்தே பிளேரைத் தாக்குவது என்பது ஒருவர் தனது சுய விருப்பத்தில் மூழ்கிச் செய்யும் செயல் என்று கூறியுள்ளார்.

இம்முறை நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சியின் பெரும்பான்மை பெருமளவு சரிய முக்கியக் காரணம் இராக் மீது போர் தொடுக்க டோனி பிளேர் எடுத்த முடிவு மீது மக்கள் காட்டிய எதிர்ப்புதான் என்று பழிசுமத்தப்படுகிறது.

BBC தமிழ்

Link to comment
Share on other sites

அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் லேபர் கட்சி வென்ற போதிலும் சில தோல்விகளையும் சந்தித்தது. அவற்றில் ஒன்று லண்டன் Hornchurch பகுதியில் தனது எம்பி ஆசனத்தை கன்சவேட்டிவ் கட்சியிடம் இழந்தது லேபர் கட்சி.

இந்த லண்டன் Hornchurch பகுதியில் லேபர் கட்சி சார்பாக போட்டியிட்டவர் John Cryer. இவருடைய தாய் தந்தையர் இருவரும் எம்பிக்களாக இருந்தவர்கள், பின்னர் தந்தை கார் விபத்தில் இறந்தார். இவரும் கடந்தமுறை எம்பியாக இருந்து இம்முறை கன்சவேட்டிவ் கட்சியிடம் தோற்றார்.

பஞ்சாபி இன பெண்ணை திருமணம் செய்துள்ள இவர். இடது சாரி போக்குடையவர் என்பதுடன் பழகுதற்கு இலகுவானவர். ஈழத்தமிழர் உட்பட சிறுபான்மையினரின் கோரிக்கககளுக்கு ஆதரவளிப்பர். இப்படியான எமக்கு ஆதரவு தரக்கூடிய ஒருவர் 500க்கு உட்பட்ட வாக்கு வித்தியாசத்தில் இம்முறை தோற்றுப்போனார் என்பதுதான் கவலைக்குரிய் விடயம். இந்தபகுதியில் இருந்த இந்தியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவர் (ethnic minority) அனைவரும் தமது வாக்குகளை முழுமையாக பயன்படுத்தியிருந்தார் இவர் வெற்றி பெற்றிருப்பார். இதுபோன்ற Marginal Seats ஆக உள்ள இடங்களில் வாக்களிப்பதும் சரியான கட்சியை தேர்ந்தெடுப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் காட்டுகின்றது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
பிரித்தானிய தொழிற்கட்சியின் வருடாந்த மகாநாடு வரும் செப்டம்பரில் கடற்கரை நகரான Brighton இல் நடைபெற இருக்கின்றது. தற்போதைய பிரதமர் டொனி பிளேயரின் எதிர்காலம், அடுத்த தலைமைத்துவம் யார் மற்றும் அடுத்த வருட உள்ளூராட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட பல விடயங்கள் இந்த மகாநாட்டில் கலந்துரையாடப்படும். இது தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் விருத்தினராக இந்த மகாநாட்டில் பங்குபற்றலாம் என்பதுடன் தொழிற்கட்சி பிரமுகர்களை சந்திக்க கூடியதாகவும் இருக்கும். விருந்தினர் நுழைவுசீட்டுக்கள் இப்போதே பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிஞ்சாச்சா மதன்.. :mrgreen: :mrgreen:

Link to comment
Share on other sites

eminem.gif...Eminem.JPG

இப்படி தொப்பி போடஇயலாமல் சட்டம் வந்துள்ளதாமே... தடையாமே... அமுலாகிற்றா... :lol:

Link to comment
Share on other sites

அன்பகம்,

அப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு இன்னும் தடை செய்யவில்லை. இங்கு உள்ள anti-social behaviour இளையர்களின் அடையாளமாக இந்த பேஸ் போல் தொப்பி இருக்கின்றது. அவர்கள் சட்டத்தை மீறி நடக்கும்போது மற்றவர்கள் தம்மை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்கவும் கண்காணிப்பு கமராக்களில் தம்முடைய முகம் தெரிவதை தடுக்கவும் பேஸ்போல் தொப்பி அணிகின்றார்கள். அண்மையில் லண்டனில் உள்ள பெரிய சொப்பிங்க் கொம்பிளக்ஸ் இல் ஒன்றான Bluewater shopping complex அதற்குள் இவ்வாறான தொப்பிகளை அணிந்து நுழைவதை தடை செய்தது. அதனையே நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என நினைக்கின்றேன்.

இந்த தடையை பிரித்தானிய அரசு ஆதரித்துள்ளது. இதனை தொடர்ந்து வேறு பல இடங்களிலும் இந்த தடை நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படலாம். இது குறித்த மேலதிக தகவல்களை பின்பு தருகின்றேன்.

Link to comment
Share on other sites

நடந்து முடிந்த பிரித்தானிய தேர்தல் குறித்து இந்தியர் ஒருவரின் பார்வையும் ஆதங்கமும். இந்த ஆதங்கம் இலங்கைக்கும் பொருந்தும்

http://www.nilacharal.com/news/specials/en...208.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஐரோப்பாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள பிரான்ஸ் நெதர்லாந்து மக்களின் தீர்ப்பு

ஐரோப்பிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் அவசரமாக உருவாக்கியுள்ள கூட்டணி

ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தேச அரசியல் யாப்பை நிராகரித்ததன் மூலம் பிரான்ஸின் வாக்காளர்கள் ஜனாதிபதி ஜக் சிராக்கையும் கண்டத்தின் அரசியல் உயர் குழாமையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள

Link to comment
Share on other sites

2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை லண்டனில் நடத்துவது தொடர்பாக பிரிட்டிஷ் பிரதம் டொனி பிளேயர் விடுத்த வேண்டுகோள் இது ....

Dear supporter

As many of you will know, I am a passionate supporter of London's bid to bring the 2012 Olympic and Paralympic Games to the UK for the first time in 64 years - and we are about to enter the final lap of the campaign.

The International Olympic Committee (IOC) will meet in Singapore on 6 July to decide the 2012 Host City and I will be there immediately prior to the vote to help press the case for London.

London's bid has captured the imagination of the British public. Latest opinion polls show public support in London around 80 per cent, over two million people have directly registered their support for the bid and all the major political parties are united behind it.

And the reasons for this support are clear. A London victory on 6 July would mean:

+ thousands of new jobs

+ a boost to tourism across the UK

+ the chance to host athlete preparation camps up and down the country

+ one million pieces of sports equipment, five temporary swimming pools and four arenas redistributed across the UK after the Games end

+ a UK-wide cultural festival

+ the largest volunteering opportunities ever seen in post-war Britain and

+ a sporting legacy for the whole of the UK which will be felt for generations to come.

But as well as these tangible benefits, there is also the boost to our national pride and the inspiration our children will feel by witnessing the world's greatest sporting event on home soil.

Our bid is widely regarded as a leading contender - but the result is too close to call.

Please do your bit for the UK's Olympic bid by registering your support at www.london2012.com or text London to 82012.

BlairSig.gif

Tony Blair

Prime Minister and Leader of the Labour Party

Link to comment
Share on other sites

olympics_flag_369.jpg

2012ம் ஆண்டுக்குரிய ஒலிம்பிக் போட்டியை லண்டன் மாநகரில் நடத்துவதற்காக கடும் முயற்சியில் பிரித்தானிய தொழிற்கட்சி அரசு ஈடுபட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டி எந்த் நாட்டில் நடக்கும் என்பது வரும் ஜூலை மாதம் 6ம் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். இந்த ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் வாய்ப்பு பல இன கலாச்சாரத்தை கொண்டுள்ள பிரித்தானியவாவிற்கு கிடைத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல நன்மைகளை அடையலாம்.

இதனை ஆதரிக்க விரும்புவோர் கீழுள்ள இணைய தளத்திற்கு சென்று தமது ஆதரவை பதிவு செய்யலாம், அது மட்டுமன்றி உங்கள் கைதொலைபேசியிலிருந்து London என்று 82012 எனும் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமும் ஆதரவளிக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.